உனக்காக நான் எழதிய பாட்டு...

/idhalgal/eniya-utayam/song-i-wrote-you

விஸ்வாசம், சண்டகோழி2, கொலைகாரன், அண்ணாதுரை, காளி, திமிருபிடிச்சன், வால்டர் என்று வரிசையாக அண்மைக்காலத் திரைப்படங்களில் பாடல்கள் எழுதி ஒளிர்ந்துகொண்டிருக் கிறார் அருண்பாரதி. இவர் திரைத்துறையில் இப்படி முத்திரை பதித்துக் கொண் டிருக்க, இவரது இணையரான பத்மாவதியோ சின்னத் திரையில் கோலோச்சி வருகிறார்.

தமிழகத்தின் நம்பர் ஒன் தொலைக்காட்சித் தொடராக, சன்னில் ஒளிபரப்பாகி வரும் "ரோஜா' மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "அரண்மனைக்கிளி' ஆகிய நெடுந் தொடர்களின் திரைக்கதை ஆசிரிய ராகப் பணியாற்றி வருகிறார் பத்மாவதி அருண்பாரதி.

இருவரும் சிறந்த இலக்கியத் தம்பதிகளாக வலம் வருகின்றனர்.

இவர்களைக்கொண்டே இவர்களை வெளிப்படுத்தும் விதமாக, பாடலாசிரியர் அருண்பாரதியிடம் அவர் துணைவி யாரான பத்மாவிடம் பேட்டி எடுக்கச் சொன்னோம். இதோ அந்த இனிய கேள்விகளால் ஆன வேள்வி....

"கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?' -பாணியில் நான் கேள்வித்தூண்டிலை வீசவா? என்று ஜாலியாக ஆரம்பித்தார் பத்மா. உடனே, "இல்லை இல்லை நானே கேட்கிறேன். எனக்கு கேட்பதுதான் வசதி' என்று கேள்விகளை ஆரம்பித்தார் அருண்பாரதி...

கவிதைகளில் உங்களுக்கு பிடித்தது எது? பிடித்தது பாடல் எது?

முதல் கேள்வியே இப்படியா? ஹ்ம்ம் நிறையா கவிதைகள் இருக்கு. ஆனாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதைன்னா...

"நீ பிஸிக்ஸ் லேபில்

அலைநீளம் கண்டுபிடித்துக்

கொண்டிருந்தாய்

கெமிஸ்ட்ரி லேபில்

புலம்பிக் கொண்டிருகின்றன

பியூரெட்டும் பிப்பெட்டும்'

எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்னா... அது "காளி' படத்துல வர்ற "நூறாய்..' பாடல் ஆனா இப்ப அடிக்கடி முணுமுணுக்கிறது "வால்டர்' படத்துல சித்ரா அம்மா குரல்ல வர்ற மெலடி பாடல் "யாரைத் தேடி நெஞ்சமே'.

இதுவர

விஸ்வாசம், சண்டகோழி2, கொலைகாரன், அண்ணாதுரை, காளி, திமிருபிடிச்சன், வால்டர் என்று வரிசையாக அண்மைக்காலத் திரைப்படங்களில் பாடல்கள் எழுதி ஒளிர்ந்துகொண்டிருக் கிறார் அருண்பாரதி. இவர் திரைத்துறையில் இப்படி முத்திரை பதித்துக் கொண் டிருக்க, இவரது இணையரான பத்மாவதியோ சின்னத் திரையில் கோலோச்சி வருகிறார்.

தமிழகத்தின் நம்பர் ஒன் தொலைக்காட்சித் தொடராக, சன்னில் ஒளிபரப்பாகி வரும் "ரோஜா' மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "அரண்மனைக்கிளி' ஆகிய நெடுந் தொடர்களின் திரைக்கதை ஆசிரிய ராகப் பணியாற்றி வருகிறார் பத்மாவதி அருண்பாரதி.

இருவரும் சிறந்த இலக்கியத் தம்பதிகளாக வலம் வருகின்றனர்.

இவர்களைக்கொண்டே இவர்களை வெளிப்படுத்தும் விதமாக, பாடலாசிரியர் அருண்பாரதியிடம் அவர் துணைவி யாரான பத்மாவிடம் பேட்டி எடுக்கச் சொன்னோம். இதோ அந்த இனிய கேள்விகளால் ஆன வேள்வி....

"கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?' -பாணியில் நான் கேள்வித்தூண்டிலை வீசவா? என்று ஜாலியாக ஆரம்பித்தார் பத்மா. உடனே, "இல்லை இல்லை நானே கேட்கிறேன். எனக்கு கேட்பதுதான் வசதி' என்று கேள்விகளை ஆரம்பித்தார் அருண்பாரதி...

கவிதைகளில் உங்களுக்கு பிடித்தது எது? பிடித்தது பாடல் எது?

முதல் கேள்வியே இப்படியா? ஹ்ம்ம் நிறையா கவிதைகள் இருக்கு. ஆனாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதைன்னா...

"நீ பிஸிக்ஸ் லேபில்

அலைநீளம் கண்டுபிடித்துக்

கொண்டிருந்தாய்

கெமிஸ்ட்ரி லேபில்

புலம்பிக் கொண்டிருகின்றன

பியூரெட்டும் பிப்பெட்டும்'

எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்னா... அது "காளி' படத்துல வர்ற "நூறாய்..' பாடல் ஆனா இப்ப அடிக்கடி முணுமுணுக்கிறது "வால்டர்' படத்துல சித்ரா அம்மா குரல்ல வர்ற மெலடி பாடல் "யாரைத் தேடி நெஞ்சமே'.

இதுவரைக்கும் நீங்க என்கிட்டசொல்லாம ரகசியமாவே வச்சு இருக்கிற விஷயம்?

எதுவுமே கிடையாது. என் மொபைல நிறையா நாள் உங்ககிட்டயே கொடுத்துவச்சிருக்கேனே... கல்லூரி நாட்கள்ல ப்ரொபோஸ் பண்ணினவங்கள்ல ஆரம்பிச்சு இப்ப மெசெஞ்சர்ல மொக்கையா வர்ற மெசேஜ் வரைக்கும் எல்லாமே உங்களுக்குத் தெரியுமே...

ரோஜா சீரியல் இன்னைக்கு ரொமான்ஸ் சீரியல்ங்கற அளவுக்குப் பெரிய பேர் வாங்கி இருக்கு. நிஜ வாழ்க்கையில ரொமான்ஸ் எப்படி?

ar

நம் வாழ்க்கையில நாம் இன்னும் காதலிச்சுட்டு தான் இருக்கோம். இப்பவும் நாம் சேர்ந்து பயணப்பட்ட வெளிநாட்டுப் பயணம், அப்பப்ப நாம சினிமா, இரவு தூக்கம் வரலேன்னா ரெண்டு மணிக்கு காபி குடிக்க போறது.. அப்புறம் எந்த முக்கியமான மீட்டிங் னாலும் பிக்அப் டிராப் கேட்கிறது... காதலர் தினம்,

சாக்லேட் தினம்னு எந்த காரணம்னு இல்லேனாலும்...

நாம் நம் நாட்களைக் கொண்டாடறதுன்னு வாழ்க்கையில நிறைய காதல் இருக்கிறதுனால...

அதெல்லாம் நான் எழுதற தொடர்கள்லயும் கொஞ்சம் கொஞ்சம் காட்டறேன்...

சரி, சீரியல் டு சினிமா என்ட்ரி எப்போ?

இப்ப சினிமாவில் இருக்கிற சூழல்ல, தமிழ்ல ரோஜா, அரண்மனை கிளி, சீரியல்கள்ல ரொம்ப பிசியா இருக்கேன். அதே மாதிரி மீடியாவ சின்னது பெரிசுன்னு பிரிச்சுப் பார்க்க முடியல. சீரியல் வெப் சீரீஸ், சினிமா எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கு.

அதே மாதிரி தெலுங்கு, தமிழ், கன்னடம்னு சீரியல்கள்ல மொழிகள் கடந்தும் பயணம் செய்ய முடியுது.

அதனால தனிப்பட்ட முறையில சினிமாவுக்குதான் வசனம், திரைக்கதை எழுதணும்ங்கிற ஆசை இல்லை. வாய்ப்பு கிடைச்சா செய்யலாம்.

நீ எழுதிய வசனத்துல ரொம்ப பிடிச்ச வசனம் எது?

அத நீங்க சொல்லணும்?

ஏதாவது நியாபகம் இருக்கா? கொஞ்சம் நீயே சொல்லேன்? .

விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர்ல "நல்லா புரிஞ்சுகிட்ட ஹஸ்பன்ட் வைப் கத்திரிகோல் மாதிரி... எதிரும் புதிருமாதான் இருப்பாங்க... ஆனா நடுவுல யார் வந்தாலும் காலி ஆகிடுவாங்க. "அந்தக் காலத்துல வெளியூர் போறவங்கள மறிச்சு வழிப்பறி செஞ்சாங்க.இப்ப அத தான் டோல்னு டீசன்ட்டா சொல்றாங்க.

அப்புறம் அரண்மனை கிளி தொடர்ல, "வாழ்க்கையில முன்னேற அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கணும் அடுத்தவன் என்ன பண்றான்னு யோசிக்கக் கூடாது.

"சரியா படிக்கலேன்னா மாடு மேய்க்கப் போகணும்னு சொல்லியே மாட்டையும் விவசாயத்தையும் அழிசுட்டாங்க'ங்கற வசனம் இந்த மாதிரி நிறையா வசனங்கள் இருக்கு.

குடும்பம், மீடியா தொழில்ன்னு ரெட்டைக் குதிரை சவாரியை சமாளிப்பது எப்படி?

வேலையில இருக்கும்போது குடும்பப் பிரச்சனை பத்தி நினைக்க மாட்டேன். வீட்டுக்குள்ள வந்தா, அப்புறம் வேலை டென்ஷன் விரக்திய யாருகிட்டயும் காட்டிக்கமாட்டேன். எல்லாத்துக்கும் மேல கணவர் கிட்ட நிறைய பகிர்ந்துக்க முடியும். அவரும் மீடியாங்கறதனால.

ரொம்ப எதிர்பார்க்காம கிடைச்ச விருது பாராட்டு?

கலர்ஸ் தொலைக்காட்சியில மீடியா துறையில "சுயசக்தி பெண்மணி 2019' விருது மறக்கவே முடியாத ஒண்ணு. திரைத்துறை ஜாம்பவான்கள் எல்லோரும் நிறைஞ்ச ஒரு சபையில அந்த விருது வாங்கினது சந்தோஷம். அப்புறம் இந்த வருடம் சிறந்த நெடுந்தொடர்க்கான சன் குடும்ப விருதுகள், விகடன் நம்பிக்கை விருது எல்லாமே நான் திரைக்கதை எழுதிகிட்டு இருக்கிற ரோஜா தொடருக்கு கிடைச்சுது .அதுவும் பெரிய சந்தோஷம்.

ஒரு பெண் வெற்றி அடையறதுக்கும் பிரபலம் அடையறதுக்கும் உள்ள வித்தியாசம்?

மலாலா, ரூபா ஐ.பிஎஸ், இவங்க எல்லாம் வெற்றி பெற்ற பெண்கள். டிக்டாக்ல அரைகுறை ஆடையில வீடியோ கொடுத்துட்டு மில்லியன் கணக்குல லைக் போய் இருக்குன்னு தனக்கு தானே பிரபலம்னு பீல் பண்ணிக்கிறது ஒரு வகை.

சீரியல்ல வர்ற மாமியார்கள் எல்லாம் படுமோசமா இருக்காங்களே. உங்க வாழ்க்கையில மாமியார்-மருமக, கெமிஸ்ட்ரி எப்படி?

மத்த சீரியல்லாம் எப்படின்னு தெரியாது. ஆனா நான் திரைக்கதை பண்ணிக்கிட்டு இருக்கிற ரோஜா தொடர்ல வர்ற மாமியார் மருமகளை அப்படி நல்லா பார்த்துப்பாங்க. "இந்த மாதிரி ஒரு மாமியார் இருக்க மாட்டாங்களா?'ன்னு ஏங்கற அளவுக்கு செம நல்லவங்க. அதேதான் என்னோட நிஜ வாழ்க்கையிலும் எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையா இருக்கிற மாமியார்.

நாம காதலிக்கும்போது புத்தகம் எழுதறதுல நிறையா ஆர்வமா இருப்பியே... இப்ப ஏன் எழுதறது இல்ல?

புரட்சியின் உச்சகட்டம், வாரணாசி, இடம்பெயர்ந்தவள், சாலிகிரமத்தில் ஜானகின்னு நாவல்கள் நாலு வெளிவந்து இருக்கு. அப்புறம் அன்புடன் தோழின்னு பெண்கள் மனநலம் பற்றிய கட்டுரை, சாஃப்ட்வேர் பெண்கள் பற்றிய கட்டுரை இப்படி நிறையா எழுதிட்டு இருந்தேன். 2018 லேர்ந்து தொலைக்காட்சி தொடர்களுக்கே நேரம் சரியா இருக்கு. இந்த வருடம் தான் ஒரு புது பயணக் கட்டுரை எழுத ஆரம்பிச்சு இருக்கேன். நாம் போன வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், அங்க உள்ள உணவுப் பழக்கங்கள், மனிதர்கள், சாகசப் பயணங்கள் இதப்பத்தி எல்லாம் தொடரா எழுதறேன். இது இல்லாம கல்லூரி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவாதங்கள்னு நிறையவே பங்கு எடுத்துக்கறேன். பெண்களும் சோஷியல் மீடியாவும் சார்ந்த நிறைய விழிப்புணர்வு விஷயங்களப் பகிர்ந்துக்கிறேன்.

சீரியல்ல வர்ற எபிசோட் மாதிரி நாம காதலிக்கும்போது மறக்க முடியாத காதல் அத்தியாயம் எது?

ஒரு நாள் நான் எங்க ஊர் திருச்சிக்குப் போறதுக் காக கோயம்பேட்ல பஸ் ஏறினேன். என்ன வழி அனுப்பறதுக்காக நீங்க வந்தீங்க ஞாபகம் இருக்கா? அப்ப ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தோம். பஸ் கிளம்ப ஆரம்பிச்சுடுச்சு. சரி நான் கிளம்புறேன்னு பஸ் ஏறி உக்காந்தா, நீங்களும் என் பக்கத்துல வந்து உக்காந்துட்டீங்க. பில்லர் வரை பேசிட்டே வந்து அங்க இறங்கிக்கிறேன்... அப்புறம் தாம்பரம்ல இறங்கிக்கிறேன்னு சொல்லிட்டே செங்கல்பட்டு, விழுப்புரம் எல்லாம் கடந்து, கடைசியா திருச்சிலதான் வந்து இறங்கினீங்க. அதுவரை பேசிட்டே வந்தோம். அப்புறம் என்னை இறக்கி விட்டுட்டு, அடுத்த பஸ் பிடிச்சு சென்னை கிளம்பினீங்க. அதை என்னால மறக்கவே முடியாது.

நாம லவ் பண்ணும்போது, நீ ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் முழுநேர எழுத்தாளர் எப்படி இருக்கு இந்த பயணம்?

வேலைய விட்டுட்டு வந்தப்ப ரொம்ப பயமா இருந்துச்சு, அக்செஞ்சர்ல சாஃப்ட்வேர் எஞ்சினியர். மாசம் லட்சக்கணக்குல சம்பளம். இன்சென்டிவ், கம்பெனி அவுட்டிங், இதெல்லாம் கிடைக்காது. மீடியா ரொம்ப மோசமா இருக்கும்னு பயமுறுத் தினாங்க. ஆனா உண்மைய சொல்லனும்னா எழுதறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மெஷினோட மட்டுமே பேசிக்கிட்டு இருக்காம மனிதர்களோட பேச சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு.

சரி... இதுவரை நீங்க கேட்டது போதும். இப்ப நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். என்று சொல்ல, அருண் தலையாட்ட பத்மா கேட்க ஆரம்பித்தார்.

எவ்வளவோ பாட்டு எழுதியிருக்கீங்க? ஆனா எனக்காக என்ன பாட்டு எழுதியிருக்கீங்க?

பெரும்பாலும் நான் காதல் பாடல்கள் எழுதும்போது, என்னளவில் அந்த வரிகள்ல நீதான் இருப்ப. டக்குன்னு ஞாபகம் வர்றதுன்னா, காளி படத்துல "நூறாய் யுகம் நூறாய்' பாட்டு சரணத்துல ஒரு வரி எழுதியிருப்பேன். அது உன்னை நினைச்சு எழுதினதுதான்.

இதயத்தின் மையப் பகுதியில்

இருக்கை விரித்து அமர்ந்தாய்

உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்

ஒருத்தி வடிவில் கொடுத்தாய்

uday010320
இதையும் படியுங்கள்
Subscribe