சந்தனச் சிதை - மாதவிக்குட்டிதமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/sandalwood-decay-madhavikkuttitamhil-sura

ரணமடைந்த பெண்ணுக்கு சந்தனச் சிதையை ஏற்பாடுசெய்து கொடுத்தது அவளுடை பண வசதி படைத்த மூத்த மகன்தான். தெற்குப் பக்க நிலத்தில் ஆயிரக்கணக்கான செண்டுமல்லிப் பூக்கள் மலர்ந்ததைப்போல நெருப்புப் பற்றி எரிந்துகொண்டிருப் பதைப் பார்த்துக்கொண்டே இளையமகன் தன் மனைவி யுடனும் குழந்தையுடனும் வாசலுக்குள் நுழைந்து வந்தான்.

பக்கத்து வீடுளைச் சேர்ந்தவர்களும் உறவினர் களும் திரும்பிச் செல்வதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இளைய மகனையும், அவனுடைய அழகான மனைவியையும், அவர்கள் தூக்கிக்கொண்டு வந்திருந்த பெண் குழந்தையையும் பார்த்ததால் இருக்க வேண்டும்... அவர்கள் அங்கு மேலும் சிறிதுநேரம் இருந்து செல்லலாமென தீர்மானித்தார்கள்.

இளைய மகன் மீண்டும் மீண்டும் பற்றியெரிந்து கொண்டிருந்த சிதையையே வறண்டு போயிருந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான்.

"நான் வர்றவரைக்கும் காத்திருந்திருக்கக் கூடாதா?'' அவன் தன் அண்ணன்களிடம் கேட்டான்.

"நேத்து சாயங்காலம் அம்மா இறந்தாங்க. எவ்வளவு நேரம் கெட்டுப்போகாம வைக்கமுடியும்? நீ மதியத்துக்கு முன்னவே வந்திருவேன்னு நாங்க எதிர்பார்த்தோம்.'' மூத்த மகன் கூறினான்.

இரண்டோ மூன்றோ நாட்கள் சவரம் செய்யாமலிருந்ததால் அவனுடைய முகத்தின் கீழ்ப்பகுதி இருண்டு போய் காணப்பட்டது. அவன் ஒரு வேட்டியையும் வலை பனியனையும் அணிந்திருந்தான். அவனுடைய பத்து வயது இருக்கக்கூடிய மகள் இளைய மகனின் குழந்தையைத் தொட்டுப் புன்னகைத்தாள்.

"அஞ்சலீ... அஞ்சு... என்னப் பாரு... என்னப் பார்த்து சிரி...'' அவள் குழந்தையிடம் கூறினாள். குழந்தை வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டது.

"அம்மாவோட முகத்தை இனிமேல பார்க்க முடியாதே! நான் விமானத்தில ஏறுறதுக்காக காலை யிலயே விமான நிலையத்துக்குப் போய்ட்டேன். விமானத் தில யாரோ ஒரு வெடிகுண்டை மறைச்சு வச்சிக்கறதா விமான நிலையத்துக்கு ஒரு ஆள் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கான். அதைத் தொடர்ந்து பொருட்கள் எல்லாத்தையும் எடுத்து வெளியே போட்டுட்டாங்க.

எங்களைக் கீழே இறக்கிவிட்டு, திரும்பவும் உடல் சோதனையை நடத்தினாங்க. மூன்றரை மணிநேரம் கடந்த பிறகுதான் விமானம் புறப்பட்டது.'' இளைய மகன் கூறினான்.

"அம்மாவோட முகத்தை நீ பார்க்காததும் நல்லது தான். நீ மனசுல வச்சிருக்கக்கூடிய அந்த அழகான முகமில்ல இறக்கும்போது இருந்தது. எதையோ பார்த்து பயப்படுறதைப்போல ஒரு வெளிப்பாடு முகத்துல இருந்தது. நிறம் இருண்டுடுச்சு... கண்கள் வெளியே தள்ளிய நிலையில இருந்துச்சு. அந்த இறுதி நிமிட பார்வையைக் காணாத நீதான் கொடுத்து வச்சவன். என்னால அதை மறக்கவே முடியல...'' இரண்டாவது மகன் கூறினான்.

"அப்பு சொல்றது உண்மைதான். அந்த முகத்தோட வெளிப்பாட்டைப் பார்த்திருக்க வேண்டாம்னு எனக்கு தோணுச்சு. உண்மையிலேயே இந்த வயசிலும் அம்மா என்ன ஒரு அழகியா இருந்தாங்க! ஆனா, இறக்குறப்போ வேறொரு ஆளா மாறிட்டாங்க அம்மா.'' மூத்த மகனின் மனைவி கூறினாள்.

"அம்மா என்னை விசாரிச்சாங்களா?'' இளைய மகன்

"அம்மா என்னை விசாரிச்சாங்களா?'' இளைய மகன் கேட்டான்.

"அதெப்படி? அம்மாவுக்கு ரெண்டு நாளு சுய உணர்வே இல்ல. பிறகு... இறக்குறப்போதான் அவங்க கண்களையே திறந்து சுத்தியும் பார்த்தாங்க. யாரையோ தேடுறதைப் போல இருந்தது. உன்னையா இருக்கலாம்.'' மூத்த மகன் கூறினான்.

"நான் அதிர்ஷ்டமில்லாதவன்.'' இளைய மகன் முணுமுணுத்தான்.

"அம்மாவுக்கு மூச்சு விடுறதுல சிரமம் உண்டானவுடனே நான் மைசூருக்கு எஸ்.டி.டி. போட்டு கூப்பிட் டேன்.

தங்கய்யனை... சந்தனக் கட்டைகளை அனுப்பி வைக்கணும்னு நான் சொன்னேன். ராத்திரிலேயே லாரியில அனுப்பிட்டாரு. இங்க வந்து சேர்றப்போ பத்தேகால் மணி... உடனே பிணவடக்க வேலைகளை ஆரம்பிச்சிட் டோம்..'' மூத்த மகன் கூறினான்.

"வழியில மழை பெய்ஞ்சிடுமோன்னு நினைச்சு பயம் உண்டாச்சு. மழையில நனைஞ்சிட்டா மரம் எரியாதே! தார்ப்பாய் இருந்தாலும் பயனில்ல. நல்ல மழையா இருந்தா கொஞ்சமாவது நனையத்தான் செய்யும். நல்ல வேளை... மழை பெய்யல...'' இரண்டாவது மகன் கூறினான்.

"அப்பா எங்கே?'' இளைய மகன் கேட்டான்.

"அப்பா குளிக்கப் போறதுக்காக புறப்பட்டுக்கிட்டு இருந்தாரு. அப்பாவுக்கு ஜலதோஷமும் காய்ச்சலும் இருக்கு. குளிக்கவேணாம்னு சொல்லிப்பார்த்தேன். யார் சொன்னாலும் அப்பா கேக்கறதில்ல. அம்மாவால மட்டுமே அப்பாவைக் கட்டுப்படுத்தி வைக்க முடிஞ்சது.'' மூத்த மகனின் மனைவி கூறினாள்.

"அம்மா இல்லாம இந்த பெரிய வீட்ல அப்பா எப்படி வாழ்வாரு?'' இளைய மகனின் மனைவி கேட்டாள்.

"வாழாம என்ன செய்றது? இந்த வயசான காலத்துல அப்பாவைப் பயணம் செய்ய வைக்கிறது சரியா இருக்காது.'' மூத்த மகன் கூறினான்.

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது அண்ணா... நீங்க அப்பாவை பம்பாய்க்கு அழைச்சிட்டுப் போறதுதான் நல்லது.'' இரண்டாவது மகன் கூறினான்.

"பம்பாய்க்கா? அப்பாவால இன்னொருத்தர் உதவி இல்லாம வாழமுடியாது.கடந்த தடவை பார்த்ததை விட, அப்பாவுக்கு நடுக்கம் அதிகமாயிருக்கு. உணவு சாப்பிடறப்போ சட்டையில சோறும் குழம்பும் விழுந்திடுது.'' மூத்த மகன் கூறினான்.

"பம்பாய்ல திறமை வாய்ந்த நரம்பு சிகிச்சை நிபுணருங்க இருப்பாங்க. அப்பாவுக்கு சிகிச்சையளிச்சு அவங்க குணமாக்கிடுவாங்க.'' இரண்டாவது மகன் கூறினான்.

"இந்த அப்பு சொல்றதுல ஏதாவது பொருத்த மிருக்குதா? நானும் விமலாவும் காலையிலயே ஃபேக்டரிக்குப் போயிடுவோம். குழந்தை அவளோட பள்ளிக்கூடத்துக்குப் போயிடுவா. எங்களுக்கு பெரும் பாலான ராத்திரிகளிலும் டின்னர் இருக்கும். வீட்டுக்குவந்து சேர்றப்போ நள்ளிரவு தாண்டி யிருக்கும். வேலைக்காரங்களை நம்பி நாங்க அப்பாவை வீட்ல விட்டுப்போனா, ஊர்ல உள்ளவங்க என்ன சொல்லுவாங்க?'' மூத்த மகன் குரலை உயர்த்திக்கொண்டு கேட்டான்.

"சரிதான்... அப்பா பம்பாய் நகரத்தை வெறுக்காம இருக்க மாட்டாரு.'' மூத்த மகனின் மனைவி கூறினாள்.

"பம்பாய்ல அப்பா நாற்பது வருஷம் வாழ்ந்திருக் காருங்கற உண்மைய நீங்கள்லாம் மறந்துட்டீங்களா?'' இரண்டாவது மகன் கேட்டான்.

"அப்பா பார்த்த பம்பாய் இல்ல இப்போதிருக்குற பம்பாய். ஊசி விழுறதுக்கு இடமில்ல. சாலை முழுசும் மக்கள் கூட்டம்... சாலையைக் குறுக்கா கடக்கறப்போ, பயத்தால என் கால் தடுமாறுது.'' மூத்த மகனின் மனைவி கூறினாள்.

"சாலையைக் குறுக்கா கடக்கறப்போ, என் கை பனிக்கட்டியைப்போல குளிர்ந்திடுது.'' பத்து வயதுள்ள சிறுமி கூறினாள்.

"அம்மாவோட அலமாரிகளைப் பூட்டிட்டீங்கள்ல?'' இளைய மகன் மூத்த மகனின் மனைவியிடம் கேட்டான். அவள் தலையைக் குலுக்கினாள்.

"வைரக் கல்லை என் மகளுக்குத் தர்றதா அம்மா சொன்னாங்க. அவளுக்கு அம்மாவோட பெயரைத்தானே நாங்க வச்சோம்?'' இளைய மகன் கூறினான்.

மூத்த மகனின் மனைவி உடனடியாகத் தன் கணவனைப் பார்த்தாள்.

"உன் குழந்தைக்கு அஞ்சுங்கற பேரைத்தானே நீ வச்சே?'' மூத்த அண்ணன் கேட்டான்.

"அஞ்சுன்னு கூப்பிடுவோம். ஆனா அவளோட உண்மையான பேரு... அம்மாவோட பேருதான்... சௌதாமினி.'' இளைய மகன் கூறினான்.

ss

"கம்மலை அஞ்சுவுக்கு தரப்போறதா அம்மா எந்தச் சமயத்திலும் எங்கிட்ட சொன்னதில்ல.

அப்படியொரு ஆசை இருந்திருந்தா, அம்மா எங்க கிட்ட சொல்லியிருப்பாங்க.'' மூத்த மகன் கூறினான்.

"கம்மல் கிடைக்கணும்னு நான் பிடிவாதம் பிடிக்கல. என் மகளுக்கு கம்மலை கொடுக்கப் போறதா அம்மா சொன்னாங்க. அதை வெறுமனே நினைச்சு பார்த்தேன்.'' இளைய மகன் கூறினான். அவர்கள் அனைவரும் உணவு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந் தார்கள். கப்களில் எஞ்சியிருந்த தேநீருக்கு மேலே ஈக்கள் இரைந்து பறந்துகொண்டிருந்தன.

இளைய மகனின் மனைவி தன் பகட்டான பைக்குள்ளிருந்து பாதி நிறைக்கப்பட்ட ஒரு பால்புட்டியை வெளியே எடுத்தாள். மடியில் படுத்திருந்த குழந்தைக்கு பாலூட்ட ஆரம்பித்தாள்.

"இப்பவும் பால்மட்டும்தான் தர்றியா? ஒரு வயசு ஆயிருச்சுல்ல?" இரண்டாவது மகனின் மனைவி கேட்டாள்.

"இடையில ஃபாரெக்ஸ் கொடுப்பேன். பயணம் செய்றப்போ பால்தான் வசதி.'' குழந்தையின் தாய் பதில் கூறினாள்.

"அம்மாவோட வைரக் கம்மல் ப்ளூ ஜாகர். இப்போ தவமிருந்தாகூட பார்க்கமுடியாத கற்கள் அவை. வான வில்லோட ஏழு வர்ணங்களையும் அதில பார்க்கலாம்.'' மூத்த மகனின் மனைவி கூறினாள்.

"அம்மாவோட முகத்துக்கு அந்த கம்மலுங்க ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. மாலை வேளைகள்ல அவை ஒளிர்ந்துகிட்டிருக்கும்.'' இரண்டாவது மகனின் மனைவி கூறினாள்.

"அந்த கம்மலுங்களுக்கான விலையைக் கொடுக்கக் கூட நான் தயாரா இருக்கேன். என் மகள் அதை போட்டுக்கணும்னு ஒரு ஆசை... அம்மாவோட மூத்த பேத்தி அவதானே?'' மூத்த மகன் கூறினான்.

"என் மகளுக்குக் கொடுக்கப்போறதா அம்மா சொன்னாங்க.'' இளைய மகன் கூறினான்.

"அப்பா என்ன செய்றார்னு போய்ப் பாரு. குளிச்சிக்கிட்டிருந்தாரு... அது முடிஞ்சு மூணு மணிநேரம் ஆயிருச்சு...'' மூத்த மகன் கூறினான்.

"நாளைக்கு நான் நாகர்கோவிலுக்குப் போய் ஈமச் சடங்குக்கு வேண்டிய பருப்பு, சர்க்கரை, எண்ணெய் எல்லாத்தையும் வாங்கிட்டுவர்றேன். வேணும்னா... என் கூட நீயும் வரலாம்.'' இரண்டாவது மகன் இளையவனி டம் கூறினான்.

"அப்படின்னா... வாடகைக் கார்காரனுக்கு நான் பணம் தர்றேன்.'' இளைய மகன் கூறினான்.

"அம்மாவோட கட்டில்ல எட்டு வருஷம் படுத்துத் தூங்கிய மகன் நான். அதனால தங்கய்யன்கிட்ட சொன்னேன்.... 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. நல்ல சந்தனக் கட்டைங்க வேணும்'னு. தார்ப்பாய் போட்டு லாரியில அனுப்பி வச்சா. அம்மாவுக்காக ஏதாவது செய்யணும்னு நான் உறுதியா நினைச்சேன்.'' மூத்த மகன் கூறினான்.

"அம்மாவோட வைரக் கல் நகைப் பெட்டியில இல்ல. அலமாரி முழுசும் நான் தேடிப் பார்த்துட்டேன். நாலு வளையலுங்களும் திருமண மோதிரமும் தாலிச் சங்கிலியும் மட்டுமே பெட்டியில இருக்கு. மீதி நகைங்க எங்க?'' மூத்த மகனின் மனைவி அறைக்குள் நுழைந்து வந்தவாறு அனைவரிடமும் கேட்டாள்.

"அம்மா எங்களுக்கு எதுவுமே தரல. நாங்க ஊருக்கு வந்தே மூணு வருஷங்களாச்சு.'' இரண்டாவது மகன் கூறினான்.

"அஞ்சு பிறந்து தொண்ணூறாவது நாளன்னைக்கு நான் வந்தேன். அம்மா நகைங்க எதையும் எங்களுக்கு தரல. கம்மல் என் மகள் அஞ்சுவுக்குத்தான்னு சொன் னாங்க. அம்மாவோட பேரைத்தான் அவளுக்கு வச்சிருக் கோம்ன்றதைக் கேட்டுட்டு சொல்லியிருக்கலாம்.'' இளைய மகன் கூறினான்.

இடையே அவ்வப்போது திறந்து கிடக்கும் சாளரத் தின் வழியாக அவன் தன் தாய் பற்றியெரியும் சிதையைப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.

"அம்மா நகைகளை வித்திருக்கலாம். அப்பாவோட சிகிச்சைக்காக ரொம்ப அதிகமான பணம் செலவாச்சு. அப்பாவை மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போறதுக்கும் மற்ற விஷயங்களுக்கும் வாடகைக் கார்களைப் பயன்படுத்துவாங்க. அம்மாவுக்கு பணம் மிகப் பெரிய தேவையா இருந்தது.'' இளைய மகன் கூறினான்.

"அம்மா எனக்கு எழுதியிருக்கலாம். எந்த சமயத்திலும் அம்மா என்கிட்ட பணம் கேட்டதில்லை.'' மூத்த மகன் கூறினான்.

"அம்மா சுயமரியாதையோட இருந்தாங்க. அம்மா என் கையிலயிருந்து எதையுமே எதிர்பார்க்கல.'' இரண்டாவது மகன் கூறினான்.

"அம்மா கேட்டிருந்தா நான் ஒவ்வொரு மாசமும் ரெண்டாயிரமோ மூவாயிரமோ அனுப்பியிருப்பேன்.'' மூத்த அண்ணன் கூறினான்.

இளைய மகனின் மகள் வாயைத் திறந்து சிரித்தாள். ஏதோ பொழுதுபோக்கு விஷயத்தைக் கேட்கிறோம் என்பதைப் போல அவள் சிரித்தாள்.

"இவளுக்கு அம்மாவோட சாயல் இருக்கு..'' இரண்டாவது மகன் குழந்தையைப் பார்த்துக்கொண்டே கூறினான்.

"அம்மாவுக்கு குழந்தைகள்மேல அளவில்லாத பாசம்... இடையில அவ்வப்போ விடுமுறை எடுத்து ஊருக்கு வந்திருக்கணும்.'' இளைய மகன் கூறினான்.

"விடுமுறை கிடைக்கலையே?'' இரண்டாவது மகன் கூறினான்.

"அம்மாவுக்காக ஏதாவது செய்யணும்னு நான் ஆசைப்பட்டேன். அதனாலதான் நான் தங்கய்யனுக்கு போன் பண்ணி சந்தனக் கட்டைகளை வரவச்சேன்.'' மூத்த மகன் கூறினான்.

"என் மூத்த மகன் குபேரன்னு அம்மா பக்கத்து வீடு கள்ல இருப்பவங்ககிட்ட பெருமையோட சொல்வாங்க. நான் கேட்டிருக்கேன்.'' இரண்டாவது மகனின் மனைவி கூறினாள். அவளுடைய முகத்தில் அம்மாவை நினைக் கும் நேரத்திலெல்லாம் அழகான ஒரு புன்னகை அரும்பியது.

"ஒரு சாதாரண பெண்ணல்ல என் கணவரோட அம்மான்னு நான் சினேகிதிகள்கிட்ட சொல்றதுண்டு.'' இளைய மகனின் மனைவி கூறினாள்.

மூத்த மகனின் கண்கள் திடீரென ஈரமாயின. அவன் எழுந்து சாளரத்திற்கு அருகில் சென்று நின்றான்.

"அம்மா உயிரோட இருக்கறப்போ அவங்களுக்காக பெருசா எதுவும் என்னால செய்ய முடியல. ஆனா இப்போ ஒரு விருப்பம் நிறைவேறிடிச்சு. என் அம்மாவுக்கு சந்தனச் சிதை ஏற்பாடு செய்ய என்னால முடிஞ்சது. நான் அதிர்ஷ்டசாலி! சந்தேகமே இல்ல.'' மூத்த மகன் கூறினான்.

வேறு யாரும் சிறிது நேரத்திற்குப் பேசவில்லை. ஆனால், சிதையின் இலேசான வெடிப்பு சத்தங்கள் அந்த அறையில் கேட்டுக்கொண்டிருந்தன.

________________________

மொழிபெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று மாறுபட்ட மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக் கிறேன்.

"நட்சத்திரக் குழந்தை' என்னும் சிறுகதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் மூத்த நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணிகிருஷ்ணன் புதூர். தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர் இவர். இதுவொரு உண்மைக் கதை. அன்னமூட்டும் நிகழ்ச்சி யன்று மரணத்தைத் தழுவிய தன்னுடைய நட்சத்திரக் குழந்தை யான வேணுகாவை மையமாக வைத்து உண்ணிகிருஷ்ணன் புதூர் இந்தக் கதையை எழுதியிருக்கிறார். கதையை வாசிக்கும் நமக்கே கண்கள் கசிகின்றன என்றால், தன் செல்லமகளை மரணத்தின் பிடியில் கொடுத்த உண்ணிகிருஷ்ணன் புதூர் எந்த அளவுக்குக் கலங்கியிருப்பார்! துடித்திருப்பார்!

"சந்தனச் சிதை' என்னும் கதையை எழுதியிருப்பவர் மலையாள பெண் எழுத்தாளர்களின் அரசியும், தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான மாதவிக்குட்டி. மரணமடைந்த ஒரு தாயையும், அவளின் மூன்று மகன்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்த மூன்று சகோதரர்களையும் எந்த அளவுக்கு இயல்பாகவும், உயிர்ப்புடனும் மாதவிக்குட்டி தன் கதையில் படைத்து நடமாட விட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே அவர்மீது அளவற்ற ஆச்சரியமும் மதிப்பும் உண்டாகின்றன.

"அரேபியரும் ஒட்டகமும்' (ஒரு பழைய கதையின் மறு ஆக்கம்) என்னும் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத் தில் இளமை தவழும் கதைகளை எழுதுவதில் மாமன்னரான- தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்ற டி. பத்மநாபன்.

இதில் வரும் அரேபியர்... அருமையான பாத்திரப் படைப்பு! எதற்கும் கலங்காத, அதிர்ச்சியடையாத அந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செதுக்கியிருக்கிறார் டி. பத்மநாபன். இந்தக் கதையில் வரும் ஒட்டகத்தின் குணத்தைக் கொண்ட மனிதர்களை நம் வாழ்க்கைப் பாதையில் நாம் நிறைய பார்க்கலாம். ஒட்டகத் தைப் போன்றவர்களிடம் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் நாம் இருக்கவேண்டும் என்பதுதான் கதையை எழுதிய பத்மநாபன் கூற நினைக்கும் அறிவுரை.

நான் மொழிபெயர்த்த இந்த மூன்று கதைகளும் உங்களின் மனங்களில் என்றும் வாழும் என்பது நிச்சயம்.

"இனிய உதயம்' பிரசுரிக்கும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்துவரும் உயர்ந்த உள்ளங் களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா

uday010822
இதையும் படியுங்கள்
Subscribe