"அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.'
-என்கிற குறள்,
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப்படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரை தேர்ந்தேடுப்பதே சிறந்தது என்று தலைமைப் பண்பிற்கு உரியவரைப் பரிந்துரைக்கிறது.
இந்தக்குறள் மொழிக்கு ஏற்ப, நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி.
ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரனும், இந்திரா காந்தியின் பேரனும் ராஜீவ்காந்தியின் புதல்வருமான இந்த ராகுல் காந்தியை, ஒரு விடலைப் பையனைப் போலவே இளக்காரமாகப் பார்த்துவந்தார் நரேந்திர மோடி.
ஆனால், ராகுலோ தனது மேன்மையான அரசியல் அணுகுமுறையாலும் நாடுதழுவிய யாத்திரையாலும் மக்களின் இதயம் வரை சென்றிருக்கிறார். அவரது அசாத் திய எளிமைக்கு முன் மோடி, எடையிழந்து நிற்கிறார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் தலையெடுத்து விடக்கூடாது என்று, பல மாதங்களாகவே சதிவலை பின்னிவந்தது மோடி தரப்பு. குறிப்பாக ராகுலின் எம்.பி,. பதவியை ஒரு அவதூறு வழக்கின் மூலம் பறித்து, அவரது டெல்லி பங்களாவையும் அதிரடியாகக் காலிசெய்ய வைத்தது.
ஆனாலும் சட்டத்தின் பாதுகாப்பில் அவரது எம்.பி. பதவி மீண்டும் அவர் வசமே திரும்பிவந்தது.
இந்தியா கூட்டணி உருவான போதுகூட அதில் தனது ஆளுமையை ராகுல் காட்டியதில்லை. இந்தியா கூட்டணிக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட நிலை யிலும், துரோகத் தாக்குதல்கள் உண்டான போதும், சகலத் தையும் முறியடித்துக்கொண்டு இந்தியா கூட்டணி எழுந்து நின்றதோடு, ராகுலையும் அன்போடு ஆரத் தழுவிக் கொண்டது.
கடந்தமுறை 302 தொகுதிகளில் கரையேறியது பாஜக. இப்போது, பா.ஜ.க. கூட்டணியே 293 தொகுதிகளைத் தான் கைப்பற்ற முடிந்தது. ராகுல் காந்தியின் பிரச்சார உத்திகளால், முடிந்துபோன கட்சியாகக் கருதப்பட்ட காங்கிரஸ், 99 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக் கிறது. ராகுலை ஏந்திக்கொண்டிருக்கும் இந்தியா கூட்டணி, 235 இடங்களை வென்றிருக்கிறது.
ராகுல் பக்கம் ஏற்பட்டிருக்கும் இப்படியொரு எழுச்சியை மோடியும் அவரது பா.ஜ.க. பரிவாரங்களும் எதிர்பார்க் கவே இல்லை.
இதுநாள் வரை, கட்சித் தலைவர் பதவியைக் கூட ஏற்கத் தயங்கி நின்ற ராகுல், தான் விசுவரூபம் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைப் ப
"அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.'
-என்கிற குறள்,
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப்படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரை தேர்ந்தேடுப்பதே சிறந்தது என்று தலைமைப் பண்பிற்கு உரியவரைப் பரிந்துரைக்கிறது.
இந்தக்குறள் மொழிக்கு ஏற்ப, நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி.
ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரனும், இந்திரா காந்தியின் பேரனும் ராஜீவ்காந்தியின் புதல்வருமான இந்த ராகுல் காந்தியை, ஒரு விடலைப் பையனைப் போலவே இளக்காரமாகப் பார்த்துவந்தார் நரேந்திர மோடி.
ஆனால், ராகுலோ தனது மேன்மையான அரசியல் அணுகுமுறையாலும் நாடுதழுவிய யாத்திரையாலும் மக்களின் இதயம் வரை சென்றிருக்கிறார். அவரது அசாத் திய எளிமைக்கு முன் மோடி, எடையிழந்து நிற்கிறார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் தலையெடுத்து விடக்கூடாது என்று, பல மாதங்களாகவே சதிவலை பின்னிவந்தது மோடி தரப்பு. குறிப்பாக ராகுலின் எம்.பி,. பதவியை ஒரு அவதூறு வழக்கின் மூலம் பறித்து, அவரது டெல்லி பங்களாவையும் அதிரடியாகக் காலிசெய்ய வைத்தது.
ஆனாலும் சட்டத்தின் பாதுகாப்பில் அவரது எம்.பி. பதவி மீண்டும் அவர் வசமே திரும்பிவந்தது.
இந்தியா கூட்டணி உருவான போதுகூட அதில் தனது ஆளுமையை ராகுல் காட்டியதில்லை. இந்தியா கூட்டணிக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட நிலை யிலும், துரோகத் தாக்குதல்கள் உண்டான போதும், சகலத் தையும் முறியடித்துக்கொண்டு இந்தியா கூட்டணி எழுந்து நின்றதோடு, ராகுலையும் அன்போடு ஆரத் தழுவிக் கொண்டது.
கடந்தமுறை 302 தொகுதிகளில் கரையேறியது பாஜக. இப்போது, பா.ஜ.க. கூட்டணியே 293 தொகுதிகளைத் தான் கைப்பற்ற முடிந்தது. ராகுல் காந்தியின் பிரச்சார உத்திகளால், முடிந்துபோன கட்சியாகக் கருதப்பட்ட காங்கிரஸ், 99 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக் கிறது. ராகுலை ஏந்திக்கொண்டிருக்கும் இந்தியா கூட்டணி, 235 இடங்களை வென்றிருக்கிறது.
ராகுல் பக்கம் ஏற்பட்டிருக்கும் இப்படியொரு எழுச்சியை மோடியும் அவரது பா.ஜ.க. பரிவாரங்களும் எதிர்பார்க் கவே இல்லை.
இதுநாள் வரை, கட்சித் தலைவர் பதவியைக் கூட ஏற்கத் தயங்கி நின்ற ராகுல், தான் விசுவரூபம் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டி ருக்கிறார்.
அவரது போராட்ட குணத்தையும், நாகரிகமிக்க நகர்வுகளையும் ஒட்டுமொத்த இந்தியாவும் இப்போது பெருமிதத்தோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.
எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை விட்டுத்தந்தால், உங்கள் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கிறோம் என்று எதிர்க் கட்சிகள் வைத்த நியாயமான கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்தது. அதனால், எதிர்க் கட்சிகளின் சார்பில் காங்கிரஸ், தனது வேட்பாளராக அனுபவ முதிர்ச்சி கொண்ட கொடிக்குன்னில் சுரேஷை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, 48 ஆண்டுகளுக்குப் பின் சபாநாயகர் தேர்தலை, இந்திய நாடாளு மன்றம் சந்தித்தது. குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இதன் மூலம், எந்த உரிமையையும் எதிர்க்கட்சிகள் விட்டுக்கொடுக்காது என்பதை பா.ஜ.க.வுக்கு அழுத்தமாக உணர்த்தினார் ராகுல். அதன்பின், நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை, நாடாளுமன்ற சம்பிரதாயப் படி பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் அழைத்துச்சென்று, அவருக்கான இருக்கையில் அமரவைக்கும் வைபவம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது கொஞ்சமும் தயக்கத்தைக் காட்டாமல், புன்னகை பூத்த முகத்தோடு சபாநாயகர் ஓம் பிர்லாவோடு கைகுலுக்கி மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ராகுல், பெருந்தன்மையோடும் அதே புன்னகையோடும் பிரதமர் மோடியின் கைகளையும் குலுக்கி, அவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்போடு சபாநாயகரை வாழ்த்திப் பேசிய ராகுல் அவருக்கு வாழ்த்துக்களை முறைப்படி தெரிவித்துவிட்டு "இந்திய மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் அவை இது. அந்தக் குரலின் இறுதி நடுவர் நீங்கள். அரசாங்கத் திடம் அரசியல் அதிகாரம் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் அழுத்தமாக மக்களின் குரலை எதிரொலிக்கும். கடந்த முறையைவிட இந்தமுறை, இந்திய மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் அதிகமாகவே பிரதிபலிக்கும். அதே சமயம் உங்கள் பணியை எளிமை யாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைப்பை நல்கும்.' என்றும் கம்பீரமாகத் தெரிவித்தார்.
அப்போது, அவரிடம் வெளிப்பட்ட நாகரிகமும் முதிர்ச்சியும், ராகுல்தான் இந்தியாவின் எதிர்கால நாயகன் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது.
இருந்தும் சபாநாயகராகத் தேர்வுசெய்யப்பட்ட ஓம் பிர்லாவோ, ஏறத்தாழ 50 ஆண்டு களுக்கு முன்னர் இந்திரா காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு எதிராக, இப்போது ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்தார்.
நெருக்கடி நிலையை அறிவித்த இந்திரா காந்தி இப்போது உயிரோடு இல்லை. அவர் காலத்தில் பதவியில் இருந்த எவரும் இப்போது பதவியில் இல்லை. மேலும் அவருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களாக ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் என பலரும் இந்தியாவை ஆண்டுவிட்டார்கள். அதோடு, காங்கிரஸ் ஆட்சி இந்தியாவில் அமைந்தே 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அப்படி இருக்க, அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த இந்திராவின் அரசுக்கு, இப்போது கண்டனத் தீர்மானத்தை, அதுவும் நடுநிலை வகிக்கவேண்டிய சபாநாயகரே கொண்டுவந்தார். இது எவ்வளவு பெரிய வேடிக்கை!.
இப்படி ஒரு கண்டனத் தீர்மானம் இப்போது தேவையா? என எதிர்க்கட்சிகள் மட்டுமல் லாது, பல புதிய உறுப்பினர்களும் திகைத்தனர். இருந்தும், பா.ஜ.க.வின் காழ்ப்புணர்வைக் காங்கிரஸ்மீது கொட்டுவது போலவே சபாநாயகரின் கண்டனத் தீர்மானம் இருந்தது.
திட்டமிட்டு, முன்னதாகவே தயாரிக்கப்பட்ட கணடனத் தீர்மானத்தை, பலத்த எதிர்ப்புக் குரலுக்கு நடுவே வாசிக்கத் தொடங்கிய சபாநாயகர்...
"அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, நெருக்கடி நிலைமூலம், அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் தொடுத்தார். அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த நாடும் சிறையாக மாற்றப்பட்டது. ஊடகங்களுக்கு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. நீதித்துறைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது கொண்டுவரப்பட்ட சமூக விரோத, சர்வாதிகார கொள்கைகளால் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டது. ஜனநாயக மாண்புகள் அழிக்கப்பட்டன. கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது.' என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் காங்கிரஸ் மீது அடுக்கினாலும், அவை எல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு சந்தித்து வரும் மோடியின் எதேச்சதிகாரத்தை அப்பட்டமாக விமர்சிப்பது போலவே இருந்தது.
மோடியின் பாசிசம், அவரை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் பலரையும் அமலாக்கத்துறை மூலம் சிறைக்கு அனுப்பிவருகிறது. அவரை விமர்சித்த சித்தாந்தவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். கடுமையான நோய்க்கு ஆளான ஃபாதர் ஸ்டேன் சுவாமி, தனது 84 ஆவது வயதில் சிறையிலேயே இறக்கும் நிலைக்கு ஆளானார். ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்த சமூக ஆர்வலர் களான கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்களின் மூச்சை நிறுத்தியதன் மூலம் அவர்களின் எழுதுகோல்கள் ஊமையாக்கப்பட்டன.
நீதித்துறையும்கூட ஒன்றிய அரசு விரும்பியபடி எல்லாம் தனது தீர்ப்புகளைத் தயாரித்துக் கொடுக்கும் கம்பெனியாக மாறி, ஜால்ரா போட்டன. சிறுபான்மை மக்களின் நிம்மதி எல்லா வகையிலும் பறிக்கப்பட்டது. மாட்டுக்கறி கொலைகள் பகிரங்கமாக நடந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில், ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாய் ஆக்கப்பட்டது. இப்படியாக, சகல விதத்திலும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு ஆளாக்கப்பட்டது நாடு.
எனவே, சபாநாயகர், நெருக்கடி காலத்திற்கு எதிராக கண்டனத் தீர்மானத்தைப் படித்தபோது எல்லோரும் பா.ஜ.க.வின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியை நினைவுபடுத்திக்கொண்டனர்.
இப்படியாக, சபாநாயகர், தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
நாடாளுமன்றமும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. அதற்குள் மோடிக்கு சரியான பதிலடி கொடுக்கக்கூடிய பலம் வாய்ந்த மக்கள் பிரதிநிதி யாகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ராகுல் நாடாளுமன்றத்திற்குள் காலெடுத்து வைத்திருக்கிறார். எதிர்க்கட்சிகளும் அசுர பலத்தோடு மோடிக்கு எதிரே, நாடாளுமன்றத்தில் அமர்ந்துவிட்டன.
எனவே, நினைத்ததை எல்லாம் தீர்மானமாக நிறைவேற்றும் மோடியின் மோசமான அரசியல் சூதாட்டம், இனியும் எடுபடாது என்கிற நிம்மதி நம் மனதில் பிறக்கிறது.
எதிர்பார்ப்போடு,
நக்கீரன்கோபால்
______________
கள்ளக்குறிச்சி நடத்தும் அதிர்ச்சி பாடம்
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.'
-என்பது வள்ளுவரின் மதிப்பு வாய்ந்த வாக்காகும்.
"ஆழ்ந்து உறங்குகிறவர்களைப் பார்த்தால், உயிரில்லாதவர் போலத் தெரியும். அதைப்போல சிலர் போதைப்பொருட்களைக் குடிப்பது போலத்தான் தெரியும். ஆனால் அவர்கள் குடிப்பது விஷத்தை' என்பதுதான் இதன் பொருள்.
போதைப் பொருளும் விஷமும் ஏறத்தாழ ஒன்றுதான் என்று இதன் மூலம் வள்ளுவர் எச்சரிக்கிறார். அவரது இந்த எச்சரிக்கை, கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்துக்கு உரியதாக மாறிவிட்டது.
அங்கே விஷச்சாராயம் விற்ற சமூக விரோதிகளால் கள்ளக் குறிச்சியே கண்ணீரில் மிதக்கிறது. ஏறத்தாழ 64 பேர் வரை அநியாயமாக மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி, சேலம், புதுவை ஜிப்மர், சென்னை என பல்வேறு மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வீதம் அரசு, நஷ்ட ஈடு கொடுத்துவருகிறது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை எதைக்கொண்டும் துடைத்துவிட முடியாது. கள்ளக்குறிச்சி, இந்த அரசுக்கு இது ஒரு அதிர்ச்சிப் பாடத்தை நடத்தியிருக்கிறது.
விஷ சாராயம் விற்றதாக, ஆண்களும் பெண்களுமாக 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த காவல்துறை, தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. சாராயக் கும்பலுக்குத் தலைவனாக இருந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜுக்கு குடிப்பழக்கமே இல்லையாம். அது ஆபத்தான சரக்கு; எப்போது வேண்டுமானாலும் ஆளை விழுங்கும் என்று அவனுக்கே தெரிந்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்த-ல் 40-க்கு 40 ஐயும் தட்டித் தூக்கிய, உற்சாகத்தில் மிதந்துகொண்டிருந்த ஆளுங்கட்சியான தி.மு.க விற்கு, இந்த சம்பவம் கரும்புள்ளியாக மாறியிருக்கிறது.
சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட வேகத்திலேயே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி, ஒட்டுமொத்த காவல் துறை அதிகாரிகளையும், காவலர்களையும், அதிகாரிகளையும் அதிரடியாக மாற்றியிருக்கிறது அரசு.
இந்த மாறுதல் நடவடிக்கை மட்டும் போதாது.
தங்கள் லஞ்ச வெறியால், அங்கே மரணமேளாவை நடத்தி யிருக்கும் அத்தனை அதிகாரிகள்மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து, அவர்களை சிறைக்கு அனுப்பவேண்டும். அதேபோல் கள்ளச்சாராய சக்திகளோடு தொடர்புவைத்திருந்தவர்கள் இத்தனை கொடூரம் நடந்த பிறகும் இந்த தவறை மறைக்க ஆணையிட்ட அரசியல் பிரமுகர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் முன் இந்த அரசு நிறுத்தவேண்டும்.
இல்லையேல், தீராப்பழியில் இருந்து இந்த அரசு மீளவே முடியாமல் போய்விடும்.