Advertisment

நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின்!

/idhalgal/eniya-utayam/stalin-star-hope

மிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பலத்தோடு வெற்றி பெற்றிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் மறுவடிவாக, அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக அரியணை ஏறியிருக்கிறார்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

-என்பார் வள்ளுவர்.

Advertisment

சிறந்த பேச்சாற்றல் படைத்தவராக - சோர்வில்லாமல் உழைக்கக் கூடியவராக - அநீதியை எதிர்ப்பதில் அச்சமற்ற வராகத் திகழ்பவரை, எந்த எதிரியாலும் வெல்ல முடியாது என்பதுதான் இதன் பொருள். இந்தக் குற

மிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பலத்தோடு வெற்றி பெற்றிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் மறுவடிவாக, அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக அரியணை ஏறியிருக்கிறார்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

-என்பார் வள்ளுவர்.

Advertisment

சிறந்த பேச்சாற்றல் படைத்தவராக - சோர்வில்லாமல் உழைக்கக் கூடியவராக - அநீதியை எதிர்ப்பதில் அச்சமற்ற வராகத் திகழ்பவரை, எந்த எதிரியாலும் வெல்ல முடியாது என்பதுதான் இதன் பொருள். இந்தக் குறளுக்கு இலக்கணம் போல், பண்பட்டு ஒளிரும் ஸ்டாலின், டெல்லி அடிமைகளான எதிரிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்திருக்கிறார். இதன் மூலம் திராவிடம் வென்றிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகால, பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியில் தமிழகம் படாத பாடு பட்டது. விவசாயிகள் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் இழப்பையும் வேதனையையும் மட்டுமே சந்தித்தார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் இருளில் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதற்கெல்லாம் ’நிவாரண நம்பிக்கையாக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மலர்ந் திருக்கிறது. இது சமூக நீதிக்கான வெற்றி!

கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் காலில் போட்டு மிதித்துவந்த பாசிஸ சக்தி, இந்த வெற்றியின் மூலம் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவை வைத்து சுயலாபத் திருவிழா நடத்திவந்தவர்கள், துரத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த வெற்றி மதிப்பிற்குரிய வெற்றியாக மாறியிருக்கிறது.

Advertisment

stalin

ஐந்துமுறை அரசாண்ட ஒரு முதல்வரின் மகன்தான் ஸ்டாலின் என்றாலும், அவர் சொகுசாக வளர்ந்தவரல்ல. ஏக போகங்களில் திளைத்தவரல்ல. மாணவப் பருவத்திலேயே கொடிபிடித்துக் கொண்டு போராடியவர். கட்சிப் பிரச்சார நாடகங்களை எழுச்சியோடு நடத்தியவர். தனது திருமண மாலை காயும் முன்பாகவே, மிசாவில் கைதாகி, சிறைத் தாக்குதல்களையும், கொடும் சித்திரவதைகளையும் அனுபவித்தவர். மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பொறுப்புகள் தேடிவந்தபோதும், பதவியை சுகபோகமாக எண்ணாமல், அதை மக்கள் குறை தீர்க்க உதவும் பொறுப்புச் சுமையாகவும், முள் கிரீடமாகவும் சுமந்தவர் ஸ்டாலின்.

அவர் தனது தழும்புகளையே படிக்கட்டுகளாய் ஆக்கிகொண்டு மேலே ஏறி வந்தவர். மக்களோடு முழுதாய்த் தன்னை இணைத்துக் கொள்ளும் வித்தை கற்றவர். அதனால் தான், அவரை இப்போது மாபெரும் வெற்றியாளராக ஆக்கி யிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

இங்கே எல்லாத் திசையிலிருந்தும் சேவலின் கூவல் கேட்கிறது.

தமிழகத்தின் நோய் தீர்க்க, காலம் அனுப்பிவைத்த சமூக மருத்துவராகவே ஆட்சி பீடம் ஏறியிருக்கிறார் ஸ்டாலின். ஆற்றவேண்டிய கடமைகளும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளும் காத்திருக்கின்றன. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திர மாகச் சுடரும் ஸ்டாலின் அவர்களை, தமிழக மக்களின் சார்பில் அன்போடு வாழ்த்துகிறேன்.

uday010521
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe