கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! - 18

/idhalgal/eniya-utayam/rural-singer-velmurugans-journey-my-singing-carriage-18

ன்னுடைய ஃபோக் வாய்ஸ், என்னுடைய ஷார்ப் வாய்ஸ் அதுக்கும் அதுக்கும் மேட்ச் ஆகி, அந்த ட்ரெண்டிங் சாங் பாடப் பாட எல்லாம் உற்சாகமாக கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கை தட்டி கை தட்டி அந்த பிட்சில பாடின உடனே யார்ரா அவன் அப்படின்னு எல்லாம் திரும்பித் திரும்பி பார்க்கு றாங்க. எல்லாம் பாடி முடிச்சாச்சு.

அந்த சேர்மன் என்ன கூப்பிட்டு பாத்தியா எப்படி நடந்தது. நீ ரகானா வீட்டுல போய் வாய்ப்பு கேட்டு பாடமுடியுமா? அவங்க என்ன பாட்டுப் பாடினவங்க ஞாபகம் இருக்கா?

மலே மலே மலே மருதமலே மலே மருதமலே சில சில சில வெண்கல சில சிலே வெண்கல சில ஆ மலே மலே மலே மருதமலே மலே மருதமலே சில சில சில வெண்கல சில சிலே வெண்கல சில -இந்த பாட்டு பாடுனவங்க இல்லையா? அந்த பாட்டு எவ்வளவு பெரிய ஹிட்டு! அப்படின்னாரு.

vv

பரவாயில்ல எல்லாம் நல்லாதான் போகுதுன்னு, இப்ப பாட்டுப் பாடி முடிச்சுட்டு கிளம்பலாமுன்னு ஓரமா நின்னுட்டு இருக்கேன். சரி கடையில போய் ஒரு டீ சாப்பிட்டு வருவோமுன்னு அப்படியே போய் சாப்பிட்டு அங்கிருந்து வரேன். அங்கிருந்து உடையார் ஓடியாந்தாரு. பிரைஸ் அனவுன்ஸ் பண்ணலாம்னு இருக்காங்க. ஒரு வார்த்தை வந்து கேட்டுட்டுப் போங்க அப்படின்னு சொல்றாரு.

அப்ப ராதிகாவும், சரத்குமாரும்தான் சீஃப் கெஸ்ட். அவங்களும் வந்துட்டாங்க. ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வந்து ஒரு கல்லூரி. செகண்ட் பிரைஸ் ஒரு கல்லூரி. தேர்ட் பிரைஸ் ஒரு கல்லூரி. சார் இத கேக்குறதுக்காகவா என்ன நிக்க வச்சீங்க. சரி பரவால்ல சார்ன்னு அப்படியே நின்னுக்கிட்டு இருந்தேன்.

அப்ப "ரகானா மேடம்” சொல்றாங்க இந்த நிகழ்விலேயே "பெஸ்ட் வாய்ஸ்” தனிக் குரல் ஒருத்தர நாங்க செலக்ட் பண்றோம். சிறந்த குரல் வளத்துக்கான பரிச நாங்களே டிஸ்கஸ் பண்ணி னோம். அந்த "தனிக்குரல் அதாவது "பெஸ்ட் குரல் வளத்துக்கு நாங்க "வேல்முருகனை செலக்ட் பண்ணியிருக் கோம்ன்னு சொல்றாங்க. அப்ப தான் எனக்குத் தோணுச்சு நாமளும் வாழ்க்கையில ஏதாவது சாதிக்கலாம் அப்படின்னு. மேடையில் ஏறி சர்டிபிகேட், ப்ரைஸ் எல்லாம் வாங்கும்போது நாம இதுக்காகதான் பொறந்தோமா? நம்ம அம்மா அப்பா நம்மள இதுக்காகத்தான் பெத்து எடுத்தாங்களா? அப்படிங்கற ஒரு மட்டற்ற மகிழ்ச்சி, சொல்லமுடியாத அளவுக்கு மனசுக்குள்ள ஊற்றெடுக்குது. அவங்க கொடுத்த சர

ன்னுடைய ஃபோக் வாய்ஸ், என்னுடைய ஷார்ப் வாய்ஸ் அதுக்கும் அதுக்கும் மேட்ச் ஆகி, அந்த ட்ரெண்டிங் சாங் பாடப் பாட எல்லாம் உற்சாகமாக கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கை தட்டி கை தட்டி அந்த பிட்சில பாடின உடனே யார்ரா அவன் அப்படின்னு எல்லாம் திரும்பித் திரும்பி பார்க்கு றாங்க. எல்லாம் பாடி முடிச்சாச்சு.

அந்த சேர்மன் என்ன கூப்பிட்டு பாத்தியா எப்படி நடந்தது. நீ ரகானா வீட்டுல போய் வாய்ப்பு கேட்டு பாடமுடியுமா? அவங்க என்ன பாட்டுப் பாடினவங்க ஞாபகம் இருக்கா?

மலே மலே மலே மருதமலே மலே மருதமலே சில சில சில வெண்கல சில சிலே வெண்கல சில ஆ மலே மலே மலே மருதமலே மலே மருதமலே சில சில சில வெண்கல சில சிலே வெண்கல சில -இந்த பாட்டு பாடுனவங்க இல்லையா? அந்த பாட்டு எவ்வளவு பெரிய ஹிட்டு! அப்படின்னாரு.

vv

பரவாயில்ல எல்லாம் நல்லாதான் போகுதுன்னு, இப்ப பாட்டுப் பாடி முடிச்சுட்டு கிளம்பலாமுன்னு ஓரமா நின்னுட்டு இருக்கேன். சரி கடையில போய் ஒரு டீ சாப்பிட்டு வருவோமுன்னு அப்படியே போய் சாப்பிட்டு அங்கிருந்து வரேன். அங்கிருந்து உடையார் ஓடியாந்தாரு. பிரைஸ் அனவுன்ஸ் பண்ணலாம்னு இருக்காங்க. ஒரு வார்த்தை வந்து கேட்டுட்டுப் போங்க அப்படின்னு சொல்றாரு.

அப்ப ராதிகாவும், சரத்குமாரும்தான் சீஃப் கெஸ்ட். அவங்களும் வந்துட்டாங்க. ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வந்து ஒரு கல்லூரி. செகண்ட் பிரைஸ் ஒரு கல்லூரி. தேர்ட் பிரைஸ் ஒரு கல்லூரி. சார் இத கேக்குறதுக்காகவா என்ன நிக்க வச்சீங்க. சரி பரவால்ல சார்ன்னு அப்படியே நின்னுக்கிட்டு இருந்தேன்.

அப்ப "ரகானா மேடம்” சொல்றாங்க இந்த நிகழ்விலேயே "பெஸ்ட் வாய்ஸ்” தனிக் குரல் ஒருத்தர நாங்க செலக்ட் பண்றோம். சிறந்த குரல் வளத்துக்கான பரிச நாங்களே டிஸ்கஸ் பண்ணி னோம். அந்த "தனிக்குரல் அதாவது "பெஸ்ட் குரல் வளத்துக்கு நாங்க "வேல்முருகனை செலக்ட் பண்ணியிருக் கோம்ன்னு சொல்றாங்க. அப்ப தான் எனக்குத் தோணுச்சு நாமளும் வாழ்க்கையில ஏதாவது சாதிக்கலாம் அப்படின்னு. மேடையில் ஏறி சர்டிபிகேட், ப்ரைஸ் எல்லாம் வாங்கும்போது நாம இதுக்காகதான் பொறந்தோமா? நம்ம அம்மா அப்பா நம்மள இதுக்காகத்தான் பெத்து எடுத்தாங்களா? அப்படிங்கற ஒரு மட்டற்ற மகிழ்ச்சி, சொல்லமுடியாத அளவுக்கு மனசுக்குள்ள ஊற்றெடுக்குது. அவங்க கொடுத்த சர்டிபிகேட், ப்ரைஸ் இது எல்லாத்தையும் ஹரிதாஸ் சார்கிட்ட கொண்டுவந்து காட்டுறேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டாரு.

ஊருல கல்யாணம் முடிஞ்சி, நம்மள இந்த வீட்டில எல்லாரும் கொண்டாந்து விட்டுட்டுப் போனாங்க. ஆனா வந்தவங்க எல்லாரும் ரோட்ல நின்னுகிட்டு இருந்தாங்க. வந்து உட்கார்ந்து பேச கூட, வீட்ல இடம் இல்லை அப்படின்னு தோணும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இனிமே அடுத்த தடவ யார் வந்தாலும் வீட்டில் வந்து உட்காருற அளவுக்காவது ஒரு வாடகை வீடு பாக்கணும் அப்படின்னு தோணுச்சு.

கச்சேரிக்குப் போயிட்டு இருந்தாலும், வாய்ப்பு அந்த அளவுக்கு பெருசா ஒன்னும் இல்லை. அதிக பட்சம் 200 ரூபாய் கொடுப்பாங்க. இந்த 200 ரூபாய வெச்சு எத்தனை நாள் ஓட்டுறது அப்படின்னு தோணும். அப்படியே அந்த 200 ரூபாய வெச்சு ஓட்டிட்டு இருந்தாகூட, நமக்கு நிறைய அவமானங்களும் கேவலங்களும் நடந்துகிட்டுதான் இருந்துச்சு. யாரும் மதிக்கிறது இல்ல. பாடினாகூட யாரும் பெருசா அந்த அளவுக்கு பணம் கொடுக்கிறதும் இல்ல. அப்படியே போயிட்டு இருக்குது. ஒரு தடவை ரொம்பவும் மனசு கஷ்டமாயி, இனிமே கச்சேரியில இருந்து நின்னுடலாம்னு சொல் லிட்டு கச்சேரிய நிறுத்திட்டு நான் என்ன பண்ணி னேன். ஃப்ரீலான்ஸரா வேற வேற கச்சேரிக்கு போறதுன்னு முடிவுபண்ணினேன். அங்க ஒரு 100, 200 கொடுத்தாங்கன்னா வாங்கிட்டு வரது. வயித்து பொழப்பு நடக்கணுமே. மனைவி வேற நம்மள நம்பி வந்துட்டாங்க அப்படின்னு தோணுச்சி.

சரி தொலைக்காட்சியில் ஏதாவது போய் வாய்ப்பு கேட்கலாம் அப்படின்னு சொல்லிட்டு ஒவ்வொரு தொலைக்காட்சியா போய் பாடுறேன். அப்பதான் அந்த அர்ச்சனா மேடம் நடத்திய இளமை புதுமை அப்படிங்ற நிகழ்ச்சி சன்.டி.வியில ஓடிக்கிட்டு இருக்கு. அதுலதான் போய் கலந்துக்கலாம்னு நானும் கலாவும் போறோம். பாடுறதுக்கு வாய்ப்பும் கெடைச்சுது. பாடுறோம். அது பாடி முடிச்ச மறுநாள் பாலாஜி சக்திவேல் சார் அவங்க ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் வருது.

அவரு “காதல்” படம் முடிஞ்சு இரண்டாவது “கல்லூரி” அப்படின்னு ஒரு படம் பண்றாரு.

அதுல ஒரு வாய்ப்புக்காக கூப்பிட்டாரு. அங்கேயும் நான் போய் பாடுறேன். ஆனா கதை சரியில்ல அப்படின்னு சொல்லிட்டு படம் வெளியில வரல.

திரும்பவும் ஒரு ஒரு தொலைக்காட்சியா தேடிப் போகும்போது, நம்ம ஊரு எம்.எல்.ஏ. ஒருத்தர் அவர் பெயர் ராமு. அவர் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வா இருந்தாரு. அவரு எப்படி பழக்கம்னா அவரு எங்க அண்ணியுடைய சொந்த மாமா. அதனால திடீர்னு அவர வடபழனியில் ஒரு இடத்துல சந்திக்கிறேன். தம்பி என்ன பண்றீங்க அப்படின்னு கேட்டாரு. நான் பாட்டு பாடுறேன் அப்படின்னு சொன்னேன். இதுக்கு முன்னாடி நான் இசைக் கல்லூரியில் படிச்சு முடிச்சு இருக்கேன் அப்படின்னு சொல்லும்போது பக்கத்தில் ஜெபமாணிக்கம் அப்படின்னு சொல்லிட்டு அவர்கிட்ட எல்லா அறிமுகம் பண்ணி வைக்கி றாரு. நான் என்ன பண்ணினேன் அம்மா பாட்டு அவர்கிட்ட பாடிக் காட்டுறேன்.

அது என்ன பாட்டுன்னா.

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…

அம்மாவ வாங்க முடியுமா… நீயும்

அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…

தாய் போலே தாங்க முடியுமா

-இந்தப் பாட்ட தான் நான் அவர்கிட்ட பாடிக் காட்டுகிறேன்.

அப்புறம்

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்

ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்

யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!

-அப்படிங்கிற பாட்டையும் பாடிக் காட்டுறேன்.

இப்பதான் கல்லூரி படத்தோட டைரக்டரு என்ன பண்றாரு ஏப்பா நீ பாடுன பாட்டு படத்துல வந்துருச்சி. அதனால ஒரு அம்மா பாட்டு நீயே ரெடி பண்ணு. அதை எங்கள மாதிரி உள்ளவங்களுக்கும் பாடிக் காட்டலாம். கச்சேரியில எல்லாம் பாடலாமுல்ல அப்படின்னு சொன்னாரு.

அப்ப வந்து நம்ம ஸ்டீபன் ராயல்னு, மியூசிக் டைரக்டரு சாந்தோம்ல இருக்காரு. அவரு திருமாவளவன் சாருக்கு வந்து நிறைய மியூசிக் எல்லாம் போட்டிருக்காரு. நண்பர் ஒருத்தர் சொல்லிதான் அவர போய் நான் சந்திக்கிறேன்.

அவரைப் போய் நான் பார்க்கும்போதுதான் அங்க பாடலாசிரியர் அண்ணன் இளையகம்பன் வராரு. அவரு நெருப்பு வரியில அண்ணன் திருமாவளவனுக்கு அவருடைய வாழ்க்கை வரலாற பாட்டா எழுதுவாரு. அப்போ அங்க ”வன்னி

அரசு” சார் அங்க வராங்க. ”இளைய கம்பன்”

அண்ணன் நம்மள விசாரிக்கிறாரு. அப்ப நான்

அவர்கிட்ட சொல்றேன். அண்ணா இதுமாதிரி தவறா எடுத்துக்காதீங்க. கல்லூரி படத்தில் நான் பாடுன ஒரு பாட்டு வெளிவந்ததுனால, வேற புதுசா உனக்குன்னு ஒரு அம்மா பாட்டு எழுதி பாடிக் காட்டுன்னு சொல்றாங்க, அப்படின்னு சொல்லிட்டு, அந்த அம்மா பாட்டு நீங்கதான் எனக்கு எழுதிக் கொடுக்கணும் அப்படின்னு கேட்டேன்.

அவர் என்ன பண்றாரு, கேட்டுட்டு அவரு தாய் மேல ரொம்ப பாசம் உள்ளவர்போல. அப்படியே ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ சாப்பிட்டோம். என் கையில 20 ரூபாய் நோட்டு கொடுத்து வச்சுக்கச் சொன்னாரு. அதை அப்படியே என்னோட பையில வச்சுக்கிட்டேன். இதே மாதிரி ரோட்ல அங்கங்க நின்னுட்டு பாடிக்கிட்டு இருக்குறது நல்லா இருக்காது தம்பி. இந்த அம்மா பாட்டுகூட இன்னும் ஒரு எட்டு பாட்டு எழுதி, அது ஒரு கேசட் ஆல்பம் போட்டமுனா பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு சொல்றாரு. அந்தப் பத்து பாட்டும் எழுதி ஆல்பம் போடுறதுக்கு அண்ணன் இளையகம்பன்தான் உதவியும் பண்ணினார்.

அந்த ஆல்பத்தை எடுத்துக்கிட்டு,

அங்கே இங்கே வாய்ப்புக் கேட்டு அப்படியே பாடும்போதுதான். விஜய் டி. வி. யில ”யாரு மனசுல யாரு உங்க மனசுல யாரு அவருக்கென்ன பேரு” அப்படின்னு ஒரு ப்ரோக்ராம் நடக்குது. அந்த வாரத்துல அதுதான் கடைசி எபிசோடு.

அப்ப ரெண்டு மூணு நாளாவே நான் அந்த பக்கம் போயிட்டு இருக்கும்போது ஏ.சி. கணேசன்

அப்படிங்கறவரு இப்ப ப்ரோக்ராம் நடக்கப் போகுது. நீங்க இங்கேயே இருங்க அப்படின்னு சொல்லி இருந்தாரு. அந்த புரோகிராமுல மூனு பேர் கலந்துக்கணும். அதுல ரெண்டு பேருதான் வந்து இருக்காங்க. ஒருத்தர் வரல. ஏ.சி. கணேசன் என்ன பண்றாரு, இந்த பையன் ரொம்ப நாளா வந்துட்டு இருக்கான். அதனால இந்த பையன போடலாம்

அப்படின்னு சொல்லி அந்த புரோகிராம் நடத்துற காம்பயர் ஜி.எஸ். பிரதீப்கிட்ட சொல்றாரு.

அவரும் ஓ.கே. சொல்லிட்டாரு. நான் இப்ப

அந்த ப்ரோக்ராம்ல கலந்துக்க உள்ளே போகும்போது, பிரதீப் சார் என்ன பண்றாரு,

வாங்க வேல்முருகன் அப்படின்னு என்ன கூப்பிடு

றாரு. என்ன பண்றீங்க அப்படின்னு கேட்கும்போது, நான் இந்த மாதிரி நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் பாடுவேன் சார் அப்படின்னு சொல்றேன். அப்படியா ஏதாவது ஒரு பாட்டு பாடுங்க

அப்படின்னு கேட்டாரு. அப்பதான் நான் வந்து மொத மொதல்ல புரட்சிக்கனல் அண்ணன் இளையகம்பன் எழுதி வெளிவந்த அந்த அம்மா பாட்ட பாடுறேன்.

பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா - உன்

பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா

இரத்தத்தை எல்லாம் பாலா தந்து

பொத்தி வளத்த அம்மா - உன்

அன்புக்கு மூன்னால ஆகாசம் சும்மா

-இதக்கேட்டு எல்லோரும் உருகுனாங்க.

அடுத்து அடுத்து உருக்கம் கூடுது...

’காச்சல் வந்து நான் படுத்தா கஷாயத்த குடிக்க வெச்ச

என் புள்ள கலெக்டருன்னு எட்டு ஊரு சொல்லி வெச்ச

தாலிய வித்து கூட தாயே என்ன படிக்க வெச்ச

உன்ன பாட வார்த்த இல்லை அம்மா

உன்ன விட உலகத்துல எல்லாமே சும்மா

உன்ன பாட வார்த்த இல்லை அம்மா

உன் காலடி மண்ணுக்கு முன்னால திருநீறும் சும்மா’

-அந்தப் பாட்டு முழுதும் கண்ணீரால் எழுதுன மாதிரி அமைஞ்சிது.

இந்தப் பாட்டைப் பாடி முடிக்கும்போது

அந்த ஜி.எஸ். பிரதீப் சாரு அழுறாரு. கேமராமேன் எல்லாருக்கும் கண்ணிலிருந்து தண்ணி ஊத்துது. ஏன்னா முதல் முறை உலகத்துல, நம்ம சினிமாவில நாம நிறைய அம்மா பாட்டு கேட்டு இருக்கோம். அதுக்கப்புறம் புதுசா ஒரு அம்மா பாட்டு இருக்கு அப்படின்னா அது வந்து இதுதான்.

இப்ப இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும்போது, ஜேம்ஸ் வசந்த் சாரு சுப்பிரமணியபுரம் படத்துக்கு கமிட்டாகி கம்போசிங் போயிட்டு இருக்கு. இப்ப திருவிழா சாங், ஒரு லவ் சாங் ஒன்னு இருக்குது போல, இரவு 9 மணிக்கு அவர் சாப்பிடற டைத்துல விஜய் டி.வி. வைத்துப் பார்த்திருக்கிறார். நான் அந்த நிகழ்ச்சியில் பாடறது அன்றைக்கு ஒளிபரப்பாகுது. அப்போ ஜேம்ஸ் வசந்த் சார் அந்த சேனலுக்கு போர்டு மெம்பரா இருந்தாரு. அவரு நான் பாடுறத பார்த்துட்டு அந்த நிகழ்ச்சியினுடைய ப்ரடியூசர் பாத்திமாகிட்ட என் போன் நம்பரை வாங்கிட்டார்.

மறுநாள் காலையில ஜேம்ஸ் சார் எனக்கு போன் பண்றாரு. நான் ஜேம்ஸ் வசந்த் பேசுறேன். உங்க ப்ரோக்ராம் டி.வி.யில பார்த்தேன். ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கனும் வரமுடியுமான்னு கேக்குறாரு. பிசியா இருக்கீங்களா ஃப்ரீயா இருக்கீங்களா அப்படின்னு கேட்கும்போது, இல்ல சார் நான் ப்ரீயாதான் இருக்கிறேன் அப்படின்னு சொன்னேன். எந்த ஊர்ல இருக்கீங்கன்னு கேட்டாரு. சென்னையில்தான் இருக்கிறேன் என்று சொல்ல, என்ன பண்றீங்கன்னு கேட்டாரு. இங்கதான் சார் மியூசிக் காலேஜ் படிச்சேன். இப்ப கச்சேரி அது இதுன்னு அப்படியே போராடிட்டு இருக்கேன் சொல்ல, சரி ரைட்டு வாங்கன்னு சொன்னார்.v (வண்டி ஓடும்)

uday010724
இதையும் படியுங்கள்
Subscribe