அவள் அந்த மலையின் உச்சியை அடைந்தபோது இரவாகிவிட்டிருந்தது.
மலையின் சரிவில் தலை மழிக்கப்பட்டு, பல வாசனைப் பொருட்களை வைத்து வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த பக்தர்களின் கூட்டம் அவளிடம் கூறியது:
"கோவில் வாசல் மூடப்பட்டுவிட்டது. இனி இன்று போய் பிரயோஜனமில்லை.'
ஆனால், அவள் மிகவும் தூரத்திலிருக்கும் ஒரு நகரத்திலிருந்து வந்திருந்தாள். கோவிலையும் கடவுளையும் பார்க்காமல் திரும்பிச் செல்வதற்கு மனம் வரவில்லை.
வழியில் சில இளைஞர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை நடத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் சென்றது...
இறுதியில்... கோவிலின் வாசலுக்கு அவள் தன்னந் தனியாக வந்துசேர்ந்தாள். கோவிலின் விளக்குகள் பெரும்பாலும் பற்றி எரிந்துமுடிந்திருந்தன.
""கதவைத் திறங்கள்...'' அவள் கூறினாள்: ""நான் நீண்ட தூரம் பயணித்து உங்களைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்திருக்கிறேன். உங்களுக்குத் தருவதற்காகக் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் வழியில் ஒவ்வொருவராக எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனால், இந்த சரீரம் எஞ்சியிருக்கிறது. எவ்வளவு பேர் ஜலக்கிரீடைகள் செய்தாலும், எவ்வளவு பேர் மூழ்கிக் குளித்தாலும், எத்தனைப் படகுகள்
அவள் அந்த மலையின் உச்சியை அடைந்தபோது இரவாகிவிட்டிருந்தது.
மலையின் சரிவில் தலை மழிக்கப்பட்டு, பல வாசனைப் பொருட்களை வைத்து வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த பக்தர்களின் கூட்டம் அவளிடம் கூறியது:
"கோவில் வாசல் மூடப்பட்டுவிட்டது. இனி இன்று போய் பிரயோஜனமில்லை.'
ஆனால், அவள் மிகவும் தூரத்திலிருக்கும் ஒரு நகரத்திலிருந்து வந்திருந்தாள். கோவிலையும் கடவுளையும் பார்க்காமல் திரும்பிச் செல்வதற்கு மனம் வரவில்லை.
வழியில் சில இளைஞர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை நடத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் சென்றது...
இறுதியில்... கோவிலின் வாசலுக்கு அவள் தன்னந் தனியாக வந்துசேர்ந்தாள். கோவிலின் விளக்குகள் பெரும்பாலும் பற்றி எரிந்துமுடிந்திருந்தன.
""கதவைத் திறங்கள்...'' அவள் கூறினாள்: ""நான் நீண்ட தூரம் பயணித்து உங்களைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்திருக்கிறேன். உங்களுக்குத் தருவதற்காகக் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் வழியில் ஒவ்வொருவராக எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனால், இந்த சரீரம் எஞ்சியிருக்கிறது. எவ்வளவு பேர் ஜலக்கிரீடைகள் செய்தாலும், எவ்வளவு பேர் மூழ்கிக் குளித்தாலும், எத்தனைப் படகுகள் ஓடி முடித்தாலும் சோர்வடையாத நதியைப்போல... முடிவே இல்லாமல்போன இந்தப் பெண் உடல்... இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பழகிப்போன இந்த சரீரத்தைத் தவிர, உங்களுக்குக் காட்டுவதற்கு என்னிடம் எதுவுமே இல்லையே!''
அந்தக் கதவு திறந்தபோது அவள் நடுங்கிவிட்டாள். காரணம்- பல இரவுகளில் கனவு கண்டிருந்தாலும், அன்று தான் முதன்முறையாக அவள் கடவுளைப் பார்க்கிறாள்.
அவருக்கு வயதாகிவிட்டதென்பதை அவள் உணர்ந்தாள். கண்கள் சிவந்திருந்தன. சரீரம் மெலிந்துவிட்டிருந்தது. எனினும், அவருடைய கூச்சம் கலந்த அந்த புன்சிரிப்புக்கு முன்னால் அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அது எந்த அளவுக்கு வேகமாக நடந்த ஒரு அடிபணிதல்!
""பத்மாவதி... நீ எதற்காக வந்தாய்?'' அவர் கேட்டார்: ""உனக்கு இதுவரை நான் தேவைப்படவில்லையே?''
""உண்மைதான்...'' அவள் கூறினாள்: ""இதுவரை உங்களைப் பார்க்கவேண்டிய தேவை எனக்கு உண்டாகவில்லை.
ஆனால், சமீபகாலமாக மலையின் உச்சியிலிருக்கும் இந்த கோவிலையும், அதில் குடிகொண்டிருக்கும் கடவுளான உங்களையும் நான் பலவேளைகளில் கனவுகாண ஆரம்பித்திருக்கிறேன். விழிப்புடன் இருக்கும்போது, என்னிடமிருந்து காதலர்கள் அகல்வதே இல்லை. என் இதயத்தின் கவசங்களை மாற்றுவதற்கு எந்தவொரு ஆணாலும் இயலாதபோது, நான் பாதுகாப்பு உள்ளவளாகவும், சுதந்திரமானவளாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால், உறக்கத்தில் தனியாகப் படுத்திருக்கும்போது, நீங்கள் மட்டும் எனக்கருகில் வருகிறீர்கள் என்பதும்... உங்களுடைய கள்ளங்கபடமற்ற புன்சிரிப்பையும், மிகவும் புகழ்பெற்ற ஆண்மைத் தனத் தையும் மட்டும் நான் பார்க்கிறேன் என்பதும்... இதற்கெல்லாம் அர்த்தம்- உங்களுக்கு வேண்டாமென்றா லும், என் மனம் உங்களுடைய சாம்ராஜ்யமாக மட்டுமே ஆகிவிட்டிருக்கிறது என்பதாக இருக்க வேண்டுமே!''
அவர் அவளைத் தழுவியபோது, அவள் கூறினாள்:
""அன்பே... திருமணத்திற்கான அர்த்தம் இன்றுதான் எனக்கு விளங்கியது. என் மொத்தமும் கரைகிறது. இதயத்திற்குள் இருக்கும் கடுமைத்தன்மைகூட கரைகிறது.
நான் கரைந்து... கரைந்து... இல்லாமல் போய்க்கொண்டி ருக்கிறேன். உங்களைத் தவிர, இந்த நிமிடத்தில் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை!''
""சிறிது நேரத்திற்கு மட்டுமல்ல... நான் என்றென்றைக் கும் உனக்குச் சொந்தமாகிறேன்.'' அவர் கூறினார். ""உனக்குச் சொந்தமானவனான காரணத்தால், நான் மேலும் எனக் குச் சொந்தமானவனாக ஆகிறேன். காரணம்- நீயும் உன் மொத்தமும் எனக்குச் சொந்தமானதாக ஆகிவிட்டதே!''
அவள் அந்த கோவிலைவிட்டு வெளியேறியபோது, ஆகாயம் வெளுத்திருந்தது. தூக்கக் கலக்கமுள்ள முகத்துடனும், கிழிந்துபோன ஆடைகள் வெளிப்படுத்திய உயர்ந்த மார்புடனும், கால் பாதங்களுடனும் வழியில் அலட்சியமாக நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் பார்க்காமலில்லை. ஆனால், அவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தவில்லை.
"தாயே... எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்!' என்று கூறுவதற்கு மட்டுமே அப்போது அவர்களுக்குத் தோன்றியது
______________
மொழிபெயர்ப்பாளரின் உரை!
வணக்கம்.
"கொரோனா' உண்டாக்கிய எதிர்பாராத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாம் சந்திக்கிறோம். அதற்காக நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன். இனி நம் பயணம் வெற்றிகரமாகத் தொடரும்.
இந்த மாத "இனிய உதய'த்திற்கு மூன்று முத்தான சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். மூன்றும் மாறுபட்ட கதைக்கருக்களையும், களங்களையும் கொண்டவை.
"நறுமணம் நிறைந்த நாள்' கதையை சாகித்ய அகாடெமி விருது பெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான உறூப் என்ற பி.ஸி. குட்டிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ருக்மிணி, மாதவி என்ற இரு பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆழமான கதை. ருக்மிணியின் கதாபாத்திரம் அருமை! அவளுக் காக நாம் கவலைப்படுவோம்... கண்ணீர் விடுவோம். அவளைப் போன்ற பெண்களை நாம் நம் வாழ்க்கைப் பாதையில் அவ்வப்போது சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
"குழந்தைகள் தினம்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்ற மலையாள நட்சத்திர எழுத்தாளரான டி. பத்மநாபன். குழந்தைகள் தின விழாவில் பங்கு பெறுவதற்காக பேருந்தில் பயணிக்கும் ஒரு மனித நேயரின் கதை. இந்த கதையை வாசித்து முடித்த பிறகும், அம்மாமனிதர் நம் மனதில் என்றும் வாழ்வார்.
"பத்மாவதி என்ற விலைமாது' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மலையாள பெண் எழுத்தாளர்களின் திலகமுமான மாதவிக்குட்டி. மலையின் உச்சியிலிருக்கும் கோவிலுக்கு ஒரு மாலை மயங்கிய வேளையின் சென்று, அங்கு கடவுளைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பிவரும் பத்மாவதி என்ற விலைமாதுவின் கதை. இந்த கதையை வாசிக்கும் போது, மாதவிக்குட்டி எந்த அளவுக்கு ஆழமாகவும், நுணுக்கமாகவும் சிந்தித்திருக்கிறார் என்ற எண்ணம் தான் எனக்கு உண்டானது.
இந்த மூன்று கதைகளும் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற திடமான நம்பிக்கை எனக் கிருக்கிறது. இவற்றை வாசிக்கும் புதிய உலகத்திற்குள் உடனடியாக நுழையுங்கள்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.
அன்புடன்,
சுரா