பாடகி (ரஷ்யக்கதை) : ஆன்டன் செக்காவ் தமிழில்: சுரா

/idhalgal/eniya-utayam/singer-russian-anton-chekhov-tamil-sura

வெளியே அழைப்பு மணியின் சத்தம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மேலாடையை அவிழ்த்து வைத்திருந்ததால், கோல்பக்கோவ் வேகமாக எழுந்து, கேள்வி கேட்பதைப்போல பாஷாவைப் பார்த்தார்.

""தபால்காரனாக இருக்கும். இல்லாவிட்டால்... என் தோழிகள் யாராவது...'' அவள் கூறினாள்.

தபால்காரனோ, பாஷாவின் தோழிகளோ வருவது கோல்பக்கோவை பாதிக்கக்கூடிய விஷயமல்ல. எனினும், ஒரு முன்னெச்சரிக்கை என்பதைப்போல அவர் ஆடைகள் அனைத்தையும் வாரி எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குள் சென்றார். பாஷா கதவைத் திறப்பதற்காக ஓடினாள். அவளை ஆச்சரியப்படச் செய்யும் வகையில் முன்னால் நின்று கொண்டிருந்தது தபால்காரனோ தோழிகளோ அல்ல. யாரென்று தெரியாத ஒரு அழகி... பார்ப்பதற்கு மரியாதைக்குரிய பெண்...

அவள் வெளிறிப்போய்க் காணப்பட்டாள். மிகவும் தூரத்திலிலிருந்து படிகளில் ஓடி ஏறிவந்ததைப்போல மேலும்கீழும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள்.

""நீங்கள் யாரைப் பார்க்கவேண்டும்?'' பாஷா கேட்டாள்.

அந்தப் பெண் உடனடியாக பதில் கூறவில்லை. முன்னால் ஒரு எட்டு எடுத்துவைத்து, அறை முழுவதையும் ஒருமுறை பார்த்தவாறு, ஒரு நாற்காலிலியில் அமர்ந்தாள். இனியொரு நிமிடம்கூட நிமிர்ந்து நிற்கமுடியாத அளவுக்கு இயலாத நிலை என்பதைப்போல... அவள் பேசுவதற்கு முயன்றாள். ஆனால், ரத்த ஓட்டம் இல்லாத உதடுகள் வெறுமனே அசைந்தனவே தவிர, குரல் எதுவும் வெளியே வரவில்லை.

""என் கணவர் இங்கிருக்கிறாரா?'' சிவப்பு படர்ந்த கண்களால் பாஷாவைப் பார்த்தவாறு இறுதியில் அவள் கேட்டாள்.

""உங்களுடைய கணவரா?'' பாஷா முணுமுணுத்தாள். திடீரென்று அவள் அதிர்ச்சியடைந்தாள். பயத்தின் காரணமாக கையும் காலும் மரத்துப் போயின. ""உங்களுடைய கணவரா?'' நடுக்கத்துடன் அவள் மீண்டும் கேட்டாள்.

""என் கணவர் நிக்கோலேய் பெட்ரோவிச் கோல்பக்கோவ்.''

""இல்லை மேடம். எனக்கு... உங்களுடைய எந்தவொரு கணவரையும் எனக்குத் தெரியாது.''

ஒரு நிமிடம் மிகவும் அமைதியாகக் கடந்தது. அங்கு வந்திருந்த பெண் வெளிறிக் காணப்பட்ட உதடுகளை அவ்வப்போது ஒரு துவாலையால் ஒற்றிக்கொண்டிருந்தாள். மூச்சை அடக்கிக்கொண்டு உள்ளுக்குள் எழுந்த அழுகையை அடக்குவதற்கு படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள். பாஷா பயமும் வெறுப்பும் நிறைந்த கண்களுடன் அவளையே பார்த்தவாறு, அசைவே இல்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.

""அப்படியென்றால்... அவர் இங்கில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்?'' ஆழமான குரலிலில், வினோத மான ஒரு சிரிப்புடன் அந்தப் பெண் கேட்டாள்.

""நீங்கள் யாரை மனதில் வைத்துக்கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.'' பாஷா கூறினாள். ""நீ ஒரு பயங்கரமான பெண். கெட்டவள்- அசிங்கமானவள்...'' பாஷாவை தலையிலிலிருந்து பாதம்வரை பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடனும் வெறுப்புடனும் அவள் புலம்பினாள்: ""நீ... நீ ஒரு மோசமான பெண். இறுதியில் உன்னைப் பற்றி மனதிற்குள் இருப்பதைப் பேச முடிந்ததில், எனக்கு நிம்மதி உண்டாகிறது.''

எரிந்து கொண்டிருக்கும் கண்களையும் மெலிந்து வெளிறிப்போன விரல்களையும் கொண்டிருந்த அந்த கருப்பு ஆடை அணிந்த பெண்ணுக்கு முன்னால் தான் அசிங்கமான, வெறுக்கப்பட்ட ஏதோ ஒன்றாகிவிட்டதைப்போல பாஷாவுக்குத் தோன்றியது. சிவந்து துடித்துக்கொண்டிருக்கும் கன்னங்களையும் நெற்றியின்மீது விழுந்துகிடக்கும் தலைமுடிகளையும் பற்றி அவளுக்கு வெட்கக்கேடு உண்டானது. இன்னும் சற்று மெலிலிந்தும், ஒப்பனை இல்லாமலும் இருந்திருந்தால் தான் ஒரு மோசமான பெண் என்பதை மறைத்து வைத்திருக்கலாம். எனினும், இந்த யாரென்று தெரியாத பெண்ணுக்கு முன்னால் இந்த அளவுக்கு கூனிக்குறுகிப் போயிருக்க வேண்டியதில்லை.

""என் கணவர

""என் கணவர் எங்கிருக்கிறார்?'' அந்தப் பெண் மீண்டும் கேட்டாள்: ""அவர் இங்கிருந்தாலும், இல்லையென்றாலும் கூறவேண்டியதை நான் உன்னிடம் கூறிவிடுகிறேன். ஒரு பண மோசடி வழக்கு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நிக்கோலேய் பெட்ரோவிச்சை காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறது கைது செய்வதற்கு... நீதான் இதற்கெல்லாம் காரணம்!'' அந்தப் பெண் எழுந்து, கடுமையான கோபத்துடன் அறையில் இங்குமங்குமாக நடந்தாள். பாஷா அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பயம் காரணமாக அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

""அவரை இன்றே அவர்கள் கைது செய்துவிடுவார்கள்.'' அவமானத்தாலும் ஏமாற்றத் தாலும் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதாள்: ""அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது யாரென்று எனக்குத் தெரியும். கேவலமான பிறவியே! வெட்கம் கெட்ட விபச்சாரியே! (அவளுடைய உதடுகள் துடித்தன... மூக்கு விடைத்தது...) நான் எதுவுமே தெரியாதவள். கேளடி வெட்கம் கெட்டவளே! நான் எதுவுமே தெரியாதவள். உனக்கு என்னைவிட பலம் இருக்கிறது. ஆனால், என்னையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு யாராவது இருப்பார்கள்.

இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக் கிறான். அவன் நியாயமானவன். என் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும், உறக்கத்தை இழந்த ஒவ்வொரு இரவுக்கும் அவன் உன்னிடம் கணக்கு கேட்பான்.

நீ என்னை நினைத்துப் பார்க்கும் நாள் வரும்!'' மீண்டும் பேரமைதி... கைகளைக் கசக்கியவாறு அறைக்குள் அமைதியை இழந்து நடந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை பாஷா வெறுப்புடன் பார்த்தாள். பயங்கரமான ஏதோவொன்று நடக்கப்போகிறதென்று அவளுக்குத் தோன்றியது. அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

""மேடம்... எனக்கு எதுவுமே தெரியாது.'' மெதுவான குரலிலில் கூறிவிட்டு, பாஷா தேம்பித் தேம்பி அழுதாள்.

""பொய் கூறுகிறாய்.'' அவள் கத்தினாள். வெறுப்புடன் அவளைப் பார்த்தாள். ""எனக்கு அனைத்தும் தெரியும். உன்னைப் பற்றி கொஞ்ச காலமாகவே தெரியும். கடந்த மாதம் எல்லா நாட்களிலும் அந்த மனிதர் இங்கு உன்னைத் தேடிவந்திருக்கிறார் என்ற விஷயமும் எனக்கு தெரியும்.''

""அதனால் என்ன? அதனால் என்ன? நிறைய விருந்தினரை நான் ஏற்றுக்கொள்வதுண்டு. ஆனால், இங்கு தங்குவதற்கு நான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் எல்லாரும் தங்களின் விருப்பப்படி வருகிறார்கள்.''

""நான் உன்னிடம் கூறினேன் அல்லவா? ஒரு மோசடி வழக்கு வெளியே தெரிய வந்திருக்கிறது. உன்னைப்போல கேவலமான ஒருத்திக்காக அந்த மனிதர் மோசடிப் பேர்வழியாகிவிட்டார். நீ காது கொடுத்துக் கேட்கிறாயா?'' பாஷாவிற்கு முன்னால்வந்து நின்றுகொண்டு, உரத்த குரலில் அவள் கூறினாள்.

""உனக்கு வாழ்க்கையில் எந்தவொரு இலக்கும் இல்லையே! கெட்ட செயல்தானே வாழ்க்கையின் இலக்காகவே இருக்கிறது?

அதற்காகத்தானே வாழ்ந்துகொண்டிருப்பதும்... ஆனால், மனிதத்தன்மையின் ஒரு சிறிய அடையாளம்கூட இல்லாமல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்துபோவாய் என்பதை யாராலும் நினைத்துப் பார்க்கக்கூடமுடியாது. அவருக்கு ஒரு மனைவியும், குழந்தைகளும் இருக்கிறார்கள்.

shortstoryஅவரை தண்டித்து வேறு ஊருக்கு அனுப்பிவிட்டால், நானும் குழந்தைகளும் பட்டினியில் கிடந்து இறந்துவிடுவோம். நீ இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய். எங்களை அவமானத்திலும் வறுமையிலு மிருந்தும் காப்பாற்றுவதற்கு இப்போதும் வழி இருக்கிறது. இன்று தொள்ளாயிரம் ரூபிள்கள் கொடுத்தால் அவரை வழக்கிலிலிருந்து விலக்கிவிட முடியும். வெறும் தொள்ளாயிரம் ரூபிள்கள்!''

""தொள்ளாயிரம் ரூபிள்?'' பாஷா அமைதியாகக் கேட்டாள். ""எனக்கு அப்படி எதுவுமே தெரியாது. நான் யாரிடமும் அப்படி வாங்கியதில்லை.''

""நான் உன்னிடம் தொள்ளாயிரம் ரூபிள்கள் கேட்கவில்லை. உன் கையில் பணமில்லை. எனக்கு உன்னுடையது எதுவும் வேண்டாம். உன்னைப் போன்றவர்களுக்கு ஆண்கள் பொதுவாக நகைகளைத்தானே வாங்கித் தருவார்கள்? என் கணவர் வாங்கித் தந்ததை என்னிடம் திரும்பித் தந்தால் மட்டும் போதும்.''

""ஆனால்... மேடம்... அவர் எனக்கு இதுவரை எதுவுமே தரவில்லை.'' பாஷா கூறினாள். அவளுக்கு விஷயங்களின் சாரம் புரிய ஆரம்பித்தது.

""அப்படியென்றால் பணம் முழுவதும் எங்கு போனது? அந்த மனிதர் எல்லாவற்றையும் தொலைத்துத் தீர்த்துவிட்டாரே! என் பணத்தையும், அவர் மோசடி செய்ததையும்... அவையெல்லாம் எங்கு போயின? நான் கூறுவதைக் கொஞ்சம் கேள்.. நான் கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறேன். நான் கோபத்தில் உன்னிடம் எதையெதையோ கூறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. நீ என்னை வெறுத்துக்கொள். ஆனால், உன்னிடம் இரக்க உணர்வு சிறிதாவது எஞ்சியிருந்தால், என் சூழ்நிலையைப் புரிந்துகொள். எனக்கு அவற்றைத் திருப்பித்தா...''

பாஷா தோள்களைக் குலுக்கியவாறு கூறினாள்:

""நான் எல்லாவற்றையும் சந்தோஷமாகவே தருவேன். ஆனால், தெய்வத்தின்மீது சத்தியம் செய்து கூறுகிறேன். அவர் எனக்கு எதுவுமே தரவில்லை.'' எதையோ நினைத்ததைப்போல அவள் கூறினாள்: ""ஒரு நாள் அவர் இரண்டு சிறிய பொருட்களைத் தந்தார். அதை நான் திருப்பித் தந்துவிடுகிறேன்.'' பாஷா ஒரு மேஜையின் அறையைத் திறந்து, உட்பகுதி சிதிலமடைந்திருந்த வளையலையும், சிவப்புநிறக் கல் பதிக்கப்பட்டிருந்த விலை குறைவான சிறிய ஒரு மோதிரத்தையும் வெளியே எடுத்து அவளிடம் நீட்டினாள்: ""இதோ...''

கோபத்தால் முகம் சிவந்து, அந்தப் பெண் குதித்தாள்: ""நான் உன்னுடைய பிச்சையை வாங்குவதற்காக வரவில்லை. உனக்குச் சொந்த மானவையாக இல்லாத பொருட்களைத்தான் நான் கேட்டேன். உன் இடத்தையும் அழகையும் பயன்படுத்தி, அந்த அப்பாவி மனிதரைப் பிழிந்து அபகரித்த பொருட்களை... கடந்த வியாழக்கிழமை நீங்கள் இருவரும் சேர்ந்து நடந்து செல்லும்போது, எத்தனை விலை அதிகம் கொண்ட வளையல்களையும் தொங்கட்டான்கனையும் நீ அணிந்திருந்தாய்! பிறகு... இப்போது ஒன்றுமே தெரியாதவளைப்போல நடித்து பிரயோஜனமே இல்லை. இறுதியாக நான் கேட்கிறேன்... நீ அவற்றைத் திரும்பத் தருகிறாயா இல்லையா?''

""சொன்னால் உங்களுக்குப் புரியாதா?'' பாஷாவுக்குக் கோபம் வர ஆரம்பித்தது. ""உங்களுடைய நிக்கோலேய் பெட்ரோவிச்சிடமிருந்து இந்த வளையலையும் மோதிரத்தையும் தவிர, வேறு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. மற்ற நாட்களில் அவர் எனக்குத் தந்தது கேக்குகள்தான்.''

""கேக்...'' அந்தப் பெண் சீறினாள்: ""அவருடைய பிள்ளைகள் வீட்டில் பட்டினி கிடக்கும்போது, கண்டவர்களுக்கு கேக்கைப் பரிசாகத் தந்துகொண்டிருக்கிறார்! நீ அந்த நகைகளைத் தரமுடியாது என்பதை உறுதியாகக் கூறுகிறாயா?''

பதிலெதுவும் கிடைக்காமல் அவள் வெற்றிடத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். சிந்தனையில் மூழ்கினாள்: "நான் இனி என்ன செய்வது? தொள்ளாயிரம் ரூபிள்கள் தயார் செய்யவில்லையென்றால், அவருடைய இறுதியாக இருக்கும்... என் இறுதியும், குழந்தைகளின் இறுதியும்கூட... நாசம் பிடித்தவளைக் கொல்வதா? இல்லாவிட்டால்... அவளுடைய கால்களில் விழுவதா?'

முகத்தில் துவாலையைக் கொண்டு ஒற்றிவிட்டு, அவள் தேம்பித் தேம்பி அழுதாள். அழுவதற்கு மத்தியில் கூறிக்கொண்டிருந்தாள்: ""நான் உன்னிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். என் கணவரின் வாழ்க்கையைத் தகர்த்தது நீதான்.. அவரிடம் இரக்கம் வேண்டாம். ஆனால், அந்தக் குழந்தைகள்... அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களை எப்படி குறைகூற முடியும்?''

தெருவின் ஓரத்தில் அமர்ந்து பசியால் அழும் குழந்தைகளை மனதில் நினைத்து, பாஷாவும் அழ ஆரம்பித்தாள்.

""மேடம்... நான் என்ன செய்வது? நான் கெட்டவள். நிக்கோலேய் பெட்ரோவிச்சின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன் என்றெல்லாம் நீங்கள் கூறுகிறீர்கள். தெய்வத்தை சாட்சியாக வைத்து நான் உங்களிடம் கூறுகிறேன். நான் அவரிடமிருந்து எதுவுமே சம்பாதிக்கவில்லை. எங்களுடைய பாடகர்களின் குழுவில் மோத்திக்கு மட்டுமே பணக்காரனான காதலன் இருக்கிறான். எஞ்சியிருப்பவர்கள் அனைவரும் சிரமப்பட்டு எப்படியோ வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள்தான். நன்கு படித்த ஒரு நாகரிக மனிதராக இருந்ததால் மட்டுமே, நிக்கோலேய் பெட்ரோவிச்சை நான் ஏற்றுக்கொண்டேன். நாகரிக மனிதர்களை எங்களால் நிராகரிக்க முடியாது.''

""நான் நகைகளைத்தான் கேட்டேன். எனக்கு அந்த நகைகளைக் கொடு... நான் அழுகிறேன்... கேட்டுக்கொள்கிறேன்... முழங்காலிலிட்டு கெஞ்சவும் நான் தயார்... பார்....''

பாஷா பயந்து அழுது, "வேண்டாம்' என்று கைகளால் சைகை செய்தாள். தாங்கள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பார்க்கக்கூடிய வேடங்களைப்போல, உண்மையான உயர்ந்த தோற்றத்துடனும், கம்பீரமானவளாகவும் காணப்பட்ட அந்தப் பெண் முழங்காலிட்டு விழுந்து கெஞ்சி, தன்னுடைய உயர்நிலையை மீண்டுமொருமுறை நிரூபித்து, தன்னை வெட்கப்படச் செய்து விடுவாளோ என்று பாஷா பயப்பட்டாள்.

""சரி... சரி... நான் நகைகளைத் தருகிறேன்.'' கண்களைத் துடைத்துவாறு பாஷா கூறினாள்: ""இதோ... எடுத்துக்கொள்ளுங்கள்... இவை எதுவும் நிக்கோலேய் பெட்ரோவிச்சிற்குச் சொந்தமானவை அல்ல என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். இவை என் மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்தவை. உங்களுக்கு வேண்டிய அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...'' பாஷா மேஜையின் இன்னொரு அறையைத் திறந்து ஒரு வைர தொங்கட்டான், முத்து மாலை, சில மோதிரங்கள், வளையல்கள் ஆகியவற்றை எடுத்து அந்தப் பெண்ணை நோக்கி நீட்டினாள். ""உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய கணவர் எனக்கு எதையும் தரவில்லை என்பதை மட்டும் நான் கூறுகிறேன். இதை எடுத்துச் சென்று, நல்ல வசதியாகிக்கொள்ளுங்கள்.'' முழங்காலிட்டு விழுந்து, கெஞ்சிக் கேட்டுக்கொள்ளலாம் என்ற பயத்திற்கு முன்னால் தன்மானம் காயம்பட்ட பாஷா கூறினாள்: ""நீங்கள் இந்த அளவுக்கு தன்மானம் கொண்ட பெண்ணாக இருந்தால், அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணாக இருந்தால், அவரை திருப்தி செய்து ஒரே இடத்தில் இருக்கவைக்கக்கூடாதா? நான் எந்தச் சமயத்திலும் அவரை அழைத்ததில்லை... அவர் தன் விருப்பப்படி வருகிறார்.''

கண்ணீருக்கு மத்தியில் நகைகளைப் பார்த்துவிட்டு, அந்தப் பெண் கூறினாள்: ""இவற்றை வைத்து எதுவுமே செய்யமுடியாது. இது ஐந்நூறு ரூபிள்களுக்குக்கூட வராது''.

மேலும் ஒரு தங்க கைக்கடிகாரம், சிகரெட் பெட்டி, ஒரு ஜோடி வளையல்கள் ஆகியவற்றை மேஜையின் அறையைத் திறந்து எடுத்து, பாஷா மேஜையின்மீது வைத்தாள்.

""என் கையில் இருப்பவை அனைத்தும் தீர்ந்துவிட்டன. வேண்டுமென்றால், நீங்கள் சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.'' கைகளை விரித்துக் காட்டியவாறு பாஷா கூறினாள்.

நீண்ட பெருமூச்சு விட்டவாறு, நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளால் எல்லாவற்றையும் துவாலையில் அள்ளிக் கட்டிக்கொண்டு, ஒரு வார்த்தைகூட கூறாமல், சற்று தலையைக்கூட ஆட்டாமல் அந்தப் பெண் சென்றுவிட்டாள்.

கோல்பக்கோவ் அடுத்த அறையிலிருந்து வெளியே வந்தார். அவருடைய முகம் வெளிறிப் போய்க் காணப்பட்டது. மிகவும் கசப்பு நிறைந்த கஷாயத்தைக் குடித்ததைப்போல, தலையை இருபக்கங்களிலும் ஆட்டிக்கொண்டிருந்தார். கண்ணில் நீர்த்துளிகள் ஒளிர்ந்தன.

""நீங்கள் எந்த நகைகளை எனக்குத் தந்தீர்கள்? எப்போது?'' பாஷா அவர்மீது பாய்ந்தாள்.

""நகையா? என்ன நகை?'' தலையை ஆட்டியவாறு கோல்பக்கோவ் கூறினார்: ""என் தெய்வமே!

அவள் உனக்கு முன்னால் வந்து அழுது கீழேவிழுந்து கெஞ்சி...''

""கேட்டது காதில் விழுந்தது அல்லவா?

நீங்கள் எந்த நகையை எனக்குத் தந்தீர்கள்?'' பாஷா கத்தினாள்.

""என் தெய்வமே! மிகவும் புனிதமானவளும் கம்பீரமானவளும், தன்மானம் உள்ளவளுமான அவள்... இந்த விபச்சாரிக்கு முன்னால் முழங்காலிட்டு விழுந்து... நான் அவளை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டேனே!''

கைகளைத் தலையில் அழுத்தி வைத்தவாறு அவர் தேம்பித் தேம்பி அழுதார்.

""இல்லை... இல்லை.. எந்தச் சமயத்திலும் என்னால் என்னை மன்னிக்கவே முடியாது. எந்தச் சமயத்திலும்... என் அருகிலிருந்து போ...

புழுவே!'' பாஷாவின் அருகிலிருந்து பின்னோக்கி நகர்ந்து, கைகளால் அவளை விலக்கியவாறு அவர் கத்தினார்: ""அவள் முழங்காலிட்டு விழத் தயாராக இருந்தாள். அதுவும் உனக்கு முன்னால்... என் தெய்வமே...''

அவர் வேகமாக ஆடைகளை அணிந்து, பாஷாவிடமிருந்து விலகி நடந்து வெளியேறிச் சென்றார்.

பாஷா விழுந்து படுத்து, தேம்பித் தேம்பி அழுதாள். திடீரென்று உண்டான இரக்க உணர்வில் நகைகளைக் கைவிட்டதை நினைத்து, அவள் கவலைப்பட்டாள். இந்த தர்மமற்ற செயலை அவளால் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி எந்தவொரு காரணமும் இல்லாமல் தன்னை அடித்ததை நினைத்து, அவள் மீண்டும் உரத்த குரலிலில் அழுதாள்.

_______________________________________

மொழிபெயர்ப்பாளரின் உரை

வணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று மிகச்சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

"காளை வண்டிக்காரன் செக்கு' கதையை எழுதியவர் மலையாள நவீன இலக்கியத்தின் உயர் நட்சத்திரமும், சமீபத்தில் கேரள அரசாங்கத்தின் உயர்ந்த இலக்கிய விருதான "எழுத்தச்சன் விருது' பெற்றவருமான எம். முகுந்தன். ஒரு கள்ளுக்கடையில் நடக்கும் கதை. கள்ளு குடிப்பதற்காக அங்கு வந்திருக்கும் கணாரனையும், காளை வண்டிக்காரன் செக்குவையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை கதையை வாசிக்கும் அனைவரின் மனதிலும் இறுதிவரை எழச்செய்திருக்கிறார் முகுந்தன். அவரின் வெற்றியும் அதுதான். கதையின் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கக்கூடியது... மனதை பதைபதைக்கச் செய்வது...

"லோலா' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், பிரபல திரைப்பட கதாசிரியரும், இயக்குநருமான பி. பத்மராஜன்.

அமெரிக்காவில் நடக்கும் கதை. லோலா கதாபாத்திரம் அருமையான வார்ப்பு! கதையை வாசித்து முடித்தபிறகும், லோலா நம் இதயங்களில் வாழ்வாள். அவளுக்காக நாம் நிச்சயம் கண்ணீர் சிந்துவோம். கையைப் பிடித்து நம்மை அமெரிக்கா விற்கே அழைத்துச் செல்கிறார் பத்மராஜன்!

"பாடகி' கதையை எழுதியவர் உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செக்காவ். "பாஷா' என்ற பரிதாபத்திற்குரிய பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. பாஷா தவறான வழியில் சென்று தன் வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். ஆனால், அவளின் இரக்க குணம்... அதற்கு இணையும் உண்டோ? கதையை வாசிக்கும் யாரும் நிச்சயம் பாஷாவை வெறுக்கமாட்டோம். மாறாக... அவள்மீது அன்பு செலுத்துவோம்... அவளை நம் இதயத்திற்குள் இருத்துவோம்....

இந்த மூன்று கதைகளும், இவற்றை வாசிக்கும் உங்களுக்கு மூன்று மாறுபட்ட அனுபவங்களைத் தரும். மீண்டும் சந்திப்போம்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.

அன்புடன்,

சுரா

uday011218
இதையும் படியுங்கள்
Subscribe