கவிஞர் உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/poet-nikrishnan-budoor-tamil-sura

சாபத்திற்கு ஆளானவர்... பிறவிப் பயனை அடையவில்லை. தொட்டதெல்லாம் பிரச்சினையில் முடிகின்றன.

எதிர்பார்த்தவை ஒவ்வொன்றும் இல்லாமற் போகின்றன.

ஆசைப்பட்ட அனைத்தும் கையைவிட்டுப் போகின்றன. விடியல் இல்லையா? சாபமோட்சம் கிடைக்காதா? மனதின் வேதனைகளை அறிவதற்கு யாருமில்லையா?

வேதனைப்படுவது... வேதனைப்பட்டு வெந்து வெந்து சாவது... மனதின் உமி நெருப்பில் போட்டு அனைத்தையும் எரிப்பது...

இருட்டு... கனமான அடர் இருட்டு.. இந்த இருட்டில் ஏதாவதொரு நாள் ஒரு ஒளிக்கீற்று தோன்றாதா?

அமைந்தவை அனைத்தும் எங்கு போயின? நோய்ப் படுக்கையில் கிடக்கும்போதுதான் அருகில் அழைத்தார்.

அன்றைக்கு அருகில் சென்றதில்லை. செல்ல விரும்பவில்லை. தினமும் மோதல்கள்தான்.

கொள்கைகளின் உள் போராட்டங்களின் காரணமாக ஒருவரையொருவர் சந்திக்கமுடியாத நிலை உண்டானது.

தந்தையின் நிழல் மகன், மகனுடைய நிழல் தந்தையென்று ஆனார்கள்.

முதுமை தந்தையை வீழ்த்தியது. முற்றிலும் படுத்த படுக்கையாக ஆனார். வீர சூர செயல்கள் முடிவிற்கு வந்தன. அதிகார கர்வத்தின் தொண்டை தடுமாறியது.

செய்தவை அனைத்துமே தவறானவையென்ற உண்மையை உணர்ந்தது மிகவும் தாமதமாகத்தான்.

அப்போது எதுவுமே எஞ்சி இருக்கவில்லை...

மிச்சமென்று கூறுவதற்கு பணம், மானம்... அனைத்துமே இழக்கப்பட்டுவிட்டன.

பைத்தியம் பிடித்தவரும், கனவில் நடப்பவருமான மகனைப் பற்றிய செய்திகளில் எப்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடிய தந்தை மரணப் படுக்கைக்கு அருகில் வரும்படி அழைத்திருந்தார். தயங்கித் தயங்கி அவர் அருகில் சென்று நின்றார். மௌனமாக தலையைக் குனிய வைத்து நின்றுகொண்டிருந்த மகனின் பலமான கைகளைத் தன் மெலிந்த உள்ளங்கையில் வைத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டே கேட்டார்:

"நீ அவளை விட்ருவியா?''

"எவளை..?''

"உன்னை நாசமாக்கியவளை..?''

"என்னை நாசமாக்கியது அவளில்ல. என்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பது அவள்தான்.

அவளுக்காக மட்டுமே நான் வாழ்கிறேன். அவளை மறந்தா, நான் இல்லை. என் இருப்பே அவளில்தான்.

"உன்னை எனக்குப் பிடிக்காம போனதே, உனக்கும் அவளுக்குமிடையே இருந்த ரகசிய தொடர்பைப் பார்த்ததாலதான். லட்சுமியின் அருள் உனக்குக் கிடைக்காம போனதுக்குக் காரணமே அதுதான்.''

"நான் வழிபடறது அவளைதான். அப்பா... நீங்க வழிபடறது லட்சுமியை மட்டும்தான். அப்பா... லட்சுமியை வழிபட்ட நீங்க அவளை முற்றிலுமா மறந்துட்டீங்க என்பது மட்டுமில்ல...

அவமானப்படுத்தக்கூட செஞ்சீங்க. நீங்க அவளை வெறுக்குற காரணத்தால, மனிதத் தன்மைங்கற சிறப்பு குணம் உங்களுடைய வாழ்க்கையில வேண்டிய அளவுக்கு இல்லாம போய்ட்டது. அப்பா... நான் உங்களுக்கு அறிவுரை கூறலை. அதைத் தவிர, எதை வேண்டுமானாலும் சொல்லுங்க''

"உனக்கு வாழ்க்கையோட இறுதிவரை இருக்கக்கூடிய குருத்துவம் பெரிதா? இல்லைன்னா அவளா?''

"அப்பா.. வாழ்க்கையோட இறுதிவரை இருக்கக்கூடிய உங்களோட குருத்துவம் எனக்கு வேணும். நீங்க எனக்கு அதை மனப்பூர்

சாபத்திற்கு ஆளானவர்... பிறவிப் பயனை அடையவில்லை. தொட்டதெல்லாம் பிரச்சினையில் முடிகின்றன.

எதிர்பார்த்தவை ஒவ்வொன்றும் இல்லாமற் போகின்றன.

ஆசைப்பட்ட அனைத்தும் கையைவிட்டுப் போகின்றன. விடியல் இல்லையா? சாபமோட்சம் கிடைக்காதா? மனதின் வேதனைகளை அறிவதற்கு யாருமில்லையா?

வேதனைப்படுவது... வேதனைப்பட்டு வெந்து வெந்து சாவது... மனதின் உமி நெருப்பில் போட்டு அனைத்தையும் எரிப்பது...

இருட்டு... கனமான அடர் இருட்டு.. இந்த இருட்டில் ஏதாவதொரு நாள் ஒரு ஒளிக்கீற்று தோன்றாதா?

அமைந்தவை அனைத்தும் எங்கு போயின? நோய்ப் படுக்கையில் கிடக்கும்போதுதான் அருகில் அழைத்தார்.

அன்றைக்கு அருகில் சென்றதில்லை. செல்ல விரும்பவில்லை. தினமும் மோதல்கள்தான்.

கொள்கைகளின் உள் போராட்டங்களின் காரணமாக ஒருவரையொருவர் சந்திக்கமுடியாத நிலை உண்டானது.

தந்தையின் நிழல் மகன், மகனுடைய நிழல் தந்தையென்று ஆனார்கள்.

முதுமை தந்தையை வீழ்த்தியது. முற்றிலும் படுத்த படுக்கையாக ஆனார். வீர சூர செயல்கள் முடிவிற்கு வந்தன. அதிகார கர்வத்தின் தொண்டை தடுமாறியது.

செய்தவை அனைத்துமே தவறானவையென்ற உண்மையை உணர்ந்தது மிகவும் தாமதமாகத்தான்.

அப்போது எதுவுமே எஞ்சி இருக்கவில்லை...

மிச்சமென்று கூறுவதற்கு பணம், மானம்... அனைத்துமே இழக்கப்பட்டுவிட்டன.

பைத்தியம் பிடித்தவரும், கனவில் நடப்பவருமான மகனைப் பற்றிய செய்திகளில் எப்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடிய தந்தை மரணப் படுக்கைக்கு அருகில் வரும்படி அழைத்திருந்தார். தயங்கித் தயங்கி அவர் அருகில் சென்று நின்றார். மௌனமாக தலையைக் குனிய வைத்து நின்றுகொண்டிருந்த மகனின் பலமான கைகளைத் தன் மெலிந்த உள்ளங்கையில் வைத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டே கேட்டார்:

"நீ அவளை விட்ருவியா?''

"எவளை..?''

"உன்னை நாசமாக்கியவளை..?''

"என்னை நாசமாக்கியது அவளில்ல. என்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பது அவள்தான்.

அவளுக்காக மட்டுமே நான் வாழ்கிறேன். அவளை மறந்தா, நான் இல்லை. என் இருப்பே அவளில்தான்.

"உன்னை எனக்குப் பிடிக்காம போனதே, உனக்கும் அவளுக்குமிடையே இருந்த ரகசிய தொடர்பைப் பார்த்ததாலதான். லட்சுமியின் அருள் உனக்குக் கிடைக்காம போனதுக்குக் காரணமே அதுதான்.''

"நான் வழிபடறது அவளைதான். அப்பா... நீங்க வழிபடறது லட்சுமியை மட்டும்தான். அப்பா... லட்சுமியை வழிபட்ட நீங்க அவளை முற்றிலுமா மறந்துட்டீங்க என்பது மட்டுமில்ல...

அவமானப்படுத்தக்கூட செஞ்சீங்க. நீங்க அவளை வெறுக்குற காரணத்தால, மனிதத் தன்மைங்கற சிறப்பு குணம் உங்களுடைய வாழ்க்கையில வேண்டிய அளவுக்கு இல்லாம போய்ட்டது. அப்பா... நான் உங்களுக்கு அறிவுரை கூறலை. அதைத் தவிர, எதை வேண்டுமானாலும் சொல்லுங்க''

"உனக்கு வாழ்க்கையோட இறுதிவரை இருக்கக்கூடிய குருத்துவம் பெரிதா? இல்லைன்னா அவளா?''

"அப்பா.. வாழ்க்கையோட இறுதிவரை இருக்கக்கூடிய உங்களோட குருத்துவம் எனக்கு வேணும். நீங்க எனக்கு அதை மனப்பூர்வமா அளிக்காத காரணத்தால, அவள் வேண்டிய அளவுக்கு என்னை ஆசீர்வதிக்கல. அப்பா, உங்களுடைய குருத்துவம் கிடைச்சா அவளும் நானும் மேலும் அதிகமா நெருங்க அது உதவும்.''

"அது இந்த பிறவியில நடக்காது. அவளை நீ மறக்க வேணும்னு உன்னிடம் நான் கேட்கும்போது, அவளுடன் அதிகமா நெருங்கறதுக்காக நீ என்னுடைய ஆசீர்வாதத்தைத் தேடுற.இல்லியா? நீ என்னிக்கும் பிரச்சினையே இல்லாம இருக்கணும்னா நான் கூறுவதைக் கேட்டு நட. இன்று உனக்கு இருக்கக் கூடிய எல்லா கஷ்டங்களுக்கும் ஒரே காரணம் அவள்தான்.

அவளுடன் இருக்கக்கூடிய உறவு உன்னை முட்டாளாவும் ஊதாரியாவும் பயனற்றவனாகவும் ஆக்கியிருக்கும் விஷயம் உனக் குத் தெரியல. உன்னை அவள் கை விஷம் தந்து மயக்கியிருக்கா. அவளுடைய ஈர்ப்பிலிருந்து தப்பிக்காவிட்டா உனக்கு விமோசனமே இல்லை." தந்தை ஆவேசத்துடன் கூறினார்.

"அப்பா... நீங்க அவளை தவறாக நினைச்சிருக்கீங்க.

அவள் புகழின் சிகரம். கல்வியின் தேவதை. அவளுடைய அருள் பார்வை கிடைச்சுட்டா... அப்பா... எனக்கு மரணமே இல்லை."

"உனக்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சா?போதும் உன் பிரசங்கம். அவளைப் பற்றிய உன் சொற்பொழிவை நீண்ட நாட்களாகவே கேட்டுக் கேட்டு எனக்கே வெறுப்பாயிடுச்சு.''

ss2

"மிகவும் இளம் வயதிலிருந்தே அவளோட நெருக்கம்... நான் இவ்வளவு காலமும் அவளை ஆழமாவே காதலிச்சேன். இனி அவளை மறக்கமுடியாது.''

"சரி... நீ அனுபவி. இனி நான் எதுவுமே சொல்றதா இல்ல. என் சம்பாத்தியம் எதையும் உனக்கு தரப் போவதில்லை. அது என்னுடைய மற்ற பிள்ளைகளுக்காக இருப்பது...''

அவர் எதுவும் பேசவில்லை. குனிந்த தலையுடன் அறையிலிருந்து வெளியேறிச் சென்றார். அதிக நாட்கள் தந்தை உயிருடன் இருக்கவில்லை. மூத்த மகனைப் பற்றிய கவலைகளுடனே அவருடைய தந்தை மரணத்தைத் தழுவினார்.

தந்தை இறந்தபோது, அவருக்கு அதிகமாக பரிதாப உணர்வு உண்டானது. எந்தவொன்றை தந்தை ஒதுக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்தாரோ, அதை அவர் அதிகமாக வழிபட ஆரம்பித்தார். தந்தையின் மரணத்திற்குப்பிறகு, அவள் தன்னிடமிருந்து மேலும் சற்று விலகிச் சென்றுவிட்டாளோ என்று அவர் சந்தேகப்பட்டார்.

தொட்டதிலெல்லாம் சந்தேகம் உண்டானது. அவர் மிகவும் அதிகமாக எழுதி, படைத்தார்.

எதுவும் யாருக்கும் தேவையற்றதாக இருந்தது. அவருக்கு வேண்டிய அளவுக்கு திறமையில்லை. புகழ்பெறக்கூடிய தகுதியற்ற அவருடைய கலைப் படைப்புகள் பத்திரிகை நடத்துபவர்களுக்கு தேவையற்றவையாக இருந்தன.

வாழ்க்கையில் யாராவது ஒரு ஆள் தன்னை கவிஞர் என்று கூறமாட்டானா என்று அவர் சந்தேகப்பட்டார். அவர் எழுதிய கவிதைகளைக்கொண்டு "பவுண்ட் புக்'குகளின் பக்கங்கள் நிறைந்தன.

பலவற்றையும் பத்திரிகை நடத்துபவர்களுக்கு அனுப்பிவைத்தார். பலரும் நன்றியுணர்வுடன் அவற்றை நிராகரித்தார்கள். சிலர் அறிவுரை கூறினார்கள். மேலும் சற்று ஆழமாக வாசிக்கவும், படிக்கவும் செய்தபிறகு, எழுதத் தொடங்கினால் போதும் என்று. அவர் எழுதுபவை அனைத்தும் முழுமையான கவனத்துடன்தான்.

மனதிற்குள் தட்டிய பிறகுதான் ஒவ்வொரு வரியையும் எழுதினார்.

வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும் சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் மிகவும் அதிகமாக கவனம் செலுத்தினார்.

அவை முழுமையற்றவை என்று பலரும் விதி எழுதினார்கள்.

கவிதைகள் எழுதப்பட்ட "பவுண்ட் புக்'கைக் கையிடுக்கில் இறுக வைத்தவாறு, அவர் ஊரைவிட்டு ஊராக அலைய ஆரம்பித்தார். கோவில்களின் கோபுர வாசலில் நின்றுகொண்டு அவர் தன் கவிதைகளை ஒவ்வொரு தேவரையும் தேவதையையும் உரத்த குரலில் கூறி கேட்க வைத்தார். தன் கவிதைகளைப் பாடி கேட்கச் செய்வதுடன், மெல்லிய குரலில் தேம்பி அழுவதையும் வழக்கமாக்கி வைத்திருந்தார்.

பலருக்கும் அவர்மீது பரிதாபம் உண்டானது. நோட்டு புத்தகத்தில் கண்ணீர் விழுந்து நனைந்து, மை அழிந்த வரிகளைக் கூறி தெய்வத்திடம் ஏதோ தர்மசங்கடத்தை வெளிப்படுத்தக்கூடிய இந்த மனிதருக்கு என்ன ஆனது என்று பலரும் ஒருவரோடொருவர் கேட்க ஆரம்பித்தார்கள்.

அவரைப் பார்த்தால் ஒரு யாசகன் என்று தோன்றாது. வசதி படைத்த ஒரு குடும்பத்தில் பிறந்தவரின் முக வெளிப்பாடு அவருக்கு இருந்தது. பலரும் அவருக்கு காசும் உணவும் கொடுத்தார்கள் என்றாலும், அவர் அது எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர் அழுவது உணவிற்காகவோ பணத்திற்காகவோ அல்ல என்பதும், வேறு ஏதோ ஆசீர்வாதம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்த ஆலய வாசல்களில் அமர்ந்து அழவும் தலையில் அடித்துக்கொள்ளவும் செய்கிறார் என்பதும் சிலருக்காவது புரிந்திருக்கவேண்டும்.

எப்போதும் அழுதுகொண்டிருக்கும் அவருடைய கண்ணீரைப் பார்த்து தெய்வத்தின் மனம் இளகியதா? ஆலயத்தில் வழங்கப்படும் நைவேத்திய சோறு, தெய்வத்தின் சிலையின்மீது செய்யப்படும் அபிஷேகம் முடிந்து வாய்க்காலில் வரும் தீர்த்த நீர் ஆகியவற்றுடன் அவர் நீண்டகாலம் வழிபாட்டில் இருந்தார்.

மழையும் பனியும் வெப்பமும் வறட்சியும் பூமிக்கு உண்டாயின. பருவ காலங்கள் மாறி வந்தன. ஆலயத்தின் நடை மூடப்பட்டபிறகு, கருங்கல்லாலான பிரதட்சணம் செய்யப்படும் இடத்தின் ஒரு அரவமற்ற மூலையில் போய் அவர் அமர்ந்து, நோட்டுப் புத்தகத்தில் மேலும் சில வரிகளை எழுதுவார். மதியம் ஓய்வுப் பொழுதில் எழுதிய வரிகளை சாயங்காலம் நடைதிறந்த சமயத்தில் பகவானிடம் கூறி கேட்கச் செய்வார்.

அவருக்கு ஒரேயொரு விருப்பம்தான் இருந்தது. தான் ஒரு கவிஞராகவேண்டும்! அதாவது...

அவளுடைய நிரந்தர காதலனாக வேண்டும்.

அவளுடைய நிரந்தர காதலன் என்ற பதவி கிடைப்பது என்பது எளிதான ஒரு விஷயமல்ல என்ற உண்மையை விவரமான பலரும் அவரிடம் கூறியிருக்கிறார்கள்.

நீண்டகாலம் தவமிருக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும். ஒன்றிலேயே மனம் ஊன்றி நிற்கவேண்டும். நிறைய முயற்சிக்கவேண்டும். வாழ்க்கை அனுபவங்களைப் பெறவேண்டும். அறிவியலைப் புரிந்துகொள்ளவேண்டும். அவள் சற்று கனிந்து ஆசீர்வதிக்க வேண்டுமெனில், எப்படிப்பட்ட சூழல்களைக் கடந்துவர வேண்டும்! கண்டடைவதற்கு..!

யாரை நோக்கித் தவம்செய்ய வேண்டும்? தெய்வத்தையா?

இயற்கையையா? அழகையா? நட்சத்திர மண்டலத்தையா? சூரியனையா? சந்திரனையா? பூமியில் காணும் கோடிக்கணக்கான உயிரினங்களையா?

இயற்கையின் காதலராக அவர் நடந்தார். செடி, கொடிகளையும், மரங்களையும் அவர் வழிபட்டார். தகர்ந்து கிடக்கும் ஆலயங்களின் கோபுர வாசலுக்கு முன்னால் நின்று அவர் பெருமூச்சுவிட்டார். இழக்கப்பட்ட கிராமத்துச் செல்வங்களை நினைத்து அவர் கவலைப்பட்டார். நீர் வற்றிய பொய்கையிலிருந்த தாமரை மொட்டுகளின் வாட்டத்தைப் பார்த்து அவர் அழுதார். நீர் வற்றிய ஆறுகளையும் காய்ந்து வறண்ட வயல்களையும் மரங்களற்ற காடுகளையும் பார்த்து அவர் வேதனைப்பட்டார்.

காணாமற்போன இயற்கையின் அழகைத் தேடி அவர் நடந்தார். ஒளி வடிவமான தெய்வத்தின் இருப்பிடத்தைக் கண்டடைவதற்காக வெளியேறிய அவரை வரவேற்றது... தகர்ந்துபோன கூத்து நடைபெறும் கோவில்களும், சரிந்து கிடக்கும் கோபுரங்களும், உடைந்த சிலைகளும்தான். பூஜையும் பூசாரியும் இல்லாத நிறைய கோவில்கள்...

வவ்வால்களும் கழுகும் தவம்செய்யும் மலைப் பகுதி கிராமத்து காவுகள்... இருள் விழுங்கிய வெட்டவெளி...

வெளிச்சத்தைப் பரப்புவதற்குத் தயங்கும் புலர்காலைப் பொழுதுகள்.... அனைத்தையும் பார்த்து அவர் கவலைப்பட்டார்.

செழிப்பின் பச்சை நரம்புகளைக் கரியச்செய்த கடுமையான வேனல்... கொதித்து உருகும் வெயிலில் இலைகள் உதிர்ந்த பெரிய ஆல மரங்கள்... பனி விழும் இரவு வேளைகளில் மலரவேண்டிய, மலரற்று நின்றுகொண்டிருக்கும் ஏழிலாம் பாலைகள்.... இவை அனைத்தும் அவரை வேதனைப்படச் செய்தன.

ஐந்தாண்டு திட்டத்தின் வருகை இராமேஸ்வரத்தில் சவரம் செய்வதைப்போல கிராமத்தின் முகத்தை அவலட்சணமாக ஆக்குவதற்கே பயன்பட்டிருக்கிறது என்று அந்த மனிதர் நினைத்தார். அவர் மனதிற்குள் வேதனையுடன் உரத்த குரலில் கேட்டார்: "கிராமத்தின் செழிப்புகள் எங்கு போயின? மலைப் பகுதியின் மங்கைகள் எங்கு போனார்கள்? அழகான தேவதைகள் நடனமாடிக்கொண்டிருந்த கிராமத்து தெருக்களில் இன்று எதைப் பார்க்கிறோம்? சீமைச் சாயம் தேய்க்கப்பட்ட உதட்டில் காமவெறி வெளிப்படும் பச்சைச் சிரிப்பு தவழ வாசற் படியில் ரத்தமற்ற முகத்துடன் எதிர்பார்த்து நின்றுகொண்டிருக்கும் அவளா அழகு தேவதை? சிவசிவா!''

அவர் பைத்தியம் பிடித்தவரைப்போல ஓடினார். அவருடைய மடியில் வைத்திருந்த பையிலிருந்த நாணயங்கள் எங்கு போயின? தெருவிலுள்ள அழகு தேவதை அவரிடமிருந்து அதைத் தட்டி பறித்துவிட்டாளா? கவலை நிறைந்த மனதுடன் தனிமையிலிருந்த அவர் ஒரு கனவில் நடக்கும் மனிதரைப்போல அலைந்து திரிந்தார். தூக்கமற்ற பல இரவுகளை அவர் தள்ளிக் கடத்தினார்.

பசியையும் தாகத்தையும் தாங்கிக் கொள்ளமுடியாத நிலை வந்தபோது, தாக நீருக்காக ஒரு நவீன உபகுப்தனாக மாறி அவர் பல வாசல் கதவுகளையும் சென்று தட்டினார். தாக நீரை ஊற்றித் தரும்போது, பல நீள் விழிகளும் அவருடைய இளமையைப் பார்த்து பெருமூச்சு விட்டன. அவர் அது எதையும் அறிந்திருக்கவே இல்லை. எனினும், நள்ளிரவு பூக்களின் நறுமணம் அவருடைய கன்னத்திலும் முத்தமிட்டவாறு கடந்து சென்றது. அப்போதும் அவர் எழுதிக்கொண்டிருந்தார்.

நிறுத்தாமல் அவர் செய்துகொண்டிருந்த செயல் அது ஒன்று மட்டுமே. அவர் எழுதும் கவிதையிலிருந்த அர்த்தம் நிறைந்த கற்பனையைப் பார்த்தும் கேள்விப்பட்டும் பலரும் அவரைத் தெரிந்துகொள்ளக்கூடிய நிலை உண்டானது. அவரை ஆட்கள் "கவிஞர்' என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அவருக்கு சிரிப்பு வந்தது. தான் எங்குள்ள கவிஞர்? தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். தான் அழகின் கவிஞர்.. தான் சத்தியத்தின் கவிஞர்... தான் நம்பிக்கையின் கவிஞர்... தான் தெய்வத்தின் மகத்துவத்தைப் புகழும் கவிஞர்... அவர் அவை எல்லாவற்றையும் கேட்டார். பலரும் பல்வேறு பெயர்களில் அவரை அழைக்க ஆரம்பித்தார்கள்.

மனதில் வேதனை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டு வந்தது. தன்னைப் பற்றி மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. தான் யார் என்பது தெரிந்திருந்தால்..?

எங்கும் தோல்வியைச் சந்தித்தவர்... வாழ்க்கை என்ற சதுரங்க விளையாட்டில் நிரந்தரமாக வெளியேற்றப்பட்ட மனிதர்.. அனைவராலும் ஒதுக்கப்பட்டவர்... இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால்... அனைவரையும் உதறிவிட்டவர். தந்தை, தாய், மனைவி, மக்கள், குடும்பம், பணம், கல்வி...

எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டு, அவளுக்குப் பின்னால் சென்றுவிட்டார்.

விருப்பப்பட்ட யாருக்கும் எந்தச் சமயத்திலும் கதவைத் திறந்து விடும் ஒருத்தியைத்தான் விருப்ப தேவதையாக வழிபட்டார். அவளுடைய காதலுக்காக எந்தெந்த விலையைத்தான் கொடுக்கவில்லை? எட்டிக்காய் விதையைவிட கசப்பான அனுபவங்கள் மனதை வேதனைப்படச் செய்தன. இதய ரத்தம் எனும் தேனில் கண்ணீரெனும் இந்து உப்பைக் கரைத்து எப்போதும் அவளுக்காக ஒரு ஹோம திரவத்தைத்ப்போல தன்னைத்தானே அதில் அர்ப்பணித்தார்.

ஒவ்வொரு கல்லுக்கு முன்னால் வந்து நிற்கும்போதும், பிரபஞ்சம் முழுவதையுமே கரைத்துக் குடித்தாலும் போதுமென தோன்றாத அவளுடைய உள் தாகத்திற்கு முன்னால் அவர் செயலற்றவராக தேம்பித் தேம்பி அழுதார். ஒருமுறை கண்ணிலிருந்து உதிர்ந்து விழுந்த கண்ணீர் துளிகளைக்கொண்டு அவளுடைய சரீரத்தை அவர் கழுவினார். வற்றாத அந்த நீர்த் துளிகள் சிறிது நேரம் கடந்ததும், நெருப்புப் பொறிகளாக இருந்தன என்று அவளுக்குத் தோன்றியது.

அவள் திடுக்கிட்டு எழுந்தாள். தளர்ந்து கிடக்கும் அவரை வாரியெடுத்து, நெற்றியில் ஆவேசத்துடன் அவள் முத்தமிட்டாள். அவர் கண்களைத் திறந்தார். ஆமாம்...

அவள்தான்... அந்த முகத்தின் நினைத்துப் பார்க்கமுடியாத பிரகாசத்தைப் பார்த்து அவர் ஒரு பச்சைக் குழந்தையைப்போல விழித்து பார்த்தார். அவள் கூறினாள்:

"இன்றிலிருந்து நான் உங்களின் தாசி...''

பதில் கூறுவதற்கு அவரிடம் எதுவுமில்லை.

அவருடைய உதடுகள் முழுமையாக வறண்டு விட்டிருந்தன.

uday010423
இதையும் படியுங்கள்
Subscribe