விதி -எம்.முகுந்தன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/rule-m-mukunthan-tamil-sura

பிரகாசமே இல்லாமல் கிழக்கு திசையில் சூரியன் உதித்தது. வெளிச்சத்திற்கு பலமில்லை. பலவீனமான ஒளிக்கீற்றுகள் வயல்களில் மயங்கிக்கிடந்தன; வெளிச்சம் படிப்படியாக மறைந்தது. மேலே கறுத்த மழை மேகங்கள் மெதுவாக வந்து சேர்ந்தன. ஆகாயம் மூடிக்கொண்டது. ஈரமான காற்று வீசியது. காற்றுக்கு மேலும் ஈரம் உண்டானது. கிழக்கு திசையில் எங்கோ மழை பெய்துகொண்டிருந்தது. காற்றுக்கு மழையின் வாசனை இருந்தது.

மாலைவேளை வந்தவுடன் ஆகாயம் இல்லாமல்போனது.

கருமேகங்கள் திரண்டுநின்றன. காற்றுவீசமால்போனது. ஆகாயத்திலும் பூமியிலும் பேரமைதி பரவியது.

வழியில் எங்கும் தங்காமல் கல்லூரி முடிந்தவுடன், ராஜன் நேராக வீட்டிற்கு வந்தான்.

கிளப்பிற்குச் சென்று சீட்டுவிளையாடாமல், அலுவலகம் முடிந்து தந்தை நேராக வீட்டிற்கு வந்தார்.

மாலை ஆனவுடன், தெருக்கள் ஆளரவமில்லாமல் ஆயின. இருள் நிறைந்தது. மின்னல் கீற்றுகள் எரிந்து ஒளிர்ந்தன. மய்யழி ஆற்றின் வேகம் அதிகரித்தது.

எந்த நிமிடத்திலும் மழை பெய்யலாம். நதியும் குளமும் கரைகளைக் கடந்து ஓடலாம். வயல்கள் மூழ்கலாம். வெள்ளம்கூட வரலாம்.

வாசலில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கின் திரி கரிந்து எரிய ஆரம்பித்தது. விளக்கை எடுப்பதற்காகத் தாய் வாசலுக்குச் சென்றாள். மின்னல் எரிந்து படர்ந்தது.

""கடவுளே... இன்னும் தினேஷன் வரலையே?''

தாய் யாரிடம் என்றில்லாமல் கூறினாள். மழை மேகங்கள் இறங்கி... இறங்கி வந்தன. காற்றுக்கு பலம் அதிகரித்துக்கொண்டு வந்தது.

""பையன் எப்போ வெளியே போனான்?''

தந்தை கேட்டார். பதில் கூறுவதற்கு அன்னையால் முடியவில்லை. அவன் எப்போது வெளியே சென்றான்? தோன்றும்போது செல்வான். தோன்றும்போது வருவான். போவதையும் வருவதையும் யாருமே கவனிப்பதில்லை.

விளக்கை எடுத்துக்கொண்டு தாய் உள்ளே சென்றாள்.

""மழை பெய்யுதாடீ?''

தானியப் பெட்டியின்மீது படுத்திருந்த பாட்டி கேட்டாள்.

"கடவுளே... அந்த பையன் வந்தபிறகு பெஞ்சா நல்லது.' தாய் தனக்குள் கூறிக்கொண்டாள்.

அவன் எப்போது வருவான்?

தினேஷன் வருவதற்காக மழை காத்துநிற்கவில்லை. காற்றில் இரைச்சலுடன் பெரிய மழைத்துளிகள் சீறிவந்தன. பூமியில் ஓசையுடன் பதிந்தன. மழைத்துளிகள் கூட்டமாக விழுந்தன. தொடர்ந்து விழுந்தன.

""அந்தக் கதவை மூடுடீ.. குளிருது.''

குளிர்ந்த காற்று அறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டிருந்தது.

கதவை அடைப்பதற்கு தாய் தயங்கினாள். இந்த மழையில் என்ன செய்து கொண்டிருப்பான்? எங்கு நின்று கொண்டிருப்பானோ... தெரியவில்லையே? ராஜனின் அறைக்குள் தாய் சென்றாள். விளக்குக்கு முன்னால் அமர்ந்து அவன் படித்துக்கொண்டிருந்தான்.

""மகனே... வழியில தினேஷனை எங்கயும் பார்க்கலையா?''

""இல்ல.''

""மகனே... நீ பாதாற்றின் வழியாத்தானே வந்தே?''

பாதாற்றின் கரையில்தான் பொதுவாக சென்று அமர்ந்திருப்பான். இல்லாவிட்டால்- கடற்கரையில்.

""இந்த மழையிலும் காத்துலயும் கடற்கரையில் போய் உட்கார்ந்திருக்கறதை நெனச்சா... என் கடவுளே!''

""லட்சுமி... உனக்கு என்னாச்சு? தினேஷன் என்ன சின்ன குழந்தையா? நேரம் ஆகறப்போ, அவன் இங்க வருவான். தெரியுதா? நீ ஏன் இப்படி கவலைப்படுறே?''

மழை பலமாகப் பெய்தது. நிலத்திலும் வாசலிலும் தெருவிலும்... எல்லா இடங்களிலும் நீர் தேங்கி நின்றிருந்தன... ஓடின... நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஓசை நான்கு திசைகளிலும் கேட்டது. தெருவில் ஒரு உயிர்கூட இல்லை. எல்லா இடங்களிலும் இருட்டு பரவி நுழைந்திருந்தது.

ராஜன் படிப்பதை நிறு

ராஜன் படிப்பதை நிறுத்தினான்.

பாட்டி கூறினாள்: ""ஜானு... சோறு தயாராகலையாடீ? பசியில உயிர்போறமாதிரி இருக்குடீ.''

சோறு தயாராகியிருக்கிறது. சூடான சோறு பானையில் இருக்கிறது. பானையிலிருந்து நீராவி வெளியேவருகிறது. வாசனை மேலே வருகிறது.

""சோறு பரிமாறட்டுமா?''

ஜானகி கேட்டாள்.

""பையன் வராமலா...''

ராஜனும் கூறினான். ""பசி.'' வேறெதையும் தாங்கிக்கொள்ளலாம்- பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

தந்தையும் ராஜனும் கைகளைக் கழுவிவிட்டு, பலகையின்மீது வந்து அமர்ந்தார்கள். தாய் கிண்ணத்தை எடுத்து முன்னால் வைத்தாள். ஆவி உயர்ந்துகொண்டிருந்த சோற்றைப் பரிமாறினாள்.

குழம்பைப் பரிமாறினாள். தந்தையும் ராஜனும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ஜானகி கிண்ணத்தில் சோற்றை எடுத்துக்கொண்டு பாட்டியின் அறைக்குள் சென்றாள். பின்னால் தாயும்... பாட்டியை இருவரும் சேர்ந்து தாங்கி, அமரவைத்தார்கள். தாய் சோற்றைக் குழைத்து உருண்டையாக்கி வாய்க்குள் வைத்தாள். இரண்டு உருண்டையைச் சாப்பிடுவதற்குமுன் கூறினாள்:

""தண்ணீ...''

ஜானகி நீர் கொண்டுவந்தாள். நீர் முழுவதையும் பருகினாள்.

""போதும்டீ...''

பாட்டி சாப்பிட்டு முடித்தாள்.

தந்தையும் ராஜனும் சாப்பிட்டு முடித்தார்கள்.

அறையிலிருந்த கடிகாரம் ஒன்பது அடித்தது. வெளியே மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. மழையின் ஓசைமட்டும் எல்லா இடங்களிலும் கேட்டது. மழையின் வாசனைமட்டும் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. எங்கும் மழை... கடலின் ஓசையும் கேட்க ஆரம்பித்தது. கடலில் காற்று வீச ஆரம்பித்திருக்கிறது.

""சோறு பரிமாறட்டுமா!''

ஜானகி கேட்டாள். தாய் கூறினாள்:

""நீ சாப்பிடு... ஜானூ.''

ஜானகி சாப்பிடவில்லை. கழுவிய கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்தாள். பானையை மூடிவைத்தாள். சமையலறையில் விளக்கின் திரியைத் தாழ்த்திவைத்தாள். வெளிச்சம் திடீரென்று இல்லாமல்போனது.

ராஜன் தன் அறைக்குள் நுழைந்து படுத்தான். விளக்கு அணைந்தது.

தந்தை அறைக்குள் சென்றார்; படுத்தார். நாளிதழை வாசிக்க ஆரம்பித்தார்.

தானியப் பெட்டியின்மீது பாட்டி நெளிந்துகொண்டும் முனகிக்கொண்டும் இருந்தாள்.

மழை நிற்பதுமாதிரி தெரியவில்லை. மேலும் பலமாகப் பெய்துகொண்டிருந்தது. மேற்கூரையிலிருந்து நீர் கீழ்நோக்கி இறங்கி வந்துகொண்டிருந்தது. சுவர்கள் நனைந்தன. அடைக்கப் பட்டிருந்த கதவின் இடைவெளி வழியாக மின்னல் உள்ளே நுழைந்து ஒளிர்ந்தது.

""பத்து மணி ஆயிடுச்சே! எங்கபோய் தொலைஞ்சானோ?''

தாய் சாளரத்தைத் திறந்தாள். நீரும் மின்னலும் உள்ளே வந்தன. அதற்குப்பிறகும் கதவை அடைக்கவில்லை. வெளியேயிருந்த இருட்டைப் பார்த்தவாறு தாய் நின்றுகொண்டிருந்தாள். எதுவும் கண்களில் தெரியவில்லை. இருட்டைத் தவிர... மின்னலைத் தவிர...

பத்துமணி கடந்தது. தினேஷன் வரவில்லை.

ராஜன் குறட்டைவிடும் சத்தம் கேட்டது. பத்திரிகையால் முகத்தைத் மூடியவாறு தந்தையும் உறங்கிவிட்டார். தூக்கக் கலக்கத்தால் சிவந்த கண்களுடன் தாயுடன் சேர்ந்து ஜானகியும் வெளியே கண்களைப் பதித்துக்கொண்டிருந்தாள். பாட்டி அழைத்துக்கேட்டாள்:

""தினேஷன் இன்னும் வரலையாடீ...?''

தாய் பதில் கூறவில்லை. அவள் கவலைப்பட ஆரம்பித்தாள். எங்கு போயிருப்பான்? எதற்காகப் போயிருப்பான்? என் கடவுளே...!

அதற்குப்பிறகும் கடிகாரம் ஓசை உண்டாக்கியது.

தாய்க்கு அதிக கவலை உண்டானது. பதினோரு மணிக்கும் பன்னிரேண்டு மணிக்கும்கூட தினேஷன் அங்கு வந்திருக்கிறான்.

ஆனால், இன்று அதுமாதிரியா? இந்த மழைபெய்யும் வேளையில் மனிதர்கள் அல்ல; மிருகங்கள்கூட வெளியேறாது. பேய்கள் கூட வெளியே வராது. நரிகள் புதர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக் கின்றன. பாம்புகள் புற்றுகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கின்றன.

""மழை நிற்கட்டும்னு எதிர்பார்த்து நின்னுக்கிட்டிருப்பான்.''

ஜானகி கூறினாள்... தினேஷன் மழைநிற்பதை எதிர்பார்த்து நின்றுகொண்டிருப்பானா? அவன் மழையைப் பார்த்து பயப்படுவானா? மழையில் நடந்துவருவதற்குத் தயங்கக்கூடியவனா அவன்?

தாய், தந்தையின் அருகில் சென்றாள். கூப்பிட்டு எழுப்பினாள்.

""தினேஷன் இன்னும் வரல.''

""மத்தவங்களை கொஞ்சம் தூங்கக்கூட விடமாட்டியா லட்சுமி?''

""பதினோரு மணி ஆயிடுச்சு.''

""விளக்கை அணைச்சிட்டுப் படு. தோணுறப்போ வரட்டும்.''

தந்தை திரும்பிப் படுத்தார். கண்களை மூடினார். தூங்கிவிட்டாரா?

""எனைடீ சத்தம் கேட்டது? தினேஷனாடீ?''

பாட்டி இருட்டிற்குள்ளிருந்து கேட்டாள். மழை, காற்று தவிர வேறு எந்தவொரு சத்தத்தையும் தாய் கேட்கவில்லை.

rule

"என் கடவுளே! என் குழந்தைக்கு எதுவும் வர வச்சிடாதே!'

பாட்டி வேண்டிக்கொண்டாள். அதைக் கேட்டதும் தாயின் நெஞ்சில் நெருப்பு பற்றியது.

சுவரில் சாய்ந்து அமர்ந்தவாறு ஜானகி உறங்கிவிட்டாள்.

வெளியேயிருந்த இருட்டில் கண்களைப் பதித்து தூங்காமல் தாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். நேரம் நள்ளிரவாகி விட்டது. மழை நிற்கவில்லை. பலமாகப் பெய்து கொண்டிருந்தது.

தந்தை கட்டிலிலிருந்து எழுந்தார். வேட்டியை இறுகக் கட்டினார். குடையையும் டார்ச் விளக்கையும் எடுத்தார். எதுவுமே கூறாமல் அடர்த்தியான இருட்டில் வெளியேறி காணாமல் போனார்.

""வரலையா... லட்சுமீ? மணி எவ்வளவு ஆச்சு?''

கடிகாரத்தைப் பார்ப்பதற்கான தைரியம் தாய்க்கு இல்லை.

""லட்சுமீ...''

அழைத்ததை தாய் கேட்கவில்லை.

""இங்க கொஞ்சம் வாடீ...''

தாய் உள்ளே சென்றாள். பாட்டியைத் தாங்கியவாறு தரையில் இறக்கினாள். குடுவையை எடுத்து, அதன்மீது அமரவைத்தாள். பேரமைதியில் பாட்டி சிறுநீர் கழிக்கும் சத்தம் கேட்டது.

""வயசான காலத்தில எதையெல்லாம் பார்க்கவும் கேட்கவும் வேண்டியதிருக்கு...? என் கடவுளே!''

அதற்குப்பிறகும் தாய் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. அரைமணிநேரம் கடந்ததும், இருட்டிற்குள்ளிருந்து தந்தை வெளிப்பட்டு வந்தார். நனைந்து ஈரமாகி விட்டிருந்தார். தலையிலிருந்து நீர் கீழ்நோக்கி வழிந்துகொண்டிருந்தது. குடையை மடக்காமல் வாசலில் வைத்தார். டார்ச் விளக்கை மேஜையின்மீது வைத்தார். சட்டையைக் கழற்றிப் பிழிந்தார்.

""பார்க்கலையா?''

தாய் தேம்பினாள்.

""பேசாம இரு. பேசினா நான் கொன்னுடுவேன்.''

திடீரென்று தந்தை கூறினார். தந்தையின் உதடுகள் கோபத்தால் நடுங்கின. கண்கள் சுருங்கின.

""நாயோட மகன் இங்க வரட்டும். நான் அவனைக் கொல்லுறேன். நீ பாருடீ...''

அதற்குப்பிறகும் தாய் தேம்பினாள்.

""லட்சுமீ.... போய்ப் படு. படுன்னு நான் சொன்னேன்.''

தந்தை கட்டளையிட்டார். தாய் அசையவில்லை.

""படுத்துத் தூங்கு... தோணுறப்போ வரட்டும். வரலைன்னா வரவே வேண்டாம். செத்துட்டான்னு நினைச்சுக்குவோம்.''

தந்தை, தாயின் தோளைப் பிடித்துத் தள்ளினார். தாய் நடந்தாள். கட்டிலில்போய் அமர்ந்தாள். தந்தை கதவை சத்தமாக அடைத்தார். விளக்கை ஊதி அணைத்தார்.

""நள்ளிரவு வேளையில் தூங்குறதுக்குக்கூட விடுறதில்ல. நாயோட மகனுக்காக எந்த அளவுக்கு சகிச்சிக்கிட்டு இருந்திருக் கேன்! மத்தவங்க எந்த அளவுக்குப் பொறுமையா இருப்பாங்க! இங்க வரட்டும்...''

தந்தை பற்களைக் கடித்தார்.

ராஜன் எதுவுமே அறியாமல் உறங்கிக்கொண்டிருந்தான். நள்ளிரவு ஆனபோது, பாட்டியின் நாக்கு தளர்ந்தது. அவள் குறட்டை விட்டவாறு உறங்கிக்கொண்டிருந்தாள். தரையில் படுத்து ஜானகியும் உறங்கிக்கொண்டிருந்தாள். தந்தை உறங்கிவிட்டாரோ?

கடிகாரத்தின் துடிப்புச் சத்தத்தைக் கேட்டவாறு காது களைத் தீட்டி வைத்துக்கொண்டு இரவு முழுவதும் தாய் எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். தினேஷன் வரவில்லை.

பொழுது புலர்ந்தது.

தகவல் தெரிந்ததும் ராமன் கூறினான்:

""நான் போய்ப் பார்க்கறேன்.''

மழைநீர் தேங்கிக்கிடக்கும் பாதையின் வழியாக அவன் நடந்தான். திரும்பி வந்தான்.

""பாதாற்றிலும் புகைவண்டி நிலையத்திலும் பார்த்தேன். எங்க போயிருப்பானோ... என் கடவுளே!''

தகவல் தெரிந்து ஆட்கள் வந்தார்கள். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களும் உறவினர்களும் வந்தார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியிலும் தினேஷனைத் தேடிச்சென்றார்கள்.

மழை நிற்கவில்லை. பெய்துகொண்டேயிருந்தது. மழைச்சாரலை ஏற்றவாறு ராமனும் தந்தையும் ராஜனும் ஆண்டியும் தினேஷனைத் தேடிச்சென்றார்கள்.

தகவல் அறிந்து குஞ்ஞுண்ணி மாமா வந்துசேர்ந்தார்.

கணாரன் மாஸ்டர் வந்துசேர்ந்தார்.

கலங்கிய கண்களுடன் தாய் வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

கணாரன் மாஸ்டர் எதுவுமே பேசாமல் காடுபோல வளர்ந்திருந்த தாடியைத் தடவிக்கொண்டிருந்தார். குஞ்ஞுண்ணி மாமா காறித் துப்பிக்கொண்டும் முணுமுணுத்துக்கொண்டும் இருந்தார்.

தகவல் அறிந்து, அதற்குப்பிறகும் ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். ராதாகிருஷ்ணனும், கேளு மாஸ்டரும், ரைட்டர் ஸ்ரீதரனும் வந்து சேர்ந்தார்கள். ரைட்டர் கூறினார்:

""காவல்துறைக்கு தகவல் தெரிவிச்சாச்சா?''

""காவல்துறைக்கு எதுவும் சொல்லவேணாம்.''

""நாலு பேருக்குத் தெரிஞ்சா, குறைச்சல் இல்லியா?''

""இந்த வீட்ல இப்படி எதுவும் முன்ன நடந்ததில்லை.''

""இந்த பையனுக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது?''

""அவனோட குணமே அதுதான். இன்னைக்கோ நேத்தோ ஆரம்பமானதில்லையே!''

இன்றோ நேற்றோ ஆரம்பமானது அல்ல. ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. தினேஷன் இப்படியாகி ஐந்து... பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

முதலில் திரும்பிவந்தது தந்தைதான்.

""பார்க்கல... அப்படித்தானே?''

""இல்ல!''

தந்தை முணுமுணுத்தார். இடதுபக்கமோ வலதுபக்கமோ பார்க்காமல் உள்ளே நுழைந்துசென்றார்.

மணி கடந்தது... மணிகள் கடந்தன... சூரியன் உதித்து மேலே வந்தது.

"அதோ...!'

கேளு மாஸ்டர் வேகமாக எழுந்தார். எல்லாரும் வெளியே பார்த்தார்கள். தினேஷன்! ராமனுக்கும் ஆண்டிக்கும் மத்தியில் நடந்து வந்துகொண்டிருந்தான். ஆண்டி பலமாகக் கையைப் பிடித்திருந்தான். ராமன் தோளைப் பற்றியிருந்தான். பின்னால்... சில ஊர் சுற்றும் சிறுவர்கள்...

மதம் பிடித்த யானையைப் பிடித்துக்கொண்டு வருவதைப் போல தினேஷனைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

""என் கடவுளே!''

தாய் வாசலுக்குப் பாய்ந்து சென்றாள்.

ஆண்டி தாங்கிப் பிடித்தவாறு வாசலுக்குக் கொண்டுவந்தான். தலைமுழுவதும் சேறு... அணிந்திருந்த ஆடை முழுவதும் மழைநீர்... கண்கள் குழிவிழுந்தது இறங்கிக்கிடந்தன.

தந்தை வேகமாக வாசலுக்குச் சென்றார்.

""நாயே... நீ எங்க போயிருந்தேடா?''

தாய், தினேஷனை வளைத்துப் பிடித்துக்கொண்டாள்.

அவள் அவனுடைய முதுகை வருடினாள்.

"மகனே... நீ எதுக்கு அம்மாவை நெருப்பை சாப்பிட வைக்கறே?'

""லட்சுமி... தள்ளுடீ...''

தந்தை தாயைத் தள்ளிவிலக்கினார். தினேஷனின் ஆடையை இறுகப் பற்றினார்.

""ராமா... எங்க இருந்தான்?''

""என்ன செஞ்சிக்கிட்டிருந்தான்?''

""தலாயி கடற்கரையில் மழையில நனைஞ்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தான். ராத்திரி முழுக்க அப்படியே உட்கார்ந்தி ருந்தானாம். பார்த்தவங்க சொன்னாங்க!''

""உன் பைத்தியத்தை இன்னிக்கு நான் மாத்துறேன். இன்னிக்கு நான் காலை அடிச்சு ஒடிக்கிறேன்.''

தந்தை தினேஷனை திண்ணையின்மீது தள்ளிவிட்டார்.

""கூப்பிட்டா வரல. பிடிச்சு இழுத்துக்கிட்டு வரவேண்டியிருந்தது. இதோ பாருங்க...''

ராமன் கையை நீட்டிக் காட்டினான். ரத்தம் கசிந்து வழிந்துகொண்டிருந்தது. தந்தை ராமனை நோக்கித் திரும்பினார்.

""ராமா... என்ன இது?''

""கடிச்சது...''

""கடிச்சதா?''

தந்தை தினேஷனை நோக்கிப் பாய்ந்தார். கணாரன் மாஸ்டரால் தடுக்க முடியவில்லை. கன்னத்தில் முதல் அடி விழுந்தது. சுவரோடு சேர்த்து நிறுத்தி இரு கன்னங்களிலும் மாறிமாறி அடித்தார். உறக்கமில்லாமல்... பட்டினி கிடந்து தளர்ந்துபோயிருந்த தினேஷன் அடிவாங்கி பெஞ்ச்சில் விழுந்தான்.

""என் மகனைக் கொன்னுடாதீங்க.''

தாய் கெஞ்சினாள்.

""தள்ளி நில்லுடீ...''

தந்தை உள்ளே வேகமாகச் சென்றார். குளியலறையுடன் சேர்த்து ஒரு சிறிய அறை இருந்தது. காற்றும் வெளிச்சமும் நுழையாத ஒரு அறை. அதில் பழைய மரச்சாமான்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன. ஒடிந்த நாற்காலி... கட்டில்கள்... துருப் பிடித்த பாத்திரங்கள்... ஒவ்வொன்றாக எடுத்து தந்தை வெளியே எறிந்தார்.

""நீ என்ன செய்யப்போறே? உனக்கு என்ன ஆச்சு?''

பின்னால் வந்த குஞ்ஞுண்ணி மாமா கேட்டார்.

""நீங்க உங்க வேலையைப் பாருங்க.''

தந்தை கத்தினார்.

""ராமா... இங்கே வாடா.''

ராமன் ஓடிச் சென்றான்.

""அறைய காலி பண்ணுடா.''

ராமனுக்கு எதுவும் புரியவில்லை. எனினும், அவன் கூறியதைச் செய்தான்.

தினேஷன் பெஞ்ச்சில் படுத்திருந்தான். அடி விழுந்ததில் இடது கண் கலங்கியிருந்தது. கன்னம் வீங்கி வந்துகொண்டிருந்தது.

தாய் பெஞ்ச்சில் தினேஷனுக்கு அருகில் அமர்ந்து தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.

திண்ணையிலும் வாசலிலும் ஆட்கள் திகைத்துப்போய் நின்றிருந்தார்கள்.

ராமன் அறையை காலியாகக்கினான். தந்தை திண்ணையை நோக்கி வேகமாக வந்தார்.

""எழுந்திருடா...''

தினேஷன் எழுவதற்கு முயற்சித்தான். முடியவில்லை... தலை உயரவில்லை. அசைய இயலவில்லை.

தந்தை அவனைத் தூக்கியெடுத்தார். உள்ளே தள்ளிக்கொண்டு சென்றார்.

""நட... உன் பைத்தியத்தை நான் மாத்தறேன்... நாயே!''

""என்ன இது? நீ என்ன செய்றே?''

""போங்க...''

தந்தை கத்தினார். குஞ்ஞுண்ணி மாமா பின்னால் நகர்ந்து நின்றார்.

இருள் நிறைந்த அறைக்குள் தினேஷனைத் தள்ளிவிட்டார். ஈரமான... பூரான்கள் ஊர்ந்து கொண்டிருக்கும் தரையில் தினேஷன் அமர்ந்தான்... படுத்தான். வவ்வால்கள் சிறகுகளை அடித்தன. சிலந்திகள் வெறித்துப் பார்த்தன.

தந்தை கதவை வெளியேயிருந்து தாழ்ப்பாள் போட்டு அடைத்தார். பூட்டுகொண்டு பூட்டினார்.

திரும்பிவந்து பூனையைப்போல வாசலில் நடந்தார்.

தாய் அழுதுகொண்டிருந்தாள். பாட்டியும் ஜானகியும் அழுது கொண்டிருந்தார்கள்.

மற்றவர்கள் திகைப்படைத்து நின்றுகொண்டிருந்தார்கள். எல்லாரிடமும் தந்தை கூறினார்:

""என் மகனுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு... பைத்தியம்! புரியுதா?''

கேட்டவர்கள் திகைப்படைத்து நின்றிருந்தார்கள்.

அப்பா... தினேஷனுக்கு பைத்தியம் பிடிக்கவில்லை.

உலகத்திற்குத்தான் பைத்தியம் பிடித்திருக்கிறது!

uday010121
இதையும் படியுங்கள்
Subscribe