என்னை செதுக்கிய என் கிராமம்! எனக்குப் பிடித்த கலைஞர்கள்! திராவிட இயக்கங்களின் சாதனை! - ஆத்தா உன் சேலை... பாடலாசிரியர் & இயக்குநர் ஏகாதசி சிறப்பு நேர்காணல்!
ஆத்தா உன் சேலலி என்ற ஒரே பாடலால், கோடானு கோடி இதயங்களை உணர்ச்சிப்பூர்வமாகத் தொட்டவர் கவிஞர் ஏகாதசி.
ஆடுகளம் படத்தில் "ஒத்த சொல்லால", மதயானைக் கூட்டத்தில் "கோணக் கொண்டக்காரி", ஈட்டியில் "நாம் புடிச்ச மொசக்குட்டியே", வில்லம்பு படத்தில் "ஆள சாச்சுப்புட்டா கண்ணால", சண்டக்கோழி 2-ல் "கம்பத்துப் பொண்ணு", அசுரன் படத்தில் "கத்தரிப் பூவழகி", சூரரைப் போற்று படத்தில் "மண்ணுருண்ட மேல" என வெற்றிப் பாடல்கள் 300 க்கும் மேல் எழுதியவர் இவர். “கொஞ்சம் வெயில் கொஞ்சம் கொஞ்சம் மழை" "அருவா" போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார் கவிஞர் ஏகாதசி. அவரோடு ஒரு நேர்காணல்.
* உங்கள் எழுதுக்கüன் உள்ளே ததும்பும் கிராமியத்துக்கு என்ன காரணம்?
பணியான். நாகமலையின் அடிவாரத்தில் உள்ள, இதுதான் நான் பிறந்த ஊர். காலை மாலை அந்தியில் மிதக்கும் ஆடு மாடுகüன் வாசம். டீசல் சிந்தாத புழுதி. நெüந்த அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் சுமந்து செல்லும் வளர்த்தியான கிழவிகள். பெயரன்களுக்கு வெற்றிலை மென்று துப்பித்தரும் கிழவன்கள். பூவரச இலைகள் பின்னி அதில் வீடுவீடாகச் சோறெடுத்துச் செல்லும் துண்டணிந்த ஒரு மலையாü. மஞ்சள் துணி சுற்றிய டயனமோ சைக்கிüல் பறக்கும் இள வட்டங்கள். ஆவாரம் பூவாய்ச் சிரிக்கும் குமாரிகள்.
சீகம்புல் வேய்ந்த கூரைகள். வேம்பின் நிழலில் சீட்டாட் டம். பாதையெல்லாம் அவரை. பண்டையெல்லாம் துவரை. திக்கெட்டும் பாட்டு. திண்ணையில் தாயம். ஆடிக்குப் பலகாரம். அன்னை மடி உறக்கம். என இன்னும் எங்கள் ஊரழகை எப்படிச் சொல்வேன் நான்.
உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றுக் கோடுகளை வாசித்த அனுபவத்தோடு, என் எழுதுகோலில் கண்ணீரையும் வியர்வையையும் கலந்து ஊற்றிக் கொண்டு சென்னை வந்த என் எழுத்தில், மண் மணக்காவிட்டால்தான் ஆச்சரியம்.
*உங்கள் இளமைக்காலம்- மறக்க முடியாத ஆசிரியர்கள், நண்பர்கள், நண்பிகள் பற்றி?
என் கிழிந்த ஆடைகளை வாங்கித் தைத்துக் கொண்டு வந்து கொடுத்த என் அன்பிற்கினிய நான்காம் வகுப்பு லோகுமணி டீச்சர். இவர் ஒரு முறை எங்கள் ஒவ்வொரு வரிடமும் எங்கüன் லட்சியங்களைக் கேட்டறிந்த போது பலரும் பலவாக சொன்னார்கள். நான் கலெக்டர் ஆவேன் என்றேன். அப்போ என் மகனுக்கு நான் உன்னிடம்தான் வேலை கேட்டு வரணுமென்று சிரித்தார். இப்போது நான் கலெக்டர் ஆகவில்லை. நிறைய கலெக்டர்கள் என் எழுத்துக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க என் டீச்சர் இல்லை. அடுத்து ஏழு எட்டாம் வகுப்புகüல் எனக்கு குருசாமி ஆசிரியர். அவரைப் பற்றி எழுத நாளும் போதாது நூலும் போதாது. என்னை ஏழாம் வகுப்பில் மேடையேற்றிப் பேச வைத்து பெருமைகொண்டவர். அந்த 12 வயதில் மகாகவி பாரதி பற்றி அவர் எழுதிக் கொடுத்ததை, என் 45 வயதில் மூளை நரம்பு பக்கவாதத்தால் அவதியுற்றுப் படுக்கையில் வாழும் என் 76 வயது குருசாமி ஆசிரியரின் முன் பேசிக் காட்டியபோது அசைவற்று அழுதார். எத்தனை ஆசிரியர்களைக் கடந்துவந்திருந்தாலும் இந்த இருவரைத் தான் என் வாழ்வுக்கு நடை கற்றுத்தந்தவர்களாக ஏற்கிறது மனம். பள்ü நண்பர்கüன் பட்டியல் நீளமானதென்றாலும் லோகநாத்துக்கு முதலிடம். ஏனெனில் அவன் தான் இன்றும் என்னைத் தாண்டி என் அம்மாவின்
என்னை செதுக்கிய என் கிராமம்! எனக்குப் பிடித்த கலைஞர்கள்! திராவிட இயக்கங்களின் சாதனை! - ஆத்தா உன் சேலை... பாடலாசிரியர் & இயக்குநர் ஏகாதசி சிறப்பு நேர்காணல்!
ஆத்தா உன் சேலலி என்ற ஒரே பாடலால், கோடானு கோடி இதயங்களை உணர்ச்சிப்பூர்வமாகத் தொட்டவர் கவிஞர் ஏகாதசி.
ஆடுகளம் படத்தில் "ஒத்த சொல்லால", மதயானைக் கூட்டத்தில் "கோணக் கொண்டக்காரி", ஈட்டியில் "நாம் புடிச்ச மொசக்குட்டியே", வில்லம்பு படத்தில் "ஆள சாச்சுப்புட்டா கண்ணால", சண்டக்கோழி 2-ல் "கம்பத்துப் பொண்ணு", அசுரன் படத்தில் "கத்தரிப் பூவழகி", சூரரைப் போற்று படத்தில் "மண்ணுருண்ட மேல" என வெற்றிப் பாடல்கள் 300 க்கும் மேல் எழுதியவர் இவர். “கொஞ்சம் வெயில் கொஞ்சம் கொஞ்சம் மழை" "அருவா" போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார் கவிஞர் ஏகாதசி. அவரோடு ஒரு நேர்காணல்.
* உங்கள் எழுதுக்கüன் உள்ளே ததும்பும் கிராமியத்துக்கு என்ன காரணம்?
பணியான். நாகமலையின் அடிவாரத்தில் உள்ள, இதுதான் நான் பிறந்த ஊர். காலை மாலை அந்தியில் மிதக்கும் ஆடு மாடுகüன் வாசம். டீசல் சிந்தாத புழுதி. நெüந்த அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் சுமந்து செல்லும் வளர்த்தியான கிழவிகள். பெயரன்களுக்கு வெற்றிலை மென்று துப்பித்தரும் கிழவன்கள். பூவரச இலைகள் பின்னி அதில் வீடுவீடாகச் சோறெடுத்துச் செல்லும் துண்டணிந்த ஒரு மலையாü. மஞ்சள் துணி சுற்றிய டயனமோ சைக்கிüல் பறக்கும் இள வட்டங்கள். ஆவாரம் பூவாய்ச் சிரிக்கும் குமாரிகள்.
சீகம்புல் வேய்ந்த கூரைகள். வேம்பின் நிழலில் சீட்டாட் டம். பாதையெல்லாம் அவரை. பண்டையெல்லாம் துவரை. திக்கெட்டும் பாட்டு. திண்ணையில் தாயம். ஆடிக்குப் பலகாரம். அன்னை மடி உறக்கம். என இன்னும் எங்கள் ஊரழகை எப்படிச் சொல்வேன் நான்.
உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றுக் கோடுகளை வாசித்த அனுபவத்தோடு, என் எழுதுகோலில் கண்ணீரையும் வியர்வையையும் கலந்து ஊற்றிக் கொண்டு சென்னை வந்த என் எழுத்தில், மண் மணக்காவிட்டால்தான் ஆச்சரியம்.
*உங்கள் இளமைக்காலம்- மறக்க முடியாத ஆசிரியர்கள், நண்பர்கள், நண்பிகள் பற்றி?
என் கிழிந்த ஆடைகளை வாங்கித் தைத்துக் கொண்டு வந்து கொடுத்த என் அன்பிற்கினிய நான்காம் வகுப்பு லோகுமணி டீச்சர். இவர் ஒரு முறை எங்கள் ஒவ்வொரு வரிடமும் எங்கüன் லட்சியங்களைக் கேட்டறிந்த போது பலரும் பலவாக சொன்னார்கள். நான் கலெக்டர் ஆவேன் என்றேன். அப்போ என் மகனுக்கு நான் உன்னிடம்தான் வேலை கேட்டு வரணுமென்று சிரித்தார். இப்போது நான் கலெக்டர் ஆகவில்லை. நிறைய கலெக்டர்கள் என் எழுத்துக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க என் டீச்சர் இல்லை. அடுத்து ஏழு எட்டாம் வகுப்புகüல் எனக்கு குருசாமி ஆசிரியர். அவரைப் பற்றி எழுத நாளும் போதாது நூலும் போதாது. என்னை ஏழாம் வகுப்பில் மேடையேற்றிப் பேச வைத்து பெருமைகொண்டவர். அந்த 12 வயதில் மகாகவி பாரதி பற்றி அவர் எழுதிக் கொடுத்ததை, என் 45 வயதில் மூளை நரம்பு பக்கவாதத்தால் அவதியுற்றுப் படுக்கையில் வாழும் என் 76 வயது குருசாமி ஆசிரியரின் முன் பேசிக் காட்டியபோது அசைவற்று அழுதார். எத்தனை ஆசிரியர்களைக் கடந்துவந்திருந்தாலும் இந்த இருவரைத் தான் என் வாழ்வுக்கு நடை கற்றுத்தந்தவர்களாக ஏற்கிறது மனம். பள்ü நண்பர்கüன் பட்டியல் நீளமானதென்றாலும் லோகநாத்துக்கு முதலிடம். ஏனெனில் அவன் தான் இன்றும் என்னைத் தாண்டி என் அம்மாவின் நலத்தில் அக்கறையோடு இருக்கிறான். நண்பிகள் இல்லை, உடன் படித்த பெண் பிள்ளைகள் சகோதரிகளாக மாறிப்போனவர்கüன் சிறு பட்டியல் உண்டு.
* இப்போது வாழும் நகர வாழ்க்கைக்கும், நீங்கள் அனுபவித்து வாழ்ந்த கிராம வாழ்க்கைக் கும் இடையில் நீங்கள் பார்க்கிற வேறுபாடு என்ன?
கிராமத்தில், வீட்டில் எப்போதும் உண்ணச் சோறிருக்கும், உடுத்த உடையிருக்கும், நீட்டி நிமிர்ந்து படுக்க வீடிருக்கும். அடுத்த வீட்டுத் துணையிருக்கும். ஆறுதலுக்கு ஆüருக்கும். கேலி கிண்டல் இருக்கும், "கெக்கக்கே"வென்ற சிரிப்பிருக்கும். சொல்லக் கதையிருக்கும். கேட்கக் காதிருக்கும். சட்டையைப் பிடித்து இழுத்துச் சாப்பிடச் சொல்லி சண்டை போட நட்பிருக்கும். நகரத்தின் இந்த 22 ஆண்டு அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே ஊகிக்கலாம். எனது ஒவ்வொரு வேளை சோற்றையும் நான் தயாரிக்கவேண்டும் என்றானது. எவர் சொல் கேட்கவும் எவர் காதும் இங்கே தயாராக இல்லை. எரியும் பிளாஸ்டிக் வாசம் நகரினுடையதாக இருக்கிறது. இங்கே குடும்பங்கüல் புன்னகையைக்கூட கிராம் கணக்கில்தான் பரிமாறிக் கொள்கிறார்கள். குறிப்பாக இங்கே என் அம்மா இல்லை. அதை ஈடுசெய்ய யாரால் முடியும். கிராமத்தில் அம்மா இல்லை என்றாலும் ஊர் இருக்குமே. ஆனால் ஒன்று சென்னை சவால் மிகுந்த நகரம். எனக்கு இங்கே வேட்டையாடப் பிடித்திருக்கிறது.
*எல்லோருக்குமே விடலைப் பருவத்தில் ஒரு காதல் வந்து தீண்டிப்போயிருக்கும். அப்படியானதொரு அனுபவம் உண்டா?
அப்படி ஒரு அனுபவமில்லாமல் எவர் வாழ்வும் கடந்திருக்காது என்பது என் நம்பிக்கை. ஆசிரியர்கள் பிரம்போடு உலா வருகைக்கு நடுவில் காதல் பூக்கிறதென்றால் ஒரு பெண்ணின் பார்வைக்கு அல்லது ஒரு ஆணின் பார்வைக்கு எத்தனை ஈர்ப்பு இருக்கவேண்டும். அந்தப் பார்வை பருவம் தொடர்பானது.
அந்தப் பருவம் காமம் அறியாதது. அவனும் அவளும் எதற்குப் பேசுகிறோம் என்ன பார்க்கிறோம் என்பதறியாத வயதில்தான் காதல் மிகத் தெüவாக தனது வாசத்தை ஊதுபத்திப் புகையாய் வெüயேற்றுகிறது. அதுவரை படிக்காதவர் படிக்கத் தொடங்குகின்றனர். அதுவரை குüக்காதவர் குüக்கத் தொடங்குகின்றனர். அவன் கரட்டு மேட்டில் படுத்தபடி புகைப்பிடித்து வானத்தின் முன் ஊதிக்காட்டுகிறான். புத்தகத்தைச் சுருட்டி வல்லடையில் செருகி வைத்துவிட்டு அடுப்படியில் நீந்துகிறாள். கண்ணாடிக்கு போரடிக்கும் அளவிற்கு காதலர்கள் அதை விட்டு வரமறுக்கிறார்கள். மேற்கூறியவற்றில் நான் இருக்கிறேனா... அவள் இருக்கிறாளா.. என்றால், இல்லாமல் இல்லை என்கிற பதில் இப்போதைக்கு சிறந்ததென்று உணர்கிறேன்.
* ஆத்தா உன் சேலை-என்ற ஒரே பாட்டால் உங்களுக்கான உயர்ந்த முகவரியைப் பெற்றுவிட்டீர்கள்? அந்தப் பாடல் எழுதிய சூழல் எப்படி உருவானது? அது உருவானபோது, இந்த அளவுக்கு புகழ்பெறும் என்று நினைத்ததுண்டா?
என் ஒரு வயதில் என் தந்தை எங்களை பிரிந்து சென்று இன்னொரு திருமண செய்துகொண்ட நாட்கüலிருந்து 24 வருடங்கள் நானும் அம்மாவும் ஒற்றைப் பாயில்தான் உறங்கினோம். அவர்கüன் மடக்கி வைத்த கையே எனக்குத் தலையணை. நான் போர்த்தித் தூங்கியது அவர்கüன் சேலையில்தான். அந்தச் சேலையின் சிறப்பே அதில் கண்ணீரும் வேர்வையும் மணத்துக் கிடந்ததுதான். கூடுதல் சிறப்பு, அதில் கொஞ்சம் அழுக்கிருந்ததும் அதன் வாசமுமே. நான் சென்னைக்கு வந்த மூன்றாம் நாளே அழுது தீர்த்தேன். அம்மாவின் சேலை வாசத்திற்காக ஏங்கினேன். அப்போது எழுதியது,
"ஆத்தா ஓஞ்சேல - அந்த
ஆகாயத்தப் போல
தொட்டில் கட்டித் தூங்க
தூüகட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க
அப்பனுக்குத் தல தொவட்ட
பாத்தாலே சேத்து அணைக்கத் தோனும் -நா
செத்தாலும் என்னப் போத்த வேணும்"
-என் மனத் துயர் போக்கத்தான் எழுதினேன்.
ஆனால் இப்படி உலகத்து மனிதர்கüன் மனத் துயர்களைப் போக்குமென சற்றும் நினைக்கவில்லை. இப்படி ஒரு பாடலை எழுதிக்கொண்டு நண்பர் கரிசல் கருணாநிதியின் வீட்டில் அமர்ந்தோம் நானும் சிவமணி மாமாவும். அப்போது கருணாநிதி அமைத்த மெட்டுதான் இன்று எல்லோரும் முணுமுணுப்பது. அப்போது அவரின் குழந்தைகளான கிஷனும் இனியனும் அவரின் முதுகிலும் மடியிலும் புரண்டு கொண்டிருந்தனர். அவர் இசைக்கும்போது பெரியவனும் தன் பிஞ்சு விரலால் ஒரு தட்டு தட்டி னான். இன்று அவர்கள் இளைஞர்களாக இருக்கிறார் கள். இந்தப் பாடல் த.மு.எ.க.ச. மேடையின் தேசியகீதமாகத் தோழர்கள் பார்ப்பதில் எனக்கு பெருமகிழ்வு. மறைந்த தோழர் திருவுடையான் இந்த பாடலை அவர் பாணியில் பாடி தமிழர் நெஞ்சங்கüல் இடம்பிடித்தார். பிறகு விஜய் டிவியில் செந்தில்கணேஷ் பாடியதில் இந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் படர்ந்து பூ பூத்தது.
*இந்தப் பாடலை உங்கள் அம்மா கேட்ட போது அவரது உணர்வு எப்படி இருந்தது?
அந்தக் கணத்தில் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?
இந்தப் பாடலை என் அம்மா கேட்டிருப்பாரா என்று தெரியவில்லை. எனக்கும் அவர்முன் இந்தப் பாடலை பாடிக் காட்டவோ வாசித்துக் காட்டவோ அல்லது இன்னொருவர் குரல் வழியாவது இதைக் கேட்க வைக்கவோ தோன்றியதில்லை. ஆனால் அந்தப் பாமரத் தாய் இந்த வாழ்வை ரசிக்கும் மனோநிலையில் இருந்ததில்லை. வயதானபோதும் உழைப்பதையும் என்னைக் கவனிப்பதையும் அன்போடு செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தப் பாடலைக் கேட்ட எத்தனையோ தாய்கüன் கண்ணீரையும் ஆசிர்வாதத்தையும் பெற்றதில் என் தாயை எனக்கு மறந்தே போனது. இந்த கேள்வியின் பின் தோன்றுகிறது ஊருக்குச் சென்று பாட்டுக்குச் சொந்தக்காரியிடம்,
"அக்கா கட்டிப் பழகினதும்
ஆடுகட்டி மேய்ச்சதுவும்
ஓஞ்சேல தானே - வண்ணப்
பூஞ்சோல தானே
கண்ணில் ஒரு தூசு பட்டா
ஒத்தடம் கொடுத்ததுவும்
ஓஞ்சேல தானே - வண்ணப்
பூச்சோல தானே
பெட்டிக் குள்ள மடிச்சு வச்சா
அழகு முத்து மால
காயம்பட்ட விரல்களுக்குக்
கட்டுப் போடும் சேல
மயிலிறகா ஓஞ்சேல
மனசுக்குள்ள விரியும் - ஓ
வெளுத்த சேலத் திரி
வௌக்குப் போட்டா எரியும்"
எனப் பாடிவிட வேண்டும் என்று.
*உங்களைச் சிவப்புச் சித்தாந்தம் தொற்றிக் கொண்டது எப்படி?
மதுரையில் அறிவொü இயக்கக் கலைக்குழுவில் இருந்தேன். அந்நாüல் மதுரை திருப்பரங்குன்றத் தில் த.மு.எ.க.ச. கலை இலக்கிய இரவு பார்த்தேன்.
அங்கே பார்த்த ஆட்டம் நான் அதுவரை பாராதது. அங்கே கேட்ட பாடல் நான் அதுவரை கேளாதது. அங்கே முழங்கிய பேச்சின் உண்மை நான் அதுவரை அறியாதது. எல்லாம் எüய மனிதர்களுக்கான அடிப்படைத் தேவையை வேண்டிய கோரலாக இருந்தது. சமூகம் பிளவுண்டதற்கான காரணத்தை அது ஆய்ந்தது. சில நாட்கüல் நானும் அதில் இணைந்து கொண்டேன். முப்பெரும் கவிஞர்களாக சங்கம் முன்னிருத்திய பாரதி - பாரதிதாசன் - பட்டுக்கோட்டை ஆகியோர் வழியைப் பின்பற்றி னேன். தோழர்கள் அருணன், செந்தில்நாதன், நன்மாறன், பாரதி கிருஷ்ணகுமார் போன்றோ ரின் பேச்சும், கே.முத்தையா, கந்தர்வன், குசிபா, வேல ராமமூர்த்தி, மேலாண்மை பொன்னுசாமி போன்றோரின் எழுத்துக்களும், தாய், மூவர், உலகை உலுக்கிய பத்து நாட்கள் போன்ற நூல்களும், எழில், எஸ்.ஏ.பி. ஆகியோர்கüன் மார்க்ஸிய வகுப்புகளும் என்னை சிவப்புச் சட்டைக்காரனாக மாற்றியது. நான் என்னதான் சினிமாக்காரனாக இருந்தாலும் எüயோனாக இருக்கிறேன். எüயோர் பக்கம் நிற்கிறேன். சுரண்டல் வர்க்கத்தின் தோலுரிக்க அதிகாரத் திமிரை வேரறுக்க என் தாய்த் தமிழோடு வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
* திராவிட இயக்கங்கüன் சாதனையாக எதைப் பார்க்கிறீர்கள்?
பக்தி மார்க்கமும் அதுசார்ந்த இலக்கியங்களும் மனித மூளையை மழுங்கடித்துக் கொண்டிருந்த அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பான காலத்தில் -பீடித்திருந்த பிற்போக்கு இருளை கொளுத்தக் களம் இறங்கியதும்- அதில் வெற்றி கண்டதும் திராவிட இயக்கங்கள்தான். அதுமட்டுமல்லாது சாதி மதவாத கொடுமைகüலிருந்தும் பெண்ணடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை அடைய வீதி இறங்கியதும்- ஒரு கருத்து மக்களைச் சென்றடைய பேச்சு எத்தனை பெரிய ஆற்றல்வாய்ந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டிய இயக்கம் அது. அதற்கு பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரின் உரைகள் நம் கண்முன் இருக்கும் சாட்சியங்களாகும். இந்தித் திணிப்பை எதிர்த்ததிலும் மொழி வளர்ச்சிக்காக முன்நின்றதிலும் திராவிட இயக்கங்களுக்கு நிகர் திராவிட இயக்கங்களே. திரைப்படங்கள் வழியாக பெரும் புரட்சி செய்ததையும் மறக்க இயலாது. ஏன் இந்தியாவே மதவெறி பி.ஜே.பி.யின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் மோசமான இந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் ஒரு சமத்துவ ஆட்சி வெற்றிநடை போடுவதே திராவிட இயக்கங்கüன் சாதனைதானே.
*உங்களுக்குப் பிடித்த இயக்குநர்- நடிகர்- நடிகை- கவிஞர்- பாடலாசிரியர்-யார் யார்?
எனக்குப் பிடித்த இயக்குநர் தமிழில் கமல்ஹாசன். தான் எடுத்துக் கொள்ளும் கதையை சமரசமின்றி காட்சிப்படுத்துபவர். தமிழ் சினிமாவிற்குப் பல தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துவைத்தவர். இன்றும் அதற்காக முழு நேரமும் உழைத்துக் கொண்டிருப்பவர். பிடித்த நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி. தமிழ் சினிமா எதார்த்த நடிப்பென்று வைத்திருந்த எல்லையை தகர்த்தெறிந்து, கதாபாத்திரங்களாக வாழ்கிறார்கள் இவர்கள். நயன்தாராவும் கீர்த்தி சுரேஷும் நடிகைகüல் பாத்திரம் உணர்ந்து நடிப்பதால் அவர்களைப் பிடித்திருக்கிறது. பிடித்த பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து. பிடித்த கவிஞர் கல்யாண்ஜி.
*உங்களைத் தூங்கவிடாத படைப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
கமலின் "மகாநதி", மணிரத்தினத்தின் "நாயகன்", பாரதிராஜாவின் "முதல் மரியாதை", பாலுமகேந்திராவின் "சந்தியா ராகம்", மிஷ்கினின் "நந்தலாலா", வெற்றிமாறனின் "ஆடுகளம்", மாரிசெல்வராஜின் "பரியேறும் பெருமாள்" லீனா மணிமேகலையின் "மாடத்தி"ஆகிய திரைப்படங்களுக்காகவும். தாய், எரியும் பனிக்காடு போன்ற நாவல் இலக்கியங்களுக்காகவும் நான் என் உறக்கம் தொலைத்திருக்கிறேன்.
*எதனால் உங்களுக்குத் திரைத் துறையின் மீது ஆர்வம் வந்தது?
நான் தெருவில் நின்று கூவினால் என் ஊருக்கு மட்டும்தான் கேட்கும் என் குரல். என் சனங்கüன் பாடுகளையும் கொண்டாட்டங்களையும் உலகறியக் கூவ நினைத்தேன், அதற்கு திரைத்துறையே உச்ச ஊடகமென உணர்ந்தேன்.
* உங்கள் படைப்புகüல் உங்களுக்கு நிறைவான படைப்பு என்று எதைச்சொல்வீர்கள்?
2015-ல் "எழுத்து" அமைப்பின் வெüயீடாக வந்த "மஞ்சல் நிற ரிப்பன்" எனும் எனது சிறுகதைத் தொகுப்பும், 2020-ல் "வேடந்தாங்கல்" வெüயீடாக வந்த "எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்" எனும் இருளும் இருள் சார்ந்தவை பற்றி எழுதிய 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பும், இப்போது வெüயாகியிருக்கின்ற "செவலை நாயின் முதுகில் வெயில் மச்சம்" என்கிற கவிதைத் தொகுப்பும் மற்றும் என் இயக்கத்தில் வர இருக்கும் "அருவா" திரைப்படமும் எனக்கு ஓரளவுக்கு நிறைவான படைப்புக்களாகப் பார்க்கிறேன்.
*திரைப்பட இயக்குநராக உங்கள் அனுபவம்?
வலி நிறைந்தது. பொருளாதாரம் தொரத்தத் தொரத்த ஓடிக்கொண்டிருப்பதில் சில சமயம் மனச் சோர்வே வந்துவிடுகிறது. காரணம் சினிமா போலிகüன் கூடாரமாகும்பொழுது, நிசங்கüன் பிழைப்பு சற்று கடினமானதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மக்களுக்கான கதையை கருத்தைச் சொல்ல இதைவிட உச்ச ஊடகம் வேறு இல்லை என்பதாலேயே வலி பொறுத்து வாழவேண்டியிருக்கிறது. எனது திரைப்பாடல் வெற்றியடையும்போதெல்லாம் மகிழ்வும் மக்களுக்கான எனது தனியிசைப்பாடல் வெüயிடும்போதெல்லாம் பெருமகிழ்வும் கொள்கிறேன். நான் எழுதி இயக்கிய எனது இரண்டாவது திரைப்படமான "அருவா" திரைக்கு வரக் காத்திருக்கிறேன். இங்கே உன்னதமான திரைப்படங்கள் தோல்வி அடைந்துகொண்டே இருப்பது ஆரோக்கியமான விசயமாக இல்லை. தமிழ் சினிமாவையும் மீட்டெடுக்க சிறு சிறு தயாரிப்பாளர்கள் குறைந்தபட்ச லாபத்தோடு நிலைத்திருக்க, திறமையான புதிய இயக்குநர்களுக்கு வாழ்வüக்க, அரசு முன்வந்தால். இந்தத் திரைப்படத் துறையைக் காப்பாற்றலாம்.
*உங்கள் இலக்கியப் பயணம் குறித்து?
1994 ஆம் ஆண்டு என் 18 வயதில் "முதல் தூறல்" கவிதை நூலில் தொடங்கியது என் பயணம். சமீபத்திய சென்னைப் புத்தகக் கண்காட்சியில், இருவாட்சி பதிப்பகம் என் "நிலவைப் பருகும் குளம்" ஹைக்கூ நூலையும், எனது 10-வது நூலான "செவலை நாயின் முதுகில் வெயில் மச்சம்" சமூக நறுக்குகள் நூலை வாசகசாலையும் வெüயிட்டதில், நூல்கள் பரவலான கவனத் தைப் பெற்றன.
நான் கடந்த பத்தாண்டுகளாக தொகுத்து வரும் மதுரை மண்ணின் வழக்குச் சொற்களை "எட்டு நாட்டுச் சொல்லகராதி" என்கிற தலைப்பில் இந்தாண்டு இறுதிக்குள் வெüயிடும் திட்டம் வைத்திருக்கிறேன். இது வெüவருமாயின் தமிழில் இதுவரை வந்த வழக்குச் சொல் அகராதியைவிடப் பெரிதாக இருக்கும். "சைக்கிள்" எனும் ஒரு நாவலும் முடித்திருக்கிறேன். இதையும் சில மாதங்கüல் வெüயிடும் முயற்சியில் இருக்கிறேன். இவை போக ஒரு நீள்கவிதைத் தொகுப்பும் இரண்டு தொகுப்பளவிலான காதல் நறுக்குகளும் வெüயிடும் பொறுப்பி லும் இருக்கிறேன். மேலும் "ஈஞயஒஉ 144" எனும் நூல் இந்தாண்டு மே மாதத்திலும், ஏகாதசி பாடல்கள் மூன்றாம் தொகுதி இந்தாண்டு ஆகஸ்டிலும் வெüயாகின்றன. இன்னும் இன்னும் இலக்கியத்தை நுட்பங்களுடனும் செறிவுடனும் படைக்க வேண்டும் இவைதான் என் சமூகத்திற்கு நான் விட்டுப்போகும் சொத்தாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
* பாடல் எழுதி வரவிருக்கும் திரைப் படங்கள்?
வெற்றிமாறனின் "விடுதலை" , ஜி.வி.பிரகாஷ்குமாரின் "கள்வன்", விக்ரம் சுகுமாரின் "இராவண கோட்டம்", வசந்த பாலனின் "அநீதி", ராகவா லாரன்ஸின் "ருத்ரன்" மற்றும் "ட்ராமா", "தண்டட்டி", "குண்டாஸ்" என 20 படங்களுக்கும் மேல் வரயிருக்கின்றன.
-ஏகாதசி பேசி முடித்தபோது, அவருக் குள் ஒரு மகா கலைஞன் இருப்பதை உணர முடிந்தது. அவருக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.
சந்திப்பு: நாடன்