Advertisment

கவிக்கோ பெயரில் தமிழக அரசு விருது வழங்க லேண்டும்! திருச்சி ஹைக்கூ மாநாட்டில் தீர்மானம்!

/idhalgal/eniya-utayam/tamil-nadu-government-will-give-award-name-kaviko-trichy-haiku-conference

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலகமாநாடு-2022 சிறப் பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை தூண்டில் - இனிய நந்தவனம் -தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின.

Advertisment

இம்மாநாட்டை கல்வி யாளர் சௌமா ராஜரத்தினம் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நிகழ்ச்சி கள் நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

dd

ஹைக்கூ வாசிப்பரங்கம், கருத்தரங்கம், பகிர்வரங்கம், கலந்துரையாடல், கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது வழங்குதல், ஹைக்கூ நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன. கவிஞர் தென்றல் நிகழ்ச்சியை சிறப்புறத் தொகுத்து

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலகமாநாடு-2022 சிறப் பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை தூண்டில் - இனிய நந்தவனம் -தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின.

Advertisment

இம்மாநாட்டை கல்வி யாளர் சௌமா ராஜரத்தினம் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நிகழ்ச்சி கள் நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

dd

ஹைக்கூ வாசிப்பரங்கம், கருத்தரங்கம், பகிர்வரங்கம், கலந்துரையாடல், கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது வழங்குதல், ஹைக்கூ நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன. கவிஞர் தென்றல் நிகழ்ச்சியை சிறப்புறத் தொகுத்து வழங்கினார்.

இதில் முதல் அமர்வில் புரவலர் சௌமா ராஜரத்தினம் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த மாநாடு ஒரு குடும்ப விழாவாகவும் ஹைக்கூத் திருவிழாவாகவும் இன்பம் பொங்கி வழிய, கவிஞர்கள் முகம் மலர, ஆரவாரத்துடன் நிகழத் தொடங்கியது. இரண்டாவது அமர்வாக ஹைக்கூ வாசிப்பரங்கம் கவிஞர் கவிநிலா மோகன் தலைமையில் நடந்தது. இதில் கவிஞர்கள் ச. கஜேந்திரன், குடந்தை ஆர். எஸ். நாதன், பாண்டிச்செல்வி கருப்பசாமி, நீலநிலா செண்பகராஜன், திருவள்ளுவர், அருண்மொழி, சு. பீர்முகம்மது, கவிதா அசோகன், புதுகை புதல்வன், நா. தாமோதர கண்ணன் உள்ளிடோர் தங்கள் ஹைக்கூக் கவிதைகளை அரங்கேற்றி அரங்கை கைத்தட்டலால் நிறைத்தனர். இதைத் தொடர்ந்து ஏனைய அமர்வுகளும் களைகட்டின.

Advertisment

dd

இம்மாநாட்டில் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமி, பிருந்தாசாரதி, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, ஆரூர் தமிழ்நாடன், தங்கம்மூர்த்தி, மு.முருகேஷ், நந்தவனம் சந்திர சேகரன், அமரன், வதிலை பிரபா, பல்லவி குமார், கவிநிலா மோகன், முனைவர் ம.ரமேஷ், தனலெட்சுமி பாஸ்கரன், பா.தென்றல் சிறப்பு விருந்தினர் களாகப் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த மாநாட்டில், கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரிலான ஹைக்கூ கவிதை நூல் போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் கவிஞர்கள் சென்னிமலை தண்ட பாணிக்கு முதல் பரிசும் ஓவியக்கவிஞர் உமாபதிக்கு இரண்டாம் பரிசும், செங்கை நன்மாறனுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டதோடு, ஆடலரசன், சந்திரா மனோகரன், சுக முருகன், கவிதா சபாபதி ஆகியோருக்கு ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

dd

மாநாட்டு நிறையுரையாக கவிஞர் என்.லிங்குசாமி பேசுகையில், “ஹைக்கூ கவிதை எழுதுபவனின் மனநிலையா னது உலகில் இருக்கும் எல்லா மனிதர்களின் மனநிலையிலிருந்தும் வேறுபட்டிருக்கும். அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கின்ற பார்வையும் மற்றவர்கள் மீது காட்டுகின்ற அன்பும் மகிழ்ச்சியும் வித்தியாசமானதாக இருக்கும். சென்னைக்குப் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற உந்துதலை எனக்குத் தந்தது மூன்று வரி ஹைக்கூ கவிதைதான். என்னை இந்த உயரத்திற்கு உயர்த்தியதும் எனது வெற்றி தோல்லியில் மனதைச் சமநிலையில் வைத்துக்கொள்வதும் இந்த ஹைக்கூ கவிதைகள். ஹைக்கூ கவிதை எழுத மெனக்கெடக் கூடாது. அது இயல்பாக அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில் ‘தூண்டில்’ ஹைக்கூ சிறப்பு மலர், மு.முருகேஷ் எழுதிய ‘ஞானியின் பச்சைக் கிளி’, தங்கம்மூர்த்தியின் ‘மழையின் கையெழுத்து’, கவி விஜய்யின் ‘காலளவு வானம்’, ’இலை வடிவில் வெயில்’ உள்ளிட்ட பல ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன.

dd

தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் இலக்கிய விருதுகளில் கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரால் ஹைக்கூ கவிஞர்களுக்கும் ஒரு விருதினை வழங்கிட வேண்டும் என்கிற தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டு ஏற்பாடுகளை நந்தவனம் சந்திர சேகர், கவிஞர் மு.முருகேஷ், உள்ளிட்டோர் சிறப்பாக வடிவமைத்திருந்தனர். இதில், ஹைக்கூ கவிதையாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக இயக்குநர் லிங்குசாமி தேர்ந்தெடுக் கப்பட்டதோடு, ஏனைய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.

ஹைக்கூ வரலாற்றில் இந்த திருச்சி மாநாடு மைல் கல்லாக மாறியிருக்கிறது.

-மு.மு.

uday010822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe