சிங்கப்பூரில் தி.மு.க. வைத் தொடங்கினோம்! ஆனால்...சிங்கை திராவிட இயக்க முன்னோடி கே.ஏ.நாகராசன் நேர்காணல் இரா.காமராசு

/idhalgal/eniya-utayam/singha-dravidian-movement-pioneer-ka-nagarasan-interview-ira-kamarasu

ன்று உலகின் பெரும் சந்தை யாக விளங்குவது சிங்கப்பூர். இங்கு தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் உள்ளது. 1800-களில் ஆங்கிலேயர் காலத்தில் புலம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்கள் தொடங்கி, இன்று உயர் தொழில்நுட்பப் பணி அலு வலில் உள்ள தமிழர்கள் வரை சிங்கப் பூரின் வளர்ச்சியில் தமிழர் பங்களிப்புப் பெரியது. மலேசியா - சிங்கப்பூர் பிரிவு, லீகுவான்யூ சிங்கப்பூரின் தலைமை ஏற்றது போன்றவை சிங்கப்பூர் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சிங்கப்பூரில் தமிழர்கள் குடியேறி, குடியுரிமைபெற்று நிலை பெற்ற வரலாற்றினை அறிந்தவர் கள் இன்று குறைவு. சிங்கப்பூர் தமிழர் அமைப்புகளில் பங்கேற்று உழைத்த வர் திரு கே. ஏ. நாகராசன். 94 வயதில் இன்றும் துடிப்புடன் உள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், தமிழ்வேள். கோ. சாரங்கபாணி, முருகு சீனிவாசன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். அண்மையில் என் சிங்கப்பூர்ப் பயணத்தின்போது அவரைச் சந்தித்தேன். ஏறத்தாழ 5 மணி நேரம் உரையாடினேன்.

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ. கலைச் செல்வம் உடனிருந்தார். அந்த நேர்காணலின் அரிய தொகுப்பு இது.

bb

சிங்கப்பூருக்கு ஆரம்ப காலங்களில் தமிழ் மக்கள் எவ்வாறு புலம்பெயர்ந்தார்கள்? நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?

நான் பிறந்தது 1930-ன் மே மாதம்.

திருவாரூர் நன்னிலம் வட்டம், குருங் குளம் கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். எனக்கு மாரிமுத்து என்ற ஒரு அண்ணன், பின்பு 1935 இல் எனக்கு ஒரு சகோதரி பிறந்தார்.

என்னுடைய தந்தை கிராம முனிசிபி டம் சார்புக்காரராக பணி செய்து வந்தார். இந்தப் பணி செய்வதற்கு முன்பே என் தகப்பனாருக்கு சுருட்டு தொழில் தெரியும். இதனால் சுருட்டு தொழில் செய்ய எனது தகப்பனா ரும், எனது அண்ணாரும் சிங்கப்பூர் வந்தனர். பின்பு நானும் இங்கு வந்தேன்.

சிங்கப்பூருக்கு எப்படி வந்தீர்கள்?

1936-ல் எனது தகப்பனார் சிங்கப்பூர் வந்தார். அப்போது எனது அண்ணனுக்கு பத்து வயது. நானும் எனது தங்கையும் எங்கள் ஊரில் எனது தாயாரு டன் இருந்தோம். ஒரு பெரிய ஓட்டு வீடு. அதில் ஒரு பகுதியில் எங்கள் குடும்பமும் மற்றொரு பகுதியில் எனது பெரியப்பா குடும்பமும் இருக்கும். பெரும்பா லும் புகையிலைகளை வாங்கு வது திருச்சி பகுதிகளில் தான்.

சிங்கப்பூரில் ஜோகூரில் எங்கள் அப்பா தங்கியிருந்தார். நான் எங்கள் கிராமத்தில் படித் துக் கொண்டிருந்தேன். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டி ருக்கும்போது, ஜப்பானியர்கள் கால யுத்தம் வந்தது. அப்போது எங்கள் அப்பாவோடு மூன்றாண்டு காலம் எந்த தொடர்பும் இல்லாமல் போனது. அப்போது எங்களுக்கு உணவுக்குக்கூட வழி யில்லை. அந்த மூன்று ஆண்டுகளும் எனது அப்பாவும் அண்ணனும் இருக்கிறார்களா... இறந்து விட்டார்களா? என்பதுகூட தெரியாது. எங்கள் தாயார் இட்லி, வடை போன்ற உணவுப் பொருட்களை செய்து விற்று சாப்பாடுக்கு வழிசெய்தார். ஜப்பானி யர்கள் யுத்தம் முடிந்து பிரிட்டிஷ்காரர் ஆட்சி வந்த பிறகு எங்கள் அண்ணாரும் தகப்பனாரும் தமிழகம் வந்தார்கள். நான் எங்கள் மாமா வீட்டில் இருந்தேன்.

பின்புதான் வந்து எனது அப்பாவைப் பார்த்தேன்.

அண்ணா நான் வருவதற்குள் சிங்கப்பூர் சென்று விட்டார். எங்கள் அண்ணா அவருடைய நண்பருடன் ஜோகூரில் ஜால மூடியா என்ற இடத்தில் ஒரு சிறிய சுருட்டுத் தொழிற்சாலை நிறுவி வியாபாரம் செய்தார். அப்போது எங்கள் அண்ணா என்னை சிங்கப்பூர் வந்துவிடும்படி கூறினார். சிங்கப்பூர் செல்ல பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து ஒரு சிறிய அனுமதி கடிதம் வாங்கினால் போதும். நம்முடைய முழு விலாசமும் இருந்தால் போதும். எங்கள் அண்ணா வைத்திருந்த கடைக்கு லைசென்ஸ் இருந்ததால் அந்த கடைக்கு வருவதற்கு அனுமதி வாங்கி அனுப்பினார். 1948 ஜனவரி அப்போது காந்தி இறந்த நேரம்.

அப்போதெல்லாம் பாஸ்போர்ட் உண்டா?

அப்போது இரண்டு இடத்திலும் பிரிட்டிஷ் ஆட்சி. ஆகையால் கடிதம் மட்டும் இருந்தால் போதும். நாகப்பட்டினத்திலிருந்து சிறு படகில் மூன்று மைல் தூரம் பயணித்து கப்பலை வந்தடைந்து அந்த கடிதத்துடன் சிங்கப்பூர் வந்தடைந்தேன். வந்து சேரும்போது என்னுடைய தமையனாரை எனக்குத் தெரியாது. அவருக்கும் என்னைத் தெரியாது. அந்தச் சூழ்நிலையில் எங்கள் உறவுக்காரர் எங்க தகப்பனாரின் அத்தைப் பேரன், அவரும் சிங்கப்பூரில் இருந்தார். நேரடியாக சிங்கப்பூரில் இறங்கமுடியாது மூன்று நாள் புறமலை என்ற இடத்தில் இருக்க வேண்டும். பின்பு மருத்துவப் பரிசோதனைகள் நடக்கும். பின்புதான் வெளியில் விடுவார்கள். என்னை அடையாளம் காட்ட எனது உறவினரை அழைத்துக் கொண்டு என் அண்ணன் துறைமுகம் வந்தார். உறவினர் அடையாளம் காட்ட கண்ணீருடன் அண்ணன் என்னை அழைத்துச் சென்றார். பின்பு ஜோகூரில் தஞ்சாவூர் நண்பர், என் அண்ணா, நான் ஆகியோர் அந்தக் கடையிலே தங்கினோம்.

பின்பு அண்ணனிடம் நான் இந்த வேலையை கற்றுக் கொள்கிறேன் என்று கேட்டேன். அதற்கு அண்ணா என்னுடனும் அப்பாவுடனும் போகட்டும் என்று கூறிவிட்டார். ம

பின்பு அண்ணனிடம் நான் இந்த வேலையை கற்றுக் கொள்கிறேன் என்று கேட்டேன். அதற்கு அண்ணா என்னுடனும் அப்பாவுடனும் போகட்டும் என்று கூறிவிட்டார். மீண்டும் வற்புறுத்திக் கேட்டேன். பின்பு தான் இந்தச் சுருட்டுத் தொழிலை கற்றுக் கொண்டேன்.

சுருட்டு மட்டுமா அல்லது பீடி, சிகரெட் செய்வீர்களா?

சுருட்டு மட்டும்தான். இதிலே நல்ல கொழுத்த வருமானம். ஆயிரம் சுருட்டுக்கு அப்பவே ஆறு வெள்ளி. அவரவர் திறமைக்கு ஏற்ப பணம் கிடைக்கும். ஜோகூர் மாகாணத்தில் அனைத்து இடங்களிலும் இந்த கடை காணலாம். ஜோகூரில் நான்கு கம்பெனி. சிங்கப்பூரில் இந்தியர்களின் கம்பெனி ஐந்து. சீனர்கள் சிகரெட், சுருட்டு இரண்டும் செய்தார்கள். அதற்கு சீன சுருட்டு என்று பெயர்.

ஜோகூர் என்பது சிங்கப்பூருக்கு வெளியே வா? அல்லது மலேசியாவைச் சார்ந்ததா?

அப்போது இரண்டும் ஒன்றாகத்தான் இருந்தது அப்போது முழுமையும் பிரிட்டிஷ் ஆட்சிதான். நான் வந்து எட்டு மாதம் கழித்து எங்கள் அண்ணா ஊருக்குச் சென்றுவருகிறேன் என்று சொன்னார். ஊரில் எனது தகப்பனார் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி உழுது கொண்டு இருந்தார். 1946 கடைசியில் வியாபாரம் சரியாக இல்லை என்று கடையை மூடி விட்டார்கள். ரேஸ் கோர்ஸ்சாலை கிளை ஜோகூரில் இருந்தது. எங்கள் அண்ணா சிபாரிசு செய்து கடையில் சேர்த்தார். அப்போது எங்கள் அண்ணா ஜோகூர் மாகாண சுருட்டு நலச் சங்கத் தலைவராக இருந்தார். எனது அண்ணா பெயர் கே.ஏ. மாரிமுத்து. ஜனநாயக தொழிற்சங்கத்திலும் அண்ணா இருந்தார். அந்த ஜனநாயக தொழிற்சங்கம் மலேசியா கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தது. அப்போது எங்கள் பெரியப்பா மகன் ரேஸ்கோர்ஸ் ரோட்டிலுள்ள கடையில் வேலை பார்த்தார். எங்கள் குடும்பத்தில் பத்துப் பேருக்கு இந்த தொழில் தெரியும். அஜிஸ் முகமது இஸ்மாயில் கடையில் எங்கள் பெரியப்பா மூலம் ரேஸ்கோர்ஸ் சாலை கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனது அண்ணா ஊரில் திருமணம் செய்துகொண்டார். எங்கள் தந்தையின் அக்கா மகளை திருமணம் முடித்து ஓராண்டு கழிந்து வந்தார். நான் ஜோகூருக்கு வரவில்லை இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். வேதாரண்யம் மா. அன்பழகனின் மாமனார் கடையில் என் அண்ணா வேலை செய்தார். நான் ரேஸ்கோர்ஸ் ரோட்டிலுள்ள ஒரு கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். எனக்கு சிறுவயதிலிருந்தே திராவிடர் கழக ஈடுபாடு. நான் சிங்கப்பூர் வந்ததும் வேலைசெய்த கடையிலிருந்து சிறிது தூரத்தில் இருபதாம் நம்பர் இடத்தில்தான் திராவிடர் கழகம் போர்டு இருந்தது, பார்த்தேன். தினத்தாள் பத்திரிகைகள் மேசையின் மேல் இருந்தன. பேப்பர் படிப்பதற்காக மாலை நேரத்தில் உட்கார்ந்து விடுவேன். இரண்டு மூன்று மணி நேரம் இருப்பேன். உள்ளிக்கோட்டை தட்சிணாமூர்த்தி என்ற நண்பர் மேலும் இரண்டு மூன்று உள்ளிக்கோட்டை நண்பர்கள் பழக்கமானார்கள்.

திராவிடர் கழகத்தில் 1949 இல் உறுப்பினரானேன். அப்போது யார் பொறுப்பாளராக இருந்தார்கள்?

ஆர்.கே தங்கவேலு என்பவர் பெரிய ஆங்கிலேய கம்பெனியில் வேலை செய்தார் அவர்தான் தலைவர். சிராங்கூன் சாலையில் சாரதா ஸ்டோர் என்ற பெயரில் சொந்தமாக ஜவுளிக்கடை நண்பர்களை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்த சாரதா என்பவர் சிங்கப்பூர் பழைய பெரியார் கொள்கை உள்ள நாட்டு வைத்தியர் ஆ.சா. சுப்பையாவின் பேத்தி. நடராஜன் செயலாளர். இந்த சுருட்டு செய்யும் வேலை. சுதந்திரமான வேலை. நினைத்தால் வேலை பார்க்கலாம். இல்லையென்றால் சுருட்டி மூட்டையைக் கட்டி வைத்துவிடலாம். அதனால்தான் திராவிடர்கழக சொற்பயிற்சியில் சேர்ந்தேன். அதைப் புலவர் ச.சா.சின்னப்பனார் நடத்தினார். அவரிடம்தான் மேடைப் பயிற்சி பெற்றேன். வாரம் வாரம் நடக்கும். அதற்கு நான்தான் பொறுப்பு. அனைவரிடமும் பத்துப் பத்து காசுகள் வசூல் செய்வேன். அப்போது பத்து காசு என்றால் பெரிய காசு. 1949 இல் செயற்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன்பின்னர் ஒரு வருடம் கழித்து நடராசன் என்பவர் தலைவராக வந்தார்.

1953இல் உள்ளிக்கோட்டை தட்சிணாமூர்த்தி செயலாளர். நான் துணைச் செயலாளர் அப்போது அனைவரும் கலந்து இருந்தோம். திராவிடர் கழகம், தி.மு.க ஒன்றாக இருந்தோம். காரணம் இந்த நாட்டில் நாம் தனியாக இருந்து அரசியல் செய்யப் போவதில்லை என்பதால். எப்படியாவது பெரியார் கொள்கை வளரவேண்டும் என்பதற்காக. 1953 இல் கல்லக்குடி போராட்டம். எப்படி தமிழ்நாட்டில் மணியம்மை திருமணத்தால் தி.க. இரண்டாகப் போனதோ அதேபோல இங்கு கல்லக்குடிப் போராட்டம் வந்து இரண்டானது. அப்போது உள்ளிக்கோட்டையைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவர் இருந்தார். கலைஞருக்கு நெருக்கமான நபர். ஊட்ரம் சாலையில் உள்ள சிறைச்சாலையில் வார்டனாக இருந்தார். தட்சிணாமூர்த்தி அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவரும் அதே கொள்கை உள்ளவர். அவரும் அந்த சிறைச் சாலையில் வார்டன். கல்லக்குடி போராட்டத்தின்போது ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் வந்தது. திட்டத்தை எதிர்த்து இந்திய அரசுக்கு சிங்கப்பூர் அரசாங்க தமிழ் மக்கள் சார்பாக கண்டனம் தெரிவிக்க முடிவுசெய்து 1953இல் தமிழ் முரசின் துணைத் தலைவர் செல்வகணபதி, முருகையா, தமிழ் முரசு துணை ஆசிரியர் வை. திருநாவுக் கரசு - (பெரியாரால் அனுப்பப்பட்டவர்) - முருகுசுப்பிரமணியம் இவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கல்லக்குடி போராட்டம் மற்றும் குலக்கல்வி திட்டப் போராட்டம் இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தது. அப்போது சிறியவர்கள் நாங்கள் எல்லாம் சேர்ந்து கல்லக்குடி போராட்டத்திற்கு சேர்த்து தீர்மானம் நிறைவேற்ற சொன்னோம். ஆனால் பெரியவர்கள் அது முடியாது, குலக்கல்வி திட்டத்திற்கு மட்டும்தான் தீர்மானம் என பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, அந்தக் கூட்டத்திலேயே மாலை ஆறு மணி அல்லது ஏழு மணி நாற்பது பேர் குழுவாக சேர்ந்து அந்த கூட்டத்திலிருந்து வெளியேறினோம். சிராங்கூன் ரோட்டில் இருக்கக்கூடிய சீனரது காப்பி கடைச் சந்தில் உட்கார்ந்து பேசினோம். அப்போது உருவானதுதான் சிங்கப்பூர் தி.மு.க. உள்ளிக்கோட்டை சிங்காரவேலு கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட வர். கலைஞருடன் ஆறு மாதம் கடுங் காவலில் இருந்தவர். அன்று இரவு முதல் விடியற்காலை நான்கு மணி வரை அனைவரும் கலந்து பேசினோம். இனிமேல் திராவிட கழகத்தில் இணைந்து வேலை செய்ய ஒத்துவராது. ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பிப்பது என முடிவுசெய்தோம்.

தி.க., தி.மு.க. பிரிவு பற்றி ஏதாவது பத்திரிகைகளில் பதிவு உள்ளதா?

பத்திரிகை நடத்திய தமிழவேல் (சாரங்கபாணி) தி.க.வைச் சேர்ந்தவர். அதனால் பத்திரிகையில் போடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து விளம்பரம் கொடுத்து ரசீது வாங்கி வந்தேன். முதல் நாள் விளம்பரம் வந்தது. ஆனால் மறுநாள் விளம்பரம் வரவில்லை. அது தமிழவேளுக்கு தெரியாமல் வந்தது. இரண்டாம் நாள் பேப்பரை பார்த்து யாரை கேட்டு இந்தச் செய்தி போட்டீர்கள் என்று பிரச்சனை செய்து, இரண்டாம் நாள் செய்தி வரவில்லை. கூட்ட முடிவில் தீர்மானமாக முடிவு செய்து இறுதி முடிவாக கழகம் அமைப்பது. அன்றைய முதலமைச்சர் லீ எங்களுக்கு நண்பர். அவருக்கு தேர்தல் வேலை பிரச்சார வேலைகள் செய்தோம். அதனால் ஒத்துழைப்பாக எங்களுக்கு உதவி செய்தார். பதிவு ஏற்றுக்கொள்ளும்போது ஒரு பிரச்சனை வருகிறது. தலைவர் இல்லை பொதுச் செயலாளர்தான் அப்போது. இவர்கள் கம்யூனிஸ்டா?என அரசாங்கம் கேள்வி கேட்டது எங்களுக்குத் தெரியாமல் மூன்று சி.ஐ.டி.கள் நாங்கள் கம்யூனிஸ்டா? என பரிசோதித்தார்கள். பின்பு இவர்களையா சந்தேகித் தோம் என எங்களிடம் கூட்டாளியாகினார்கள்.

ss

தலைமை இல்லாமல் ஒரு அமைப்பு இருக்கமுடியாது. பொறுப்பாளர்கள் என ஒரு பொறுப்பை போட்டு பதிவுசெய்து திறப்பு விழாவுக்குத்தான் அந்த விளம்பரம் கொடுத்தோம். ஒரு நாள் விளம்பரம் மறுநாள் வரவில்லை. நம்முடைய பையன்கள் எல்லாம் துடிக்கிறார்கள் கோர்ட்டுக்குப் போக வேண்டும் என்று பின்பு சமாதானப்படுத்தினோம். பின்பு நல்ல முறையில் சிங்கப்பூரில் வரலாற்றில் இந்திய சமூகத்திற்கு ஒரு தலைமை நிலையம், எட்டுக் கிளைகளும் இரண்டு சொற்பயிற்சி மன்றங்களும் உள்ள ஒரு அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

தற்போது தி.மு.க சிங்கப்பூரில் உள்ளதா?

இல்லை. இருக்க முடியாது.

உங்களுக்கு அண்ணா தொடர்பா? கலைஞர் தொடர்பா?

அண்ணா தொடர்பில்தான் இதெல்லாம் செய்தோம். முதல் கிளை தஞ்ச மகால். அந்தப் பகுதியில்தான் முதல் கிளை இளைஞர்கள் மூலமாக எட்டுக் கிளை இரண்டு சொற்பயிற்சி மன்றங்கள். 1957-இல் அண்ணா அறிவிப்பு செய்தார். தேர்தலில் போட்டியிட்டார். சிங்கப்பூர் பார்லிமெண்டில் கேள்வி எழுகிறது. உள்ளிக்கோட்டை பக்கம் உள்ள கிராமம், சிறிய கிராமம் எஸ்.வி. லிங்கம் அவர் கேள்வி எழுப்பினார். தி.மு.க சிங்கப்பூரில் அரசியல் கட்சியாக உள்ளது என்று உடனே அன்று மாலை எங்களை அழைத்தார்கள். சென்றோம். எங்களிடம் பேச்சு வார்த் தை நடத்தினார்கள். இறுதியாக வெளிநாட்டு அமைப் பின் பேரில் சிங்கப்பூரில் அமைப்பு இருக்கக்கூடாது என முடிவு கூறினார்கள். எஸ்.வி. லிங்கம் கிளப்பி விட்டதன் விளைவுதான் அது. உங்களுக்குக் கொடுத் தால் சீனர்கள் கேட்பார்கள் என்று கூறினார்கள். வேறுவழியில்லாமல் சரி என ஒப்புக்கொண் டோம்.

(தி.மு.க. கலைப்புக்கு முன்) அண்ணா சுற்றுப் பயணம் செய்தார். அந்தக் கூட்டத்தில் பிரதமர் லீ தலைமை, சிங்கப்பூரின் பெரிய விளையாட்டு அரங்கம்.

காலாங் ஸ்டேடியம். அதில் முழுமையும் தலையாகத் தான் தெரிகிறது, தவிர திடல் தெரியவில்லை.

அவ்வளவு கூட்டம். அன்றுதான் பிரதமர் இவ்வளவு இந்தியர்கள் இருக்கிறார்களா? என்று பேசினார். அண்ணா வந்தபோது கழகம் இருந்தது. கழகத்தின் சார்பாகத்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வந்துசென்ற பின்புதான் இந்தப் பிரச்சனை. அவர்கள் கூறுவதும் நியாயமாகத்தான் இருந்தது. மறுத்துக் கூற முடியவில்லை.

இந்தப் பிரச்சனை வந்த பின்பு தமிழர் இயக்கம் என கழகத்தின் பெயரை மாற்றினோம். அது அப்படி யே இருக்க நான் அப்போது துணை பொதுச் செயலாளராக இருந்தேன். தி.மு.கவில் இருந்த வரையிலும் கொள்கைபரப்புச் செயலாளராக இருந் தேன், துணைச் செயலாளர் மற்றும் துணைத் தலைவராகவும் இருந்தேன். சிங்கப்பூரில் மோரிஸ் ரோட்டில் மூன்று மாடி சொந்தக் கட்டடம் இருந்தது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான். அதுதான் சிங்கப்பூர் தமிழர் இயக்கம். மூன்று எழுத்து இல்லாமல் இருக்கமுடியாது என்று ஒரு வெறி. தமிழ் முரசின் துணை ஆசிரியர் முருகையாவிடம் கூறினோம் எப்படியாவது தி.மு.க என்ற பெயர் வர வேண்டும் என்று செஞ்சிடலாம் என்று கூறினார். சிங்கப்பூர் திராவிட முற்போக்குக் கழகம் என்ற பெயரை கூறினார். சரி என்று ஒப்புக்கொண்டு சட்டம் எல்லாம் அவரே எழுதினார்.

இரண்டு மாதத்திற்குள் பதிவு வாங்கிவிட்டோம், வீராச்சாமி சாலையில் ஒரு இடத்தை எடுத்து அதில் வைத்து நடத்தினோம். அதில் நான் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தேன். சிறிது நாள் செயல் பட்டது. ஆனால் கிளை எதுவும் இல்லை. அது இருந் தாலும் எடுபடவில்லை. உணர்வு குறைந்துவிட்டது. அதையும் விட்டாச்சு தற்போது தமிழர் இயக்கம் தான் இருக்கிறது அதுதான் பழைய தி.மு.க. அண்ணா ஏல் பல்கலைக்கழகம் சென்று வந்த போது குறைகளைச் சொன்னோம். நீங்கள் இங்கு அரசியல் நடத்தப் போவதில்லை. அதனால் மொழியின் பெயரால், இனத்தின் பெயராலும் வைத்து நடத்துங்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்ட இயக்கம்தான் தமிழர் இயக்கம்.

நீங்கள் சிங்கப்பூர் வந்த காலத்தில் தமிழகத்திலிருந்து எந்தெந்த பகுதியில் வேலைக்கு வந்தார்கள்?

அதிகமாக தஞ்சை மாவட்டம், தென் மாவட்டங்கள், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி. அவர்கள் எந்த வேலை கேட்டு பர்மிட் வாங்குகிறார்களோ அந்த வேலை கிடைத்தது. சில பேர் கடைக்கு வந்தார்கள், சில பேர் கைத்தொழில். ஆரம்ப காலத்தில் 100 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் தமிழர்கள்தான் அந்தப் பணிகளைச் செய்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கமே கொண்டு வந்ததுதான். இந்த அரசாங்கம் வந்தும் சில காலம் இருந்தது. ரோட்டுப் பணி, தண்ணீர்ப் பணி, குப்பை பணி அனைத்து பணிகளும் 90 சதவிகிதம் தமிழர்கள் தான் செய்தனர். இதில் தென் மாவட்டத்தைச் சார்ந்தவர் கள் 75 சதவிகிதம் பேர்.

தொடக்கத்தில் மொழி பிரச்சனையாக இல்லையா, சீனர் கள் இருக்கிறார்கள் தமிழ் மட்டுமே தெரிந்து வந்தவர்கள் இங்கு எப்படி மொழி பிரச்சனையைச் சமாளித்தார்கள்?

அது பெரும்பாலும் பக்கத்தில் உள்ளவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஆங்கிலம் இல்லை என்றா லும் மலாய் மொழி பேசி பதில் சொன்னார்கள். போதுமான வரையிலும் மொழிதெரிந்த ஒரு சிலர் இருந்தார்கள். அவர்களை வைத்துதான் வேலை வாங்கினார்கள்.

தொழிலாளர் இரவுப் பள்ளி பற்றி கூறுங்கள்?

ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரில் தொழிற்சங்கம் சார்பிலிருந்த இரவுப் பள்ளிகள் தொழிலாளர்களுக்கு ஆங்கில அறிவு தேவை என்பதற்காக அனைத்து பள்ளிகளும் வாரம் மூன்று நாள் நடக்கும்.

அதைப்போலவே தமிழ் சொல்லிக் கொடுத்தார்களா?

அது வாய்மொழியாகத்தான் அதற்கு எதுவும் இல்லை. துறைமுகப் பகுதியை இந்த அளவு உருவாக்கிய வர்கள் தமிழர்கள் தான் 90% தமிழர்கள் தான் இந்த துறைமுகப் பணிகளைச் செய்தார்கள்.

தங்குமிடம் தமிழர் எவ்வாறு அமைத்துக் கொண்டனர் சேர்ந்து தங்கினார்களா? தனியாகத் தங்கினார்களா?

அப்போது சில இடங்களில் ஒரு வீட்டில் நூறு பேர் கூட இருப்பார்கள். ஒவ்வொரு படுக்கை அந்த மாதிரி. ஆனால் விடுதிகளில் தனி அறை கொடுத்தார்கள். சில பகுதிகளில் வாடகைக்கு எடுக்கும் போது ஒரு வீடு எடுத்து இரண்டு அல்லது மூன்று நபர்கள் இருப்பார்கள்.

தமிழர்களுக்கு எனத் தனிப்பட்ட பகுதி உண்டா?

கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. விருப்பப்பட்ட இடங்களில் தங்கிக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலும் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி முதல் பகுதி தஞ்சமங்கலம் பகுதி, துறைமுகப் பகுதி, அடுத்து சிராங்கூன் பகுதி.

கம்பம் என்பது?

கம்பம் என்பது கிராமம். கிராம வீடுகள் மரக் கட்டையால் ஆனது. சிமெண்ட் வீடுகள் கிடையாது. தகர வீடுகள்.

தண்ணீர்க் கம்பம் வீடு பற்றி கூறுங்கள்?

தண்ணீர்க் கம்பம் என்பது சகதி, கடலோரப் பகுதி, கம்பம் வீடு. ஆறடி உயரம் மரப் பலகை கீழ் பகுதியில் நட்டு மேல் தளம் பலகைகள் அடைத்து இருப் பார்கள். அதிகம் மீன்பிடித் தொழிலாளர்கள் தான் இருப் பார்கள். தண்ணீர்க் கம்பம் சில பகுதிகளுக்கு நாங்கள் படகில் சென்றுதான் மின்சாரம் கொடுத்தோம். சீனர்கள் பெரும்பாலும் கடலில்தான் வீடு கட்டி இருப்பார்கள். அங்கிருந்துதான் மீன் பிடிக்கச் செல்வார்கள்.

நம் மக்கள் திருமணங்கள் பற்றி கூறுங்கள்?

அப்போது கட்டாயத் திருமணம் கிடையாது, இப்போது கட்டாயத் திருமணம். அன்று பதிவு கிடையாது. இந்த அரசு வந்த பிறகு லீ குவான்யூ செய்தது கட்டாயத் திருமணம். (பதிவு செய்யும் முறை) பெண்களுக்கு திருமணத்தில் முழுப் பாதுகாப்பு. ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும். விவாகரத்து ஆனால், குழந்தை இருந்தது என்றால் அந்தப் பெண்ணிற்குத்தான் வீடு சொந்தம்.

சீர்திருத்தத் திருமணம் எப்போது தொடங்கியது?

பெரியார் காலத்தில்தான். நான் இங்கு வருவதற்கு முன்பே அந்த வழக்கம் இருந்தது.

தமிழ்மொழி எவ்வாறு ஆட்சி மொழியானது?

ஆரம்பத்தில் சிங்கப்பூரில் ஒவ்வொரு இனத் திற்கும் தனிப் பள்ளிகள் இருந்தது. பொதுவானது ஆங்கிலப்பள்ளி, சீனர்களுக்கு சீனப் பள்ளி, மலாய்க்காரர்களுக்கு மலாய் பள்ளி, தமிழர்களுக்குத் தமிழ்ப்பள்ளி. தென்கிழக்கு ஆசியாவிலேயே ஒரு உயர்ந்த தமிழ்ப் பள்ளி இருந்தது என்றால் அது மலேசியாவின் தமிழ்ப் பள்ளிதான். இதனை நிர்வகித்து வந்தது தொழிற்சங்கம். பள்ளிகளில் இன்ஸ்பெக்சன் நடக்கும். தாத்தா சின்னப்பனாரும் அந்த பணியில் இருந்தார். அவர் தமிழ்ப் புலவர் மொத்தம் நாற்பத்தி இரண்டு பள்ளிகள். பெரும் பாலும் தமிழ்த் தலைவர்கள் பெயர்தான் வைக்கப் பட்டிருக்கும். பெரியார் தமிழ்ப் பள்ளி, மணியம்மை தமிழ்ப் பள்ளி, பாரதிதாசன் தமிழ்ப் பள்ளி, பாரதியார் தமிழ்ப் பள்ளி, நீலாம்பிகை தமிழ்ப் பள்ளி, நாகம்மையார் தமிழ்ப் பள்ளி என பெயர்கள் இருந்தன. பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பள்ளிகளில் பணியாற்ற முடியும். மக்கள் செயல் கட்சி ஆட்சிக்கு வந்த பின்புதான் இருமொழிக் கொள்கை வந்தது. அந்த இரு மொழிக் கொள்கையால் தாய்மொழியும் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டு பொது உறவுக்கு ஆங்கிலம், குடும்ப உறவுக்கு தாய்மொழி. முதல் பிரதமர் லீக்குவான்யூ கூறியது "தாய்மொழி தெரியாதவன் குடும்பத்தையோ சமூகத்தையோ உணர முடியாது' எனக் கருதி இக்கொள்கையை நடைமுறைப்படுத்தி னார். இரு மொழிக் கொள்கை வரும்போது தனித் தனி பள்ளிகள் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். ஒவ்வொரு பள்ளியிலும் நான்கு ஆசிரியர்கள் தமிழ், சீனம், மலாய், ஆங்கிலம் என ஆசிரியர்கள் இருப்பார்கள்.

சிங்கப்பூரில் ஆட்சி மொழி பற்றி கூறுங்கள்?

சிங்கப்பூரில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிந்தால், மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு விடும். அதனால் பிரதமர்லீ குவான்யூ அவர்கள் குழுத் தொகுதியை உருவாக்கினார். அதில் நான்கு இன மக்களின் பிரதிநிதியாக ஒருவர் இருக்கவேண்டும்.

அதாவது சீனம், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி பேசுபவர்கள் குழுத் தொகுதியில் உறுப்பினராக இருக்கவேண்டும். சிங்கப்பூரில் தனித் தொகுதியைப் போல குழுத்தொகுதி மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. பிரதமர் லீ குவான்யூவின் தொலை நோக்குப் பார்வையில் இன்று வரை சிங்கப்பூரில் நான்கு இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.

நான்கு மொழியும் ஆட்சி மொழிதான். தமிழ் நாட்டில் கூட தலைவரே என அழைக்கமுடியாது. ஆனால், இங்கு மன்ற நாயகரே என அழைத்தால் உடனே ஆங்கிலத்தில் இங்கு மொழிபெயர்ப்பார்கள் சீன மொழிக்கு சீனர்களை வைத்து பேசினார்கள், மலாய் மொழிக்கு மலாய்க்காரர்களை வைத்து பேசினார் கள், இந்தியர்களுக்கு ஒரு சமூகம் கிடையாது அது பரந்து விரிந்த பண்பாடு ஆகையால், இந்திய அரசாங் கத்திடம் ஆலோசனை கேட்டார். எந்த மொழியை நாங்கள் இந்திய அரசு சார்பாக ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது என்று. இங்கு வாழக்கூடிய மக்கள் இந்தியர் 85 சதவீதம் தமிழர்கள். மற்றவர்கள் 15 சதவீதம் பேர்தான் ஆகையால், நீங்கள் ஒரு வரலாற்று பேராசிரியரைக் கொண்டு உறுதியாக ஒரு சிபாரிசு கொடுங்கள் என்று கேட்டார்.

அப்போது தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றுப் பேராசிரியராக சில காலம் இங்கு பணியாற்றியவர் நீலகண்ட சாஸ்திரி. இந்தியப் பேரரசு நீலகண்ட சாஸ்திரியை இங்கு அனுப்பி அதற்கு வழிவகை செய்யச் சொன்னார்கள். அதற்கு நீலகண்ட சாஸ்திரி "இந்திய மொழிகளில் தொன்மையான மொழி, பக்தி மொழி சமஸ்கிருதம்' ஆகவே சமஸ்கிருதத்தை இந்திய அரசின் சார்பாக ஆட்சி மொழியாக அமைக்கவேண்டும் என்று சட்டபூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டார். தமிழர்களிடம் செய்தி பரவியது. பத்திரிகையில் போடுபவர்கள் வரவைத்து இரண்டு மணி நேரத்தில் நோட்டீஸ் அடித்து தமிழர்கள் கூட்டம். இந்த இடத்தில் நோரிஸ் சாலை போராட்டத்தில் திவானந்தம் பள்ளிக்கூடம் மேல்மண்டபத்தில் ஒரு அமைப்பு இரண்டு சாலையில் கண்டிப்பாக வந்து கலந்து கொள்ள வேண்டும். மூன்று மணிக்கு கூட்டம். திராவிட கழகம் சார்பாக நானும் தாத்தாவும் சென்றோம். எல்லா அமைப்பு சார்பாகவும் வந்து பேசினார்கள். நான் பேசும்போது நீலகண்ட சாஸ்திரி தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றுப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அவருக்கு நல்ல முறையில் தென்கிழக்கு ஆசியாவில் எந்தெந்த இனத்தவர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். எவ்வளவு பேர் என்பது நன்கு தெரியும். அப்படி தெரிந்து இருந்தும் தான் பிறந்த பார்ப்பனரினத்தை உயர்த்த வேண்டும். மொழியை உயர்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக 5 சதவீத மக்களே பேசக்கூடிய சமஸ்கிருதத்தை சிபாரிசு செய்துள்ளார் என்று கோபமாகப் பேசினேன்.

அத்தனை அமைப்புகள் சார்பாகவும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. மறுநாள் அரசாங்கம் தமிழ்தான் ஆட்சி மொழி என அறிவித்தது.

தமிழ் மக்கள் சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள். எவ்வாறு வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்தார்கள்? முதலில் உருவான கோவில் எது?

இன்றளவும் அந்த வழக்கம் உண்டு. நான் வருவதற்கு முன்பிருந்தே அந்த வழக்கம் உண்டு. வனபத்ரகாளியம்மன் கோயில், வீரமாகாளியம்மன் கோவில். ஆரம்பத்தில் தகரக் கொட்டையாக இருந்தது, பின்பு நாளடைவில் கோபுரங்களாக மாறின.

படங்கள்: கலைச்செல்வம்

எழுத்து உதவி: சி.தமிழரசன்

uday010424
இதையும் படியுங்கள்
Subscribe