இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. புலர்காலைப் பொழுதில் மழை நின்றது. வானம் தெளிவானது. வெயில் அடித்தது. நீரில் மூழ்கிய வயலுக்கு மேலே வெயில் பரவியது. வயலின் வாசனை உயர்ந்தது. வெயில் பட்டதும், ஈரமான மண்ணிலிருந்து ஆவி மேலே வந்தது. வாசனை மேலே வந்தது.
தனியாகவும் கூட்டமாகவும் பிள்ளை கள் பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டிருந் தார்கள்.
பூட்டப்பட்ட மொட்டுக் குடையுடனும், நெஞ்சில் புத்தகத்துடனும் கார்த்திகா டீச்சர் வீட்டிற்கு முன்னால் கடந்து சென்று கொண்டிருந்தாள். பாட்டி கூறினாள்:
"ராஜா... உன் வேலையை சீக்கிரம் செய்யிடா.'
பல் துலக்கவேண்டும்.
தினேஷன் குளித்தான். காபி பருகினான். ஆடை மாற்றினான். சிலேட்டுடனும், காப்பி புத்தகத்துடனும் தயாரானான்.
பல் துலக்கியாகி விட்டது என்பதைக் காட்டுவதைப்போல, உள்ளங்கையிலிருந்த உமிக்கரியை ராஜன் காற்றில் பரவச்செய்தான். குளிக்கவில்லை. குளிக்க கூறியபோது, கூறினான்:
"என்னால குளிக்க முடியாது.'
"இந்தப் பையனுக்கு அறிவுன்னு சொல்றதே இல்லை.'
தாய் கூறினாள்.
தலையில் சிறிது எண்ணெய்யை எடுத்துத் தேய்த்தான். முடியை வாரினான். காபி பருக வில்லை. அவனுக்கு பழைய சோறுதான் வேண்டும். முந்தைய நாள் வைத்து மீதமிருந்த குழம்பை ஊற்றி பழைய சோற்றை வாரித் தின்றான். தினேஷன் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அதைப் பார்த்து பாட்டி கூறினாள்:
"தினேஷா... நீ சாப்பிடாததால்தான் இப்படி மெலிந்துபோய் இருக்கே!'
"நாட்கள் ஆக... ஆக... மெலிந்து போய்க்கொண்டே யிருக்கிறான்.'
ஜானகி கூறினாள்.
"மெலிந்ததால் ஒண்ணுமில்ல. உடல்நலத்துக்குக்கேடு வராமலிருந்தால் போதும்.'
தாய் கூறினாள்.
பழைய சோற்றை வாரித்தின்று வயிற்றை வீங்கச்செய்து, பலகையைவிட்டு எழுந்தான். கையைக் கழுவினான். சட்டையின் நுனியைக்கொண்டு உதட்டைத் துடைத்தான்.
புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஓட்டம்... தினேஷன் பின்னால் ஓடவில்லை. சிலேட்டையும் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு மெதுவாக படிகளில் இறங்கி நடந்தான்.
ஓடிக்கொண்டிருக்கும் ராஜனைப் பார்த்தவாறு கோபத்துடன் தாய் கூறினாள்:
"பையன் இங்கு வரட்டும்... பையனோட காலை அடிச்சு ஓடிக்கணும்.'
"ஒரு பாசம் இல்ல... தம்பின்ற எண்ணம் இல்ல.'
ஜானகி கூறினாள்.
"பிள்ளைகள் என்றால் கொஞ்சம் கவனம் இருக்கணும்.'
ராதா கூறினாள்.
"ஜானு... நீ தினேஷன்கூட போ. திருப்பம்வரை போனால் போதும்.'
ஜானகி அறைக்குள் ஓடினாள். மேல்துண்டை எடுத்து மார்பினை மறைத்தாள். படிகளில் இறங்கிய வாறு அழைத்து, கூறினாள்:
"நில்லு... தினேஷா, நானும் வர்றேன்.'
ஜானகியின்

ஜானகியின் வாசனை பின்னாலிருந்து அவனைத் தழுவியது. அவன் நின்றான்.
"தினேஷா... நீயும் ஓடியிருக்கலாம்ல?'
அவன் பேசவில்லை. அவனால் ஓடமுடியாது. நடக்கக்கூட முடியாது.
மழையின், வெயிலின் வாசனை உள்ள மண் வழியாக நடந்தான்.
"புத்தகத்தை இங்கு தா, நான் வைத்துக்கொள்கிறேன்.'
புத்தகத்தை ஜானகி வாங்கிக்கொண்டாள். இன்னொரு கையால் தினேஷனின் கையைப் பிடித்தாள்.
"எல்லா நாட்களிலும் பள்ளிக்கூடம்வரை நானும் வர்றேன்.'
"ம்...'
"ஜானூ... இந்தப் பிள்ளையையும் அங்கு அழைத்துக் கொள்.'
"வசந்தாலய'த்திலிருந்து வசந்தாவின் தாய் அழைத் துக் கூறினாள்.
வெளிவாசலைத் தள்ளித் திறந்துகொண்டு வசந்தா பாதைக்கு வந்தாள். "குட்டிக்கூரா'வின் வாசனை பாதையில் பரவியது.
"நல்ல வாசனை!'
ஜானகி கூறினாள்.
"ராஜன் எங்கே? உடல் நலமில்லையா?'
"அவன் அங்கு ஓடிப்போயிட்டான்.'
"தினேஷன் இல்லாமலா?'
"ம்...'
ஜானகி கோபத்துடன் முனகினாள்.
திருப்பத்தை அடைந்ததும், ஜானகி கூறினாள்:
"ஆட்கள் பார்க்குறாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இனி போய்க்கோங்க.'
திருப்பத்திலிருந்த கடையின் வாசலில் அமர்ந்து பீடி சுற்றிக்கொண்டிருந்த இளைஞர்கள் ஜானகியைப் பார்த்து உதடுகளை ஈரமாக்கினார்கள்.
தனியாக இருந்த கடையில் மிளகாய் எடை போட்டுக்கொண்டிருந்த கிட்டு பார்த்தான்.
"நான் போறேன்.'
ஜானகி குனிந்து தினேஷனின் தலையில் முத்தமிட்டாள்.
"சைத்தான்கள்!'
யாரிடம் என்றில்லாமல் ஜானகி கூறினாள். அவள் திரும்பி நடந்தாள். மார்பகங்களையும் தலையையும் ஆட்டிவாறு காற்றைப்போல சென்றாள்.
தினேஷனும் வசந்தாவும் செயின்ட் தெரேஸா தேவாலயத்திற்கு முன்னால் நடந்துசென்றார்கள். வசந்தா கேட்டாள்:
"பையா... உனக்கு ஜானு ஏன் முத்தம் தரணும்?'
தினேஷன் வாய் திறக்கவில்லை.
"பையா... ஜானு தினமும் உனக்கு முத்தம் தருவாளா?'
"ம்...'
"அப்படியா?'
அவளுடைய நெற்றியிலிருந்து சாந்து வாசனை உயர்ந்தது.
பாதையின் இரு பக்கங்களிலும் வாய்க்கால்கள் இருந்தன. ஆழம் குறைவான சிறிய வாய்க்காலின் வழியாக நீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மஞ்சள் நீர்.. சிவப்பு நீர்...
அபுபக்கர் மாஸ்டரின் மாளிகைக்கு அருகில், வாய்க்காலுக்குப் பக்கத்தில் ஐந்தாறு பிள்ளைகள் ஓடிக்கொண்டிருந்தார்கள். கல் எடுத்து எறிந்து கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தகத்தையும் சிலேட்டையும் ஈர மண்ணில் வைத்துவிட்டு, நீருக்கு சமமாக வேகமாக ஓடியவாறு ராஜன் கல் எடுத்து எறிந்துகொண்டிருந்தான்.
"பார்க்கலாமா? நீரில் என்ன இருக்குன்னு பார்க்கலாமா?' வசந்தா கேட்டாள்.
வாய்க்காலுக்கு அருகில் சென்றாள். கலங்கலான சிவந்த மழைநீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மலத்தின், அழுகிப்போன தாவரங்களின் வாசனை மேலே வந்துகொண்டிருந்தது. ஊரின் மொத்த அசிங்கத்தையும் ஏற்றுக்கொண்டு வாய்க்கால்கள் கிழக்கு திசையிலிருந்த வயல்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன.
வயல்களிலிருந்து மய்யழி ஆற்றுக்குள் ஓடுகிறது.
ஆற்றிலிருந்து அரபிக் கடலுக்குள் ஓடுகிறது.
ஆரவாரம் செய்துகொண்டிருந்த பிள்ளைகளுக்கு மத்தியில் வசந்தாவும் தினேஷனும் போய் நின்றார் கள். மற்ற பிள்ளைகள் கற்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ராஜன் நீரை நோக்கி பலமாக எறிந்துகொண்டிருந்தான். தலையும் நெஞ்சும் நனைந் திருக்கின்றன. முடி சிதறிக் கிடக்கிறது. இவர்கள் எப்படி இனிமேல் பள்ளிக்கூடத்திற்குச் செல்வார்கள்?
"செத்துருச்சுன்னு தோணுது.'
"சாகல, வால் அசையுது.'
"தலையைப் பார்த்து எறி... ராஜா.'
இறந்து மல்லார்ந்த நீர்பாம்பு நீருக்கு மேலே மிதந்துவந்தது.
பிறகும் கற்கள் வந்தன. எளிதல் தொடர்ந்தது. நீர்ப்பாம்பின் தலை நசுங்கியது. வால் துண்டிக்கப் பட்டது. அதற்குப் பிறகும் எறிந்தார்கள். இறந்த பாம்பின் வாசனை வாய்க்காலிலிருந்து கிளம்பிவந்தது.
"அபுபக்கர் மாஸ்டர்... ஓடுங்க...'
ஏதோ சிறுவன் கூறினான்.
அபுபக்கர் மாஸ்டர் கனமான பிரம்புடன் வந்துகொண்டிருந்தார். பிரம்பை ஆட்டியவாறு வீட்டிலிருந்து இறங்கினார். அத்தரின் வாசனையைப் பரப்பியவாறு நடந்தார்.
புத்தகங்களையும் சிலேட்டையும் எடுத்துக்கொண்டு பிள்ளைகள் மரண ஓட்டம் ஓடினார்கள்.
"ஓடு... தினேஷா.'
வசந்தா கூறினாள். அவளும் ஓடினாள். தினேஷன் ஓடவில்லை. அவனுக்கு ஓடுவதற்குத் தெரியாது.
"இங்கு என்னடா?'
"பாம்பு...'
"பாம்பா? எங்கே?'
கரையில் செத்துக் கிடந்த நீர்ப்பாம்பை சுட்டிக் காட்டினான்.
"யார்டா கொன்னது?'
"பிள்ளைகள்.'
"எந்த பிள்ளைகள்?'
"எனக்கு தெரியாது.'
"நீ எறியலையா?'
"இல்ல...'
"நாசமாப் போறவனே... காலையிலேயே பொய் சொல்றியா? பள்ளிக்கூடத்துக்கு வா... யார்னு காட்டுறேன்.'
அபுபக்கர் மாஸ்டர் அத்தர், தோல் செருப்பு, அதிரசம் ஆகியவற்றின் வாசனையைப் பரப்பியவாறு நடந்துசென்றார்.
கோழி மாமிசத்தின் வாசனையைப் பரப்பியவாறு நடந்துசென்றார்.
ஈர மண்ணின் வழியாகப் பள்ளிக்கூடத்திற்கு தினேஷன் நடந்தான்.
மேட்டிலிருந்து இறங்கியபோது பள்ளிக்கூடத்தில் மணியடிப்பது கேட்டது.
வகுப்பு ஆரம்பமாகி விட்டதா?
தினேஷன் வெளியே நின்றான். அபுபக்கர் மாஸ்டர் அதைப் பார்த்தார்.
"உள்ளே வாடா.'
உள்ளே சென்றான்.
"உட்காருடா.'
பெஞ்சில் தன்னுடைய இடத்தில் சென்று அமர்ந்தான். மிகவும் பின்னால்தான் அவன் அமர்வான். பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது, முன்னாலி ருந்த பெஞ்சில் இருந்தான்- மாஸ்டரின் மேஜைக்கு எதிரில்... வாசல் வழியாகப் பார்த்தால், ஆற்றைப் பார்க்கலாம். ஆற்றில் நங்கூரமிட்ட படகைப் பார்க்கலாம். ஆறு, கடலுக்குள் ஓடிச்சென்று கலப்பதைப் பார்க்கலாம். ஒரு நாள் வகுப்பறைக்குள் வந்தபோது, அடுத்து பின்னால் இருக்கக்கூடிய வாசு அவனுடைய இருக்கையில் அமர்ந்திருந்தான். தினேஷன் எதுவும் கூறவில்லை. வாசுவின் இருக்கையில் சென்று அமர்ந்தான். ஒருநாள் அந்த இருப்பிடமும் இல்லாமற்போனது. இறுதியில் மிகவும் பின்னால் இருக்கக்கூடிய பெஞ்சில் போய் சேர்ந்தான்.
அங்கு அமர்ந்திருந்தால், ஆறு தெரியாது... கடல் தெரியாது.
கோடைக் காலத்தில் சுவரிலிருந்து வெப்பம் வெளியேறும்.
கூரையிலிருந்து எறும்புகள் கீழ்நோக்கி இறங்கும்... மழைக் காலத்தில்.
அவனுக்கு அருகில் இருப்பவன் ஃபல்கு. மிகப்பெரிய தடிமனைக் கொண்டவன். மிகப்பெரிய சோம்பேறி... முன்கோபி... ஊர் சுற்றுபவன். துரோகி... பயங்கரமானவன்... திருடன்... முதல் நாளன்றே முதுகில் ஒரு அடி வந்து விழுந்தது. சாதாரண காரணத் திற்கு... காரணமெதுவுமே இல்லை.
சோம்பேறிகளும் திருடர்களும்தான் மிகவும் பின்னாலிருக்கக்கூடிய இருக்கையில்.... முன்னாலி ருக்கக்கூடிய பிள்ளைகள் போக்கிரித்தனங்களைச் செய்யும்போது, சோம்பேறியாக ஆகும்போது, பின்னால் போய்ச் சேர்வார்கள். பின்னாலிருக்கக் கூடிய பிள்ளைகள் மரியாதையாக நடந்துகொண்டால், படித்தால் முன்னால் வந்து சேர்வதில்லை. எனினும், தினேஷன் முன் வரிசையில் இருக்கவேண்டியவன்.
ஆஜர் அழைப்பு தொடங்கியது.
"ஸி. குட்டிகிருஷ்ணன்...'
"ப்ரஸண்ட்... சார்.'
"ஆப்ரஹாம் ஜோஸஃப்.'
"ப்ரஸண்ட் சார்.'
"கெ. ஸ்ரீநிவாஸன்...'
"ப்ரஸண்ட் சார்.'
ஆஜர் அழைப்பு முடிவடைந்ததும், பிரம்பை மேஜையின்மீது அடித்து சத்தம் உண்டாக்கினார். கவனத்தை பிரம்பை நோக்கி இழுத்தார்.
"எல்லாரும் வீட்டுப் பாடம் செய்தாச்சா?'
"செஞ்சாச்சு.'
பிள்ளைகள் குழுவாகக் கூறினார்கள்.
"செய்யாதவர்கள் யாராவது இருக்கீங்களா?'
யாரும் வாய் திறக்கவில்லை.
"செய்யாதவர்கள் எழுந்து நில்லுங்க.'
தினேஷன் எழுந்து நின்றான்.
"வேறு யாரும் இல்லையா?'
ஆப்ரஹாம் ஜோஸஃப் எழுந்து நின்றான்.
பிரம்பைச் சுழற்றியவாறு கட்டளையிட்டார்.
"இங்கே வாடா நாசமாய்ப் போறவனே!'
தினேஷன் இருப்பிடத்தைவிட்டு எழுந்து மாஸ்டரின் அருகில் சென்றான்.
"ஏன் வீட்டுப் பாடத்தைச் செய்யல?'
தலைகுனிந்து நின்றான்.
"பாம்பைக் கொல்ல முடியும். இல்லையா? படிக்க முடியல. இல்லையா? ஏன் செய்யல... தறுதலையே?'
"மறந்துட்டேன்.'
பிள்ளைகள் சிரித்தார்கள்.
பொய் அல்ல. மறந்துதான் விட்டான். நான்கு கணக்குகள் இருந்தன.
46+ 87+ 79- 5ஷ்
35 6 43 2
இரண்டு கூட்டல்களும் ஒரு கழித்தலும் ஒரு பெருக்கலும்... ஐந்து நிமிடங்கள் போதும்... ஞாபக ஆற்றல் இருந்தால்...
"கையை நீட்டுடா... இங்கே... நகர்ந்து நில்லுடா.'
மாஸ்டர் மணிக்கட்டு பொத்தானை அவிழ்த்து, சட்டையின் கையை மேல்நோக்கி உயர்த்தினார். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தார். பிரம்பை எடுத்து வளைத்துப் பார்த்தார். தயார்...
தினேஷன் நகர்ந்து நின்றான்.
தினேஷன் கையை நீட்டினான். பிரம்பு உயர்ந்தது. தாழ்ந்தது. உள்ளங்கையில் பதிந்தது. தினேஷன் முதல் முறையாக வீட்டுப் பாடம் செய்யாமல் வகுப்பிற்கு வந்திருக்கிறான். முதன்முறையாக அடி வாங்குகிறான்.
தினேஷன் அழுவதை அபுபக்கர் மாஸ்டர் பார்த்ததில்லை. பிள்ளைகள் யாரும் பார்த்ததில்லை. அதை சற்று அவர்களுக்குப் பார்க்கவேண்டும்.
அவர்கள் பார்ப்பதற்கு ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். தினேஷன் அழுவதை அவர்களுக்குப் பார்க்கவேண்டும். ரசிக்கவேண்டும்.
உள்ளங்கையில் இரண்டு அடிகள் விழுந்தன. முகத்தில் உணர்ச்சி வேறுபாடு உண்டாகவில்லை. நீட்டிய கையைப் பின்னோக்கி இழுக்கவில்லை. வீட்டுப்பாடம் செய்யாமலிருந்தால் இரண்டு அடிகள்... இரண்டு அடிகள் வாங்கியபிறகும், கண்கள் ஈரமாகக்கூட இல்லை.
அபுபக்கர் மாஸ்டர் பிரம்பை உயர்த்தினார். பலமாக அடித்தார்.
தினேஷனின் முக உணர்ச்சி மாறவில்லை.
"ஏன்டா? ஏன்டா நீ அழாமல் இருக்கே?'
வாய் திறக்கவில்லை.
"நீ அந்த அளவிற்கு ஆயிட்டியா... பன்றி?'
கண்கள் சிவந்தன. மருதாணி தேய்க்கப்பட்ட தாடி நடுங்கியது... பிரம்பு நெளிந்தது. சாட்டையைப்போல பறந்து விழுந்தது. உள்ளங்கை நீல நிறமாகி, கீறியது. ரத்தம் வந்தது.
ஆனால், கண்கள் ஈரமாகவில்லை.
அபுபக்கர் மாஸ்டரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் மேலும் கீழும் மூச்சுவிட்டார். நடுங்கினார். கோபத்துடன் கத்தினார்.
அபுபக்கர் மாஸ்டரின் பிரம்பு அவமானப்பட்டது.
அபுபக்கர் மாஸ்டர் அவமானப்பட்டார்.
மேலும் கீழும் மூச்சு விட்டவாறு வெறித்த கண்களுடன் அபுபக்கர் மாஸ்டர் தினேஷனைப் பார்த்தார். நாற்காலியைவிட்டு எழுந்தார். தினேஷனை இறுகப் பற்றினார். அவர் உரத்த குரலில் கத்தினார்:
"நாசமாய்ப் போறவனே! நீ அழ மாட்டியா? நான் யார்னு காட்டுறேன். நாயின் மகனே! நான் யார்னு காட்டுறேன்.'
வகுப்பிலிருந்த அனைத்துப் பிள்ளைகளும் பதைபதைப் படைந்தார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து அழுதார்கள்.
தினேஷன் அழவில்லை.
தினேஷனுக்கு அழுவதற்குத் தெரியவில்லை.
தெரிந்தாலும், அழப் போவதில்லை.
=