சேலத்தைச் சேர்ந்த கவிஞர் ஏகலைவனின் சாதனைகள், பலரையும் வியக்கவைக்கின்றன. இயற்கை அவரை ஊனமாக்கி வஞ்சித்தது. கவிஞரோ, அதற்கெல்லாம் சளைக்காமல், தன் தன்னம்பிக்கை யையே கால்களாக்கிக் கொண்டு, பலருக்கும் சிறகு களைத் தந்துகொண்டிருக்கிறார். தனது இருட்டையே தீபமாக்கிக்கொண்டு, அதில் இருந்து அவர் ஏற்றிவைத்த விளக்குகள் ஏராளம்.
கவிஞர் ஏகலைவனின் இதயம், மனிதம் மனிதம் என அடுத்தவர்களுக்காகவே துடித்துக்கொண்டிருக்கிறது. அந்த இதயத்தில் இருந்து பிறந்து வரும் கவிதைகள் எண்ணற்ற இதயங்களைக் கவர்ந்தும் வருகிறது. கவிஞர் ஏகலைவனின் வெளிச்சக்கவிதை இது...
வாழ்வின்
நெடும் பயணத்தில்
பயண வழியெங்கும்
சாதனைச் சுவடுகளையும்
சந்தோஷ ரோஜாக்களையும்
பதியனிட விடாமுயற்சி எனும்
அஸ்திரத்தை
அழகாய் எய்யப்பழகு
அதன்பின்
வானும் வசப்படும்...
ஏகலைவனின் இந்தக் கவிதையைப் படித்த முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இந்தக் கவிதை யைப் பாராட்டி கவிஞர் ஏகலைவனுக்குக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை தனக்குக் கிடைத்த நோபல் பரிசாகப் பாதுகாத்து வருகிறார் ஏகலைவன்.
கலாம் மட்டுமல்லாது ஆன்றோர் பெருமக்கள் பலராலும் மகிழ்வோடு பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டவர் இவர். பிரான்ஸ் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி ப
சேலத்தைச் சேர்ந்த கவிஞர் ஏகலைவனின் சாதனைகள், பலரையும் வியக்கவைக்கின்றன. இயற்கை அவரை ஊனமாக்கி வஞ்சித்தது. கவிஞரோ, அதற்கெல்லாம் சளைக்காமல், தன் தன்னம்பிக்கை யையே கால்களாக்கிக் கொண்டு, பலருக்கும் சிறகு களைத் தந்துகொண்டிருக்கிறார். தனது இருட்டையே தீபமாக்கிக்கொண்டு, அதில் இருந்து அவர் ஏற்றிவைத்த விளக்குகள் ஏராளம்.
கவிஞர் ஏகலைவனின் இதயம், மனிதம் மனிதம் என அடுத்தவர்களுக்காகவே துடித்துக்கொண்டிருக்கிறது. அந்த இதயத்தில் இருந்து பிறந்து வரும் கவிதைகள் எண்ணற்ற இதயங்களைக் கவர்ந்தும் வருகிறது. கவிஞர் ஏகலைவனின் வெளிச்சக்கவிதை இது...
வாழ்வின்
நெடும் பயணத்தில்
பயண வழியெங்கும்
சாதனைச் சுவடுகளையும்
சந்தோஷ ரோஜாக்களையும்
பதியனிட விடாமுயற்சி எனும்
அஸ்திரத்தை
அழகாய் எய்யப்பழகு
அதன்பின்
வானும் வசப்படும்...
ஏகலைவனின் இந்தக் கவிதையைப் படித்த முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இந்தக் கவிதை யைப் பாராட்டி கவிஞர் ஏகலைவனுக்குக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை தனக்குக் கிடைத்த நோபல் பரிசாகப் பாதுகாத்து வருகிறார் ஏகலைவன்.
கலாம் மட்டுமல்லாது ஆன்றோர் பெருமக்கள் பலராலும் மகிழ்வோடு பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டவர் இவர். பிரான்ஸ் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி போட்டி உட்பட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற விருதாளராகவும் கவிஞர் ஏகலைவன் திகழ்கிறார்.
ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம் என்றில்லாமல், பிறந்ததன் பயனாய் சமுதாயத்தின் நன்மைக்காக ஏதாவது செய்தாகவேண்டும் என்று அவர் மனதில் உதித்த எண்ணம், "நம்பிக்கை வாசல் டிரஸ்ட்'டாக மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகளின் கல்விக்கும், அவர்கள் வாழ்க்கைச் சீரமைப்புக்கும் உதவும் உயர்ந்த நோக்கத் துடன், 2013-ல் இந்த டிரஸ்ட்டை, ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவம், பிரபல இதழாசிரியர் லேனா தமிழ்வாணன் ஆகிய இருவரையும் ஆலோசகர் களாகக் கொண்டு உருவாக்கினார் ஏகலைவன்.
அந்த அறக்கட்டளை அன்பையும் அறனையும் தன்னிரு கைகளாகக் கொண்டு பலரையும் அரவணைத்துக் கொண்டிருகிறது.
ஏறத்தாழ பத்து வருடங்களாக என்னுடன் நட்பாகத் தொடரும் நல்லுள்ளம் கொண்ட நண்பர் ஏகலைவர். இவரது சாதனைகளைக் கவனித்து கவனித்து மனம் மகிழ்ந்துவருகிறேன். இவரை ஒரு மாற்றுத் திற னாளியாக என்னால் பார்க்க முடியவில்லை. பலரின் வாழ்க்கையையும் மாற்றும் திறனாளியாகவே இவரைப் பார்த்து பிரமிக்கிறேன்.
தன் பதிமூன்றாவது வயது பிறந்தநாளன்று, தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, இரயில் பாதையில் அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்த போது, இரயில் வருவதை அவர் நண்பர் ஒருவர் கவனிக்காததை பார்த்து, ஏகலைவன் சத்தம் போட, நண்பர் விலகி ஓடித் தப்பினார். ஆனால் இடதுபுறம் வந்த இரயிலை இவர் கவனிக்கவில்லை. நண்பர்கள் அலறியும், ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றதில் ரயில் என்ஜின் மோதி, இவரின் கால் சட்டை என்ஜினின் கம்பியில் மாட்டி இவரை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகலைவன், தன் இடதுகாலை முழங்கால் வரை இழந்துள்ளார். இது இயற்கையும் காலமும் சேர்ந்து அவருக்கு இழைத்த பெரும் துரோகம்.
இரண்டு வருடம் பல துன்பங்களை அனுபவித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். இவரின் குடும்பம் வறுமையில் வாடிய குடும்பம். எனினும் நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து, சென்னை தி.நகரில் ஒரு காலுடனே தையற்கலைஞராக பணிபுரிந்திருக்கிறார். உயர் படிப்பு படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட இவரின் நியாயமான ஆசையை புதுக்கோட்டையை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பவர் தீர்த்து வைத்தார்.. அவரின் உதவியால் எம்.ஏ.பி.லிட் படித்து பட்டம் பெற்றிருக்கி றார் ஏகலைவன்.
பின்னர், சொந்த ஊரான சேலத்திற்கே வந்து அங்கும் தையற்கலைஞராகவே வாழ்க்கையை நடத்தி வந்த ஏகலைவனுக்கு, பெரியார் பல்கலைக்கழகத்தில், 11 முறை படையெடுத்த பின்னரே தற்காலிகப் பணி கிடைத்திருக்கிறது. அதில் ஆறு வருடங்கள் அவர் பணியாற்றினார்.
இயல்பிலேயே கவிதை மனம் வாய்க்கப்பட்ட இவர், தொடர்ந்து கவிதை நூல்களையும் வெளியிட்டார். இப்படி பதினேழு நூல்களுக்கு சொந்தக்காரர் இவர். நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை தன் நூல்கள் மூலமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முயற்சியாளர். இதுவரை யாருமே இதுபோல மாற்றுத் திறனாளி சாதனையாளர்களை இந்திய மொழியில் நூல்கள் வாயிலாக ஆவணப்படுத்தியதில்லை.
இதற்கிடையில் 2004-ல் இவர் தொடங்கிய வாசகன் பதிப்பகத்தின் மூலமாக, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், கவிஞர் அறிவுமதி ஐயா போன்ற ஆளுமைகளை முன்னிறுத்தி, தன் பதிப்பகத்தின் வாயிலாய் ஒரே மேடையில் 25 நூல்களை வெளியிட்டும் சாதனை படைத்துள்ளார்.
இவரது வாசகன் பதிப்பகம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் பல புத்தகங்கள் பரிசுகளும் பெற்றுள்ளன. தற்போது இந்த நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில், மாணவ சமுதாயத்தின் நலன்கருதி பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாலை நேரத்தில் இலவச சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏழை மாணவர்கள் வந்து படிப்பதற்காக ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துள்ளார். ஒரு ஆசிரியை தினமும் வந்து சொல்லிக் கொடுக்கிறார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து நடைபெற்று வரும் இந்த அறப்பணியில், தற்போது 25 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதையெல்லாம் நடத்தும் கவிஞர் ஏகலைவன் வசதி படைத்தவரில்லை. புத்தக வெளியீட்டில் வரும் தொகையைக் கொண்டு சமாளித்து வருகிறார்.
வறுமையைப் போர்த்திக் கொண்டே இவர் இன்றுவரை சாதனைப் பயணத்தை நடத்திவருகிறார். சில நல்லுள்ளங்களின் துணையோடும், உதவிக்கரம் நீட்டுவோரின் அன்போடும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார். இவருக்கு மேலும் ஆதரவுக்கரங்கள் கிடைத்தால், இவரது அறப்பணி மேலும் மேலும் சிறக்கும்.
"கனவு காணுங்கள்' என்ற கலாம் அவர்களின் வாசகத்திற்கேற்ப, இவர் காணும் கனவு, ஆதரவற்ற பலருக்கும் கைகொடுப்பதுதான். கைகொடுக்கும் கவிஞர் ஏகலைவனை நாமும் கைகொடுத்து வாழ்த்திடுவோம். முகநூலில் சஹம்க்ஷண்ந்ந்ஹண் யஹஹள்ஹப் ற்ழ்ன்ள்ற் என்ற பக்கத்தில் இவரின் அன்பு சூழ் அறப் பணிகளைப் பார்வையிடலாம். கவிஞர் ஏகலைவனை 98429 74697 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கவிஞர் ஏகலைவனைப் போன்றவர்கள் இருப்பதால்தான் பூமி மீது இன்னும் கூட ஈர மழை இதமாகப் பெய்துகொண்டிருக்கிறது.