Advertisment

அறுவை சிகிச்சை மாதவிக்குட்டி தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/surgery-placenta-tamil-sura

ன் குரல் பதறக்கூடாதென்று அவர் விரும்பினார்.

குழந்தை இருக்கையில் சாய்ந்து படுத்திருந்தது. கையில் முந்தைய நாள் ஒரு உறவினர் பரிசாகத் தந்த பார்பிடாலை அவள் இறுகப் பிடித்திருந்தாள்.

Advertisment

"இருக்கைக்குப் பின்னால வச்சிருக்கேன்.'' குழந்தையின் தாய் கூறினாள். அந்தப் பெண்ணின் நாசி சிவந்தும் கண்கள் கலங்கியும் காணப்பட்டன. ஆனால் அவள் குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"மகள் திரும்பி வர்றப்போ நான் ஒரு மஞ்சள்நிற பட்டாடையைத் தச்சு வச்சிருக்கேன். பிறந்தநாளுக்கு அந்த ஃப்ர

ன் குரல் பதறக்கூடாதென்று அவர் விரும்பினார்.

குழந்தை இருக்கையில் சாய்ந்து படுத்திருந்தது. கையில் முந்தைய நாள் ஒரு உறவினர் பரிசாகத் தந்த பார்பிடாலை அவள் இறுகப் பிடித்திருந்தாள்.

Advertisment

"இருக்கைக்குப் பின்னால வச்சிருக்கேன்.'' குழந்தையின் தாய் கூறினாள். அந்தப் பெண்ணின் நாசி சிவந்தும் கண்கள் கலங்கியும் காணப்பட்டன. ஆனால் அவள் குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"மகள் திரும்பி வர்றப்போ நான் ஒரு மஞ்சள்நிற பட்டாடையைத் தச்சு வச்சிருக்கேன். பிறந்தநாளுக்கு அந்த ஃப்ராக்கை அணியலாம்.''

cc

Advertisment

அவள் கூறினாள்.

"பிறந்தநாள் வர்றப்போ, நோய் குணமாகி தைரியமா இருப்பா.'' ரத்தம் தருவதற்குத் தயாராகி, பிற நகரங்களி-ருந்து வந்திருக்கும் உறவினர்களில் ஒருவர் கூறினார். ‌‌‌

"கொஞ்சம் சிரி மகளே...'' இன்னொரு ஆள் கூறினார்.

குழந்தையின் தந்தை ஓட்டுநரின் இருக்கையில் சென்று அமர்ந்தார். இடது பக்கத்தில் அவருடைய சகோதரர்கள் திக்கித் திணறி அமர்ந்தார்கள்.

பின்னா-ருந்த இருக்கையில் குழந்தையும், தாயும், தாயின் சகோதரியும், சகோதரியின் கணவரும் அமர்ந்தார்கள்.

குழந்தையின் மெ-ந்த சரீரத்தில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தனியாக கவனம் செலுத்தினார்கள். குழந்தையின் பாட்டி வெளியே நின்றவாறு கேட்டாள்: ‌

"ராத்திரியில பயன்படுத்துவதற்கு உங்களுக்கு தலையணை எதுவும் வேணாமா?''

"தலையணை எதுக்கு? அங்க யாரையும் படுக்க டாக்டர் ஒத்துக்கொள்ள மாட்டார். நோயாளியோட அறையில யாருமே இருக்கக்கூடாது என்பதுதான் இந்த மருத்துவமனையோட சட்டம்.'' குழந்தையின் தந்தை கூறினார்.

"டாக்டர் வ-யத்தான் அறுவை சிகிச்சை செய்வார். பொதுவா அவர் எல்லாருக்கும் ஆபரேஷன் செய்யமாட்டார். இது நம்மோட அதிர்ஷ்டம்." குழந்தையின் பெரியப்பா திரும்பிப் பார்த்தவாறு கூறினார்.

"அமெரிக்காவுல எவ்வளவு இதய அறுவை சிகிச்சைகள் செய்த ஆள் அவர்!'' குழந்தையின் தந்தை கூறினார். அவர் காரை நகர்த்தினார்.

"பாட்டிக்கு டாட்டா சொல்லு மகளே!" குழந்தையின் அத்தை கூறினாள். அத்தை குழந்தையின் வலது கையை உயர்த்தி இரண்டு முறை ஒரு பெண்டுலத்தைப்போல ஆட்டினாள். பாட்டி அதைப் பார்த்தும் எதுவும் கூறவில்லை. வாசல்படியின்மீது ஒரு சிலையைப்போல அந்தப் பெண் நின்றிருந்தாள்.

"இரவுல எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு.'' குழந்தை கூறியது. ‌‌

cc

"மருத்துவமனையில படுக்கறதுக்கு பயப்படணுமா? பூனையோ நாயோ திருடனோ... யாருமே அங்க வரமாட்டாங்க. அறை மூணாவது மாடியில இருக்கு. அங்க பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை மகளே!" தந்தை கூறினார்.

கார் கேட்டைக் கடந்து தெருவில் இறங்கியது.

"எனக்கு இருட்டுன்னா பயம்.'' குழந்தை கூறியது. ‌

"லைட்டை அணைக்க வேணாம்னு நர்ஸ்கள்கிட்ட நான் சொல்-டுறேன். போதுமா?'' குழந்தையின் தந்தை கேட்டார்.

குழந்தையின் தாயின் கண்கள் நிறைந்து வழிந்தன.

uday011222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe