பரேஷன் முடிந்த நோயாளிகளைப் படுக்கவைத்திருக்கும் இந்த வார்டிற்கு நான் வந்துசேர்ந்து இரண்டு மணி நேரங்கள் ஆகியிருக்கும். மொத்தத்தில் பத்து நோயாளிகளுக்கு இங்கு படுக்கைகள் இருக்கின்றன. என் படுக்கையின் எண் 6.

இதைப் போன்ற வார்டுகள் இந்த மருத்துவமனையில் வேறும் இருக்கின்றன.

ஆபரேஷன் தியேட்டரிலிருந்து என்னை இங்கு கொண்டுவந்தவர்கள் வயதான இரண்டு பணிப்பெண்கள். "ட்ராலி'யில் படுக்கவைக்கப்பட்டிருந்த என்னை மிகவும் அனாயசமாக லிஃப்ட்டின் வழியாகவும் "காரிடார்' வழியாகவும் தள்ளிக்கொண்டு வந்தபோது, எனக்கு பயம் உண்டானது.

நான் கூறிக்கொண்டிருந்தேன்:

Advertisment

"மெதுவா... மெதுவா...''

அப்போது அவர்கள் கூறினார்கள்:

"கொஞ்சமும் பயப்பட வேண்டாம். சார்... உங்களுக்கு எந்தவொரு கஷ்டமும் இருக்காது.''

Advertisment

தொடர்ந்து... இறுதியில்... இந்த வார்டிலிருக்கும் 6-ஆம் எண் கொண்ட படுக்கைக்கு அருகில் வந்து சேர்ந்தபோது, "ட்ராலி'யை சமநிலையில் நிறுத்தி, முற்றிலும் சுத்தமான... மிகவும் எடை குறைவான, ஒரு காய்ந்த மரத்தடியை எடுத்து வைப்பதைப்போல என்னை படுக்கையில் படுக்கச் செய்தார்கள்.

போகும்போது, பெண்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள்:

"எந்தவொரு கஷ்டமும் இல்லையே?''

நானும் சிரித்துக்கொண்டே கூறினேன்:

"இல்லை... ஒரு கஷ்டமும் இல்லை.''

தொடர்ந்து... எப்போதோ... நான் தூக்கத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால், முழுமையான உறக்கமாகவும் இல்லை. யாரோ எனக்கு அருகில் வந்து நிற்பதைப்போல தோன்றியவுடன், நான் சிரமப்பட்டு கண்களைத் திறந்தேன்.

நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெரியவர்... முகத்தில் முழுமையான சாந்த நிலை... பிறகு... அன்பும்...

அவர் எனக்கருகில் மேலும் சற்று நகர்ந்து, மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டார்:

"இப்போ வேதனை இருக்குதா?''

"இல்லை' என்று நான் தலையை ஆட்டினேன்.

ஒரு சுகம்... முழுமையான சுகம்... நான் அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன். என்ன காரணத்தால் என்பதை விளக்கிக்கூற முடியாத...

மேலும் சிறிதுநேரம் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, அவர் கூறினார்:

"பிறகு... வர்றேன்.''

கைகளைக் கூப்பி படுத்திருக்கவே என்னால் முடிந்தது.

அவர் சென்றபிறகு, பரிசுத்தமான ஒரு குளிர்காற்றும் அவருடன் சென்று விட்டதைப்போல தோன்றியது.

நான் ஒரு நீண்ட பெருமூச்சுடன் பலவற்றையும் சிந்தித்துக்கொண்டு படுத்திருந்தபோது, சிஸ்டர் கேட்டாள்:

"இப்போ வந்த ஆளைத் தெரியுமா?''

"தெரியும்' என்றோ "தெரியாது' என்றோ... எதுவும் நான் கூறவில்லை.

சிஸ்டர் கூறினாள்:

"இவர்தான் பாஸ்கரன். இந்த மருத்துவமனையின் உரிமையாளர். சில நேரங்களில் இங்கு வருவார். மற்ற வார்டுகளுக்கும் செல்வார். தெரியாதவர்கள் பார்த்தால், நினைப்பார்கள்- ஏதோ ஏழையாக இருக்கும் ஒரு நோயாளியுடன் உதவிக்காக இருப்பவர் என்று.''

முத-ல் பார்த்தபோது... அவ்வாறு நினைத்து

விட்டதைப் பற்றிதான் நானும் அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.

அது... எப்போது?

ஒரு மத்திய கோடை விடுமுறை காலத்தில் ராஜாஸ்

ss

உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விசாலமான பந்தலைக் கட்டி, 31 நாட்கள் இவர் ஒரு யாகத்தை நடத்தினாரே! யாகத்தைப் பற்றிய என் ஞாபகம்- வந்தவர்கள் எல்லாருக்கும் தரப்பட்ட மதிய உணவுதான். உணவு என்றால்... அருமையான விருந்தேதான்!

அப்போது நான் நினைத்தேன்- வயதான ஏதோவொரு சமூக சேவகர் என்று.

அன்றும் நான் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. பிறகு... மருத்துவமனையில் ஒன்றிரண்டு முறை பார்த்த போதும், அறிமுகமாகிக் கொள்ளவில்லை. ஆனால், என்னை ஒரு விஷயம் எப்போதும் திகைக்கச் செய்து கொண்டிருந்தது. இந்த கிராமப் பகுதியைச் சேர்ந்த மனிதர், நகரத்தில் இவ்வளவு பெரிய ஒரு மருத்துவ மனையைக் கட்டி உயர்த்தி, மிகவும் நல்ல நிலையில் ஏன் நடத்திக்கொண்டிருக்கிறார்? பணத்திற்காக மட்டுமே இருக்காது. பணம் மட்டுமே நோக்கமாக இருந்தால் துணி வியாபாரம் செய்யலாமே? அப்படி யெதுவும் செய்யாமல்... பிறகு... இந்த விசாலமான காம்பவுண்டிற்குள் இங்குமங்குமாக உயர்ந்து நின்று கொண்டிருக்கும் கட்டடங்கள்... கட்டடங்களுக்கு மத்தியில் மிக உயரமான மரங்கள்... கொடிகள்... புல்வெளிகள்... அமெரிக்காவில் நான் இதைப்போல பார்த்திருக்கிறேன். ஆனால்... இங்கு...

வார்டில் காலியாகக் கிடந்த படுக்கைகளும் நிறைந்து விட்டன. எனினும், வார்டு முழுமையான பேரமைதி யாகவே இருந்தது. நேரம் சாயங்காலம் ஆகியிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. கடிகாரம் எதையும் பார்க்க வில்லை.

எனக்குப் பசி எடுத்தது. நான் சிஸ்டரிடம் கூறினேன்:

"சிஸ்டர்... 516-ல் என் உதவியாளர் இருக்கிறான்... ராமச்சந்திரன். அவனிடம் கொஞ்சம் வரச்சொல்ல முடியுமா?''

சிஸ்டர் சிரித்துக்கொண்டே கூறினாள்:

"ராமச்சந்திரன் அறையில் இல்லை. இங்கேயேதான் இருக்கிறார். நான் கூப்பிடுறேன்.''

இவ்வாறு கூறிவிட்டு அவள் வெளியே சென்று ராமச் சந்திரனுடன் வந்தாள். ராமச்சந்திரன் கேட்டான்:

"ஏதாவது சாப்பிட வேண்டாமா? மதியம் எதுவும்...''

நான் கூறினேன்:

"நீ அந்த அக்வாரியஸுக்குப் போய், நல்ல ஒரு தயிர்சாதத்தை வாங்கிட்டு வா. பசி இருக்கு...''

ராமச்சந்திரன் சென்றபிறகு, நான் வெறுமனே கண்களை மூடிப் படுத்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு குழந்தையின் மிக உச்சத்திலிருந்த அழுகைச் சத்தமும், பேச்சும் கேட்டன.

"பிஸ்கட் வேணும்... பிஸ்கட்... பிஸ்கட்...''

நான் தலையை உயர்த்திப் பார்த்தேன். இரண்டு படுக்கைகளுக்கு அப்பாலிருந்து கேட்டது. எனினும், எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

குழந்தை மீண்டும் கூறியது:

"பிஸ்கட்...''

குழந்தையின் தாயின் மிகவும் பலவீனமான குரல்...

"இப்போ கொண்டுவருவார் மகளே... அப்பா இப்போ கொண்டுவருவார்.''

குழந்தை-

"அப்பா வேண்டாம்... தாத்தாதான் வேணும்... நான் தாத்தாவைப் பார்க்கணும்... தாத்தா, பிஸ்கட்...''

தாயின் தேம்பி அழும்...

பிறகு... எப்போதென்று தெரியவில்லை... நெற்றியில் மிகவும் மென்மையான ஒரு கரகத்தின் ஸ்பரிசம்...

கண்களைத் திறந்து பார்த்தபோது, சிஸ்டர்...! சிஸ்டர் சிரித்துக்கொண்டே கேட்டாள்:

"கனவு கண்டுகொண்டிருந்தீர்களா?''

நான் எதுவும் கூறவில்லை.

மீண்டும் சிஸ்டர் கூறினாள்:

"அமுதுகொண்டிருந்தீங்க... கண்களில் இருந்து...''

அப்போதும் எதுவும் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. என்னால் தெளிவாகப் பார்க்கமுடியாத அந்த தாயையும் குழந்தையையும் பார்த்தவாறு, நான் சிந்தனையில் மூழ்கிப் படுத்திருந்தேன்.

மனதில் தாத்தாவும் இருந்தார்.

சிஸ்டர் கூறினாள்:

"ஐந்து வயதுதான் ஆகிறது... பெண் குழந்தை...''

நான் கேட்டேன்:

"என்ன பிரச்சினை?''

சிஸ்டர் அழுவதைப்போல கூறினாள்:

"கிட்னி...''

நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

"கிட்னி...?''

சிஸ்டர் எதுவும் கூறவில்லை.

அவளுடைய கண்களிலும் நீர் நிறைந்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

அங்கு வந்தபிறகு, முதல்முறையாக நான் அந்த முகத்தையே கூர்ந்து பார்த்தேன்.

அதிக பட்சம் இருபத்து இரண்டோ இருபத்து மூன்றோ வயது இருக்கக்கூடிய வெளிறிப்போன ஒரு இளம்பெண்...

நான் கேட்டேன்:

"மகளே... உன் பெயர் என்ன?''

இளம்பெண் கூறினாள்:

"சிகா...''

"சிகா? அது என்ன பெயர்?''

இளம்பெண் சற்று பரபரப்புடன் கூறினாள்:

"அது எதுவும் எனக்குத் தெரியாது. அப்பா வைத்த பெயராச்சே!''

ஒரு குறும்புச் சிரிப்புடன் நான் கூறினேன்:

" "சிகா' என்றால்... உச்சி, தலை என்று அர்த்தம்... சிகி என்றால் மயில் என்று அர்த்தம். சிகியை வாகனமாக வைத்திருப்பவர் சுப்பிரமணியன்.''

இளம்பெண் கூறினாள்:

"இது எதுவுமே எனக்குத் தெரியாது.''

"வேண்டாம்... "சிகா' என்பது நல்ல பெயர் என்பதைத் தெரிந்துகொண்டால் போதும்.''

சிறிதுநேர மவுனத்திற்குப் பிறகு சிகாவின் பிரகாசமான கண்களின் ஆழத்திற்குள் பார்த்தவாறு நான் சற்று தயக்கத்துடன் கேட்டேன்:

"இங்கு... சுகமா?''

அப்படியொரு கேள்வி என்னிடமிருந்து வந்ததும், அவள் அதிர்ச்சியடைந்ததைப்போல தோன்றியது.

எனினும், சிறிது நேரம் எதையோ சிந்தித்தவாறு நின்றுகொண்டிருந்த பிறகு, அவள் மெதுவான குரலில் கூறினாள்:

"சுகமா என்று கேட்டால்... சுகம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றன! அவற்றையெல்லாம்...''

நான் அவளை விலக்கினேன்.

"வேண்டாம்...''

இளம்பெண் புன்னைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். நான் மீண்டும் கண்களைமூடிப் படுத்தேன்.

உறங்கவில்லை... எனினும், கனவு கண்டேன். எந்தக் காலத்திலும் பார்ப்பதற்குக் கொடுத்துவைக்காத என் பேரக் குழந்தைகளுடன்...

என்னுடன் சிகாவும் இருந்தாள்.

===