எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் என்றதுமே அவரது சிரித்த முகமும், வாஞ்சையான பேச்சுமே சட்டென நினைவுக்கு வரும். எழுதினாலும் பேசினாலும் அதில் வாழ்வின் ஈரமும், சக மனிதர்கள் மீதான நேசமும் இருப்பது ச.தமிழ்ச் செல்வனுக்கே உரித்தான தனிச்சிறப்பு. த.மு.எ.க.ச.வில் ஓர் உறுப்பினராய் இணைந்து, நெல்லை மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் என படிப்படியாக மேலேறி வந்தவர்.
சிறுகதை, கட்டுரை, வரலாறு,
சமையல் என இதுவரை 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இன்னமும்கூட வார விடுமுறை நாளில் தமிழ்நாட்டின் ஏதாவது ஓர் ஊரில் நடைபெறும் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டிருக்கும் ச.தமிழ்ச்செல்வன், கடந்த அரை நூற்றாண்டாகச் சோர்வில்லாமல் செயலாற்றிவருபவர். எழுதுவ தோடு மட்டுமே ஒதுங்கிநில்லாமல் போராட்டங்களிலும் முன்நின்று களமாடுபவர். எச்சூழலிலும் தன்னையொரு இடதுசாரி எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள் ளும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் பன்முக ஆற்றலை இந்த உரையாடலின்வழி அறியலாம்.
தங்களின் இளமைக்கால நாட்களைப் பற்றி..!
என்னுடைய இளமைக்காலம் என்பதை 1959 முதல் 1969 வரையான 11 ஆண்டுகள் என எடுத்துக்கொள்கிறேன். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா,நென்மேனி மேட்டுப்பட்டி என்கிற என் அப்பாவின் ஊரில் வாழ்ந்த காலம் அது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரில் நாயக்கமார் தெருவில் அமைந்திருந்த இந்து ஆரம்பப் பாடசாலையில் படித்தேன். எங்கள் ஊர் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. தெற்குத்தெரு எனப்பட்ட பல இடைநிலைச் சாதியார் வாழ்ந்த எங்கள் தெரு ஒன்று. எங்கள் தெருவை அடுத்து இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் - குடும்பமார் எனப்பட்ட பள்ளர் சாதி மக்கள் வாழ்ந்த கீழத்தெரு. அப்புறம் நாயக்கமார் பெரும்பான்மையாக வாழ்ந்த வடக்குத்தெரு. சாதிப் பாகுபாடும் தீண்டாமையும் இருந்தது. சாதி மோதல் அல்லது நேரடியான உடல்ரீதியான வன்முறை கண்டதில்லை. விவசாயம்தான் ஊரின் பொருளாதார அடித்தளம். பெரும்பாலும் நாயக்கமார்களின் நிலங்களில் பிற சாதி உழைப்பாளிகள் கூலிக்கு வேலை செய்வார்கள். சொந்த நிலமும் கொஞ்சம் வைத்திருப்பார்கள்.
எங்களுக்கும் நிறைய நெல் வயல்கள் இருந்தன. குடிகாரரான எங்கள் தாத்தாவைச் சகித்துக்கொண்டு வாழ்ந்த எங்கள் பாட்டி ஆதக்காள், தன் நகைகளை எல்லாம் விற்று வாங்கிய வயற்காடுகள் அவை என்று சொல்லுவார்கள். பிற்காலத்தில் தாத்தா குடியை விட்டுவிட்டார். தாத்தா ஊர்த்தலையாரியாக இருந்தார். காவக்காரர் வீடு என்கிற அடையாளம் எங்கள் வீட்டுக்கு இருந்தது. கணக்குகள், புதிர்க்கணக்குகளில் சூரப்புலியாக தாத்தா இருந்தார். பல முதலாளிமார் - நாயக்கமார் - வீடுகளில் கணக்கு எழுதும் வேலையும் அவர் பார்த்து வந்தார். நாயக்கமார் தெருவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். உயிர் நண்பர்களாக அன்றைக்கு அழகர்சாமியும் சீனிவாசனும் இருந்தார்கள். பள்ளர் தெருவில் ஒரு நண்பன்கூட இல்லை. நாவிதர் வகுப்பைச் சேர்ந்த சாத்துரப்பன் இன்னொரு நெருங்கிய நண்பன்
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் என்றதுமே அவரது சிரித்த முகமும், வாஞ்சையான பேச்சுமே சட்டென நினைவுக்கு வரும். எழுதினாலும் பேசினாலும் அதில் வாழ்வின் ஈரமும், சக மனிதர்கள் மீதான நேசமும் இருப்பது ச.தமிழ்ச் செல்வனுக்கே உரித்தான தனிச்சிறப்பு. த.மு.எ.க.ச.வில் ஓர் உறுப்பினராய் இணைந்து, நெல்லை மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் என படிப்படியாக மேலேறி வந்தவர்.
சிறுகதை, கட்டுரை, வரலாறு,
சமையல் என இதுவரை 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இன்னமும்கூட வார விடுமுறை நாளில் தமிழ்நாட்டின் ஏதாவது ஓர் ஊரில் நடைபெறும் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டிருக்கும் ச.தமிழ்ச்செல்வன், கடந்த அரை நூற்றாண்டாகச் சோர்வில்லாமல் செயலாற்றிவருபவர். எழுதுவ தோடு மட்டுமே ஒதுங்கிநில்லாமல் போராட்டங்களிலும் முன்நின்று களமாடுபவர். எச்சூழலிலும் தன்னையொரு இடதுசாரி எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள் ளும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் பன்முக ஆற்றலை இந்த உரையாடலின்வழி அறியலாம்.
தங்களின் இளமைக்கால நாட்களைப் பற்றி..!
என்னுடைய இளமைக்காலம் என்பதை 1959 முதல் 1969 வரையான 11 ஆண்டுகள் என எடுத்துக்கொள்கிறேன். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா,நென்மேனி மேட்டுப்பட்டி என்கிற என் அப்பாவின் ஊரில் வாழ்ந்த காலம் அது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரில் நாயக்கமார் தெருவில் அமைந்திருந்த இந்து ஆரம்பப் பாடசாலையில் படித்தேன். எங்கள் ஊர் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. தெற்குத்தெரு எனப்பட்ட பல இடைநிலைச் சாதியார் வாழ்ந்த எங்கள் தெரு ஒன்று. எங்கள் தெருவை அடுத்து இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் - குடும்பமார் எனப்பட்ட பள்ளர் சாதி மக்கள் வாழ்ந்த கீழத்தெரு. அப்புறம் நாயக்கமார் பெரும்பான்மையாக வாழ்ந்த வடக்குத்தெரு. சாதிப் பாகுபாடும் தீண்டாமையும் இருந்தது. சாதி மோதல் அல்லது நேரடியான உடல்ரீதியான வன்முறை கண்டதில்லை. விவசாயம்தான் ஊரின் பொருளாதார அடித்தளம். பெரும்பாலும் நாயக்கமார்களின் நிலங்களில் பிற சாதி உழைப்பாளிகள் கூலிக்கு வேலை செய்வார்கள். சொந்த நிலமும் கொஞ்சம் வைத்திருப்பார்கள்.
எங்களுக்கும் நிறைய நெல் வயல்கள் இருந்தன. குடிகாரரான எங்கள் தாத்தாவைச் சகித்துக்கொண்டு வாழ்ந்த எங்கள் பாட்டி ஆதக்காள், தன் நகைகளை எல்லாம் விற்று வாங்கிய வயற்காடுகள் அவை என்று சொல்லுவார்கள். பிற்காலத்தில் தாத்தா குடியை விட்டுவிட்டார். தாத்தா ஊர்த்தலையாரியாக இருந்தார். காவக்காரர் வீடு என்கிற அடையாளம் எங்கள் வீட்டுக்கு இருந்தது. கணக்குகள், புதிர்க்கணக்குகளில் சூரப்புலியாக தாத்தா இருந்தார். பல முதலாளிமார் - நாயக்கமார் - வீடுகளில் கணக்கு எழுதும் வேலையும் அவர் பார்த்து வந்தார். நாயக்கமார் தெருவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். உயிர் நண்பர்களாக அன்றைக்கு அழகர்சாமியும் சீனிவாசனும் இருந்தார்கள். பள்ளர் தெருவில் ஒரு நண்பன்கூட இல்லை. நாவிதர் வகுப்பைச் சேர்ந்த சாத்துரப்பன் இன்னொரு நெருங்கிய நண்பன். சாதி கடந்த மனநிலை இருந்தது. என் சித்தப்பா ஆச்சரியமாகப் பார்ப்பார். சாதி தாண்டி நட்பு பாராட்டுவதை அவர் உற்சாகப்படுத்துவார்.
என் இளமைக்காலம் துயர் மிகுந்தது. அப்பாவும் அம்மாவும் போடிநாயக்கனூர், பலக்கனூத்து என்று வெவ்வேறு ஊர்களில் வேலைநிமித்தம் வாழ்ந்து கொண்டிருக்க, மூணு நாலு வயசிலேயே நான் கிராமத்தில் தாத்தா பாட்டி, சித்தப்பா, அத்தையுடன் வாழநேர்ந்த துயரம்தான். இரவுகளில் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு அப்பா அம்மாவை நினைத்து அழுத படி உறங்கச்செல்வேன். வேறு வறுமையோ, பசி பட்டினியோ கிடையாது. வருடத்தில் நாலைந்து முறையாவது இட்லி, தோசையெல்லாம் போடுகிற அளவுக்கு வசதியான குடும்பம்தான். சில ஆண்டு களுக்குப் பின் என் துயரத்தில் பங்குபோட எனக்கு அடுத்தவனான இளங்கோவும் (கோணங்கி) தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்து என்னோடு இணைந்தான்.
இந்தப் பின்புலத்தில்தான் என் பால்ய காலம் கழிந்தது. இதெல்லாம் சேர்ந்தே என் குணநலனைச் செதுக்கி உருவாக்கியது. பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் நான் முதல் மாணவனாகப் படிக்க ஆரம்பித்து 11-ஆம் வகுப்பில் பள்ளியின் முதல்வனாகத் தேர்வுபெற்றேன். பின்னர் கோவில்பட்டியில் கல்லூரியில் சேர்ந்தேன்.
நூல்களைப் படிக்கும் பழக்கம் எப்போதிலிருந்து ஏற்பட்டது?
எங்கள் கிராமத்தில் எங்கள் ஆரம்பப்பள்ளிக்கு நேர்எதிராக அரசின் கிளை நூலகம் புதிதாகத் துவங்கப்பட்டது. அது திறக்கப்பட்ட நாள் முதலாக தினசரி நூலகம் செல்லும் பையனாக நான் இருந்தேன். நூலகராகப் பொறுப்பில் இருந்த பொன்னுத்தாய் லைப்ரரி டீச்சர் என் வாசிப்பை ஊக்குவித்தார். டப்பாச்சி என்கிற சிறார் நாவலே நான் முழுதாக வாசித்து முடித்த நூல். அதை அடுத்து சோனகிரி என்கிற நாவல்.அப்படியே தொடர்ந்தது வாசிப்புப் பழக்கம். நானும் இளங்கோவும் சேர்ந்து வீட்டில் ‘அன்பு நிலையம்’ என்கிற நூலகத்தை ஆரம்பித்தோம். சித்தப்பா பள்ளி ஆசிரியர் என்பதால் அமெரிக்க எண்ணெய், கோதுமை மாவு டின்கள் வரும் அட்டைப் பெட்டிகளையே செல்ஃப் போல சாய்த்து வைத்து, அதில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்போம். உறுப்பினர்களைச் சேர்த்தோம். ஐந்து பைசா கட்டணம். சாத்தூருக்கு எட்டு மைல் நடந்தேபோய் கண்ணன், அம்புலிமாமா எல்லாம் பர்ச்சேஸ் பண்ணி வருவது என் வேலை. வீட்டில் அப்பா வாசித்த புத்தகங்களும் கிடக்கும் லீவுக்கு அம்மா ஊரான நாகலாபுரம் செல்வோம். நடந்தேதான் போவோம். கால் வலித்தால் தாத்தா தோளில் சுமப்பார். அம்மா வீட்டில் தாத்தா மதுரகவி பாஸ்கரதாசின் புத்தகங்கள் எக்கச்சக்கமாகக் கிடக்கும். அவற்றை வாசிக்க முடியாது. கானாமிருதசாகரம் மாதிரிப் பெரிய சைஸ் புத்தகங்கள் மீது ஏறி விளையாடுவோம்.
புத்தகங்கள் சின்ன வயதிலிருந்தே எனக்கு நெருக்கமான நண்பனாகிவிட்டன.
எழுத வேண்டுமென்கிற உத்வேகத்தை ஏற்படுத்தியது யாரின் எழுத்து? அல்லது எந்த நிகழ்வு எழுதத் தூண்டியது?
பள்ளிக்காலத்திலேயே நாடகம் எழுதினேன். ‘
ஏழையின் கண்ணீர்’ என்பது நான் எழுதிய முதல்
நாடகம். அப்பாவின் எழுத்துகளும் தாத்தா வீட்டு
சூழலும் எழுத்தின் மீது ஈர்ப்பைக் கொண்டு
வந்ததாகச் சொல்லலாம். பின்னர் கல்லூரிக்காலத்தில் தீபம், கணையாழி வாசிக்க ஆரம்பித்ததும் கோவில் பட்டியிலிருந்தே ‘நீலக்குயில்’ பத்திரிகை வந்ததும் என் கல்லூரி சீனியர்களான தேவதச்சன்(ஆறுமுகம்), கௌரிஷங்கர் (முத்துக்கிருஷ்ணன்) எழுத்தாளர் களாக இருந்ததும் என இவை எல்லாம் சேர்ந்த சூழலே எழுத வைத்தது எனலாம். என் முதல் கவிதை ‘ஒருநாள் டைரி’ நீலக்குயில் இதழில்தான் வந்தது.
படித்து முடித்ததும் இராணுவத்தில் சேரநேர்ந்தது நிர்ப்பந்தமா? விருப்பமா?
கல்லூரியில் என்.சி.சி.யில் சேர்ந்து அண்டர் ஆபிசர் ஆகி இருந்தேன். என்.சி.சி. ஆசிரியர் செல்வராஜ் மிக நெருக்கமாகப் பழகுவார். நா.பார்த்தசாரதியின் தேசியப் பெருமிதம் ஊட்டும் நாவல்களில் அப்போது விழுந்து கிடந்தேன். நாட்டுக்காக சாக ஆசை கொண்டு ராணுவத்துக்குப் போனேன்.
இராணுவத்திலிருந்து வந்தபிறகு அஞ்சல் துறையில் பணி செய்தீர்கள். அந்த அனுபவம் எப்படி?
அஞ்சல் துறையில் சேர்ந்த உடனே நான் தொழிற்சங்கத்தில் சேர்ந்து சங்கக் கூட்டங்களில் பேச ஆரம்பித்துவிட்டேன். கல்லூரிப் பேச்சுப் போட்டிப் பைத்தியம் அஞ்சல் துறையில் சங்க மேடைகளில் தொடர்ந்தது. தொழிற்சங்க வேலை பார்ப்பதற்காகத்தான் அஞ்சல் அலுவலகத்துக்குப் போனேன் என்று சொல்லுமளவுக்குத் தீவிரமான தொழிற்சங்கவாதியாக ஆகிவிட்டேன். அந்த அனுபவங்களையெல்லாம் ஞாநியின் ‘தீம்தரிகிட’ இதழில் தொடராக எழுதி, இப்போது ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத்’ என்கிற புத்தகமாக வந்திருக்கிறது.
இடதுசாரி இயக்கங்களுடனான அறிமுகம் எப்போது ஏற்பட்டது?
அஞ்சல் துறை தொழிற்சங்கத்தின் வழியாகவும் ‘செம்மலர்’ இதழை வாசித்துக்கொண்டிருந்த கோவில்பட்டி இடதுசாரி நண்பர்கள் மூலமாகவும் 1978-இல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்துசேர்ந்தேன்.
தங்களின் முதல் சிறுகதை நூலான ‘வெயிலோடு போய்’ முழுக்கவே எதார்த்தவாத கதைகளைக் கொண்டது. இரண்டாவது நூலான வாளின் தனிமை’யில் மேஜிக்கல் ரியலிச கதைகள் இடம்பெற்றன. இந்த மாற்றம் எதனால்..?
தமிழ் நவீன இலக்கியச்சூழல் அன்றைக்கு அப்படி இருந்தது. அந்தச் சூழலின் தாக்கத்தால் இந்த மாற்றம் எனக்குள் நிகழ்ந்தது. ஒரு நாலு கதைகள் அப்படி இருக்கும். மற்றபடி என்னுடைய கதைகள் பெரும்பாலும் நேர்கோடு யதார்த்தவாத வகையைச் சேர்ந்தவைதாம்.
எழுத்தாளர்களுக்கு சங்கம் தேவையா என்கிற கேள்வி இப்போது எழுவதில்லை. ஆனாலும் சங்கச் செயல்பாடுகளால் ஓர் எழுத்தாளனின் படைப்பு முயற்சிகள் பின்தங்கிப் போய்விடாதா?
குடும்பத்தை விடவும் எழுத்துக்கு எதிரான ஒரு அமைப்பு உலகில் இருக்கவா செய்கிறது? குடும்பம் தேவையா என்று எழுத்தாளர்கள் யாரும் கேட்பதில்லை. சங்கம் தேவையா என்று மட்டும் கேட்பது என்ன நியாயம்? உள்ளத்தில் நெருப்பு இருந்தால் எல்லாத் தடைகளையும் படிகளாக மாற்றி எழுத முடியும் என்பதே என் புரிதல். சங்கத்தில் இருப்பது வாழ்க்கை, இலக்கியம் பற்றிய நம் புரிதலை ஆழப்படுத்தும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்தீர்கள். இப்போதும் கௌரவ தலைவராக இருக்கிறீர்கள். த.மு.எ.க.ச.வின் ஆகச் சிறந்த செயல்பாடாக நீங்கள் எதைச் சொல்வீர்கள்?
யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நம்பிக்கையை இளம் படைப்பாளிகளுக்குத் தந்து கொண்டிருப்பதையும் அதே நேரத்தில் யார் வேண்டுமானாலும் எழுதிவிடமுடியாது அதற்கான உழைப்பும் முயற்சியும் பயிற்சியும் தேவை எனப் பயிலரங்குகள் நடத்திக்கொண்டே இருப்பதும் சங்கத்தின் முக்கியப் பணியாகச் சொல்வேன். நான் இப்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர். மதிப்புறு தலைவராக சு.வெங்கடேசன் இருக்கிறார்.
ந தொண்ணூறுகளில் தொடங் கப்பட்ட எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கத்திலும் பணி செய்தீர்கள். அந்த இயக்கத்தின் வழியே கற்றதும் பெற்றதும்..?
கொஞ்சமா சொல்வதற்கு? ‘இருளும் ஒளியும்’ என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறேன். அதுவும்கூட ஒரு பகுதிதான். கற்றுக்கொடுக்கப்போய் மக்களிடம் கற்றுக்கொண்டு திரும்பியதுதான் அறிவொளி இயக்கத்தின் அனுபவம். ஒரே நேரத்தில் மக்கள் மேதைகளாகவும் முட்டாள்களாகவும் ஏமாளிகளாக வும் இருப்பதைப் புரிந்துகொள்ள நேரடியாக மக்களிடம் சென்று பழகி, கூடயிருந்து சேர்ந்து பணியாற் றிக் கற்றுக்கொண்டோம்.
வாசிப்பு இயக்கத்திற்காகத் தமிழின் மூத்த எழுத்தாளர்களின் கதைகளை எளிய மொழியில் குறுநூல்களாகவும் எழுதி இருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?
தேவைதான் எல்லாவற்றுக்கும் உந்துசக்தி. அறிவொளி இயக்கத்தில் அனா ஆவன்னா படித்து முடித்த மக்களுக்கு எளிய மொழியில் சின்னச் சின்ன வாக்கியங்களில் எழுதப்பட்ட புத்தகங்கள் தேவைப்பட்டன. நம்மிடம் இல்லாத இலக்கிய வளமா? ஆகவே அந்த வேலையைக் கையில் எடுத்தோம். இப்சனின் பொம்மை வீடு முதல் புதுமைப்பித்தனின் சங்குத்தேவனின் தர்மம், கி.ரா.வின் வேட்டி, வேல.ராமமூர்த்தியின் கிறுக்கு சண்முகம் வரை ஏராளமான இலக்கியங்களை மக்கள் மொழியில் ஒரு ரூபாப் புத்தகங்களாகக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு புத்தகமும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டு, ஒரே மாதத்தில் விற்றுவிட்டு, அடுத்த புத்தகத்துக்குப் போவோம்.
சிறுகதை, கட்டுரைகள் எழுதும் நீங்கள் கவிதையிலிருந்து எப்போதும் தள்ளியே இருக்கிறீர்களே… எதனால்?
எல்லோரையும் போல கவிதையில் தான் என் பயணம் துவங்கியது. கொஞ்சநாளில் அது நமக்குக் கை வரவில்லை. நாம் எழுதுவதெல் லாம் கவிதை இல்லை என்று உணரத் தலைப் பட்டேன். அப்போதே நிறுத்திவிட்டேன். அந்தப் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. வாசிப்ப தோடு சரி.
கறாரான விமர்சகராகப் பலராலும் சொல்லப்பட்டவர் நீங்கள். ஆனால், தற்போது அமைப்பு சார்ந்து எல்லோரையும் சகட்டுமேனிக்குப் பாராட்டுபவராக மாறிவிட்டதாகச் சொல்லப்படு கிறதே அது சரிதானா?
சகட்டு மேனிக்குப் பாராட்டுவதில்லை. பாராட்டைப் பொதுவெளியிலும் விமர்சனத்தைத் தனிப்பட்ட முறையிலும் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தை அமைப்பு எனக்குக் கற்றுத்தந்ததாகப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, நீங்கள் சமைப்பதிலும் வல்லவர். சமையல் பற்றிய நூலும் எழுதியிருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?
தின்கிற எல்லோரும் சமைத்துத்தான் ஆக வேண்டும். இப்புவியில் உள்ள எல்லா ஜீவராசிகளும் தமக்கான உணவை தாமேதான் தேடிக்கொள்கின்றன அல்லது சமைத்துக்கொள்கின்றன. தாவரங்கள்கூட ஒளிச்சேர்க்கையின் மூலம் தமக்கன உணவைத் தாமேதான் தயாரிக்கின்றன. ஆண் என்கிற ஒரே ஒரு உயிரினம் மட்டும்தான் தன் சோத்துக்கு அடுத்தவரைச் சார்ந்தே இருக்கிறது. அது கேவலமாக, அவமான மாக இருக்கிறது எனக்கு. அந்த அவமானம் இனி வேண்டாம் என உணர்ந்த கணத்திலிருந்து நான் சமைக்கத் துவங்கினேன். கடந்த 40 ஆண்டு களுக்கு மேலாக நான் சமையலறையில் மகிழ்வுடன் நிற்கிறேன். மான - அவமான உணர்ச்சி இல்லாத ஆண்கள் இன்னும் பெண்களைச் சமைக்கச் சொல்லித் தின்றுகொண்டிருக்கிறார்கள். அவர் களுக்கும் காலாகாலத்தில் சூடு சொரணை வரும் என்று நம்புகிறேன்.
பூ’ திரைப்படத்திற்காக சிறந்த கதாசிரியருக் கான தமிழக அரசின் விருதினைப் பெற்ற தருணம் குறித்து..?
இயக்குநர் சசி என்கிற நல்ல மனிதரால் எனக்குக் கிடைத்த விருது அது. அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நாவல் எழுதும் எண்ணமுண்டா..? எழுத விருப்பமெனில் எதைப் பற்றிய நாவல்..?
கனவு நிறைய இருக்கிறது. காலம் கைகூடும் என நம்பியிருக்கிறேன். உழைக்கும் வர்க்கத்தின் எண்ணற்ற கதைகள் இருக்கின்றன. எழுதிக் கொண்டே இருக்கலாம்.
இலக்கியத் தளத்தில் மட்டுமின்றி, கல்வித் தளத்திலும் தொடர்ந்து பங்களிப்பு செய்துவருகிறீர்கள். தமிழக அரசின் தற்போதைய கல்வி தொடர்பான செயல்பாடுகள் பற்றி..?
பல நல்ல முன்னெடுப்புகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செய்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதில்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகளைச் செவிமடுப்பதில்லை. ஆசிரியர் களை மதிக்காத துறையாக கல்வித்துறை இருப்பதும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளைக் கேரளம்போல தற்காலப்படுத்துவதில்லை போன்ற பல அடிப்படைக் கோளாறுகளும் நீடிக்கின்றன.
தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ எனும் நூலாக எழுதும் எண்ணம் எதனால் உருவானது?
இன்றைய இளம் வாசகர்களை மனதிற் கொண்டு எழுதப்பட்ட நூல் அது. உலகின் எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு வளமான சிறுகதை கள் நம்மிடம் உண்டு. அதை இளம் வாசகர்களுக்கு உணர்த்து வதே அந்த நூலின் நோக்கமாகக் கொண்டேன்.
வீட்டில் அப்பா (எம்.எஸ்.சண்முகம்) எழுத்தாளர். தம்பிகள் (கோணங்கி. ச.முருகபூபதி) இருவருமே எழுத்தாளர்கள். இந்தச் சூழலை எப்படி உணர்கிறீர்கள்?
ஒவ்வொருவரும் அவரவர் வழியில் வந்து கொண்டிருக்கிறோம். அல்லது போய்க்கொண்டி ருக்கிறோம்.
இன்றைக்குப் புதிதாக எழுதவரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகள் எப்படியுள்ளன..?
மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. நம் இலக்கிய மரபின் தொடர்ச்சி அறாவண்ணம் அவர்கள் படைப்புகளைத் தந்துகொண்டிருக்கி றார்கள்.
உங்கள் வாசகப் பார்வையில் ‘இனிய உதயம்’ இதழ் குறித்து..!
நல்ல பல பன்முகப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்கும் இதழ். வாழ்த்துகள்.