குடியரசு மதவெறி! பிணிவகுப்பான அணிவகுப்பு! விடுதலைப் போரில் தமிழகம் டெல்லிக்கு நடத்திய பாடம்!

/idhalgal/eniya-utayam/republican-sectarianism-massive-parade-lesson-taught-by-tamil-nadu-delhi

"நீங்க தமிழ்நாடா? குடியரசு தின அணி வகுப்பு அலங்கார ஊர்தி யில் இருக்கிறது யாரு?"

"வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போராடிய வேலு நாச்சியாரும் வ.உ.சி.யும் இருக்காங்க"

"ஊகும் ரிஜக்டெட். வெள்ளைக்காரன்கிட்ட மன்னிப்பு கேட்ட வீராதி வீரர்களுக்கு மட்டும்தான் அனுமதி. நெக்ஸ்ட்.. "

"நாங்க மேற்கு வங்காளம். வெள்ளைக்காரனுக்கு எதிரா இந்திய தேசிய ராணுவத்தை கட்டி அமைத்து அந்தமானை வென்ற, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ள அலங்கார ஊர்தியோடு வந்திருக்கோம்"

"ரிஜெக்டட்... அந்தமான் ஜெயில்னாலே எங்களுக்கு அலர்ஜி. நெக்ஸ்ட்... நீங்க கேரளாவா?"

"ஆமா.. நாராயண குரு அலங்கார ஊர்தி ரெடி. "

"நோ.. அவர் சீர்திருத்தம் பேசுனாரு. அவருக்குப் பதிலா ஆதிசங்கரரை வச்சி எடுத்துட்டு வாங்க."

"முடியாது"

"சரி இரண்டு பேரையும் வச்சிக்குங்க"

"அதுவும் முடியாது. எங்க மாநில அடையாளம் நாராயண குருதான்"

"ரிஜெக்டட்... நெக்ஸ்ட், நீங்க எல்லாரும் யாரு? "

"பி.ஜே.பி ரூலிங் ஸ்டேட்ஸ்"

"வண்டிகளை கொண்டு

போய் வரிசையா நிறுத்தி

ஊர்வலத்துக்கு ரெடி யாகுங்க"

இதுதான் கடந்த ஜனவரி 26 குடியரசு நாளன்று நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர

"நீங்க தமிழ்நாடா? குடியரசு தின அணி வகுப்பு அலங்கார ஊர்தி யில் இருக்கிறது யாரு?"

"வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போராடிய வேலு நாச்சியாரும் வ.உ.சி.யும் இருக்காங்க"

"ஊகும் ரிஜக்டெட். வெள்ளைக்காரன்கிட்ட மன்னிப்பு கேட்ட வீராதி வீரர்களுக்கு மட்டும்தான் அனுமதி. நெக்ஸ்ட்.. "

"நாங்க மேற்கு வங்காளம். வெள்ளைக்காரனுக்கு எதிரா இந்திய தேசிய ராணுவத்தை கட்டி அமைத்து அந்தமானை வென்ற, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ள அலங்கார ஊர்தியோடு வந்திருக்கோம்"

"ரிஜெக்டட்... அந்தமான் ஜெயில்னாலே எங்களுக்கு அலர்ஜி. நெக்ஸ்ட்... நீங்க கேரளாவா?"

"ஆமா.. நாராயண குரு அலங்கார ஊர்தி ரெடி. "

"நோ.. அவர் சீர்திருத்தம் பேசுனாரு. அவருக்குப் பதிலா ஆதிசங்கரரை வச்சி எடுத்துட்டு வாங்க."

"முடியாது"

"சரி இரண்டு பேரையும் வச்சிக்குங்க"

"அதுவும் முடியாது. எங்க மாநில அடையாளம் நாராயண குருதான்"

"ரிஜெக்டட்... நெக்ஸ்ட், நீங்க எல்லாரும் யாரு? "

"பி.ஜே.பி ரூலிங் ஸ்டேட்ஸ்"

"வண்டிகளை கொண்டு

போய் வரிசையா நிறுத்தி

ஊர்வலத்துக்கு ரெடி யாகுங்க"

இதுதான் கடந்த ஜனவரி 26 குடியரசு நாளன்று நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. ஊர்தி வடிவைமப்புக்கான நெறிமுறைகள் மீறப்பட்ட தாகச் சொல்லப்பட்டது. தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுட்டிக்காட்டப்பட்ட நெறிமுறைகளின்படி ஊர்தி வடிவமைக்கப்பட்டும், நான்காம் சுற்று பரிசீலனைக்கு தமிழ்நாடு அமைக்கப்படவில்லை என்பதை டெல்லிக்கு கடிதமாக எழுதினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை "இவர் பிஸினஸ் மேனா?" என்று கேட்டிருக்கிறார்கள் டெல்லிக் காரர்கள். வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் ஜான்சி ராணிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார் உள்ளிட்டோர் இருந்த ஊர்தியை அனுமதிக்க வில்லை.

வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த நிலமான தமிழ்நாட்டிற்கு ஏறத்தாழ 250 ஆண்டுகால வீரம்செறிந்த விடுதலைப் போராட்ட வரலாறு உண்டு. வட இந்தியாவில் முதல் இந்திய சுதந்திரப் போர்நடப்பதற்கு அரை நூற்றாண்டு முன்பாகவே வேலூர் கோட்டையில் புரட்சி நடந்தது.

delhi

பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஊமைத்துரை, தீரன் சின்னமலை எனப் பலரும் வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்த முன்னோடி கள். இதுபற்றி ம.பொ.சி., ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் எழுதிய புத்தகங்கள் உள்ளன. அரசு ஆவணக் காப்பகங்களில் நிறைய ஆவணங்களும் இருக்கின்றன. பல ஊர்களிலும் நினைவுச் சின்னங் கள், மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டு விழாவினையொட்டி, கடந்த 2021 நவம்பர் 1ஆம் நாள் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1751 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் நடந்த பல்வேறு போராட்டங்கள் பற்றிய கண்காட்சி அது. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்டபோது அதனை அவர் எதிர்கொண்ட துணிவு குறித்து ஆங்கிலேயர் எழுதியுள்ள ஆவணம், பிரிட்டிஷாருக்கு எதிராக தமிழ்நாட்டு மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், பீரங்கிக் குண்டு, சென்னை சிறையில் நேதாஜி இருந்தபோது பயன்படுத்திய சாய்வு நாற்காலி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் தியாகம், மகாகவி பாரதியார் உள்ளிட்டோரின் விடுதலை வேள்வி, மருது சகோதரர்கள், வீரன் அழகுமுத்துக்கோன், பூலித் தேவன், தீரன் சின்னமலை ஆகியோரின் வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டம் பற்றிய குறிப்புகள், வேலூர் புரட்சி வரலாறு, வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, அஞ்சுகம் அம்மாள், நாகம்மையார் ஈ.வெ.ரா என போர்க்களத்திலும் சத்தியாகிரகத்திலும் முன்னின்ற தமிழ்நாட்டுப் பெண்கள், தமிழ்நாட்டில் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய 250 ஆண்டுகால விடுதலைப் போராட்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கண்காட்சியை, தீபாவளி நேரத்தில் ஊர்ப் பயணம் செல்வதற்காக கோயம்பேடு வந்த பலரும் பார்வையிட்டனர்.

வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள், பாரதியாரின் நினைவு நூற்றாண்டு இவற்றைப் போற்றும் வகையில் நடமாடும் கண்காட்சி வாகனமும் சென்னைப் பள்ளிகள் நோக்கி வலம் வந்தன. ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சியை நீட்டிக்கும் எண்ணமும், தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் இந்தக் கண்காட்சியை நடத்தும் திட்டமும் அரசிடம் இருந்தது. தொடர்ச்சியான மழை காரணமாக அதனை செயல்படுத்த முடியாமல் போன நிலையில், மீண்டும் அந்த வரலாற்றைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டுசெல்ல பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உதவியுள்ளது(!?)

dd

குடியரசு நாளில் டெல்லியில் நடைபெறும் அணி வகுப்பில், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்டத்தை விளக்கும் வாகனத்தை அனுமதிக்க மறுத்த ஒன்றிய அரசின் மனோபாவத்திற்கு எதிர்வெளிப்பாடாக, அந்த அலங்கார ஊர்தி சென்னையில் மாநில அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் என்றும், அதன்பின் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி கொண்டுசெல்லப்படும் என்றும் முதல்வர் அறிவித்து செயல்படுத்தினார். குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியில் தமிழ்நாட்டின் முக்கிய தியாகிகளை இடம்பெறச் செய்ததுடன் சமூகநீதிக் களத்தின் அடையாளமாக தந்தை பெரியாரை முன்னிறுத்தி, டெல்லிக்குப் பாடம் நடத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அடுத்த கட்டமாக, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ கண்காட்சியையும் முன்னெடுக்க வேண்டியது அவசிய மாகும். ஒன்றிய அரசின் மதவெறிப் பார்வையை நம்மால் அனுமதிக்கமுடியாது! இந்தியாவின் வரலாறு, வடக்கு திசையால் தொடர்ந்து தீர்மானிக்கப்படுவது காலக்கொடுமை. தெற்கிலிருந்து எழுதப்படும் போதுதான் வரலாற்றின் பக்கங்களில், கிழக்குத் திசை உதயம் போல உண்மை வெளிச்சம் பரவிடும்.

uday010222
இதையும் படியுங்கள்
Subscribe