டெக்ட்டானிக் தட்டுகளும் உருளும் பாறைகளும் - பிரேமா இரவிச்சந்திரன்

/idhalgal/eniya-utayam/tectonic-plates-and-rolling-rocks-prema-ravichandran

மது ஐவகை நிலங்களில் தண்ணீர் இல்லாத இடத்தை மட்டுமே பாலைவனம் என்கிறோம். ஆனால் ஆய்வாளர்கள் மற்ற நிலப்பரப்பைவிட பாலைவனம் என்பது தண்ணீரால் வடிவமைக்கப்படுகிறது என்கிறார் கள். ஒரு வருடத்தின் பெரும்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகையில் நிலப்பரப்பை செதுக்குவதற்கும் அவ்வப்போது ஏற்படுகின்ற வெள்ளத்தின்போது மறுபடியும் வடிவமைப்பதற்கும் ஒரு அற்புதமான சக்தியை தண்ணீரே கொண்டுள்ளது. நவேடாவில் உள்ள மரணப் பள்ளத்தாக்கில் நில அரிப்புக்கான முதன்மையான சக்தியாக மணலோ அல்லது காற்றோ இல்லாமல் வெள்ளநீரே முதல் காரணமாக இருக்கிறது. தரையில் ஒரு நதி மற்றொரு நதியுடன் ஒன்றிணைந்து பெரிய அளவிலான மணல் மற்றும் பாறைகளை நகர்த்தியும் அவற்றை செதுக்கியும் பள்ளத்தாக்குகளை அரித்துச் செல்கின்ற நீரோட்டமானது மலைகளை இரண்டாகப் பிளவுபடுத்துகிறது. பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நீரின் பயணத்தின் முடிவில் தன்னுடன் எடுத்துவருபவற்றை படியச் செய்து பள்ளத்தாக்குகளின் அடிவாரத்தில் உள்ள வண்டல் பகுதியில் மற்றொரு அடுக்கை அமைக்கிறது.

மரணப் பள்ளத்தாக்கின் தாழ்வான இடமான பேட் வாட்டர் பேசினையும் (க்ஷஹக் ஜ்ஹற்ங்ழ் க்ஷஹள்ண்ய்) அதன் உயர்ந்த மலைப்பகுதியையும் ஒப்பிட்டால் கலிஃபோர்னியாவிலிருந்து ராக்கி மலைகள் வரை பரவியுள்ள மலைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் இடையேயுள்ள உயரத்தினாலான வேறுபாடு மிகவும் வியக்கத்தக்க அளவில் இருக்கிறது. இந்தப் பகுதியானது டெக்டானிக்ஸ் தட்டுகள் மூலம் நீண்டு இழுக்கப்படுவதாலும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உருவாகியிருக்கின்றன. பூமியின் மேலடுக்கு விரிவடையும் பொழுது, அது விரிசலடைந்து உடைகிறது. இப்படியாகப் பிரிந்த இரு பகுதிகள் ஒன்றோடொன்று சறுக்கி செங்குத்தான சிகரங்களையும் சாய்வான பள்ளத்தாக்குகளையும் உருவாக்குகின்றன. தாழ்வான இடங்களில் வண்டல் நிறைந்து பள்ளத்தாக்குகளை மென்மையாக்கி சமன் செய்கிறது. இதன் விளைவாக உயரம் மற்றும் தாழ்வுப் பகுதிகளில் உர

மது ஐவகை நிலங்களில் தண்ணீர் இல்லாத இடத்தை மட்டுமே பாலைவனம் என்கிறோம். ஆனால் ஆய்வாளர்கள் மற்ற நிலப்பரப்பைவிட பாலைவனம் என்பது தண்ணீரால் வடிவமைக்கப்படுகிறது என்கிறார் கள். ஒரு வருடத்தின் பெரும்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகையில் நிலப்பரப்பை செதுக்குவதற்கும் அவ்வப்போது ஏற்படுகின்ற வெள்ளத்தின்போது மறுபடியும் வடிவமைப்பதற்கும் ஒரு அற்புதமான சக்தியை தண்ணீரே கொண்டுள்ளது. நவேடாவில் உள்ள மரணப் பள்ளத்தாக்கில் நில அரிப்புக்கான முதன்மையான சக்தியாக மணலோ அல்லது காற்றோ இல்லாமல் வெள்ளநீரே முதல் காரணமாக இருக்கிறது. தரையில் ஒரு நதி மற்றொரு நதியுடன் ஒன்றிணைந்து பெரிய அளவிலான மணல் மற்றும் பாறைகளை நகர்த்தியும் அவற்றை செதுக்கியும் பள்ளத்தாக்குகளை அரித்துச் செல்கின்ற நீரோட்டமானது மலைகளை இரண்டாகப் பிளவுபடுத்துகிறது. பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நீரின் பயணத்தின் முடிவில் தன்னுடன் எடுத்துவருபவற்றை படியச் செய்து பள்ளத்தாக்குகளின் அடிவாரத்தில் உள்ள வண்டல் பகுதியில் மற்றொரு அடுக்கை அமைக்கிறது.

மரணப் பள்ளத்தாக்கின் தாழ்வான இடமான பேட் வாட்டர் பேசினையும் (க்ஷஹக் ஜ்ஹற்ங்ழ் க்ஷஹள்ண்ய்) அதன் உயர்ந்த மலைப்பகுதியையும் ஒப்பிட்டால் கலிஃபோர்னியாவிலிருந்து ராக்கி மலைகள் வரை பரவியுள்ள மலைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் இடையேயுள்ள உயரத்தினாலான வேறுபாடு மிகவும் வியக்கத்தக்க அளவில் இருக்கிறது. இந்தப் பகுதியானது டெக்டானிக்ஸ் தட்டுகள் மூலம் நீண்டு இழுக்கப்படுவதாலும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உருவாகியிருக்கின்றன. பூமியின் மேலடுக்கு விரிவடையும் பொழுது, அது விரிசலடைந்து உடைகிறது. இப்படியாகப் பிரிந்த இரு பகுதிகள் ஒன்றோடொன்று சறுக்கி செங்குத்தான சிகரங்களையும் சாய்வான பள்ளத்தாக்குகளையும் உருவாக்குகின்றன. தாழ்வான இடங்களில் வண்டல் நிறைந்து பள்ளத்தாக்குகளை மென்மையாக்கி சமன் செய்கிறது. இதன் விளைவாக உயரம் மற்றும் தாழ்வுப் பகுதிகளில் உருவாகின்ற நிலப்பரப்புக்கு வியக்கத்தக்க உதாரணமாக இந்த மரணப் பள்ளத்தாக்கு நிலவுகிறது.

ss

கெட்ட நிலம் (இஹக் ப்ஹய்க்) என சொல்லப்படுகின்ற இடத்தில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களாலான ஒரு பண்டைய ஏரியின் அடிப்பகுதியானது அடுக்குகளாகக் காணப்படுகிறது. பள்ளத் தாக்குகளின் சுவர்களில் உள்ள வண்ணமயமான கோடுகள், அவ்வப்போது ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் உருவான சாம்பலும் சூடான சேறும் ஏரிக்குள் வீசப்பட்டதால் ஏற்பட்டவை. ஏரிகள் சுருங்கி வறண்டுபோனபோது ஜிப்சம் மற்றும் போரக்ஸ் போன்ற உப்புகள் அங்கு எஞ்சியிருந்தன. மரணப் பள்ளத்தாக்கின் கடந்த காலமானது எப்பொழுதுமே தண்ணீரைக் கொண்டு செழிப்பாக இருந்திருக்கவில்லை.

அதன் ஈரமான காலநிலையும் வறண்ட கால நிலையும் மாறி மாறி வந்திருக்கிறது. ஒவ்வொரு மாற்றமும் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளில் நடந்திருக்கிறது.

ஒரு தொலைதூர பள்ளத்தாக்கின் வறண்ட ஏரிக்கரையிலுள்ள கனமான கல் பாறைகள், யாரும் கவனிக்க முடியாதபடி நகருகின்றன. இது எப்படி நடக்கிறதென்றால், குளிர்காலத்தில் களிமண் மேற்பரப்பில் மழையானது பாறைகளைச் சுற்றி பனிக்கட்டிகளாக உறைகிறது. ஒரு பலமான காற்று வீசும் பொழுது பாறைகள் மழையில் படர்ந்த களிமண்ணைக் கடந்து நகர்ந்து செல்கின்றன. நாசா விஞ்ஞானிகளும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இந்த உருளும் பாறைகளைப் பற்றி ஆய்வு செய்துவருகின்றனர் என்றாலும், இதுவரை எவரும் அவை நகர்ந்து செல்வதை உண்மையில் பார்க்கவில்லையென்று ஆய்வறிக்கையில் சொல்கிறார்கள். இங்குள்ள மணற்குன்றுகளும் ஒவ்வொரு புயல் காற்றின்பொழுதும் தனது மணல் வடிவங்களில் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் வெகுதூரத்திற்கு மணல் செல்வதில்லை.

பள்ளத்தாக்கின் தரைப்பகுதியில் மிகவும் பழமையான முகடுகளும் உப்பின் கூர்மையான முனைகளும் வளர்ந்து வருகின்றன. இவற்றில் சில நமது தோலை வெட்டக்கூடிய அளவிற்கு கூர்மையானதாக இருக்கின்றன. இந்த உப்புகளும் மற்ற தாதுக்களும் வண்டல்களுடன் கலந்து மில்லியன்கணக்கான ஆண்டுகளாக பள்ளத்தாக்குகளின் தரைமட்டத்தில் குவிந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த எரிமலை வெடிப்பில் வெளியான உருகிய மக்மா, நிலத்தடி நீரைத் தாக்கியபோது, உடனடியாக நீர் ஆவியாக மாறி ஒரு பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பல மைல்கள் தொலைவிற்கு பாறைகளை மழையாகப் பொழிந்திருக்கிறது. கிரேட்டர் எனப் படுகின்ற இப்படியான பள்ளம் சுமார் 800 முதல் 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெடிப்பி னால் நிகழ்ந்தது என்று நம்பினாலும் மிகச் சரியாக எப்போது நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை.

கலைஞரின் தட்டு எனப்படுகின்ற ஆர்ட்டிஸ்ட் பேலட் (ஹழ்ற்ண்ள்ற் ல்ஹப்ப்ங்ற்) என்று சொல்லப்படுகின்ற பல வண்ணங்களாலான பாறையானது, இவ்வாறான எரிமலை வெடிப்புகளால் வெளியேறுகின்ற குழம்புகளைத் தொடர்ந்து வெளிப்படுகின்ற சூடான நீரில் நிறைந்து இருக்கின்ற தாதுக்கள், எரிமலை சாம்பலோடு இணைந்து பாறைகளின் வேதியியலை நிர்ணயித்து உருவான பாறைகளாகும். பச்சை மற்றும் நீல நிறமானது குளோரைடுகளையும், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்திலான பாறைகளின் பகுதிகள் மாங்கனிசு ஆக்சைடையும், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத் திலான பாறையின் பகுதிகள் இரும்பு ஆக்சைடுகள் இருப்பதையும் வெளிப்படுத்துகின்றன.

புவியியல் அமைப்பு என்பது முடிவே இல்லாத கதையாக, தொடர்ந்து மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கின்றது. உயரமான மலைகள் இன்னும் மேலே தள்ளப்படுவதும், திடீர் வெள்ளம் ஏற்பட்டு பள்ளத்தாக்குகள் இன்னும் ஆழமாக வெட்டப்படுவதும் பூமியின் நிலப்பரப்பில் அசாதாரணக் காட்சிகளை உருவாக்கி விடுகின்றது. புதியதாகப் பிறந்த பாறைகளும் சில ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த பழமையான பாறைகளும் காலத்தின் அடிப்படையில் பல வகைகளாக இருக்கின்றன. விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியாதபடி புவியில் ஏற்படுகின்ற வன்முறையான வெடிப்புகள் இன்றளவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளத்தாக்குப் பகுதியில் பழுப்பு நிறத்தில் மென்மையாக உள்ள டோலமைட்டானது இந்த பள்ளத்தாக்கு தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே உருவாகியிருக்கிறது. சுமார் 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெப்பமாக இருந்த ஆழமற்ற கடலின் அடிப்பகுதியில் குவிந்து இருந்திருக்கிறது. இது பிறகு வண்டல் அடுக்குகளால் தொடர்ந்து புதைக்கப்பட்டு சுருங்கியவாறு ஓசினிக் பிளேட்டின் நகர்வால் இன்னும் ஆழமாக மூழ்கி, இறுதியாக டெக்டானிக்ஸ் அடுக்கின் மூலம் மேற்பரப்பிற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த செயல்பாட்டின் காரணமாக டோலமைட் ஒரு அழகான பளிங்குக் கல்லாக உருவாகி மொசைக் கேன்யான் எனும் பகுதியின் கீழே இன்று அமைந்திருக்கிறது.

கனிமங்கள் நிறைந்த மரணப் பள்ளத்தாக்கில் உருவான சுரங்கங்கள், தங்கம் வெண்கலம் மற்றும் டால்க் போன்றவற்றை அள்ளிக் கொடுத்து பல செல்வந்தர்களை உருவாக்கியிருக்கிறது. தங்கத்தைத் தேடும் ஆய்வாளர்கள் குவார்ட்ஸ் இருக்கும் இடங்களைத் தேடினார்கள். கடினமான வெள்ளை நிறப் பாறைகள் தங்கத்தின் இருப்பைக் காட்டியது. போரக்ஸ் இருப்பதை கண்டடைய கந்தக அமிலம் மற்றும் ஆல்கஹாலைக் கலந்து தீயைப் பற்ற வைத்து சோதித்துப் பார்த்தனர். அந்தச் சுடர் பச்சையாக எரிந்து, அது போரக்ஸ் என்பதை உறுதிசெய்தது. டால்க் படிவைத் தொடும்போது மென்மையான சோப்பு போன்ற உணர்வைக் கொடுத்தது. இப்படியாக கனிமங்களைக் கண்டடைந்து வசதியான தொழிலதிபர்கள் இங்கு முதலீடு செய்து பெரும் பொருளை ஈட்டினார்கள்.

அதன்வாயிலாக லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களில் ஆடம்பரமான செலவுகளை செய்து வரலாற்றில் மிகவும் பிரபலமான மனிதர்களாக இருந்திருக்கிறார்கள்.

19-ஆம் நூற்றாண்டில் இயற்கையின் அழகு என்பது பிரமிக்க வைக்கின்ற மலைகளும் புகழ்பெற்ற அருவிகளும் பெரிய பள்ளத்தாக்குகளும் இடம்பெற்றிருந்தபோது, கண் கவர்ந்த இடங்கள் என்ற பட்டியலில் பாலைவனங்களுக்கு இடம் இல்லாமல் இருந்தது. 1920-களில் பாலைவன நிலப்பரப்புகளின் அழகு பரவலாக அறியப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் நாட்டில் எஞ்சியிருக்கும் வனப் பகுதிகளை பாதுகாப்பதற்காக மக்கள் விழித்துக் கொண்ட பொழுது, மரணப் பள்ளத்தாக்கு என்பதும் அவ்விதமான ஒரு இடங்களில் ஒன்றா கக் காணப்பட்டது. சுரங்கத் தொழிலில் இருந்த வணிகர்களே, இந்தப் பள்ளத்தாக்கினை ஒரு சுற்றுலாத்தலமாக முதன்முதலாக அறிவித்து தேசியப் பூங்காவாக விளம்பரப்படுத்தினார் கள். கனிமங்களைக் கொண்டுசெல்வதற்காக கட்டப் பட்ட ரயில் பாதைகளும், சாலைகளும், பார்வை யாளர்களுக்கான வழியாக மாறியது. போரக்சின் லாபம் குறைந்ததால், பசிபிக் கோஸ்ட் போரக்ஸ் நிறுவனத்தின் தலைவர்கள் தங்களது அலுவலகங் களை ஓய்வு விடுதிகளாகவும், சரக்கு ரயில்களை பயணிகள் ரயில்களாகவும் மாற்றத் தொடங்கினார் கள்.

சாதாரணமாக 130ளி பாரன்ஹீட்டிற்கு கீழே குறையாத வெப்பநிலையுடன் கூடிய இந்த இடத்தில் நிலவுகின்ற வறண்ட பாலைவன காலநிலையில் மக்கள் இங்கு குடியேறுவதைவிட, ஆய்வாளர்கள், சாகசக்காரர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் வருகின்ற இடமாக தற்பொழுது மாறியுள்ளது. வரலாற்றின் தொடக்கத்தில் இங்குள்ள நீரூற்றுகளையோ அல்லது பாலைவனத்தின் உணவு ஆதாரங்களைப் பற்றிய தகவல்களையோ அறிந்திடாத காரணத்தால் ஆரம்பகால பார்வையாளர்கள் இவ்விடத்தை வறண்ட தரிசு நிலமாகவும் கொடிய நிலப்பரப்பாகவும் மட்டுமே கண்டார்கள். 1849-ஆம் ஆண்டு தங்கத்தை வேட்டையாடுவதற்காக தாமதமாக இந்த மரணப் பள்ளத்தாக்கிற்கு வந்தவர்கள் வழி தடுமாறிச் சென்றதால் தங்களது உயிரையே இழந்திருக்கிறார் கள். எஞ்சியவர்களை மீட்பதற்காக வந்த ஜான் ஹெச் ரோஜர் மற்றும் வில்லியம்ஸ் மேன்- ஆகியோரில் ஒருவர் குட்பை டெத் வேலி என்று சொன்ன அந்த சொல்லே இன்றளவும் நிலைபெற்றதாக, இப்பகுதி மரணப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அன்றே அவர் இங்குள்ள தண்ணீரைக் கண்டிருந்தால் அவ்வாறு அழைக்காமல் இருந்திருப்பார் என்பது இங்கு வாழும் தும்பிஷா ஷோஷோன் எனும் பழங்குடியினர்களின் கருத்தாக இருக்கிறது.

uday010425
இதையும் படியுங்கள்
Subscribe