தமிழர்களின் பகுத்துண்ணும் பெருநெறி! - முனைவர் இராம குருநாதன்

/idhalgal/eniya-utayam/sharing-tamils-great-dr-rama-gurunathan

மாந்தர் உணவுக்காகப் போரிட்டது ஒரு காலம். வேட்டையாடிய போராட்ட காலம் அது. உணவுதேடல் அவனுக்குத் தேவையாகயிருந்தகாலம் அது. வாழக் கற்றுக்கொள்ளும் இக்காலத்திலோ செல்வம், வறுமை என்ற பிரிவினைக் கோடுகளைச் சமுதாயம் உருவாக்கியிருப்பதைக் காணலாம். பிளவுபட்ட இச்சமுதாய அமைப்பில் மேடுபள்ளங்கள் இக்காலம் வரை சமனப்பட வில்லை.மனித வாழ்வில் தேடல் ஒரு புறம்; தேவை ஒரு புறம். இவ்விரண்டிற்கும் இடையே மனித வாழ்வை ஒரு தீர்வில்லாத போராட்டமாகவே உலகம் கண்டுவருகின்றது.

tt

மக்கள் ஒப்பு

தீர்வில்லாத போராட்டத்திற்குக் காரணம் என்ன? மாந்தர் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாக இயங்கிச் சமுதாயக் கடமையில் தங்களை இணைத்துக்கொள்ளாததுதான். மேலும் , ஒருவனை மற்றவன் முழுமையாக அறியாதிருப்பதும் அதற்குக் காரணம். உடலால் ஒத்திருக்கிறோம், பண்பால் ஒத்திருக்கிறோமா? பண்பால் அமையும் சமூகமே மக்கள் சமுதாயம். வள்ளுவர் மக்களொப்பு என்பது பண்பில் அடிப்படையில் அமையவேண்டும் எனக் கருதுவர்,

மானிடப்பண்பு சிறக்க வழிகள் பல உள்ளன. அறமும் பொருளும் அப்பண்பை அளக்கும் கருவிகள். மனிதமேம்பாடு அவற்றால்தாம் சுடர்விட்டு ஒளிரும். அவை இரண்டுமே நலமான வாழ்விற்கு நற்றுணை ஆவன. அறம் மனித மேம்பாட்டுச் சிந்தனையாகவும், பொருள் உலகியல் வாழ்விற்கு வழிகோலுவதாகவும் திருக்குறட்கண் செறிந்து காணப்படுகின்றன. மானிடப்பண்பு இவற்றின் வழியே சிறக்க வேண்டும் என்பது வள்ளுவரது பேரவா.

சமூக வாழ்வில் அறம், பொருள் ஆகிய இரண்டையும் இணைக்கும் பாலமாக விளங்குவது பகுத்துண்ணும் பெருநெறி எனலாம். இதனால்தான் உணவைத் தலைமையான- உயிரினங் களுக்கு இன்றியமையாத- ஒன்றாக நம் தமிழர்களின் அனைத்து அறநூல்களும் வலியுறுத்திக் கூறியுள்ளன.

உயிர் வாழ்க்கைக்கு முதல் தேவை உணவு. உண்டு வாழும் வாழ்வில் மனிதன் நிறைவு காண்கிறான், நனிநாகரிகம் சிறந்த நாட்டில்தான் உண்பித்தும் உண்டும் வாழ இயலும். தமிழனின் தன்னிகரில்லாப் பண்பாடாக பகுத்துண்ணும் பண்பு திகழ்கிறது.

உழவே தலை

உண்பொருள் இயற்கை அளிக்கும் கொடையாலும் மனிதனின் உழைப்பாலும் அமைவதாகும். உழவு தரும் செல்வமே உணவுதான். அச்செல்வத்தால் நாடும் வீடும் பொலிவுறும். அச் செல்வத்தால் நாட்டின் வளமையை அறியலாம், வறுமையை அகற்றலாம். எனவேதான், நாட்டிற்குச் சிறப்பு ’தள்ளா விளையுள்’ என்பது திருவள்ளுவரால் நிலைநாட்டப்பட்டுள் ளது. அரும்பசிகளையும் நெற்பயிரையே இங்குச் சிறப்பிக்கிறார் வள்ளுவர். உறுபசி உள்ள நாடு நாடா வதில்லை. அத்தகைய பசியினைக் களைவோர

மாந்தர் உணவுக்காகப் போரிட்டது ஒரு காலம். வேட்டையாடிய போராட்ட காலம் அது. உணவுதேடல் அவனுக்குத் தேவையாகயிருந்தகாலம் அது. வாழக் கற்றுக்கொள்ளும் இக்காலத்திலோ செல்வம், வறுமை என்ற பிரிவினைக் கோடுகளைச் சமுதாயம் உருவாக்கியிருப்பதைக் காணலாம். பிளவுபட்ட இச்சமுதாய அமைப்பில் மேடுபள்ளங்கள் இக்காலம் வரை சமனப்பட வில்லை.மனித வாழ்வில் தேடல் ஒரு புறம்; தேவை ஒரு புறம். இவ்விரண்டிற்கும் இடையே மனித வாழ்வை ஒரு தீர்வில்லாத போராட்டமாகவே உலகம் கண்டுவருகின்றது.

tt

மக்கள் ஒப்பு

தீர்வில்லாத போராட்டத்திற்குக் காரணம் என்ன? மாந்தர் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாக இயங்கிச் சமுதாயக் கடமையில் தங்களை இணைத்துக்கொள்ளாததுதான். மேலும் , ஒருவனை மற்றவன் முழுமையாக அறியாதிருப்பதும் அதற்குக் காரணம். உடலால் ஒத்திருக்கிறோம், பண்பால் ஒத்திருக்கிறோமா? பண்பால் அமையும் சமூகமே மக்கள் சமுதாயம். வள்ளுவர் மக்களொப்பு என்பது பண்பில் அடிப்படையில் அமையவேண்டும் எனக் கருதுவர்,

மானிடப்பண்பு சிறக்க வழிகள் பல உள்ளன. அறமும் பொருளும் அப்பண்பை அளக்கும் கருவிகள். மனிதமேம்பாடு அவற்றால்தாம் சுடர்விட்டு ஒளிரும். அவை இரண்டுமே நலமான வாழ்விற்கு நற்றுணை ஆவன. அறம் மனித மேம்பாட்டுச் சிந்தனையாகவும், பொருள் உலகியல் வாழ்விற்கு வழிகோலுவதாகவும் திருக்குறட்கண் செறிந்து காணப்படுகின்றன. மானிடப்பண்பு இவற்றின் வழியே சிறக்க வேண்டும் என்பது வள்ளுவரது பேரவா.

சமூக வாழ்வில் அறம், பொருள் ஆகிய இரண்டையும் இணைக்கும் பாலமாக விளங்குவது பகுத்துண்ணும் பெருநெறி எனலாம். இதனால்தான் உணவைத் தலைமையான- உயிரினங் களுக்கு இன்றியமையாத- ஒன்றாக நம் தமிழர்களின் அனைத்து அறநூல்களும் வலியுறுத்திக் கூறியுள்ளன.

உயிர் வாழ்க்கைக்கு முதல் தேவை உணவு. உண்டு வாழும் வாழ்வில் மனிதன் நிறைவு காண்கிறான், நனிநாகரிகம் சிறந்த நாட்டில்தான் உண்பித்தும் உண்டும் வாழ இயலும். தமிழனின் தன்னிகரில்லாப் பண்பாடாக பகுத்துண்ணும் பண்பு திகழ்கிறது.

உழவே தலை

உண்பொருள் இயற்கை அளிக்கும் கொடையாலும் மனிதனின் உழைப்பாலும் அமைவதாகும். உழவு தரும் செல்வமே உணவுதான். அச்செல்வத்தால் நாடும் வீடும் பொலிவுறும். அச் செல்வத்தால் நாட்டின் வளமையை அறியலாம், வறுமையை அகற்றலாம். எனவேதான், நாட்டிற்குச் சிறப்பு ’தள்ளா விளையுள்’ என்பது திருவள்ளுவரால் நிலைநாட்டப்பட்டுள் ளது. அரும்பசிகளையும் நெற்பயிரையே இங்குச் சிறப்பிக்கிறார் வள்ளுவர். உறுபசி உள்ள நாடு நாடா வதில்லை. அத்தகைய பசியினைக் களைவோர் பற்றி வள்ளுவர் பலவாறு சிந்தனை செய்துள்ளார். உழுதலில் உள்ள சிறப்புக்கும், உண்ணுதலால் வளரும் உணர்வுக்கும் மதிப்பளிக்கும் வள்ளுவர், ஒவ்வொருவருக்கும் தாம் உண்பது தத்தம் உழைப்பால் வந்ததாக இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

தனக்கு உழைப்பால் கிடைத்த உணவைத் தன் வீட்டிலிருந்து கொண்டு உண்பதிலே இன்பம் காண முடியும் என்று கருத்தூன்றிய திருவள்ளுவர், இல்லாதவனுக்குக் கொடுத்து உதவாதான் செல்வம் மிக நலம்வாய்ந்த பெண், வாழ்க்கைத் துணைவனே இல்லாமல் பயனற்று முதியவளாவதை ஒக்கும் என்று கூறுகிறார்.

உழைப்பும் உணவும்

உணவு கிடைத்ததற்கு உழைக்கவும் வேண்டு மல்லவா? கஞ்சியேயானாலும் உழைப்பினால் கிடைத்ததை உண்பதை விட இனிமை வேறெதுவும் இருக்கவியலாது என எண்ணுகிறார் வள்ளுவர். உழைப்பால் வரும் உண் பொருள் ஈட்ட , உழைப்பை யும் ஒருசேரக் கருதி, வள்ளு வர் உழைப்பிற்குரிய சின்னங் களைப் புலப்படுத்திக் காட்ட தாளாற்றித் தந்த பொருள், கைசெய்தூண் மாலையவர், உழவினார் கைம்மடங்கின் இல்லை ஆகிய தொடர்களைப் பயன்படுத்தியுள்ளார். தாள் என்பதற்கு முயற்சி என்று பொருள். நிலத்தில் தாள் பதித்து உழும் உழவனின் உழைப்பைக் கருதியே அவ்வாறு கூறியுள்ளதாக வும் கருத்துரைக்கலாமா? இது மேலாய்வுக்குரியது. உழைப்பிற்குரிய சின்னங் களாய்க் காலும், கையும் குறிக்கப்படுதல் இயல்பு. இதனடிப்படையில் கால் தோய நிலம்நடந்த, உழுவித்து, வித்துப் பயனைப் பிறர்க் களிக்கும் சிறப்பே மேலோங் கியுள்ளது எனலாம்.

முதலில் பிறர்க்கு உணவளித்தலே சிறப்பிக் கப்படுகிறது. வறியவனின் அன்றாடத் தேவை உணவுதானே தவிர, பிறபொருளெல்லாம் அதன் பின்னர்தான், தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என வரும் குறட்பாவில் தக்கார் என்பதற்குப் புலவர் குழந்தை ‘ ஓயாது உழைத்தும் உண்ண உணவும் உடுக்க உடையும் உறையக் குடிசையும் இல்லாத ஏழைப் பாட்டாளி மக்கள், அன்னாரின் ஓயா உழைப்பால் வந்ததே செல்வரின் செல்வ மாதலால், அப்பாட்டாளி மக்களுக்குக் கொடுத் தலே செல்வர் கடமை’ என்று கூறியிருப்பதை நோக்க, திருக்குறள் வர்க்க உணர்வு அற்ற சமுதாயம் உருவாக வழிவகுப்பதறியலாம். மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாயும் நீர்போல, அச்சிந்தனை மேல்தட்டு வர்க்கத்தின் உணர்விலிருந்து செயலாக்கம் பெறவேண்டும் என்ற சீரிய சிந்தனை எழுகிறது. அப்போதுதான் எல்லார்க்கும் எல்லாம் என்ற சமநிறைவு எய்தி வாழ்வில் இன்பங்காண இயலும். ஒத்ததறிவான் எனவும், உலகவாம் பேரறிவாளன் எனவும் வள்ளுவர் கூறியிருப்பதனை மேற்கூறிய அடிப்படையில் ஆராயவேண்டும்.

tt

உண்பொருள் கோட்பாடு

உணவைப் பகுத்துக் கொடுக்கும் பெருவாழ்வு வள்ளுவரால் பலவிடங்களில் சுட்டப்படுகிறது. ஒப்புரவு, ஈகை, சுற்றந்தழால், விருந்தோம்பல், இல்வாழ்க்கை, நன்றியில் செல்வம், இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களில் பொது நிலையிலும், கயமை, அழுக்காறாமை ஆகிய அதிகாரங்களில் ஒரோவிடத்துத் தனிமனித நிலையிலும் உண்பொருள் பற்றிய கண்ணோட்டத்தைக் காணலாம், இவற்றிலெல்லாம் உண்ணல் என்ற வினைப் பெயர் உணவு, பொருட்பயன் துய்த்தல் முதலிய பொருண்மைகளில் எடுத்தாளப்பட்டுள்ளது. பகுத்துண்ணல் என்பதற்குப் பரிதியாரும், காளிங்கரும், நாமக்கல் கவிஞரும் உண்பொருளை மட்டும் எண்ணாது பிறபொருள்களையும் எண்ணி உரையெழுதியுள்ளனர்.

பசிப்பிணி

பசியால் வரும் தீமைகள் பற்பல; அதனை ஒரு நோய் எனக் கொண்டதால் பசிப்பிணி என்றுஅழைத்தனர்.

அதனை ஆற்றவும் அரிது: அதன் ஆற்றலும் அரிது. அக்கொடிய நோயைப் பாவியாகவும் கருதினர்.

பசிப்பிணியைப் பொறுப் பவனின் ஆற்றல் சிறந்தது. ஆனால், அதனினும் சிறந்தது அப்பணியைத் தீர்க்கும் ஈகையே என்பர் வள்ளுவர். பசிக்கொடுமையே பல கீழ்மைப் பண்பிற்கு வாயில் ஆகும். பொய். களவு, அழுக்காறு, சூது, அநீதி முதலியவை தோன்றுவதற்குப் பசியே காரணமாகிறது.

சமனிலைச் சமுதாயம்

ஓரினம் செல்வத்தால் வாழ்வதும் மற்றோர் இனம் வறுமையால் தாழ்வதும் உலகில் கண்கூடு. செல்வமுடையார் வறியவர்க்கு வழங்குவதில் தான் வாழ்க்கையறம் ஓங்கி நிற்கமுடியும். அதனால் சமுதாயம் சமனிலை காணமுடியும். பகிர்ந்தளிக்கும் பண்பு ஒன்றால்தான் அதனைச் செயற்படுத்த இயலும். ஒப்புரவு என்ற அதிகாரத்தை விளக்கும் புலவர் குழந்தையின் கருத்து இங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது.‘ விதைத்த நிலத்தில் பாத்தி கட்டுவோர் தண்ணீர் சமனாகப் பாயும் பொருட்டு ஒப்புரவு செய்தலே ஒப்புரவு செய்தல் எனப்படும். அவ்வாறே உள்ளவர் இல்லவர்க்கு உதவி, அவர் உலக வாழ்வைச் சமன் செய்வது ஒப்புரவு செய்தலாகும். ‘ என்று விளக்கியிருப்பது மேல்தட்டு வர்க்கம் , கீழ்த்தட்டு வர்க்கம் என்ற பிரிவினைக்கு விதிக்கும் தடைக்கல் நீங்கவேண்டும் என்பதையே சுட்டுகிறது.

இல்லறத்தார் கடமை

வள்ளுவர் பகுத்துண்ணும்பெருநெறியை இல்லத்தார்க்குரியகடமைகளில் ஒன்றாக உணர்த்துவர். இல்லறத்தாரிடமிருந்து அது தொடங்க வேண்டும் என்பதை இறுதி செய்கிறார். இல்லறத் தார்க்குரிய சிறந்த அறம் அதுவே. வாழ்வின் பயனாக விளங்கும் விருந்தோம்பல் மற்றவரைப் பேணிக் காப்பதை அறமாகக் கொண்டது. இல்லற வாழ்வில் பேணும் இந்த அறமே பின்னர்ப் பொதுவாழ்வில் பகுத்துண்ணல் பற்றிய சிந்தனையை வளர்ச்சிபெற வைத்தது. அன்பு அருளாகும் தன்மைபோன்றே விருந்தோம்பல் பகுத்துண்ணலாகிய அறத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள முதல் நான்கு குறள்களும் பகுத்துண்ணும் பெருநெறியைச் சிறப்பிக்கவந்தன. இல்வாழ்வான் பகுத்துண்ணும் இயல்புகள் அவற்றில் சுட்டப்பட்டுள்ளன. தன்னலம் கடந்த பொதுநலப் போக்கே அவற்றில் அடங்கி யுள்ளது.

இல்லறத்தான் தங்குதடையற்ற வாழ்வு வாழ்வதற்குத் துணை நிற்பதும், அவனே மற்றவர்க்குத் துணையாக நிற்பதும் பங்கிட்டு வழங்குதலில் உள்ளது என்பது குறள் காட்டும் மெய்ம்மை! இல்லறத்தின் தலையாய அறமாகப் பகுத்துண்ணும் நெறியே சிறப்பிக்கப்படுவதை அவற்றால் அறியலாம்.

பகுத்துண்ணலால் வரும் ஆக்கம்

உலகில் ஒருவன் தன் பசியை நீக்குதற்குரிய வழியைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதால் தான் பெறுகிறான். பொதுவுடைமை உலக அறமாகும் இடமும் அதுவே! மாந்தர் தாமாக வகுத்துக்கொள்ளும் சிறந்த சமுதாய நெறியும் அதுவே!அரசியல் சட்டங்களும் சமூகப் புரட்சி யும்இல்லாத பங்கீடு எனப் பகுத்துண்ணலைச் சிறப் பிப்பர்.

சமூக நலன் கருதி மாந்தர் ஓர் இனமாக செயல்பட வேண்டும் என்பதையே பகுத்து உண்ணும் பெருநெறி உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இதற்கு உரிய எண்ணமும் ஆக்கமும் மாந்தரிடம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் எதிர்பார்ப்பு! சமூகத்தின் நன்மைக் காகப் பகிர்ந்தளித்தலைக் குறிக்கும் அவர் ஒப்புர வறிதல் தாமாக முன்வந்து இதற்கு இயல்பாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையை நுட்பமாக சுட்டியுள்ளார்.

பகுத்துண்ணாமையால் வரும் கேடு

பிறரை உண்பித்துத்தானும் உண்ணும் பெருநெறியை வள்ளுவர் போற்றியுள்ளதைப் போலவே, பகுத்து உண்ணாமையால் வரும் கேட்டினை இகழ்ந்து உரைப்பார். பொருளைச் சேமித்து வைத்து அப்பொருளைத் தானும் உண்ணாமல், மற்றவருக்கும் தராமல் உள்ளவன் இறந்தவனே ஆவான் என்பர். அவன் ’நடுவூருள் நச்சு மரம்’ எனச் சூட்டியுள்ளார் .கொடுக்காதவன் செல்வம் பருவப்பெண் மணம் ஆகாமலேயே புதியவள் ஆவதைப் போன்றது எனவும் எடுத்துக்காட்டுவர்.

பாராட்டும் இகழ்ச்சியும்

பகுத்துண்ணும் வாழ்வுடையவனுக்கு நிறைவான வாழ்வு கிட்டும். அவனே வானத்தவர்க்கு நல்விருந்து ஆவான். மண்ணகத்துக்கும் விண்ணகத் துக்கும் ஒப்புரவை விட நல்ல பண்புள்ள செயல் பிறிது இல்லை எனக் கூறுவர். துறவிகளுக்கும் கூட உணவு தருதலுக்கே இல்லறத்தார் படைக்கப்பட்டுள்ளனர் என்று கருதி வியக்கிறார்.

பகுத்துண்ணாது காலம் கழிப்பவனைக் குறளாசான் எள்ளி நகையாடுவர். எவ்வுயிரும் ஒத்தது என்று கருதி உதவுபவனே உயிர் வாழ்பவனா வான். அவன் வாழ்வதில் பொருள் உண்டு. மற்றவர் இறந்தவராகவே கருதப்படுவர். பிறர்க்குப் பொருளைப் பகுத்துக் கொடுத்து இன்பம் காணாதவன் கல்நெஞ்சம் எனவும், எனவும் நச்சு மரம் போல்பவன் எனவும், சமூகத்திற்கு நோய் போன்றவன்எனவும்இகழ்ந்துரைக்கிறார்.

பகுத்துண்ணலே தலையாய அறம்

தானும் உண்ண வேண்டும், பிறரை உண்பிக்க வும்வேண்டும் என்பதே வள்ளுவர் காண விழைந்த பெருவாழ்வு. வறியார்க்கு ஒன்று அளித்தல், அழிபசி தீர்த்தல், ஈத்துவக்கும் இன்பம் ஆகிய நல்லறங் களையே பகுத்துண்ணும் நெறி கொண்டுள்ளது. பொருளை இல்லாதவர்க்குத் தருபவனே மானிடப் பிறவியின் பயனைஅடைவர்.

பண்பாலும் செயலாலும் ஒத்த அறிவுடையோர் தொகுத்த அறநூல்கள் தலையாய அறங்களில் பகுத்துண்ணலையே பெருநெறியாகக் கருதின. மக்கள் நலம் சிறக்கவும், மானிடம் ஒன்றுபடவும் வள்ளுவர் கூறிய பேரறமாகப் பகுத்துண்ணும் பெருநெறி திகழ்கிறது.

“பாத்தூண் உடைத்தாயின் என்று உணவைச் சொன்னது உணவு ஒன்றை மட்டும் பகுத்துக் கொடுக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அன்று. உயிர்களுக்கு உணவு முக்கியமானதால் உணவைச் சொன்னார். அதனால் தனக்குள்ள நலங்களை அவை இல்லாத பிறருக்கும் பகுத்துக் கொடுக்கவேண்டும் என்பதே மறைந்து நிற்கும் பொருள்” என்ற நாமக்கல் கவிஞரின் உரை எண்ணுதற்குரியது.

குடிகள் நன்னிலை அடைதற்கும் தன்னிறைவு பெறுவதற்கும் பகுத்துண்ணும் பெருநெறி காரணமாகிறது. உண்பொருள் முதலிய செல்வத் தைப் பகிர்ந்துண்ணும் நாடும் ஊரும் அமைதி காணும்; பூசல் தவிர்க்கும் ;ஒற்றுமை ஓங்கும்; பகுத்துண்ணும் பெருநெறியே அன்புப் பயிர் வளர்க்கும்; மனிதநேயம் கருதும்; மானிடப் பண்புகள் நல்ல நெறியில் செல்வதற்கு உதவும்; உலகத்திற்கு நல்வழி காட்டும்.

அறம் பொருள் ஆகிய இரண்டு சிந்தனைகளுக்குப் பாலமாக விளங்குவது பகுத்துண்ணும் பெருநெறியே!

பாங்குடைய வாழ்வு என்பது வள்ளுவர் நோக்கில் பிறருக்குப் பங்கிட்டு வழங்குதலையே குறிக்கும்.

உண்பொருள் முதலிய செல்வங்களை உழைத்துப் பெற வேண்டும்; உழைத்ததைப் பிறருக்குஅளித்துஇன்பம் பெற வேண்டும்.

சமநிலை பொருண்மை ஓங்குவதற்குப் பகுத்து உண்ணலே அடிப்படை. பகிர்ந்தளித்தலால் வறுமை அகலும். வர்க்க உணர்வு நீங்கும் அன்பு அருளாகும் தன்மைபோலவே, விருந்தோம்பல் பகுத்துண்ணலாகிய அறத்தை வெளிப்படுத்தும். பகுத்துண்ணல் என்பது உண்பொருள் செல்வம் அதுபிற செல்வம் ஆகியவற்றை உள்ளிட்டதே ஆகும்.

uday010224
இதையும் படியுங்கள்
Subscribe