பதற வைக்கும் பாலியல் குற்றங்கள் - திலகவதி ஐ.பி.எஸ்

/idhalgal/eniya-utayam/sexual-offenses-tilakavathi-ips

"எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்று பாரதி பாடி ஏறக் குறைய ஒரு நூற்றாண்டு ஆகப் போகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு ஆகப் போகிறது. ஆனால் இன்றைக்கும் இந்தியாவில் நகரம், கிராமம் என்ற பேதங்களின்றி எங்கெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை உலுக்கிய டெல்லி நிர்பயா வழக்கு, முதலாவது பாலியல் கொடுமையும் அல்ல. சில தினங் களுக்கு முன் காஷ்மீரில் சிறுமி ஆசிபா சிதைக்கப்பட்ட வழக்கு கடைசிக் கொடுமையும் அல்ல.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகின்றன. அழகிய காஷ்மீர் ரோஜா மொட்டு ஆசிபாவின் குருதி ஈரம் காய்வதற்குள் உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு சிறுமி வன்புணர்வு. அதற்கடுத்த சில நாட்களிலேயே மேற்கு வங்கத்தில் ஒரு பெண் கும்பலின் வன்புணர்வுக்கு ஆளானாள்.

கடந்த ஏப்ரல் இறுதியில் வேளச்சேரி -

சென்னை மின்சார ரயிலில் மகளிர் பெட்டியில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறாள். பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் வெளிவராத நாள்களே இல்லை என்றாகிவிட்டது.

இருவர் அமரக்கூடிய சோபாவில் கணவன் மட்டும் அமர்ந்திருக்க, மனைவியாகப் பட்டவள் இழுத்துப் போர்த்திக் கொண்டு பவ்யமாக நிற்கும் அந்தக் கால கறுப்பு வெள்ளை புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘இனி எங்கள் எதிர்காலமும் இதுபோல திரும்பிடுமோ’’என்று அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் முகநூலில் எழுதியிருந்தார். இப்படியாக வேலைக்குப் போகும் பெண்களையெல்லாம் கலவரத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது அ

"எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்று பாரதி பாடி ஏறக் குறைய ஒரு நூற்றாண்டு ஆகப் போகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு ஆகப் போகிறது. ஆனால் இன்றைக்கும் இந்தியாவில் நகரம், கிராமம் என்ற பேதங்களின்றி எங்கெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை உலுக்கிய டெல்லி நிர்பயா வழக்கு, முதலாவது பாலியல் கொடுமையும் அல்ல. சில தினங் களுக்கு முன் காஷ்மீரில் சிறுமி ஆசிபா சிதைக்கப்பட்ட வழக்கு கடைசிக் கொடுமையும் அல்ல.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகின்றன. அழகிய காஷ்மீர் ரோஜா மொட்டு ஆசிபாவின் குருதி ஈரம் காய்வதற்குள் உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு சிறுமி வன்புணர்வு. அதற்கடுத்த சில நாட்களிலேயே மேற்கு வங்கத்தில் ஒரு பெண் கும்பலின் வன்புணர்வுக்கு ஆளானாள்.

கடந்த ஏப்ரல் இறுதியில் வேளச்சேரி -

சென்னை மின்சார ரயிலில் மகளிர் பெட்டியில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறாள். பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் வெளிவராத நாள்களே இல்லை என்றாகிவிட்டது.

இருவர் அமரக்கூடிய சோபாவில் கணவன் மட்டும் அமர்ந்திருக்க, மனைவியாகப் பட்டவள் இழுத்துப் போர்த்திக் கொண்டு பவ்யமாக நிற்கும் அந்தக் கால கறுப்பு வெள்ளை புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘இனி எங்கள் எதிர்காலமும் இதுபோல திரும்பிடுமோ’’என்று அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் முகநூலில் எழுதியிருந்தார். இப்படியாக வேலைக்குப் போகும் பெண்களையெல்லாம் கலவரத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது அன்றாடச் செய்திகள். இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தால் அந்தக் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு அது சட்டமாகி இருக்கிறது.

இதிலும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்வது மட்டும்தான் பெருங்குற்றமா?

thialagavathi

அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுமிகளையோ பெண்களையோ பாலியல் வன்புணர்வு செய்தால் அது பெருங்குற்றமாகாதா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்களால் எழுப்பப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதால் மட்டுமே பாலியல் குற்றங்கள் ஒழிந்துவிடப் போவதில்லை. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பான்மையினர் விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

எனவே பெண்களின் பாதுகாப்புக்கு வேறு வழிமுறைகளையும் பின்பற்றுவது அவசியமாகிறது.

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்னும் குறள், உடலியல் நோய்களுக்கு மட்டுமே பொருந்துவதன்று. உளவியல் நோய் களுக்கும் இது பொருந்தும். பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதும் ஒருவிதமான மனநிலைக் கோளாறே.

திரைப்படங்களில் காணும் கவர்ச்சிக் காட்சிகளும், இணையத்தில் எளிதாகக் காணக் கிடைக்கும் ஆபாசப் படங்களும் மனித மனங்களில் வக்கிரத்தை வளர்க்கின்றன. வீதிக்கு வீதி முளைத்திருக்கும் சாராயக் கடைகளும் வக்கிரம் பிடித்த மனங்களில் போதையேற்றி வெறியூட்டுகின்றன.

அதாவது, கவர்ச்சிகர உடையணிந்த பெண் கூட்டத்தில் நடமாடும்போது தப்பித்துக் கொள்கிறாள். கண்ணியமாக உடையணிந்த வேறொரு பெண்ணோ, சிறுமியோ தனிமையில் செல்லும்போது பாதிக்கப்படுகிறாள். ஓரிடத்தில் அடக்கி வைக்கப்படுகிற காம வெறி, வேறிடத்தில் அகோர வடிவெடுக்கிறது, சுருங்கச் சொன்னால், பாவம் ஓரிடம் பழி வேறிடமாக முடிகிறது.

எனவே தங்கள் பாதுகாப்பைக் கருதாவிடினும், மற்ற பெண்களின் பாதுகாப்பைக் கருதியேனும், தன் உடலை போகப் பொருள் போல காட்சிப்படுத்தும் பிழையைப் பெண்கள் செய்யத் தகாது. அடுத்ததாக, ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே நல்லொழுக்கத்தைப் போதித்து வளர்க்க வேண்டும். பெண்ணை சக மனுஷியாக மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். விவரம் புரியும் வயதில், பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை ஆண் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி வளர்ப்பதும் பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தில் காமத்துக்குப் பதிலாக கரிசனத்தை வளர்க்கும்.

பாலியல் குற்றங்கள் அனைத்துமே காவல் நிலையப் புகார்களாகக் கொண்டுவரப்படுவதில்லை.

பாலியல் புகார்கள் நீதிமன்ற வழக்குகளாக வரும்போது, நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி திரும்பத் திரும்பச் சொல்ல நேரிடுகிறது. அதுபற்றிய செய்திகள் திரும்பத் திரும்ப வெளியாகும்போது, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பரிதாபமாகப் பார்க்கிறவர்கள் ஒரு சாரார். பரிகாசமாகப் பார்க்கிறவர்கள் இன்னொரு சாரார். இரண்டையுமே அந்தப் பெண்ணால் ஜீரணிக்க முடிவதில்லை என்பதாலேயே தனக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பல பெண்கள் புகார் தர முன்வருவதில்லை. இதுவே பாலியல் குற்றவாளிகளுக்கு சாதகமாகப் போய்விடுகிறது. எனவே, பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்கள் அனைவரும் துணிச்சலுடன் புகார் அளித்து வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

சில பெண்கள் தங்களது சொந்த தகப்பன், பெரியப்பா, சித்தப்பா போன்ற நெருங்கிய குடும்ப உறவுகளாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும் நடக்கிறது. அம்மாதிரி சந்தர்ப்பங்களில் விஷயம் வெளியில் தெரிந்தால் குடும்ப மானம் போய்விடுமே என எண்ணி அந்தக் குடும்பத்து பெண்கள் மூடி மறைத்துவிடுவதும் உண்டு. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய தயக்கம்.

பெண்கள், தங்களை போலீஸும், சமூகமும் தான் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளத் துணிவு பெறவேண்டும். தற்காப்புக் கலைகளைக் கற்க வேண்டும். கயவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள மிளகுத் தூள் தெளிப்பானை எப்போதும் கைப்பையில் வைத்திருக்க வேண்டும்.

thialagavathi

டெல்லியில் ஒருவர் நங்ய்ள்ர்ழ்ஹ் ள்ற்ண்ஸ்ரீந்ங்ழ் என்னும் உணர்விக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அதைப் பெண்கள் தமது உள்ளாடையில் ஒட்டிக் கொண்டால், அந்தப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அந்த உணர்விக் கருவியிலிருந்து ஐந்து நபர்களுக்குத் தகவல் (குறுஞ்செய்தி வாயிலாக) செல்லும். அந்த நேரத்தில் அப்பெண் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதையும் அந்த ஐந்து நபர்களுக்கு கூகிள் மேப் வரைபடமாகக் காட்டும்.

அலுவலகப் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்கள் உடன்பழகும் ஆண்களிடம் ஒரு வரையறை வைத்துக் கொள்வது நல்லது. அலுவலக உறவுகள் வேறு, குடும்ப உறவுகள் வேறு என்கிற புரிதலும் வேண்டும்.

தெரிந்த ஆண்களிடமோ, நண்பர்களிடமோ எந்தக் காரணத்தை முன்னிட்டும் பண உதவி பெறுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்குப் பண உதவி செய்யும் ஆண், அதை முன்னிட்டு அவளிடம் சலுகை எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

அலுவலகம் செல்வதற்கும், வீடு திரும்புவதற்கும் ஜன நடமாட்டம் மிகுந்த சாலைகளையே பெண்கள் பயன்படுத்த வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து ஆள் நடமாட்டம் அற்ற சந்துபொந்து தெருக்கள் வழியாகச் செல்லக் கூடாது.

தொடர்ந்து சில நாட்களாக யாரேனும் தன்னைப் பின்தொடர்வதாகத் தெரிந்தால், அதைப் பற்றி தன் குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும்.

இரவில் தாமதமான நேரத்தில் அலுவலகம் பணி முடிந்து வீடு திரும்ப நேர்ந்தால், தனக்கு வாகனத்தை ஏற்பாடு செய்து தர கேட்க வேண்டும்.

இரவு நேரங்களில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் செல்லாமல் பகல் நேரங்களில் செல்ல வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு என்பது காவலர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்கும், அரசுகளுக்கும் அதில் பங்கிருக்கிறது.

பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் சொல்கிறார்.

‘இந்தியாவை விட மக்கள் தொகை அதிகமாக இருப்பினும் உலக அரங்கில் சீனா பொருளாதார வல்லரசாக இருக்கிறது. அந்நாட்டின் முன்னேற்றத் திற்கு பெண்களின் சமூகப் பங்களிப்பே காரணம் என்கிறார். இந்தியாவில் பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகரித்தால் மட்டுமே நம் நாடும் பொருளாதார வல்லரசாக முடியும்.

அதற்கேற்ப, பெண்களுக்கும் தங்கத்தின் மீதும் நவ நாகரிகங்களின் மீதும் கொண்டிருக்கும். மோகத்துக்கு மாற்றாக, தங்கள் அறிவின் மீதும் திறமையின் மீதும் நம்பிக்கையை வளர்ப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்
Subscribe