காதலின் விலை உண்ணிகிருஷ்ணன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/price-love-nikrishnan-tamil-sura

சியாமகிருஷ்ணனைப் பொருத்தவரை சதி உடனடியாக அப்படியே மறந்துவிடக்கூடிய கதாபாத்திரமல்ல.

கணவர் இறந்த கவலையில் சதி வெந்து கொதித்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு நாற்பது வயதுகூட ஆகவில்லை.

திருமணம் முடிந்து இவ்வளவு காலமாகியும் குழந்தைகள் எதுவும் பிறக்க வில்லை.

சியாமகிருஷ்ணனின் நண்பரும் அவனுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவராகவும் இருந்தார் ரவீந்திரன் நாயர்.

துறவறத்தை மேற்கொண்ட ஒரு இளைஞனாக இருந்தான் சியாமகிருஷ்ணன். வேண்டுமென்றால் சதியைவிட வயது குறைந்தவன் என்று கூறலாம். ஒன்றோ இரண்டோ வயது வித்தியாசம் இருக்கும். அது ஒரு பெரிய குற்றமல்ல. பெரிய பொருத்தக் கேடும் இல்லை. எனினும், யாருடைய எல்லைக்குள்ளும் வாழ விரும்பாத சியாமகிருஷ்ணன் தனி மனிதனாக நடந்து திரிந்தான். காதல்...

உண்மையிலேயே அப்படிப் பட்ட ஒன்று இருக்கிறதா? இருக்கும்பட்சம்... அதன் உண்மை விலையை அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? சதை உறவுகொண்ட காதலுக்கு நிலைநிற்பில்லை.

சரீரங்களின் சுகங்கள் சிதையிலிருக்கும் சாதாரண பூக்களைப் போன்றவை. அதை பெரிய ஒரு வார்த்தையாக சதி கணக்கிலேயே எடுக்கவில்லை. எந்தவொரு முட்டாளும் இந்தக் காலத்தில் கூறக்கூடிய அர்த்தமற்ற வார்த்தைகள்....

சியாமகிருஷ்ணன் சரியாக அந்த வருடங்களை நினைத்துப் பார்த்தான். எண்பது... எண்பத்தொன்று...

எண்பத்து இரண்டு வருடங்கள்... மூன்றே மூன்று வருடங்கள் ஒரே வீட்டில் ஒரே அறையில் வாழ்க்கை... சதியும் சியாமகிரு

சியாமகிருஷ்ணனைப் பொருத்தவரை சதி உடனடியாக அப்படியே மறந்துவிடக்கூடிய கதாபாத்திரமல்ல.

கணவர் இறந்த கவலையில் சதி வெந்து கொதித்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு நாற்பது வயதுகூட ஆகவில்லை.

திருமணம் முடிந்து இவ்வளவு காலமாகியும் குழந்தைகள் எதுவும் பிறக்க வில்லை.

சியாமகிருஷ்ணனின் நண்பரும் அவனுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவராகவும் இருந்தார் ரவீந்திரன் நாயர்.

துறவறத்தை மேற்கொண்ட ஒரு இளைஞனாக இருந்தான் சியாமகிருஷ்ணன். வேண்டுமென்றால் சதியைவிட வயது குறைந்தவன் என்று கூறலாம். ஒன்றோ இரண்டோ வயது வித்தியாசம் இருக்கும். அது ஒரு பெரிய குற்றமல்ல. பெரிய பொருத்தக் கேடும் இல்லை. எனினும், யாருடைய எல்லைக்குள்ளும் வாழ விரும்பாத சியாமகிருஷ்ணன் தனி மனிதனாக நடந்து திரிந்தான். காதல்...

உண்மையிலேயே அப்படிப் பட்ட ஒன்று இருக்கிறதா? இருக்கும்பட்சம்... அதன் உண்மை விலையை அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? சதை உறவுகொண்ட காதலுக்கு நிலைநிற்பில்லை.

சரீரங்களின் சுகங்கள் சிதையிலிருக்கும் சாதாரண பூக்களைப் போன்றவை. அதை பெரிய ஒரு வார்த்தையாக சதி கணக்கிலேயே எடுக்கவில்லை. எந்தவொரு முட்டாளும் இந்தக் காலத்தில் கூறக்கூடிய அர்த்தமற்ற வார்த்தைகள்....

சியாமகிருஷ்ணன் சரியாக அந்த வருடங்களை நினைத்துப் பார்த்தான். எண்பது... எண்பத்தொன்று...

எண்பத்து இரண்டு வருடங்கள்... மூன்றே மூன்று வருடங்கள் ஒரே வீட்டில் ஒரே அறையில் வாழ்க்கை... சதியும் சியாமகிருஷ்ணனும்... இருவரும் அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்று அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். ஆழமான ரகசியங்கள் மறைந்து நின்றிருக்கும் இரவுகள்.

பத்தினித் தன்மை நிறைந்த மனைவியாகத்தான் சியாமகிருஷ்ணனிடம் சதி நடந்துகொண்டாள். கணவரைப் பற்றிய இனிய நினைவுகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டே சியாமகிருஷ்ணனை மனப்பூர்வமாகக் காதலித்தாள்.

வரவேற்று உள்ளே இருக்கச் செய்ததற்கு, கணவரின் நல்ல ஒரு நண்பன் என்பது மட்டுமே காரணமல்ல.

எதிர்காலத்தில் தனக்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பான் என்ற நல்ல நம்பிக்கை அந்தச் செயலில் மறைந்திருந்தது.

அனைத்தையும் சியாமகிருஷ்ணனுக்காக சதி அர்ப்பணித்தாள் என்றுகூட கூறலாம்.

அனைத்தையும் அபகரித்து எடுத்துக்கொள்ளவும் செய்தான். இறுதியில் அவளுடைய முகத்தைப் பார்த்து கூறக்கூடாத சில மோசமான வார்த்தைகளைக் கூறிவிட்டு, வெளியேறிப் போகவும் செய்தான். எந்தக் காலத்திலும் நியாயப்படுத்த முடியாத வார்த்தைகள்....

ss

அந்த வார்த்தைகள் என்ன என்பது இப்போது சியாமகிருஷ்ணனின் நினைவில் இல்லை. ஆனால், உண்மையிலேயே தவறு சதியின் பக்கத்திலும்தான் நடந்தது. முதலில் தவறு செய்ய தூண்டியது சதிதான். தவறு செய்கிறோம் என்பதை திரும்பத் திரும்ப மனச்சாட்சியின்மீது ஆணையிட்டவாறு கூறினாலும்,சதி அந்த வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

எல்லா ஆண்களும் காரியம் முடிந்தபிறகு கூறக்கூடிய பல்லவியாக மட்டுமே அதை எடுத்துக்கொண்டாள். கூட்டுக்குள் கட்டிப் போடப்பட்டிருக்கும் விதவையாக சதி இருந்தாள். எனினும், அந்த கட்டின் இறுக்கத்திலிருந்து அவளை முடிந்தவரைக்கும் விடுவிக்க சியாமகிருஷ்ணன் முயற்சி செய்தான்.யாரையும் சார்ந்திருக்காமல் அனைத்து வகைகளிலும் முழுமையான சுதந்திரத்துடன் வாழ்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு சியாமகிருஷ்ணன் ஊக்குவித்தான். சதி அந்த வார்த்தைகளுக்கு அவளுடைய மோசமான அர்த்தம்கொண்ட விளக்கத்தைக் தந்தாள். அந்த இடத்தில் அவர்களுக்கிடையே பிரச்சினை உண்டானது.

வார்த்தைகள் வாய் கத்திகளாக மாறிய இறுதியான பயங்கர இரவு! அன்று சதியின் வீட்டில் வைத்து சியாமகிருஷ்ணனின் கதை முடிந்திருக்கவேண்டும். ஆனால், தெய்வத்தின் அருளால் சியாமகிருஷ்ணன் அங்கிருந்து தப்பித்தான்.

என்றென்றைக்குமாக விடைபெற்றுக்கொண்டு வெளியேறினான். இனி சியாமகிருஷ்ணனை பொருத்தவரை சதியைப் பார்க்கவேண்டும் என்ற பிரச்சினை தோன்றவில்லை.

பெண்ணுக்குத் தேவை உடலுறவு மட்டுமே. சதி விரும்புவது உடலுறவின்மூலம் கிடைக்கக்கூடிய சுகத்தை... அது அனுமதிக்கக் கூடியதல்ல. துறவு நிலையை விரும்பக்கூடிய ஒரு மனிதனைப் பொருத்தவரை அப்படிப்பட்ட செயல் கேவலமானது.

தவறானது. இந்த அபிப்ராயம்தான் சதியை கோபம்கொள்ளச் செய்தது.

"வாலற்றதெல்லாம் பொந்துக்குள் வந்தவுடன் வேதாந்தம் பேசுகிறது. இல்லையாடா... கேவலமானவனே...

உன்னை இன்றிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறேன். உன் முகத்தை இனி நான் மரணமடையும் வரை பார்க்க வேண்டியதில்லை."

"நான் இறந்துவிட்டேன் என்ற தகவல் தெரிந்த பிறகாவது என் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என்பதற்காக மலர் வளையத்துடன் வருவாய் அல்லவா?''

"நான் வரமாட்டேன். என் நாய் வரும்.''

அழகான தோற்றத்தைக் கொண்டவளும் இனியவளுமான சியாமகிருஷ்ணனின் காதலியான சதி வெடித்துச் சிதறினாள்.

"சதி.... அன்பிற்குரிய செல்லமே... நான் செல்கிறேன்.

போவதற்கு முன்னால் நான் உன் இரு கால் பாதங்களையும் இறுதியாக ஒருமுறை முத்தமிட விரும்புகிறேன். எனக்கு அதற்கான வாய்ப்பினைப் தருவாய் அல்லவா?'' சியாமகிருஷ்ணன் பரிதாபமான குரலில் தாழ்மையாக கெஞ்சி கேட்டுக்கொள்ள, சதி அதற்கு சம்மதித்தாள். அப்போது சதி பலமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். வியர்த்துக் காணப்பட்டாள்.

வெளிறிப் போய் இருந்தாள். சிந்தனை அதிகமாகி இறுகிவிட்டிருந்தாள்.

எவ்வளவோ நெருக்கமாக இருந்தவர்கள்... பிரியமுடியாத அளவிற்கு ஒருவரோடொருவர் ஒட்டிச் சேர்ந்து பழகியவர்கள்... எனினும், என்ன காரணத்தாலோ வார்த்தைகளில் வெளிப்பட்ட கூர்மையால் பிரியவேண்டிய நிலைக்கு வந்தவர்கள்...

வைராக்கியமும் பகையுணர்வும் பழி வாங்கும் எண்ணமும் காதலும் காமமும் அன்பும் சேர்ந்து இறுகப் பிணைந்து படர்ந்து பரவிய உறவு! அது இறுதியில் இறுக்கத்தில் முடிந்தது. அன்பு செலுத்துவதென்பது வேதனை நிறைந்த ஒரு நிலை... அன்பு வைத்திருந்தவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியும்போது உண்டாகக்கூடிய கஷ்டம் சதிக்கும் சியாமகிருஷ்ணனுக்கும் வெவ்வேறு அனுபவத்தைக் கொடுத்திருக்குமோ?

அனுபவம் கிடைத்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. திடீரென அப்படியொன்றும் இருவரும் மறந்துவிட முடியாது. இரண்டு பேருக்கும் அளவற்ற நம்பிக்கை இருந்தது. மதிப்பிருந்தது.

நம்பிக்கையும் மதிப்பும் அன்பு நிறைந்த உறவிற்குள் சென்று விழ வைத்தன. புனிதமான அன்பிற்கு மத்தியில் மனிதப் பிறவிகளிடம் சாதாரணமாக இருக்கக்கூடிய காதலின் துளிர்கள் அரும்பின.

பாலைவனத்தைப்போல வெப்பத்தில் சூழ்ந்து கிடக்கும் விதவையின் இளமை தவழும் பிரகாசமான சரீரத்தில், பூ மழைபெய்து நனைந் ததைப்போல குளிர்ந்த தளிர்கள் உயிர்த்து நின்றன. சதியை சியாமகிருஷ்ணன் ஒரு தேவதையைப்போல வழிபட்டான். அவள் அவனுக்கு வழிபடக்கூடிய தேவதை மட்டுமே. அந்த தேவதையைப் பூஜிப்பது...

உபசரிப்பது...

அப்படியெனில், அங்கு நெருக்கமென்ற பிரச்சினை உண்டாகாது. பார்த்தவாறு நின்றுகொண்டு அதைத் தொடாமல் ரசிப்பது... போதுமென தோன்றும்வரை கண்களால் மட்டும் பருகுவது... பருகும் போதுகூட வேதனைப்பட வைக்காமல் பார்க்கவேண்டுமென்ற ஆழமான விரதத்தில் வாழ்ந்த சியாமகிருஷ்ணனை வெறும் கையுடன் அனுப்பிவிட்டவள் சதி... அந்த சதியைப்பற்றி நினைத்து நேரத்தைப் போக்குவதைவிட, நான்கு வாழைகளை வைக்கக் கூடாதா?

நான்கு வாழைகளை வைப்பது! அது எந்த அளவிற்கு எளிதான விஷயம்! ஆனால், இங்கு செய்துகொண்டிருக்கும் வேலை... அதற்குப் பின்னாலிருக்கும் கடுமையான உழைப்பு யாருக்குத் தெரியும்? அதன் விலையை யாருக்கு மதிக்கத் தெரியும்?

uday010623
இதையும் படியுங்கள்
Subscribe