லையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.

-என்பார் வள்ளுவர்.

உயர்வாக எண்ணும்படி இருக்கவேண்டியவர்கள், இழிவான செயலிலில் இறங்கினால் அவர்கள், தலையில் இருந்து உதிரும் ரோமத்திற்கு ஒப்பானவர்கள் என்பதே இதன் பொருள்.

Advertisment

வள்ளுவர் சொல்லும் இலக்கணத்தின்படி, சமூகத்தின் மதிப்பு மிக்க இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் ஒருவர், கீழ்த்தரமாக நடந்துகொண்டால் அவரை, உதிர்ந்த ரோமத்தைப்போல் தூக்கி எறியவேண்டும். குப்பைக் கூளங்களோடு கூட்டிப் பெருக்கி, குப்பை மேட்டில் எறியவேண்டும்.

pssb

அப்படி இப்போது உதிர்ந்திருக்கும் ஒரு ரோமத்தின் பெயர் ராஜகோபால். சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில், ஆசிரியர் என்ற போர்வையில், கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக உலவிவந்த இந்த ராஜகோபால், பல வருடங்களாக, அங்கே படிக்கவந்த மாணவிகளுக்கு பாலிலியல் தொல்லை கொடுத்து அலற வைத்திருக்கிறான்.

Advertisment

இந்த விவகாரம் வெளியே வந்ததும், காவல்துறை அவனை விசாரித்துவிட்டு, கடந்த 25 ஆம் தேதி கைது செய்தது. வள்ளுவர் பாணியில் சொல்வதென்றால் அந்த உதிர்ந்த ரோமத்தைத் தூக்கி, சிறைக் கொட்டடியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டது காவல்துறை.

மாணவிகளிடம் இதுபோல் அத்துமீறும் ஆசிரியர்கள் பலரையும், அங்கங்கே காவல்துறை கைது செய்து, தொடர்ந்து சிறையில் தள்ளிவருகிறது. அதையெல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்த ஒரு கும்பல், பத்மசேஷாத்ரி ராஜகோபால் கைதானபோது மட்டும் பொங்கி எழுகிறது. அவன் மீது எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? அவனைக் கைது செய்து, பத்மசேஷாத்ரி பள்ளியை எப்படி கேவலப்படுத்தலாம்? என்று அந்தக் கும்பல் வரிந்துகட்டி நிற்கிறது. இவர்களை எல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? அந்தப் பள்ளியில், தொடர்ந்து ஒருவன் மாணவிகளுக்குப் பாலிலியல் தொல்லை கொடுத்துவருகிறான் என்றால், அவனை விசாரிக்கக் கூடாதா? குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்த அவனை கைதுசெய்யக் கூடாதா?

ஆபாச ஆசிரியனை கைது செய்த விவகாரத்தை, சிலர் பிராமணர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவும், மதரீதியான பிரச்சினையாகவும் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், அந்தப் பள்ளியின் பின்னணியில்... ’பெரும்புள்ளிகள்’ என்ற பெயரில் இருக்கும் ’கரும் புள்ளிகள்தான். அவர்கள் யார் என்று யாரும் தோண்டித் துருவத் தேவை யில்லாதபடி, ஆபாச ஆசிரிய னைக் காப்பாற்ற முயலும் அந்தப் பள்ளிக்காக, பொதுவெளியில் அவர்கள் கூச்சமில்லாமல் வரிந்துகட்டி வந்துகொண்டே இருக்கிறார்கள்.

*

நாம் இந்த விவகாரத்தை மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ பார்க்கவில்லை. மாணவிகள் பாலிலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார் கள் என்றால், அது எந்தப் பள்ளியாக இருந்தாலும் நம்மால் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

pssb

பத்மசேஷாத்ரி பள்ளியை, உயர்தரப் பள்ளி என்றும், அங்கே கெடுபிடி அதிகம் என்றும், அதில் சீட் வாங்குவது என்பது குதிரைக் கொம்பு என்றும் அதற்கு ஒரு ஒளிவட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றி இரும்புக்கோட்டையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதன் லட்சணம் இப்போது வெளியே வந்துவிட்டது.

ராஜகோபால் அப்படி என்ன செய்திருக்கிறான்? மாணவிகள் குமுறியதில் இருந்து வெளிவந்த வெட்கக்கேடான விசயங்களில் சில...

* இந்த கொரோனா நெருக்கடிக் காலத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பாடம் நடத்திவந்த அவன், மாணவிகளின் அழகை வர்ணித்து மோசமாக சாட் செய்திருக்கிறான்.

* புடவை கட்டிக்கொண்டு வா என்று மாணவிகளை நிர்பந்தித்து, அப்படி புடவையோடு வந்த மாணவிகளிடம், புடவையில் அழகாக இருக்கிறாய்.. இதுவும் இல்லாமல் இருந்தால் இன்னும் அழகாக இருப்பாய் என்று வெட்கம் இல்லாமல், உறுத்தல் இல்லாமல், வழிந்திருக்கிறான்.

* குளியலறையில் குளித்துவிட்டு, அப்படியே இடுப்பில் மட்டும் துண்டைக் கட்டிக்கொண்டு, அரை நிர்வாணமாக வந்து ஆன்லைனில் பெண்பிள்ளைகளை சங்கடப்படுத்தும் விதமாகப் பாடம் நடத்தியிருக்கி றான். இதைவிடவும் கொடுமையாக...

* மாணவிகளிடம் அவர்களின் நிர்வாணப் படங்களைத் தனக்கு அனுப்புமாறு மிரட்டியிருக்கி றான். அப்படி மிரட்டி வாங்கிய 100லிக்கும் மேற்பட்ட படங்கள் தன்னிடம் இருந்ததாகவும், அதனைத் தனது மன்மத சகாக்களான 2 ஆசிரியர்களுடன் சேர்ந்து ரசித்து வந்ததாகவும் அவனே, போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறானாம். கடந்த 5 ஆண்டுகளாக இப்படி அவன் நடந்து வந்ததாகவும் சொல்லிலி இருக்கிறான்.

* இதையெல்லாம் தாண்டி பள்ளிக்கூடத்தில் அவன் இன்னும் என்னென்ன வக்கீர லீலைகளை எல்லாம் அரங்கேற்றியிருக்கிறான் என்பதெல்லாம் காவல்துறை விசாரித்து வருகிறது. அதற்குள் நாம் செல்லவிரும்பவில்லை.

*

pssb

இத்தனைக் கூத்துக்களும் இப்போது வெளியே தெரிவதற்குக் காரணமானவர், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவியான கிரிபாளி என்பவர்தான். மாடலிலிங் பெண்ணான அவர் டிவிட்டரில் போட்ட பதிவுதான் ராஜகோபாலை அப்பட்டமாக அம்பலப் படுத்தியிருக்கிறது. அந்த டிவிட்டில் கிரிபாளி, பி.எஸ்.பி.பி. பள்ளியில் இப்போது படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம், நீங்கள் படிக்கும்போது, காமர்ஸ் வாத்தியார் ராஜகோபால், மோசமாக நடந்திருக்கி றாரா? என்று கேட்டுவிட்டு, தனக்கு நேர்ந்த கொடுமை களைச் சொன்னார். மேலும், இது தொடர்பாக பள்ளியின் டீனிடம் பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் வருந்தினார்.

இதைக்கேட்டு அதிர்ந்துபோய்விட் டேன் லிஎன்ற ரீதியில் அவர் அம்பலப் படுத்த, அதன் பின்னரே, ராஜகோபா லால் பாலிலியல் சித்திரவதைக்கு ஆளான மாணவிகள் பலரும், அவனது வக்கிரங் களை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

இது குறித்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 23-ந் தேதி பள்ளி நிர்வாகத்திற்கு புகார்க் கடிதம் எழுதியும், நிர்வாகம் அது பற்றி அசைந்துகொடுக்க வில்லை.

அது நேர்மையான நிர்வாகமாக இருந்திருந்தால், நம் பள்ளியிலா இப்படியொரு கொடுமை? என்று கொதித்தெழுந்திருக்கும். இப்படிப்பட்ட ஆசிரியரை இனியும் பள்ளியில் விட்டுவைக்கக் கூடாது என்று உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக் கும். ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகமோ, கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை.

அதுமட்டும் அல்லாமல், அந்தப்பள்ளி மாணவிகள், அந்த ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம், எங்களைத் தொடர்பு கொண்டு, ராஜகோபாலிலின் செக்ஸ் டார்ச்சர் குறித்து யாரும் வெளியே வாயைத் திறக்கக்கூடாது என்று மிரட்டுகிறது’என்று தங்கள் அச்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

s

எனினும், அந்த மிரட்டலையும் பொருட் படுத்தாமல் இதுவரை மொத்தம் 5 மாணவிகள் காவல்துறையில் தைரியமாகப் புகார் கொடுத்திருக்கி றார்கள் என்பது பாராட்டுக்குரியது. *

தென்னை மரத்தில் தேள் கொட்டி னால் பனைமரத்தில் நெறிகட்டும் என்பது போல் லிபத்மசேஷாத்ரி ஆசிரியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தவுடன்.. சு.சாமி தொடங்கி எல்.முருகன் வரையிலான பா.ஜ.க. புள்ளிகள் கொந்தளிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் இருக்கும் மயிலாப்பூர் மைத்ரேயனும், இது சாதி ரீதியிலான நடவடிக்கை என்று கூக்குரல் எழுப்பு கிறார்.

இவர்களில் சு.சாமி ஒரு படி மேலே போய்... தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்கிறார். இந்த ராஜகோபாலனின் கைது நடவடிக்கை, நாஜிப்படைகள் யூதர்களை அழிப்பதற்குச் சமம் என்கிறார் சு.சாமி. ஹார்வர்டு பல்கலைக் கழகம் வரை சென்று, பேராசிரியராக வேலைபார்த்த சு.சாமிக்கு, உலக வரலாறு கூடத் தெரியவில்லை. பல லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டது என்பது உலகின் கொடூரமான கொலைப் படலம். ஆனால் இங்கே ஒரு பாலிலியல் குற்றவாளி மட்டும்தான் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

இந்த இரண்டும் சமம் என்கிறார் சு.சாமி. இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பாவான சு.சாமி, அந்த மன்மத வாத்தியாருக்குக் கூச்சமில்லாமல் வால் பிடிக்கிறார்.

இந்த சு.சாமி எப்படிப்பட்டவர்?

91லி96 ஆட்சிக் காலத்தில் ஜெய லலிலிதா சொத்துக்களை அதிகம் குவித்ததாக கவர்னரிடம் புகார் கொடுத் தார். பின்னர், அந்த வழக்கில் ஜெ. சிறைக் குப் போக, தான்தான் காரணம் என்று டமாரம் அடித்தார்.

pssb

ஆனால் அந்த வழக்கை ஆண்டுக் கணக்கில் விடாமல் நடத்தி, ஜெ.’ தரப்புக்கு எதிரான அதிரடி தீர்ப்பை வாங்கியது தி.மு.க.வும், கர்நாடகக் காவல்துறையும்தான். ஜெ’மீது புகார் கொடுத்த இந்த சு.சாமி, இடையிலேயே ஜெ.விடம் சரணடைந்து, நட்பைப் புதுப்பித்துக்கொண்டு உரிய பலன்களை அனுபவித்தார்.

அதன்பின் ஜெ.வை அவர் வாய்க்கொழுப்பால் ஒருமுறை விமர்சிக்க, சென்னை உயர்நீதிமன்றத்துக்குச் சென்ற சு.சாமிக்கு அஞ்சுலட்சுமி தலைமையிலான அ.தி.மு.க. மகளிரணியினர், சொல்லக் கூசும் வகையில் ஆபாச வரவேற்பு கொடுத்ததை யாராலும் மறந்து விட முடியாது. அதற்குக்கூட கூச்சப்படாத ஜென்மம் தான் சு.சாமி.

அது மட்டுமா? சு.சாமி, தமிழ்நாட்டுக்கு எதிரானவற்றையே எப்போதும் முன்னெடுப்பார். அது அவரது பிறவிக்குணம். அதற்கு ஒரு உதாரணம் இது... ஈழத் தமிழர்களின் பிணத்தின் மேல் நின்று அவர்களின் ரத்தத்தைக் குடித்த தமிழினப் பகைவனான கொடுங்கோலன் ராஜபக்சேவை உலக நாடுகள் பலவும் காறித் துப்பின. அப்படிப்பட்ட ராஜபக்சேவுக்கு, ’பாரத ரத்னா’ விருது கொடுக்கவேண்டும் என்று மோடிக்கு 2018லில் கோரிக்கைக் கடிதம் எழுதியவர்தான் சு.சாமி.

* தமிழர்களைப் ’பொறுக்கிகள்’ என்று விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் பொறுக்கிதான் சு.சாமி. 2018லில் மெரினாவில் ஜல்லிலிக் கட்டு போராட்டம் நடந்தபோது, இரவு பகலாகப் போராடிய இளைஞர்களை ’தமிழ்ப் பொறுக்கிகள்’ என்று விமர்சித்தார் சு.சாமி. அதோடு நிறுத்தாமல், தைரியம் இருந்தால் தமிழ்ப்பொறுக்கிகள், இலங்கைக்குப் படகில் சென்று, அங்குள்ள ராணுவத்துடன் மோதிப் பார்க்கட்டும் என்றும் தமிழ் இளைஞர்களைக் கேவலப்படுத்தினர். இதையெல்லாம் பார்த்த பிறகும் அவரை.. ஏதோ பைத்தியக்காரன் சொல்லிலிவிட்டுப் போகட்டும் என்று நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததால்தான், இப்போது அந்த வெத்துவேட்டு சு.சாமி, தமிழக மக்களால் ஏகபோகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்கிறார்.

*

ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று சொல்ல சு.சாமி யார்? அவர் என்ன ஜனாதிபதியா? பிரதமரா? இல்லை நாட்டின் ஏகபோக அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவரா? இப்போது ஜனாதிபதியே நினைத்தாலும் அரசியல் சாசனச் சட்டம் 356லிஐ பயன்படுத்தி அவ்வளவு எளிதாக ஒரு மாநில அரசைக் கவிழ்க்க முடியாது. ஏனெனில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அதற்கு எதிராக கொடியேற்றிவிட்டன. அப்படியிருக்க இந்த சுண்டைக்காய் சு.சாமி ஆட்சி யைக் கவிழ்ப்பேன் என்று உதார் விடுகிறார்.

அதுமட்டுமல்ல, இந்த சு.சாமி, ஒரு வெளிநாட்டு உளவாளி என்று பலராலும் விமர்சிக்கப்பட்டவர். 1990லில் பிரதமர் சந்திரசேகரின் அமைச்சரவையில் அவர் உட்காரவைக்கப்பட்டபோது, “இந்த சாமி, இஸ்ரேலிலின் உளவாளி. அவரை நீக்குங்கள்” என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் கொடி பிடித்ததை மறக்க முடியாது. இதுதான் அவர் யோக்கியதை.

* இந்திராகாந்தி கொலையிலும் ராஜீவ் கொலையிலும் தொடர்புகொண்டவர் என்று விமர்சிக்கப்பட்ட சந்திராசாமியின் சீடகோடிதான் சு.சாமி. ராஜீவ்காந்தி கொலை விவகாரத்திலும் கடுமையாக அப்போதே விமர்சிக்கப்பட்டவர் சு.சாமி. ராஜிவ் கொல்லப்பட்ட பின். அதற்கு ஒரு மாதம் கழித்து காஞ்சிபுரத்தில் சு.சாமி, பிரம்மஹத்தி யாகம் செய்தார் என்று, பல அரசியல் ரகசியங்களை அறிந்த திருச்சி வேலுச்சாமி பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

அப்படிப்பட்ட சு.சாமி, சர்வதேச புரோக்கர் என்று பெயரெடுத்த சு.சாமி, பத்மசேஷாத்ரி பள்ளிக்காக ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று துள்ளிக்குதிக்கிறார். வெட்கமில்லாமல் அவர் துள்ளிக்குதிக்கக் காரணம், அவரது ரத்தம்.

* அவர் மட்டுமா? தன்னைப் பகுத்தறிவுவாதியாகக் காட்டிக்கொள்ளும் நடிகர் கமலும், பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டதைப் போல், இதை சாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்று பத்மசேஷாத்ரிக்காகப் பதறுகிறார். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது போல், அவரது குருதியும் பதமசேஷாத்ரிக்காகக் கொதிக்கிறது. அவர் குடும்பத்துப் பிள்ளைகளைப் பற்றி, அவர் வேண்டுமானால் கவலைப்படாமல் இருக்கலாம்.

அதேபோல் மற்றவர்கள் இருக்கமுடியஷ்ôது.

இந்த நிலையில் அண்ணா நகரில் இருக்கும் இதே பத்மாசேஷாத்ரி பள்ளியின் கராத்தே மாஸ்டரான கெபி என்பவனின் அசிங்க லீலைகளும் வெளியேவர... அவனும் இப்போது கைதாகியிருக்கிறான்.

இந்த கைது நடவடிக்கையைப் பார்த்து துணிச்சல் பெற்ற பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும், தொடர்ந்து புகார்களைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சேத்துப்பட்டு பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என மன்மத ஓநாய்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றன.

லிபுனிதமான கல்வி நிலையங்கள், காமக் கொடூரன்களின் வேட்டைக்காடாக மாறிவிடக் கூடாது என்றுதான் நாம் குரல் கொடுக்கிறோம். அந்த கேடுகெட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்கிறோம். இந்த பத்மசேஷாத்ரி என்று இல்லை... எந்தப் பள்ளியில், எந்தக் கல்வி நிலையத்தில், அல்லது எந்த இடத்தில், இப்படியொரு கொடுமை நடந்தாலும் அதை நாம் கண்டிப்போம்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலிலியல் வக்கிரம், ஆபாசத் துன்புறுத்தல் போன்ற எப்படிப் பட்ட சண்டாளத்தனங்கள், எங்கு நடந்தாலும், அதில் சாதி, மதம், இனமெல்லாம் பார்க்காதீர்கள். இப்படிப் பட்ட குற்றவாளிகளை எதற்காகவும் ஆதரிக்காதீர் கள். இதுபோன்ற கொடூரமான குற்றவாளிகளை எதற்காகவும் விட்டுவிடாதீர்கள் என்பதுதான் அனைவருக்கும் நாம் வைக்கும் அழுத்தமான வேண்டுகோளாகும்.

-கவலையோடு

நக்கீரன்கோபால்