துவும் கடந்து போகும், என்ற ஆழ்ந்த நம்பிக்கை பல நேரங்களில் பலனைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இனி சந்திரமுகியின் ஆட்டம் தொடரும் என்று பேய் படத்தின் நடுவில் டைட்டில் கார்டு போடுவதைப் போல, ஜனவரியிலேயே போடப்பட்ட கொரானா கார்டை கவனிக்காத அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இப்போது, பேரரசுக்கு அடிபணியும் சிற்றரசுகளைப் போல் கூனிக்குறுகிப் போய் நிற்கின்றன.

அடுப்பங்கரையில் அழுக்குப் படிந்த அஞ்சரைப் பெட்டிக்குள் அடைபட்டுக் கிடந்த மிளகும், சீரகமும் இஞ்சி எலுமிச்சைச் சாறுடன் தன் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறது தினமும் !

dd

வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை என்ற உண்மை சுவரில் அறையப்பட்ட ஆணியைப் போல் மனதில் அறைவது உண்மையே, ஆய்வுக் கூடங்களின் இரசாயனக் குப்பிகள் தங்களை திரவங் களால் நிரப்பிக் கொண்டன. கூண்டில் அடைபட்ட பரிசோதனை எலியின் நிலைமையில் இன்று மனிதன் தன் வீட்டுக் கூண்டில் அடை பட்டு இருக்கிறான்.

Advertisment

எது அத்தியாவசியம் என்பதை கொரானா நமக்கு உணர்த்தியுள்ளது, மிக நீண்ட வரிசையில் நிற்கும்போதும் நம்மால் கடக்க முடியாத கஷ்டத்தைத் தாங்கும் போதும் நண்பன் பட விஜய் போல, ஆல் இஸ் வெல் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறொன்றும் நாம் செய்யப்போவதில்லை.

இத்தாலியில் புதைக்கப்பட வேண்டிய பிணங்களுக்காக ஒரு விளையாட்டு மைதானமே இடுகாடாக மாறியுள்ளது என்ற செய்தியைக் கேட்கும் போது அந்த மைதானம் சுமந்து செல்லும் இருட்டுப் பக்கங்களை எண்ணியும் நாம் சுதாரிக்கவில்லையெனில், நம் கண் முன்னே ஒரு சைக்கோத்தனம் வந்து ஓடிப்பிடித்து விளையாடுகிறது என்பதுதானே நிஜம்.

ddஇந்த உலகம் நம் வீட்டு வாசலில்தான் தொடங்குகிறது என்ற எண்ணம்தான் நம்மை இன்னமும் உயிர்ப்புடன் வைக்கிறது. தனி ஒருவன் திரைப்படத்தில் சொன்னாற் போல ஒரு சிறு குற்றத்தின் பின்னணி பெரிய குற்றம். நாம் ஆழ்துளையில் புழுவாகும் மீனுக்காய் கடலே மிதக்கும் அளவிற்கு கண்ணீர் விடுவோம். ஆனால் அந்த தூண்டில் மீன் உயிரைப் பணயம் வைத்தால்தான் நாம் மீன் குழம்பும் மண் பானையும் என்று பாட்டுப் பாடிக்கொண்டு எச்சில் ஊறிய நாவை மீன் குழம்பால் குளிப்பாட்ட முடியும் என்று நினைப்பதில்லை, நம் உணவிற்காக இறக்கும் பல மீன்களுக்காய் நாம் உச்சுக் கொட்டுவதில்லை.

Advertisment

அப்படித்தான் ஊரடங்கிற்காக நாம் காத்திருக்க யோசிக்கிறோம்.

’நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியேv வாய்ச் சொல்லில் வீரரடி’ என்ற பாரதியின் பாடல் வரிகளை நினைவூட்டுகிறவர்கள் இங்கே அதிகம்.

வாகனத்தைத் தடை செய்தால் நெருப்பு வைத்து தற்கொலையும், காலையில் தொலைக்காட்சியில் பார்த்த சினிமாவின் ஹீரோத்தனத் தாக்கத்தையும் காத்திருக்கும் காவலாளியிடம் காட்டுகிறோம். அதனால் பெறப்போகும் விபரீதத்தை உணரவில்லை. புதைக்கப்படும் சடலங்களின் உடலில் மிச்சமிருக்கும் கோடித் துணியை உரு வும் வெட்டியா னின் நிலையை ஒத்தது அல் லவா நம் சுய நலம்.

நல்லார் ஒருவர் உளரேல் ஒருத்தர் இருந் தாலே போதும்ன்னு சொல்றார் திருவள்ளுவர். அடுத்த வீடுதானே தீப்பற்றி எரிகிறது என்ற கலாச்சாரம் மிகுந்துவிட்ட காலத்தில் பக்கத்து வீட்டுக்கு நோய்த் தொற்று ஏற்படக் கூடாது என்ற பொதுநலம் கலந்த சுயநலம் ஆபத்தில்லாத காட்டாறைப் போன்றது.

நம்மளோட சின்னத் தவறுகள்ன்னு நாம நினைக்கிறது முகம் தெரியாத ஒருவருக்கு உயிர் போற பிரச்சனையாகக் கூட ஆகலாம். நீங்க ஐரா படம் பார்த்து இருப்பீங்க படம் பார்த்து முடிஞ்சதும் ஒருத்தர் சமூக வலைத் தளத்தில் ஒரு கேள்வியைக் கேட்டு இருந்தார். லிப்டை நிறுத்தாதது எல்லாம் ஒரு தப்பாங்க அதுக்குப்போய் கொலை செய்வாங்களான்னு ?

நாம் நம் அவசரங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம் வேறு யாரைப் பற்றிய கவலையும் நமக்கு இருப்பதில்லை. ஒரு பொது இடத்தில் அடுத்தவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குவதில்லை என்பதே படத்தின் குற்றச்சாட்டு, அந்த சில நிமிட நேரம் காத்திருந்தால் அவளுக்கு வழிவிட்டு இருந்தால் ஒரு பெண்ணின் இறப் பைத் தடுத்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் வெறும் ரணங்களை மட்டுமே கொண்ட அந்த பெண் ணின் ஆசைகள் நிறைவேறாமலே போவதைப் போல படம் முடிந்திருக் கும்.

இது நம் கண்ணுக்குத் தெரிந்தது ஒரு இரண்டரை மணி நேரத்தில் ஒருவரின் வாழ்வின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவினை காட்டி முடித் திருந்தார்கள் ஆனால் வாழ்க்கை இரண்டரை மணி நேரத்தில் முடிவடைவது இல்லையே ?! வாழ்க்கைக்கும் ஒரு ஸ்பீட் பிரேக்கரும், பேரிகார்டும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்.

பத்து கட்டளைக்கு நடுவில் முழிபிதுங்கும் மணல்கயிறு விசுவின் நிலைதான் இந்த உள்ளிருப்பில் நாம் அனைவரும் அடைந்திருக்கும் ஒன்று. மன அழுத்தங்கள் அதிகரிக்க நாம் தேர்ந் தெடுக்கும் களங்கள் தொலைக்காட்சியும், மொபைலும் மட்டுமே ஆனால் அதிலேயே மன பிறழல்கள் அதிகரிக்கிறது.

மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களாய் வெகு சரியான நேரத்தில் வியாபாரத் தந்திரத்தை கையாளும் ஆசாமிகளாக சில நிகழ்வுகள் ஹேஸ்டேக் தயாரித்து நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று ஒரு செல்பி எடுத்து அந்த டிவி சேனலின் ஆப்பை தரவிறக் கம் செய்து புகைப்படம் அனுப்பவேண்டுமாம்.

அப்படி அனுப்பினால் அழகான புகைப்படங்கள் டிவியில் காட்டப்படும். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு எச்சரிக்கையான விழிப் புணர்வு என்று தோன்றும், ஆனால் மறைமுகமாக பார்த்தால் அதில் விழித் துக்கொண்டிருக்கும் வியாபாரம் புரியும்.

நிகழ்ச்சிகள் கொட்டிக் கிடக்கும் அந்த டிவியின் ஆப்பை டவுன்லோட் செய்ய ஒரு தொகை, பிரைம் நிகழ்ச்சியை ரசிக்க ஒரு தொகை, இது போக எப்போதடா நாம் பதிவிட்ட புகைப்படம் வரும் என்று பார்க்கத் துடித்து அந்த சேனலையே வைத்துப் பார்ப்பது இப்போது புரிகிறதா ஒரு வியாபாரத்தின் துவக்கம்.

இதேபோல்தான் உன் சோப்பு ஸ்லோவான்னு கேட்பதும், உப்பின் ஞானமும், கிடைக்காத நேரத்தில் சரக்கைப் பதுக்கி வைக்கும் ரேஷன் ஆசாமிகளைப் போல ஆகிவிட்டார்கள் இவர்கள்.

தினசரி நம்முடைய காத்திருப்பு கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கு, நாம் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருத்தருக்காக காத்திருக்கிறோம் ஆன்லைனில் ஆர்டர் பண்ண பொருட்கள் வாங்க, மருத்துவமனையில் ஊசி போட, காசைக் கொடுத்து ஹோட்டல் சர்வர் எப்போ வருவார்ன்னு பக்கத்து டேபிளில் நிரப்பட்டு இருக்கும் தட்டுகளைப் பார்த்து ஏங்கிக்கொண்டு இருப்போம், அதே போல்தான் இன்னைக்கு வீட்டுக்கு வேலை செய்ய வர்றாங்களான்னு, பாலில் இருந்து குப்பைத் தொட்டி வரை. பல நேரங்களில் நெருங்கியவர்களின் மூலம் கிடைக்கப்படும் அன்பிற்கு இப்படி நிறைய காத்திருப்போடு இன்னும் கொஞ்சநாள் காத்திருப்போம் உலகத்தைக் காக்க ! கொரானாவில் இருந்து ஸ்வீடனில் ஒருவர்தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்க புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, உங்களுக்கு எத்தனை வீடு இருக்கிறது நீங்கள் எவ்வளவு பிரபலம் என்பதெல்லாம் இப்போது முக்கியமில்லை உங்கள் உடலில் எத்தனை சதவிகிதம் எதிர்ப்பு சக்தியிருக்கிறது என்பதுதான் முக்கியம். எனவே...

தனித்திருந்து தவிர்ப்போம்.