ருக்கியா! என் செல்ல குழந்தையை எப்படி மறக்க முடியும்?

இல்லை... எந்தக் காலத்திலும் அந்த செல்லக் குழந்தையின் முகம் மனதி-ருந்து மறைந்து போகவே செய்யாது. அழகான பன்னீர் மலரை ஞாபகப்படுத்தும் சிவந்த... பிரகாசமான முகம். என்ன ஒரு அழகு! என்ன ஒரு புனிதத் தன்மை! தங்க மகளே... ருக்கியா... நீ இப்போது எங்கு இருக்கிறாய்? தேவதைகளின் உலகத்திலா? தேவதூதர்களின் கூட்டத்திலா?

எங்கு இருந்தாலும், உன்னுடைய மரண சமயத்தில் இருந்த சிரமங்களையும் கவலை நிறைந்த முகத்தையும் எப்படி மறக்க முடியும்?

நீ எனக்கு யாருமாகவும் இருக்கவில்லை - உண்மையிலேயே.

Advertisment

ஒரு பக்கத்து வீட்டுக்காரரின் மகள்... அதுவும்... சமீப காலத்தில் ஒருவரோடொருவர் பழக்கமானவர்கள். வேறுபட்ட மதத்திலும் கலாச்சாரத்திலும் வளர்பவர்களாக இருந்தாலும், ரஷீதுடன் நான் மிகவும் நெருக்கமாகிவிட்டேன். ரஷீதின் மகள் ருக்கியா.

ரஷீதுடன் பழக்கம் உண்டானதற்குக் காரணமாக இருந்தவளே குழந்தை ருக்கியாதான்.

தன்னுடைய செல்ல மகளிடம் விடைபெற்றுவிட்டு ரஷீத் சென்று அதிக நாட்கள் ஆகவில்லை. மிகவும் தூரத்தி-ருக்கும் வளைகுடா நாட்டிற்கு வாழ்க்கையைத் தேடிச்சென்ற ரஷீத் பீடி சுற்றும் தொழிலைச் செய்யக்கூடியவன்.

Advertisment

பிறகு வாடகைக் கார் ஓட்டு பவனாக ஆனான். ஊரில் இருக்கமுடியாத சூழ்நிலை உண்டானபோது, ஏதோவொரு நண்பனின் உதவியால் கத்தாருக்குப் போய்ச் சேர்ந்தான் இளைஞனும் நல்லவனுமான ரஷீத். ரஷீதின் இரண்டாவது சின்ன மகள் ருக்கியா. மூத்தவள் சல்மா. சல்மாவிற்கு ஒன்பது வயதும் ருக்கியாவிற்கு ஐந்து வயதும் நடக்கின்றன.

சல்மாவும் ருக்கியாவும் எந்த அளவிற்கு அருமையான குழந்தைகள்! சுறுசுறுப்பும் பணிவான குணமும் உள்ள அன்பான குழந்தைகள்...

குழந்தைகளின் தாய் குஞ்ஞாமினுவும் பேரழகு படைத்தவள் ஆயிற்றே! என்ன ஒரு சந்தோஷம் நிறைந்த குடும்பம்! சொத்துக்கள் உள்ளவராக இல்லையெனினும், இருப்பதை வைத்து மரியாதையுடன் வாழ்பவர்கள்.

அவர்களின் ஒட்டுமொத்த பூர்வீக சொத்து பத்து சென்ட் நிலம்தான். அந்த பத்து சென்ட் நிலத்தில் இல்லாத குழிகளின் குவியல்கள் இல்லை. ரஷீத் கத்தாருக்குச் சென்று நான்கு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தபோது, பழைய ஓலை வேய்ந்த சிறிய குடிசையை இடித்துவிட்டு புதிய வசிக்கும் வீட்டை உண்டாக்கினான்.

சிறியதாக இருந்தாலும், மிகவும் அழகான ஒரு நல்ல வீடு... அந்த வீடு சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும் வண்ணம் கவனமாக வைத்திருப்பதில் அந்த வீட்டி-ருக்கும் அனைவரும் ஒரே மாதிரி பங்கு வகித்தார்கள். அந்த வீட்டில் குஞ்ஞாமினுவும் ருக்கியாவும் சல்மாவும் மட்டுமே இருக்கவில்லை..

அறுபத்தைந்து வயதாவது இருக்குமென வயதை நினைக்கச் செய்யும் ரஷீதின் தாயும் இருந்தாள்.

பீவாத்தும்மா...

ss3

முதுமை வழிந்தொழுகும் வயது... இந்த வயதிலும் அவளின் ஒரு பல்கூட கழன்று விழவில்லை. தாயற்ற நான் பலநேரங்களில் அவளை என் தாயின் வடிவத்தில் பெரும்பாலான அதிகாலை வேளைகளில் பார்த்திருக்கிறேன்.

தனிமை நிலையில் யாரோடோ உள்ள பழிக்குப் பழி வாங்கும் உணர்வை மீட்டெடுப்பதைப்போல சொந்தச் செயல்களின் வேள்வியில் மூழ்கி வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு ரஷீதின் குடும்பத்துடன் உண்டாகியிருந்த நட்பு நிம்மதியை அளித்தது.

பீவாத்தும்மா எனக்காக அரிசி மாவால் செய்யப்பட்ட ரொட்டியைத் தயாரித்து கொடுத்து அனுப்பினாள். ரொட்டி மட்டுமல்ல. கறிக் குழம்பும் இருந்தது.

நல்லவொரு நாளன்று அன்புடன் தந்த உணவுப் பொருள்...

ரம்ஜானைப் பற்றிய நினைவு மனதில் எழுந்து வந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவனுக்கு ஒரு நல்ல இல்லத்தரசி உணவளிக்க வேண்டும் என்ற நியமம் பீவாத்தும்மாவை இதைச் செய்வதற்கு தூண்டியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நான் ரொட்டியை மட்டும் எடுத்தேன்.

கறிக்குழம்பை ருக்கியாவின் கைகளின் மூலமே பாட்டிக்கு திருப்பிக் கொடுத்து அனுப்பினேன்.

திரும்ப கொண்டு வந்த கிண்ணத்தி-ருந்த கறிக்குழம்பைப் பார்த்து பீவாத்தும்மா கூறினாள்:

"மகளே...நீ கொண்டு போன குழம்பை திரும்ப கொண்டு வந்திருக்கே..எதற்கு கொண்டு வந்தே? பாத்திரத்தை அங்கேயே வச்சிட்டு வந்திருக்கலாமே?''

"இல்லை... பாட்டி. அவர் கறியும் மீனும் சாப்பிடுறது இல்ல. இரண்டு ரொட்டிகளை அப்போதே உட்கார்ந்திருந்த இடத்துலேயே அமர்ந்து எடுத்துச் சாப்பிட்டார். "நல்ல... ருசியான ரொட்டி.. மகளே... இதற்கு கறிக் குழம்பு வேண்டாம். கறிக் குழம்பை ஊற்றா மலே இந்த ரொட்டியை சுவையுடன் கடித்துக் கடித்து தின்னலாம். இதில் தாராளமா தேங்காய் சேர்க்கப்பட்டிருக்கு.

உப்பு, எள்ளு, சீரகம்... இவையும் இருக்கு. அரிசி மாவு நல்லா வெந்திருக்கு.ருக்கியா... இந்த ரொட்டியைச் சுட்டது யாரு? உம்மாவா? பாட்டியா?''

நான் கூறிய அதே வார்த்தைகளை ருக்கியா தன்னுடைய பாணியிலும் குர-லும் வெளிப் படுத்தியதைக் கேட்டபோது, என்னையே அறியாமல் நான் குலுங்கிக் குலுங்கி சிரித்தேன்.

பாட்டிக்கும் பேத்திக்குமிடையே நடைபெற்ற அந்த நேருக்கு நேரான உரையாடல் இப்போது மனதிற்குள் குமிழி உண்டாக்கி வந்து கொண்டிருக்கிறது.

என் வீட்டின் முன்பக்கத்தி-ருக்கும் சாளரங் களைத் திறந்துவிட்டால், பக்கத்து வீட்டில் நடை பெறும் பெரும்பாலான நிகழ்வுகளையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் என் செயல்களைப் பார்க்காம-ருக்கவேண்டும் என்பதற்காக சாளரத்தையும் கதவையும் அடைத்துவிட்டு நேரத்தைப் போக்கும் முயற்சியில் நான் பலநேரங்களில் மூழ்கியிருக்கிறேன். சில நேரங்களில் சூரியன் உதயமாவதையும் மறைவதையும் பற்றிக்கூட நினைப்பதில்லை.

ஒரு ஆவேசம்... என் முயற்சியில் நான் மூழ்கியிருக்கும் வேளையில், பகல்களும் இரவுகளும் நானே அறியாமல் என்னைவிட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தன.

பயணம் செய்யும் நேரங்களில் என் வீடு பூட்டிக் கிடந்தது. நான் எங்கெங்கோ சுற்றித் திரிந்து விட்டு ஐந்தாறு நாட்கள் கடந்து இங்கு திரும்பி வருவதுதான் எப்போதும் நடக்கும் செயல். உரிய நேரத்தில் செய்யப்பட வேண்டிய கடமைகள் என்று கூறும்வகையில் அதிகமாக நான் எதுவும் செய்து முடிக்கவேண்டிய நிலையில் இல்லை.

எனினும், எனக்கென்று சில பிரச்சினைகள் இருந்தன. அவற்றைத் தீர்க்கவேண்டும் என்பதால், பலவேளைகளில் வீட்டில் அடைத்துக்கொண்டிருக்க முடிவதில்லை. என் முயற்சியில் இருந்து என்னை விலக்குவதற்கு யாரும் இல்லை.

செயல்களில் உதவுவதற்கோ, அறிவுரை கூறுவதற்கோ யாருமில்லை.

கிட்டத்தட்ட நான் தனிமையில் இருக்கக்கூடிய ஒரு மனிதன் என்றாகி விட்டது. என்மீது அன்பு வைத்திருப்பவர்கள், நான் அன்பு வைத்திருப்பவர்கள் என்று கூறப்படும் நபர்களுக்காக நடத்தப்படும் பயணத்திற்கு மத்தியில் என் பக்கத்து வீட்டி-ருக்கும் சிறிய அழகி ருக்கியாவுடன் சந்தோஷமான உரையாடல்கள் நடத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இருந்தன.எனினும், நான் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும் தகவலை முத-ல் அறிந்து கொள்பவளே ருக்கியாதான் என்பதை சில நாட்கள் நெருக்கமாக பழகியதி-ருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

நானும் ருக்கியாவும் போகக்கூடிய பொது வழி ஒன்றுதானெனினும், என் வீட்டின் வாச-ல் ஒரு இரும்பு கேட் இருக்கிறது.

அங்கு... அந்த கேட்டிற்கு முன்னால் ருக்கியா பல நேரங்களில் வந்து நின்று பார்ப்பதுண்டு. பூட்டிக் கிடக்கும் கேட்டையும், திறந்து கிடக்கும் வாசலையும் பார்த்தவாறு அமைதியாக நின்றுகொண்டிருக்கும் ருக்கியாவின் உருவம்! இப்போது என் மனம் முழுவதும் குழந்தை ருக்கியா மட்டுமே இருக்கிறாள்.

நான் கவலைப்படுகிறேன்.கவலைப்படுவதைத் தவிர, மனிதனுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?

ருக்கியாவை வெறிநாய் கடித்துவிட்டது. பயணம் முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தவுடன் கிடைத்த செய்தி... அவளைத் தூக்கிக்கொண்டு அந்தச் சிறிய குடும்பம் மருத்துவமனைக்கு போய்விட்டிருந்தது. அவளை வெறிநாய் எப்போது கடித்தது? எந்த இடத்தில்? இவ்வளவு நாட்களாக அந்த விஷயத்தை ஏன் யாருமே அறியாமல் போனார்கள்? தேவையான அளவிற்கு என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.

மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் ருக்கியாவை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்த கணமே நான் வேகமாக கிளம்பினேன்.

என் சப்தநாடிகளும் தளர்ந்து போயிருந்தன. வெறிநாயின் விஷம் ரத்த குழாய்களின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக பரவிக்கொண்டிருக்கும் செல்ல மகள் ருக்கியா! கடவுளே... அவளுக்கு எந்தவொரு ஆபத்தும் நேரச்செய்யக் கூடாது என்று நான் அமைதியாக வேண்டிக்கொண்டேன்.

என் பிரார்த்தனைகளுக்கு என்ன பலன்?

எனினும், நான் என்னுடைய செல்ல குழந்தையின் பிஞ்சு முகத்தை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பதினாறு மைல்கள் தூரத்தி-ருக்கும் நகரத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறினேன். வார்டு எண்ணை நான் முணுமுணுத்தேன்.

இனம் புரியாத பயமும், வார்த்தைகளால் விளக்கமுடியாத கவலையும் என்னை ஆக்கிரமித்தன.

தெளிவற்ற மனநிலையும், மனிதனால் எதுவுமே செய்யமுடியாத கையற்ற நிலையும் பைத்தியம் பிடித்த நாயின் விஷத்தைப்போல எனக்குள்ளும் வேகமாக நுழைந்தன.

கஷ்டம்! கடவுள் மனிதனை வெறுமனே ஏன் இப்படி படாதபாடு பட வைக்கிறது? கள்ளங்கபடமற்ற பிஞ்சுக் குழந்தைகளிடம் கொடூரமாக வெளிப்படுத்தும் ஆக்கிரமிப்பு உன் ஒரு விளையாட்டு மட்டுமா?

இந்த அளவிற்கு கடுமையான அனுபவங்களுக்கு இரையாகக்கூடிய அளவிற்கு ருக்கியா உனக்கு என்ன தவறைச் செய்து விட்டாள்? தெய்வமான நீ மிகுந்த கருணை குணம் படைத்தவன் என்றும், இரக்க மனம் உள்ளவன் என்றுமல்லவா அறிவு படைத்தவர்கள் கூறுகிறார்கள்! அப்படி இருக்க... இப்படிப்பட்ட கொடுமையான செயல்களை ஏன் தினந்தோறும் செய்துகொண்டிருக்கிறாய்?

எனக்குள்ளிருந்து எழுந்து வெளியே வந்த அடுக் கடுக்கான கேள்விக் கணைகளுக்கு தெளிவான எந்தவொரு பதிலும் அசரீரி மூலமோ, அறிவு மண்டலம் மூலமோ வரவில்லை.

ஒருவேளை என்னுடைய குண்ட-னி சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறதோ? அமைதியான குணத்தைக் கொண்டவனும், இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனு மான எனக்கு என்ன தெரியும்? அந்தச் சிறிய சந்தோஷமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த மத பக்தியும், கடவுள் பக்தியும் உள்ளவர்களாக இருந்தார்களே?

அவர்கள் ஆத்மார்த்தமாக மன வேதனையுடன் அழைக்கும் அந்த படைத்தவன் இறுதி நிமிடத்திலாவது காப்பாற்றுபவனாக வருவான் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கலாம்.

நானும் என் ரட்சகனுக்கு முன்னால் என்னுடைய ஒரு பிரார்த்தனையை நடத்திப் பார்த்தேன்.

பேருந்தில் பயணம் செய்பவர்கள் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை அவ்வப்போது துடைத்துக் கொண்டிருக்கும் என்னையே வெறித்துப் பார்த்தார்கள்.

ஏதாவது உறவினர்களுக்கோ சொந்தக் குடும்பத்தில் இருப்பவர் களுக்கோ ஆபத்து உண்டாகி, போய்க் கொண்டிருக்கும் ஒரு ஆளாக இருக்கலாம் என நினைத்திருக்கலாம். அப்படி இல்லையெனில், எதிரிகள் தோண்டிய சதி குழிக்குள் விழுந்து, மனதில் காயம் உண்டானதைத் தொடர்ந்து அழுதிருக்கலாம்.

கவலை காரணமாகவும், தடுக்க முடியாத துயர் நிலை காரணமாகவும் மனிதர்கள் அழுவார்கள் அல்லவா? நானும் என் மன நிம்மதிக்காக மிகவும் அமைதியாக அழுது கொண்டிருந்தேன்.

பல நேரங்களில் அதனாலேயே என் மனம் சாந்த நிலைக்கு வரவும் செய்திருக்கிறது.

பதைபதைப்பான நிமிடங்களின் ஆரவாரம் அடங்கி, பேரமைதி நிலவக்கூடிய அந்த முக்தி நிலையைப் பெறுவதற்காக அழுவது என்பது என்னுடைய ஒரு குணம் என்றே ஆகிவிட்டது.

மற்றவர்களின் துயரங்களை என் துயரங்களாக எண்ணி வேதனைப்படுவது! அதுவும் ஒரு வகையான தண்டனைதான்!

மற்றவர்களின் துக்கத்தில் மகிழ்ச்சியடைபவர் வாழக்கூடிய ஒரு காலமல்லவா வந்து பிறந்திருக்கிறது! மனிதனும் காலமும் நாட்கள் செல்லச் செல்ல இரக்கவுணர்வே இல்லாத நிலைக்கு மாறிவிட்டிருக்கும் பரிதாபத்திற்குரிய சூழ-ன் ஆதிக்கம்! நான் எதையெதையோ நினைத்துப் பார்த்தேன்.

ருக்கியாவின் விலைமதிப்புள்ள உயிரைப் பற்றிய பிரச்சினை குறித்து சிந்திக்கச் சிந்திக்க கவலை வளர்ந்துகொண்டேயிருந்தது. பேருந்தில் கூண்டுக்குள் சிக்கிய எ-யைப் போல நான் அமர்ந்திருந்தேன்.

ஒரு வகையில் நகரத்தி-றங்கி ஆட்டோ ரிக்ஷாவை அழைத்து ருக்கியாவிற்கு சிகிச்சை நடக்கும் மருத்துவமனைக்கு விரைந்தேன்.

இரைச்சல் எழுப்பி, திமிறிக்கொண்டு ஓடும் வாகனங் களுக்கு மத்தியில் பற்றிவைத்து விட்ட வாணத்தைப் போல ஆட்டோ ரிக்ஷா வேகமாகத் திரும்பி, வட்டம் சுற்றி மருத்துவமனையின் கேட்டைக் கடந்து சென்றது.

ருக்கியா அவளுடைய அக்கா சல்மாவின் கையைக் கோர்த்துப் பிடித்தவாறு இரும்புக் கம்பிகள் போடப் பட்ட அறைக்குள் நடந்து போய்க் கொண்டிருக்கிறாள்.

என் பார்வையில் அந்த பிஞ்சு முகம் பதிந்தது. நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். பெரிய ஒரு ஆட்களின் கூட்டம் அந்த இரும்புக் கம்பிகளுக்கு முன்னால் வந்து நின்றுகொண்டிருந்தது.

டாக்டர்களும், ஸ்டாஃப் நர்ஸ்களும், வார்டர்களும், மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்களும், நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அடங்கிய மக்களின் கூட்டம்...

வேதனை அளிக்கக்கூடிய இந்த பரிதாபத்திற்குரிய காட்சியைப் பார்ப்பதற்காகவா இவ்வளவு அவசர அவசரமாக இங்கு கிளம்பி வந்தேன்? என் தங்கத்திற்கு நிகரான செல்லக் குழந்தையான ருக்கியாவின் முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்?அவளையும் அந்தச் சிறிய குடும்பத்தையும் சந்தித்து ஏதாவது இரண்டு வார்த்தை கள் என்னால் கூறமுடியுமா? என்ன வார்த்தைகளைக் கொண்டு நான் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்?

ஆட்களின் கூட்டத்திற்குள் நுழைந்து இரும்புக் கம்பிகள் போடப்பட்டிருக்கும் அறைக்கருகில் எப்படி செல்வேன்? மனரீதியான செயலற்ற நிலை காரணமாக பெரும்பாலும் தெளிவற்ற தன்மைக்கு ஆளான நான் திகைத்துப்போய் நின்றிருந்தேன்.

கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு திசையி-ருந்து நுழைந்து வரும் மரணத்தின் அடையாளமான வெறிநாயின் உருவத்தை என்னால் பார்க்க முடிந்தது. மின்சாரம் பாய்ந்ததைப்போல ஏதோவொன்று என் நரம்புகளைப் பிடித்து அதிரச் செய்தது.

விலைமதிப்புள்ள ஃப்ராக்கையும், ரவிக்கையையும், சிறிய பர்தாவையும் அணிந்து, அவள் அந்த இடத்தில் நெருப்பு பற்றிய பூவைப்போல கரிந்து, காய்ந்து நின்றிருந்தாள்.

கவலையும் பதைபதைப்பும் நிறைந்த முகம்...

தகித்துக் கொண்டிருக்கும், பாதங்கள் மிதிக்கும் இரும்புக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்ட ருக்கியாவின் முகத்தில் பயம் கலந்த உணர்வு தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

அவள் காரணமே இல்லாமல் வியர்வையில் மூழ்கியிருந்தாள்.

சரீரம் அவ்வப்போது குளிர் ஜுரம் பிடித்திருப்பதைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது.

அவள் எதையோ வாசனை பிடித்தவாறு, கூர்ந்து கவனித்தவாறு, திறந்த கண்களுடன் விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். தன் முகத்தை சரீரத்தின் பல பகுதிகளிலும் வைத்து தேய்த்தாள். தன் நகங்களைக் கொண்டு அவள் சரீரத்தின் அனைத்து பகுதிகளிலும் பிராண்டுவதைப் போல தோன்றியது. தன் தலையி-ருந்து நழுவி விழுந்த தலைத்துணியை அவள் முகர்ந்து பார்த்துவிட்டு, வாயில் வைத்து கடித்துக்கிழித்தாள். சிறிது நேரம் மூச்சு விட்டதற்கு மத்தியில் மீண்டும் வாசனையை முகர்வதைப்போல நாசியை விரித்தாள். ஆமாம்...

என் செல்லக் குழந்தை இப்போது முற்றிலும் பைத்தியம் பிடித்தவளாக ஆகிக் விட்டிருக்கிறாள்.

அவளுடைய செயல்களில் கிறுக்குப் பிடித்த நாய் பாதங்களைக்கொண்டு கோபத்துடன் உதைத்தது.