ட வேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகத்து

-தொல்காப்பியம்.

இமிழ்கடல் வே-யை தமிழ் நாடாக்கின

Advertisment

-சிலப்பதிகாரம்

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Advertisment

-சிவபுராணம்

நாடு வரம் கூற நாஞ்சில் துஞ்சக் கோடை நீடிய பை ஆறு சாலை குன்று

கண்டன்ன கோட்டயாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள உள் இல்

என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை

-அகநானூறு பாடல் 42

பாடியவர் கபிலர்.

நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆறணக் கவிதை செய்தான் அ... ந்த வால்மீகி என்பான் சீரணி சோழ நாட்டு தேரெழழுந்தூரில் வாழ்வோன் காரணக் கொடையான் கம்பன் தமிழினாற்கவி செய்தானோ.

-கம்பராமாயணம் நூல் நயம்

தள்ளா விளையுரும் தக்காரும் தாழ்விலார்

செல்வரும் சேர்வது நாடு- முதல்

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமைவு இல்லாத நாடு- வரை

பத்து குறட்பாக்கள்

-திருக்குறள் பொருட்பால் அதிகாரம் -74

எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி

யிருந்தது மிந்நாடே- அதன்

முந்தையராயிர மாண்டுகள் வாழ்ந்து

முடிந்தது மிந்நாடே

மேற்கூறிய அனைத்து மேற்கோள்களிலும் தமிழும், நாடும் இணைந்து கைகோர்த்துக்கொண்டு நடம்புரிவது தெளிவாக தெரிகிறது.

tn

இந்தியா பல குறுநிலங்களை உள்ளடக்கிய ஆசியா வின் ஒரு துணைக் கண்டம். 6000 வருடங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட பண்டைய தமிழர் வரலாற்றுக் கூறுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. இந்திய வரைபடத்தின்படி அதன் தெற்குப் பகுதியில் அமைந்த தமிழ்நாடு, அருகாமை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரத்தை தன் அகத்தே இணைத்து தென் இந்தியா, தென்னகம் என்று அழைக் கப்பட்டது. பல சாம்ராஜ்யங்கள் தோன்றி மறைந்த வரலாறு கள் இதற்கு உண்டு. முதல் நூற்றாண்டி-ருந்து நான்காம் நூற்றாண்டுவரை சோழர்கள் காலம் பின்னர் பல்லவ மன்னர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். 9-ஆம் நூற்றாண்டிலிருந்து 14-ஆம் நூற்றாண்டுவரை மீண்டும் சோழர்கள் ஆட்சி புரிந்தனர். காவிரி நாடன் கரிகாலன்முதல் ராஜராஜ சோழன் வரை சோழ சாம்ராஜ்யத்தை சிறப்புற நிர்வகித்தனர். 14-ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய மன்னர்கள் கோலோச்சினர். மூன்று பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ்நாடு விஜய நகரப் பேரரசின் ஒரு பகுதியானது. மராத்தியர்களின் வருகை ஐரோப்பிய வணிகத்திற்கு வழிகோலியது. பூர்வீக ஆட்சியாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக் கிய சென்னை மாகாணம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபின் மொழிவாரியான எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. 1947-ல் மார்ஷல் நேசமணி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.

1952-ல் பொட்டி ஸ்ரீ ராமுலு ஆந்திர மாநிலம் கோரி போராட்டத்தை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து 1956 ஜூலை முதல் விருது நகர் சங்கரலிங்க னார் 12 கோரிக்கைகளை அன்றைய அரசின் முன் வைத்தார்.

அதில் ஒன்று "தமிழ்நாடு'' என அறிவிக்க கோருதல். 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது காமராசர், ம.பொ.சி., கக்கன், அண்ணா, ஜீவானந்தம் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிடக் கேட்டுக்கொண்டனர். அக்டோபர் 13-ல் உயிர்த் தியாகம் செய்தார். பழுத்த காங்கிரஸ்வாதியான அவர் தனது உடலை கம்யூனிஸ்ட் வசம் ஒப்படைக்க கோரிக்கை வைத்தார். 1956-ல் "மதராஸ் மனதே'' என ஆந்திரம் போராடுகையில், ம.பொ.சிவஞானம் தலைமையில் தமிழ்நாட்டின் வடபகுதி திருத்தணியை மட்டும் மீட்க முடிந்தது. தெற்கே, செங்கோட்டை மட்டும் கன்னியாகுமரியை இணைக்க முடிந்தது. கன்னியா குமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க மார்ஷல் நேசமணி மற்றும் தாணுப் பிள்ளை அரும்பாடு பட்டனர்.

1957-ல் அண்ணா முதன்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தபோது தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி தீர்மானம் வைக்கப்படுகிறது. 42 பேர் ஒப்புதல் தர 127 பேர் மறுப்பு தெரிவித்து அந்த கோரிக்கை முடக்கப்பட்டது. 1961-ல் சோஷியலிசக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சின்னத்துரை மற்றும் ம.பொ. சிவஞானம் அவர்களின் தமிழரசு கட்சி பல்வேறு போராட்டங்களை கையிலெடுத்தது. அன்றைய முதல்வர் காமராஜர் கடிதத்தில் மட்டும் தமிழ்நாடு என குறிப்பிட லாம் என்று தன் கருத்தைத் தெரிவித்தார். ஏற்புடையதல்ல என எதிர்த்தரப்பு தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் மேற்கு வங்க உமேஷ்குப்தா தனிநபர் மசோதா எனும் அடிப்படையில் மாநில அரசு மத்திய அரசு ஒப்புதலை பெறுவதில் ஏற்படும் இடர்பாடுகளை முன் வைத்தார். 1956 முதல் 8 ஆண்டுகளாக நடத்திய தொடர் போராட்டம் 1963 ஜூலை 23 தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் இராம. அரங்கண்ணல் பெயர் மாற்றத்தை வலி யுறுத்தி தீர்மானத்தை முன்வைத்தார். அப்போதைய முதல்வர் பக்தவச்சலம், ஆர். வெங்கட்ராமன் மறுப்பு தெரிவித்தனர். இந்தியா ஒரு நாடு அதில் இன்னொரு நாடு எதற்கு என்ற சர்ச்சை ஏற்பட்டபோது, இந்தியா ஒரு துணைக் கண்டம் என்பதை அண்ணா தெளிவுபடுத்தினார் மேலும், கோல்ட் கோஸ்ட் என மாறியதை கட்டிக் காட்டினார் 1963-ம் ஆண்டு மாநிலங்களவையில் "தமிழ்நாடு'' பெயர் மாற்றம் கோரிக்கை வைக்கப் பட்டது.

பெயர் மாற்றத்திற்கு என்ன அவசியம் என்று சர்ச்சை கிளம்பியது. அப்போதும் அண்ணா அவர்கள் பாராளுமன்றத்தை லோக்சபா என்றும் கவுன்சில் ஆப் எஸ்டேட் என்பதை ராஜ்யசபா என்றும் மாற்றுகையில் மதராஸ் ஸ்டேட்டை "தமிழ்நாடு'' என்று மாற்றுவதற்கு என்ன குறை வந்துவிடப் போகிறது என்ற கருத்தை முன்வைத்தார். நமது அடையாளங்களைக் காக்கவேண்டும் என்று தொல்காப்பியன் முதல் தென்னக இங்கர்சால் வரை போராடிய போராட்டம், 1967-ல் பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபின் முடிவிற்கு வந்தது. 1967 ஜூலை 18 மதராஸ் ஸ்டேட் "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் தீர்மானம் சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்டு 1968-ல் நவம்பர் 1-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. தமிழ்நாட்டின் பெயர் சூட்டுவிழா பாலர் அரங்கத்தில் நடைபெற்றது. நிலம் சார்ந்தும் பெயர் சார்ந்தும் வரலாற்றின் முக்கியத் துவம் வாய்ந்த நாள் நவம்பர்- 1, 1956-ல் நிலம் சார்ந்த தமிழ்நாட்டின் எல்லை கள் நிர்ணயிக்கப்பட்ட நாள், நவம்பர்-1. அதே போன்று தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய நாள் நவம்பர்- 1.

வியர்வை மற்றும் உயிர்த் தியாகம் செய்து பெறப்பட்ட ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஒதுக்கவேண்டாம். தமிழ் வாழ தமிழ்நாடு வேண்டும்.