எஸ்.பி.பி. பெயரில் இசை பல்கலைக் கழகம் - கண்ணீர்க் கோரிக்கைகள்!

/idhalgal/eniya-utayam/sbp-university-music-name-tears-requests

ஸ்.பி.பி. தெலுங்கைத் தாய்மொழி யாகக் கொண்டவர் என்பதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் அவரை இசைத் தெய்வமாகவே மதிக்கிறார் கள். எஸ்.பி.பி.யின் மறைவு, அவர்களை பெரும் துயரத்தில் தள்ளியுள்ளது.

s

அவர் பிறந்த ஊரான ஆந்திர மாநில நெல்லூரில் அவர் நினைவாக ஒரு இசைப் பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என, மாநில அரசுக்கு முன்னாள் முதல்வரும் தெலுங்குதே

ஸ்.பி.பி. தெலுங்கைத் தாய்மொழி யாகக் கொண்டவர் என்பதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் அவரை இசைத் தெய்வமாகவே மதிக்கிறார் கள். எஸ்.பி.பி.யின் மறைவு, அவர்களை பெரும் துயரத்தில் தள்ளியுள்ளது.

s

அவர் பிறந்த ஊரான ஆந்திர மாநில நெல்லூரில் அவர் நினைவாக ஒரு இசைப் பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என, மாநில அரசுக்கு முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அவர் கடிதமும் எழுதியிருக்கிறார்.

அதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தனது சிறந்த பங்களிப்புகளால் உலக அளவில் தெலுங்கு மக்களை பெருமைப் படுத்தி உள்ளார். எனவே அவரது நினைவாக நெல்லூர் நகரில் இசை பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து, அதில் அவரது வெண்கல சிலையையும் நிறுவ வேண்டும். ஒரு சங்கீத கலா கேந்திராவை நிறுவி எஸ்.பி.பி.யின் நினைவலைகளை பாதுகாக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும், எஸ்.பி.பி.யின் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்றும், அவர் பெயரில் தேசிய விருது ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நாயுடு. இது எஸ்.பி.பி. ரசிகர்களை சற்றே ஆறுதல் படுத்தியிருக்கிறது.

ss

அதேபோல் “எஸ்.பி.பி பெயரில் தேசிய விருது ஒன்றை ஆண்டு தோறும் வழங்க வேண்டும் என்றும், அவருக்கு தாதே சாகேப் பால்கே விருதினை அறிவிக்கவேண்டும் என்றும் தெலுங்குத் திசையிசைக் கலைஞர்கள் வேண்டுகோள்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியோ, மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், எஸ்.பி.பி தெலுங்கு மொழியில் பாடிய தற்காக ஆந்திர அரசின் நந்தி விருதை 25 முறையும், தமிழக கர்நாடக அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

எஸ்.பி.பி.யை வெகுவாக கௌரவிக்க வேண்டும் என்று தெலுங்கு உலகமே கண்ணீரோடு வேண்டிக் கொண்டிருக்கிறது.

-நிதர்சனா

uday011020
இதையும் படியுங்கள்
Subscribe