கவிஞர்கள் களமிறங்கவேண்டிய கட்டாய காலமிது! கவிஞர் சிற்பி சிறப்பு பேட்டி

/idhalgal/eniya-utayam/poetry-mandatory-period-time-specialist-interviewed-by-poet-sculptor

மிழ்க்கவியுலகின் தனித்துவம் ததும்பும் படைப்பாளி கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன். வானம்பாடிக் கவிஞராய்ப் புதுக்கவிதை வானில் சிறகடித்து சிற்பியின் கவிதைச் சுவடுகள் சிகரங்களில் பதிந்தன.

நிலவுப்பூ, சிரித்த முத்துக்கள், ஒளிப்பறவை, சர்ப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், மௌன மயக்கங்கள், சூரிய நிழல், இறகு, ஒரு கிராமத்து நதி என நீளும் அவரது கவிதைத் தொகுப்புகளில் ஒரு தனிக்குரலைக் கேட்கலாம். கவிக்கோ அப்துல் ரகுமானுடன் செம்புலப்பெயல் நீர்போல, அன்புடை நெஞ்சம் கலந்தவர். கவிக்கோவின் நேயர்களுக்கு ஆறுதலாக இருப்பவர்களில் சிற்பி, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா ஆகியோர் முக்கியமானவர்கள்.

மே 5, 2018 அன்று பொள்ளாச்சியில் நான் எழுதிய "சொற்களால் ஒரு சுதந்திரப் போர்' நூலுக்கு ஓர் அறிமுக விழாவை இலக்கிய அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிக்கோவை இழந்த சோகத்தை நெஞ்சிலும், அவரது நெஞ்சுக்கு நெருக்கமானவர்களைக் காணும் தாகத்தைக் கண்ணிலும் கொண்டிருந்த நான், "கவிஞர் சிற்பியைக் காண முடியுமா?' என்றேன்.

பெரியாரியச் செயல் வீரரும் பேரன்பருமான பொள்ளாச்சி பிரகாஷ் மற்றும் தோழர்கள் கவிஞர் சிற்பியைத் தொடர்புகொள்ள அன்று இரவுதான் சிங்கப்பூரிலிருந்து திரும்பியிருந்த சிற்பி, "அவர் வரவேண்டாம், நானே வந்து அவரை அழைத்துச்செல்கி றேன்' என்று கூறிய பதிலை என்னிடம் சொன்னார்கள். அந்தப் பெருமகனின் பேரன்பில் நெகிழ்ந்து போனேன்.

மகிழுந்தில் என்னை ஏற்றிக்கொண்டு, தான் பணியாற்றும் பொள்ளாச்சி மகாலிலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு அழைத்துச்சென்றார். சிந்தைக்கும் செவிக்குமான இலக்கிய விருந்தை அவர் பரிமாறிக் கொண்டே இருக்க, அலைபேசி வழியாக ஆரூர் தமிழ்நாடன், யுகபாரதி ஆகியோரும் உரையாடலிலில் கலந்தனர். "இனிய உதயம்' வாசகர்களுக்காக, அந்த இலக்கிய உரையாடலைப் பதிவுசெய்கிறோம்.

சிற்பி என்ற புனைபெயரைத் தாங்கள் தேர்வு செய்த காரணம்?

கவியரசு கண்ணதாசன் நடத்திய "தென்றல்' இலக்கிய இதழின் வெண்பா போட்டிக்கு பல்வேறு பெயர்களில் வெண்பா எழுதி அனுப்புவேன். பாலன், செந்தாமரை, சிற்பி என்று பலபெயர்கள். பாலசுப்பிரமணியன் என்ற பெயர் கவிதை எழுதுவற்கான பெயராக எனக்குத் தோன்றவில்லை. பாரதிதாசன், கண்ணதாசன், கம்பதாசன் என்று புனைபெயர்களிலேயே கவிஞர்கள் புகழ்பெற்றுத் திகழ்ந்தனர். சிற்பம் போன்றது கவிதை என்பதால், சிற்பி என்ற பெயரைத் தேர்வு செய்துகொண்டேன்.

வானம்பாடி கவிதை இயக்கத்தில் நீங்கள் வலம்வந்த நினைவுகள் குறித்து...

1969-ல் மானுடம் பாடும் வானம்பாடிகள் என நான், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரச

1969-ல் மானுடம் பாடும் வானம்பாடிகள் என நான், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு, அக்கினிபுத்திரன் என ஒரு பெரிய குழுவே இயங்கத் தொடங்கினோம், "வானம்பாடி' என்ற இலக்கிய இதழும் தொடங்கப்பட்டது.

மரபுக்கவிதைகளிலிலிருந்து மாற்றமான வடிவம் பெற்று புதுக்கவிதைகள் வெளிப்பட்டபோது, வெவ்வேறு விதங்களில் அவை அமைந்தன. "எழுத்து' இதழில் சி.சு. செல்லப்பா, தருமு சிவராம், நகுலன், பசுவய்யா ஆகியோர் ஒரு விதமான புதுக்கவிதை எழுதினார்.

"கசடதபற' இதழில் ஞானக்கூத்தன், சா. கந்தசாமி, கு. ராஜகோபாலன் உள்ளிட்டோர் வேறுவிதமாகக் கவிதைகளை எழுதினர். வானம்பாடி கவிஞர்களின் படைப்புகள் அவற்றிலிருந்து உருவத்தாலும் உள்ளடக் கத்தாலும் மாற்றம் பெற்றுத் திகழ்ந்தன. மானுடமே வானம்பாடிகளின் கருப்பொருளாக இருந்தது.

மானுடம் பாடிய வானம்பாடிகள் மகாகவி களாகக் கொண்டாடப்பட்டார்களா?

வானம்பாடி கவிஞர்களுக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு இருந்தது. அதேநேரம் மகாகவி பட்டம் குறித்த ஒரு நினைவைப் பகிர்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

ஒருமுறை கன்னடப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கவிதைப் பட்டறை ஒன்றிற்காக முன்னோடித் தமிழ்க் கவிஞர்களை அழைத்திருந்தனர். நான், இன்குலாப், ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டோம்.

அங்கே ராமச்சந்திர சர்மா என்ற கவிஞர், "கன்னடத்தில் மகாகவிகள் உண்டு. குவெம்பு போன்றோர் மகாகவிகளாகப் போற்றப்படுகின்றனர். தமிழில் யாரெல்லாம் மகாகவிகள்' என்றார். அதற்குப் பதிலளித்த இன்குலாப், "எங்களுக்கு மகாகவி என்ற பட்டத்தின் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் மக்களுக்காக இயங்குபவர்கள்' என்றார்.

உங்கள் கல்லூரிக் கால நினைவுகள்...?

புகழ்பெற்றுள்ள திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முதல் தலைமுறை மாணவர்களில் நானும் ஒருவன். அக் கல்லூரி தொடங்கப்பட்ட 1951-ஆம் ஆண்டில் அதில் சேர்ந்தேன். புறவசதிகள் குறைவாக இருந்தாலும் முதல் தரமான முதல்வரும் ஆழமான அறிவாற்றல் கொண்ட ஆசிரியர்களும் அமைந்தது நல்வாய்ப்பாக இருந்தது.

இன்னும் நினைவில் நிற்கும் அன்றைய பேராசிரியர்கள் யாவர்?

வட நாட்டிலிலிருந்து வந்திருந்தாலும் கல்வியாற்றலால் எமது கருத்தை ஈர்த்த முகம்மது சயீத், ஆங்கிலப் பேராசிரியர் ஈ.டபிள்யூ.பி. தாமஸ், பாடத்தில் உள்ள நாடகங்களை சிறப்பாக நடத்திய சி.எஸ். கமலபதி, இயற்பியல் ஆசிரியர் எஸ்.என். தேவராசு, வேதியியல் ஆசிரியர் ராஜாராம், விலங்கியல் ஆசிரியர் ஹரிராவ், தர்க்கவியல் ஆசிரியர் எம்.எஸ். ஷர்மா, நேஷனல் கல்லூரியில் பணியாற்றிய ரசல் என பல ஆசிரியர்கள் என் நினைவுகளில் நின்றனர். அவர்களுள் என் மனங்கவர்ந்த தமிழ்ப் பேராசிரியர், இறையருட் கவிமணி கா. அப்துல் கஃபூர். எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர், தமிழ்ப் பற்றை வளர்த்தவர்.

sirpi

இறையருட் கவிமணி கா. அப்துல் கஃபூர் அவர்களின் எத்தகைய திறன்கள் உங்களை ஈர்த்தன?

ஒரு வீணையின் இசை போன்றது அவரது உரை. சுண்டி இழுக்கும் சொற்பொழிவாளர். எப்போதும் புன்னகை மாறாதிருப்பார். என்னை அவரது உள்ளம் கவர்ந்த உத்தம சீடனாகவே கொண்டிருந்தார். அவர் பேரா. க. அன்பழகனின் வகுப்புத்தோழர். அவரது வழிகாட்டலிலின்படியே நான் மேற்படிப்புக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். பேரா. கா. அப்துல் கஃபூரிடம் நான் மிகவும் நேசித்தது, அவரது கொள்கை உறுதியையும், அடக்குமுறைகளுக்கு அடிபணியாத பண்பையும். அண்ணாவின் பேரன்புக்குரிய அவர், அதற்காகவே பழிவாங்கப்பட்டவர். ஆயினும், தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிட்ட பிறகு, எதற்காகவும் ஆட்சியாளர்களிடம் சலுகை தேடிப் போகாதவர். அவரது இந்தப் பண்பு என்னை மிகவும் ஈர்த்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உங்களைக் கவர்ந்த ஆசிரியர்கள் குறித்து...?

பேராசிரியர் ஏ. சிதம்பரநாதன் செட்டியார் மிகவும் கம்பீரமானவர். கா. மீனாட்சிசுந்தரம் பிற்காலத்தில் கல்லூரிக்கல்வி இயக்குநரானவர். கவிஞர் மு. அண்ணாமலை. அக்காலத்தில் பேராசிரியர்கள் மீனாட்சிசுந்தரம் போல் வாழவும், கவிஞர் மு. அண்ணாமலை போல் எழுதவும் நான் ஆசைப்பட்டேன்.

அண்ணாமலை பாரதிதாசனுடன் தொடர்பில் இருந்தவர். ஒரு கவிதையில் தலைவி- தலைவனிடம் பேசுவதுபோல் இப்படி எழுதியிருப்பார்.

""பிச்சை எனக்கேட்போரின் இணைந்த

கைபோல். பெரு ஓடம் பாரீர் அத்தான்,

இச்சையெனச் செல்கிறதே, இதயத்தை ஈர்க்கிறதே...

‘ எழுங்கள் போவோம்...''

ஓடத்தை பிச்சைகேட்கும் கைகள்போல என்ற அவரது உவமை என்னை ஈர்த்தது.

உங்களது ஆசிரியப் பணி குறித்து.

1958-ஆம் ஆண்டு பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி யில் பணியில் இணைந்தேன். 1989-ல் பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியைத் தொடர்ந்தேன். தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி 1997-ல் பணி ஓய்வு பெற்றேன். ஆசிரியப் பணியை மனநிறைவோடு செய்துள்ளேன். எனது மாணவர்கள் மிகப்பெரிய ஆளுமைகளாக வளர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்கள் மாணவர்களில், நினைவில் நிற்கும் சிலரைக் கூறுங்களேன்.

சென்னை மற்றும் புதுவைப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகத் திகழ்ந்த பி.கே. பொன்னுசாமி, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சுப்ரமணியன், விண்வெளி ஆய்வாளர், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, காலநிலை அறிவிப்பாளர் பாலச்சந்திரன், இளம் அறிவியலாளர் விருதுபெற்ற லட்சுமணன், மகாராஷ்ட்ரா உயர்காவல் அதிகாரி ராதாகிருஷ்ணன் என ஏராளமான மாணவர்கள் எனது நெஞ்சில் நிற்பவர்கள்.

கவிக்கோ அப்துல் ரகுமானுடன் நீங்கள் கொண்டிருந்த நட்பு, கேட்டோரைச் சிலிலிர்க்க வைக்கக்கூடியது. அவரது நட்புக் காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்...?

கவிக்கோ அப்துல் ரகுமான் "வானம்பாடி' கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவரில்லை. ஆனால் அவரது கவிதைகளை வானம்பாடி வெளியிட்டது. அவரது லைலா மஜ்னு கவிதை வானம்பாடியில் எழுதியதே. எங்கள் இருவருக்கும் ஒரே மனம் என்றே எண்ணத் தோன்றும். அவர் பிறர் புகழ் கண்டு புழுங்குபவரில்லை.

எங்களது கவிதை பாணியும் முற்றிலும் வேறுபட்டது. ஆயினும் ஒருவரை ஒருவர் அங்கீகரித்துக்கொள்வோம். கவிக்கோ அப்துல் ரகுமான் பன்மொழி ஆற்றல் கொண்டவர். முரண்களையும், சிலேடைகளையும் மிக உன்னதமாகக் கையாண்டவர்.

மலையாளக் கவியுலகைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் உங்களுக்குப் பெரும் பங்குண்டு. மலையாள இலக்கியங்கள் மீதான உங்கள் தொடர்பு எப்படி அமைந்தது?

பள்ளிக் காலத்தில் பாலக்காட்டில் மலையாள மீடியத்தில் படித்தேன். மலையாளத்திலேயே முழுதும் பயின்றதால் அம்மொழி எனக்கு அனிச்சையாகவே பரிச்சயமாகிவிட்டது. மலையாள இலக்கியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களை தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளேன்.

டி. சச்சிதானந்தன் (ஆலிலையும் நெற்கதிரும் கவித்தொகுப்பு எழுதியவர்) ஒ.என்.வி. க்ரூப்பு (ஞானபீட விருதை மலையாளத்தில் முதலில் பெற்றவர்)

அன்வர் அலி, அனிதா தம்பி, குஞ்ஞுண்ணி ஆகியோர் குறிப்பிடத்தக்க சில கவிஞர்கள்.

சாகித்ய அகாதெமியில் நீங்கள் செய்துவரும் பங்களிப்புகள் குறித்து.

சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறேன். மூன்றாவது செயற்குழு உறுப்பினராகவும், இரண்டாவது முறை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

சாகித்ய அகாதெமியில் உங்கள் பணிக் காலத்தில் செய்த இலக்கியப் பணிகள்?

முதன்முறை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வானபோது லலிலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய "அக்னி சாட்சி' நாவலை மொழிபெயர்க்கச் செய்தேன்.

மலையாளத்தில் கே. ஜி. சங்கரப்பிள்ளை, சச்சிதானந்தன் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்தோம்.

இந்திய இலக்கியச் சிற்பிகள் (Masters of Indian Literature - MIL)திட்டத்தில் துரைசாமித் தூரன், எஸ்.பி. நரசிம்மலு நாயுடு, கம்பதாசன் குறித்த படைப்புகளை வெளிவரச் செய்தோம்.

இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றபோது பாரதியாரின் அனைத்துக் கவிதைகளையும் 5 பேர் துணையோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தோம்.

பாரதியாரின் தேர்ந்தெடுக்கப் பட்ட உரைநடைகளை இரண்டாவது தொகுதியாகக் கொண்டு வந்தோம். நீல பத்மநாபன் மூலம் விரிவான புதிய தமிழிலக்கிய வரலாறு எழுதினோம்.

சாகித்ய அகாதெமியின் மக்கள் தொடர்பும், இலக்கியவாதிகளுடான தொடர்பும் திருப்தியாக இல்லையே...?

மக்கள் தொடர்புக்காக, சாகித்ய அகாதெமி சார்பில் செமினார், சிம்போசியம், கிராம் லோக், கவிசந்தி, கதாசந்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் இவற்றை மேம்படுத்த வேண்டியுள்ளது.

தமிழ்ப் பேராசிரியராகிய நீங்கள் நிகழ்காலத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குக் கூற விரும்பும் செய்தி?

தமிழிலக்கியத்தை ஆழமாகப் பயிற்றுவிக்க வேண்டும். நமது இலக்கிய மரபுகளை எடுத்துரைக்க வேண்டும். மேலும், பிறமொழி இலக்கியங்களையும் பயின்று அதை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். படைப்பாக்க உணர்வை வளர்க்கவேண்டும்.

புதுப்புது இலக்கியப் போக்குகளை அறிமுகப் படுத்துவதோடு தமிழ்ப்பற்றையும் மாணவர்கள் மனதில் வளர்க்கவேண்டும்.

சமூக ஊடகங்கள் இளைய மனங்களைக் கட்டிப் போட்டுள்ள காலத்தில், இலக்கிய ஆர்வத்தை இளை யோரிடம் வளர்க்க என்ன செய்யலாம்?

சமூக ஊடகங்களின் ஆதிக்கம் தவிர்க்க இயலாதது. எனவே, அவற்றையும் இலக்கியத்தின் தளங்களாக மாற்றி, இளைஞர்களை ஈர்க்கவேண்டும். முகநூலிலிலில் வெளிவரும் கவிதைகள் நூலாக்க வடிவமும் பெறுகின்றன. எனவே, புத்தக வடிவம் என்பது காலாவதியாகி விடாது.

இப்போதைய தமிழ்ச் சமுதாயம் எப்படி உள்ளது?

ஏமாற்றம், ஆதங்கம், வருத்தம் ஆகியவற்றால் தமிழ்ச் சமுதாயம் நிரம்பியிருக்கிறது. தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை உணர்கின்றனர். அகில இந்திய அளவில் தமிழகம், ஒரு புறக்கணிப்பிற்கும், பழிவாங்குதலுக்கும் ஆளாகியுள்ளது.

சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதியை மறுக்கும் போக்கு நிலவுகிறது. தமிழ்மொழிக்கான மதிப்பு தரப்படாமல் புறக் கணிக்கப்படுகிறது.

இத்தகைய அவலமான சூழலிலில் இலக்கியவாதிகள் ஆற்றவேண்டிய கடமைகள் என்னென்ன?

மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் பணியை இலக்கியவாதிகள் ஆற்றவேண்டும். காகிதத்தில் எழுதுவதோடு கடமை முடிந்தது என நினைக்காமல் களத்திலும் இறங்கவேண்டும். அண்மையில் காஷ்மீரில் ஆசிஃபா என்ற எட்டுவயது சிறுமியை எட்டு நாள்கள் கோவில் கருவறைக் குள் கடத்தி வைத்து மதவெறியர்கள் சீரழித்த செய்தி மனதை உலுக்கியது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடாக மாறிவருவது வேதனைக்குரியது. ஊடகங்கள் ஃபாசிசவாதிகளுக்குத் துணை போகக்கூடாது.

முற்போக்கு சக்திகளை வலுப்படுத்த இலக்கியவாதிகள் களமிறங்க வேண்டிய கட்டாய காலம் ஏற்பட்டுள்ளது.

uday010818
இதையும் படியுங்கள்
Subscribe