ரமணரும் ராஜாவும் இசைஞானியின் ஆன்மிகக் காதல்!

/idhalgal/eniya-utayam/ramana-and-raja-are-spiritual-love-musician

மிழ் மக்களின் மனதுக்கு அமைதியைத் தருவது இசைஞானி இளையராஜாவின் இசை. எந்த இடத்தில், எந்த மனநிலையில் இருந்தாலும் அவரின் இசை நம் மனதை ஒருநிலைப்படுத்தும். அப்படிப்பட்ட இசையை நமக்குத் தரும் இசைஞானியின் மனதுக்கு, உடலுக்கு அமைதியைத் தரும் இடம் திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமம்.

ரமணருடனான அவருடைய பந்தம் இன்று நேற்று தொடங்கியதல்ல, 30 தசாப்தங்களைக் கடந்துவிட்டது. ஒரு பத்திரிகை நேர்காணலில் ரமணரால் நீங்கள் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள் என கேட்கப்பட்டபோது, “நான் எப்படி பகவானை ஈர்க்க முடியும், பகவான்தான் என்னைப் பிடித்தார். நான் ஒரு தெருநாய். சாக்கடையில் விழுந்துகிடந்த தெருநாய்.

rr

அவர் தனது முழுக்கையால் அல்ல, இரண்டு விரல்களால் என்னைத் தூக்கி வெளியே எடுத்துப் போட்டுவிட்டு போய்விட்டார். அது மட்டுமே சொல்லமுடியும். அவர்தான் இங்கே என்னைக் கொண்டுவந்தார். நான் வரவில்லை. ரமணாசிரமம் வருவதற்கான நோக்கம் எனக்கு இல்லை. அவர்தான் என்னைக் கொண்டுவந்தது. எப்படி என்னை இங்கே கொண்டுவந்தார் என்பதை என்னால் விவரிக்கமுடியாது. அது மிகப்பெரிய விஷயம். ஒரு அனுபவத்தைப் பெறுவது வேறு, அந்த உணர்ச்சிகளை உணர்வுபாவத்துடன் வெளிப்படுத்துதல் என்பது வேறு. எதையும் அனுபவிக்காமல் ஊகத்தில் அதுபோன்ற அனுபவங்களைப் பற்றி உளறிக்கொண்டிருப்பது வேறு. நான் அடைந்ததை விவரிக்க முடியாது, அனுபவிக்க மட்டுமே முடியும்” எனச் சொல்லியுள்ளார் இசைஞானி.

வெள்ளாடை அணிந்த தேவனாக சென்னையிலிருந்து புறப்படும் இசைஞானி திருவண்ணாமலையில் மலையடிவாரத்திலுள்ள ரமணர் வாழ்விடத்திற்கு வ

மிழ் மக்களின் மனதுக்கு அமைதியைத் தருவது இசைஞானி இளையராஜாவின் இசை. எந்த இடத்தில், எந்த மனநிலையில் இருந்தாலும் அவரின் இசை நம் மனதை ஒருநிலைப்படுத்தும். அப்படிப்பட்ட இசையை நமக்குத் தரும் இசைஞானியின் மனதுக்கு, உடலுக்கு அமைதியைத் தரும் இடம் திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமம்.

ரமணருடனான அவருடைய பந்தம் இன்று நேற்று தொடங்கியதல்ல, 30 தசாப்தங்களைக் கடந்துவிட்டது. ஒரு பத்திரிகை நேர்காணலில் ரமணரால் நீங்கள் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள் என கேட்கப்பட்டபோது, “நான் எப்படி பகவானை ஈர்க்க முடியும், பகவான்தான் என்னைப் பிடித்தார். நான் ஒரு தெருநாய். சாக்கடையில் விழுந்துகிடந்த தெருநாய்.

rr

அவர் தனது முழுக்கையால் அல்ல, இரண்டு விரல்களால் என்னைத் தூக்கி வெளியே எடுத்துப் போட்டுவிட்டு போய்விட்டார். அது மட்டுமே சொல்லமுடியும். அவர்தான் இங்கே என்னைக் கொண்டுவந்தார். நான் வரவில்லை. ரமணாசிரமம் வருவதற்கான நோக்கம் எனக்கு இல்லை. அவர்தான் என்னைக் கொண்டுவந்தது. எப்படி என்னை இங்கே கொண்டுவந்தார் என்பதை என்னால் விவரிக்கமுடியாது. அது மிகப்பெரிய விஷயம். ஒரு அனுபவத்தைப் பெறுவது வேறு, அந்த உணர்ச்சிகளை உணர்வுபாவத்துடன் வெளிப்படுத்துதல் என்பது வேறு. எதையும் அனுபவிக்காமல் ஊகத்தில் அதுபோன்ற அனுபவங்களைப் பற்றி உளறிக்கொண்டிருப்பது வேறு. நான் அடைந்ததை விவரிக்க முடியாது, அனுபவிக்க மட்டுமே முடியும்” எனச் சொல்லியுள்ளார் இசைஞானி.

வெள்ளாடை அணிந்த தேவனாக சென்னையிலிருந்து புறப்படும் இசைஞானி திருவண்ணாமலையில் மலையடிவாரத்திலுள்ள ரமணர் வாழ்விடத்திற்கு வந்தபின் பற்றற்ற ஞானியைப்போலவே இருப்பார் இந்தியாவே கொண்டாடும் இசைமேதையாக இருந்தாலும் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்காபக்தர்களைப்போலவே எளிமையாகவே இருப்பார். அவர் ஆசிரமத்துக்கு வந்தால் சாதாரணமான ஒரு அறையிலேயே தங்குவார், அங்கே அவருக்கென எந்த சிறப்பு வசதிகளும் இருக்காது. இங்கு வசதியான அறைகள் உண்டு, ஆனால் அன்று முதல் இன்று வரை எப்போதும் சாதாரணமான அறையிலேயே தங்குகிறார். ஆஸ்ரம நிர்வாகிகள், வேதம் பயிலும் மாணவர்கள் சாப்பிடும் வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத, உப்புக் குறைவான அதே உணவையே அவருக்கு அங்கு வழங்குகிறார்கள், அதனைத்தான் அவர் எடுத்துக்கொள்வார்.

ஆசிரமத்துக்கு வரும்போது மட்டும் இசைஞானி ரமணரை நினைப்பதில்லை. எல்லா இடங்களிலும் தன்னை இயக்குவதே பகவான்தான் என்பார். எப்போதும், எந்த இடத்திலும், எந்த நிலையிலும் ரமணரின் பெயரை உச்சரிக்கவேமாட்டார், பகவான் என்றே சொல்வார், குறிப்பிடுவார். அந்தளவுக்கு அவர் மீது பக்தி. அமெரிக்காவில் சிலிகன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் உலகின் மிகப் பிரபலமானவர்களை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்துவார்கள். டால்க்ஸ் அட் கூகுள் (பஹப்ந்ள் ஹற் ஏர்ர்ஞ்ப்ங்) நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இசைஞானி, உலகெங்கும் பல ஞானிகள் தோன்றியிருக் கிறார்கள். ஆனால் பகவான் (ரமண மகரிஷியைப்) போல வேறொருவர் கிடையாது என புகழ்ந்தார்.

இப்படி எங்கும் எப்போதும் பகவான் குறித்து பேசுவார்.

எதிலும் பற்றற்றவராக அண்ணாமலையார் மலைமீதுள்ள ஒரு பாறையில் புலித்தோல் மீது ஒற்றை ஆடை அணிந்துகொண்டு தியானத்தில் அமர்ந்திருக்கும் ரமணரின் புகைப்படம் இசைஞானியின் வீடு, அலுவலகம், ஊர்தியில் இருக்கும். பகவானே எதிலும் பற்றற்றவராக இருந்தவர், நமக்கும் எதன்மீதும் பற்றுதல் ஏற்படக்கூடாது என பகவான் எப்போதும் தனக்கு உணர்த்தவேண்டும் என்றே புகைப்படமாகவும், மனதுக்குள்ளும் வைத்துள்ளார் இசைஞானி.

ரமணர் ஆசிரமம் என்பது ரமணர்.

ss

அவரது தாயார், அவர் வளர்த்த பசு, நாய் அடக்கம் செய்யப்பட்ட பகுதி. ரமணர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரமணேஸ்வர லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அது பெரிய தியான மண்டபமாக இருப்பது ரமணர் ஆசிரமத்துக்கு வந்துசென்ற பக்தர்களுக்கு தெரியும். அந்த தியான மண்டபத்தில் பக்தர்கள் பார்வைபடாத ஒரு பகுதியில் தியானத்துக்கு அமர்வார் இசைஞானி. நிமிடங்கள், மணியாகி, அது சில மணிகளாகும் வரை தியானத்தில் இருப்பார். அப்போது அவரை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள், அவராகவே தியானத் தில் இருந்து எழும்வரை அவரை யாரும் நெருங்கமாட்டார்கள். ரமணர் ஆசிரமத்துக்குள் நுழைந்தபின் அவ்வளவாக யாரிடமும் பேசமாட்டார்.

எப்போதாவது அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வார். ரமணாஸ்ரமத்தில் இருந்து கிரிவலப்பாதை உள்வட்டப் பாதை வழியாக அதாவது மலையை ஒட்டினாற் போல் உள்ள காட்டுப்பகுதியில் உதவியாளருடன் வலம்வருவார். வனத்துறை இப்போது அந்தப் பாதையை அடைத்துவிட்டதால் அவ்வழி செல்வதில்லை, நள்ளிரவு, விடியற்காலை நேரங்களில் நேரம் கிடைக்கும்போது ரமணர் மாலை என்கிற பாடலை பாடியபடி கிரிவலம் வருகிறார்.

ரமணர் மகிமையைப் புகழும்வண்ணம் ரமணரின் வாழ்க்கை, போதனைகள் குறித்து, ரமண அமுது என்கிற தலைப்பில் நூலெழுதி வெளியிட்டுள்ளார். அதேபோல், ரமணமாலை, குரு ரமண கீதம், ரமண ஆரம் என்கிற தெலைப்பில் பாடல் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அதில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்கள்,

அற்புதம் அற்புதம் அற்புதமே - அந்தப்

பரம்பொருள் மண்ணிலே மனிதனாய் வந்தது…

மரணத்தை வரவழைத்தணைத்தானை

மானிடன் எனத்தகுமோ

அளப்பரும் சுயமாய் நின்றானை

வானவன் எனத்தகுமோ

ஞானத்தின் முதல்வன் அவன் போல

ஞானியர் உலகில் உண்டோ

தவத்தினில் தனித்த தன்மையன் போல்

தவத்தோர் எவரும் உண்டோ - இது

அதிசயம் அல்லாது வேறென்னவோ

இதேபோல், "ரமண மாலை" என்கிற தலைப்பில் பாடல் தொகுப்பில்,

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

யாம் ஒரு, பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்தத்தா

இல்லை ஆதியின் வள் வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்தத்த

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாதாத்தா

இம்மையை நான் அறியாதாத்தா

சிறு பொம்மையின் நிலாவினில் உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் எந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே……………

என நீளும் இந்தப் பாடல் பக்தன் கடவுளிடம் வேண்டுதல் போன்று அமைக்கப்பட்டது. இந்த ரமணர் மாலை பாடல் ரமண பக்தர்களிடம் மிகவும் உணர்ச்சி மிகுந்த பாடலாக இருந்துவருகிறது. இந்தப் பாடலை திரைப்பட இயக்குநர் பாலாவின், நான் கடவுள் படத்தில் திரைப்பாடலாகவும் சில வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு வைக்கப்பட்டு தமிழ் உலகமே கொண்டாடியது. இந்தப் பாடல்களின் விற்பனை வழியாக வந்த வருமானம், பிற்காலத்தில் இந்த பாடல்கள் ஆடியோ வடிவிலிருந்து புத்தக வடிவமானது, அதன் வருமானம் அனைத்தும் ரமணர் ஆசிரமத்துக்கே வருவதுபோல் செய்துள்ளார்.

1879 டிசம்பர் 30-ஆம் தேதி ரமணர் பிறந்தார். அவரின் அவதார நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத் தில் ரமணர் ஜெயந்தி விழா வாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் 1950 ஏப்ரல் 19-ஆம் தேதி ரமண பகவான் மறைந்தார். அவரின் மறைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழாவாக ரமணாஸ்ரமத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களின்போது எந்த நிகழ்வையும் வைத்துக்கொள்ளமாட்டார் இசைஞானி. ரமண பகவான் வாழ்விடத்துக்கு வந்துவிடுவார். இரு விழாக்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் அவரின் காந்தக் குரலில் ரமணர் பாடல்களைப் பாடுவார். சிலமணி நேரம் நடைபெறும் இந்நிகழ்வுகளின்போது இடையில் எழுந்துசெல்லாமல் நிகழ்வு முழுவதும் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து பகவானை மனமுருகிப் பாடி, வணங்கி தியானத்தில் இருப்பார்.

ரமணரை தமிழகத்தில் பலருக்கு அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் இளையராஜா. திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகர்கள் லால்குடி சுபா, அனுராதா போன்ற பல திரைப்பிரபலங்களும் ரமண பகவானின் பக்தர்கள்.

-து. ராஜா

uday010424
இதையும் படியுங்கள்
Subscribe