உலகத் தமிழர்களின் உள்ளங்களைத் தொடர்ந்து கொள்ளை கொண்டுவரும் பட்டிமன்ற நாவலரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு, நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரோடு வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம், பாம்பே ஜெயஸ்ரீ உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியிருப்பது மகிழத்தக்கது. இவர்களில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சிக்குரியது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து நிற்பவர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், நடுவண் அரசால், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இவ்வாண்டுக்கான விருதுப் பட்டியல் 25-ந் தேதி இரவு வெளியிடப்பட்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா, 1936 பிப்ரவரி 22 ஆம

சாலமன் பாப்பையா, 1936 பிப்ரவரி 22 ஆம் தேதி பிறந்தவர். மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், இனிய தமிழில் நகைச்சுவை பொங்க உரையாற்றுவதில் வல்லமை வாய்ந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகநாடுகள் பலவற்றுக்கும் சென்று, தமிழ்விருந்து படைத்து வருகிறார் பாப்பையா. தொலைக்காட்சி வழியாக இவரது தமிழும் சிந்தனையும் நுழையாத தமிழர்களின் இல்லங்கள் இருக்க முடியாது. அவருக்கு பத்ம விருது கிடைத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழுலகையும் மகிழ்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கிறது. பாப்பையா அவர்களுக்கு செயபாய் என்ற திருமதியும், ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி, ஊடக முற்றுகைக்கு நடுவில் இருந்த அவரைத் தொடர்புகொண்டு, நக்கீரன் குழுமத்தின் சார்பிலும், இனிய உதயத்தின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டோம்.
அப்போது...
* எவர் வழியாக இந்தத் தகவல் உங்களுக்குக் கிடைத்தது?
என்னை டெல்லியில் இருந்து நேற்று ( 25-ந் தேதி ) மதியம் 12 மணிக்குத் தொடர்பு கொண்டு பேசினார்கள். உங்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்க இருக்கிறோம் என்று சொன்னார்கள். பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். உள்ளப்பூர்வமாக அவர்களுக்கு என் சம்மதத்தைத் தெரிவித்தேன். பட்டிமன்றத் தமிழை சிறப்பிக்கும் எண்ணத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்.
பத்ம விருது கிடைப்பதில் பெரும்மகிழ்ச்சி. எனினும், எனக்கு முன்னே பட்டிமன்றத் தைக் கையில் எடுத்த பெருமக்கள் பலபேர் இருக் கிறார்கள், உரையாளர்களும் நாவலர்களும் எனக்கு முன்னே இந்தப் பாட்டையில் நடந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கும் இப்படியான விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
என் வழியாகவாவது பட்டிமன்றத் துறைக்கு இப்படியொரு பெரும் விருது சேர்கிறதே என்று பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
* இந்த விருது அறிவிக்கப்பட்ட நேரத்தில் யாரை நினைத்துக்கொண்டீர்கள்?
நெகிழ்ச்சியோடு பலரையும் மனதில் நினைத்துக் கொண்டேன். பட்டிமன்றம் என்பது சங்க இலக்கிய காலத்திலேயே இருந்திருக்கிறது. அது பட்டி மண்டபம் என்ற பெயரால் வழங்கப்பட்டது. குறிப்பாக கம்பராமாயணத்தில் ’பன்னரும் கலைதெரி பட்டி மண்டபம்’ என்ற குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. அதேபோல் மணிமேகலைக் காப்பியத்தில் ‘பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்’ என்று பாடல் வரி வருகிறது. இப்படி இலக்கியங்களில் மட்டுமே இடம் பெற்று வந்த பட்டி மன்றத்தை, காரைக்குடி கம்பன் விழாக்களில் அரங்கேற்றி அழகு பார்த்தவர் ’கம்பன் அடிப்பொடி’ ஐயா சா.கணேசன் அவர்கள் ஆவார். அவரை முதலிலில் நினைத்து வணக்கம் தெரிவித்துக்கொண்டேன். என் இரண்டாம் வணக்கம், பட்டிமன்றத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கானது. இப்பெருமக்களை மனதால் எண்ணி வணங்கினேன்.
அதேபோல், என்னோடு பட்டிமன்றங்களில் பயணித்த என் சக உரையாளர்களுக்கும் இந்த விருதில் பங்குண்டு. மேலும் எனக்கு பேராதரவு தந்த பொதுமக்கள், நக்கீரன் உள்ளிட்ட ஊடகத்துறையினர், அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் என அனைவரும் என் வளர்சிக்கு காரணமாக இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
* திருக்குறளுக்கு எளிய வகையில் உரை எழுதியிருக்கிறீர்கள். புறநானூற்றை புதிய வரிசையில் அமைத்து விளக்கவுரை கொடுத்திருக்கிறீர்கள்... அடுத்து என்ன படைப்பைத் தமிழுலகுக்குக் கொடுக்க இருக்கிறீர்கள்?
புறநானூற்றை வரிசைப் படுத்தி உரையெழுதியது போல், அடுத்து அகநானூறையும் தர இருக்கிறேன். அதைத்தான் இப்போது நான் எழுதி வருகிறேன்.
* உங்கள் அடுத்த படைப்புத் திட்டம்?
அகநானூற்றுக்குப் பின்னரும் ஒரு படைப்பைப் படைக்கும் எண்ணம் என் மனதில் இருக்கிறது. அது காலம் வாய்க்கும் போது நடக்கும். பத்ம விருது பெற்ற எண்னை மனப் பூர்வமாக வாழ்த்திக் கொண்டிருக்கும் தமிழ்ப்பெருங்குடி மக்கள் அத்தனை பேருக்கும் என் அன்பான நன்றி. எனது இந்த பத்ம விருதை தமிழன்னையின் திருவடியில் சமர்பிக்கிறேன்.
-நாடன்