தமிழ் தந்த வளங்கள் நமக்குக் கிடைத்த புதையல்கள்! -ஆஸ்திரேலிய கம்பன் கழகத் தலைவர் ஜெயராம் ஜெகதீசன்!

/idhalgal/eniya-utayam/tamil-treasures-we-have-got-treasures-australian-company-chairman-jayaram

ஸ்திரேலி−யாவில் கம்பன் கழகம் என்ற இலக்கிய அமைப்பு சிறப்பாக இயங்கிவருகிறது. தமிழ் பண்பாடு கலாச்சாரம் சார்ந்து இயங்கும் இந்த அமைப்பின் தலைவர் ஜெயராம் ஜெகதீசனை "இனிய உதய'த்திற்காக சந்தித்தபோது...

தமிழ் மீதான பற்று, ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்ததால் அந்தச் சூழலில் இருக்கின்ற இயல், இசை, நாடக நிகழ்வு களுடைய ஈர்ப்பினாலும், எனது குடும்பம் காட்டிய ஆர்வத்தினாலும் தமிழ் மீதான பற்று என்னிலும் தொற்றிக் கொணடது. அது மட்டுமல்ல பரியோ வான் கல்லூரியில் படித்தபோது அங்குள்ள ஆசிரியர் களும் ஊக்கப்படுத்தியிருந்தனர். அதன்பின்பு அகில இலங்கை கம்பன் கழகத்தின் பேச்சுக்கலை திறன் பற்றிய விடயங்கள் என்னைப் பற்றிக் கொண்டன.

அப்படியானால் இலங்கையிலேயே கம்பன் கழகத்துடனான இணைவு ஏற்பட்டிருந்தது என்று கூறலாமா?

ss

நிச்சயமாக, பரியோவான் கல்லூரி சிரேஷ்ட மாணவர்களுக்கான தங்கப்பதக்க பேச்சுப் போட்டியில் எனது மானசீக குருவாக நான் நினைத்த ஜெயராஜ் ஐயாவிடம் பேச்சை சொல்லி, அவர் திருத் தங்கள் சொல்லி− என்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்பி அது எனக்கு வளமானது.

தொடர்ந்து அந்த உறவு நீடித்து ஆஸ்திரேலி−யா விலும் அது தொடர்ந்தது. 80, 90 காலப்பகுதியில் ஈழத்தில் போர்ச்சூழல் காரணமாக கல்விக்கு அப்பால் ஆலய விழாக்கள், இலக்கிய விழாக்களில் மட்டுமே பங்குபற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது. தொலைக் காட்சி, திரைப்படம், செல்லிடப்பேசி என்பன இல்லாத ஒரு பொற்காலம் எனக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.

ஆஸ்திரேலி−யா கம்பன் கழகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

90-ன் இறுதிப்பகுதியில் ஆஸ்திரேலி−யாவுக்கு குடிபெயர்ந்தேன். 2002-ஆம் ஆண்டு ""சிட்னி தமிழ் இளைஞர்' விருதின்போது மறைந்த தமிழ் ஆசான் வேந்தனார் இளங்கோ ஐயா ஒரு செவ்வியின்போது என்ன செய்ய விரும்புகின்றீர்கள் என வினவினார். அப்போது தமிழுடைய இலக்கியத் தேடலி−ற்கான ஒரு அமைப்பாக கம்பன் கழகத்தை முன்னிறுத்த வேண்டுமென கூறினேன். 2007-ஆம் ஆண்டு ஆஸ்திரே−யா கம்பன் கழகத்தை ஆரம்பித்திருந்தோம். அப்போது சைவ மன்றத்தின் சைவ மாநாடு நடை பெற்றுக் கொண்டிருந்தது. கம்பவாரிதி ஜெயராஜ் முதல் தடவையாக சிட்னிக்கு வருகின்றார். நல்லை ஆதீன குரு சிறீலசிறீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமி கள், அகில இலங்கை கம்பன் கழகத்தின் செயலாளர் பாலச

ஸ்திரேலி−யாவில் கம்பன் கழகம் என்ற இலக்கிய அமைப்பு சிறப்பாக இயங்கிவருகிறது. தமிழ் பண்பாடு கலாச்சாரம் சார்ந்து இயங்கும் இந்த அமைப்பின் தலைவர் ஜெயராம் ஜெகதீசனை "இனிய உதய'த்திற்காக சந்தித்தபோது...

தமிழ் மீதான பற்று, ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்ததால் அந்தச் சூழலில் இருக்கின்ற இயல், இசை, நாடக நிகழ்வு களுடைய ஈர்ப்பினாலும், எனது குடும்பம் காட்டிய ஆர்வத்தினாலும் தமிழ் மீதான பற்று என்னிலும் தொற்றிக் கொணடது. அது மட்டுமல்ல பரியோ வான் கல்லூரியில் படித்தபோது அங்குள்ள ஆசிரியர் களும் ஊக்கப்படுத்தியிருந்தனர். அதன்பின்பு அகில இலங்கை கம்பன் கழகத்தின் பேச்சுக்கலை திறன் பற்றிய விடயங்கள் என்னைப் பற்றிக் கொண்டன.

அப்படியானால் இலங்கையிலேயே கம்பன் கழகத்துடனான இணைவு ஏற்பட்டிருந்தது என்று கூறலாமா?

ss

நிச்சயமாக, பரியோவான் கல்லூரி சிரேஷ்ட மாணவர்களுக்கான தங்கப்பதக்க பேச்சுப் போட்டியில் எனது மானசீக குருவாக நான் நினைத்த ஜெயராஜ் ஐயாவிடம் பேச்சை சொல்லி, அவர் திருத் தங்கள் சொல்லி− என்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்பி அது எனக்கு வளமானது.

தொடர்ந்து அந்த உறவு நீடித்து ஆஸ்திரேலி−யா விலும் அது தொடர்ந்தது. 80, 90 காலப்பகுதியில் ஈழத்தில் போர்ச்சூழல் காரணமாக கல்விக்கு அப்பால் ஆலய விழாக்கள், இலக்கிய விழாக்களில் மட்டுமே பங்குபற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது. தொலைக் காட்சி, திரைப்படம், செல்லிடப்பேசி என்பன இல்லாத ஒரு பொற்காலம் எனக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.

ஆஸ்திரேலி−யா கம்பன் கழகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

90-ன் இறுதிப்பகுதியில் ஆஸ்திரேலி−யாவுக்கு குடிபெயர்ந்தேன். 2002-ஆம் ஆண்டு ""சிட்னி தமிழ் இளைஞர்' விருதின்போது மறைந்த தமிழ் ஆசான் வேந்தனார் இளங்கோ ஐயா ஒரு செவ்வியின்போது என்ன செய்ய விரும்புகின்றீர்கள் என வினவினார். அப்போது தமிழுடைய இலக்கியத் தேடலி−ற்கான ஒரு அமைப்பாக கம்பன் கழகத்தை முன்னிறுத்த வேண்டுமென கூறினேன். 2007-ஆம் ஆண்டு ஆஸ்திரே−யா கம்பன் கழகத்தை ஆரம்பித்திருந்தோம். அப்போது சைவ மன்றத்தின் சைவ மாநாடு நடை பெற்றுக் கொண்டிருந்தது. கம்பவாரிதி ஜெயராஜ் முதல் தடவையாக சிட்னிக்கு வருகின்றார். நல்லை ஆதீன குரு சிறீலசிறீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமி கள், அகில இலங்கை கம்பன் கழகத்தின் செயலாளர் பாலசுந்தரம் ஐயா, அகில இலங்கை கம்பன் கழகம் ஆரம்பித்தபோது யாழ்ப்பாண நகர பிதாவாக இருந்த விஸ்வநாதன் ஐயா என்று பெரியோர்கள் தெய்வாதீனமாக சிட்னி முருகன் ஆலய மண்டபத்தில் இருந்தார் கள் நாம் ஆரம்பித்தபோது, 90-ன் இறுதிப்பகுதி 2000-ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதிகளில் பேச்சுக்கள், பட்டி மண்டபங்களோ, வழக்காடு மன்றங்களோ வரண்டு போயிருந்த காலப்பகுதியாகும். அந்த வகையில் கம்பனைத் தொட்டு இளையோர்களுக்கும், பெரியோர் களுக்கும் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பிப்பதற்கான ஆரம்பம் என்று கூறலாம்.

கம்பன் கழகம் சமயம் சார்ந்ததா?

நிச்சயமாக இல்லை. ஆனால் கம்பன் ஒரு வைஷ்ண வன். கம்பராமாயணம், ராம அவதாரம் விஷ்ணுவின் அவதாரம் என்று பார்க்கும்போது அது வைஷ்ணவ காவியமென்று சொன்னால் எவரும் தப்புச்சொல்ல முடியாது. ஆனால் தமிழ்க் காப்பியம் என்ற வகையில் இதிகாச வரையறைக்குள் கம்பராமாயணம் வருகின் றது. ஆக தமிழினுடைய ஆணிவேராக இருக்கின்ற இரு கண்கள் என்று சொன்னால் கம்பராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கூறலாம். பாரதியே கம்பனைப் போல, வள்ளுவனைப் போல, இளங்கோவைப் போல உயர்த்துகின்றான். அந்தக் கம்பன் நிச்சயமாக தமிழ்க்காப்பியம்தான் படைத்திருக்கின்றான். ஆனால், நீங்கள் எந்த சமயம் சார்ந்தும் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அவன் அட்சய பாத்திரம் அமைத்துப் போயிருக்கின்றான்.

ஆஸ்திரே−யா கம்பன் கழகத்தின் பணிகள் எவ்வாறு அமைகின்றன?

இலக்கிய விழாவென்றால் முற்றுமுழுமையாக இலக்கியம் பேசப்பட வேண்டுமென்று திடத்தோடு இருந்தேன். ஆனால், காலம் செல்லச் செல்ல மக்கள் மற்றும் இளையோர்கள் பயன்பட வேண்டுமென்ற எண்ணம் எமது செயற்பாடுகளை விஸ்தரிக்க வைத்துள் ளது. ஒரு மாலை நேர இலக்கிய நிகழ்ச்சியாக ஆரம்பித்து, பிறகு கம்பன் விழாவாக, இசை வேள்வியாக, ஆடல் வேள்வியாக பரிணாமம் பெற்றுள்ளது. அது மட்டு மல்ல மாணவர்களை கற்பிக்க வேண்டும் என்று ஒரு கம்பன் வகுப்பாக ஆரம்பித்து இன்று மூன்று வகுப்புகளாக 45-50 மாணவர் களுக்கு மேல் கற்று வருகின்றார்கள். முழுக்க முழுக்க தொண்டு ரீதியாகத்தான் இது நடத்தப்படுகின்றது. இலக்கிய நிகழ்ச்சி களாக ஞான வேள்வி, நாநலம், கம்பன் விழா, வெல்லும் சொல் என்ற நிகழ்ச்சிகள் பல்கிப் பெருகிவிட்டன. கழகத்தின் பணி களைப் பார்க்கும்போது மாணவர்களாக இணைந்து கொண்டவர்கள் இன்று கழகத் தின் விழுதுகளாக அதை தாங்கிப் பிடிக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றார்கள். இளையோர் கள்தான் செயற்குழு உறுப்பினர்களாக இருக்கின்றார் கள். பெரியோர்கள் ஆலோசகர்களாக இருக்கிறார் கள். இவர்களுடைய துணையோடு பணிகளைச் செய்ய முனைகின்றோம்.

ஒரு இனத்தை பொறுத்தமட்டில் மொழியோ, கலையோ அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமெனில் செயலிலும், நிர்வாகத்திலும் இளையோர்கள் உள்வாங்கப்படவேண்டும். அந்த வகையில் ஆஸ்திரேலியா கம்பன் கழகம் இயங்கி வருகின்றது. ஆனால், இளையோர்கள்தான் எல்லா வற்றையும் முன்னின்று நடாத்துகின்றார்கள் என்றபடியால் இந்த தமிழ்ச்சமூகம் அவர்களுக் கான அங்கீகாரத்தைத் தருகின்றதா?

ஆரம்பத்திலிருந்ததைவிட இப்போது சற்று முன்னேற்றம் இருக்கின்றது. ஆனால் இன்றும்தான் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்ற பார்வையில் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள். கடுகு சிறிதானாலும் காரம் பெரிதாக இருக்கும். உதாரணமாக கலை தெரி அரங்கத்தைப் பார்த்தால் 2017, 2018, 2019 ஆண்டுகளில் மாணவர்களே முற்று முழுதாக எழுத்தை ஆற்றி, இயக்கி, நாட்டிய அமைப்பை கோர்த்து உருவாக்கியிருக்கிறார்கள். இறுதியாக ஒரு ஒத்திகை மட்டுமே ஆசான்களையும், தமிழோடு இணைந்தவர்களையும் இணைத்து ஆலோசனை பெறுவார்கள். இந்த வருடம் கலை தெரி அரங்கத்தை எழுதி, இயக்கும் பிள்ளை இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பிள்ளையென்பதில் பெருமைப்படுகின்றோம்.

நிச்சயமாக இளையோர்களினால் எதனையும் சாதிக்க முடியுமென நம்புகின்றோம்.

ஒரு அமைப்பு அல்லது கழகம் தாம் சொல்ல வரும் விடயங்கள், பணிகள் இளையோர்களைச் சென்றடைய வேண்டுமென்றால் சமூகம், பெற்றோர் கள், குறிப்பிட்ட கழகம் ஆகியோர் ஒரு குழுவாக இயங்க வேண்டும். உங்களைப் பொறுத்தமட்டில் இதிலே எங்கு பிரச்சினை இருக்கின்றதென நீங்கள் கருதுகிறீர்கள்?

மாணவர்களுக்கு இங்கு வந்தால் தமிழ் இலக்கியம் எங்களுக்கு ஒன்றும் விளங்காது என்று ஒரு ஐயப்பாடு இருக்கின்றது. உண்மையில் அவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால் ஒருமுறை வந்து பாருங்கள். அங்கு இலக்கிய நிகழ்ச்சியை நடத்துவார்களா என்று அறிந்த பிற்பாடு எங்களது இலக்கியத்தில் இத்தனை விடயங்களா என அறிந்து அவர்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், முதல் தடவை அந்த இளையோர்களின் பெற்றோர்களோ, பேரன், பேத்திகளோ அவர்களை அழைத்து வரவேண்டும்.

அப்போதுதான் அந்த முதல் சுவையை நாங்கள் காண்பிக்க முடியும். பெற்றோர் களிடம் வேண்டிக்கொள்வது என்னவெனில் நான்கு வேளை நடக்கும் கம்பன் விழாவில் ஒரு நேரமாவது உங்கள் பிள்ளைகளை கூட்டி வாருங்கள் என்பதுதான். மாணவர்களுக்கு அவர்களது அடை யாளம், மொழி இவற்றின் மீது இன்னும் பற்று ஏற்பட இது போன்ற இலக்கிய விழாக்கள் வழிவகுக்கும், அவர் களை சீரமைக்க உதவும்.

நான் மாணவனாக உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். இந்த நாட்டைப் பொறுத்தமட்டில் கல்வி, கலைகள், அமைப்புகள் என்று பல விடயங்கள் மாணவர்களுக்கு இருக்கின் றன. இவற்றையெல்லாம் தாண்டி ஏன் ஒரு தமிழ் மாணவன் கம்பன் கழகத்தை நாடவேண்டும்?

கம்பன் கழகத்தினுடைய குறிக்கோள்களில் ஒன்று இயல், இசை, நாடகம் என்ற முத்துறைகளையும் இந்த தேசத்தில் பேண வேண்டும். இளையோர்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டுமென்பதுதான். அதனை பல வழிகளிலும் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றார்கள். தமிழ்ப் பாடசாலை, இசை, நடனம் என்று பல வழிகளில், இந்த மாணவர்களுக்கு இதனை தாம் தாமாகவே தரமாக ஒரு நிகழ்ச்சியை அமைத்து பல பார்வையாளர்கள் வந்திருந்து பார்க்க வேண்டும் என்கின்ற போது தாம் படித்தவற்றை, அறிந்தவற்றை புரிந்து கொண்டு முன் நகர்த்தக்கூடிய வித்துக்களை விதைக்கக்கூடிய ஒரு களமாக ஆஸ்திரேலியா கம்பன் கழகம் இருக்கின்றது என்ற படியால் எந்தவித தடை களும் இல்லாமல் அன்போடு அவர்களை அரவ ணைக்க நாங்கள் காத்திருக்கின்றோம். அவர்கள் அப்படி வரும்பொழுது அவர்கள் கற்றவற்றை தாமாக மென்மேலும் வளர்த்துக்கொள்ள கம்பன் கழகம் இடம் கொடுக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே பயனடைந்தவர்கள் போல மற்றையவர்களுக்கும் அது போய்ச்சேர வேண்டுமென்பது எமது அவா.

கம்பன் வகுப்புகள் என்ற வரும்போது உங்களுக்கு பின்னர் அந்த வகுப்புகளை, கம்பன் கழகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இந்த அஞ்சல் ஓட்டத்தடியை கைமாற்றுவதற்கு இளையோர் களை தயார் செய்கிறீர்களா?

எமது தாய்க்கழகத்தில் பார்த்த அனுபவம், அதே பாணியை இந்த நாட்டுக்கு ஏற்றாற்போல் கொண்டு போக விருப்பம். 2014-ஆம் ஆண்டு வயது வந்த இளைஞர் களுக்காக கம்பன் வகுப்பை ஆரம்பித்தோம். ஆறு வருடங்கள் கழித்து இப்போதுதான் ஆரண்ய காண்டத்தில் நிற்கின்றோம். இன்னும் மூன்று பெருங்காண்டங்கள் இருக்கின்றன. ஆரம்பித்ததில் இருந்து கற்ற மாணவர்கள் இன்னும் கற்கின்றார்கள். சிறுவர்களுக்கான கம்பன் வகுப்பை 2015-ஆம் ஆண்டில் ஆரம்பித்த பொழுது எனது சிரேஷ்ட வகுப்பு மாணவியொருவர் சிறுவர் வகுப்பு சக ஆசிரியராக வருகின்றார். இந்த இளைஞர்கள் தாமாகவே உள் வாங்கி கற்பித்தலோ, நிகழ்ச்சிகளோ அல்லது நிர்வாகத் திலோ இருக்கின்றார்கள். ஆகவே, இந்த இளையோர் கள் கொஞ்சம் கொஞ்சமாக எமது பொறுப்புக்களை எடுத்து ஒட்டுமொத்தமாக ஊர் கூடி இழுக்கின்ற தேராக கழகத்தைப் பார்க்கின்றோம். நிச்சயமாக அவர்களுக்கான தகுதி வரும்போது அவர்களிடம் இந்தக் கழகத்தை நடத்துவதற்கான பணியை கொடுக்க விரும்புகின்றோம். எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் கம்பன் விழாவில் அகில இலங்கை கம்பன் கழகத்தை உயர்த்தி நிறுத்திய கம்பவாரிதி ஐயா அவர்களும் அவரது பிரதான சீடனாகிய சிறீ பிரசாந்தன் ஆகட்டும் இவர்களும் வந்து வந்து போவதனால் இந்த மாணவர்களிடம் தமது அனு பவப் பகிர்வுகளை கொடுக்கின்றார்கள். அந்த வகையில் இளையோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு தம்பணி சிரம் கொண்டு எடுக்க வேண்டுமென கருதி பணியாற்றுகின்றோம்.

ஆஸ்திரேயா கம்பன் கழகத்தின் சார்பில் உலகத் தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்?

"கற்பவர் நாள் சில ஆனால் கல்வியோ கரையில' என்று நாலடியாரில் புலவர்கள் சொல்− வைத்திருக்கிறார் கள். கல்வி கேள்வியினூடாகத்தான் அறிவு வளரும். ஆங்காங்கே பார்த்து அங்கலாய்க்காமல், புதையல் போல் எமக்கு தமிழ் தந்த வளங்களில் சிந்தியிருக்கின்ற கருத்துக்கள் எமது வாழ்வை மேம்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன. எல்லா நாடுகளிலும் தமிழர்கள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று அணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

அந்தந்த ஊர்களில் பல தமிழ்சார் கல்விக் கூடங்க ளும், சங்கங்களும் இருக்கின்றன. கம்பனாகட்டும், இளங்கோவாகட்டும் வில்−புத்தூரனாகட்டும் அவர் கள் சிந்திய காப்பியக் கருத்துக்கள் ஒ−க்கப்படுமே யானால் அதனை இளைஞர்கள் மத்தியில் நாம் விதைக்க முற்படுவோமேயானால் "விதித்தன செய்தலும் விலக்கின ஒழித்தலும்' என்கின்ற அறக்கொள்கை அவர்கள் மனதில் ஆழப்பதியும். நாங்கள் தொடர்ச்சி யாக செய்தால் நல்ல ஒழுக்கமுள்ள இளைஞர்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும். ஆங்காங்கே இவ்வா றான விடயங்களை இளைஞர்கள் மத்தியில் விதையுங் கள் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

uday010120
இதையும் படியுங்கள்
Subscribe