மழை பெய்யும்போதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது,
இப்போதெல்லாம்
அடிக்கடி மழை வருகிறது.
காதலும் மழையும்
இணைந்து பொழிந்தது
தாமிராவின் கவிதை வரிகள்.
நட்பும் காதலும் தாமிராவின் வாழ்வில்
இரண்டறக் கலந்திருந்தது.
தன் காதலி மீராவின் ஞாபகமாக
தந்தை வைத்த 'தாவுத்'தையும்,
'மீரா'வையும் இனைத்து தாமீரா என்று
புனைப்பெயரை வைத்தான்...
நேரடியாக அந்தப் பெண்ணின்
பெயரைக் குறிப்பதாக இருப்பதனால்
அதனை மறைபொருளாக வைக்க எண்ணி
தான் பிறந்த மண் திருநெல்வேலி,
தாமிரபரணி நதியைக் குறிக்கும்விதமாக
தாமீரா என்பது தாமிரா என்றானது .
தன் பெயர் அழைக்கப்படும்பொதெல்லாம்
அவள் நினைவு வந்துவந்து போகும் என்றான்.
பெருங்கோபமும் பெருங்காதலும் கொண்டவன்.
அவன் நட்பு வட்டமே அவனை இந்த அளவுக்கு உயர்த்தியது. ஒருமுறை பார்ப்பவரை புன்னகையால் தன்வசமாக்கும் நட்புக்காதலன்.
தாமிரா காதலித்த மீராவைத் திருமணம் முடிக்க இயலா
மழை பெய்யும்போதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது,
இப்போதெல்லாம்
அடிக்கடி மழை வருகிறது.
காதலும் மழையும்
இணைந்து பொழிந்தது
தாமிராவின் கவிதை வரிகள்.
நட்பும் காதலும் தாமிராவின் வாழ்வில்
இரண்டறக் கலந்திருந்தது.
தன் காதலி மீராவின் ஞாபகமாக
தந்தை வைத்த 'தாவுத்'தையும்,
'மீரா'வையும் இனைத்து தாமீரா என்று
புனைப்பெயரை வைத்தான்...
நேரடியாக அந்தப் பெண்ணின்
பெயரைக் குறிப்பதாக இருப்பதனால்
அதனை மறைபொருளாக வைக்க எண்ணி
தான் பிறந்த மண் திருநெல்வேலி,
தாமிரபரணி நதியைக் குறிக்கும்விதமாக
தாமீரா என்பது தாமிரா என்றானது .
தன் பெயர் அழைக்கப்படும்பொதெல்லாம்
அவள் நினைவு வந்துவந்து போகும் என்றான்.
பெருங்கோபமும் பெருங்காதலும் கொண்டவன்.
அவன் நட்பு வட்டமே அவனை இந்த அளவுக்கு உயர்த்தியது. ஒருமுறை பார்ப்பவரை புன்னகையால் தன்வசமாக்கும் நட்புக்காதலன்.
தாமிரா காதலித்த மீராவைத் திருமணம் முடிக்க இயலாமல், வேறு பெண்ணை மணமுடித்தான். மீரா தனியாக வாழ்வதென முடிவெடுத்தாள். தன் காதலைத் துறக்கச்சொன்ன தாயையும் இழந்து, தன் காதலையும் இழந்தவள் மனம் பித்தானது. மாத்திரை துணையொடு வாழ்வு சுழல, மனநிலை பிழன்றது; தனிமரமானாள்.
இதையறிந்த தாமிரா, அந்த பெண்ணைத் தன் குழந்தைபோல பாவித்து, மனைவியோடு சென்று கூட்டிவர எண்ணியிருந்தது பற்றி திரைப்பட இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் கூறி, அதை ஒரு கதையாகவும் எழுதிக் கொடுத்திருந்தான்.
அதைப் படித்த பாலாஜி சக்திவேல்,
அந்த காதல் உணர்வு அற்புதமாக இருக்கிறதென்று மனம்நெகிழ்து பாராட்டினார். ஆனால் அது சாத்தியமாகாமல் போனது துயரம். ஒரு பெண் தன் காதலனைக் குழந்தையாக ஏற்றுக்கொள்வதென்பது இன்னும் காதலின் உச்சத்தைக் காட்டுமென்றெண்ணி அவர் தன் காதல் திரைப்படத்தில் தாமிராவின் கருவை வைத்தார். பெருவெற்றி கண்டார். காதலை, காதல்கொண்ட மனதால்தான் உள்வாங்க முடியும்.
கேமராமேன் விஜய் மில்டன் ரசனையான காதலன்; காதலியின் நினைவாக கொலுசைத் தன் கழுத்தில் மாட்டியிருப்பார். காதல் ஒசை நெஞ்சில் இசைத்துக்கொண்டே இருக்கும். அவரின் முதல் தொகுப்பான 'கொலுசுகள் பேசக்கூடும்' என்ற கவிதைத் தொகுப்பை ஒழுங்குபடுத்திக் கொடுத்தவர் தாமிரா. எனவே அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.
அவன் நட்பும், அவன் அன்புவட்டமும் பெரிதினும் பெரிது… அவன் நெஞ்சில் தங்கியவர்கள் ஏராளம். அந்த நட்பு வட்டத்தின் அன்பினால் அவனுக்கு 'ரெட்டைச் சுழி' என்னும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் இரு துருவங்களான இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா இருவரையும் கதையின் நாயகனாக்கியதும், சுற்றியிருந்த நண்பர்களால்தான் சாத்தியமானது. இப்படி சாத்தியப்படாத பலவற்றை சாத்தியமாக்கிக் காட்டியது, ,தமிழ் சினிமா மறக்கமுடியாத புதிய சாதனை.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், எத்தனையோ பேர் கேட்டுக்கொண்டபோதும் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தாமிரா பலமுறை முயன்று, அவரது ஒப்புதல் பெற்று, அப்துல் ரகுமான் எழுதிய கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை 'ஆண் தேவதை' படத்தில் பாடலாக இடம்பெறச் செய்தார். கவிக்கோ எழுதிய முதலும் கடைசியுமான திரைப்பாடல் இதுவே. மத நல்லிணக்கத்தைப் போற்றும்வகையில் அமைந்த அந்த பாடலின் ஆரம்ப வரிகள் இவ்வாறு தொடங்குகின்றன...
'மலரின் நறுமணம் போகுமிடம்
குறளின் பாடல்கள் போகுமிடம்
அணைந்த சுடர்கள் போகுமிடம்
அதுதான் நாமும் போகுமிடம்...'
வெற்றிக்கும் தோல்விக்கும் நூலிழை வித்தியாசம்தான். உழைப்புக்கும், கடினமான போராட்டத்துக்கும், முயற்சிக்கும் எள்ளளவும் குறைவில்லை. ஆனால் வெற்றி கொண்டாடப்படுவதாகவும், தோல்வி கண்டுகொள்ளப்படாததாகவும் இருப்பதே உலக இயல்பு.
முயற்சியுடன் தொடர்ந்து தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையுடன் ஓடிக்கொண்டிருந்தான்.
கடைசியாக மருத்துவமனையில் இருந்தபோதுகூட எப்படியும் நான் மீண்டுவருவேன்; மீண்டும் படம் செய்வேன் என்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துவிட்டுதான் சென்றான். தவிர்க்க இயலாதது மரணம். வாழ்வின் நிழல் மரணம்.
தாமிராவின் 'பர்வத மலையில் ஒரு ராஜகுமாரி', 'தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்' என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. முடிக்கப்படாத நாவலும், சில கட்டுரையையும் கவிதைகளயும் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புத்தகமாகக் கொண்டுவர பெரும் முயற்சி எடுக்கிறார். மேலும் அவனது கனவுப் படமான 'கம்பா நதி'யை புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறார், நாளந்தா பதிப்பாளர் பொன் தங்கபாண்டியன் அவர்கள்.
எழுத்து சினிமாவானது. சினிமாவாகாத எழுத்து புத்தகமாகிறது.
தாமிரா என்ற எழுத்து நதி ஓடி மறைந்தது...