திருந்தாவிட்டால் காலம் தண்டிக்கும்!

/idhalgal/eniya-utayam/punishment-if-not-available

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

என்பது, அதிரடிக் குரலை எழுப்பும் வள்ளுவப் பேராசானின் குறள்.

இதன் பொருள், தீய செயல்கள், தீயைவிடக் கொடுமையானவை. எனவே தீயசெயல்களைச் செய்திட அஞ்சவேண்டும் என்பதாகும்.

ஆனால் இப்போது தீயசக்திகள், மாற்று மதத்தினருக்குத் தீமையை உண்டாக்கவேண்டும் என்பதற்காகவே கொஞ்சமும் பயமின்றி, அங்கங்கே தீ வைத்துகொண்டிருக்கின்றன. அவர்களால் பற்றி எரிகிறது டெல்லி. குறிப்பாக டெல்லியின் வடகிழக்குப் பகுதியே தீப்பிடித்து எரிகிறது. தலைநகரான டெல்யின் பெரும்பகுதி மதவெறியர்களால் கலவரக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது.

de

குடிமக்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த இந்தியாவும் போராடி வருகிற நிலையில், அதேமாதிரியான அறவழிப் போராட்டத்தைத் தான் டெல்லிபாசிராபாத் பகுதி இஸ்லாமிய மக்களும் கையில் எடுத்தார்கள். அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவர்கள் அறவழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இதை பா.ஜ.க. வினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கபில் மிஸ்ரா என்பவர் அந்தப் போராட்டத்தை ஒடுக்கப்போவதாக அறிவித்ததோடு, "இந்தியாவுக்கு ட்ரம்ப் வந்திருக்கிற நேரம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம். அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பியதும் போலீஸ் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும். நாங்கள் அவர்களை அடித்து அடக்குகிறோம்' என்று ஆவேசமாக முழக்கமிட்டு, எரிகிற தீயில் எண்ணெய் வார்த்திருக்கிறார்.

டெல்லிசட்டமன்றத் தேர்தலின்போதே, மேற்கு டெல்லியின் பா.ஜ.க. எம்.பி.யான பர்வேஷ் வர்மா, "இங்கே பா.ஜ.க ஆட்சி அமைந்தால் ஒரு மணிநேரத்தில் ஷாகீன்பாக்கை ஒடுக்குவோம். என் தொகுதியில் இருக்கும் மசூதிகளை அகற்றிக்காட்டுவோம்' என்று மிரட்டியதோடு...

"சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள்' என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடூரத்தைக் கக்கினர். இவரை விடவும் உச்சக்கட்டத்துக்குப் போன பா.ஜ.க. மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர், "சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் தேசத் துரோகிகளை சுட்டுத் தள்ளவேண்டும்' என்று வெறிக்கூச்சல் போட்டு, இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை உமிழ்ந்திருந்தார்.

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

என்பது, அதிரடிக் குரலை எழுப்பும் வள்ளுவப் பேராசானின் குறள்.

இதன் பொருள், தீய செயல்கள், தீயைவிடக் கொடுமையானவை. எனவே தீயசெயல்களைச் செய்திட அஞ்சவேண்டும் என்பதாகும்.

ஆனால் இப்போது தீயசக்திகள், மாற்று மதத்தினருக்குத் தீமையை உண்டாக்கவேண்டும் என்பதற்காகவே கொஞ்சமும் பயமின்றி, அங்கங்கே தீ வைத்துகொண்டிருக்கின்றன. அவர்களால் பற்றி எரிகிறது டெல்லி. குறிப்பாக டெல்லியின் வடகிழக்குப் பகுதியே தீப்பிடித்து எரிகிறது. தலைநகரான டெல்யின் பெரும்பகுதி மதவெறியர்களால் கலவரக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது.

de

குடிமக்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த இந்தியாவும் போராடி வருகிற நிலையில், அதேமாதிரியான அறவழிப் போராட்டத்தைத் தான் டெல்லிபாசிராபாத் பகுதி இஸ்லாமிய மக்களும் கையில் எடுத்தார்கள். அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவர்கள் அறவழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இதை பா.ஜ.க. வினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கபில் மிஸ்ரா என்பவர் அந்தப் போராட்டத்தை ஒடுக்கப்போவதாக அறிவித்ததோடு, "இந்தியாவுக்கு ட்ரம்ப் வந்திருக்கிற நேரம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம். அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பியதும் போலீஸ் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும். நாங்கள் அவர்களை அடித்து அடக்குகிறோம்' என்று ஆவேசமாக முழக்கமிட்டு, எரிகிற தீயில் எண்ணெய் வார்த்திருக்கிறார்.

டெல்லிசட்டமன்றத் தேர்தலின்போதே, மேற்கு டெல்லியின் பா.ஜ.க. எம்.பி.யான பர்வேஷ் வர்மா, "இங்கே பா.ஜ.க ஆட்சி அமைந்தால் ஒரு மணிநேரத்தில் ஷாகீன்பாக்கை ஒடுக்குவோம். என் தொகுதியில் இருக்கும் மசூதிகளை அகற்றிக்காட்டுவோம்' என்று மிரட்டியதோடு...

"சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள்' என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடூரத்தைக் கக்கினர். இவரை விடவும் உச்சக்கட்டத்துக்குப் போன பா.ஜ.க. மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர், "சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் தேசத் துரோகிகளை சுட்டுத் தள்ளவேண்டும்' என்று வெறிக்கூச்சல் போட்டு, இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை உமிழ்ந்திருந்தார். இப்படிப்பட்ட பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கத்தால்தான், போராட்டக் களம் வன்முறைக்களமாக மாறியது என்கிறார்கள் டெல்லிபத்திரிகையாளர்கள்.

del

அங்கே பற்றிய கலவரத் தீதான், பஜன்பூரா, சாந்திகாக், குர்ஜிகாஸ் என டெல்லியின் பல பகுதிகளிலும் பற்றிக்கொண்டிருக்கிறது. துரத்தல்கள், தாக்குதல்கள், ரத்தக்களறிகள் என்று தொடங்கிய வெறியாட்டம், வாகனங்களுக்குத் தீ வைப்பது, கட்டடங்களை இடித்துத் தகர்ப்பது என்று மூர்க்கத்தனமான அராஜக ஆட்டமாக மாறியது. முதல் நாளே ஒரு காவலர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டது மிகப்பெரிய துயரம்.

பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியமான பவர்ஃபுல் மனிதர்கள் இருக்கக்கூடிய இந்தியாவின் தலைநகரான டெல்லியிலேயே இப்படி வன்முறை கட்டுக்கடங்காமல் வெடித்த நிலையிலும், பிரதமர் மோடியோ, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவோ சமாதானத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாய் திறக்கவில்லை. காவல்துறையும், கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந் தது. இந்த நிலையில், டெல்லிஅசோக் நகரில் இருந்த பாதீ மசூதியை குறிவைத்துப் படையெடுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த "அனுமன் சேனா' வெறிக்கும்பல் ஒன்று, முதலில் அதன்மீது கையெறி குண்டுகளை வீசியதோடு, மசூதியின் மற்றொரு கட்டடத்தில் ஏறி, அங்கே பறந்துகொண்டிருந்த பச்சைக் கொடியை அறுத்தெறிந்துவிட்டு காவிக் கொடியை ஏற்றி வெறிக்கூத்தாடி யது. அந்தக் காட்சி, சமூக ஊடகங் களில் வெளியாகி மேலும் பதட் டத்தை உண்டாக்கியது. அதே போல் ஒரு வெறிகொண்ட ஆயுதக் கும்பலுக்கு நடுவே, ரத்தக் காயத் தோடு தரையில் உட்கார்ந்தபடி ஒரு முஸ்லிம் இளைஞர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கதறும் காட்சியும் சமூக ஊடகங்களில் வெளியாகி, டெல்லியின் திகில் நிலவரத்தை அடையாளம் காட்டியது. இதையெல்லாம் போலியான காட்சிகள் என்று முதலில் மறைக்கப் பார்த்திருக்கிறது டெல்லி போலீஸ்.

ஆனாலும் உண்மையை எப்படி மறைக்க முடியும்? இதைவிடவும் கொடுமை என்னவென்றால், அங்கிட் சர்மா என்ற புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவலர், கலவரக்காரர்களிடம் சிக்கியிருந்தவர்களை மீட்கச் சென்றபோது, 25-ஆம் தேதி கலவரக்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறார். அவரது சடலம் சாக்கடை ஒன்றிலிருந்து மறுநாள் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி நான்கே நாட்களில் அடுத்தடுத்து 30 பேர் ரத்தவெள்ளத்தில் சாய்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 25 பேருக்குமேல் முஸ்லிம்கள் என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம்.

கலவரப் பகுதியில் செய்தி சேகரிக்கப் போன என்.டி.டி.வி.யின் தமிழ் நாட்டைச் சேர்ந்த செய்தியாளரான அரவிந்த் குணசேகரும் கலவரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார். "நீ என்ன மதம்? கலவரத்தை ஏன் படம் எடுத்தாய்?' என்று கேட்டுக் கேட்டு அவரைக் கடுமையாகத் தாக்கி, அவர் பற்களை உடைத்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கும் ஊடக்கத்தினருக்கும் பாதுகாப்பில்லாத நிலை அங்கே உருவாக்கப்பட்டிருக் கிறது. அங்கு வெறிபிடித்த மிருகங்களைப்போல் ஆயுதங்களோடு சுற்றித் திரிந்த கலவரக்காரர்களை போலீஸ் ஒடுக்காமல் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையின் உச்சம்.

del

தங்கள் மாநில போலீஸ், டெல்லி பா.ஜ.க.வின் கன்ட்ரோலில் இருந்து கொண்டு, கலவரத்துக்கு மறைமுகமாக உதவுவதைப் பார்த்த டெல்லிமுதல்வர் கெஜ்ரிவால், "கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புங்கள்' என்று மோடி அரசைப் பார்த்து கூப்பாடு போட்டார். அந்தக் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் அமைதிகாத்தது.

மோடி அரசின் கனத்த அமைதி, டெல்லியின் சட்டம், ஒழுங்கைக் காரணம் காட்டி கெஜ்ரிவால் அரசைக் கலைக்கும் தந்திரமாகக்கூட இருக்கலாம். இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் நேர்மையற்ற சதுரங்க ஆட்டத்திற்கு அப்பாவி மக்கள்தான் உயிரிழக்க வேண்டுமா? மத்திய அரசும், மாநில காவல்துறையும் அமைதியாகவே இருப்பதைப் பார்த்த உச்சநீதிமன்றம், தன் கண்டனங்களைத் தெரிவிக்கத் தொடங்கிய நிலையில்தான், தீடீரென்று வானத்திலிருந்து தரையிறங்கியவரைப்போல், பிரதமர் மோடி அமைதி காக்கும்படி டெல்லிக்காரர்களுக்கு வேண்டு கோள் விடுத்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் அதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டது. 1984 கலவரம் (இந்திராகாந்தி படுகொலைக்குப் பழிதீர்க்க சீக்கியர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம்) போன்ற ஒரு கலவரம் மீண்டும் இங்கே அரங்கேறுவதை அனுமதிக்க முடியாது. காவல்துறை நினைத்தால் கலவரத்தை ஒடுக்கியிருக்க முடியும். அதை யார் கட்டி வைத்திருப்பது? இங்கிலாந்து மாதிரியான நாடுகளில் ஒருவர் போலீஸின் கண்ணெதிரிலேயே துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம்போட முடியுமா? காவல்துறை இதுபோன்ற நேரங்களில் யார் சொல்லையும் கேட்காமல், அமைதியை நிலைநாட்ட வேண்டும். காவல்துறை தான் யார் என்பதைக் காட்டவேண்டும்' என்றெல்லாம் அது தன் சாட்டை யைப் "பளீர் பளீர்' என்று அரசு எந்திரங்களை நோக்கி சொடுக்கியது.

கலவரக்காரர்களை கண்டித்த நீதிபதிகளுக்கும் டிரான்ஸ்பர் உத்தரவுகளைப் போட்டு பகிரங்கமாகவே மிரட்டுகிறது மோடி அரசு. "டெல்லிவன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமாக பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா உள்ளிட்டோர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று உத்தரவிட்ட டெல்லிஉயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை இரவோடு இரவாக பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்டுக்கு டிரான்ஸ்பர் செய்து, தான் யார் என்பதை வெட்க மில்லாமல் காட்டிக்கொண்டிருக்கிறது மோடி அரசு.

இதுதான் மக்களுக்கான அரசா?

26-ஆம் தேதிவரை மட்டுமே ஏறத்தாழ 35 பேர் கலவரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 200 பேருக்குமேல் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனையிலே கிடக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள். இந்த மரண எண்ணிக்கையே கலவரத்தை யார் கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக அடையாளம் காட்டுகிறது. இத்தனை படுகொலைகள்... மசூதி இடிப்பு... இஸ்லாமியர் களின் கடைகள், வீடுகள் எரிப்பு என டெல்லியையே நாசமாக்கி வருகிறது இந்துத் துவா கும்பல். இதைத் தட்டிக் கேட்டால் நீதித்துறையையும் டிரான்ஸ்பர் என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டு கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம் வருகிறது.

தங்களுக்கு வெற்றிவாய்ப்பைத் தராத டெல்லியை, மோடியின் இந்துத்துவா அரசு பழிவாங்குகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. அதுமட்டுமல் லாமல், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து முதலில் களமிறங்கியவர்கள் டெல்லிவாழ் இஸ்லாமியர்கள்தான். அதேபோல் அங்கே இருக்கும் ஜாமியா இஸ்லாமியப் பல்கலைக் கழக மாணவர்கள், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்துக் களமிறங்கிய பிறகே இந்தியா முழுக்க, மாணவர்கள் மத்தியில் போராட்டம் பலமாக வெடித்தது. அதனால் டெல்லிவாழ் இஸ்லாமியர்கள் இந்துத்துவா அமைப்பினரின் தொடர் தாக்குதலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகி வந்தனர். கலவரத்தை ஒடுக்கும் பாவனையில் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காவல்துறையினரோடு ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் கலந்திருந்ததை நாடே பார்த்துப் பதைத்தது. போராடியவர்களை நோக்கி பகிரங்கமா கவே இந்துத்துவா ஆட்கள் துப்பாக்கியால் சுட்டதை யும் இந்த நாடு கண்டது. ஆனால் அவர்கள்மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் இப்போது டெல்லியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்து, கலவர நெருப்பு பற்றவைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் கடைகள் தீவைத்து எரிக்கப் படுவதும், மசூதிகள் தகர்க்கப்படுவதும், இஸ்லாமியர் கள் குறிவைத்துக் கொல்லப்படுவதும் திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது.

ராஜபக்சே பாணியில் இன அழிப்பு வேலைகள், இந்தியாவிலும் ஆரம்பித்துவிட்டதோ என்ற அச்சத்தை இது மக்கள் மத்தியில் பலமாக ஏற்படுத்திவருகிறது. யூதர்களை அழித்தொழித்த ஹிட்லர்களுக்கு, அறமே தண்டனை கொடுத்ததை உலக வரலாறு அழுத்தமாகச் சொல்கிறது. எதிர் மதத்தினரையும் எதிர் கருத்தினரையும் எதிரிகளாகப் பார்க்கும் பார்வை, குருட்டுத்தனமானது மட்டுமல்ல; கொடூரமானதும்கூட. இப்படிப் பட்டவர்கள், வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் ரஜினியே டெல்லியில் அரங்கேற்றப்படும் அராஜகங்களைக் கண்டு... "கலவரத்தை தடுப்பதில் மத்திய உள்துறை தோல்வி அடைந்துள்ளது.

அமைதி வழியில் போராட லாம்.. அது வன்முறையாக மாற இடம் தரக் கூடாது. இப்போது டூ மச்சாக நிலவரம் போய்க் கொண்டிருக்கிறது. டெல்லிகலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். மத்திய அரசின் உளவுத்துறையும் உள்துறை அமைச்சகமும் இதில் தோல்வி அடைந்திருக்கிறது' என்று மனக்கொதிப்பை பகிரங்கமாகவே வெளியிட்டிருக்கிறார்.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி

என்கிறார் வள்ளுவர். நீதிநெறி தவறாக செங்கோன் மைதான் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசு நிலையற்றுச் சரிந்துபோகும் என்பதே இதன் பொருள். இது அதிகார மமதை கொண்ட ஆட்சி யாளர்களுக்கு வள்ளுவர் விடுக்கும் கடும் எச்சரிக்கை யாகும். அவர்கள் திருந்தாவிட்டால், காலம் கண்டிப் பாகத் திருத்தும்

வருத்தத்தோடு,

நக்கீரன்கோபால்

uday010320
இதையும் படியுங்கள்
Subscribe