இன்றும் அவசரகால நிலை போன்ற சூழல் தென்படுகிறது - எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் நேர்காணல்!

/idhalgal/eniya-utayam/state-emergency-still-visible-today-writer-subrabharathi-manian-interview

சுப்ரபாரதி மணியன் திருப்பூரில் இருந்தபடியே இலக்கியம் படைக்கும் பன்முகப் படைப்பாளர். நாவல், சிறுகதை, கட்டுரைகள், கவிதை என பல தளங்கüலும் முத்திரை பதித்துவருகிறவர். திருப்பூர் தாய்த் தமிழ் பள்üயோடு இணைந்து பணியாற்றுபவர். தொலை பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். முன்னாள் குடியரசுத் தலைவரால் கதா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். தமிழக அரசின் விருதுகள் உட்பட, பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் நடந்துவரும் குழந்தைத் தொழிலாளர்கள் நிலை குறித்தும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்டத்தின் கொடுமைகள் குறித்தும், சாயக்கழிவுகளால் மாசுபடுத்தப்படும் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது குறித்தும் தொடர்ந்து எழுதி வருகிறவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகüலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகüலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவர், கனவு என்ற என்ற இலக்கிய இதழை ஏறத்தாழ 30 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

இனிய உதயம் இதழுக்காக அவரை சந்தித்த போது....

ஒரு படைப்பாளியாகவும் இயங்கிவருகின்றீர்கள். ஓர் இதழாசிரியராகவும் இருந்துவருகின்றீர் கள்? இரண்டில் சிரமமானது எது? மனதுக்கு திருப்தி அளிப்பது எது?

ஓர் இதழாசிரியராக 36 ஆண்டுகளாக நான் கனவு என்ற இலக்கிய இதழை நடத்திக் கொண்டிருக்கிறேன். அது ஹைதராபாத்தில் தமிழர்களுக்கான பத்திரிகை எதுவும் இல்லை என்பதை மனதில் கொண்டு ஆரம்பிக் கப்பட்டது. அந்த காலகட்டத்தில் முக்கியமான கட்டாய மாகக் கூட கனவை கொண்டு வருவதில் இருந்தது. முதலில் ஹைதராபாத்தில் தமிழருக்கான பத்திரிகை என்ற முத்திரையுடன்தான் அந்த இதழ் வெளிவந்தது. பின்னால் அலுப்பாகி, தமிழ்ச் சூழலுக்கான மொத்த மான இதழாகி மாறிவிட்டது. ஒரு படைப்பாளி பல்வேறு தளங்களில் பணிபுரிய வேண்டியிருக்கிறது. அவன் எழுத்தைத் தாண்டி, சமூக மனிதர்களுடன் உறவாடுவதும், புதிய படைப்பாளிகளை உருவாக்கு வதும் என்றும் சில பணிகள்கூட உள்ளன. அப்படித் தான் நான் படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கி றேன். "கனவு' இதழைப் பொறுத்த அளவில் அது திருப்தி அளித்த காலங்கள் உண்டு. 1986-ல் ஆரம்பிக்கப்பட்ட அந்த பத்திரிகை அப்போதைய காலகட்டத்தில் அதிகமான சிற்றிதழ்கள் இல்லாதபோது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தமிழ்நாட்டின் முக்கியமான எல்லா படைப்பாளிகளையும் எழுதுவதற்கான மேடையாகக் கொண்டேன். இன்று அப்படி இல்லை. நிறைய சிற்றிதழ்களும், இணையதள இதழ்களும் வருகின்றன. ஆகவே ஒரு படைப்பாளியாகத் தான் நான் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.என் படைப்புகள் மூலமாக.

ss

இன்று தாங்கள் நாடறிந்த ஒரு படைப்பாளி. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என பல தளங்களிலும் இயங்கி வருகின்றீர். தங்களின் முதல் படைப்பை எழுதிய மனநிலையிலேயே தற்போதும் எழுதுகிறீரா?

முதல் படைப்பை எழுதிய கணத்தில் இலக்கிய படைப்புகளின் வடிவம் பற்றிய குழப்பம் இருந்தது. என்ன மாதிரி விஷயங்களை எழுதலாம் என்பதிலும் குழப்பம் இருந்தது. பல ஆயிரக்கணக்கான மக்கள் படிக்கிற மாதிரியான படைப்புகளை எழுதவேண்டுமா அல்லது நான் பழக்கப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்கள் மத்தியிலிருந்து மக்களுக்காக எழுத வேண்டுமா என்ற குழப்பம் மட்டும் இல்லாமல் நாம் சரியாகத்தான் எழுதுகிறோமா என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் என் முதல் சிறுகதையை நான் சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் என்பது இப்போது நினைத்துப் பார்க்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த "விழிப்பு' என்ற இடதுசாரி இதழில் என் முதல் சிறுகதை "சுதந்திர வீதிகள்' என்ற சிறுகதை வெளிவந்தது. அக்கதை இந்திய நாட்டின் மிக மோசமான ஒரு காலகட்டமான அவசரநிலை காலகட்டத்தில் நடப்பதாகக் காட்டப் பட்டது.

இன்றைக்குக்கூட அவசரநிலை காலகட்டத்தை நினைவுபடுத்தும் சூழல்களும் சட்டங்களும் தென்படு கின்றன. அந்த வகையில் ஒரு முக்கியமான காலகட்டத் தில் சாதாரண குடிமக்கள் நிலைமை எப்படி இருந்தது என்பதை ஓர் கால்பந்தாட்ட வீரரை மனதில் வைத்துக் கொண்டு எழுதிய அந்த கதை இப்போதுகூட முக்கியத் துவம் வாய்ந்ததாக தோன்றுகிறது. ஆனால் இன்றைக்கு படைப்புகள் எழுதுவது என்பது ஒரு பயிற்சிபோல ஆகிவிட்டது. இன்றைக்கும் பிரசுரம்தான் ஒரு சிக்கல். இவ்வளவு பத்திரிகைகள் வந்த

சுப்ரபாரதி மணியன் திருப்பூரில் இருந்தபடியே இலக்கியம் படைக்கும் பன்முகப் படைப்பாளர். நாவல், சிறுகதை, கட்டுரைகள், கவிதை என பல தளங்கüலும் முத்திரை பதித்துவருகிறவர். திருப்பூர் தாய்த் தமிழ் பள்üயோடு இணைந்து பணியாற்றுபவர். தொலை பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். முன்னாள் குடியரசுத் தலைவரால் கதா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். தமிழக அரசின் விருதுகள் உட்பட, பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் நடந்துவரும் குழந்தைத் தொழிலாளர்கள் நிலை குறித்தும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்டத்தின் கொடுமைகள் குறித்தும், சாயக்கழிவுகளால் மாசுபடுத்தப்படும் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது குறித்தும் தொடர்ந்து எழுதி வருகிறவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகüலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகüலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவர், கனவு என்ற என்ற இலக்கிய இதழை ஏறத்தாழ 30 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

இனிய உதயம் இதழுக்காக அவரை சந்தித்த போது....

ஒரு படைப்பாளியாகவும் இயங்கிவருகின்றீர்கள். ஓர் இதழாசிரியராகவும் இருந்துவருகின்றீர் கள்? இரண்டில் சிரமமானது எது? மனதுக்கு திருப்தி அளிப்பது எது?

ஓர் இதழாசிரியராக 36 ஆண்டுகளாக நான் கனவு என்ற இலக்கிய இதழை நடத்திக் கொண்டிருக்கிறேன். அது ஹைதராபாத்தில் தமிழர்களுக்கான பத்திரிகை எதுவும் இல்லை என்பதை மனதில் கொண்டு ஆரம்பிக் கப்பட்டது. அந்த காலகட்டத்தில் முக்கியமான கட்டாய மாகக் கூட கனவை கொண்டு வருவதில் இருந்தது. முதலில் ஹைதராபாத்தில் தமிழருக்கான பத்திரிகை என்ற முத்திரையுடன்தான் அந்த இதழ் வெளிவந்தது. பின்னால் அலுப்பாகி, தமிழ்ச் சூழலுக்கான மொத்த மான இதழாகி மாறிவிட்டது. ஒரு படைப்பாளி பல்வேறு தளங்களில் பணிபுரிய வேண்டியிருக்கிறது. அவன் எழுத்தைத் தாண்டி, சமூக மனிதர்களுடன் உறவாடுவதும், புதிய படைப்பாளிகளை உருவாக்கு வதும் என்றும் சில பணிகள்கூட உள்ளன. அப்படித் தான் நான் படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கி றேன். "கனவு' இதழைப் பொறுத்த அளவில் அது திருப்தி அளித்த காலங்கள் உண்டு. 1986-ல் ஆரம்பிக்கப்பட்ட அந்த பத்திரிகை அப்போதைய காலகட்டத்தில் அதிகமான சிற்றிதழ்கள் இல்லாதபோது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தமிழ்நாட்டின் முக்கியமான எல்லா படைப்பாளிகளையும் எழுதுவதற்கான மேடையாகக் கொண்டேன். இன்று அப்படி இல்லை. நிறைய சிற்றிதழ்களும், இணையதள இதழ்களும் வருகின்றன. ஆகவே ஒரு படைப்பாளியாகத் தான் நான் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.என் படைப்புகள் மூலமாக.

ss

இன்று தாங்கள் நாடறிந்த ஒரு படைப்பாளி. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என பல தளங்களிலும் இயங்கி வருகின்றீர். தங்களின் முதல் படைப்பை எழுதிய மனநிலையிலேயே தற்போதும் எழுதுகிறீரா?

முதல் படைப்பை எழுதிய கணத்தில் இலக்கிய படைப்புகளின் வடிவம் பற்றிய குழப்பம் இருந்தது. என்ன மாதிரி விஷயங்களை எழுதலாம் என்பதிலும் குழப்பம் இருந்தது. பல ஆயிரக்கணக்கான மக்கள் படிக்கிற மாதிரியான படைப்புகளை எழுதவேண்டுமா அல்லது நான் பழக்கப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்கள் மத்தியிலிருந்து மக்களுக்காக எழுத வேண்டுமா என்ற குழப்பம் மட்டும் இல்லாமல் நாம் சரியாகத்தான் எழுதுகிறோமா என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் என் முதல் சிறுகதையை நான் சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் என்பது இப்போது நினைத்துப் பார்க்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த "விழிப்பு' என்ற இடதுசாரி இதழில் என் முதல் சிறுகதை "சுதந்திர வீதிகள்' என்ற சிறுகதை வெளிவந்தது. அக்கதை இந்திய நாட்டின் மிக மோசமான ஒரு காலகட்டமான அவசரநிலை காலகட்டத்தில் நடப்பதாகக் காட்டப் பட்டது.

இன்றைக்குக்கூட அவசரநிலை காலகட்டத்தை நினைவுபடுத்தும் சூழல்களும் சட்டங்களும் தென்படு கின்றன. அந்த வகையில் ஒரு முக்கியமான காலகட்டத் தில் சாதாரண குடிமக்கள் நிலைமை எப்படி இருந்தது என்பதை ஓர் கால்பந்தாட்ட வீரரை மனதில் வைத்துக் கொண்டு எழுதிய அந்த கதை இப்போதுகூட முக்கியத் துவம் வாய்ந்ததாக தோன்றுகிறது. ஆனால் இன்றைக்கு படைப்புகள் எழுதுவது என்பது ஒரு பயிற்சிபோல ஆகிவிட்டது. இன்றைக்கும் பிரசுரம்தான் ஒரு சிக்கல். இவ்வளவு பத்திரிகைகள் வந்துவிட்டாலும், இணையதள குழுக்கள் வந்து விட்டாலும் எல்லா குழுக்களிலும் ஏதோ அரசியல் தன்மை இருக்கி றது. அந்த குழு அரசியல் தன்மை யோடு அந்த குழுக்களைத் தாண்டி படைப்புகள் பிரசுரம்பெற முடிவதில்லை. அதைத் தாண்டி எழுத்தாளன் எழுத வேண்டியிருக் கிறது.

தங்கள் படைப்புகளில் திருப்பூர் பனியன் தொழிலாளர் குறித்தும் சுற்றுச் சூழல் குறித் தும் உள்ளது. திருப்பூரில் இல்லா மல் வேறு ஊரில் இருந்திருந் தால் தங்கள் படைப்பு மனம் எவ்விதமான கருப்பொருள் களைத் தேர்ந்தெடுத்திருக்கும்?

நாம் வாழும் சூழல்தான் நம்முடைய படைப்பு களை தீர்மானிக்கிறது. புறச்சூழல்கள் நமது அகத்தையும் பாதிக்கிறது. அந்த வகையில்தான் நான் ஹைதராபாத் தில் இருந்தபோது அங்கிருந்த மக்களின் வாழ்க்கையும் குறிப்பாக சிறுபான்மையராக இருந்த தமிழர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்தேன். அங்கு வசித்த தமிழர்களின் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து அவர்களின் வாழ்க்கையை பதிவுசெய்வது எனக்கு முக்கியமாகப் பட்டது. ஜானகிராமன் முதற்கொண்டு நாஞ்சில் நாடன் வரைக்கும் பல படைப்பாளிகள் அவர்கள் இடம்பெயர்ந்த சூழலைப் பற்றி படைப்புகளில் வெளிப்படுத்துகிறதை இரண்டாம்பட்சமாக்கி தங்களின் சொந்த நிலத்தைப் பற்றி அதிகம் எழுதியபோது நான் அப்போது ஹைதராபாத் சூழலைப் பற்றி தான் எழுதினேன். அந்த வகையில் நான் வாழும் சூழலில் நாம் சந்திக்கிற மனிதர்கள்தான் என்னுடைய படைப்புகளை தீர்மானிக்கிறார்கள் என்ற வகையில் நான் ஹைதராபாத் மனிதர்கள் சார்ந்த படைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். வேறு ஒரு ஊரில் இருந்திருந்தால் நிச்சயமாக அந்த மனிதர்கள் சார்ந்த அனுபவங்கள் என் படைப்பு மூலம் வெளிவந்திருக்கும்.

தாங்கள் கலை இலக்கிய பெருமன்றம் சார்ந்து இயங்கிவருகிறீர்? ஒரு படைப்பாளிக்கு இயக்கம் அவசியமா? இயக்கத்தில் இருக்கும்போது ஒரு படைப்பாளியால் சுதந்திரமாக இயங்க முடியுமா?

அமைப்பில் இயங்குவது என்பது ஒரு கூடுதல் பலம்தான் படைப்பாளிக்கு. அவனுக்கு இன்று இருக்கிற சமூக கடமைகள், சமூக பொறுப்புகளை பற்றி அது சொல்லிக்கொண்டிருக்கும். அந்த அந்த வகையில் அந்த அமைப்புகளை தேர்வு செய்வதில்தான் படைப் பாளிக்கு சரியான இலக்கு தரும். இதுபோன்ற அமைப்பு கள் படைப்பாளிகள் சுதந்திரத்தில் குறுக்கிடுவது என்பது சாதாரணம்தான். அதை மீறித்தான் படைப் பாளி செயல்பட வேண்டியிருக்கும் இல்லையென்றால் அவ்வகை யான அமைப்புகளில் இருந்து வெளியேவர வேண்டியிருக்கும். படைப்பாளி தன் சுயமரியாதையை விட்டுக்கொடுத்துவிட்டு இது போன்ற அமைப்புகளில் இருக்க முடியாது. அதுவும் அரசியல் கட்சி கள் சார்ந்த அமைப்புகளின் தாக்க மும் இருக்கும். இதுபோன்ற இலக் கிய அமைப்புகளில் கட்டுப்பாடு கள் இருப்பதை மறுக்க முடியாது.

மக்களுக்காக எழுதுவது, கலைக்காக எழுதுவது, மக்க ளையே எழுதுவது... தற்போ தைய சூழலுக்கு ஏற்றது எது?

மக்களிடமிருந்து தான் அனு பவங்களைப் பெறுகிறோம் அல்லது புறச்சூழலில் நமக்கு ஏற்படுகிற அவதானிப்புகளையும் பார்வையை யும் மனதில் கொண்டு படைப்புகளை எழுதவும் செய்கிறோம். எழுதும்போது அந்தப் படைப்புகள் வாசகர்களிடம், சக மனிதர்களிடம்தான் சென்று சேர வேண்டும், ஆகவே கலை கலைக்காகவே என்று முழுமை யாக நாம் சொல்லிவிட முடியாது, மக்களுக்கான விஷயங்களை எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து திரும்ப தருவது தான் இலக்கிய படைப்பின் பாதை யாக இருக்கிறது ஒரு படைப்பாளியின் இலட்சியம் விருது பெறுவதா? மக்களிடம் படைப்புகளை கொண்டு சேர்ப்பதா?

படைப்பாளியின் லட்சியம் விருது என்றால் படைப்பாளி ஏதோ ஒரு நிலையில் தேங்கிவிடுவான்.

ஆனால் தொடர்ந்து மக்களுடைய வாழ்க்கையை எழுதுவது, அதை இலக்கிய நோக்கில் சோதனை செய்து பார்ப்பது, இலக்கியத்தை, மொழியை வளப் படுத்துவது, சிந்தனையை மேம்படுத்துவது என்ற ரீதியில்தான் அவன் எழுதிக் கொண்டி ருக்கிறான். ஆகவே மக்களிடம் அல்ல வாசகனிடம் படைப்புகளைக் கொண்டு சேர்ப்பதில்தான் படைப்பாளியின் லட்சியம் இருக்க வேண்டும்.

தங்களுக்கு பிடித்த எழுத் தாளர் ஜெயகாந்தன் என்றும் அவரு டைய எழுத்துகளில் தங்கள் மனம் பாதிக்கப்பட்டது என்றும் அடிக் கடி கூறி வந்துள்ளீர்? தற்போதைய படைப்பாளிகளில் அவ்வாறு இளம் எழுத்தாளர்களைக் கவர்ந்த எழுத் தாளர் யார்?

இளம் எழுத்தாளர்கள் நிறைய வகை வகையான படைப்புகளை சோதனை ரீதியான படைப்புகள் உட்பட எழுதுகிறார்கள். அதற்கு ஒரு பெரிய பட்டியல் உண்டு.

அந்தப் பட்டியலை நான் சொல்கிறபோது பல பெயர்கள் விடுபட்டுப் போகும். ஆகவே அந்தப் பட்டியல் என்பது தற்போது தேவையில்லை நினைக்கிறேன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு நிலையில் எழுதுவதை நிறுத்திக் கொண்டாரே.. அது ஒரு நல்ல முடிவா? அவர் இன்னும் எழுதி இருக்கலாமா?

ssபடைப்பாளியோ வாசகனோ சக மனிதனோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். இயக்க மில்லாமல் இருப்பது தேங்கிய குளம் போல ஒரு நிலைக்குப் பிறகு அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் போய்விடும். நாற்றம் வந்துவிடும். ஆகவே வாசித்தலும், பயிற்சி போல் எழுதுவதும் எழுத்தாள னுக்கு முக்கியமாக இருக்கிறது. ஜெயகாந்தன் எழுது வதை நிறுத்திக் கொண்டதற்கு காரணம் அவர் வாசிக் காமல் இருந்தது அல்லது வாசிப்பை நிறுத்திவிட்டது தான். பெரும்பாலும் மேடை சார்ந்த படைப்பாளி களுக்கு இப்படி படைப்பிலக்கியம் செய்வதில் ஒரு காலகட்டத்தில் அலுப்பு வந்துவிடும். காரணம் நேரடியாக வாசகனோ பொதுமக்களோ கைதட்டுவதும் பாராட்டுவது அவனுக்கு பெரிதாகிவிடும். தொடர்ந்த வாசிப்பும் மக்களுடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பதும் படைப்பாளியை தொடர்ந்து இயங்கச் செய்யும். அப்படி இல்லாமல் அவர் நிறுத்திக் கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று அவர் வாசிப்பதை நிறுத்திக் கொண்டதுதான் என்று நான் நினைக்கிறேன்.

படைப்பாளிகள் இசங்கள் சார்ந்து இயங்கு கின்றனர். இயக்கங்கள் சார்ந்தும் இயங்குகின்றனர்.குழுக்கள் சார்ந்தும் இயங்குகின்றனர். ஒரு பொது வான படைப்பாளி தமிழ்ச் சூழலில் சாத்தியமில் லையா?

இசங்கள் சார்ந்த இயங்குவது, இயக்கம் சார்ந்து இயங்குவது, குழுக்களாக இருப்பது என்பதெல்லாம் படைப்பாளிகளுடைய மனநிலையைச் சார்ந்தது தான். ஆனால் அவனுடைய சார்பு, ஏதாவது இசத்தை தொட்டு தான் தீரும். அவனின் சமூக அக்கறை ஏதாவது இயக்கத்தோடு இயங்கச் செய்யும். ஆனால் அவன் குழுவாக இயங்குவது என்ற மன விகாரம் தேவையில்லாதது. பொதுவான படைப்பாளிகளாக தமிழ்ச் சூழலில் இயங்க வேண்டும் என்றால் அவன் வெகுஜன படைப்பாளியாகத்தான் இருக்க முடியும். பணத்திற்காக எழுதுவதாகத்தான் இருக்க வேண்டும்.எல்லோரையும் கவர்வதாகத்தான் இருக்கும். அது இல்லாமல் மக்களின் வாழ்க்கை, அவதானத்தை எடுத்துக் கொள்கிறவனுக்கு ஏதோ சார்பு இருந்துதான் தீரும் வெளிநாட்டுப் படங்கள் அல்லது மாற்று மொழிப் படங்கள் தங்களால் பார்க்கப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன. தமிழ்ப் படங்கள் அவ்வாறு இல்லையா? அது குறித்து தங்கள் கருத்து?

தொடர்ந்து திரைப்பட விழாக்களுக்குச் செல்வது ரசனை அடிப்படையில் அவற்றைப் பற்றி எழுதுவது என்பதை என்னுடைய படைப்பின் இன்னொரு அங்கமாகக் கொண்டிருக்கிறேன். அந்த வகைத் தீர்மானங்களையும் உச்சத்தையும் தமிழ் திரைப் பட படைப்பில், தமிழ்ப் படங்களில் காண முடிவதில்லை என்பது என் அனுபவமாக இருக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு இல்லாமல் நிலைமைகள் எல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றன. நல்ல தமிழ்ப் படங்களும் வந்து கொண்டிருக்கிறது. என் சமீபத்திய "திரைப்படம் என்னும் சுவாசம்' என்ற நூலில் சற்றே இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். காவ்யா 2022 டிசம்பர் வெளியீடு ஒரு படைப்பாளியான தாங்கள் படைப்பாளி களுக்கு விருதுகள் வழங்கி வருவது அனைவருக்கும் தெரியும். இது படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சியா?

படைப்பாளிகளுக்கு ஏதோ வகையில் ஊக்கம் தர வேண்டும். படித்துவிட்டு சரியான விமர்சனங்களைத் தருவதுகூட ஊக்கம்தான். அதற்கு அடுத்த நடவடிக்கை யாக சிறிய அளவில் விருதுகள் கொடுக்கிறோம்.

என்னுடைய முயற்சிகளில் இந்த விருதுகள் வழங்குதலும் பாராட்டுவதும் தோல்விகரமாகவும் வந்திருக்கிறது. காரணம் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் தோல்வி அடைந்திருக்கிறேன். பெரிய வணிக நகரம் என்னை நிராகரித்தே இயங்கிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் வேறு வகை படைப்பாளிகளுக்குதான் நிறைய சமரசங் களுடன் சிறப்பாக செய்யச் சாத்தியமாக இருக்கிறது அரசியலில் வாரிசுகள் வளர்ப்பதுபோல் இலக் கியத்தில் வளர்க்க முடியாது. அவ்வாறிருந்தும் தங்கள் மகள் சுபமுகி ஒரு கவிஞராக அறிமுகமானார்.

அவர் ஏன் தொடரவில்லை? தாங்கள் ஊக்கப்படுத்த வில்லையா?

எழுத்தாளர் குடும்பங்களில் இருக்கிறவர்கள் தான் எழுத்தாளருடைய மறைவுக்கு பிறகு அவரின் படைப்புகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அப்படி முன்னெடுத்து செல்கிற குடும்பங்களில்தான் அந்த எழுத்தாளர்களுடைய புகழ், படைப்புகள் தொடர்ந்து வெளிவரும். அது இல்லாதபோது படைப்பாளி முடங்கி விடுகிறான். வீட்டுச் சூழலில் இருக்கக்கூடிய குடும்ப உறவுகள் அதில் அக்கறை எடுத்துக் கொள்வது படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும். ஆனால் பெரும்பாலும் லவுகீகவாதிகளாக இருக்கிறார்கள்.

படைப்பு சார்ந்த வணிக எண்ணங்களை மனதில் கொண்டு இருக்கிறார்கள். என்னை பொறுத்து அதில் நான் அடைந்த தோல்விகள் பற்றி "தற்காலியாக நிறுத்தப்படும் ஆட்டம்' என்று என்"மூன்று நதிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையில் விரிவாக எழுதி இருக்கிறேன். அப்படி குடும்ப உறுப்பினர் கள் தொடரவில்லை என்பது வருத்தம்தான். அவர்கள் போய்ச் சேருகிற இடம், கணவன்மார் அதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பதுதான் உண்மை. அதைத் தாண்டி லவுகீகவாதிகளாக படிக்காமலும் சிந்திக்காமல் இருப்பதை சவுகரியமாக பலர் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும் பான்மையான பெண்கள் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே அந்த வகை தோல்வியை நான் குடும்பத் தில் சந்தித்ததை சில படைப்புகளை வெளிப்படுத்தி இருக்கிறேன்.

தாங்கள் நாவல்கள் எழுதியுள்ளீர். சிறுகதைகள் எழுதியுள்ளீர். கட்டுரைகள் எழுதியுள் ளீர். படைப்பு வெற்றிபெறுவது குறித்தும் தாங்கள் அறிந்திருப்பீர். எனவே ஒரு படைப்பை வெற்றிபெறச் செய்வது யார்? வாசகனா? விமர்சகனா?

படைப்பை வெற்றிபெறச் செய்வது என்பதில் பதிப்பாளருடைய பங்கு தான் முக்கியமாக இருக்கிறது. நல்ல பதிப்பாளர், வணிக நோக்கில் அதை வெளியில் கொண்டுசெல்லக்கூடிய பதிப்பாளர் அமைந்து விடுவதுதான் வெற்றிபெறுவதற்கான முதல் அடித்தளமாக இருக்கிறது. அப்படியான வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை. அடுத்த பக்கமாய் அந்த படைப்புகளை பற்றி வெளியே எடுத்துச்சொல்வதற்கு ஆட்கள் வேண்டியிருக்கிறது. அந்த வகையான நண்பர்களும், ஆட்களும், குழுமமும் எனக்கு வாய்க்கவில்லை.

தங்கள் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட மொழி பேசும் மக்களிடமிருந்து தங்கள் படைப்புகளுக்கு வரவேரற்பு எப்படி உள்ளது? ஏதேனும் எதிர்வினைகள் உண்டா?

என் படைப்புகள் ஆங்கிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. மலையாளத்தில் ஐந்து நாவல்கள், ஹிந்தியில் ஐந்து நபர்கள் உட்பட பல மொழிகளில் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அந்த படைப்புகளுக்கான எதிர்வினை கிடைப்பதில்லை. பக்கத்தில் இருக்கும் மலையாளச் சூழலில் தமிழ்ச் சூழலைவிட அதிக பிரதிகள் விற்பதும், வாசகர்கள் கவனத்தை நோக்குவதும் நடக்கிறது. அதற்கான எதிர்வினைகள் ரொம்ப அபூர்வமாகக் கிடைக்கின்றன. சுய படைப்புகளுக்கான எதிர் வினைகள் குறைவு. அதைவிடக் குறைவு மொழிபெயர்ப்பு படைப்புகள் பற்றிய எதிர்வினைகளும்.

பிறமொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப் படுவது போல் தமிழில் இருந்து பெருவாரியான படைப்புகள் மொழிபெயர்க்காதது ஏன்?

தமிழிலிருந்தும் பிற மொழிகளுக்கு நிறைய படைப்புகள் இப்போதெல்லாம் செல்கின்றன. ஆனால் இப்போது விருதாகட்டும், புத்தகங்கள் பதிப்பு செய்வதாகட்டும் எல்லா வற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. ஏதோவகையான அதிகாரம் தேவைப்படுகிறது. அப்படி பணமும் அதிகாரமும் கொண்டவர்களால் சிறப்பான முறையில் நூல்களை கொண்டுவர முடிகிறது. வெளியீட்டு விழா நடத்த முடிகிறது. விருதுகள் பெற முடிகிறது. அந்த சூழலில தான் ஒரு வகையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தோடு, கார்ப்பரேட்டுகளின் மனநிலையோடு இன்றைக்கு பல்வேறு மொழிகளில் சிலருடைய படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

க.நா.சு., வெங்கட்சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் ஒரு காலத்தில் இருந்தனர். தற்போது க.நா.சு.க்கள், வெங்கடசாமி நாதன்கள் இல்லையே ஏன்?

என்றைக்கும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். ரசனை சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் விமர்சனங்களை அதிகமாக படிக்கிற வாசகர்கள். எழுத்தாளர்கள் குறைவு தான். அவர்கள் ஒரு தலை பட்சமான நபர்களாக பெரும்பான்மையானவர்கள் மாறிவிடுவதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது.

எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் தாங்கள்... தொலபேசி துறை யைச் சேர்ந்தவர்கள். இலக்கியத் திலும் பரவலாக அறியப்பட்ட வர்களாக இருக்கிறீர்கள். துறையை ஒரு காரணம் என சொல்ல லாமா?

எல்லா துறை சார்ந்தவர்களும் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டு வெற்றி கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு துறை தொலைபேசித் துறை. ஆனால் துறை எதற்கும் ஊக்கம் தருவதாக இருக்காது.

அப்படி இருந்ததில்லை. சக ஊழியர்கள் மத்தியிலான பொறாமை, அதிகாரிகளின் மத்தியிலான ஊக்கமின்மை போன்றவை தான் எல்லா துறைகளிலும் இருக்கின்றன. தொலைபேசி துறையில் எழுத்தாளர்கள் இருப்பதைப் போல வேறு துறையிலும் நிறைய இருக்கிறார்கள். உதாரணத்திற்கு வங்கித் துறைகளிலும், ஆசிரியர்கள் தொழிலும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளி எப்போது வெற்றி பெறுகிறான். வெற்றிபெற்றவுடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளலாமா?

படைப்பாளி வெற்றி பெறுவதோ, நம்பர் ஒன் படைப்பாளியாக ஆவதோ என்பதெல்லாம் என்னளவில் இல்லை. அவன் தொடர்ந்து சமூகம் பற்றிய விஷயங்களை இலக்கியத்தின் மூலம் பல்வேறு வடிவங்களில் மூலம் பகிர்ந்து கொள்கிறான். அது அடுத்த நிலைக்குச் செல்லவேண்டும். குறைந்த பட்சம் சிந்தனைத் தளத்திலாவது.அதில் வெற்றி என்ற ஒரு இலக்கு என்பது இல்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது, மனசாட்சியோடு சமூக அக்கறையோடு அவன் செயல்படுவதில் தான் அவன் வெற்றி பெறுகிறான்.

நாவல்களை அதிக பக்கங்கள் எழுதி வருவது சமீபமாக அதிகரித்து வருகிறது. இச்சூழலில் தாங்களும் ஆயிரம் பக்கங்கள் அளவில் சிலுவை என்னும் நாவல் எழுதி வெளிவர உள்ளது. இது போட்டிக்காக எழுதப்பட்டதா ? இல்லை ஆயிரம் பக்கங்களில் ஒரு பெரிய நாவல் எழுத வேண்டும் என்பது தங்கள் இலட்சியமா?

இந்த சிலுவை நாவல் நான் எழுதி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இடையில் மூன்றாண்டு கள் கொரோனா சூழல். அதனால் பதிப்பகத்தினர் பெரிய நாவலை பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அந்த நாவல் இத்தனை நாள் காத்திருக்க காரணம் அது கையெழுத்து பிரதியாக இருந்தது என்பது முக்கியம். அது தட்டச்சுப் பிரதியாக இருந்தால் யாராவது குறைந்த பிரதிகளைக் கொண்டுவந்திருப்பார்கள். ஆனால் பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பதிப்பகம் தேவை என்று நினைத்ததால் தாமதம் ஆகிவிட்டது. இந்த ஆயிரம் பக்க நாவல் எழுதுவது என்பதெல்லாம் எனக்கு பிடிப்பதில்லை. நான் எழுதியிருக்கிற 20 நாவல்களில் பெரும்பான்மையானவை பக்க அளவில் குறைவானவை தான். ஆனால் இது போன்ற பெரிய நாவல்கள் வாசகர்களிடம் அதிகம் செல்கின்றன. பதிப்பாளர்களுக்கும் பிரயோஜனமாகிறது என்பது தெரிந்தது. அதனால் நான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நான்காண்டுகளாக இந்த நாவல் வெளிவராதபோதே இன்னும் ஒரு பெரிய நாவலை எழுத வேண்டும் என்ற ஆசை பிரசவ வைராக்கியம் போல் வேண்டாம் என்றுதான் இருக்கிறது. ஆயிரம் பக்கங்களில் ஒரு நாவல் என்பது லட்சியம் அல்ல. தொடர்ந்து நாவல் படைப்புகளில் நிறைய மக்களுடைய வாழ்க்கையையும் வெவ்வேறு வகையான படைப்புகளையும் படைக்க வேண்டும் என்பதுதான். சிலுவையை எந்தப் போட்டிக்காகவும் எழுதவில்லை.

எழுத்தாளர் வெங்ட் சாமிநாதன், எழுத்தாளர் பொன்னீலன் போன்றோர் தன் வரலாறு எழுதி உள்ளனர். இலக்கிய உலகில் நீண்ட அனுபவம் கொண்ட தாங்கள் தன் வரலாறு எழுதும் எண்ணம் உண்டா? தன் வரலாறுகள் குறித்த தங்கள் கருத்து என்ன?

எழுத்தாளர்கள் தன் வரலாறு சார்ந்து எழுதுகிறார் கள். சுவாரஸ்யத்திற்காக கற்பனைகளையும் கலந்து எழுதுகிறார்கள். எனக்கு வாழ்க்கையில் நிறைய சோதனைகளும் சிக்கல்களும் இருந்திருக்கின்றன.

அந்த சோதனைகளை எல்லாம் நான் திரும்பத் திரும்ப எழுதுவது மூலம் என்னை நானே ரணப்படுத்திக் கொள்கிறேன் என்று தோன்றுகின்றது அல்லது இன்னும் சிலரை அவை ரணப்படுத்தும் என்பதால் அதை எழுதுவதற்கான முயற்சிகள் இல்லாமல் இருக்கிறது ஆனால் ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கை அனுபவம் என்ற ரீதியில் அதைக்கூட நேரம் கிடைத்தால் செய்ய வண்டும்.

விமர்சனங்கள் படைப்புக்கு நிகரானது என்கிறார் கவிஞர் தமிழச்சி பாண்டியன். நேர்காணலும் படைப்புக்கு சமம் என்பது தங்கள் கருத்து. அப்படியெனில் கட்டுரைகளை படைப்பு என எடுத்துக் கொள்ளலாமா?

படைப்பிலக்கியம் போலவே மொழிபெயர்ப்பும் விமர்சனமும் ஒரு முக்கியமான படைப்புலகை சார்ந்த விஷயங்களாகவே நான் கருதுகிறேன்.

uday010223
இதையும் படியுங்கள்
Subscribe