காலத்தின் போக்கிற்கேற்ப சமூகம் தன்னை மாற்றிக் கொள்கிறதா அல்லது சமூகத்தின் செயல்பாடுகளுக்கேற்ப காலம் தன்னை மாற்றிக்கொள்கிறதா எனும் கேள்வி காலங் காலமாகவே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

சமூகத்தின் நிலை கண்டு வருந்தி, அதை மாற்றும் பேராவலில் தனது சிந்தனைகளை எழுத்தாக்கும் படைப்பாளர் களே காலங்கடந்தும் வாழ்கிறார்கள். அப்படியாகத் தன் படைப்பு களால் வாழும் யுகக் கவிஞர்களுள் முதன்மையானவர் ‘புரட்சிக் கவிஞர்’ என்று தமிழ்க்கூறும் நல்லுலகம் கொண்டாடும் பாவேந்தர் பாரதிதாசன்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பூட்டிய அடிமை விலங்கினை உடைத்தெறியும் நோக்கில் இந்திய தேசமெங்கும் சுதந்திரப் பெருங்கனல் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழகத்திலும் தேச விடுதலைக்கான போராட்டங்கள் வீறுகொண்டெழுந்தன.

தனது பாடல்களாலும் கட்டுரை களாலும் சுதந்திர வேள்விக்குப் புத்துணர்வை ஊட்டியவர் எட்டையபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியார் (1882-1921). பாரதி பிறந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு 1891-இல் புதுச்சேரியில் பிறந்த கனக சுப்புரத்தினம், பாரதியின் மேல் கொண்ட பற்றின் காரணமாகப் பாரதிதாசன் ஆனார். பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கிய கவிஞர் தமிழ் ஒü, இன்றைய கடலூர் மாவட்டத்திலுள்ள அடூர் அகரம் எனும் கிராமத்தில் 1924-ஆம் ஆண்டில் பிறந்தார்.

1930-ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத் திலுள்ள பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிற்றூரில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தார்.

தமிழ்க் கவிதையின் தவிர்க்கவே முடியாத அடையாளமாகத் திகழும் இந்த நான்கு கவிஞர்கüல் ஒருவரது கவிதையைக் கூட வாசிக்காமலோ அல்லது இவர்களது கவிதை வரிகüனால் தாக்கம் பெறாமலோ எந்தவொரு கவிஞனும் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

இவர்களுள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29 அகவையிலும், பாரதியார் தனது 38-ஆவது அகவையிலும், தமிழ் ஒü தன் 40-ஆவது அகவையிலுமாக குறைவான காலத்திலேயே இம்மண்ணுலகை வாழ்வை விட்டு மறையவே, பாரதிதாசன் மட்டுமே 72-ஆவது அகவை வரை வாழ்ந்து மறைந்தார்.

மகாகவி’ என்றால் பாரதியாரையும், ‘மக்கள் கவிஞர்’ என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும், ‘பொதுவுடைமைக் கவிஞர் என்றால் தமிழ் ஒüயையும் அறிந்து வைத்திருப்பதைப் போலவே, ‘புரட்சிக் கவிஞர்’ என்றால் பாரதிதாசனைத் தமிழ் மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

மகாகவி, மக்கள் கவிஞர், பொது வுடைமைக் கவிஞர் எனும் அடைமொழி களை விடவும் ‘புரட்சிக் கவிஞர்’ எனும் அடைமொழியானது சமூகப் பயன்பாட்டு டன் கூடிய ஓர் எழுச்சியை, ஒரு திருப்புமுனையை உண்டாக்கிய ஆளுமையின் சிறப்பினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆம்; தமிழ்ச் சமுதாயத்தில் புரட்சிக் கவிஞரின் படைப்புகள் ஒரு புதிய மாற்றத்தை, புதிய திசை வழியைக் காட்டின என்பதே சமூக எதார்த்த உண்மை.

தமிழ்ச் சமுதாயத்தில் பாரதியின் பாடல்களும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரையிசைப் பாடல்களும் மக்கüடம் பரவலாகச் சென்றடைந்த அளவிற்கு பாரதிதாசன், தமிழ் ஒüயின் கவிதைகளும் பாடல்களும் சென்றடைய வில்லை எனும் பெருங்குறை வெகுகாலமா கவே இருந்துவந்தது.

ss

1991-ஆம் ஆண்டில் பாரதிதாசனின் நூற்றாண்டினை யொட்டி நடைபெற்ற பல இலக்கிய நிகழ்வுகள், சொற்பொழிவுகள், நூல் வெüயீடுகள் வாயிலாக தமிழ் மக்கüன் கண்கüலும் செவிகüலும் பாரதிதாசனின் பாடல்களும் கவிதைகளும் மீண்டும் கவனம் பெறத் தொடங்கின. பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்கள் திரைப்படங்கüல் இடம்பெற்றதை விடவும் மறைந்த பிறகு திரைப்பாடல்களாக இடம்பெற்றவையே அதிகம். தமிழ்க் கவிதைகüல் அது வரையிலும் பாட்டுடைத் தலைவராக அரசர்களையும், மேட்டுக்குடியினரையும் மட்டுமே முன்வைத்து எழுதப் பட்ட நிலையில், இறுகிக்கிடந்த தமிழ்க் கவிதா வெüயைத் தன் பாட்டெனும் சம்மட்டி யால் அடித்து நொறுக்கியப் பேராளுமையாக வெüப் படலானார் பாரதிதாசன்.

விவசாயி, தறி நெய்யும் நெசவாü, மாடு மேய்க்கும் தொழிலாü, பூக்கட்டும் பெண் ஊழியர், கோடாலிக்காரர், கூடை கட்டுவோர், குறவர், அஞ்சல்காரர் என உழைக்கும் பாட்டாü மக்களையெல்லாம் தன் கவிதைகüல் நாயகன், நாயகிகளாக வலம்வர வைத்த பெருமையும் சிறப்பும் பாரதிதாசனுக்குரியது.

Advertisment

1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-இல் மறைந்த புரட்சிக் கவிஞரின் 60-ஆவது நினைவாண்டான இந்த ஆண்டில் (2024), இன்றைய இளைய தலைமுறையினரிடம் பாரதிதாசன் படைப்புகளை மீள்வாசிப்புக்கு கொண்டுசெல்ல வேண்டிய அவசியமும் சமூகத் தேவையும் தற்போது உண்டாகியுள்ளன.

தமிழ்த் தேசியம், திராவிடம் ஆகிய சொற்கள் சமீபகாலங்கüல் வெறும் பேசுபொருளாக மட்டு மில்லாமல், அவற்றிற்கான சரியான பொருள் அறியாத நிலையிலேயே இளைய தலைமுறையினரால் சமூக வலைதளங்கüல் விமர்சிக்கப்பட்ட வருவதைப் பார்க்கையில், பாரதிதாசனின் கவிதைகளை மீண்டும் இளையவர்கüன் கைகüல் சேர்க்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளதாகவே உணர முடிகிறது.

பாரதிதாசன் இளம் வயது முதலே மொழி உணர்வு கொண்டவராகவும், அரசியல் தெüவுடன், சமூக முன்னேற் றத்தில் பெருவிருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.

Advertisment

ஆசிரியராக இருந்து கல்விப் பணியாற்றிக்கொண்டிருந்த பாரதிதாசன், பிரெஞ்ச் அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, 1919-ஆம் ஆண்டில் ஓராண்டு 4 மாத காலங்கள் சிறை வைக்கப் பட்டு, பின்னர் விடுதலையானார்.

தமிழ் இலக்கியங்களையும், மொழி இலக்கணங்களையும் தீர கற்றறிந்ததோடு, சைவ சித்தாந்த வேதாந்தங்களையும் முறையாகக் கற்றவர் பாரதிதாசன். அதனால் தான் -

தமிழுக்கும் அமுதென்று பேர்;

அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்று தமிழின்

சிறப்பை அழகிய - அர்த்தம்

பொதிந்த பாடலாகவும் எழுதினார். இன்றைக்கும்

உலகத் தமிழர்கüன் செவிகüல்

தேனெனப் பாய்ந்துகொண்டி ருக்கிறது இந்தத் தமிழமுது.

மொழி உணர்வோடு, தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பையும் முழுதாக அறிந்திருந்த பாரதிதாசன், சென்னையில் 1948-இல் நடைபெற்ற ‘இந்தி எதிர்ப்பு மாநாட்டில்’ பங்கேற்று, ‘இந்தி எந்த நாட்டுக்குப் பொது மொழி? திராவிட நாட்டுக்கா?’ எனும் கேள்வியை உரக்க எழுப்பினார். தமிழர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமென்பதற்கான அழைப்பினையே ஒரு கவிதையாகவும் வடித்திட்டார் பாரதிதாசன்.

இந்தி எதிர்த்திட வாரீர் - நம்

இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்…

தென்னாடு தான்எங்கள் நாடு - நல்ல

செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்

புன்மைகொள் ஆரிய நாட்டை - எங்கள்

பொன்னாட்டினோடு பொருத்துதல் ஒப்போம்.

இன்னலை ஏற்றிட மாட்டோம் - கொல்லும்

இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ

கன்னங் கிழிந்திட நேரும் - வந்த

கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்…’ என்று கொதித்தெழுந்த மொழிக் காதலர் பாவேந்தர்.

தந்தை பெரியார் தலைமையேற்றுச் செயலாற்

றிய சுயமரியாதை இயக்கத்தின் சமூகச் செயல்

பாடுகளால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர், 1928-ஆம் ஆண்டில் தன்னையும் அந்த இயக்கத்தில் இணைந்து கொண்டார். பின்னர் குடிஅரசு, பகுத்தறிவு ஆகிய திராவிட இயக்க ஏடுகüல் பாடல்களையும் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார். பாவேந்தரின் படைப்புகள் தமிழுணர்வாளர்கüன் உள்ளங்கüல் நல்ல தாக்கத்தை உண்டாக்கின. 1928-ஆம் ஆண்டு தொடங்கி, 1964-இல் தான் இறக்கிற வரையிலும் 36 ஆண்டுக்காலங்கüல் பாரதிதாசன் கொள்கை வழி ஏற்றுக்கொண்ட ஒரே தலைவராகத் தந்தை பெரியார் மட்டுமே இருந்தார்.

aa

சுயமரியாதை இயக்க முன்னோடிகளான குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோரின் முயற்சியினால், 1938-இல் பாரதிதாசனின் கவிதைகளடங்கிய முதல் நூல் வெüவந்தது. அந்த நூலின் முன்னுரையில், “சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர் பாரதிதாசன்” என்று மனம் நெகிழ்ந்து பாராட்டியிருப்பார் தந்தை பெரியார்.

தமிழ்மக்களுக்குத் தான் சொல்ல விரும்பும் செய்தியை மிக எüமையாகவும் அழுத்தமாகவும் கவிதையாக எழுதுவதில் பாரதிதாசனுக்கு நிகர் எவருமில்லை என்று சொல்லத்தக்க வகையிலான கவிதைகளை எழுதியுள்ளார்.

தமிழின உணர்வும், மொழி உணர்வும், தன்மான உரிமை உணர்வுமிக்க பாவேந்தர், தனது அரை நூற்றாண்டுக்காலப் படைப்புகüன் வழியே அத்தகைய உணர்வினைத் தமிழ் மக்கüடத்தும் ஊட்டிய பேராளுமைமிக்க கவிஞராக விளங்கினார்.

மேலும், தமிழினம் முன்னேற வேண்டுமெனில், சாதீய பிணக்குகளை விட்டொழிக்க வேண்டு மென்றும், சாதி - மதங்களை மறுத்திட வேண்டு மென்றும், மூடநம்பிக்கையிலிருந்து வெüயே வர கடவுள் மறுப்பு கொள்கையைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் உறுதியாய் எண்ணிய பாவேந்தர், அதற்கான சிந்தனைகளைத் தூண்டக்கூடிய படைப்பு களை எழுதுவதில் தொடர்ந்து ஈடுப்பட்டார்.

பெண் கல்வியின் அவசியத்தைப் பேசும் ‘இருண்ட வீடு’, காதலின் மேன்மையைப் போற்றும் ‘எதிர்பாரா முத்தம்’, தமிழர் இனமான உணர்வின் எழுச்சிக் காப்பியமெனக் கொண்டாடப்பட்ட ‘தமிழச்சியின் கத்தி’ என தனது பல படைப்புகளால் தமிழ் மக்கüன் உள்ளங்கüன் என்றென்றும் வாழும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் பாவேந்தர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ‘புரட்சிக் கவிஞர்’ எனும் பட்டத்தையும், பேரறிஞர் அண்ணா ‘புரட்சிக்கவி’ எனும் பட்டத்தையும் பாவேந்தருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

எழுத்தாளர், கவிஞர், திரைப்படக் கதாசிரியர், அரசியல்வாதி, இதழாளர் என பன்முகம் கொண்டவராக வலம்வந்த பாவேந்தர், தோழர் மா.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் 1933-இல் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டின் வருகைப் பதிவேட்டில், ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்’ என்று உறுதிபட எழுதிக் கையெழுத்திட்டார். அன்றிலிருந்து இறை மறைப்பு கொள்கையிலிருந்து சிறிதும் நழுவாமல் ஏற்றுக்கொண்ட கொள்கை வழி நின்றார்.

பாரதியின் முதன்மையான பற்றாளரான பாவேந்தர், 1935-இல் இந்தியாவிலேயே முதல்முறையாக ‘ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ எனும் பாட்டேட்டினைத் தொடங்கினார். 1946-இல் ‘முல்லை’ எனும் இதழினையும் தொடங்கினார். 1947-ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில் ‘குயில்’ எனும் இதழினை வெüயிட்டார்.

பாரதியாரின் கவித்திறனை, பண்பு நலன்களை உடனிருந்து கண்ட பாவேந்தர், இரவு பகலெனக் கடுமையாக உழைத்து, அதனை நாடக வடிவில் எழுதி னார். பின்னர், 1963-இல் அதனைத் திரைப்படமாக் கும் முயற்சியில் இறங்கினார். ஆனாலும் அது கடைசிவரையிலும் கைகூடாமலேயே போனது.

பாவேந்தர் பல்வேறு இதழ்கüலும் புதுவை கே.எஸ்.ஆர்., நாடோடி, வழிப்போக்கன், கிறுக்கன், கிண்டல்காரன், சுயமரியாதைக்காரன், கைகாட்டி உள்üட்ட 15-க்கும் மேற்பட்ட புனைபெயர்கüல் கவிதைகள், கட்டுரைகளை எழுதினார். மேலும், தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன், புதுவை முரசு, துய்ப்ளேக்ஸ், முல்லை, குயில் ஆகிய இதழ்களுக்குப் பாவேந்தர் ஆசிரியராகவும் இருந்து பங்கüத்துள்ளார்.

தமிழக அரசு திருச்சியில் 1982-இல் நிறுவிய பல்கலைக்கழகத்திற்குப் ‘பாரதிதாசன் பல்கலைக் கழகம்’ எனப் பெயர் சூட்டியது. 1990-இல் பாவேந்தரது நூல்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கியது.

பாரதியாரின் எழுச்சிமிக்க கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, தனது இலக்கிய ஆசானாகப் பாரதி யாரைக் கருதிய பாவேந்தர், தனது கொள்கை வழிப் பயணமாகத் தந்தை பெரியாரைப் பின்தொடர்ந்தார். பெரியாரது சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை இலக்கிய வடிவில் பதிவுசெய்தார். மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) 1928-ஆம் ஆண்டு நவம்பரில் தந்தை பெரியார் பேசுவதாக அறிந்த பாவேந்தர், ஒரு காங்கிரஸ் கட்சிக்காரராக, சைவ பக்தி இலக்கியத்தில் திளைத்தவராக அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தார். பெரியாரின் பேச்சினைக் கேட்ட பிறகு, அன்றிலிருந்தே கடவுள், மதம் ஆகியவற்றை இனி பாடுவதில்லையென முடிவெடுத்தார். 21.10.1970 தேதியிட்ட ‘விடுதலை’ நாüதழில் பாவேந்தரைப் பற்றி இப்படியாகப் பெரியார் எழுதினார்.

‘காட்டுமிராண்டிகளாக, மிருகங்களாக இருந்த மக்களை மனிதத் தன்மைக்குக் கொண்டுவரப் பாடுபட்டவர் பாரதிதாசன் ஆவார்.’

அதேபோல் -

நாட்டில் எத்தனையோ கவிஞர் இருந்திருக்கி றார்கள். என்றாலும், பாரதிதாசனைப் போல் மக்கட்குப் பயன்படும் கவிதைகளை யாரும் இயற்ற வில்லை (விடுதலை -12.12.73) என்றும் பாராட்டி யுள்ளார். அரசியலிலும் களத்திலும் இறங்கிய பாவேந்தர், 1954-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத் ‘திராவிடக் கவிஞர்’ என்று சொல்லும்போது, சிலர் அதனை மறுத்திட தலைப்படுவர். ஆனாலும், ஆதவனை வெறும் கைகளால் மறைக்க முயலும் மடமையான செயலினை ஒத்ததே அதுவும்.

நான்தான் திராவிடன்’ என்று கவிதை வழி தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட பாவேந்தர், முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த திராவிட இயக்கத் தலைவராகவும் இருந்தார். 1937-ஆம் ஆண்டில் திரையுலகில் தடம் பதித்த பாவேந்தர், தனது இறுதிநாள் வரையிலும் திரைத்துறையில் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத் தயாரிப்பு என பலவிதமான பங்கüப்பினை ஆற்றியுள்ளார்.

பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களைச் சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதன் காரணமாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார்.

திராவிட நாட்டிற்கான தேசிய கீதம் என்று சொல்லப்படும் ‘திராவிடப் பண்’ணையும் எழுதினார் பாவேந்தர்.

இசை - மோகனம்

தாளம் - ஆதி

வாழ்க வாழ்கவே

வளமார் எமது திராவிட நாடு

வாழ்க வாழ்கவே!

சூழும் தென்கடல் ஆடும் குமரி

தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்

ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்

அறிவும் திறலும் செறிந்த நாடு.

(வாழ்க வாழ்கவே...)

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த

பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்

கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்

கமழக் கலைகள் சிறந்த நாடு

(வாழ்க வாழ்கவே...)

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்

அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு

வெள்ளப் புனலும் ஊழித் தீயும்

வேகச் சீறும் மறவர்கள் நாடு

(வாழ்க வாழ்கவே...)

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்

அழகாய் முத்துக் குவியும் கடல்கள்

முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்

முல்லைக் காடு மணக்கும் நாடு

(வாழ்க வாழ்கவே...)

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு

(வாழ்க வாழ்கவே...)

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்

சாற்றில் தென்றல் காற்றில் நல்ல

ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்

அழகில் கற்பில் உயர்ந்த நாடு

(வாழ்க வாழ்கவே...)

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்

பொன்னார் இழையும் துகிலும் பூண்டு

கனிமொழி பேசி இல்லறம் நாடும்

காதல் மாதர் மகிழுறும் நாடு

(வாழ்க வாழ்கவே...)

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க

தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க

இங்குத் திராவிடர் வாழ்க மிகவே

இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு…

(வாழ்க வாழ்கவே...)

திராவிட நாட்டில் செந்தமிழ் வாழ்க’ என்றும் ஒலிக்கும் திராவிடப் பண் தந்த புரட்சிக்கவிஞர் பாரதி தாசனின் கவிதை வரிகüல் தமிழும் தமிழின உணர்வும் என்றென்றும் உயிர்த்திருக்கும்.