சுண்டெலியும் சுவரும் டி.பத்மநாபன் தமிழில்: சுரா

/idhalgal/eniya-utayam/sundeli-and-wall-d-padmanapan-tamil-sura

ரு நீதி போதனைக் கதை....

பல வருடங்களுக்கு முன்பு ஒரு வயலில் ஒரு சுண்டெலி இருந்தது. அவன் வயலிலிருந்த மற்ற எலிகளுடன் பெரிய அளவில் நட்புடன் இருக்கவில்லை.

தந்தையும் தாயும் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்த காரணத்தால் அவன் இளம் வயதிலேயே தான்தோன்றித்தனம் உள்ளவனாக இருந்தான். படிப்பை முடிக்காமலேயே அவன் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தான். ஒரு சுண்டெலி வாழ்க்கையில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றனவே!அது எதையும் தெரிந்துகொள்வதற்கு முயற்சிக்காமலே அவன் ஆசிரியர்களுடன் சண்டை போட்டான். தனக்கு தெரியாதது உலகத்தில் எதுவுமே இல்லையெனவும், சுண்டெலிகளுக்கு மத்தியில் மிகப் பெரிய அறிவாளி தான்தான் எனவும் அவன் கூறி நடந்து திரிந்தான். இப்படி பேசியது இளம் வயதிலிருந்தே அவனை பல ஆபத்துகளிலும் கொண்டுபோய் விட்டது.

ஆனால், அதனாலொன்றும் திமிரான அவனுடைய நடத்தையில் எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை.

இறுதியில் சாந்தமான குணம் கொண்ட தந்தையைத் திட்டியவாறு அவன் ஒருநாள் வீட்டிலிருந்து வெளியேறிப் போகவும் செய்தான்.

வயலில் கோதுமை, பார்லி, நெல் ஆகிய பலவகையான விவசாயங்களை எலிகள் செய்தன. அவர்கள் நல்ல காய்கறிகளை நட்டு விளைவித்து உண்டாக்கினர்.

அவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருந்த னர். அதே நேரத்தில்...வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற நம்முடைய எலிக்குஞ்சு சொந்தமாக ஒரு விவசாயமும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல....

விவசாயத்திலோ விளைச்சலை அறுப்பதிலோ எதுவும், யாருக்கும், எந்தச் சமயத்திலும் உதவியது மில்லை.

தனக்குத் தேவையான தானியத்தையும் காய்கறி களையும் அவன் மற்றவர்களின் விவசாய நிலங்களிலிருந்து பலவந்தமாக எடுத்தான்.சில நேரங்களில் யாருக்கும் தெரியாமல் கொள்ளையடிக்கவும் செய்தான்.

மழைக் காலத்தில் வசிப்பதற்கு

மழைக் காலத்தில் வசிப்பதற்கு சுண்டெலிக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை.மழை பெய்தால், அவன் தனக்கு தோன்றக்கூடிய ஏதாவதொரு வீட்டிற்குள் நுழைந்து கொள்வான்.அங்கு வசிப்பவர்கள் எதிர்த்தால், அவர்களை விரட்டி ஓடச் செய்வான். இதுதான் எப்போதும் நடந்து கொண்டிருந்தது.

பொதுவாகவே சுண்டெலிகள் அமைதியான சூழலை அதிகம் விரும்பக் கூடியவர்கள் என்பதால், அவர்கள் யாரும் அவனிடம் சண்டைக்குச் செல்ல வில்லை. "போய் தொலைந்து போகட்டும். இந்த நாசமா போறவனுடன் பிரச்சினை வேண்டாம்'' என்பதுதான் எப்போதும் அவர்களுடைய சிந்தனையாக இருந்தது.

ss

ஆனால், அது அவர்களின் பலவீனத்தாலும் பயத் தாலும் இருக்கக்கூடியது என்பதுதான் சுண்டெலியின் நம்பிக்கையாக இருந்தது.

ஒருநாள் காலையில் சுண்டெலி வயல்வெளியின் வழியாக அலட்சியமாக நடந்து சென்றது. இடையே வழியில் பார்க்கக்கூடிய மற்ற சுண்டெலிகளை பயமுறுத்துவதற்காக அவன் தன்னுடைய அனைத்து பலத்தையும் பயன்படுத்தி உரத்த குரலில் சத்தம் உண்டாக்கினான்.தன் சத்தத்தைக் கேட்டு உலகம் முழுவதும் நடுங்கும் என்று உண்மையாகவே அவன் நம்பினான். ஆனால், உண்மையிலேயே யாரும் நடுங்கவில்லை. தான் மீசையை முறுக்கும்போது, முழு உலகமுமே நடுங்குகிறது என்று முட்டாளான அவன் நினைத்தான் என்பது மட்டுமே விஷயம்.

நடந்து.... நடந்து வயலின் அந்தப் பக்கத்திலிருந்த சுவருக்கருகில் சுண்டெலி போய்ச் சேர்ந்தது. இவ்வளவு தூரத்தை முதல் தடவையாக அவன் பயணித்து வந்திருக்கிறான்.

அதனால் சுவர் இருப்பதைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது.

சுவருக்கு முன்னால் வந்து சேர்ந்த சுண்டெலி திடீரென நின்றான். வழி மூடப்பட்டிருக்குதே!எவ்வளவு முயற்சி செய்தும் தன் பாதையில் தடையை ஏற்படுத்தி உயர்ந்து நிற்பது யார் என்பது அவனுக்குப் புரியவில்லை. முடிந்தவரைக்கும் கழுத்தைப் பின்னோக்கி வளைத்து உயரத்தை நோக்கி கண்களைச் செலுத்தியும் அவனுக்கு எந்தத் தும்பும் கிடைக்கவில்லை.

பின் கழுத்தில் வேதனை உண்டானது என்பது மட்டுமே பலனாக இருந்தது.

அப்போது சுண்டெலி இவ்வாறு நினைத்தது:

இது உறுதியாக...

கட்டுக்கடங்காத ஒரு மலைதான். இதுவரை இப்படியொன்று இங்கு இருந்ததில்லை.என் அறிவிலும் அழகிலும் திறமையிலும் பொறாமை கொண்டிருக்கும் மற்ற எலிகள் இவனை இங்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். என் வழியில் தடை உண்டாக்கி என்னைச் சிறு குழந்தையாக ஆக்குவதற்கு.

சரி... அதுதான் விஷயமென்றால், அப்படியே இருக்கட்டும். ஒரு கை பார்ப்போம்.... யார் பலசாலி என்பதைத்தான் பார்த்து விடுவோமே!

இவ்வாறு மனதில் கூறியவாறு சுண்டெலி பயமுறுத்தும் குரலில் மெதுவாக முனகியது.

அப்பிராணி சுவர் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டிருந்தது.

கவலையுடன் சுவர் நினைத்தது: இந்த வயதான காலத்தில் இந்த தாறுமாறான போக்கு கொண்டவனுடன் என்னால் சண்டை போட முடியாது. இவன் ஒரு வெறும் ஊர் சுற்றி. அவ்வளவுதான்....

ஆனால், இப்போது நான் எங்கு செல்வது? நான் இங்கு... இவ்வாறு நிற்க ஆரம்பித்து அதிக காலம் ஆகிவிட்டதே! என்னால் இங்கு இருப்பவர்கள்

அனைவருக்கும் எப்போதும் நன்மைதானே நடந்திருக்கிறது! நான் அவர்களுடைய விளைச்சல்களின் பாதுகாவலனாக இருந்திருக்கிறேனே! ஆனால், இது எதையும் கூறினால், இவனிடம் விலை போகாதே!

இவ்வாறு சுவர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, சுண்டெலி நான்கடிகள் பின்னோக்கிச் சென்று மிரட்டும் குரலில் கூறியது:

"டேய்... மீறும் குணம் கொண்ட மலையே! நீ என் பாதையை விட்டு நகர முடியுமா... முடியாதா? விலகிச் செல்வதுதான் உன் உடல் நலத்திற்கு நல்லது.

இல்லாவிட்டால்.... நான் உன்னைத் தோண்டியெடுத்து தூரத்தில் எறிய வேண்டிய நிலை உண்டாகும்.அப்போது நீ தூள்... தூளாக வாய்....''

சுவர் கவலையுடன் எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தது.

உண்மையிலேயே அது ஒரு பரிதாபத்திற்குரிய சுவராக இருந்தது. சுண்டெலி நினைத்த அளவிற்கு அதுவொன்றும் பெரியதல்ல.

அதிகபட்சம் அதற்கு ஒரு ஆறடி உயரம் இருக்கும். நீளமும் அப்படியொன்றும் அதிகமில்லை. கற்கள் பலவும் நீண்ட காலம் இருந்ததால், சிதிலமடைந்தும் பாசி படர்ந்தும் காணப்பட்டன. சில இடங்களில் அவை விலகி விழப்போகும் நிலையில் இருந்தன.

இப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும்,அது ஒரு உண்மையான சுவராயிற்றே!

சுண்டெலி அதிகம் காத்திருக்காமல் ஓடிச் சென்று சுவரின் மீது ஒருமுறை மோதியது.

வேதனை காரணமாக சுண்டெலியால் சிறிது நேரத்திற்கு கண்களைத் திறக்க முடியவில்லை.

இறுதியில் கண்களைத் திறந்தபோது, ச்சே...அது அதே இடத்திலேயே இருக்கிறதே!

சுண்டெலிக்கு மிகவும் கடுமையான கோபம் வந்தது. அனைத்து பலத்தையும் ஒன்று திரட்டி ஓடி வந்து மீண்டும் அவன் ஒருமுறை மோதினான். இந்த முறை மோதியது சற்று கடினமானதாக இருந்தது.

சுண்டெலியின் வேதனை அவனால் தாங்கிக் கொள்ள இயலக்கூடிய நிலையையும் தாண்டியிருந்தது.

அவன் வயலில் இறந்ததைப் போல மல்லாந்து விழுந்தான். அப்போது அவனுடைய சிறிய தலைக்குள் பொன் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன.

ஆகாயத்தில் வட்டம் போட்டு பறந்து கொண்டிருந்த ஒரு பருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.

சுண்டெலி தற்கொலை செய்துகொண்டதாக பருந்து நினைத்தது. எது எப்படியோ...இறந்தது இறந்ததுதானே! இனி வெறுமனே நேரத்தை வீணாக்க வேண்டாமென நினைத்த பருந்து இறங்கி வந்து சுய உணர்வற்றுக் கிடந்த சுண்டெலியை எடுத்துக் கொண்டு எங்கோ பறந்து சென்றது.

இவற்றையெல்லாம் பார்த்து கவலையுடன் சுவர் கூறியது:

"கஷ்டம்தான்! அந்தச் சுண்டெலி போக்கிரியாகவும், முட்டாளாகவும் இருந்தாலும், ஒரு பரிதாபத்திற்குரியது

____________

மொழி பெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று மலையாளச் சிறுகதைகளை நான் மொழி பெயர்த்திருக்கிறேன். மூன்றும் மாறுபட்ட கதைக்கருக்களைக் கொண்டவை.

"காரப்பழம்' என்ற சிறுகதையை எழுதியவர்... மூத்த மலையாள எழுத்தாளரும், கேரள சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.

உண்ணிமோன் என்ற பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை சிறுவனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.

இரண்டு அவித்த வாத்து முட்டைகளுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து காரப்பழம் பறிப்பதற்காக மரமேறும் அந்தச் சிறுவனுக்காக நம் கண்கள் கசியும். கதையின் இறுதிப் பகுதி கல் நெஞ்சையும் கலங்கவைக்கும்.

"சுண்டெலியும் சுவரும்' என்ற சிறுகதையை எழுதியவர்... தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நட்சத்திர மலையாள எழுத்தாளரான டி. பத்மநாபன்.

இந்த கதையின்மூலம் எவ்வளவு பெரிய உண்மையைக் கூற முயற்சிக்கிறார் பத்மநாபன்!

உயர்ந்து நிற்கும் சுவருடன் முட்டாள்தனமாக மோதும் சுண்டெலியின் குணத்தைக்கொண்ட எத்தனை மனிதர்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

"பதின்மூன்று வயதுள்ள மகள்' என்ற சிறுகதையை எழுதியவர். மலையாள பெண் எழுத்தாளர்களின் திலகமும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி.

பதிமூன்று வயதுள்ள மகளையும் அவளின் தந்தையையும் தாயையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.

கதையின் இறுதிப் பகுதி.... உண்மையிலேயே கவிதைதான்!

1956-ஆம் வருடத்திலேயே மாதவிக்குட்டி இப்படியொரு அருமையான கதைக் கருவை வைத்து கதை எழுதியிருக்கிறார் என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

நான் மொழிபெயர்த்திருக்கும் இந்த மூன்று கதைகளும் என்றும் உங்களின் உள்ளங்களில் வாழும்.

என் மொழிபெயர்ப்பு ஆக்கங்களை வாசிக்கும் இலக்கிய உள்ளங்களுக்கு என் இதய நன்றி.

அன்புடன்,

சுரா

uday011023
இதையும் படியுங்கள்
Subscribe