ஜோஸப்புடன் நட்பு ஆரம்பித்து, நாற்பது வருடங்கள் கடந்தோடி விட்டன. பன்னிரண்டாவது வயதில் தொடங்கிய நட்பு... முதல் தடவையாக நான் மது அருந்தியது அவுஸேப்பின் வீட்டில் வைத்துதான்.
நாங்கள் ஒரே படுக்கையில் படுப்பவர்களாக இருந்தாலும், ஒரே வயதில் உள்ளவர்கள் அல்ல. நான்கோ ஐந்தோ வயதிற்கு இளையவன் நான்.
எங்களுடைய வீடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தூரம் அரை ஃபர்லாங்க்தான். பன்னிரண்டாவது வயதில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதுதான் நான் முதல் தடவையாக அவுஸேப்பின் வீட்டிற்குச் சென்றேன்.
இப்போதும் அந்த நாள் என் நினைவில் இருக்கிறது. என்னை மிகுந்த மரியாதைக்குரிய ஒரு விருந்தாளி யைப்போல அவுஸேப் வீட்டிற்குள் வரவேற்று அமரச் செய்தான். தன் வீட்டின் முற்றத் திலிருந்து இறக்கப்பட்ட ஒரு தென்னை மரத்தின் கள்ளை எனக்கு நேராக நீட்டினான். ஒரு குவளை நிறைய கள் இருந்தது. கண்ணாடியால் செய்யப்பட்ட கனம் உள்ள ஒரு வகையான பெரிய குவளை... அதில் சாதாரண மாக அரைக் குப்பி கள்ளை அடக்கி விடலாம். அன்புடன் நீட்டப்பட்ட குளிர்ச்சியான பானம்!
என்ன செய்ய வேண்டுமென தெரியாமல், சிறிது நேரம் தயங்கினேன்.
அதற்கு முன்னால் நான் எந்தச் சமயத்திலும் தென்னங்கள்ளு என்றால் எப்படி இருக்கும் என்பதை ருசித்து பார்த்த தில்லை.
கசப்பாக இருக்குமா துவர்ப்பாக இருக்குமா இனிப்பாக இருக்குமா என்ற விஷயம் எனக்குத் தெரியாது. கள்ளு பருகு பவர் களைப் பற்றி கேள்விப்பட்டிருக் கிறேன். அவ்வளவுதான்.
சிலரைப் பார்க்கவும் செய்திருக்கி றேன்.
அந்த விஷயத்தில் ஒரு முக்கியமான ஆளாக இருந்தான் என் இளமைக் கால நண்பன்.
அவுஸேப்பிற்கு பத்து... பதினாறு வயது இருந்தாலும், செயல்பாடு முழுவதிலும் ஒரு இருபது வயதுக் காரனின் கூர்மையான பார்வை இருந்தது. வீட்டில் அவுஸேப் நினைத்த தைச் செய்வான். அவுஸேப் தன் தந்தையின் குலத் தொழிலான கல் வேலையைத்தான் ஆழமாகக் கற்று வைத்திருந்தான்.
தந்தையுடன் தொழிலில் பயிற்சி பெறுவதற்காக இளம் வயதிலிருந்தே போய்க் கொண்டிருந்தான். அந்த கால கட்டத்தில் அவுஸேப்பைப் பார்க்கும் யாரும் திகைப்படைந்து நின்று விடுவார்கள்.
கருங்காலி மரத்தைக் கொண்டு உண்டாக்கப்பட்டதைப் போன்ற உறுதியான கறுத்த சரீரம்... கிருஷ்ண நிறம்... சுருள் சுருளாக இருந்த தலைமுடி...
அதை ஒழுங்காக வாருவதில்லை.
சிறிய ஒரு ஜகன்நாதன் வேட்டி, பனியன்...
இதுதான் ஆடை. அரைக்கை
பனியன் அல்ல. நிறைய தேனடை
யில் இருக்கும் துளைகளைப் போன்ற
ஓட்டைகள் உள்ள வலைப் பனியன்...
அந்த பனியனின் வழியாக தெரியக் கூடிய அவுஸேப்பின் சரீரம் கனமான இரும்பைப் போல உறுதியாக இருந்தது. பரந்து விரிந்த நெஞ்சு... மீசை கருப்பாக இருந்தது. அவன் தன்னை மற்றவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொள்வதே ஜோஸப் வாழப்புள்ளி என்ற புனை பெயரில் தான்.
வி.என். ஜோஸப் என்று மாற்றி எழுதினால், அது அவனுக்குப் பிடிக்காது. மதத்தின் ஆளுமைக்கு எதிராக விமர் சனங்களை வெளிப்படுத்துவதில் அவுஸேப் பெரிய ஒரு எதிர்ப்பாளனாக இருந்தான்.
எதிர்ப்பாளனாகவும் இளம் போக்கிரி யாகவும் அறியப்பட்டிருந்த ஜோஸப் வாழப் புள்ளிக்கு முன்னால் அந்தக் காலத்தில் நான் யாருமே அல்ல.
மிகப் பெரிய சாகசக்காரனும் சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கக்கூடிய தகுதியைப் பெற்றிருப்பவனுமான... தொழிலைக் கற்ற ஜோஸப் அன்புடன் எனக்குத் தந்த கள்ளு நிறைந்த குவளையை நான் மனதில்லா மனதுடன் உதடுகளுடன் ஒட்டி வைத்தேன். அது முழுவதும் உள்ளே சென்றால், உண்டாகப் போகும் விளைவுகள் அனைத்திற்கும் ஒரே காரணகர்த்தா அவுஸேப்பாகத்தான் இருப்பான் என்ற சிந்தனையு
ஜோஸப்புடன் நட்பு ஆரம்பித்து, நாற்பது வருடங்கள் கடந்தோடி விட்டன. பன்னிரண்டாவது வயதில் தொடங்கிய நட்பு... முதல் தடவையாக நான் மது அருந்தியது அவுஸேப்பின் வீட்டில் வைத்துதான்.
நாங்கள் ஒரே படுக்கையில் படுப்பவர்களாக இருந்தாலும், ஒரே வயதில் உள்ளவர்கள் அல்ல. நான்கோ ஐந்தோ வயதிற்கு இளையவன் நான்.
எங்களுடைய வீடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தூரம் அரை ஃபர்லாங்க்தான். பன்னிரண்டாவது வயதில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதுதான் நான் முதல் தடவையாக அவுஸேப்பின் வீட்டிற்குச் சென்றேன்.
இப்போதும் அந்த நாள் என் நினைவில் இருக்கிறது. என்னை மிகுந்த மரியாதைக்குரிய ஒரு விருந்தாளி யைப்போல அவுஸேப் வீட்டிற்குள் வரவேற்று அமரச் செய்தான். தன் வீட்டின் முற்றத் திலிருந்து இறக்கப்பட்ட ஒரு தென்னை மரத்தின் கள்ளை எனக்கு நேராக நீட்டினான். ஒரு குவளை நிறைய கள் இருந்தது. கண்ணாடியால் செய்யப்பட்ட கனம் உள்ள ஒரு வகையான பெரிய குவளை... அதில் சாதாரண மாக அரைக் குப்பி கள்ளை அடக்கி விடலாம். அன்புடன் நீட்டப்பட்ட குளிர்ச்சியான பானம்!
என்ன செய்ய வேண்டுமென தெரியாமல், சிறிது நேரம் தயங்கினேன்.
அதற்கு முன்னால் நான் எந்தச் சமயத்திலும் தென்னங்கள்ளு என்றால் எப்படி இருக்கும் என்பதை ருசித்து பார்த்த தில்லை.
கசப்பாக இருக்குமா துவர்ப்பாக இருக்குமா இனிப்பாக இருக்குமா என்ற விஷயம் எனக்குத் தெரியாது. கள்ளு பருகு பவர் களைப் பற்றி கேள்விப்பட்டிருக் கிறேன். அவ்வளவுதான்.
சிலரைப் பார்க்கவும் செய்திருக்கி றேன்.
அந்த விஷயத்தில் ஒரு முக்கியமான ஆளாக இருந்தான் என் இளமைக் கால நண்பன்.
அவுஸேப்பிற்கு பத்து... பதினாறு வயது இருந்தாலும், செயல்பாடு முழுவதிலும் ஒரு இருபது வயதுக் காரனின் கூர்மையான பார்வை இருந்தது. வீட்டில் அவுஸேப் நினைத்த தைச் செய்வான். அவுஸேப் தன் தந்தையின் குலத் தொழிலான கல் வேலையைத்தான் ஆழமாகக் கற்று வைத்திருந்தான்.
தந்தையுடன் தொழிலில் பயிற்சி பெறுவதற்காக இளம் வயதிலிருந்தே போய்க் கொண்டிருந்தான். அந்த கால கட்டத்தில் அவுஸேப்பைப் பார்க்கும் யாரும் திகைப்படைந்து நின்று விடுவார்கள்.
கருங்காலி மரத்தைக் கொண்டு உண்டாக்கப்பட்டதைப் போன்ற உறுதியான கறுத்த சரீரம்... கிருஷ்ண நிறம்... சுருள் சுருளாக இருந்த தலைமுடி...
அதை ஒழுங்காக வாருவதில்லை.
சிறிய ஒரு ஜகன்நாதன் வேட்டி, பனியன்...
இதுதான் ஆடை. அரைக்கை
பனியன் அல்ல. நிறைய தேனடை
யில் இருக்கும் துளைகளைப் போன்ற
ஓட்டைகள் உள்ள வலைப் பனியன்...
அந்த பனியனின் வழியாக தெரியக் கூடிய அவுஸேப்பின் சரீரம் கனமான இரும்பைப் போல உறுதியாக இருந்தது. பரந்து விரிந்த நெஞ்சு... மீசை கருப்பாக இருந்தது. அவன் தன்னை மற்றவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொள்வதே ஜோஸப் வாழப்புள்ளி என்ற புனை பெயரில் தான்.
வி.என். ஜோஸப் என்று மாற்றி எழுதினால், அது அவனுக்குப் பிடிக்காது. மதத்தின் ஆளுமைக்கு எதிராக விமர் சனங்களை வெளிப்படுத்துவதில் அவுஸேப் பெரிய ஒரு எதிர்ப்பாளனாக இருந்தான்.
எதிர்ப்பாளனாகவும் இளம் போக்கிரி யாகவும் அறியப்பட்டிருந்த ஜோஸப் வாழப் புள்ளிக்கு முன்னால் அந்தக் காலத்தில் நான் யாருமே அல்ல.
மிகப் பெரிய சாகசக்காரனும் சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கக்கூடிய தகுதியைப் பெற்றிருப்பவனுமான... தொழிலைக் கற்ற ஜோஸப் அன்புடன் எனக்குத் தந்த கள்ளு நிறைந்த குவளையை நான் மனதில்லா மனதுடன் உதடுகளுடன் ஒட்டி வைத்தேன். அது முழுவதும் உள்ளே சென்றால், உண்டாகப் போகும் விளைவுகள் அனைத்திற்கும் ஒரே காரணகர்த்தா அவுஸேப்பாகத்தான் இருப்பான் என்ற சிந்தனையுடன் நான் உற்றுப் பார்த்தேன்.
"மகனே... நீ அந்த நல்ல பையனைக் கெடுத்துடாதே... நல்ல குடும்பத்துல பிறந்த புள்ள... கிறிஸ்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்து கள்ளு குடித்தான் என்ற கெட்ட பெயரை உண்டாக்கிவிடாதே. அது கேவலமான விஷயம். பையனின் தாய் கவலைப்படுவாங்க.'' அவுஸேப்பின் அன்பின் இருப்பிடமான தாய் ஏலியாம்மாவின் அறிவுரை.
நான் காதில் வாங்குவது... அவுஸேப்பின் வார்த்தை களைத்தான். ஏலியம்மாவிற்கு வயதாகிவிட்டது.
அவுஸேப்போ இளம் வயதில் இருப்பவன். தைரியம் அதிகமாக இருக்கும்.
"இது அப்பனுக்காக விசேஷமாக வெட்டி இறக்கக் கூடிய இளம் கள்ளு. இதை நம்முடைய "புத்தட்ட யில்' குடும்பத்தைச் சேர்ந்த உண்ணிப்பணிக்கர் குடிப்பதால், ஜாதி விலக்கு எதுவும் உண்டாகிவிடப் போவதில்லை. உண்ணிப் பணிக்கரின் அம்மாவை நான் பேசி சமாதானப்படுத்திவிட முடியும். சந்தோஷ மாக குடிக்கணும். ஒரு துளிகூட குவளையில் மீதியாக இருக்கக் கூடாது. இருப்பதைப் பார்த்தால், நான் அதை எடுத்து தலையில் ஊற்றி விடுவேன்.''- முன்னறிவிப்பாக மிரட்டலை வெளிப்படுத்தி னான்.
"ஜோஸப்... உன் வற்புறுத்தலுக்காக நான் இது முழுவதையும் எனக்குள் செலுத்தப் போகிறேன்.'' கண்களை மூடிக் கொண்டு குவளையில் தெளிவான நீரைப் போல இருந்த மர நீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்.தொட்டி நீரை எருமை குடிப்பதைப்போல... என் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்து அவுஸேப் பலமாக சிரித்தான்.
கள்ளங்கபடமற்ற சிரிப்பு... கள்ளை முழுமையாக குடித்ததால் உண்டான நன்றியுணர்வு வெளிப்பட்ட அவுஸேப்பின் முகத்தை இப்போது கூட அதே நிலையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
சிறிய குவளை அல்ல. இரண்டு நாழியாவது இடம்பிடிக்கக்கூடிய குவளை. அந்த கள்ளு கிட்டத்தட்ட ஒரு அரை புட்டியாவது இருக்கும். அதையும் விட அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
பின்னால் உண்டான சம்பவங்கள் அதைத்தான் காட்டுகின்றன.
கால்களை தரையில் வைக்க முடியாத நிலையில், நான் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் சப்பணமிட்டு அமர்ந்தேன்.
அவுஸேப் என்னை வெறுமனே விடுவதாக இல்லை.
அவுஸேப்பின் அப்பன் லோனப்பன் மேஸ்திரிக்காக தயார் பண்ணி வைத்திருந்த இரண்டு புட்டி கள்ளை நானும் அவுஸேப்பும் சேர்ந்து அரை மணி நேரத்தில் பேச்சுக்கு மத்தியில் காலி பண்ணினோம்.
கள்ளுக்கு தொட்டு சாப்பிடக்கூடிய அயிட்டம் செம்மீன் தொக்கு. உப்பையும் மிளகாயையும் சேர்த்து அரைத்து, வடை சட்டியில் புரட்டியெடுத்த.. வறுத்து தூளாக்கிய செம்மீன். அதில் ஒரு துளி தேங்காய் எண்ணெய்யையும் கலந்து தொக்கு வடிவத்தில் தொட்டு நக்கினால், மீண்டும் அதே அளவு கள்ளைக் குடிக்கலாம் என்ற மன தத்துவத்தைக் கற்றுத் தந்தான். செயல் வடிவில் அதைச் செய்து காட்டினான். அந்த தொக்கின் ருசி இப்போதும் என் நாக்கின் நுனியில் தங்கி நின்று கொண்டிருக்கிறது.
முதன் முதலாக மது அருந்திய நாள்! மறக்க முடியாத நிமிடங்களை வெளிப்படுத்திய முதல் அனுபவம்! பன்னிரெண்டு வயதில் ஆரம்பித்த அந்த உறவு அவுஸேப்பின் இறுதி நிமிடம் வரை நீண்டு நின்றிருந்தது என்றே கூற வேண்டும்.
ஜோஸப் வாழப்புள்ளி கல் பணி செய்யக் கூடியவன் என்ற வகையில் நல்ல பெயரைப் பெற்றிருந்தான்.
உறுதியான சரீர அமைப்பு மட்டுமல்ல மூலதனமாக இருந்தது. யாரையும் பேசி வசீகரித்து தன் வழிக்குக் கொண்டு வரக்கூடிய ஈர்ப்பு சக்தி இயல்பாகவே அவனுக்கு இருந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு ஒரேயொரு கெட்ட பழக்கம் மட்டும் வந்து சேர்ந்திருந்தது. மது! கைவிட முடியாத அளவிற்கு பலமான குடிப் பழக்கம் ஒருவனை எந்த அளவிற்கு தாறுமாறாக ஆக்கும் என்பதற்குச் சரியான உதாரண கதாபாத்திரமாக அவன் இருந்தான்.
ஜோஸப் வாழப்புள்ளி என்ற புனை பெயரில்தான் தான் அழைக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக அவன் கூறினான். அந்த விஷயத்திற்காக கடவுளின் சன்னதியில் வைத்து சத்தியம் பண்ண வைத்ததும் ஞாபகத்தில் வருகிறது.
ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு பெயரில்தான் அழைக்கப்பட வேண்டும் என்று உறுதியாகக் கூறுவதற்கு ஏதாவது நோக்கம் இருக்கலாம்.
"எந்தச் சமயத்திலும் வாக்குறுதியை மீறக் கூடாது. யானையை அளித்தாலும், ஆசையை அளிக்கக் கூடாது. அதனால்... அருமை நண்பரே... நான் இறந்து விட்டாலும், என்னைப் பற்றிய ஒரு கதையை எழுதி, உலகில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.''
இறப்பதற்கு முன்பு, இறுதி விருப்பத்தைக் கூறிவிட்டு, அவுஸேப் வீட்டிற்கு வந்து எட்டிப் பார்த்துவிட்டு சென்றான். அதற்குப் பிறகு, வரவில்லை.
கொஞ்ச நாட்களாகவே அவுஸேப்பைப் பார்த்தால், பாதையில் பேசுவதில்லை. இறுதிக் காலம் நெருங்கியபோது, என்னைப் பார்த்தால், அவுஸேப் அதையும் இதையும் பேசி, அறிவுரை கூறுவான்.
ஏதோவொரு வெறித்தனமான குணம் அவுஸேப்பின் மென்மையான குணத்தில் நிழல் பரப்பியிருப்பதைப் பார்த்தேன்.
மற்றவர்களை நல்லவர்களாக ஆக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துகொண்டிருக்கக்கூடிய நேரத்தில், தான் நல்லவனாக ஆக வேண்டியதுதான் நடக்கவேண்டும் என்ற என்னுடைய வழக்கமான பல்லவி, ஒருவேளை அவுஸேப்பை கோபமடையச் செய்திருக்கலாம். பல நேரங்களில் எங்களுக்கிடையே நடக்கக்கூடிய சந்திப்புகள் வெறுப்பில் முடிவது என்பது வழக்கமான விஷயமாகிவிட்டது. அதனால் வீட்டிற்கு பணி நிமித்தமாக அவுஸேப்பை அழைக்கக்கூடிய வழக்கத்தை நிறுத்தி விட்டேன்.
முன்பெல்லாம் தினந்தோறும் வீட்டிற்கு வரும் அவுஸேப் என்னைக் கண்டால், திரும்பிப் பார்ப்பதில்லை. மது அருந்த தேவைப்படும் காசை, உலகத்திலுள்ள யாரிடம் கடனாகக் கேட்டாலும், என்னிடம் அவன் கேட்பதில்லை. மது அருந்துவதற்காக நான் யாருக்கும் காசு தர மாட்டேன் என்று பிடிவாதமாக கூறியதைத் தொடர்ந்துதான் எங்களுக்கிடையே பிரிவே உண்டானது.
எனினும், பல நாட்களாகவே ஜோஸப்பின் கண்கள் என்ன காரணம் என்று தெரியாமலே கலங்கிய நிலையில் இருந்தன. பல நேரங்களில் ஜோஸப் அடக்க முடியாமல் அழும் உண்மையை மறைத்து வைக்கவில்லை.
அதிகமாக மது அருந்தியதால், கண்கள் சிவந்திருக்கலாம்.
"அப்பா, நம்முடைய அவுஸேப் இரண்டு நாட்களாக இங்கு அழுது கொண்டு நடக்குறார். கடந்த ஒன்றிரண்டு நாட்களாக உங்களைத் தேடி அவுஸேப் பல தடவைகள் இங்கு வந்திருந்தார்''- மகனுடைய தொண்டை தடுமாறியது.
அவுஸேப்பிற்கு என்ன ஆனது?
நேற்று இரவு வாழப்புள்ளி ஜோஸப் இறந்து விட்டான். ஏதோ விஷத்தின் பாதிப்பால் மரண மடைந்ததாக கேள்விப்பட்டேன். ஒரு வாரத்திற்கு முன்பு, காலில் ஏதோ ஒரு ஆணி குத்தியிருக்கிறது.
வயதான அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காலில் சிறிய ஒரு வீக்கம் உண்டாகிவிட்டிருக்கிறது.
டாக்டர் வந்து சோதித்துப் பார்த்துவிட்டு, டெட்டனஸ் இன்ஃபெக்ஷன் உண்டாகியிருக்கும் விஷயத்தைக் கூறியிருக்கிறார்.
பாவம் அவுஸேப்!
என் மூத்த மகன் பேச முடியாத அளவிற்கு ஆகி விட்டான். ஒரு வகையில் அப்படி நடந்தது நல்லதற்குத்தான் என்று கூட கூறலாம். அதனால் என்ன காரணத்தாலோ, நானும் திடீரென பேரமைதியில் மூழ்கிவிட்டேன். நாற்பது வருடங்களாக இருந்த உறவில் மறக்கமுடியாத ஏராளமான சம்பவங்கள் என் நினைவில் வேகமாக எழுந்து வந்தன. யார் என்ன அறிவுரை கூறியும், அவுஸேப் குடிப்பதை நிறுத்தவே இல்லை என்பதுதான் உண்மை.
அவுஸேப் குடிகாரனாக இருந்தாலும், இரக்க குணம் படைத்தவனாக இருந்தான்.
கஷ்டப்படுபவர்களின் வீடுகளைக் குறைந்த செலவில் கட்டிக் கொடுக்கும் சிற்பி என்ற நிலையில், சாக்யார் பறம்பு என்ற பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் சிறப்பை உண்டாக்கிய மாமனிதனாக அவன் இருந்தான்.
நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜோஸப் ஒரு பேசப்படும் மனிதனாக ஆகி எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டன! ஜோஸப் வாழப்புள்ளி அஸ்திவாரம் அமைத்த சிறிய வீடுகள்தான் இங்கு பெரும்பாலும் இருக்கின்றன.என் இப்போதைய சிறிய வீட்டின் வடிவமைப்பாளர்கூட அவுஸேப்தான்.
கட்டிடக் கலையிலும் கணித அறிவியலிலும் கைதேர்ந்த திறமையான கல் பணி அறிந்தவன்...
சிறிய... சிறிய திட்டங்களைப் போட்டு, குறைவான சம்பளத்தில் மிகவும் சிறப்பாக ஏழைகளுக்கும் நடுத்தரத்தில் உள்ளவர்களுக்கும் வீடு கட்டித் தருவது என்ற வேள்வியில் வாழும் காலம் முழுவதையும் பயன்படுத்திய மனிதன்! எனினும், அனைத்து நல்ல விஷயங்களும் மது என்ற பிசாசின் பிடியில் சிக்கிக் கிடந்த காரணத்தால், வெளியே தெரியாமலே போய்விட்டது.
"குடிகாரன் அவுஸேப் கட்டிய வீடுகளுக்கு நீண்ட ஆயுள் இல்லை.'' என்று எதிரிகள் அவுஸேப்பைப் பற்றி வதந்திகளைப் பரப்பினார்கள்.
என் நண்பனை புதிய பணக்காரர்கள் யாரும் பணிக்கு அழைக்காத நிலை உண்டானது. எந்த பணக்காரருக்கு முன்னாலும் நிமிர்ந்து நின்று தன் உழைப்பிற்கான பணத்தைக் கணக்கிட்டு வாங்குவதற்கு அவுஸேப் தயங்கியதில்லை.
அதற்கு நேர் மாறாக, அதுவே ஒரு ஏழையாக இருந்தால், நான்கோ ஐந்தோ ரூபாய்களைக் குறைத்துத்தான் அவுஸேப் கூலியையே கூறுவான். எதுவுமே கையில் இல்லாத ஆளாக இருந்தால், சோற்றையும் ஒரு நேர கள்ளுக்கான காசையும் கொடுத்துவிட்டால், பணியைச் செய்துவிடுவான். தான் அவர்களின் நண்பனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே சலுகைகளை அளிப்பான்.
அவுஸேப்பின் இரக்க குணம் நிறைந்த சலுகைகள் அந்த ஏழையைப் பல நேரங்களில் ஆபத்தில் கொண்டுபோய் விட்டிருக்கிறது.
எப்படிப்பட்ட சிரமங்களைக் கொண்ட பணியும் நஷ்டத்திலேயே முடிந்திருக்கிறது!
பறைச்சி பெற்றெடுத்த பாக்கனாரின் செயல் பாட்டிற்கு நிகராக இருந்த இரக்கவுணர்வுதான் என்னை ஜோஸப் வாழப்புள்ளியுடன் அதிகமாக நெருங்க வைத்தது. ஏசுவின், பாக்கனாரின் திருப்பெயர்களில் கிராமத்திலேயே மிகவும் ஏழையாக இருப்பவனுக்கு ஒரு சிறிய வீட்டைக் குறைந்த காசில் கட்டித் தருவது என்ற இலட் சியத்தை வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டிய அந்த மனிதன் ஊர் ஊராக சுற்றித் திரிந்தான்.
உளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வழிப்போக்கர்களுடன் செல்லும் நீண்ட பயணம்... பணி செய்வதாக ஏற்றுக்கொண்டால், அதைச் சரியான காலத்தில் முடித்துக் கொடுப்பது என்ற முறைக்குப் பங்கம் உண்டானது.
அவுஸேப்பின் வேலையின்மீது ஆட்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து வர ஆரம்பித்தது. யாரும் அந்த ஊர் சுற்றியை இறுதிக் காலத்தில் அழைக்காத நிலை உண்டானது. தான் தினந் தோறும் தகர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை அவுஸேப்பை மிகப் பெரிய குடிகாரனாக மாற்றியது. மது உள்ளே சென்றவுடன்,
ஆவேசத்துடன் சமூகத்தை விமர்சிப்பதற்கு அவுஸேப் தயங்கவேயில்லை. அனைத்தின் மீதும் அவுஸேப்பிற்கு ஈடுபாடு குறைய ஆரம்பித்தது. ஈடுபாட்டுக் குறைவு மட்டுமல்ல....
வெறுப்பும்.
"அருமை நண்பரே...
நிரந்தரமான குடிப்பழக்கம் மனிதனின் இதயத்தையும் மூளையையும் மதிப்பையும் அரித்துத் தின்று விடும். அதனால், தங்களுடைய பிள்ளைகளையும் மனைவியையும் நினைத்து, அவர்கள் தங்களை வெறுக்காமல் இருக்க வேண்டுமென்றால், இந்த குடிப்பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.
உங்களுடைய கல்லைப் போன்ற உறுதியான உடல் மெலிந்து... மெலிந்து ஒரு ஈர்க்குச்சியைப் போல ஆகிவிட்டதற்குக் காரணமே இந்த குடிப் பழக்கம்தான்.
அதனால், இந்த கெட்ட பழக்கத்திலிருந்து நிரந்தரமாக விடை பெற்று விடுங்கள். நான் உங்களின் நாற்பது வருட பழக்கம் உள்ள நண்பனா யிற்றே!'' - என் சொற்பொழிவுக்கு நெருக்கமான வார்த்தைகளில் அவுஸேப்பிற்குப் பெரிய அளவில் ஆர்வம் உண்டாகவில்லை.
சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
படிப்படியாக அவுஸேப்பின் முகம் மேலும் அதிகமாக இருளத் தொடங்கியது. தன் நண்பனை வார்த்தைகளின் பலத்தைக் கொண்டு அமைதிப் படுத்த அவுஸேப் தீர்மானித்திருக்க வேண்டும். "வாயால் பேசக்கூடிய எந்த மனிதனாலும் யாருக்கும் இப்படிப்பட்ட சூழலில் அறிவுரை கூற முடியும். ஆனால், அதை தன் சொந்த வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கூறும்போதுதான் பிரச்சினையே...
உண்ணிப்பணிக்கர்... நீங்க ஏன் கஞ்சாவைப் புகைக்கிறீங்க? அதைக் கொஞ்சம் நிறுத்தக் கூடாதா? நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டு, என்னிடம் மது அருந்துவதை நிறுத்தும்படி அறிவுரை கூறினால் போதும்'' .அவுஸேப் பலமாக சிரித்தான். இன்னும் தேவைப்படும் பட்சம், தன் மிகவும் மரியாதைக்குரிய நண்பனின் சொந்த வாழ்க்கையில் இருக்கக்கூடிய தவறுகளைப் பற்றி அவுஸேப்பால் பேசமுடியும். அந்த கிண்டல் சிரிப்பு என்னைச் சற்று கோபப்படச் செய்யாமல் இல்லை. நானும் அவுஸேப்பை வார்த்தைகளைக் கொண்டு அமைதிப்படுத்தக் கூடிய ஒரு முயற்சியை நடத்திப் பார்த்தேன்.
ஆனால், கூற ஆரம்பிப்பதற்கு முன்பே அவுஸேப் மீண்டுமொரு எதிர் ஆக்கிரமிப்பை நடத்தினான். தன் வீக்கமுள்ள காலைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரட்டை மடிப்பு வேட்டியைத் தளர்வாக இருக்கும் வண்ணம் கட்டியிருப்பதால், எந்தவொரு பயனும் இல்லை. இடது காலின் வீக்கத்தை வலது காலுக்கு மாற்றித் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்ட முட்டாளாயிற்றே என் குருநாதன்!
"பணிக்கரே... நான் கூறுவதற்கான அர்த்தம் முழுமையாக உங்களுக்குத் தெரிய வேண்டுமென் றால், இன்னும் சிறிது காலம் ஆகும். ஆள் கொஞ்சம் வளர்ந்திருந்தாலும், என் அளவிற்கு அறிவு இல்லை. உங்களுக்கு அறிவு வருவதற்கு முன்பே, இந்த அவுஸேப் கர்த்தருடன் சுக தூக்கத்தில் ஆழ்ந்து விடுவான்.''
தான் அதிகமாக பேசியது மட்டுமல்ல... தான் ஏதோ முக்கியமான காரியத்தைச் செய்வதைப் போல, எழுந்து நின்று சைகைகள் செய்தான்.என்னை ஏதாவது வகையில் கீழ்ப்படியும்படி செய்யவேண்டும். நான் கூறுவது இறுதி வார்த்தைகள் அல்ல.
அவுஸேப்பிற்கும் தேவைக்கும் அதிகமான அறிவு இருக்கிறது.
நரம்புகளில் ஆழமாக சேர்ந்து விட்ட போதையின் சிறகுகளில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற வெறி... கால் தரையில் நிற்கவில்லை.
எனினும், தீர வீர சூர ஆக்கிரமிப்பாளனாகி என்னை ஆக்கிரமிக்கும் எண்ணத்திற்கு எதிராக நின்று கொண்டிருப்பதற்கு மத்தியில் அவுஸேப் மூக்கு தரையில் மோத வீழ்ந்து விட்டான். நான் பிடித்து எழுப்பினேன்.
தோளில் கையை வைத்தவாறு அவுஸேப்பை நல்ல வார்த்தைகளுடன் தேற்றினேன்.
இரண்டு வேளைகளில் பைபிள் வாசிக்கும் ஜோஸப் வாழப்புள்ளி இறுதி மலை பிரசங்கத்தை என் செவியில் முணுமுணுத்தான்.
இறுதிப் பிரசங்கத்தின் அந்த பொருள் என் இதயத் தில் எங்கோ வேதனைகளை உண்டாக்குகிறது.
பிரியத்திற்குரிய ஜோஸப் வாழப்புள்ளி...
அன்பிற்குரிய நண்பனே... நான் இந்த குழிக்குள் ஒரு கை மண்ணை எடுத்துப் போடுகிறேன்.
உங்களின் மூடியிருக்கும் கண்களில் மண் விழுந்தாலும், யாரும் இனி அதை கவனிக்கப் போவதில்லை என்பது தெரியும்.