உயிர்ப்பைத் தந்த சங்ககால உணவு முறை! முனைவர் அ.பழமொழிபாலன்

/idhalgal/eniya-utayam/sangakkala-diet-gave-life-dr-proverbs

ங்ககாலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டகாலம். அது ஒரு பொற்காலம். அறிந்தோ, அறியாமலோ, மக்கள் இயற்கையோடு இயற்கையாக சேர்ந்தே வாழ்ந்தார்கள். வயல் வெளிகளோடும், நீர் நிலைகளோடும், சேற்றோடும், நாற்றோடும், காற்றோடும் அவர் கள் இரண்டற கலந்து வாழ்ந்த வாழ்க்கை முறை கிடைத்தற் கரிய, மீண்டும் வரா பொற்காலம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட பொற்காலத்தில் உயிரை வளர்ப்பதற்கு நோயின்றி, உயிர்ப்பூட்டிக் கொண்டு உடலை பேணுவது என்பது இன்றியமையா ததாக கருதப்பட்டது.

இதைத்தான் திருமூலர்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று குறிப்பிடுகிறார்.

புராண காலம், வரலாற்றுக்காலம், மன்னர் காலம் தொடங்கி தற்காலம் வரை நம் மூதாதையர்கள் வகுத்து வைத்த உணவு பழக்கங்களையும், அவைப் படிப்படியாக அடைந்து வந்துள்ள மாற்றங்களையும், அவற்றை இழந்ததால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளையும் பேச வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

மாறி வரும் காலச் சூழலில், மாறி வரும் கலாச்சார மாற்றத்தில் இன்றைய உணவு முறை நம் பாரம்பாஙிய உணவு பழக்கத்தை மறந்து ஜங் •புட்ஸ்க்கும், பாஸ்ட்புட்டுக்கும், பீசா, பர்கர், கிகிஙில்ட் சிக்கன், வேதிப் பொருள்கள் கலக்கப்பட்ட குளிர் பானங் கள் என மனிதனுக்கு நோய் விளைவிக்கக்கூடிய உணவு வகைகளாக பெருகிவிட்டன. என்கிற சமூக புலம்பல்கள் இப்போது அதிகமாக கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் பாரம்பாஙிய உணவு பழக்கம் என்ன என்பதை, அப்படி புலம்புபவர்களே அறிந்திருக்க வில்லை என்பதுதான் வெள்ளந்தியான உண்மை.

உடல் மெலிந்தவர்கள் புழுங்கலரிசி சாதம் சாப்பிடவேண்டும். உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசனிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்பது போன்ற உணவுக் கட்

ங்ககாலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டகாலம். அது ஒரு பொற்காலம். அறிந்தோ, அறியாமலோ, மக்கள் இயற்கையோடு இயற்கையாக சேர்ந்தே வாழ்ந்தார்கள். வயல் வெளிகளோடும், நீர் நிலைகளோடும், சேற்றோடும், நாற்றோடும், காற்றோடும் அவர் கள் இரண்டற கலந்து வாழ்ந்த வாழ்க்கை முறை கிடைத்தற் கரிய, மீண்டும் வரா பொற்காலம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட பொற்காலத்தில் உயிரை வளர்ப்பதற்கு நோயின்றி, உயிர்ப்பூட்டிக் கொண்டு உடலை பேணுவது என்பது இன்றியமையா ததாக கருதப்பட்டது.

இதைத்தான் திருமூலர்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று குறிப்பிடுகிறார்.

புராண காலம், வரலாற்றுக்காலம், மன்னர் காலம் தொடங்கி தற்காலம் வரை நம் மூதாதையர்கள் வகுத்து வைத்த உணவு பழக்கங்களையும், அவைப் படிப்படியாக அடைந்து வந்துள்ள மாற்றங்களையும், அவற்றை இழந்ததால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளையும் பேச வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

மாறி வரும் காலச் சூழலில், மாறி வரும் கலாச்சார மாற்றத்தில் இன்றைய உணவு முறை நம் பாரம்பாஙிய உணவு பழக்கத்தை மறந்து ஜங் •புட்ஸ்க்கும், பாஸ்ட்புட்டுக்கும், பீசா, பர்கர், கிகிஙில்ட் சிக்கன், வேதிப் பொருள்கள் கலக்கப்பட்ட குளிர் பானங் கள் என மனிதனுக்கு நோய் விளைவிக்கக்கூடிய உணவு வகைகளாக பெருகிவிட்டன. என்கிற சமூக புலம்பல்கள் இப்போது அதிகமாக கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் பாரம்பாஙிய உணவு பழக்கம் என்ன என்பதை, அப்படி புலம்புபவர்களே அறிந்திருக்க வில்லை என்பதுதான் வெள்ளந்தியான உண்மை.

உடல் மெலிந்தவர்கள் புழுங்கலரிசி சாதம் சாப்பிடவேண்டும். உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசனிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்பது போன்ற உணவுக் கட்டுப்பாடுகள், ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு பயன்பட்டன. காலை வேலையில் பணக்காரனைப்போலவும், மதியம் ஏழையைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும். போன்ற சில நுணுக்கங்களையும் நம் சங்ககால நூல்கள் தெளிவாக விளக்குகின்றன.

உணவுமுறையை பற்றிக் குறிப்பிடும்போது சங்க இலக்கியங்கள் அடுப்பில் இருந்து ஆரம்பிக்கின்றன.

1. முடித்தலை அடுப்பு (புறம் 28.6) 2. ஆண்டலை அடுப்பு (முது காஞ்சி 29) 3. ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பு (புறம் 164) 4. முரி அடுப்பு (பெரும்பானாற்றுப் படை). இது போன்று சங்க காலத்தில் கற்களையும், மண்ணையும் பயன் படுத்திக் கட்டப்பட்ட அடுப்புகள். அப்போது பயன்படுத்தப்பட்ட விறகு வகைகள் போன்றவையே அவர்களை ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் வழிகோளியது. மருத்துவ குணம் நிறைந்த விறகுகளையும், சுள்ளிகளையும் பயன்படுத்தும் போது, அதில் இருந்து உருவாகக்கூடிய தீயும், புகையும் உணவோடு சேர்ந்து நோயில்லா நிலையை அவர்களுக்கு தந்தது.

dd

பெரும்பான்மையான வீடுகளில் மண் பாண்டங் களே பயன்படுத்தப்பட்டு வந்தன. உப்பு, உவர்ப்பு, கசப்பு போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அவற்றை உறிஞ்சும் தன்மையை மண்பாண்டங்கள் பெற்றிருந்தன. இப்போது எவர்சில்வர் பாத்திரங்களும், குக்கர் போன்ற அதிவேக உணவு சமைக்கும் பாத்திரங்கள் மூலம் சமைக்கும்போதும், சாதம் வேகவைத்த கஞ்சியை வடிகட்டாமல் குக்கரிலேயே வைத்து சமைப்பதன் மூலமும், பல்வேறு வகைப்பட்ட, எதிர்கொள்ள முடியாத நோய்கள் உருவாவதாக சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சமையல் செய்யவும், பாஙிமாறவும் பயன்படுத்தப் பட்ட பாத்திரங்கள் பற்றி சங்க இலக்கியங்கள் கீழ்கண்டவற்றைக் குறிப்பிடுகின்றன. 1.இருங்கட் குழி (புறம் - 65-2) 2.மான் தடி புழுங்கிய புலவு நாறு குழிசி (புறம் - 168-9) 3. அட்டகுழிசி அழற் பயந்தாங்கு (புறம்-23) 4. வெண்கோடு தோற்றாக் குழிசி (புறம் 251) 5. முரவு வாய் ஆருறு குழிசி (புறம் 371) 6. புகர்வய்க் குழிசி, சோறடு குழிசி போன்ற பாண்டங்களை மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தியுள்ளனர்.

குறிஞ்சி நில மக்கள் நெல்லும், தேன் திணையும், மூங்கிலரிசியும் உண்டு அருவி நீர், சுனை நீர் போன்ற சுவையான நீரினையும் பருகி வாழ்ந்தார்கள்.

முல்லை நில மக்கள் வரகு, சாமை போன்ற உணவையும், கான்யாறு போன்ற சுவையான நீரையும் பருகி வாழ்ந்தார்கள்.

மருத நில மக்கள் செந்நெல், வெண்ணெல் போன்ற உணவையும், ஆற்று நீர், மணற்கிணற்று நீர், பொய்கை நீர் போன்ற நீரினைப் பருகி வாழ்ந்தார்கள்.

நெய்தல் நில மக்கள் உப்புக்கு விலைமாறிய பண்டமும், மீனுக்கு விலைமாறிய பண்டமும், மணல் கிணற்று நீர், உவர் குட நீர் போன்ற நீரினையும் அருந்தி வாழ்ந்தார்கள்.

பாலை நில மக்கள் ஆறலைத்தப் பொருளும், சூறைக் கொண்ட பொருளும் உண்டு அறு நீர் கூவளும், சுனை நீரும் அருந்தி வாழ்ந்தனர்.

பொதுவாக தமிழர்கள் விரும்பி உண்ட உனவு நெல் உணவாகும். செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம், பொன்னி, ஐயாரெட்டு, ஆயிரத்து ஒன்பது பொன்ற நெல் வகைகளை அதிகம் விளைவித்தனர். மேலும் புழுங்கள் அரிசியே தலையாய உணவாக இருந்து வந்திருக்கிறது.

பச்சரிசியால் உருவாக்கப் பட்ட சோறினை ''பொங்கல்'' என்றும், வேகவைத்த நெல்லில் உருவாக்கப்பட்ட சோற்றினை ''புழுங்கல்'' என்றும் அழைத்தனர்.

உழவர்கள் வரகரிசிச் சோற்றுடன், புழுங்கிய அவரைப் பருப்பினைக் கலந்து உண்ட செய்தியினை பெரும்பானாற் றுப் படையின் 195வது அடி பாடல் குறிப்பிடுகிறது.

பண்டையத் தமிழர்கள் அதாவது மருத நில மன்னர் கள், நண்டுக் கறியுடன் பீர்க்கங்காயை இணைத்து உண்டனர் என்ற செய்தியை சிறுபானாற்றுப்படை கூறுகிறது.

''சுவைத்தாளலவன் கலாவையொரு பெருகுவீர்'' (சிறுபான் - 195) சுவைத்த காலினையுடைய நண்டும் பீர்க்கங் காயும் கலந்து களிப்புடனே பருகுவீர் என்று நச்சினார்க்கினியார் உரை வகுத்துள்ளார்.

மற்றும் சங்ககால மக்கள் ஆசினிப்பழம், களாப்பழம், காரைப்பழம், துடரிப்பழம், நாவற்பழம், நெல்-லிக்கனி, பலாப்பழம் போன்ற பழங்களை பெரிதும் உண்டனர் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.

பெரும்பெயர் ஆதி என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள், மணல் குவித்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று, நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியை புறநானூறு பாடல்கள் தருகின்றன.

''கருங்கனி நாவலி-லிருந்து கொய்துன்னும்

பெரும் பெயராதி பிணங்கனிற் குட நாட்டெயினர்...'' புறம் (177)

பலவகையான சுவையை யுடைய பொருட்களைச் சேர்த்து, பலவகையானத் திண்பண்டங்களைச் சங்ககால மக்கள் உண்டனர். அவை அப்பம், பண்ணியம், மோதகம், துவையல், மீன் குழம்பு, தயிர்குழம்பு போன்றவையாகும். நெல் மாவில் இனிப்புச் சுவையான பொருட்களைச் சேர்த்து ஆக்கப் படும் ஒருவகை சிற்றுண்டி பன்னியம் எனப்பட்டது.

இதையே'' உணு மூணு முனையினினிதெனப் பாலிற் பெயதவும் பாகிற் கொண்டணவும் என்ற புறப்பாடல் தெளிவாக்குகிறது.

அருவிநீர், இளநீர், கரும்புச்சாறு, சுனைநீர், பால், தயிர், மோர் போன்றவையும் பருகியுள்ளனர்.

மலையுச்சியிலிருந்து கீழே பாய்ந்து வரும் குளிர்ச்சியான அருவி நீரை குறிஞ்சி நில மக்கள் அருந்தினர்.

"அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி

நான் மரனனிய நறுந்தண் சாரற் கன்மிசை யருவி

தண்ணெனப் பருகி'' (புறம் 150, 14-16)

நம் முன்னோர்கள் உணவை மருந்தைபோல அளவாக வும், பத்தியமாகவும் உண்டார்கள். மருந்தே உணவாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

அவர்களது சமையலறையில், மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி, இஞ்சி, பூண்டு என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன்படுத்தினர். இவைகளை பயன்படுத்தி குழம்பு, ரசம் செய்தனர். உணவில் மஞ்சள்பொடி முக்கிய இடம் வகித்தது.

மஞ்சள் பொடி உணவு பொருட்கள் வேகும்போது சத்துக்கள் இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன்பட்டது. காரம் தேவைப்படும்போதெல்லாம் மிளகையே பயன்படுத்தினர்.

கருவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்குப் பொடி போட்ட பானகம், கொத்தமல்லி காபி போன்றவற்றையே விருந்தினருக்கு வழங்கி இருக்கிறார்கள்.

காலையில் நீராகாரத்தை உண்டனர். தயிரை விட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரவில் செப்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதில் துளசியை போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரை பருகிவிட்டு தியனத்தில் அமர்ந்தனர்.

மேலும் வாழை இலை, வாழைமரப் பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தினர். மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும்போது ஏற்படும் ரசயான மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.

பண்டைய தமிழ் மக்கள் இறைச்சியை விரும்பி உண்டனர். அவை ஊன், இறைச்சி, புலால், ஊழ்தல், தசை, தடி, புன், புரளி, புலவு போன்றவையாகும். இவற்றோடு மிளகு பொடி தூவி, கடுகிட்டு, தாளித்து உண்பதை இவர்கள் பழக்கமாக கொண்டிருந்தனர்.

கொழுத்த ஊன் துண்டங்களைத் தீயிலிட்டுச் சுட்டு அவற்றுடன் திணைச் சோற்றைச் சொரிந்து பாணர்கள் உண்டனர்.

''செந்தீ அணங்கிய கொழுநிணைக் கொழுங்குறை

மென் நினைப் புன்கம் உதிர்ந்த மண்டையொரு... பருக்கும்'' (அகம் 237.9.13)

மானிறைச்சி மட்டுமின்றி ஆட்டிறைச்சி, உடும்பு இறைச்சி, பன்றி இறைச்சி, பறவை இறைச்சி போன்ற பல்வேறு இறைச்சிகளையும் உணவாக உண்டனர் என்று சங்க இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.

uday011221
இதையும் படியுங்கள்
Subscribe