1963, மே 2ஆம் தேதி மாநிலங்களவையில் பேசிய அண்ணா, "நாம் இந்தியை வேண்டாமென்று சொல்வதாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்தி மட்டுமல்லாமல் வேறு எத்தனை பாஷைகளை வேண்டுமானாலும் மக்கள் தெரிந்துகொள்வது நல்லது என்பதே நமது அபிப்ராயம். இந்திக்கு எங்களுடைய எதிர்ப்பு என்ன? நான் தெளிவாகவும், ஒளிவுமறைவு இல்லாமலும் கூற விரும்புகிறேன். எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி கட்டாயப் பாடமாக இருப்பதைவிட, இஷ்ட பாடமாக இருப்பதே உண்மையில் பலன் தரக்கூடிய முறை. பல மொழிகளைக் கொண்ட நமது நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் ஏற்றம் என்ற நிலை ஏற்படுமானால், கோபம் ஏற்படுவதில் வியப்பில்லை. இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தி நம்ம தலையிலே ஏறிச் சவாரி செய்ய வர்றப்பதான் தடுக்கிறோம்! வேணாம்கிறோம்! ஆதிக்க மொழி என்கிறோம்!
இந்தி பெரும்பான்மையோர் பேசும் மொழி எனக்கூறும் வாதத்தில் என்ன நியாயம் இருக்கிறது? இந்த எண்ணிக்கை கணித அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கலாம். ஆனால் நன்னெறி அடிப்படை யில் பெரும்பான்மைக் கான குறியீடாக எடுத் துக்கொள்ள முடியாது. இந்தியை பெரும்பான் மையினர் பேசுவதால் அதுவே ஆட்சி மொழி என்கிறார்கள். தேசியப் பறவையாக எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கள்? மயிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எங்கும் வியாபித்து ஏராளமாக இருப்பது காக்கைதானே? பெரும்பான்மை என்பதால் காக்கையைத்தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்?" என்றும் அண்ணா கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களைப் பார்த்து, "நீங்கள் பிறப் பாலும், பிற ஆயிரம் வழிகளிலும், வீடுகளிலும், தோட்டங்களிலும், புத்தகத்தைப் பார்க்காமலேயே கூட இந்தியைக் கற்றுக்கொள்கிறீர்கள். அவ்வாறு இயல்பாகவே நீங்கள் பெற்ற இந்தி அறிவை, நாங்கள் கற்கவேண்டும் என்கிறீர்கள். ஒரு நியாய மற்ற பந்தயத்தில் எங்களைப் பங்குகொள்ளச் சொல்கிறீர்கள். ரோம் நாட்டிலேதான் விளையாட்டு அரங்குகளில் கொடிய விலங்குகளை எதிர்த்து வெறுங்கையுடன் வீரர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் களித்தனர். அதைப்போன்ற ஒரு பந்தயத்தை இங்கும் நடத்துவது நியாயம்தானா?" என்று விளக்கமாகப் பேசவும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த எ
1963, மே 2ஆம் தேதி மாநிலங்களவையில் பேசிய அண்ணா, "நாம் இந்தியை வேண்டாமென்று சொல்வதாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்தி மட்டுமல்லாமல் வேறு எத்தனை பாஷைகளை வேண்டுமானாலும் மக்கள் தெரிந்துகொள்வது நல்லது என்பதே நமது அபிப்ராயம். இந்திக்கு எங்களுடைய எதிர்ப்பு என்ன? நான் தெளிவாகவும், ஒளிவுமறைவு இல்லாமலும் கூற விரும்புகிறேன். எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி கட்டாயப் பாடமாக இருப்பதைவிட, இஷ்ட பாடமாக இருப்பதே உண்மையில் பலன் தரக்கூடிய முறை. பல மொழிகளைக் கொண்ட நமது நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் ஏற்றம் என்ற நிலை ஏற்படுமானால், கோபம் ஏற்படுவதில் வியப்பில்லை. இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தி நம்ம தலையிலே ஏறிச் சவாரி செய்ய வர்றப்பதான் தடுக்கிறோம்! வேணாம்கிறோம்! ஆதிக்க மொழி என்கிறோம்!
இந்தி பெரும்பான்மையோர் பேசும் மொழி எனக்கூறும் வாதத்தில் என்ன நியாயம் இருக்கிறது? இந்த எண்ணிக்கை கணித அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கலாம். ஆனால் நன்னெறி அடிப்படை யில் பெரும்பான்மைக் கான குறியீடாக எடுத் துக்கொள்ள முடியாது. இந்தியை பெரும்பான் மையினர் பேசுவதால் அதுவே ஆட்சி மொழி என்கிறார்கள். தேசியப் பறவையாக எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கள்? மயிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எங்கும் வியாபித்து ஏராளமாக இருப்பது காக்கைதானே? பெரும்பான்மை என்பதால் காக்கையைத்தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்?" என்றும் அண்ணா கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களைப் பார்த்து, "நீங்கள் பிறப் பாலும், பிற ஆயிரம் வழிகளிலும், வீடுகளிலும், தோட்டங்களிலும், புத்தகத்தைப் பார்க்காமலேயே கூட இந்தியைக் கற்றுக்கொள்கிறீர்கள். அவ்வாறு இயல்பாகவே நீங்கள் பெற்ற இந்தி அறிவை, நாங்கள் கற்கவேண்டும் என்கிறீர்கள். ஒரு நியாய மற்ற பந்தயத்தில் எங்களைப் பங்குகொள்ளச் சொல்கிறீர்கள். ரோம் நாட்டிலேதான் விளையாட்டு அரங்குகளில் கொடிய விலங்குகளை எதிர்த்து வெறுங்கையுடன் வீரர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் களித்தனர். அதைப்போன்ற ஒரு பந்தயத்தை இங்கும் நடத்துவது நியாயம்தானா?" என்று விளக்கமாகப் பேசவும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களும் அண்ணா வின் பேச்சிலிருக்கும் நியாயத்தைப் புரிந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க, இந்தியை முன்னிலைப் படுத்துவதற்காக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைக் குறைக் கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட்டது.
பேரறிஞர் அண்ணா 60 ஆண்டுகளுக்குமுன் பேசிய பேச்சின் சாரம் இன்றைக் கும் பொருந்துகிறது! இன்றைக்கு மத்தியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வித் திட்டத்தையே காவி மயமாக்கப் பார்க்கிறது. இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருக் கும் நிலையில், நம்மை பின்னுக்குத் தள்ளும் விதமாக, இந்தி மொழியை மூன்றாவது மொழியின் வடிவத் தில் நுழைக்கப் பார்க்கிறது. வெறும் கோவில் அர்ச்சனைக்கான மொழியாக மட்டுமே உயிர்த்திருக்கும் சமஸ்கிருதத்தையும் ஒன்றிய அரசு முன்னிலைப் படுத்துகிறது. அறிவியல் பார்வை" யின் அடிப்படையிலான பாடத்திட்டத்தை மாற்றி, இந்துத்வாவை பரப்பும் வகையில், அறிவியலுக் குப் புறம்பான ஆன்மிகக் கட்டுக்கதைகளுடன் கூடிய செய்திகளை பாடத்திட்டத்தில் நுழைக்கப் பார்க்கிறது. ஐ.டி.ஐ. இயக்குநராக இருப்பவரே கோமியத்தை சர்வரோஹ நிவாரணியாகப் புகழ்வதைக் காணமுடிகிறது. பள்ளி மாணவர்களின் தலையில், ஐந்தாம் வகுப்பிலிருந்தே தேர்வு முறையைப் புகுத்தி, ஏழை மாணவர்களை படிப்பிலிருந்து அப்புறப்படுத்தவும் பார்க்கிறது. இதன்மூலம் மீண்டும் குருகுலக் கல்வி காலத்துக்கு நம்மை பின்னோக்கி இழுக்கப் பார்க்கிறது.
பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுத்துவரும் நிலையில், ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு தரவேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிடும் என்று அதிகார மமதையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய பேச்சால் தற்போது தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரலெழுப்பி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
அமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கை யைக் கட்டாயமாக்குகிறது என்று கல்வி அமைச்ச ரால் கூறமுடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி.
அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர் கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டும் தொனியை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைக் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கவேண்டியிருக்கும்" என்று காட்டமாக பதிலடி கொடுத்தார். இதையடுத்து மீண்டும் இந்தித் திணிப்புக்கு எதிரான போர்க்களமாக தமிழ்நாடு மாறியுள்ளது. தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
ஒன்றிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டமும் இல்லை. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நாம் கேட்ட நிதியைத் தரவில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். நாங்கள் ஒண்ணும் உங்க அப்பன் வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. உங்களிடம் பிச்சை கேட்கவில்லை.. எங்களுடைய உரிமையைத்தான் கேட்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தைத் தான் கேட்கிறோம்.
இரு மொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை ஏற்கமறுப்பதாக ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். எங்களுக்கு மொழிப்பற்று அதிகம்; மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம். நிதியை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் எப்படி எடுப்பது என எங்களுக்கு தெரியும். மொழித்திணிப்பு நடந்தால் தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது என்றார் மிகக் கடுமையாக!
தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்னொரு மொழிப் போருக்கு நாம் தயாராகி வருகிறோம். நடராஜன், தாளமுத்து ஆகியோர் மீண்டும் உயிர்த்தெழுதல் போன்ற நிகழ்வு தற்சமயம் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் சாசனத்தில் மும்மொழிக் கொள்கை பற்றி எழுதப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கும், சர்வ சிக்ஷா அபியன் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2,152 கோடி ரூபாய் தராமல் இருக்கிறார் கள். ஒட்டுமொத்த இந்தியாவிலேயே மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தது தமிழ்நாடு தான் என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். 43 லட்சம் அரசு பிள்ளைகளுக்காக தான் இந்த பணத்தை நாம் கேட்கிறோம். இது உங்கள் அப்பன் வீட்டுப் பணமா?" என்று காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, "இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி காலத்தில், யாருக்கும் தெரியாமல் கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்கு (ஈர்ய்ஸ்ரீன்ழ்ழ்ங்ய்ற் கண்ள்ற்) மாற்றி, சட்டத் திருத்தம் செய்தனர்.
அது செல்லாது என்ற வழக்கும்கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டு, அவ்வழக்குப் பாதி விசாரிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது! தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. என்ற செகண்டரி பள்ளிகள், ஒன்றிய அரசு அதிகாரப்படி நடக்கின்றன. மற்ற மெட்ரிகுலேசன், மற்ற அரசு உயர்நிலைப்பள்ளிகள், மாநில அரசின் கல்வித் திட்டத்தின்படிதான் நடைபெறும் -
இருமொழித் திட்டம்தான் அங்கு.பல ஆண்டுகளாக உள்ள இந்த நிலையை அறவே மாற்றி, புதிய ‘‘தேசியக் கல்விக் கொள்கை என்ற திட்டத்தினால் தமிழ்நாடு அரசின், அதன் கொள்கை முடிவை மாற்றமுடியுமா? முடியாது! இதனை மாணவர்கள், பெற்றோர் ஏற்கவில்லை என்பதற்கான மக்கள் மன்றம் ஆர்ப்பரித்து கிளர்ந்தெழுவது கண்கூடாகத் தெரியும். தமிழ் இன உணர்வாளர்களே, மாநில உரிமையைக் காக்க அனைவரும் ஆயத்தமாவீர்!" என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, "தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் தியாகம், போராட்டம் தெரியாது. மொழிக்காக தீக்குளித்து மாண்டவர்கள் உலகிலேயே தமிழர்கள்தான். நிதியைக் கொடுக்கமுடியாது எனக்கூற நீ யார்? தமிழ்நாட்டை அச்சுறுத்த நினைத்தால் உங்கள் காலத்திலேயே இந்தியா துண்டு துண்டாக சிதறுகிற நிலை ஏற்படும்." என்று வெகுண்டெழுந்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், "1965ஆம் ஆண்டு என்ன நடைபெற்றது என்று மோடிக்கும் தெரியாது, அந்த கட்சிக்கும் தெரியாது. இரு மொழிக் கொள்கை காலாவதியாகவில்லை, நீங்கள்தான் காலாவதி ஆகிவிட்டீர்கள், ஒன்றிய கல்வி அமைச்சர் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்." என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், "கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த நிலையை நிறுத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்வோம். தமிழ்நாடே ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் திரண்டு வரும்." என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, "மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பிறகு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி வரியை ஒன்றிய அரசிற்கு தருகிறோம், எங்களுக்கு உரிய உரிமையை ஏன் தர மறுக்கிறீர்கள்? பின்புற வழியாக இந்தியைத் திணிக்க நினைத்தால் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்." என்றார்.
வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., "ஒன்றிய அரசு இன்னும் பிடிவாதத்தோடு நிதியைத் தர முடியாது என்று ஆணவத்தோடு சொல்லுகிற நிலையை பார்க்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போர் அறப்போராட்டம் தொடங்க உள்ளது." என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "முதலமைச்சருக்கு அன்பான வேண்டு கோள் தமிழ்நாட்டில் இயங்குகின்ற ஒன்றிய அரசு அலுவலகத்தில் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கூறுங்கள், சுங்கக் கட்டணங் கள் தர மறுப்போம், ஜி.எஸ்.டி. கொடுக்க ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அனைவரும் கூறுங்கள். இவற்றை முதலமைச்சர் செய்தால் மோடி உங்கள் வழிக்கு வருவார்." என்றார்.
இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், "தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. புதிய தேசியக் கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி அளிக்கப்படும் என்று சொல்வது சரியல்ல" எனத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளார். இதன்மூலம் இந்தி எதிர்ப்புப் போரில் இன்றைய தலைமுறை யினரும் இறங்கும் சூழலை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது!
'முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளைத் தனது வானொலிச் செய்தியில் 2019ஆம் ஆண்டில் பேசியிருந்த பிரதமர் மோடிக்கு அதன் அர்த்தத்தை யாராவது கற்பித்தால் நலம்!
- தெ.சு.கவுதமன்