"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி'

-என்பது வள்ளுவர் வாக்கு.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு பார்க் காமலும், ஒரு தரப்பின் பக்கம் சாயாமலும் இருப்பது தான் அறிவுள்ளவர்களுக்கு அழகு என்கிறார் அவர்.

Advertisment

சாமான்யர்களுக்கே இந்த நடுநிலையும் நேர்மையும் தேவை என்று வள்ளுவர் அறச்சட்டம் போடும்போது, நீதிமான்கள் எப்படி இருக்கவேண்டும்?

இப்போது பெரும்பாலானவர்கள் தராசுமுள் போல் நடுநிலையாக இருக்கிறார்களா? என்று பொது மக்களிடம் கேட்டால்... பலரிடமிருந்தும் மௌனமே பதிலாகக் கிடைக்கிறது.

Advertisment

ee

இன்னும் சிலரோ, அதிகார நபர்களுக்கு சட்டம் மட்டுமல்ல; நீதியும் தர்மமும்கூட வளைந்து கொடுக்க ஆரம்பித்துவிட்டது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இப்போது வேகமெடுக்கின் றன. அதைக் கண்டிக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு, அவற்றுக்கு அனுசரணையாகவும் இருக்கிறார்கள் என்று கவலையை வெளிப்படுத்துகி றார்கள்.

இந்த நிலையில்தான் ஒரு பழைய வழக்கிற்கு புதிதாக ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. அது என்ன?

2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தையும், கலவரக்காரர்களுக்கு முன் குத்புதீன் அன்சாரி கை கூப்பி நின்றதையும், எரியும் நெருப்புக்கு முன்னால் கையில் வாளுடன் அசோக் பார்மர் நிற்பதையும் எவராலும் மறந்துவிட முடியாது. அப்போது, கோத்ரா ரயில் நிலையத்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி, அங்கு வந்து நின்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு கலவரக் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் அயோத்தி சென்றுவந்த 59 கரசேவகர்கள் இறந்தார் கள். இதனால் பதட்டம் பரவியது. குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. இஸ்லாமியர் களுக்கு எதிராக நடந்த அந்தக் கலவரத்தின்போது, அங்குள்ள குல்பர்க் குடியிருப்புப் பகுதிக்குள் ஒரு கும்பல் வெறியோடு நுழைந்தது. அங்கே 29 பங்களாக்களும் 10 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இருந்தன.

அங்கே வசித்து வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாபர், வெறிக்கும்பலைக் கண்டு மிரண்டு போனார். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று அங்கிருந்த காவல்துறை உயர் அதிகாரிகளையும், அதிகாரத்தில் இருந்தவர்களையும் தொடர்புகொண்டு பதறினார். ஆனால் எல்லோரும் மௌனமாகிவிட்டார் கள். இதைத் தொடர்ந்து, முன்னாள் எம்.பி. ஜாபர், அந்த வெறிக்கும்பலால் சுற்றிவளைக்கப்பட்டு கொடூர மாகப் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அந்தப் பகுதியில் 67 பேர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. எங்கும் மரண ஓலம் எழுந்தது.

குஜராத் மாநிலம் முழுதும் அப்போது மூண்ட கலவரத்தில் ஏறத்தாழ 2 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

ee

அந்த நாட்கள், இந்திய வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாட்களாக ஆகி விட்டன.

இந்த வன்முறைகளுக்குக் காரணம் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியும், அவர் ஆட்கள் 64 பேரும்தான் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அங்கிருந்த மோடியின் குஜராத் அரசால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவோ, 2010 ஆகஸ்டில், மோடி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை கொடுக்க, அதன் அடிப்படையில் அப்போதைய முதல்வர் மோடி உள்பட 64 பேரையும் குற்றமற்றவர்கள் என்று குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.

ஆக- முதல்வராக இருந்த மோடியை விசாரிக்க, மோடியே நியமித்த விசாரணைக் குழு, மோடி நிரபராதி என்று கூறிவிட்டது.

இருந்தும், தன் கணவரை இழந்த ஜாபரின் மனைவி ஜாகியா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரோடு சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட் உள்ளிட்டவர்களும் வழக்குத் தொடர்ந்தார்கள். இதற்கிடையே, உச்சநீதிமன்றம் கோத்ரா ரயில் எரிப்பு குறித்து விசாரிக்க நானாவதி -மேத்தா ஆணையத்தை நியமித்தது. குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, மற்ற அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் என அனைவரையும் விசாரிக்கும் அதிகாரம் 2004-ஆம் ஆண்டு நானாவதி கமிஷனுக்கு வழங்கப்பட்டது.

ee

விசாரணையில் ஆஜரான குஜராத் மாநில முன்னாள் டி.ஐ.ஜி. சஞ்சீவ் பட், "அப்போதைய முதல்வரான மோடி, தவறான தகவல்களைக் கொடுத்து, காவல்துறையை மோசமாக வழிநடத்தினார்' என்று வாக்குமூலம் கொடுத்தார். அதேபோல் காவல்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஸ்ரீகுமார், "கலவரத்தின்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நாங்கள் அனுமதிக்கப்படவில்லை' என்று சொன்னார்.

குஜராத் மாநில வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டே, கலவரம் குறித்தும் மோடி குறித்தும் சில ரகசியத் தகவல்களை ஊடகங்களிடம் பகிர்ந்தார். இது முதல்வராக இருந்த மோடிக்குத் தெரிந்ததால் அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அடுத்த கொஞ்ச நாளில் அவர் கொலைசெய்யப்பட்டார். இந்த செய்திகள் எல்லாம் ஊடகங்களில் அப்போதே வந்து பரபரப்பூட்டியது.

எனினும் 2014ஆம் ஆண்டு, மோடி உள்ளிட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று நானாவதி-மேத்தா கமிஷன், அடுத்து வந்த குஜராத்தின் பா.ஜ.க. முதல்வர் ஆனந்திபென் படேலிடம் விசாரணை அறிக்கையை சமர்ப் பித்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ல், தேதி குறிப்பிடப்படாமல் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது. இத்தனை கால உறக் கத்திற்குப் பின்...

கடந்த வாரம், நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், தினேஷ் மகேஷ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. அதில் குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு உறுதிசெய்யப்படுகிறது. குஜராத் கலவரத்தின் பின்னணியில் பெரிய சதித்திட்டம் இருப்பதாகவும், அதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்றும் கோரிய மனுதாரர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவித்ததோடு, இத்தகைய மனுக்கள் மேல்முறையீட்டுக்கே தகுதியற்றவை- என்று ஒரேயடியாக அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

ee

அத்தனை பேர் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட விவகாரத்தில், அது தொடர்பான குற்றவாளிகள் கைதுசெய்யப்படாத நிலையில், மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகூட பரிசீலிக் கப்படவில்லை என்பதுதான் நீதித்துறை மீதான கவலையை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட ஜாபர் தரப்புக்கு உதவியவர்கள் மீது, இப்போது கைது நடவடிக்கைகள் பாய்கின்றன.

ஜாபரின் மனைவி ஜாகியாவுக்கு சட்ட உதவிகள் செய்த தீஸ்தா செடல்வாட்டை, குஜராத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அவரது மும்பை வீட்டில் வைத்து கைதுசெய்திருக்கிறது. குஜராத் கலவர வழக்கில், மோடிக்கு எதிராக ஆதாரமற்ற தகவல்களைத் தந்ததற்காக இந்தக் கைது என காரணம் சொல்லப் பட்டுள்ளது.

தீஸ்தா மட்டுமல்லாமல், குஜராத் கல வரத்தில் மோடிக்கும் பங்கிருக்கிறது என தைரியமாகப் பேசிய மேல்மட்ட காவல் அதிகாரிகளான முன்னாள் ஏ.டி.ஜி.பி.

ஆர்.ஜி. ஸ்ரீகுமாரும் கைதுசெய்யப் பட்டிருக்கிறார். சஞ்சீவ் பட் ஏற்கெனவே சிறையிலிருப்பதால் அவர் கைதுசெய்யப்படவில்லை.

தீஸ்தா செடல்வாட் குஜராத் கலவரத்தில் அப்போதைய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் பங்கை வெளிக்கொண்டுவர ஆர்வம்காட்டியதால், பல்வேறு முறை பல்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டார். அவரது அலுவலகமும் வீடும் எண்ணற்ற முறை சோதனைக்கு ஆளாகியது. சமூக ஊடகங்களில் அவர் குறிவைத்துத் தாக்கப்பட்டார். இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், இவரைச் சிறையிலடைக்கவேண்டுமெனவும் பா.ஜ.க.வினரால் குற்றம்சாட்டப்பட்டார்.

2003 முதல் இவர் மேல் ஏழு முறை வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் ஒருமுறைகூட அரசுத் தரப்பால் இவர்மீதான குற்றத்தை நிரூபிக்கமுடியவில்லை. சமூகச் செயல்பாடு என்ற பெயரில் இவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதிகளைப் பெற்று தனது சொந்த நலனுக்குப் பயன்படுத்திக்கொள்வதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தீஸ்தாவை சிறையிலடைக்க இத்தனை தீவிர ஆர்வம்காட்டுவதன் காரணம், குஜராத் கலவரம் நடந்தது முதற்கொண்டு, அதை மக்களும் உலகமும் மறக்கவிடாமல் செய்வதுதான் என சொல்கிறார்கள் தீஸ்தாவின் மனித உரிமைச் செயல்பாட்டின்மேல் நம்பிக்கையுடையவர்கள்.

குஜராத் கலவர வழக்கில் தீரத்துடன் ஆர்வம் காட்டிய ஐ.பி.எஸ். சஞ்சீவ் பட்டுக்கு என்னவெல் லாம் நேர்ந்ததெனப் பார்ப்போம்.

2007-ல் சஞ்சீவின் பேட்ஜிலுள்ள பலருக்கும் ஐ.ஜி. ரேஞ்சுக்கு பணி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், சஞ்சய் பட்டுக்கு பணி உயர்வு தரப்படவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் சக காவலர் களைத் தாக்கியதாகவும், பழிவாங்கியதாகவும் குற்றச் சாட்டுகள் வரத்தொடங்கின.

விவகாரங்கள் வளர்ந்து கொண்டே சென்ற நிலையில் 2011-ல் அலுவலகக் காரை சொந்த உபயோகத்துக்குப் பயன் படுத்தியதாகவும், பணிக்கு வரவில்லையெனவும் கூறி சஞ்சீவ் இடைநீக்கம் செய்யப்பட்டார். 2015-ல் சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ். பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

சஞ்சீவின் கார் ஓட்டுநரான கே.டி. பந்த், முதல்வர் மோடியின் வீட்டுக்கு தான் வண்டியை ஓட்டிய தாகவும், அங்கே சந்திப்பொன்றில் கலந்துகொண்டதாகவும் பொய் சொல்லச் சொல்லி வற்புறுத்தியதாக புகார் சொல்ல, அந்த வழக்கில் சஞ்சீவ் பட் கைதுசெய்யப்பட்டார். அடுத்தபடியாக பிரபுதாஸ் வைஷ்ணாணி என்பவர் காவல்துறை கஸ்டடியில் இறந்துபோன வழக்கில் பட்டின் பெயரும் இடம்பெற்று, ஆயுள் தண்டனை பெறுவதில் சென்றுமுடிந்தது.

2018-ல் சஞ்சீவ் பட்டின் வீடு ஆக்ரமித்துக் கட்டப் பட்டுள்ளதாக அகமதா பாத் மாநகராட்சியால் குற்றம்சாட்டப்பட்டு, வீட்டின் ஒரு பகுதி இடித் துத் தள்ளப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து, மோடி யின் பெயரைக் கெடுக்க தீஸ்தா செடல்வாட்டுடன், சஞ்சீவ் பட்டும் சம்பந்தப் பட்டிருப்பதாக புதிய வழக்கொன்று அவர்மீது பதியப்பட்டிருக்கிறது.

குஜராத் கலவர வழக் கால் தன் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்ட மற்றொரு போலீஸ் அதிகாரி கேரள மாநிலத் தைச் சேர்ந்த ஆர்.பி.ஸ்ரீ குமார். குஜராத் கலவரத் துக்குப் பின் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்த மாநில அரசு திட்ட மிட்டபோது, குஜராத் கலவரத்துக்குப் பின்னால் சட்டம் ஒழுங்கு சரிவரக் கையாளப்படவில்லையென்ற சந்தேகமிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் இவர் செய்த புகாரால், திட்டமிட்டபடி பா.ஜக.வால் தேர்தல் நடத்தமுடியாமல் போனது.

2007-ல் பதவி ஓய்வுபெற்றதால் பெரிய நடவடிக்கைகள் இன்றி ஸ்ரீகுமார் தப்பித்தார். எனினும் கடைசிக் காலத்தில் அவருக்குக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு மறுத்தது. சென்ட்ரல் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ட்ரிப்யூனலை அணுகி தனக் குச் சாதகமான தீர்ப்புப் பெற்றார். ஆனால் குஜராத் அரசு, உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து அந்தப் பதவி உயர்வை மறுத்துவிட்டது. தற்போது குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக இவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தவிரவும், நமக்கு எழுகிற கேள்வி என்னவென்றால்...

கோத்ரா கலவரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் இஷான் ஜாபரைக் கொன்றது யார்? குல்பர்க் குடியிருப்புப் பகுதிக்குள் ஜாபரையும் சேர்த்து 68 பேரை ரத்த வெறியோடு நரவேட்டை நடத்தியவர்கள் யார்? இதற்கான எந்த பதிலையும் நீதிமன்றம் தேடவில்லை.

அந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாபர் தன்னைத் தானே, படுகொலை செய்துகொண்டாரா? குல்பர்க் குடியிருப்பு வாசிகள் ஏனைய 67 பேரும் தங்களைத் தாங்களே வாளால் வெட்டிக்கொண்டு மாய்ந்தனரா? குற்றவாளிகள் இல்லாமலே அங்கே குற்றங்கள் தானாய் நடந்ததா?

இதற்கெல்லாம் நீதிதேவதையிடம் பதில் இல்லை. நீதித்துறை யாருக்காக?

இந்த நேரத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் சேர்மனாக இருந்த கேதன் தேசாயை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக வாங்கிக்கொண்டு, மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கேட்டவர்களுக்கு, ரயில் டிக்கெட் கொடுப்பதுபோல் கொடுத்தார் அவர். இந்த விவகாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட கேதன் தேசாயின் வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிட்டபோது, 1800 கோடி ரொக்கப் பணமும் 1500 கிலோ தங்கமும் சிக்கியது. தோண்டத் தோண்ட ஊழல் பூதங்கள் அவரிடம் இருந்து எழுந்தபடியே இருந்தன. அவ்வளவு பெரிய குற்றவாளியான கேதன் தேசாய், சர்வதேச மருத்துவ சங்கத் தலைவராக அமர்த்தப்பட்டார். இதற்குப் பரிந்துரை செய்தது பா.ஜ.க. அரசுதான். மேலும் பல உயர்ந்த பதவிகள் தரப்பட்டு, இன்றளவும் கேதன் தேசாய் சீராட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். இதுகுறித்தும் நீதித்துறை கேள்வி கேட்கவில்லை.

பவர்ஃபுல் மனிதர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் அவர்கள் அதுகுறித்துக் கவலைப் படத் தேவையில்லை என்கிற எழுதப்படாத சட்டமும் நீதியும் இங்கே அரசோச்சுகிறது.

எங்கள் தாயகமே, நீ எங்கே சென்று கொண்டு இருக்கிறாய்?

-ஆதங்கத்தோடு,

நக்கீரன்கோபால்