தமிழாய்வுலகில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி தனித்தடம் பதித்துள் ளது. பேராசிரியர் மு.வ. அதன் பிதாமகன். அவரின் கால் வழியி னர் அத்தடத்தில் பயணம்செய்து வந்துள்ளனர். இன்றைய தலை முறையில் முனைவர் சி. சுந்தர மூர்த்தி ஒரு நம்பிக்கை நட்சத் திரமாக ஒளி வீசுகிறார். அவரு டைய இயங்கியல் பார்வை யில் சங்க இலக்கியம் புதிய ஆய்வுகளாகவும் மீள் ஆய்வு களாகவும் நம் வயப்பட்டுள்ளன.
தமிழ்ச் சமூகம் ஒரு தொன்மைச் சமூகம். அது மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலானவற்றால் செவ்வியல் நிலையை அடைந்து விட்டது. அச்செவ்வியல் தன்மை களைக் காலந்தோறும் உயிர்ப் பித்து நிலைப்படுத்த வேண்டும்.
தமிழின் செவ்வியல் கூறு களில் முதன்மையானது தொல் காப்பியமும் சங்க இலக்கியமும் ஆகும்.
சங்க இலக்கியம் அதன் உள்ளடக்கத்தால் உலகளவில் உன்னத இலக்கியமாகத் திகழ் கிறது. அதனைக் காலந்தோறும் மீள்வாசிப்பு செய்துகொண்டே இருக்கவேண்டும். அடுத்தடுத்த தலைமுறைக்குச் சமூக வயப்படுத்த வேண்டும். தொன்மைக்குத் தொன்மை யாகவும், தொடர்ச்சிக்குத் தொடர்ச்சியாகவும் விளங்கும் சங்க இலக்கியம் தமிழுக்கும் தமிழருக்கும் அடையாளம், முகவரி, செல்நெறியாகும். இப்பின்னணியில் சங்க இலக் கியத்தைப் புலமைப் பொருண்மையாக ஏற்றுக்கொண்ட முனைவர் சி. சுந்தரமூர்த்தி தமிழாய்வுப் பரப்பில் தன் காலக்கடமையை உணர்ந்து நிறைவேற்றியுள்ளார்.
சங்க இலக்கியம் தமிழரின் மொழி, பண்பாடு இரண்டி லும் மிகச் செழிப்பான வெளிப்பாடு. அது உணர்த்தும் மானுட விழுமியங்கள் பரந்துபட்டவை. விழுமியங்களே மானுடத்தை வழிநடத்துகின்றன. சங்க இலக்கியம் படைத்துள்ள விழுமியங்களில் உலகளாவியங்களே (மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப்ண்ள்ம்) அதிகம்; உள்ளூர்த்தனங்கள் (டஹழ்ற்ண்ஸ்ரீன்ப்ஹழ்ண்ள்ம்) குறைவு. எவையாயினும் மானுட செல்நெறிகளுக்கு அவை திசை காட்டுகின்றன.
அண்மைக்கால அகழாய்வுகள் மூலம் சங்க இலக்கியத்தின் காலம் கி.மு 2600- கி.மு. 3000 ஆகும். இது புதிய சான்றுகள் கிடைக்கும்போது இன்னும் நீண்டு செல்லலாம். இந்தக் காலப்பரப்பில் சங்க இலக்கியம் தன் இருப்பையும் இயங்கியலையும் ஒரே மாதிரி வெளிப்படுத்த இயலவில்லை. சமணம், பௌத்தம் காலூன்றிய காலம் வரை "தொன்மையுகம்' ஆகும். பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம் இரண்டுக்கும் இடம் கிடைத்தது.
தொன்மை யுகத்திற்குப் பின்னர் "மத்திய யுகம்' ஏற்பட்டது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9-ஆம் நூற்றாண்டு வரையிலான மத்திய யுகம் பக்தி இயக்கமாக மாறியது. புதிய மதங்களின் (சைவ, வைணவம்) ஆட்சியாக இந்த யுகம் வர்ணிக்கப்படுகிறது. கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை உரையாசிரியர்களின் காலம் முன்னிலை பெற்றது. மறுமலர்ச்சி யுகமாக இது அடையாளங் கொண்டது. காலனியம் தொடங்கி 1960-கள் வரை அறிவொளி யுகம் நிலைபெற்றது. இக்காலப் பகுப்பு இலக்கிய வரலாற்றை மையமிட்டதே ஒழிய தத்துவ வரலாற்றுக்கோ மற்ற வரலாற்றுக்கோ பொருந்தாது.
மேற்கூறிய காலகட்டங்களில் பக்தி இயக்கக் கால கட்டத்தில் சங்க இலக்கியம் முன்னிலைப்படுத்தப் படவில்லை. இயங்கியல் தொய்வடைந்தாலும் இருப்பு அழியவில்லை. ஐரோப்பியர்கள் (கீழைத்தேயவியலர்) முன்னெடுத்த இந்தியவியலுக்குப் பின்னர் மீண்டும் தமிழ், வடமொழி மரபுகள் கவனத்துடன் ஆராயப்பட்டன. தமிழின் செவ்வியல்தன்மை உலகெங்கும் பரவியது. மேற்குலகின் அறிஞர்கள் தம் கோட்பாட்டுச் சட்டகத்தை முதன்மைப்படுத்தி இங்குள்ள செவ்வியல் கூறுகளை ஆராய்ந்தனர். அதன் விளைவுகள் புதுமையானவை என்பதை நாம் கபில் சுவலபில், ஜான்மார், நார்மன் கட்லர், ஜார்ஜ் ஹார்ட், ஏ.எம். துபியான்ஸ்கி, ஈ.வா வில்டன் யரோஸ்லவ் வாச்சக் முதலானவர்கள் எழுத்துக்களிலிருந்து காண்கிறோம். நமது புலமையாளர்களின் அகவயப் பார்வை மேலைப்புலத்தார்க்குப் புதிய உட்தூண்டல் களையும் உள்ளொளிகளையும் கொடுத்தன என்பதை மறுக்கவியலாது.
இந்நூலில் முனைவர் சி. சுந்தரமூர்த்தியின் சங்க இலக்கிய வாசிப்பும் ஆய்வும் எடுத்துரைப்பும் அகவயமானவை. ஒரு பெருமதியான ஆர்வமூட்டும் வாசிப்பை இந்நூலில் காட்சிப்படுத்துகிறார். இருபது இயல்களில் சங்க இலக்கியத்தை வாசிக்க வைக்கிறார். இது ஒரு நெடும் பயணம் எனச் சுருக்கிவிட மனம் ஒப்பவில்லை. ‘ஆய்வு ஒரு தவம்’ என்பதால் இந்த இயல்களைக் கருத்தூன்றி எழுதி முடிக்க சில ஆண்டுகளைச் செலவழித்திருப்பார். இந்தப் பயணத்தின் நோக்கமும் இலக்கும் பெருமதியானவை என்பதால் இதனை யாத்திரை எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
இயக்கவியல் பொருள்முதல் வாதம் தொடங்கி வரலாற்றுப் பொருள் முதல்வாதம் ஊடாக ஒரு வரலாற்று ரீதியான சித்தாந்தத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறார். மக்கள் மயமாக இருக்கும் வழிபாடு, சமயங்களாக உருப்பெற்று நிலப்பிரபுக்க ளால் கையகப்படுத்தப்பட்டு நிறுவனமயமாக மாறும்போது அதன் ஆன்மா நீர்த்துப்போய் சுரண்டல் சக்தியின் பணப்பட்டுவாடாவாக மாற்றம்பெறுவதை ஆராய்ந்துள்ளார். தத்துவக் கூறுகளின் அடிக்கட்டுமானமாகப் பொருளா தாரம் இருப்பதை மையக்களமாகக் கொண்டுள் ளார். மனிதகுல வரலாற்றில் ஆதியில் தோன்றிய தாய்வழிச் சமூகம் பற்றிப் பேசுகிறார். அயிரை மலைக் கொற்றவை, ஹரப்பாவின் தெய்வங்கள் என ஒரு ஒப்பியல் பார்வையுடன் ஆழமான வாசிப்பை நம்முன் விரிக்கிறார்.
இந்த நூலில் சமயமும் சமூகமும் பற்றி அறிவதற்குப் பரந்த களம் உள்ளது. முருக வழிபாட்டின் வரலாற்றுப் பாத்திரம் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ் ஆரியக் கலப்போடு எவ்வாறு படிமலர்ச்சி அடைந்தது என்பதை சங்க இலக்கியப் பின்னணியில் ஆராய்கிறார். அவ்வாறே சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகியவற்றின் வருகை, வளர்ச்சியோடும் சங்க இலக்கியத்தை ஆராய்கிறார். இந்த மதங்களின் வழிபாடு, சமய வளர்ச்சி அடிப்படையில் சங்க இலக்கிய வரலாற்றைக் காட்டுகிறார். சேயோன் , மாயோன் முதலான திணைத் தெய்வங்கள் காலகதியில் பெருஞ்சமய வழிபாட்டு மரபுகளாக மேனிலைப்பட்ட வரலாற்றையும் ஆராய்ந் துள்ளார்.
இந்த நூலின் பெரும்பகுதி ‘சமயமும் சமூகமும்’ பற்றியது. பதினைந்து இயல்கள் இவை பற்றியதாக உள்ளன. இந்த இயல்களில் முனைவர் சி.சுந்தரமூர்த்தி இனங்கண்டுள்ள சங்க இலக்கியத் தரவுகள் துல்லியமானவை; விரிவா னவை. இவருடைய நீண்ட கால ஆழ்ந்த வாசிப்பால் தொகுத்துள்ள பிரமிப்பூட்டும் தரவுத் தொகுப்பு இந்த இயல்களில் விரவிக் கிடக்கின்றன. இத்தரவுகளைத் தொகுத்தாய்ந்தும் பகுத்தாய்ந்தும் (ண்ய்க்ன்ஸ்ரீற்ண்ஸ்ங் & க்ங்க்ன்ஸ்ரீற்ண்ஸ்ங் ஹய்ஹப்ஹ்ள்ங்ள்) கூறும் முயற்சி இந் நூலில் பெருமதிக்குக் காரணமாக அமைகின்றது.
திணை மரபு, பெருஞ்சமய மரபு, வைதிக மரபு, அவைதிக மரபு எல்லாம் தனிநிலையிலும் கொண்டு கொடுத்த நிலையிலும் அசைவியக்கம் பெற்ற இயங்கியலை அச்சு அசலான இயங்கியல் பார்வையில் பார்க்கிறார் முனைவர் சி. சுந்தரமூர்த்தி. வரலாறு எப்போதும் நேர்கோட்டில் முன்னோக்கியே வளர்ச்சி பெறும் எனும் பொது நியதியைத் தமிழ்ச் சூழலில் மாறுபட்டு நிற்பதை இந்தப் பதினைந்து இயல்களில் நுட்பமாகப் பேசுகிறார்.
இவருடைய சொல்லாடல்களும் விவாதங்களும் சங்க இலக்கியம் மீதான நமது பார்வையை விசாலமாக்குகின்றன; ஓர் அலாதியான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன.
இந்த நூலின் வாசிப்பு தமிழ்ச் சமூக வரலாற்றைப் பின்புலமாகக் காட்சிப்படுத்துகிறது. ஒவ்வொன்றைப் பற்றிய தரவுகள் மிக நுணுக்கமானவை. சமண, பௌத்த தத்துவக் கூறுகள் ஆகட்டும், ஆரியர் வருகை, வளர்ச்சியாகட்டும், தமிழ் ஆரிய மரபுகளுக்கான ஒப்பியல் ஆகட்டும், பேரரசர்களில் கால முறை வரலாறாகட்டும் தத்துவக் கூறுகள் ஆகட்டும் ஒவ்வொன்றிலும் முனைவர் சி.சுந்தரமூர்த்தி தொகுத்துள்ள தரவுக்களம் ஆழமானது; விசாலமானது. இவற்றைக் கொண்டு அவர் முன்னெடுக்கும் விவாதங்கள் சங்க இலக்கியத்தின் நீண்ட நெடும் பயணத்தைக் காட்டுகின்றன.
முனைவர் சி.சுந்தரமூர்த்தி யின் இந்நூலாக்க முயற்சி பாராட்டுக்குரியது. இன்றைய இளம் தலைமுறையில் நல்ல தேடுதல் முயற்சி கொண்ட ஓர் ஆசிரியர் ஆய்வாளரைக் காணும் மகிழ்ச்சியில், இவர் வருங்காலத்தில் மேலும் பல ஆக்கங்களை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.