ட்சத்திரங்கள் இல்லாத இரவுவேளை. ஆகாயம் கருநீல நிறத்திற்கு மாறியது. மழைபெய்து சி-ர்த்து நீர் தேங்கியிருக்கும் பூமி... பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸி-ருந்து கௌரவ மரியாதை களுடன் இறந்த உடல் வெளியே எடுக்கப்பட்டது. இடுகாட்டிற்கு இன்னும் அரை மைல் தூரம் நடக்கவேண்டும். புதர்கள் வளர்ந்திருக்கும் இடுகாடு. மண்மேடுகளுக்கு மேலே புற்கள் வளர்ந்து மூடியிருக்கின்றன.

இடுகாட்டில் வாசனையைப் பரப்பிக்கொண்டிருக்கும் எருக்கம்பூக்கள் கண்ணில் நீர்நிறைந்த நிலையில் நின்றுகொண்டிருக்கின்றன. கண்ணீர் வழிந்து முடிந்த நீலக் கண்கள்... கவிஞரின் கடந்தகாலத்தின் அழகான வசந்தங்களைப் பார்த்த நாட்டுச் செடிகள்... அவற்றில் ஏதோவொரு செடி பூத்து உண்டாக்கிய நறுமணம் அங்கு முழுவதும் உணர்ச்சிமயத்துடன் நிறைந்து நின்றிருந்தது. நிளாநதி ஓடிக்கொண்டிருந்தது. கரையைத் தாண்டி ஓட ஆரம்பிக்கவில்லை. ஆங்காங்கே மணல் திட்டுகள்... திட்டுகளுக்கு மத்தியில் ஒவ்வொரு பிணமும் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

மகாகவி அதைத்தான் விரும்பினார் என்ற காரணத் தால், நிளா நதிக்கரையின் மணல் திட்டொன்றில் அவருடைய இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக மஞ்சத்தைச் சுமந்தவாறு ஆட்கள் காட்டு புதர்களுக்கு மத்தியி-ருந்த ஒற்றையடிப் பாதையின்வழியாக அமைதியாக வந்துகொண்டிருந்தார்கள். ஈர மண்ணில் காலடிகள் ஆழமாகப் பதிந்தன. மஞ்சத்தில் மகாகவி நன்கு நிமிர்ந்து படுத்திருந்தார்.

ஏராளமான மலர் வளையங்களால் மூடப்பட்டி ருந்த இறந்த உட-ல், இறுதி மரியாதை என்ற முறையில் ஒரு சிவப்பு வண்ணப் பட்டுத்துணி போர்த்தப்பட்டிருந்தது. இறுதி ஊர்வலம் அனந்த பத்மநாபனின் மண்ணி-ருந்து புறப்பட்டுவருகிறது. அங்கு...

Advertisment

கேரளத்தின் வடக்கு எல்லையி-ருந்த ஒரு கிராமத்தில் பிறந்த கவிஞரின் மரணம் நடை பெற்றது, தெற்கு கன்னியாகுமாரிக்கு அருகி-ருக்கும் அனந்தபத்மநாபனின் மண்ணில்... அங்கு பகவான் பள்ளிகொண்டிருக்கிறார். எழுந்திருக்க வழியில்லை. சந்தர்ப்ப சேவகர்கள் எங்கே காலை வாரிவிட்டுவிடுவார்களோ என்ற பயம் காரணமாக அவர் சாய்ந்து சரிந்து நீண்டு நிமிர்ந்து மல்லார்ந்து படுத்திருக்கிறார்.

இறுதியில் அனைத்து பாதுகாப்பு வாசல்களும் மூடப்பட்டுவிட, கவிஞரும் அந்த கடவுளின் பாதத்திற்குச் சென்று தஞ்சமடைந்தார். வயதான காலத்தில் யாரும் தன்னை கால்களை வாரிவிட்டு சிரமப்பட வைக்கக்கூடாது என்பதற்காக... சொந்த மக்களோ உறவினர்களோ நண்பர்களோ... இறுதிக் காலத்தில் கவனித்துப் பார்த்துக்கொள்வதற்கு அருகில் யாருமே இல்லை. அவர் எந்த சமயத்திலும் எதிர்பார்த்து இருந்ததுமில்லை. காரணம்- மனிதன் தனியனாகவே பிறக்கிறான். இறப்பதும் தனியனாகத் தான்.

இதற்கிடையே இன்னொரு ஆன்மாவுக்கு நிரந்தரமான இடமில்லை. அனைத்துமே மேற்பூச்சுகள் தான். ஒருவகையில் கூறுவதாக இருந்தால் வஞ்சனை. உண்மையான நண்பனாக ஒருவனுக்கு இந்த உலகத்தில் சொந்தமென இருப்பது மனசாட்சிதான். அந்த மனசாட்சியை விற்று சாப்பிடுபவன்தான்... கவிஞர் பல முறை தன்னைத்தானே சாபமிட்டிருக்கி றார். இந்த உலகத்திலுள்ள எல்லாருமே ஒரு கணக் கில் அவருடைய நண்பர்களாக இருந்தார்கள். யாரையுமே நம்பாத அவர் அனைவர்மீதும் அன்பு வைத்திருந்தார். பணக்காரனையும் ஏழையையும் ஒரேமாதிரி வணங்கினார்.

Advertisment

எழுபத்திரண்டு வருடங்கள் பலவகைப்பட்ட வாழ்க்கைப் பாதைகளில் போராட்டத்துடன் அவர் செயல்பட்டார். சமாதானப்படுத்திக்கொண்டார். மொத்தத்தில் வாழ்க்கையில் அறிந்திருக்கக்கூடிய ஒரே தொழில் கவிதை எழுதுவதுதான் என்று, பதினேழு வயது கொண்டவளான... எப்போதும் கன்னியாகவே இருக்கக் கூடியவளுக்காக அனைத் தையும் சமர்ப்பணம் செய்தார். இந்த முழு பிரபஞ்சமே அவளுக்குள் நிறைந்திருக்கிறது. அவள் இல்லாத இந்த பிரபஞ்சம் பயனற்ற பாலைவனம்.... சுடுகாடு... அந்த சுடுகாட்டை சொர்க்கமாக மாற்றக் கூடிய நித்தியகன்னியின் கால் சிலம்போசையைக் கேட்டவாறு அவர் அனைத்தையும் மறந்து ஆனந்த மாகப் பாடினார். எழுதினார். சோர்வடையாமல்.

அவள்! அவளை ஒரு நிமிடம்கூட அவரால் பிரிந்திருக்க முடியவில்லை. அவள் அவரின் நட்பி-ருந்து விலகிச்சென்ற காலங்களிலெல்லாம் கையற்ற நிலையில் தேடியலைந்தார்- தன்னைத்தானே ப-கொடுப்பதற்குத் தயாராகிக் கொண்டு...

வயல்வெளிகளிலும் மாமரத் தோப்புகளிலும் நீல ஆகாயத்திலும் நிலவு வெளிச்சத்திலும் ஆற்றிலும் கட-லும் அவளைத் தேடிக்கொண்டு நடந்தார். எல்லா இடங்களிலும் தன்னுடைய அழகு தேவதையின் மயிலாட்டத்தைப் பார்ப்பதற்கு அவருடைய மனம் வேட்கையுடன் அலைந்துகொண்டிருந்தது.

கவிஞர், காதலர், பைத்தியம் பிடித்தவர்- இந்த மூன்று சக்திகளும் ஒன்றுசேர்ந்து அவருடைய கவிதை ஊற்றினை ஆக்கிரமித்தன. பார்க்கும் அனைத்திலும் கவிதை... கேட்பதிலும் கவிதை... உணவிலும் உறக் கத்திலும் உணர்விலும்... அனைத்திலும் அவளுடைய ஆழமான அழகின் மகத்துவம் அவருடைய மனதின் உள்ளறைகளில் மாம்பூவின் நறுமணத்தைப்போல நிறைந்து நின்றிருந்தது. இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் முடுக்கிலும் அவளைத் தேடி அவர் தனி வழிப்போக்கனாக சுற்றித் திரிந்தார்.

ஒவ்வொரு பிரதேசத்தின் பூமியியலை அவர் கேட்டு அறிந்துகொண்டார். அங்கிருக்கும் மண்ணின் வரலாறுகளான முத்துகளை எடுத்து அவர் கூர்மையாக சோதித்துப் பார்த்தார். புனிதமான கேரள மண்ணின் வரலாற்றை நினைத்து அவர் உணர்ச்சி வசப்பட்டார். கவிதை! கவிதை மட்டும்! அவருக்கு சொந்தமெனக் கூற வேறென்ன இருக்கிறது?

அவருக்கு எல்லாரும் இருந்தார்கள். தாய்- தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, பிள்ளைகள்... யார்மீதும் அவர் வேண்டிய அளவுக்கு நம்பிக்கை வைக்கவில்லை. தந்தையிடமிருந்து சிறுவனாக இருந்த காலத்திலேயே விலகிவிட்டார். தாயுடன் அதிக நெருக்கத்துடன் இருந்தார். ஆனால், அந்தத் தாயின் அருகிலும் மகன் தங்கிநிற்கவில்லை. சுற்றித் திரிந்தார். கவிதைக்காரனான மகனுக்கு கவிதை மட்டுமல்ல... காத-களும் உடன்வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதை தந்தை புரிந்துகொண்டார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட காத-கள், மனைவிகள். செல்லுமிடங்களில் பறித்து எறியமுடியாத... பறித்து விலக்கமுடியாத உறவுகள்.

பிரிவால் உண்டான வேதனை காரணமாக மனிதனுக்குள் இருக்கும் கவிஞனின் இதயம் கவலைப்பட்டு அழுதது. இதயம் வெடிக்கக்கூடிய அளவுக்கு அந்த உரத்த... பரிதாபத்திற்குரிய துயரங்கள் வெளிப்படும் தேம்பல்களை கவிதையில் ஆழமாக ஊன்றி நிறைத்து, அந்த மூட்டையுடன் ஊரைச் சுற்றிவந்துகொண்டிருந்தார்.

குருவின் சாபத்தை வாங்கிய சீடனுக்கு நல்ல கதியே உண்டாகாது என்பதைப் புரிந்துகொண்டதும், அந்த சாபத்தைத் தீர்ப்பதற்காக உண்மையான குருநாதரைத் தேடியலைந்தார். விருப்பத்திற்குரிய தெய்வத்தைக் காணவேண்டுமென்ற அளவற்ற ஆசையுடன், இருபதாவது நூற்றாண்டின் இந்த நிலையற்ற மனம்படைத்த வில்யமங்கள துறவி,‌ அழகை ஆராதிப்பவராக கேரள மண்ணில் மீண்டும் காலம் தவறிப் பிறந்தார்.

தேடாத ஆலயங்கள் இருக்கும், வனப் பகுதிகள் பார்க்காத பூஜை செய்யப்படும் சிலைகள் இல்லை யென்ற நிலையில், எந்த இடத்திலும் கீழே விழுந்து வணங்குவது, கால் பற்றி தவறை ஒப்புக்கொள்வது ஆகியவை நடந்தன.

சொந்த மண்ணி-ருந்து பறித்து நடப்பட்ட இந்த நாட்டுப் பொன் செண்பகம் பல்வேறு இடங்களில் வளர ஆசைப்பட்டது. இரவில் தூங்கச் செல்லும் வீடுகள் பலவற்றிலும், வீட்டின் தலைவராக ஆகக்கூடிய சூழல் உண்டானாலும், வெளியேற்றப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றன.

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவர்கள் யாருடைய சம்மதத்தையும் எதிர்பார்க் காமலே வெளியேறி வந்தார். வேர் ஓடுவதற்கு முன்பே நுனி கருகக்கூடிய செயல் இயல்பாகவே நடைபெற்றது. கதி கிடைக்காத பிரேதத்தைப்போல அலைந்து அலைந்து ஒருநாள் குட்டி கார்வண்ணன் விளையாடும் பொன்னம்பல மேட்டிற்கு வந்துசேர்ந்தார். அங்கு தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தை இந்த வில்வ மங்கள துறவி கண்டடைந்தார். ஏராளமான காவிய சுலோகங்களைக்கொண்ட பொன் செண்பக மாலையை அணிவித்தார். தானே பக்திப் பெருக்குடன் படைத்து உண்டாக்கிய திருமுடி மாலை! முப்புரி இழையில் தெச்சி, மந்திரம், பிச்சி, துளசி, ரோஜா மலர், நீலத் தாமரை, வெள்ளைத் தாமரை...

எத்தனையெத்தனை மாலைகளை கவிஞர் தன் சொந்த கைகளைக் கொண்டு தன் விருப்ப தேவனுக்கு அணிவித்திருக்கிறார்!

தாமரை மலர் போதவில்லையென்ற நிலை உண்டாகும்போது, ஆன்மாவி-ருந்து ஊற்றெடுத்து வந்த தாமரைத் தேனை நிவேதனமாக அளித்தார்.

இறுதியில் தாமரைத் தோணியில் ஏறி அமிர்த பூமி முழுவதிலும் பயணித்தார். பலவற்றையும் பார்த்துப் புரிந்துகொண்டு, தன்னை நோக்கித் திரும்பக்கூடிய முயற்சியில் பல திசைகளிலும் கால் தடுமாறி விழுந்தார். நிலையற்ற கொடுமையான நீர்நிலைகளில் தலை மோத, கைகளையும் கால்களையும் கொண்டு நெளிந்தார். என்ன கிடைத்தாலும் போதுமென்ற நிலை உண்டாகவில்லை. ஓட்டை கை உள்ளவர்... திறமையை வீணடித்துக்கொண்டிருப்பவர்... ஊதாரி... சிறிதும் கையில் வைத்துக்கொள்ளாமல் ஊதாரித்தனமாக செலவிட்டதால் வறுமையில் சிக்கிய மனிதரா னார். ஒழுங்கற்றவரானார். மதிப்பற்றவரானார். பைத்தியம் பிடித்தவரைப்போல அலைந்து திரிந்தார். நாடு முழுவதும் அறிந்திருக்கும் மகாகவி. ஆனால், ஒரு கட்டு பீடி வாங்குவதற்கோ, ஒருபொழுது வயிறு நிறைய சாப்பிடுவதற்கோ, எப்போதும் வெண்ணிற ஆடை அணிவதற்கோ கையில் காசில்லாத மகாகவி... எதற்கு அதிகமாகக் கூறவேண்டும்? தலையைச் சாய்ப்பதற்கு சொந்தமாக ஒரு இடமில்லை. இந்த மகாகவிக்கு என்ன ஆனது? இவரை எப்படி காப்பாற்றமுடியும்? மிகவும் நெருக்கமான அந்தரங்க சீடர் அருகில் நின்றுகொண்டு யோசித்தார். சொந்த மனைவியையும் பிள்ளைகளையும்கூட வேண்டாம்... தாயைக்கூட நம்பாத மகாகவியா வேறு யாரையாவது நம்பப் போகிறார்?

தன்னுடைய ஊரின் மதிப்புமிக்க செல்வங்கள் அனைத்தும் இல்லாமல்போனது குறித்து அவர் கவலைப்பட்டார். மனம் வருந்தினார். இழந்துவிட்ட வசந்த காலங்கள்....

கிராமத்தின் அழகான காட்சிகள். புள்ளுவப் பாட்டின் ராகத்தில் கண்விழிக்கும் கர்க்கடக மாதத்தின் புலர்காலைப் பொழுது... ஓணக்கால மாலை வேளைகள்... வைசாக பவுர்ணமி... விவசாயியின் புஞ்சை வயல் எல்லையி-ருக்கும் தேக்குமரங்கள்... மெ-ந்த காளைகள்.... இடிந்து விழுந்த நிலையி-ருக்கும் கோவில்கள்.... தலைவெட்டப்பட்ட கோவில் பகுதியி-ருக்கும் பெரிய ஆல மரங்கள்... அழிந்துகொண்டிருக்கும் வழி நிழல்கள்...

நகரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் திறமையைப் பதித்த கிராமத்து மேடை... பிரகாசமான சிங்க மாதத்தின் பூக்கள் நிறைந்த வரவு...

பொன்னோணம்... கன்னி மாதம்... நிலத்தி-லிருக்கும் காவில் எலுமிச்சம் பழத்தையும் பாலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாக தெய்வங்கள்... மேட மாதத்தில் பொன்னில் கிங்கிணி கட்டிய விஷு.... தன்ய மாதத்தில் பூத்திருவாதிரை... மண்டல காலத்தில் விரதமிருந்த அருமையான புலர்காலைப் பொழுதுகள்...

அனைத்தையும் கண்டு, எல்லாவற்றையும் நினைத்து உணர்ச்சிவசப்பட்டுப் பாடி, விழிக்கச் செய்தார். சிறிய படகுகளில் அக்கரைக்கு துடுப்பு போட்டுச் செல்லும், சந்தை முடிந்து பிரிந்து செல்லும் விவசாயம் செய்யும் இளம்பெண்களைப் பார்த்து நெடும் பெருமூச்சை விட்டார்.

dd

தென்னையும் பலாவும் பனையும் பாக்கும் நிறைந்த கிராமத்துப் பூங்காவனங்களில் ஞானியைப்போல கண்களை மூடி அமர்ந்திருந்தார்.

நதிக்கரைகளில் நீரோட்டத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டு மந்திரத்தைக் கூறினார். நிளாவின், பம்பாவின், பெரியாறின், நேத்ராவதியின், கோதாவரியின், கிருஷ்ணாவின் கரைகளில் வளரும் நூறாயிரம் பெண் பூக்கள் கண்விழிக்கும் மர வரிசையின், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும், அழகின் மயக்கும் சக்திபடைத்த தாள மேளங்களைத் தனக்குள் கொண்டுவந்தார்.

அனைத்தும் முடிந்துவிட்டன. கவிஞரின் இறுதிச் சடங்குகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இடுகாட்டிற்கு சிந்தனைகள் மீண்டும் வட்டமிட்டுப் பறந்தன. மழைக் காலத்தில் பெய்து நனைந்து ஈரமான தனிமையான இரவு வேளை... இப்போது ஆகாயத்தின் கருப்புநிறம் விலகிச் சென்றுவிட்டது. வானம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து வந்துகொண்டிருக்கிறது. வயதான தவளைகள் அழுது ஆரவாரத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

விட்டில் பூச்சிகள் தாங்கமுடியாத துக்கத்தை வெளிக்காட்டும் வகையில் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. கதி கிடைக்காத ஆன்மாக்கள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. அங்கு எழுந்து நிற்கும் அந்த ஒவ்வொரு மண் மேட்டிலும் ஒவ்வொரு பிணங்களும் கிடந்து அழுகிக் கொண்டிருக்கின்றன. தங்களின் அன்பிற்கு உரியவர்களை முழுமையாக இழந்துவிட்டு, இங்கமர்ந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்கின்றனர். கை, கால்கள் வெளியே நீட்டப்பட்ட நிலையிலிருக்கும் மண் மேடுகளிலொன்றில் கால் வைக்க, கால் சிதறித் தெறித்தது. தாங்கமுடியாத ஒரு தேம்பல் எழுவதைப் போல... மிதித்தது ஒரு மனிதனின் நெஞ்சில்.... பெண்ணோ ஆணோ கிழவரோ குழந்தையோ... தெரியவில்லை.

பற்களை இளித்தவாறு கிடக்கும் மண்டை ஓடுகள்... சிதறிய எலும்புகள்... சாம்பல் நிறம் கலந்த சிறிய சிறிய மரத் துண்டுகள்... தகர்ந்து நொறுங்கிய தூள்கள்... பாதி எரிந்து கரிந்த பிணத்தின் மூட்டுகள்...

அனைத்தும் வாழ்க்கையின் அனாதை நிலைமை யையும் நிச்சயமற்ற தன்மையையும் அர்த்தமற்ற போக்கையும் உரத்து அறிவித்தன.

மலையாள மண்ணில் தனி கேரள அழகினைக் கொண்ட கவிதையை நிலவொளி பரப்ப... "கந்தர்வா... உங்களை நாங்கள் இந்த மண்ணில் இறுதியாக அடக்கம் செய்வதற்காக வந்து நின்றுகொண்டிருக்கிறோம். நீங்கள் இப்போதுதான் கண்விழித்துப் பார்க்கவேண்டும்- முடியுமானால். முடியவில்லையெனும் பட்சம், கண்களை மூடிப் படுத்துக்கொள்ளுங்கள்- எதுவுமே தெரியாது என்பதைப்போல. பொதுவாகவே எப்போதும்போல எங்களில் பலரும் அவசர வேலைகள் உள்ளவர்கள் என்ற விஷயம் தெரியுமல்லவா? சீக்கிரம் இங்கிருந்து இதைச் சற்று முடித்துவிட்டு ஓடிப் போய்விட வேண்டும் என்ற விருப்பம்தான் எங்களில் பலரிடமும் இருக்கிறது.பத்திரிகை செய்தியாளர்களும் புகைப் படக் கலைஞர்களும் ஆகாசவாணியின் சிறப்பு செய்தியாளரும் கிளம்பிச் சென்று எவ்வளவோ நேரமாகிவிட்டது. இனி இங்கு நாங்கள் நின்று கொண்டிருப்பதில் என்ன பயனிருக்கிறது?' அவர்களெல்லாம் சென்றுவிட்ட நிலையில், இனி தொடர்ந்து நடக்கவிருக்கும் நிகழ்வில் பங்கெடுத் தாலும், இல்லாவிட்டாலும்... யாரும் அறிந்துகொள்ளப் போவதில்லை. எங்களுக்கு விளம்பரம் வேண்டும்.

காலத்திற்கேற்ற விளம்பரத்தால்தான் எங்களில் பலரும் கஷ்டப்பட்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பாதுகாப்புப் படையுடன் வந்த கார்கள் சில நிமிடங்களில் திரும்பிச் சென்றுவிடும்.

ஆணையைப் பின்பற்றியவர்களின் காரில் ஏறித்தான் நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுடைய சடங்குகள் முடிந்துவிட்டன. நாங்கள் திரும்பிச் செல்லப் போகிறோம். இனி இங்கு கூடியிருப்பவர்களின் பொறுப்புதான் மீதி காரியங்கள். சிறப்பு செய்தியாளர் விடைபெற்றார்.

"மகாகவிக்கு சொந்தபந்தமென யார் இருக்கிறார்கள்?''

இறுதியில் தன் அலுவலகத்திற்குப் பறந்து செல்வதற்குத் தயாராக இருக்கும் அந்த பகுதியின் செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

"அவருக்கு எல்லாரும் இருக்கிறார்கள்.'' தகவல் கூறக் கூடிய அவர் பதில் கூறினார்.

"பொதுவாகக் கூறினால், போதாது. அனைத்தும் தெளிவாக இருக்கவேண்டும். பின்னால் பிரச்சினை வந்துவிடக் கூடாது.''

"அவருடைய வாழ்க்கையே பிரச்சினைகள் நிறைந்ததுதான். அதன்காரணமாக ஒவ்வொரு சம்பவங்களுமே தலைகீழாகவும் தாறுமாறாகவும்தான் இருக்கும்."

"தாறுமாறான வாழ்க்கையையா நடத்தினார்?

பொய் சொல்லாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.''

"ஆமாம். தாறுமாறான வாழ்க்கை... நோக்கமோ பற்றோ இல்லாத வாழ்க்கை... பதில் கண்டுபிடிக்க முடியாத கேள்விக் குறி... நெருங்கும்போது விலகுவதும், விலகும்போது நெருங்குவதுமாக இருக்கக்கூடிய புதிரான மனிதர். அனைவர்மீதும் அன்புசெலுத்திய தனியனான காதலர். இந்த மண்ணின் வீர வரலாறுகளையும் அழிவற்ற... வினோத அழகுளையும் பாடி உணர்த்திய... இந்த கால கட்டத்தின் மிகப்பெரிய ஞானிகளில் ஒருவர்.''

"போதும்... விரிவுரையாளரே! அதை எழுதித் தயார் செய்வதில் எனக்குப் பிரச்சினை இருக்கிறது. உரத்த குர-ல் ஒவ்வொரு சொல்லாக சொல்லுங்கள்." "நான் கூறுவதை எழுதியெடுப்பது மட்டும்தான் உங்களுடைய தொழிலா?''

"நேரமில்லை. நாளைய பத்திரிகையில் வருவதற்கு வாய்ப்பில்லை. நாளை மறுநாள் வரக்கூடிய பத்திரிகை யிலாவது முழுமையான வாழ்க்கை வரலாறு வரவேண்டும். அதற்கான தகவல்களைத்தான் உங்களிடமிருந்து சேகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உதவவேண்டும்.''

"உங்களுடைய பத்திரிகைக்கு மூன்று சிறப்பு இணைப்பிதழ்கள் கொண்டுவர வேண்டியதிருக் கும். அவருடைய வாழ்க்கை வரலாற்றின் முக்கிலும் மூலையிலும் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டுமெனில்...''

"எங்களுக்கு அந்த நோக்கமில்லை. ஒரேயொரு இதழ். அதற்குவேண்டிதான் இந்த ஆட்களின் கூட்டத்தில் உங்களைத் தேடிப் பிடித்தேன்.''

"அன்பிற்குரிய நண்பரே... உங்களுக்கு நன்றி. ஆனால் நான் அவரை முழுமையாகப் பார்த்ததில்லை. குருடர்கள் பார்க்கச் சென்ற யானையின் உருவத்தைப் போல அது ஆகிவிடும். அதனால், என்னை இந்த பொறுப்பிலிருந்து நீக்கிவிடுங்கள். உண்மையற்ற ஒரு விமர்சனம் வந்துவிட்டால், பிறகு... என் பிறவியின் அர்த்தமே பயனற்றதாகிவிடும். தயவுசெய்து அந்த அதிக உயரத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும், மெலி-ந்த மனிதரிடம் கேளுங்கள். இல்லாவிட்டால்... அந்த புகழ்பெற்ற தலைவரிடமோ... எனக்கு எதுவுமே தெரியாது. நான் இந்தச் சூழலி-ல் மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன்.''

"இல்லை... உங்களை விடுவதற்கு வழியில்லை. அவருடன் ஒரே அறையில் நீண்டகாலம் சேர்ந்து வாழ்ந்தவர் நீங்கள்தான். இது என்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்கான பிரச்சினை. மிகவும் குறுகிய நேரத்தில் அருமையாக விஷயத்தைக் கொண்டுவருபவன்தான் நல்ல பத்திரிகையாளன். உதவ வேண்டும். ஏதாவது தருகிறேன். நகரத்திற்குச் சென்று நாம் ஏதாவது பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்து மது அருந்துவோம்.''

அது ஒரு சந்தர்ப்பம். நல்ல நேர்காணலாக இருக்கவேண்டுமென்ற ஆசை எனக்கு இருந்தது. கண்கள் கலங்கி சிவந்த நண்பரான அந்த பகுதியின் செய்தியாளர் நீண்டகாலமாக இருக்கக்கூடிய நட்புணர்வுடன் தோளில் கையை வைத்தார். கன்னத் தில் கன்னம் உரசியது.

"நான் கூறுகிறேன். தேவையானவற்றை எழுதி எடுத்துக்கொள்ளுங்கள். அதிக நேரம் உட்காரவைத்து என்னை தொல்லைப்படுத்தக் கூடாது. நாம் அந்த ஆளரவமற்றிருக்கும் ஆலமரத்திற்குக் கீழே சென்று அமர்வோம். வாருங்கள். அங்குதான் விசாலமான நல்ல இடம் இருக்கிறது. கா-லியாகக் கிடக்கும் ஒரு மூலை. அதோ... அங்கு ஒரு கருங்கல் திண்டு இருக்கிறது. அதில் சென்று நாம் இருவரும் அமர்வோம்.''

"அது ஒரு கல் திண்டா? அல்லது பிணத்தை இறக்கிவைக்கக்கூடிய கல்லா? அங்கு பிரேதங்கள் இருக்கும். ஆட்களின் நடமாட்டமுமில்லை. நான் அதிகமாக பயப்படக்கூடிய மனிதன்.''

பத்திரிகை செய்தியாளர் அங்குபோய் அமர்வதி-ருந்து தப்பிப்பதற்கு முயன்றார்.

"இன்று உயிருடனிருக்கும் நாம் நாளைய ஆவிகள்... இறந்தவர்களின் ஆவிகள்... பொதுவாக துன்பம் தருவதில்லை. உயிருடன் இருப்பவனின் ஆவி விஷயத்தில்தான் கவனமாக இருக்கவேண்டும். நாம் அங்கேயே போய் உட்காருவோம். சிறிதும் பயப்பட வேண்டியதில்லை. அதுதான் நல்ல வசதியான இடமும்கூட...''

"சரி... அப்படியே இருக்கட்டும்.''

அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெரிய ஆலமரத்திற்குக்கீழே நான்கு ஆட்கள் அமரக்கூடிய அளவிற்கு அகலமாக இருந்த கருங்கல் திண்டில் போய் அமர்ந்தார்கள். அங்கு அமர்ந்தால் எல்லா விஷயங்களையும் மிகவும் தெளிவாகப் பார்க்கமுடியும். பெட்ரோமாக்ஸ் விளக்குகள் அங்குமிங்குமாக நகர்ந்து நடந்துகொண்டிருந்தன.

"இனி என்ன சடங்குகள்..?''

"இனி உள்ள சடங்குகள் ரத்த உறவில் இருப்பவர்கள் செய்துமுடிக்க வேண்டியவை. பெரும்பாலும் ஆண்மக்கள். மூத்த மகன்தான் இதற்கான உரிமை கொண்டவன். அவன் சற்று தூரத்தி-ருக்கும் ஆற்றுநீரில் குளிக்கச் சென்றிருக்கிறான்.''

"அவருக்கு இவற்றையெல்லாம் முறைப்படி செய்துமுடிப்பதற்கேற்ற ஆண்மக்கள்... பிள்ளைகள் இருக்கிறார்களா?''

"இருக்கிறான். ஒரேயொரு மகன். பிரபா... எம்.ஏ. படித்தவன்.''

"இந்த மகன் இதுவரை எங்கிருந்தான்?''

"இந்த பூமியில்தான் இருந்தான். நம்முடைய சிறிய கேரளத்தில்...''

"அப்படியென்றால்... அந்த மகன் அவரை வயதான காலத்தில் வேண்டிய விதத்தில் பார்த்துக் கொண்டானா?''

"முற்றிலும் பொருத்தமற்ற கேள்வி....''

"காரணம்..?''

"அந்த தந்தையின் குணம் அப்படியிருந்தது. தன்னுடன் வந்து வசிக்குமாறு மகன் அழைத்தபோது, வயிற்றுப் பிழைப்பிற்காக தான் யாருக்கும் அடிமையாக வாழவிரும்பவில்லை என்பதுதான் அதற்குக் கூறிய காரணம்.''

"ஒரு மகன் தந்தையின் பாதுகாப்பின்கீழ் இருப்பதும், மகனுடைய கவனிப்பில் தந்தை இருப்பதும் அடிமைத்தனமா?''

"அவரைப்போன்று இருக்கக்கூடிய ஒரு அசாதாரண மனிதருக்கு அதுவும் அடிமைத்தனமாகத் தோன்றியிருக்கும்.''

"அது சரியா?''

"சரிக்கும் தவறுக்கும் இங்கு இடமே இல்லை. மன ஓட்டங்களுக்குத்தான் இங்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவர் அப்படிப்பட்ட மனிதராக இருந்தார் என்றுதான் வரலாறு எழுதுபவனால் கூறமுடியும். ஒருவேளை இந்த கசப்பான வாழ்க்கை அவருக்குக் கற்றுத்தந்த விஷயமும் அதுவாக இருக்கலாம். அவருடைய குருநாதரான களியச்சன் மிகப்பெரிய ஒரு திறமைசா-யாக இருந்தார்.

அந்த களியச்சனின் விருப்பத்திற்கேற்ப செயல்படும் ஒரு வேடதார் மட்டுமே தான் என பலமுறை அவர் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார். தான் ஆடக்கூடிய வேடங்கள் எதுவுமே தனக்குச் சொந்தமானவை அல்ல என்றும், வேறு ஏதோ கண்களுக்குத் தெரியாத சக்தியின் கைகளில் கிடந்து ஆடும் பொம்மையே தான் எனவும் வெளிப்படையாகக் கூறிய அவரைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை.

அதனால் அவர் தன்னுடைய மன பலத்தால் மட்டுமே வாழ்ந்தார். மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் சீடர்களுக்கும் அவர் யார் என்பதை இதுவரை வேண்டிய அளவிற்குப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.''

அவர் விளக்கிக் கூறினார்.

"என் முதல் கேள்வியை நீங்கள் மறந்து விட்டீர்களென்று நினைக்கிறேன். அவருக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்?''

"அவருக்கு ஒரேயொரு மனைவிதான் இருந்தார். பிறகு... பலரும் இருக்கிறார்கள்... காந்தர்வத்தில்...''

"மேலும் விளக்கமாக...''

"வழியில்லை. உயிருடன் இருக்கும் உறவினர் களுக்கு வழக்கு தொடுக்க இடம்கொடுக்கக்கூடாது.''

"வேண்டாம்... கேட்கவில்லை...''

"அவர் இதுவரை எத்தனை நூல்களை எழுதியிருக்கிறார்?''

"தான் எத்தனை நூல்கள் எழுதியிருக்கிறோம் என்று அவராலேயே கூறமுடியாது. அப்படி இருக்கும் போது நான் என்ன சொல்வது?'' அவர் கையை விரித்தார்.

"ஒரு... நூறு நூல்களாவது இருக்குமா?'' பத்திரிகை செய்தியாளர் ஆர்வத்துடன் கேட்டார்.

"நூறல்ல... நூற்றுக்கும் மேலே இருக்கும். அவற்றில் பலவும் பல பெயர்களில் நிறைய தெரிந்த... தெரியாத பதிப்பாளர்களின் பதிப்பகங்கள்மூலம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக பிரசுரமாகி வந்திருக்கின்றன. ஒரே கவிதையே பல பெயர்களில் வெளிவந்த செயலும் நடந்திருப்பதைப் பார்க்கலாம்.''

"ஏதாவதொரு நல்ல நூ-லின் பெயரைக் கூறமுடியுமா?''

"அறிவாளியான ஒரு பத்திரிகையாளர் கேட்கக் கூடிய ஒரு கேள்வியல்ல இது. இதை ஒரு ஏ.ஈ.ஓ. கேட்டால், என்னால் புரிந்துகொள்ளமுடியும்.''

"நேரமில்லை... சோதிக்காதீர்கள். சொல்லுங்கள்...''

"கவிஞர் இப்போதுவரை வாழ்க்கையில் நடந்துசென்ற பாதைகளில் பதித்த கால் தடங்கள் இருக்கின்றன. கவிஞரின் கால் தடங்கள்! பாரதத்தில் இன்றுவரை ஒரு இலக்கியவாதியும் மனம்திறந்து கூறுவதற்குத் துணியாத பலவும் அந்த பெரிய நூலி-ல் இருக்கின்றன. உலகத்திலேயே சுயகதை பாணியில் அமைந்த தனித்துவத் தன்மைகொண்ட கவிதைகளுள்ள மகாகாவியம்! அதன் ஒவ்வொரு பக்கமும் துடிப்பு நிறைந்தது. அடியி-லிருந்து முடிவரை அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி... தனிக் கவிதை!

ஆனால், அது கவிதையல்ல. சுத்தமான உரைநடையும்கூட. மகாகவி யாரென்பதைப் புரிந்துகொள்வதற்கு குறைந்தபட்சம் அந்த நூலை யாவது நீங்கள் வாசித்து தெரிந்துகொள்ளவேண்டும். அவருடைய கவிதைகளை வாசித்து, அவை ஒவ்வொன்றிலும் இருக்கக்கூடிய உள்ளர்த்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நானும் நீங்களும் மிகவும் அதிகமாக வாசிப்பதில் இறங்க வேண்டும். நாம் ஒருவகையான மர மண்டையர்கள். சிறிதளவில்கூட உடனடியாக அப்படி உள்ளுக்குள் நுழைந்து செல்லக்கூடிய அளவிற்குள்ள மூளையல்ல கடவுள் நமக்குத் தந்திருப்பது...''

"அதோ... சிதையில் எடுத்து வைக்கிறார்கள். அந்த பிண மஞ்சத்தி-ருந்து எடுத்துப் படுக்கவைப்பதைச் செய்வதற்காக சில ஆட்கள் அருகிலேயே நின்றிருக்கி றார்களே! அவர்களெல்லாம் யார்?''

"அவர்கள் அனைவரும் அந்தந்த துறைகளில் இத்தனை வருடங்களில் சம்பாதித்த உண்மையான நண்பர்களாக இருக்கலாம். சொந்த ஊரின் முக்கிய மனிதர்கள். அந்த கூட்டத்தில் உலகப்புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஒருவகையான பலவீனம் கொண்ட பெரும் வீரர்கள்! இப்படிப்பட்ட நிகழ்வுகளில்தான் அவர்கள் தடுமாறி விழுவார்கள்.''

"நீங்கள் ஒரு ஸினிக்... அலர்ஜெட்டிக்.''

"ஆங்கிலம் தெரியாது. மலையாளத்தில் சொல்லுங்கள். சொந்த தாய்ப் பாலி-ன் மொழியில்...''

"உலகம் முழுவதையுமே நீங்கள் விமர்சன புத்தியுடன் பார்க்கிறீர்கள். தனி மனிதர்களின் மகத்துவத்தில் நம்பிக்கையற்ற பேச்சுமுறை... மகாகவிமீது ஆத்மார்த்தமான அன்பு வைத்திருப்பவர் நீங்கள் மட்டும்தான் என்பதை வ-லிய வெளிப்படுத்தக்கூடிய முயற்சி... ஒருவகையான மேனியா!"

"ஸினிக்! அலர்ஜெட்டிக்! மேனியா!'' அவர் ஒரு நகைச்சுவை நடிகரைப்போல சிரித்தார்.

"வாதம் செய்யவேண்டியதில்லை. நாம் அங்கு செல்வோம். அந்தச் சிதை எரிந்து முடிவதற்கு முன்னால்...''

"சிதை எரிந்து முடிப்பதுவரை நான் இருக்கமாட்டேன். நான் புறப்படுகிறேன். இவ்வளவு தகவல்களைத் தந்ததற்கு நன்றி. குட் நைட்...''

பத்திரிகையாளர் விடைபெற்றுக்கொண்டு இறுதியாக இருந்த காரில் ஏறி இடத்தைக் கா-லிசெய்தார்.

சிதை பற்றி எரிந்தது. இப்போது ஆகாயத்தில் மழை மேகங்கள் இல்லை. அவையனைத்தும் எங்கோ போய் மறைந்துவிட்டன. வானம் தெளிவாக இருந்தது. பூரணசந்திரன் உதயமாகி மேல்நோக்கி உயர்ந்துவந்துகொண்டிருந்தது.

நிலவு வெளிச்சம் சுற்றிலும் பரவியது. எனினும், ஒரேயொரு நட்சத்திரம்கூட கண் விழிக்கவில்லை. ஆகாயத்தின் வெகுதூரத்தில் எங்கோவொரு கொன்றை மரம் பூத்து நிற்பதைப்போல தோன்றியது. தங்க மாலைகள் அணிந்திருக்கும் சொர்க்க சுந்தரியைப் போன்ற கொன்றை மரம்!

நிறைய நெருப்பின் நிறத்தி-ருக்கும் பூக்கள்... சிறிது நேரத்தில் அந்த கொன்றை மரம், நிறைய மொட்டுகளைக்கொண்ட ஒரு பொன் அகல் விளக்காக பிரகாசித்தது. நெருப்பு மேல்நோக்கி உயர்ந்து போய்க்கொண்டிருந்தது. சந்தனக் கட்டை எரிந்த வாசனை காற்றில் கலந்தது.

வெட்டிவோர், துளசி, கற்பூரம், சாதம், மலர் வளையங்கள் பற்றி எரிந்தன.

வாசனையைச் சுமந்துவந்த இளம் தென்றலை முகர்ந்த நெருப்பு மேலும் ஆவேசத்துடன் மேல்நோக்கி உயர்ந்தெழுந்தது. இப்போது சிதையில் மரணப் பிண்டம் எரிந்து அடங்குகிறது. சதைப்பிடிப்பான சரீரத்திலி-ருந்து கொழுப்பும் மாமிசமும் எலும்புகளும் வெந்து எரியும் வாசனை!

நிளா நதியின் தேம்பல் சத்தம் அந்தப் பக்கத்தி-ருந்து கேட்டது. கதி கிடைக்காத ஆயிரக்கணக்கான ஆன்மாக்களி-ருந்து வெளிப்படும் பலவீனமான அழுகையைப்போல ஏராளமான உயிர்களின் நிற்காத அழுகை அந்த சூழ-ல் தங்கி நின்றிருந்தது. அந்த கூட்ட அழுகைக்கு மத்தியில் அவருடைய தேம்பல் மட்டும் யாருக்கும் தெரியவில்லை. சிதை அணைந்த பிறகும், மீண்டும் மழைபெய்த பிறகும், நேரம் புலர்காலைப் பொழுதானதுகூட தெரியாமல், புதைக்கப்பட்ட ஒரு கல்லைப்போல அவர் அந்த ஆல மரத்தினடியில் அமர்ந்திருந்தார்.

மீண்டுமொருமுறை பின்னால் திரும்பிப் பார்த்தவாறு ஈர மண்ணின் வழியாக நடந்தார். சூரியன் மழை மேகங்களுக்கு மத்தியி-ருந்து எட்டிப் பார்த்தபோதுதான் ஒருநாள் போய் மறைந்த உணர்வு அவருக்கு வந்தது. எப்போதும் சேர்ந்திருக்கக்கூடிய நண்பரை இறுதியாக இடுகாட்டில் விட்டுவிட்டு வருகிறோமே என்ற துக்கம் அவருடைய கண்களில் நிறைந்து நின்றிருந்தது.