துப்பறிவாளர் ஹர்ஷராஜ் படுக்கையைவிட்டு எழுந்து, தன்னுடைய கவுனை எடுத்து அணிந்தவாறு சாளரத்திற்கு அருகில் சென்றார். திரைச்சீலையை விலக்கியபோது, வெளிச்சத்தின் ஒரு வெள்ளப்பெருக்கே உண்டானது. புலர்காலைப் பொழுதிற்கே உரிய ஈரத்தன்மை நிறைந்த சுத்தமான காற்றை மூன்று நான்கு முறை ஆழமாக சுவாசித்துவிட்டு, தன்னுடைய கவுனின் கயிறைக் கட்டியவாறு அவர் ஸோஃபாவில் சென்று அமர்ந்தார்.

அப்போது அவருக்கான பெட்காஃபி வந்தது. காஃபியை ஊற்றிக் குடித்துவிட்டு ஸோஃபாவில் சாய்ந்து அமர்ந்தவாறு அவர் தன்னுடைய பைப்பைப் பற்ற வைத்தார். துப்பறிவாளர் ஹர்ஷராஜின் நிரந்தர நண்பன் அந்த பைப். விமானத்திலும் கப்பலிலிலும் பயணம் செய்யும்போது மட்டுமல்ல; உறங்குவதற்காகப் படுக்கும்போதுகூட அந்த குழாய் அவருடைய வாயில் இருக்கும்.

""குட் மார்னிங் சார்.''

பைப்பைப் புகைத்தவாறு சிந்தனையில் மூழ்கியிருந்த ஹர்ஷராஜ் அந்த இனிய குரலைக்கேட்டு கண்களைத் திறந்தார். அவருடைய செக்ரட்டரி மிஸ் ஸ்டெல்லா கான்ஸ்லாவஸ் புன்சிரிப்புடன் அவரைநோக்கி வந்தாள்.

Advertisment

""ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது சார்.'' ஸ்டெல்லா புன்சிரிப்புடன் கூறினாள்: ""மிஸ்டர் ஜோஸஃப் போத்தனிடமிருந்து.''

""ஸ்டெல்லா, நீ அவரிடம் பேசு. நான் இங்கு அமர்ந்து சிறிது கனவு காண்கிறேன்.''

""சரி சார்.''

Advertisment

மிஸ் ஸ்டெல்லா கான்ஸ்லாவஸ் மறையாத புன்சிரிப்புடன் தொலைபேசி அழைப்புக்கு பதில் கூறுவதற்காக அடுத்த அறைக்குள் சென்றாள்.

உடனடியாக அவள் திரும்பி வரவும் செய்தாள்.

""சார்...''

""ஓ... ஸ்டெல்லா... தயவு செய்து... நான் சிறிது கனவு காண்கிறேனே!''

""ஆனால் அவர் உங்களுடன் பேச விரும்புகிறார் சார்.''

நகரத்தின் ரோட்டரி க்ளப்பின் தலைவராக இருப்பவர் ஜோஸஃப் போத்தன். துப்பறிவாளர் ஹர்ஷராஜின் மிகவும் நெருக்கமான நண்பரும்கூட.

""ஓ... ஸ்டெல்லா... நீ எனக்கு நிம்மதியைத் தரமாட்டாய் இல்லையா?''

அவர் குழாயை வாயிலிலிருந்து எடுக்கமாலேயே தொலைபேசியின் அருகில் சென்றார். கையில் நோட்டு புத்தகம், கூர்மைப்படுத்தப்பட்ட பென்சில் ஆகியவற்றுடன் ஸ்டெல்லா, அருகில் கவனத்துடன் நின்றிருந்தாள்.

""என்ன? நோ... நோ.... என்னால் நம்ப முடியவில்லை!'' ஹர்ஷராஜ் ரிஸீவரைப் பார்த்தவாறு தலையைக் குலுக்கினார். ஸ்டெல்லா பதைபதைப்புடன் அவருடைய முக உணர்ச்சியையே கவனித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

""நான் இதோ வருகிறேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ்...''

அவர் ரிஸீவரைக் கீழேவைத்தார். ஸ்டெல்லாவின் முகத்தில் தெரிந்த பதைப்தைபை அவர் கவனித்தார்.

""மிஸஸ் போத்தன் இறந்துவிட்டார்...''

""அவர்களுக்கு உடல்நலக்கேடு எதுவுமில்லையே?''

ஸ்டெல்லாவால் நம்பமுடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காஃபி நிகழ்ச்சியில் அவள் மிஸஸ் போத்தனைப் பார்த்தார்.

""அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்.''

""இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். எ மர்டர் இன் கோல்ட் ப்ளட்.''

துப்பறிவாளர் ஹர்ஷராஜ் வேகமாக குளியலறைக்குள் சென்று பல் துலக்கி, முகத்தைக் கழுவினார். கவுனை அவிழ்த்துவிட்டு, பேன்ட்டையும் சட்டையையும் அணிந்தார். டையைக் கட்டினார். பத்து நிமிடங்களுக்குள் அவர் தயாராகிவிட்டார்.

""நானும் வரட்டுமா?''

காரின் சாவியை அவரை நோக்கி நீட்டியவாறு ஸ்டெல்லா கேட்டாள்.

""வேண்டாம். நீ இங்கேயே இரு.''

ஹர்ஷராஜ் சாவியை வாங்கிவிட்டு, தன்னுடைய ப்ரீஃப்கேஸை எடுத்துக்கொண்டு வேகமாகக் கீழ்நோக்கி இறங்கி, ஒரு நிமிடத்திற்குள் இன்னும் தூக்கக் களை மாறாமலிலிருக்கும் சாலையின் வழியாக அவர் வேகமாக காரை ஓட்டிச் செல்வதை, சாளரத்திற்கு அருகில் நின்றவாறு ஸ்டெல்லா பார்த்தாள்.

""ஓ மை காட்...''

இப்போது ஸ்டெல்லாவால் அதை நம்பமுடியவில்லை. அழகான தோற்றத்தைக் கொண்டவரும் நவநாகரிகமான இளம்பெண்ணுமான மிஸஸ் போத்தன்... மிஸஸ் டாலிலி போத்தன்...

அவளிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

துப்பறிவாளர் ஹர்ஷராஜின் கார் சாலையின் வழியாக மிகவும் வேகமாக ஓடியது. ஸ்டெல்லாவிடமிருந்து வெளிப்பட்டதைப்போல, அவரிடமிருந்தும் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. எவ்வளவோ பயங்கரமான மரணங்களை நேரில் பார்த்திருக்கிறார்.

அப்போதெல்லாம் உண்டாகியிராத ஒரு கவலை அவருக்கு உண்டானது. அழகான தோற்றத்தைக் கொண்டவரும், சதைப் பிடிப்பான உடலமைப்பைக் கொண்டவருமான மிஸஸ் போத்தன்... மிஸஸ் டாலிலி போத்தன்...

தூரத்தில் அவர் மிஸ்டர் போத்தனின் மாளிகையைப் பார்த்தார். தூரத்தில் வரும்போதே அங்கு நிறைந்து நின்றிருக்கும் பேரமைதியை ஹர்ஷராஜ் அறிந்துகொண்டார். அணைந்துவிட்ட பைப்பை ஒரு கையால் அவர் பற்றவைத்தார். இன்னொரு கையால் ஸ்டியரிங்கை இடது பக்கமாகத் திருப்பினார். இரு பக்கங்களிலும் உருளைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த அந்தப் பாதை, மாளிகையின் கேட்டில் சென்று முடிந்தது.

கேட்டில் கார் நின்றவுடன், மிஸ்டர் போத்தன் வேகமாக வெளியே வந்து கேட்டைத் திறந்துவிட்டார். அவர் ஹர்ஷராஜை எதிர்பார்த்துக் கொண்டு வாசலிலில் நின்றிருந்தார். மிஸ்டர் போத்தன் ஒரு வெள்ளைநிற பைஜாமாவையும் சட்டையையும் அணிந்திருந்தார்.

""ஐயாம் ஸோ ஸாரி மிஸ்டர் போத்தன்.''

மிஸ்டர் போத்தலின் தோளில் ஹர்ஷராஜ் கையை வைத்தார். மிஸ்டர். போத்தனிடமிருந்து அவரையும் மீறி ஒரு அழுகை வெளியே வந்தது.

""காவல் துறையினரிடம் தெரிவித்து விட்டீர்களா?''

மிஸ்டர் போத்தனின் தோளில் கையைவைத்து உள்ளே நடந்து செல்லும்போது துப்பறிவாளர் ஹர்ஷராஜ் கேட்டார்;

""ஆமாம். அவர்கள் இங்கு எப்போது வேண்டு மானாலும் வருவார்கள்.''

ஜோஸஃப் போத்தன் தூய வெண்ணிறத் துவாலையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அவர்கள் மிஸ்டர் போத்தனின் படுக்கையறைக்குள் நுழைந்தார்கள். படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தாள் மிஸஸ் போத்தன். இளஞ்சிவப்பு நிறத்திலிலிருந்த மெல்லிலிய ஒரு நைட்டியை அவள் அணிந்திருந்தாள். இடது பக்க மார்புப் பகுதி முழுமையாக குருதியில் நனைந்திருந்தது. படுக்கை விரிப்பிலும் ரத்த அடையாளங்கள் தெரிந்தன.

மார்பில்... இதயத்தின் இடத்தில், வெப்பக்குருதியில், ஆழத்தில் குத்திக் கிடக்கும் ஒரு பேனா...

""நேற்றிரவு மிஸஸ் போத்தன் வீட்டில் தனியாக இருந்தார்களா?''

""ஆமாம். நேற்றிரவு நான் பம்பாயில் இருந்தேன். காலை நேர விமானத்தில் திரும்பி வந்தபோது...''

மிஸ்டர் போத்தனின் தொண்டை தடுமாறியது.

துப்பறிவாளர் ஹர்ஷராஜின் கண்கள் மிஸஸ் போத்தனின் மார்பில் பதிந்துகொண்டிருந்தன. தூரத்தில் நின்றவாறு அவருடைய கண்கள் அந்த பேனாவை ஆராய்ந்துகொண்டிருந்தன. ஒரே பார்வையில் அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா என்பதை அவர் புரிந்துகொண்டார்.

மிஸ்டர் போத்தன் துவாலையை எடுத்து மீண்டும் கண்களைத் துடைத்தார்.

""ஜோஸஃப்... இது ஒரு கொலைச் செயல்தான் என்று நீங்கள் உறுதியாக நினைக்கிறீர்களா?''

""நிச்சயமாக... என் டாலிலி எதற்காக தற்கொலை செய்து கொள்ளவேண்டும்? அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். மிகுந்த அன்புடன் இருந்தாள்...''

துப்பறிவாளர் ஹர்ஷராஜ் தன்னுடைய பைப்பை எடுத்து, அதிலிலிருந்த சாம்பலை ஆஷ்ட்ரேயில் தட்டிக்கொட்டிவிட்டு, அதில் மீண்டும் புகையிலையை நிறைந்தார். பைப்பைப் பற்ற வைப்பதற்கு மத்தியில் அந்த அறையிலிலிருந்த ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு அங்குல இடத்தையும் அவர் கண்களால் ஆராய்ந்து பார்த்தார்.

அந்த நிமிடத்தில் வெளியே ஒரு ஜீப் வந்து நின்றது. எஸ். ஐயும், இரண்டு கான்ஸ்டபிள்களும் லத்தியைச் சுழற்றியவாறு வேகமாக மாளிகைக்குள் நுழைந்து வந்தார்கள்.

எஸ்.ஐ. ஒரு சர்தார். அதனால் தலையில் தொப்பிக்கு பதிலாக "பகடி' கட்டியிருந்தார்.

கண்களைத் துடைத்தவாறு ஜோஸஃப் போத்தன் அவர்களைப் படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றார்.

துப்பறிவாளர் ஹர்ஷராஜைப் பார்த்ததும், எஸ். ஐயின் நெற்றி சுருங்கியது. தான் வருவதற்கு முன்பே அவர் அங்கு வந்து சேர்ந்திருப்பது எஸ். ஐக்கு சிறிதும் பிடிக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிந்தது.

எஸ். ஐக்கு மனதிற்குள் ஹர்ஷராஜ்மீது வெறுப்பு. அதற்குக் காரணம் சாதாரணமானது. வருடக் கணக்கில் கடுமையான உழைத்தும் துப்புதுலக்க முடியாத வழக்குகளில் சில நாட்களிலேயே ஹர்ஷராஜ் உண்மையைக் கண்டு பிடித்திருக்கிறார்.

""ஹலோ... சார்.''

உள்ளுக்குள் இருக்கும் வெறுப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், எஸ்.ஐ., துப்பறிவாளர் ஹர்ஷராஜின் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

அப்போது துப்பறிவாளரின் கண்ணில் ஒரு தாள் பதிந்தது. கதவின் மறைவில், தரையிலிலிருந்த விரிப்பிற்கு மேலே கிடந்த ஒரு மங்கலான வெள்ளை நிறத் தாள்...

""மன்னிக்க வேண்டும்...''

எஸ்.ஐ.யின் கையிலிலிருந்து தன் கையை விடுவித்தவாறு துப்பறிவாளர் ஹர்ஷராஜ் கதவை நோக்கி வேகமாகச் சென்றார்.

""இல்லை... மிஸ்டர் ஹர்ஷராஜ்...'' எஸ்.ஐ. தடுத்தார்.

""காவல் துறையைச் சேர்ந்த புகைப்படக்காரர் இப்போது வருவார். அதுவரை நாம் எதையும் தொடக்கூடாது.''

தாளை எடுப்பதற்காக நீட்டிய கையை ஹர்ஷராஜ் பின்னோக்கி இழுத்துக்கொண்டார். அவர் ஒரு பிரம்பு நாற்காலிலியை சாளரத்திற்கு அருகில் எடுத்துப்போட்டு அமர்ந்து அமைதியாக குழாயை இழுத்தார்.

அப்போதும் அவருடைய கண்கள் அந்த தாளிலேயே இருந்தன.

அரைமணி நேரம் கடந்ததும், புகைப்படமெடுப்பவர் வந்தார். மிஸஸ் டாலி போத்தனை பல கோணங்களிலிலிருந்தும் அவர் தன் கேமராவிற்குள் கொண்டு வந்தார். அந்த படுக்கையறையின் சில புகைப்படங்களை எடுத்ததுடன், அவருடைய பணி முடிந்தது.

துப்பறிவாளர் ஹர்ஷராஜ் எழுந்து, கதவுக்குள் அருகில் கிடந்த தாளை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதம்... பாதிப்பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. மீதிப் பகுதியை அவர் உரத்த குரலிலில் வாசித்தார்.

""ஓணப் பதிப்பு அச்சகத்திற்குச் சென்றுவிட்டது. கதையை உடனடியாக அனுப்பி வைக்காவிட்டால் நான் கோபப்படுவேன்.

அன்புடன்

வி.பி.ஸி. நாயர்.''

ஜோஸஃப் போத்தனும் துப்பறிவாளர் ஹர்ஷராஜும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஹர்ஷராஜ் தலையைக் குலுக்கினார். அவருடைய உதட்டில் மெல்லிலிய ஒரு புன்சிரிப்பு தோன்றியது.

""என் வேலையில் பாதி முடிந்துவிட்டது.'' துப்பறிவாளர் ஹர்ஷராஜ் மிஸ்டர் போத்தனிடம்

கூறினார்: ""இந்த கடிதத்தின் உரிமையாளர்தான் உங்களுடைய டாலிலியைக் கொலை செய்த நபர்.''

""அது யார்?''

""நான் கூறுகிறேன்.''

துப்பறிவாளர் ஹர்ஷராஜ் அறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியை நோக்கிச் சென்றார். அவர் ரிஸீவரை உயர்த்தி காதில் வைத்தவாறு டயல் செய்தார்.

""ஹலோ... ஸ்டெல்லா டியர்? ஆமாம்... டிடெக்டிவ் ஹர்ஷராஜ் ஹியர்... என்னிடம் சொல்... நம்முடைய நகரத்தில் புகழ்பெற்ற மலையாள இலக்கியவாதிகள் யார்... யார்?''

எல்லா வார இதழ்களையும் எல்லா தொடர் கதைகளையும் வாசிக்கக் கூடிய ஸ்டெல்லாவின் கிளிக்குரல் அந்த முனையிலிலிருந்து...

""விஜயன், சக்கரியா, முகுந்தன்...''

""அவ்வளவுதானா?''

""அகலுர் நாராயணன், ஒ.எம். அனுஜன்,

பி. நாராயணக்குறுப்பு, ஏலூர் பரமேஸ்வரன், ஓம்சேரி...''

""போதும்... நன்றி டியர்.''

துப்பறிவாளர் ஹர்ஷராஜ் தொலைபேசியைக் கீழேவைத்துவிட்டு, டாலிலி போத்தனின் அருகில் சென்றார்.

எஸ்.ஐ.யின் அமைதியான அனுமதியுடன், டாலிலியின் மார்பிலிலிருந்து பேனாவை உருவினார்...

ஒரு பிரகாசமான புதிய வாட்டர்மேன் பேனா. மேட் இன் ஃப்ரான்ஸ்...

வாயில் பைப்புடன் துப்பறிவாளர் ஹர்ஷராஜ் எல்லாரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

""என் பணி முடிந்தது.''

நம்பமுடியாமல் எல்லாரும் அவருடைய முகத்தையே பார்த்தார்கள்.

""ஜோஸஃப்... என் நண்பரே!'' ஹர்ஷராஜ் மிஸ்டர் போத்தனின் தோளில் கையை வைத்தார்.

""யார்?''

""எம். முகுந்தன்...''

தொடர்ந்து எஸ்.ஐ.யை நோக்கி புன்னகையைத் தவழவிட்டவாறு அவர் கூறினார்:

""நீங்கள் கொலையாளியைக் கைது செய்யலாம்.

அவர் ஃப்ரெஞ்ச் தூதரகத்தில் இருப்பார்... கே. ஸெவன்டி ஸிக்ஸ்... ஹோஸ் காஸ்... புதுடெல்லி-லி 110 016.''

மீண்டும் எல்லாரையும் பார்த்து புன்னகைத்தவாறு துப்பறிவாளர் ஹர்ஷராஜ் வாயில் பைப்புடன் வெளியேறி, பரபரப்பாக ஆரம்பித்திருந்த சாலையின் வழியாக காரை ஓட்டியவாறு விலகி... விலகிச்சென்றார்.