இது... டாக் மோகா பஸார். பஸாரின் நடுவில் ஒரு கடை இருக்கிறது. டர்போ ஓங்ஜாய், சிக்கந்தர் ஆகியோருக்கு இங்கு அறைகள் இருக்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தக் கடை அந்த அளவுக்குப் பெரிதாகத் தோன்றாது. ஆனால் இந்தக் கடை இருக்கும் கிராமத்தின் எல்லா ஏழைகளின் நிலங்களும் இந்தக் கடை உரிமையாளரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இந்த கொள்ளைக்கு ஜமீன்தார் சிக்கந்தர் மஹாஜன் மட்டுமே குற்றவாளியென்று கூறுவதற்கில்லை.
கொடூரமான சதிச்செயல், குருதியை உறிஞ்சிக் குடித்தல் ஆகிய குற்றச் சாட்டுகள் ஏற்கெனவே இருக்கின்றன. ஆனால் எல்லா குற்றங்களையும் இந்த ஜமீன்தாரின்மீது கட்டிவைத்து விட முடியாது. ஸார்போ போன்ற சாதாரண மனிதர்களுக்கும் இதில் பெரிய பங்கிருக்கிறது. மிகப்பெரிய சோம்பேறிகளான இவரைப் போன்றவர்கள் விவசாயம் செய்வதற்குத் தயாராக இல்லை. பொன் விளையக்கூடிய வயல்களே கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் இருக்கின்றன. அவற்றின் உரிமையாளர் கள் பழங்குடி மக்கள். ஸார்போவும் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களும் வயலில் விவசாயம் செய்வதற்கு பதிலாக சிக்கந்தர் மஹாஜனைப் போன்ற வர்த்தகர்களை அணுகுவார்கள். அந்த ஜமீன்தாரிடம் ஒவ்வொன் றையும் கூறி தங்களின் வழிக்குக் கொண்டுவந்து, தங்களுடைய நிலத்தைப் பணயமாக வைப்பார்கள். சிறிய தொகைக்குதான் பணயம் வைப்பார்கள்.
"ஓ மஹாஜன்... இன்னிக்கு நீங்க வீட்ல இருப்பீங்களா?''
"ம்... நான் வீட்ல இருப்பேன்.''
"மஹாஜன்... நான் ஒரு பெரிய கவலையில இருக்கேன்.''
"சொல்லுங்க.. உங்களோட கவலை என்ன?''
"மஹாஜன்... இதோ... துர்க்கா பூஜை நெருங்கி வந்துடுச்சு. பிள்ளைகளுக்கு ஆடைகளை வாங்கிக்கொடுக்கணும். எனக்கு பெரிய அளவுல பணத்துக்குப் பிரச்சினை இருக்கு.''
"அய்யோ... இப்போ என்கிட்ட பணமெதுவும் இல்லியே! நீங்க நாளைக்கு வாங்க.''
"அப்படி சொல்லாதீங்க முதலாளி. எனக்கு இப்பவே பணம் வேணும். ரொம்ப அவசரமான விஷயம்.''
"ஸார்போ... நான் பணயத்துக்கு நிலத்தை வாங்கறது இல்லைங்கற விஷயம் உங்களுக்குத் தெரியும்ல?''
"அப்படின்னா பிறகு... முதலாளி... எந்த அடிப்படையில நீங்க நிலத்

"அப்படின்னா பிறகு... முதலாளி... எந்த அடிப்படையில நீங்க நிலத்தை வாங்கறீங்க?''
"உங்களுக்கு சொந்தமான நிலத்தைப் பிரிச்சு விற்பனை செய்யறதா இருந்தா, அதை வாங்கறதுக்கு நான் தயாரா இருக்கேன். இந்தவகையில நான் வாங்கிய கொஞ்சம் நிலம் இப்போ என் கையில இருக்கு.''
"முதலாளி... கஷ்டமான விஷயம்! நிலத்தை விக்கிறதுக்கு எனக்கு மனசு வரமாட்டேங்குது.''
"பணயத்துக்கு நிலத்தை வாங்கியதால நான் மொத்தத்தில முழுசா இழந்திருக்கேன். அதுக்காக நான் ரொம்பவும் கவலைப்பட்டிருக்கேன். உங்களோட நிலத்தை இந்த அடிப்படையில வாங்க நான் தயாரா இல்லை. மாணிக் தேராங்க்கிட்ட கேட்டுப் பாருங்க. ஒருவேளை உதவி கிடைக்கலாம்.''
"அய்யோ... அது என்னால முடியாத விஷயம். மாணிக் தேராங்க் ஏதாவது சண்டை போடுவாரு.''
"ஸார்போ... உங்கக்கிட்ட யாராவது நல்ல விஷயத்தை சொல்லுவாங்களா?''
"முதலாளி... "எந்த சமயத்திலும் நிலத்தை விற்கவே கூடாது'ன்னு மாணிக் தேராங்க் என்கிட்ட சொல்லுவாரு. இனி நான் எப்படி வாழ்வேன்? முதலாளி. ஒரு பெரிய தொகையை உங்களுக்கும் நான் தரவேண்டியதிருக்கே! நிலத்தை விக்காம கடனை அடைக்கறதுக்கு வேற எந்தவொரு வழியுமில்ல. இப்போ பிள்ளைங்களுக்கு ஆடைங்க வாங்கறதுக்கும் வேற வழியில்ல.'' ஸார்போ தாழ்ந்த குரலில் சிக்கந்தர் மஹாஜனிடம் கூறினார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்ததைப்போல அவருடைய தோளில் காயத்தின் அடையாளம் இருந்தது.
"மஹாஜன்... முதலாளி... தயவுசெஞ்சு நான்
சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்கணும்.''
"சரி... என்னன்னு சொல்லுங்க.''
"நான் நல்லா சிந்திச்சு ஒரு தீர்மானம் எடுத்திருக்கேன். எட்டு ஏக்கர் நிலத்தை விக்கிறதுக்கு நான் இப்போ தயாரா இருக்கேன். முதலாளி... இப்பவே நீங்க எனக்கு பணம் தரணும்.''
"ஸார்போ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சொன்னேன்... இப்போ என்கிட்ட பணமெதுவும் இல்லைன்னு. நான் சொன்னதை நீங்க ஏன் புரிஞ்சிக்காமலே இருக்கீங்க?''
"முதலாளி... நீங்க சொன்னதை நான் கேட்டேன். இருந்தாலும் சொல்றேன்...''
"நிலத்தை வாங்குற விஷயத்தைப் பார்ப்போம். கடன் தர்றது கஷ்டம்...''
"முதலாளி... நீங்க சொல்றபடி நடக்கறேன். எங்களோட ஊர்லயே ரொம்ப நல்ல ஜமீன்தார் நீங்கதான். என் அப்பாவைவிட நல்ல மனிதர்...''
சிறிது நேரம் கடந்தபிறகு சிக்கந்தர் மஹாஜன் உள்ளே சென்று ஐயாயிரம் ரூபாய் இருக்கக்கூடிய ஒரு பணக்கட்டுடன் வெளியே வந்தார். அதை ஸார்போ எங்ஜாயின் கையில் கொடுத்தார்.
பணத்தை வாங்கிக்கொண்டு வரும்போது வழியில் சில நண்பர்களை ஸார்போ பார்த்தார். அவர்கள் நிழல் தரும் ஒரு மரத்திற்குக் கீழே அமர்ந்திருந்தார்கள். ராம்கியும் லக்பக் இங்டியும் அங்கிருந்தார்கள். திருமதி ராக்சிக்கு சொந்தமான ஒரு சிறிய கடை அருகிலேயே இருந்தது. கடையின் சொந்தக் காரி வந்துசேர்ந்தவுடன் எல்லாரும் நாட்டு சாராயத்தை வாங்கிக் குடித்தார்கள். ஸார்தே ராங்பி சிறிதும் எதிர்பாராமல் ஸார்போ எங்ஜாயைப் பார்த்தார்.
"பெரியவரே... நீங்க எங்கிருந்து வர்றீங்க?''
"விசேஷமா எதுவுமில்ல. சிக்கந்தர் மஹாஜன்னோட
வீட்டுக்குப் போகவேண்டிய ஒரு வேலை
இருந்தது.''
"எதுக்கு? பணம் கிடைச்சிருக்கும். இல்லியா?''
"இல்ல நண்பரே... பணமெதுவும் கிடைக்கல. ஒரு சிறிய தொகை கிடைச்சது. மஹாஜன்கிட்ட சண்டைபோட என்னால முடியாதே! அதுக்கான உரிமையில்லியே!''
"பெரியவரே... சொல்லுங்க. எவ்வளவு ரூபா கிடைச்சது?''
"வெறும் ஐயாயிரம் ரூபா. முதலாளி தன்கிட்ட பணமெதுவுமே இல்லைன்னு முதல்ல சொன்னாரு.
எது எப்படியிருந்தாலும் நாளைக்கு பார்க்க சொல்லியிருக்காரு. நான் இருபதாயிரம் ரூபா கேட்டேன்.''
"எப்படிப் பார்த்தாலும்... ஐயாயிரம் ரூபாய்ங்றது பெரிய ஒரு தொகைதானே! தன் கையில பணமெதுவுமே இல்லைன்னு முதலாளி என்கிட்ட சொன்னாரு.''
"என்கிட்ட நாளைக்கு வீட்டுக்கு வரச் சொன்னாரு.
இந்த வீரர் பலர்கிட்டயிருந்து ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்து பலிகடாவா ஆக்கறார்.''
அவர் பலவற்றையும் சிந்தித்தாலும், வாயை அதிகமாகத் திறக்கவில்லை.
"சரி... இருக்கட்டும்... நீங்க இங்க என்ன செய்றீங்க?'' ஸார்போ எங்ஜாயி சிரித்துக்கொண்டே கேட்டார்.
"நான் கடைவீதிக்குப் போய்க்கிட்டிருந்தேன். போற வழியில மருமகன் லக்பக்கைப் பார்த்தேன்." ஸார்தே ராங்பி பதில் கூறினார்.
முன்னாலிருந்த குவளையில் சாராயத்தை லக்பக் இங்டி சிறிது குடித்துவிட்டு, ஸார்தே ராங்பியை நோக்கி நீட்டினார். "இது புதிய நண்பருக்கானது'' என்று குறிப்பிட்டுக் கூறினார்.
"வாங்க பெரியவரே... பக்கத்துல வந்து உட்காருங்க. இதோ... இந்த புட்டியில இருக்கறது உங்களுக்குதான். நல்ல அருமையான சரக்கு!''
"எனக்கு இதுவே அதிகம். குடிக்கறப்போ ஒரு ஆள் கூட இருக்கணும். அவ்வளவுதான். சரி... நடக்கட்டும்...''
"முதலாளியம்மா. இன்னொரு புட்டி தாங்க. எப்போதாவது நேர்ல சந்திக்கக்கூடிய பெரியவர்ல வந்திருக்காரு! இதை நாம சிறப்பா கொண்டாடுவோம்!''
வயதான கடையின் சொந்தக்காரி அங்கு வைக்கப்பட்டிருந்த கூடையிலிருந்து ஒரு புதிய புட்டியை எடுத்து லக்பக்கை நோக்கி நீட்டினாள். புன்னகைத்தவாறு கிழவி என்னவோ கூறினாள்.
"இதோ... வாங்கிக்கோங்க. ஒரு விஷயம். இங்க சல்லிக் காசு கடன் சொல்லக்கூடாது.''
"ஹேய்... முதலாளியம்மா. கவலைப்படவேணாம். இதனோட விலை பத்து ரூபாய்தானே?'' லக்பக் பாக்கெட்டிலிருந்து ஒரு புதிய நோட்டை வெளியே எடுத்து உடனடியாக கடையின் சொந்தக்காரியிடம் கொடுத்தார்.
அதைப் பார்த்ததும் ஸார்போ எங்ஜாயி உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அவர் தன் பாக்கெட்டைப் பார்த்தார். நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டின் வாசனை நாசியை மோதியது. போதை ஏறிய அவர் இன்னொரு புட்டிக்கு ஆர்டர் கொடுத்தார்.
"அருமை! எனக்கும் ஒரு புதிய புட்டியை எடுத்துக்கொடுங்க. இந்த பெரியவரை உபசரிக்கக்கூடிய வாய்ப்பு எப்போதாவதுதானே கிடைக்குது! அதிகமா மதிக்கப்படவேண்டிய மனிதரில்லியா முன்னால உட்கார்ந்திருக்காரு! தாமதிக்கக்கூடாது...''
"மொத்தத்துல ஒரேயொரு புட்டிதான் எஞ்சியிருக்கு...'' கடையின் சொந்தக்காரி கூறினாள்.
சிறிது நேரம் கடந்ததும் ஸார்போ எங்ஜாயியின் மகன் தன்சிங் அங்கு வந்தான். கடையில் நண்பர் களுடன் சேர்ந்து தந்தை அமர்ந்து சாராயம் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் நகரமான ஸிஃபுவிலிருந்து வருகிறான். ஒரு மாதத்திற்கான ரேஷனை வாங்குவதற்காகப் போகும்போதுதான் இந்த காட்சியைப் பார்த்தான். தந்தையின் நடவடிக்கையைப் பார்த்தபோது, மகன் தன்சிங்கிற்கு மானமே போய்விட்டதைப்போல தோன்றியது.
"அப்பா... இங்க உட்கார்ந்து என்ன செய்றீங்க?'' ஆச்சரியத்துடன் மகன் இருட்டைப் பார்த்துக் கேட்டான்.
"சரிதான். இங்க வந்து என்னை "அப்பா'ன்னு கூப்பிடறதுக்கு நீ யாரு?''
"நான் தன்சிங். அப்பா... உங்களோட மகன். அப்பா... நீங்க டிஃபுவுக்கு வந்துசேரலையே! அதனால ரேஷன் வாங்கறதுக்காக நான் இங்க வர வேண்டிதாயிருச்சு...''
"உனக்கு இங்க ஏன்ன வேலை? உனக்கு ஏதாவது வேணும்னா... வீட்லயிருந்து எடுத்தா போதாதா?''
"நீங்க இங்க உட்கார்ந்து குடிச்சு கூத்தாடிக்கிட்டு இருக்கீங்க. அப்படி இருக்கறப்போ நான் வீட்டுக்குப் போய் என்ன பிரயோஜனம்?''
"உனக்கு பணத்திற்கான தேவை ஏதாவது இருக்கா? நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? அப்பாக்கிட்ட சல்லிக்காசு இல்லைன்னா? எனக்கு ஒரு கணக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? இதோ பணம்...
உனக்கு வேண்டியதை இதுலயிருந்து எடுத்துக்கோ.'' இவ்வளவையும் கூறிவிட்டு, நூறு ரூபாய் கொண்ட நோட்டுக் கட்டை ஸார்போ பாக்கெட்டிலிருந்து எடுத்து கார்கந்தி ஆற்றில் எறிந்தார். இரவு வேளையில் நோட்டுக்கட்டை எங்கு வீசி எறிகிறோமென அவருக்குத் தெரியவில்லை. நாட்டு சாராயத்தை மூக்குவரை குடித்த ஒரு ஆளுக்கு அது எப்படித் தெரியும்?
நள்ளிரவு வேளை வந்தபோது, ஸார்போ எங்ஜாயிக்கு சுய உணர்வில்லாமல் போனது. நான்கு பக்கங்களிலும் பார்த்தபோது எதுவுமே தெரியவில்லை. இந்த கடுமையான குளிரில் தான் எங்கு கிடக்கிறோம் என்பதும் தெரியவில்லை. கிராமம் மூடுபனியால் போர்த்தப்பட்டுக் கிடந்தது. அதனால் சுற்றிலுமுள்ள எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. அந்த இரவு முழுவதும் டாக்மோயா கடைவீதியின் ஆளரவமற்ற தெருவில் இருக்கவேண்டிய நிலை அவருக்கு உண்டானது.
மறுநாள் ராங்ஃபார் கிராமத்தின் மக்கள் கார்கந்தி ஆற்றின் கரையை அடைந்தபோது ஒரு காட்சியைப் பார்த்தார்கள். ஆற்றின் நீரில் சில நூறு ரூபாய் நோட்டுகள் மிதந்து போய்க்கொண்டிருந்தன! கார்பி ஓக் க்ரே ப்ரூ திருவிழா நாள்! மீன்களைப் பிடிப்பதற் காக கிராமத்து ஆட்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றுக் குள் இறங்கினார்கள். மீன்களைப் பிடிப்பதற்கு பதிலாக அவர்கள் அன்று புதிய நூறு ரூபாய் நோட்டுகளைப் பிடித்தார்கள்.