பத்து சென்ட்! - மலயாற்றூர் ராமகிருஷ்ணன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/ten-cents-malayattur-ramakrishnan-tamil-sura

நிறைந்த குவளையைப் பார்த்தவாறு அனந்தகிருஷ்ணன் தேவையானதையும் தேவையற்றதையும் சிந்தித்தார்.

இது எதுவுமே நடந்திருக்கக் கூடாது.

இனி அதையும் இதையும் பேசி பயனில்லை.யாரும் தவறு செய்தவர்கள் இல்லை. அதனால், யாருக்கும் தண்டனை அளிக்க வேண்டியதில்லை.

எங்காவது ஆணி அடிக்கவேண்டுமெனில், அதை அவருடைய நெஞ்சில்தான் அடிக்கவேண்டும். அவர் கணக்கு போட்டு வாழவில்லை.

உணர்ச்சிகள்தான் வாழ்க்கை என்ற தேரை ஓட வைத்தன. அதன் காரணமாகத்தான் பத்து சென்ட் நிலம் வேண்டுமென மருமகன்களிடம் கேட்கத் தோன்றியது.

அது முட்டாள்தனமானது என்று இப்போது தோன்றுகிறது.

ஆனால், தேவை என்று வரும்போது, அனைத்துமே சரிதான் என்றுதான் தோன்றியது.

பத்து சென்ட் பூமி... தனக்கு உரிமை உள்ள ஏக்கர்களின் சிறிய பகுதி...

உரிமை உள்ளதா? தான் வேண்டாம் என்று கூறிய பூமியாச்சே! அய்யர்களாக இருந்தாலும், தாய்மாமனுக்கே முக்கியத்துவம் இருந்தது.

11

குடும்பத்தின் செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடந்து கொண்டிருந்த காலத்தில் பாகம் பிரிப்பது நடந்திருந்தால், கதையே வேறு மாதிரி ஆகியிருக்குமே! அனைத்தும் ஒன்றுசேர்ந்து கிடந்தன. எல்லோரும் தேவைக்கேற்றபடி சொத்தில் கையை நுழைத்து அள்ளினார்கள்.

ஒருநாள் பங்கு பிரிக்கப்படவேண்டும் என்ற கருத்து சிலரிடமிருந்து உண்டானபோதுதான் அனைத்தையும் கிளறிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே உண்டானது.

ஒன்றிரண்டு பேர் அவருக்கே தெரியாமல் பெரிய அளவில் கடன் பாக்கியை உண்டாக்கி வைத்திருந்தார்கள். அனைத்தையும் சரியாக பங்கு

நிறைந்த குவளையைப் பார்த்தவாறு அனந்தகிருஷ்ணன் தேவையானதையும் தேவையற்றதையும் சிந்தித்தார்.

இது எதுவுமே நடந்திருக்கக் கூடாது.

இனி அதையும் இதையும் பேசி பயனில்லை.யாரும் தவறு செய்தவர்கள் இல்லை. அதனால், யாருக்கும் தண்டனை அளிக்க வேண்டியதில்லை.

எங்காவது ஆணி அடிக்கவேண்டுமெனில், அதை அவருடைய நெஞ்சில்தான் அடிக்கவேண்டும். அவர் கணக்கு போட்டு வாழவில்லை.

உணர்ச்சிகள்தான் வாழ்க்கை என்ற தேரை ஓட வைத்தன. அதன் காரணமாகத்தான் பத்து சென்ட் நிலம் வேண்டுமென மருமகன்களிடம் கேட்கத் தோன்றியது.

அது முட்டாள்தனமானது என்று இப்போது தோன்றுகிறது.

ஆனால், தேவை என்று வரும்போது, அனைத்துமே சரிதான் என்றுதான் தோன்றியது.

பத்து சென்ட் பூமி... தனக்கு உரிமை உள்ள ஏக்கர்களின் சிறிய பகுதி...

உரிமை உள்ளதா? தான் வேண்டாம் என்று கூறிய பூமியாச்சே! அய்யர்களாக இருந்தாலும், தாய்மாமனுக்கே முக்கியத்துவம் இருந்தது.

11

குடும்பத்தின் செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடந்து கொண்டிருந்த காலத்தில் பாகம் பிரிப்பது நடந்திருந்தால், கதையே வேறு மாதிரி ஆகியிருக்குமே! அனைத்தும் ஒன்றுசேர்ந்து கிடந்தன. எல்லோரும் தேவைக்கேற்றபடி சொத்தில் கையை நுழைத்து அள்ளினார்கள்.

ஒருநாள் பங்கு பிரிக்கப்படவேண்டும் என்ற கருத்து சிலரிடமிருந்து உண்டானபோதுதான் அனைத்தையும் கிளறிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே உண்டானது.

ஒன்றிரண்டு பேர் அவருக்கே தெரியாமல் பெரிய அளவில் கடன் பாக்கியை உண்டாக்கி வைத்திருந்தார்கள். அனைத்தையும் சரியாக பங்கு வைத்தாலும், என்ன மிச்சம் இருக்கப் போகிறது? கடனில் சிக்கியிருப்பவர்கள் தங்களுக்குள் கிடைக்கக்கூடிய பங்குகளை விற்றாலும், முற்றிலுமாக கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை ஆகப் போவதில்லை.

அப்போதுதான் அவருடைய அறிவு, உணர்ச்சிகளுக்கு அடிமை ஆனது. "சரி... பாகம் பிரிப்பது நடக்கட்டும்... என்னுடைய பாகம் எனக்கு வேண்டாம். அதுவும் விற்பனை ஆகட்டும்.''- அவர் கூறினார்.

மற்றவர்களின் கடனை அடைப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.

வியாபாரம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மட்டுமே நடக்க வேண்டும். பாரம்பரிய சொத்தை அந்நியருக்கு விற்பனை செய்திருக்கிறோம் என்ற அவப்பெயர் உண்டாகக்கூடாது. அந்த நிபந்தனையுடன் உயிலை எழுதிக் கொடுத்தார். அந்தவகையில் அவருக்கு உரிமையான பூமி மருமகன்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது.

அந்தக் காலத்தில் பத்து சென்ட்களை யாவது கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

கண்ணாடி குவளையைத் திருப்பிக் கொண்டிருந்த அனந்த கிருஷ்ணனிடம் எந்த பதிலும் இல்லை. எது எப்படியோ...

தற்போதைக்கு இப்படி சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.

நடந்தது நடந்துவிட்டது. உலகத்திற்கு விஷயம் தெரியாதே! கட்டிடக்கலை நிபுணரை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தால், பெருமைக்குப் பங்கம் உண்டாகியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்திற்குத் தயாராகவும் செய்தார்.

கட்டிடக்கலை நிபுணருக்கு வசதியாக இல்லாமற்போன காரணத்தால், பயணத்தை மாற்றிவைத்தார். அது நல்லதாகப் போய்விட்டது.

பத்து சென்ட் இடத்தைத் தருவதாக இல்லை என்று மருமகன்கள் கூறியிருக்கிறார் கள். வரதனும் வெங்கிட்டனும்.

"மாமா... நீங்கள் இங்கு வந்து தங்கணும். அது எங்களுக்கொரு பலமாக இருக்கும்'' என்று முன்பு கூறிய குழந்தைகள்...

ஒரு சூழ்நிலையில், ஒரு தானத்தைப் போல.. பணத்தை வாங்கிக் கொள்ள முடியாது என்று பிடிவாதமாக கூறி, அவருக்கு வீடு கட்டுவதற்கு ஐம்பது சென்ட்டை அளந்து தந்தவர்கள்...

இப்போது மார்க்கெட் விலைக்குக் கூட பத்து சென்ட் பூமியைத் தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இப்படியொரு நிலையை எதிர்பார்க்கவில்லை. ஆர்க்கிடெக்டை உடன் அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்திருந்தால்.... ஹோ...

நாணக்கேடாக ஆகியிருக்கும்.

அனந்தகிருஷ்ணன் குவளையை உதட்டுடன் சேர்த்து வைத்தார்.

அவர் இப்போது நகரத்தில் தனக்குச் சொந்தமான பங்களாவில் அமர்ந்திருக்கிறார்.

அந்த அறை அவருடைய "ஹைட் அவுட்' அறை. அங்கு அமர்ந்து குடிக்கலாம். ஓவியம் வரையலாம்.

சாளரத்தின் வழியாக பார்க்கும்போது, பூச்செடிகளைப் பார்க்கலாம்.

அவருக்கு எதற்கு பத்து சென்ட்?

இந்தச் சிறிய கேரளத்தில் அந்த அளவில் உள்ள நிலத்தை வாங்குவது என்பது சிரமமான ஒன்றல்ல. அப்படி எங்காவது கிடைக்கக்கூடிய பத்து சென்ட் அல்ல தான் விரும்பியது என்பதையும், சொந்த மக்களின் சமீபம்தான் இந்த வயதான வேளையில் தான் விரும்பியது என்பதையும் வரதனும் வெங்கிட்டனும் ஏன் புரிந்து கொள்ளவில்லை?

சில ஆசைகள், கர்ப்பப்பையிலேயே மரணமடைந்த குழந்தைகளைப் போன்றவை.

அவ்வளவு சீக்கிரம் குழி தோண்டி மூடிவிடவேண்டும்.

வாழ்க்கையின் அந்திம வேளையில் ஏன் இப்படி ஆசைப்பட வேண்டும்?

சரி... விருப்பங்கள் விலகி நிற்கட்டும்.

நினைவுகளை எப்படி விரட்டியடிக்க முடியும்?

முப்பாட்டனின் காலத்திலிருந்து ஆரம்பிக்கும் நினைவுகள்...

அழகான கிராம பகுதி...

முதல் மழையின் அணைப்பை ஏற்று புளகாங்கிதம் அடையும் மண்ணின் அருமையான வாசனை...

அணில்கள் குதித்து ஓடிக்கொண்டிருக்கும் வாழைத் தோப்பு... பொன் நிற புள்ளிகளும் கோடுகளும் உள்ள வெள்ளரிக்காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும் தளம்...

அதிகாலை வேளையில் தான் குழந்தைப் பருவத்தில் தட்டைக் கையில் வைத்தவாறு பின் பகுதிக்கு ஓடும் காட்சி- விழுந்து கிடக்கும் மாம்பழத்தைப் பொறுக்குவதற்காக..

குளமும் அடர்த்தியான புதரும்... குளத்தில் அவ்வப்போது பார்வையில் படும் கருத்த புள்ளிகளைக் கொண்ட மஞ்சள் பாம்பு...

பறவைகளின் கூடுகளைக் கண்டுபிடிப்பதற்காக கோந்தியின் மகன் உண்ணியுடன் சேர்ந்து நடந்த பயணம்....

கோவில்...

திருவோண கொண்டாட்டம்...

நாட்டுப் பாடல்களை நீட்டிப் பாடும் கொச்சாப்பு...

வாத நோயைப் பற்றி எப்போதும் பேசக்கூடிய வர்க்கி மாப்பிள...

பெட்டிக்கடைக்காரன் கோயா...

நினைவுகள் இப்படி வேட்டை நாய்களைப் போல தன்னைத் துரத்த ஆரம்பித்தபோது, அனந்த கிருஷ்ணன் நெற்றியில் கைகளை அழுத்தி வைத்தார்.

இனி... இப்போது என்ன செய்வது?

மருமகன்களுக்கு ஒரு பதில் கடிதம் எழுத வேண்டுமா? வேண்டாம். எந்த அளவிற்கு உணர்ச்சிபூர்வமாக எழுதினாலும், அவர்களுக்கு வேதனை உண்டாகும். அவர்கள் இப்போதும் தன் மீது பாசம் வைத்திருக்கிறார் கள் அல்லவா? அதனால், அவர்களுக்கு நிம்மதி உண்டாகும் வகையில் ஒரு கடிதத்தை எழுதி அனுப்புவது என்பது தன்னுடைய கடமை அல்லவா?

வேண்டுமா?

அனந்தகிருஷ்ணன் மதுக் குவளையைக் காலி செய்தார்.

வேண்டும்...

அவர்களை விட அவர்களின் தாய் தன்மீது அன்பு வைத்திருந்தாள். தன் சகோதரி... அந்த சகோதரியை மறக்க முடியாது.

அனந்தகிருஷ்ணன் எழுந்தார். லெட்டர் பேடை எடுத்தார். எழுத ஆரம்பித்தார்.

"கடிதம் கிடைத்தது. எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. கிழவனான எனக்கு கிராமப் பகுதி வாழ்க்கை சரிப்பட்டு வராது என்று உங்களுக்குத் தோன்றிய காரணத்தால்தான், நீங்கள் இவ்வாறு தீர்மானித்திருக்கிறீர்கள் என்று நான் நினைக் கிறேன்....''

பேனா தயங்கி நின்றது.

மேலும் சில வரிகளை எழுதவேண்டுமென தோன்றியது. இந்த மாதிரி..

"இனி எனக்கு ஒரேயொரு விருப்பம்தான் இருக்கிறது. முன்பு நான் கூறியதுதான். என் மரணம் எங்கு நடந்தாலும், என் பிண அடக்கம் உங்களுடைய இடத்தில்.... உங்களின் தாயை அடக்கம் செய்த இடத்தில் தான் நடக்க வேண்டும்.''

அனந்தகிருஷணன் கண்ணாடிக் குவளையை நிறைத்தார்.

வேண்டாம். இப்படி எழுத வேண்டாம்.

தான் இறக்கும்போது, அவர்கள் அவ் வாறே செய்வதாக இருக்கலாம்.பலமுறைகள் கூறியிருக்கும் விஷயம்தானே? பலமுறை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் விஷயம்...

இனி அந்த ஆசை நடக்காது போனா லும், அதனால் என்ன? இறந்தவன் கவலைப் பட முடியாது அல்லவா?

இப்படி சிந்தித்தபோது, சிரிக்கத் தோன்றியது.... நீண்ட நேரம்...

uday010325
இதையும் படியுங்கள்
Subscribe