கனிமொழி கருணாநிதி நக்கீரன் குழுலத்துடன் இணைந்து நடத்திய கவிதைத் திருவிழா! வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு!

/idhalgal/eniya-utayam/poetry-festival-kanimozhi-karunanidhi-nakkeeran-group-prizes-successful

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி - நக்கீரன் குழும இலக்கிய இதழான நம் "இனிய உதய'த்துடன் இணைந்து நடத்திய பாரதியார் பிறந்தநாள் கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா, பாரதி பிறந்த நாளில் அவர் பிறந்த எட்டயபுரத்திலேயே நடந்தது.

ff

முன்னதாக மணிமண்டபத்தில் இருந்த மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் தலைமை வகித்தார். நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும், இனிய உதயம் இணை ஆசிரியருமான ஆரூர் தமிழ்நாடன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் “போட்டியில் பங்கேற்ற பெரும்பாலான மாணவ- மாணவியர், பெண் பிள்ளைகளுக்கு நேரும் பாலியல் கொடுமை பற்றித் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டியிருக்கிறார் கள். எனவே கவிதைப் போராளி கனிமொழி, பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து ஒரு இயக் கத்தை பாரதி மண்ணிலிருந்து தொடங்கவேண்டும். சங்கமத்தின் மூலம் தமிழகத்தின் தலைநகரான சென்னையை, பண்பாடு மிக்க கலைநகராக மாற்றிய கவிதைப்போராளி கனிமொழியால் இதை சாத்தியமாக்க முடியும் என்று கேட்டுக்கொண்டார்.

ஏராளமான பள்ளி மாணவ- மாணவியரும் இளைஞர்களும் பெண்களும் இலக்கிய அன்பர்களும் திரண்டிருந்து, கைத்தட்டல்கள் மூலம் நிகழ்வை உற்சாகப்படுத்தினர். திடீரென்று இந்த விழாவிற்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ். நிகழ்ச்சியை ஆசிரியை ஸ்ரீதேவி கல்யாணி, தனது கணீர்க்குரலில் கவித்துவத்தோடு தொகுத்து வழங்கினார்.

*

dd

இந்த நிகழ்ச்சியில், கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களில், முதல் பரிசு பெற்ற கன்னியாகுமரி ம

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி - நக்கீரன் குழும இலக்கிய இதழான நம் "இனிய உதய'த்துடன் இணைந்து நடத்திய பாரதியார் பிறந்தநாள் கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா, பாரதி பிறந்த நாளில் அவர் பிறந்த எட்டயபுரத்திலேயே நடந்தது.

ff

முன்னதாக மணிமண்டபத்தில் இருந்த மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் தலைமை வகித்தார். நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும், இனிய உதயம் இணை ஆசிரியருமான ஆரூர் தமிழ்நாடன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் “போட்டியில் பங்கேற்ற பெரும்பாலான மாணவ- மாணவியர், பெண் பிள்ளைகளுக்கு நேரும் பாலியல் கொடுமை பற்றித் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டியிருக்கிறார் கள். எனவே கவிதைப் போராளி கனிமொழி, பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து ஒரு இயக் கத்தை பாரதி மண்ணிலிருந்து தொடங்கவேண்டும். சங்கமத்தின் மூலம் தமிழகத்தின் தலைநகரான சென்னையை, பண்பாடு மிக்க கலைநகராக மாற்றிய கவிதைப்போராளி கனிமொழியால் இதை சாத்தியமாக்க முடியும் என்று கேட்டுக்கொண்டார்.

ஏராளமான பள்ளி மாணவ- மாணவியரும் இளைஞர்களும் பெண்களும் இலக்கிய அன்பர்களும் திரண்டிருந்து, கைத்தட்டல்கள் மூலம் நிகழ்வை உற்சாகப்படுத்தினர். திடீரென்று இந்த விழாவிற்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ். நிகழ்ச்சியை ஆசிரியை ஸ்ரீதேவி கல்யாணி, தனது கணீர்க்குரலில் கவித்துவத்தோடு தொகுத்து வழங்கினார்.

*

dd

இந்த நிகழ்ச்சியில், கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களில், முதல் பரிசு பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் செட்டியார்மடத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.பிரியதர்ஷினிக்கு ரூபாய் 50 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்வழியைச் சேர்ந்த தீபேஷ் வளன் இன்பராஜுக்கு ரூபாய் 25 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற சிவகங்கை மாவட்ட ராஜகம்பீரத்தைச் சேர்ந்த கலீல் ஜிப்ரானுக்கு ரூபாய் 15 ஆயிரமும், 4-ஆம் பரிசு பெற்ற தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்திகை மலருக்கு ரூபாய் 10 ஆயிரமும், 5-ஆம் பரிசு பெற்ற கடலூர் மாவட்ட பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த தே.க.பாரதிக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும் ஆறுதல் பரிசாக திருச்சி பரமாத்மிகா, ஸ்ருதி அபி ஜெயஸ்ரீ, ரேஷ்மா, ஆனி ஜெய பெர்லின், இசின்காஸ் மகாராஜன், நித்தியஸ்ரீ ஜெயம், ஜெரூஷா ஆகியோருக்கு நூல்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கனிமொழியின் கையெழுத்துடன் கூடிய சான்றிதழும் வழங்கப்பட்டன.

gg

*

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் உரையாற்றிவர்களின் குரல்களில் இருந்து…

*மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்:

இந்த அவை, என் அனுபவத் தில், மிகப்பெரிய அவையாகத் தோன்றுகிறது. நான் பார்த்த மேடைகளில் இதுதான் பெரிய மேடை. பாரதி பிறந்த நாள் விழாவை நக்கீரன் குழுமத்தோடு இணைந்து நடத்துவதால், இது உலக அளவில் தமிழர்களைச் சென்றடையும் விழா வாக அமைந்துவிட்டது. நக்கீரன் யூடியூப் சேனலை நான் தொடர்ந்து பார்ப்பேன். கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பல சம்பவங்களை, உடனடியாக பதிவிட்டு, அரசு நிர்வாகத்தை ஆக்ட் செய்ய வைத்தவர் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள்தான். இந்த விழாவை சென்னையில் நடத்தாமல் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் நடத்தி இருப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ்:

விழா அழைப்பில் பெயர் இல்லை என்றா லும் அழைக்காமலே கலந்துகொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது. என் மீது அக்கறை கொண்டவர் கனிமொழி. என்னை எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் பார்க்க ஆசைப்பட்டவர் அவர். ஒரு காலத்தில் சென்னையில் அவர் சங்கமம் நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தியதை, ஒரு சிறுவனாக அதை வேடிக்கை பார்த்தவன் நான். இப்போது அவர்களோடு மேடையில் அமர்ந்திருப் பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கே ஒரு பாரதிக்கு பதில் ஏராளமான பாரதிகள் எழுதத் தொடங்கியிருப்ப தைப் பார்த்துப் பெருமைப் படுகிறேன்.

ff

அமைச்சர் கீதாஜீவன்:

மகாகவி பாராதி, உணர்ச்சிமிக்க கவிதை வரிகளை, சமுதாய வளர்ச்சிக்கான எழுச்சி வரிகளை எழுதியவர். குறிப்பாக பெண்ணுரிமைக்காக, பெண் கல்விக்காக குரல் கொடுத்தவர். சட்டங்கள் செய்யவும் பட்டங்கள் ஆளவும் பெண்கள் வரவேண்டும் என்றார்.

அவர் நினைத்தது எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது. பாரதி மகத்தான கவிஞர். அவர் பாடாத பொருளில்லை. அவரது சுதந்திரத்திற்கான கவிதைக் குரல், இந்த பூமியை கந்தக பூமியாக்கியது. பாரதியின் கனவுகளை, லட்சியத்தை எல்லாம் தி.மு.க. ஆட்சிதான் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் :

dd

நாடு விடுதலை பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மகாகவி பாரதியார் வ.உ.சி போன்ற தலைவர்கள் எல்லாம் எந்த அளவுக்கு பாடுபட்டார்கள் என்பதை நாம் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, சுதந்திரம் பெற்றது போன்ற ஒரு உணர்வை எழுச்சியுடன் பாடியவர் பாரதி. பெண்கள் உரிமை பற்றி மகாகவி பாரதியார் எழுதிய கவிதை வரிகளை, முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் தனது ஆட்சியில் செயல்வடிவமாக்கினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

பராசக்தியிடம் பாரதி கோரிக்கை வைத்ததுபோல் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், நம் பராசக்தி கனிமொழியிடம் கோரிக்கை வைத்தார். நம் பராசக்தி பாராசக்தியாக இருக்கமாட்டார். இது காய்ந்த பூமி மட்டுமல்ல, பாரதியின் பாடல்களை உருவாக்கி கந்தக பூமி என்பதை மறந்துவிடக் கூடாது. இது வானம் பார்த்த பூமி மட்டுமல்ல மானம் காத்த பூமி. இந்தத் தொகுதிக்கு யாதுமாகி நிற்கும் கனிமொழி, இதை வளப்படுத்துவார்.

கவிதைப்போட்டியில் பங்கேற்ற ஒரு குழதையின் கவிதையை நக்கீரன் ஆசிரியர் என்னிடம் காட்டினார். அதில் அந்த மாணவர், அப்பா ஆண்ட்ராய்டில் மூழ்கி இருக்கிறார். அம்மா, சீரியலில் திளைத்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு அவர்களிடமிருந்து கிடைக்கவேண்டிய அன்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதில் பாரதியின் தார்மீக கோபம் வெளிப்பட்டிருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

நக்கீரன் ஆசிரியர்:

பாரதி மண்ணில் இப்படியொரு விழா நடப்பதில் பெருமிதம் அடைகிறேன். இங்கே நிறைய பிள்ளைகள் பாரதி வேடம் போட்டு வந்திருக்கிறார்கள். பிள்ளைகளை பாரதியாக நிற்கவைக்க, விடிகாலை 5 மணியில் இருந்தே அவர்களின் அம்மாக்கள் ஒப்பனை செய்திருப்பார்கள். இதுபோன்ற விசயங்களில்தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பாரதி நிற்கிறான். ஒரு மனிதன் எதைவிட்டுச் செல்கிறான் என்பதை வைத்தே அவனுக்குப் பெருமை. இந்த பாரதி பிறந்த எட்டயபுரம் எப்படியோ? இனி இந்த பாரதி மண் புதிய விளைச்சலைக் காணும். அது அறிவு வளர்ச்சியோ விவசாய வளர்ச்சியோ. அதற்கு சகோதரி கனிமொழி துணை நிற்பார். நாம் என்ன விட்டுச்செல்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் நிற்போம். கலைஞர்தான் விட்டுச்சென்ற சாதனைகளால்தான் இப்போதும் பேசப்படுகிறார்.

dd

கனிமொழி கருணாநிதி எம்.பி:

கவிதைப் போட்டிகள் என்று அறிவித்ததும் சுமார் 2000 குழந்தைகள் பங்கேற்றார்கள். பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். பாரதி பிறந்த மண்ணிலே இந்நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்வை ஏற்படுத்துகிறது. அனைவருக்கும் பொருந்தும் வகையில் கவிதைகள் தந்தவர் மகாகவி பாரதியார். தமிழ் மொழியை, தமிழ் வாழ்வை வளப்படுத்துங்கள் என்றார். மாணவ- மாணவிகளுக்கு குறிப்பாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கனவு மெய்ப்பட வேண்டும் என்றார் பாரதி. உங்களுக்கு ஆயிரம் கனவு கள் இருக்கும். இங்கே மேடைக்கு வந்த ஒரு குழந்தை, அடுத்த தூத்துக்குடி கலெக்டர் நான்தான் என்று சொன்னது. அப்படிச் சொல்லக் கூடிய எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும். அத்தகைய கனவு களை நீங்கள் எதற்காகவும் விட்டுவிடக்கூடாது. எமக்குத் தொழில் கவிதை என்று பெருமையோடு சொன்னவர் பாரதி. இறுதி வரை அந்தக் கவிதை அவருக்கு ஒரு பெரிய பொருளை கொண்டு வந்து சேர்க்கவில்லை. பெரிய அதிகாரத்தை கொண்டுவந்து சேர்க்க வில்லை. ஆனால் இத்தனை தலைமுறை களைத் தாண்டியும் அவரது பெருமை களை பேசிக் கொண்டு இருக்கிறோம்.

இதுதான் பாரதி.”

-மேலும் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பா ளர் ஜெயகுமார், கவிதாயினி ஆண்டாள் பிரியதர்ஷினி உள்ளிட்டவர் களும் உரையாற்றினர்.

பாரதி விழாவால் எட்டயபுரம் பகுதியே தமிழ் மணம் கமழ்ந்தது.

-நாகேந்திரன்

uday010122
இதையும் படியுங்கள்
Subscribe