பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என ஒவ்வொன்றையும் நம்மைவிட அறிவில் குறைந்தவை என்று சொல்கிறோம். ஆனால் அவற்றிலும்கூட நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன. குறிப்பாக, எறும்புகளிடமிருந்து திட்டமிடலைக் கற்றுக்கொள்ளலாம். மழைக்காலம் வருமுன்பே தங்களுக்கான உணவுகளை சேகரித்து வைத்துக்கொள்கின்றன. சிலந்திகள் மிகவும் திட்டமிட்டு தங்களுக்கான வலையை கலைநயத்தோடு பின்னுகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் திட்டமிட்டு, புழுவாகி, கூட்டுப்புழுவாகி பின்னர் விடுபட்டு வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடித்துப் பறக்கின்றன. இதேபோன்ற திட்டமிடல் மனிதர்களாகிய நம்மிடம் இருக்கின்றதா? எனக் கேள்வி எழுப்பினால், இருக்கு... ஆனால் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும்.
பிள்ளைகளை வளர்ப்பதில், படிக்க வைப்பதில், பணிக்கு அனுப்புவதில் நம்மிடையே திட்டமிடல் இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளையும் எப்படி பயனுள்ளதாகச் செலவிடுவது என்பதில் பெரிதான திட்டமிடல் நமக்கு கிடையாது. 'நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்.' என்ற வரி எவ்வளவு அற்புதமான வரி! ஆம், நிகழ்காலத்தில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செலவிட்டால், அது நம் எதிர்காலத்தை எவ்விதச் சிக்கலுமில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை முறையாக மாற்றிவிடும். திட்டமிடல் குறித்த இந்த வரி, 'எல்லையில்லா கனவுகளின் பயணம்' என்ற வருடாந்திரத் திட்டமிடலுக்கான ப்ளானர் ஜர்ன-ல்தான் எழுதப்பட்டிருந்தது.
'எல்லையில்லா கனவுகளின் பயணம்' என்ற இந்த ப்ளானர் ஜர்னலை

'எல்லையில்லா கனவுகளின் பயணம்' என்ற இந்த ப்ளானர் ஜர்னலை உருவாக்கியது Dreamers Journey Resources என்ற அமைப்பின் நிறுவனரான விஜயமேனகா கிருஷ்ணன். இந்த ப்ளானர் ஜர்னல், பார்க்கும்போதே ஆர்வத்தைத் தூண்டும்விதமாக வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள் முழுக்க முழுக்க நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் செயல்பாடுகளும், திட்டமிடல்களும் நிறைந்திருக்கின்றன. எடுத்ததுமே, 2023ஆம் ஆண்டில் என்னென்ன சாதிக்க வேண்டுமெனத் திட்டமிட்டிருக்கிறோம் என்பதை நமக்கு நாமே கடிதமெழுதி நினைவுறுத்தும் நோக்கில், நமக்கு நாமே கடிதம் எழுதிக்கொள்ளும் பக்கம் உள்ளது. அதில், இந்த ஆண்டில் என்னவெல்லாம் சாதிக்க நினைத்திருக்கிறோம் என்பதைப் பதிவு செய்துவைக்கலாம். அடுத்ததாக, உறுதிமொழி எடுக்கும் பக்கம். இதில், எனக்கான உறுதிமொழி, பிரபஞ்சத்திடம் வைக்கும் கோரிக்கை, தினமும் எடுக்கவேண்டிய உறுதிமொழி என நம்மைச் செதுக்கும் உளி போன்ற செயல்பாடுகள். அடுத்ததாக, இந்த ஆண்டில் எனது இலட்சியம் என்னவென்பதை, தொழி-ல், வீட்டில், உறவுகளில், நிதி மேலாண்மையில் எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து இலக்கை நிர்ணயிக்கும்படி உள்ளது. இலக்கோடு பயணிக்க இது உதவும்.
மேலும், இந்த ஆண்டில் வாசிப்பதற்கான இலக்குகளும், அதற்கான நட்சத்திர ஆதரவு நிலைப்பாடுகளையும் வைத்திருக்கி றார்கள். இதற்கு அடுத்ததாக, ஒவ்வொரு மாதத்துக்கும் மாதாந்திரத் திட்டமிடல், வாராந்திரத் திட்டமிடல், தினசரித் திட்டமிடல் என்றெல்லாம் உள்ளன. இதனை முழுமையாகப் பயன்படுத்தும்போது, இதன் பலனை ஆண்டு இறுதியில் கண்டிப்பாகக் காணலாம். ஆண்டின் இறுதியில் நம்முடைய இலக்குகளில் பலவற்றை மிகவும் தெளிவான செயல்பாட்டால் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த ஜர்ன-ல் நிறைய தன்னம் பிக்கை வரிகள் ஆங்காங்கே கொடுத்திருக்கிறார்கள். இந்த ப்ளானர் ஜர்னலை கையில் வைத்திருந்தாலே நம்முடைய தன்னம் பிக்கையும், தெளிவும் அதிகரிப்பதை உணரலாம்.
இப்படியான ஓர் அற்புதமான ஜர்னலை உருவாக்கிய விஜய மேனகா கிருஷ்ணனிடம், இந்த எண்ணம் எப்படி உருவானது? என்று விசாரித்தோம். "முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியராக இருந்தமையால் தமிழில் ஏதாவது உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதுமே என்னுள் இருந்துவந்தது. திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைப் பயணத்தில், பல நாடுகளைச் சுற்றிவந்து மிகவும் மகிழ்வுடன் இருந்தோம். எங்களுக்கு குழந்தை செல்வம் வந்ததும் நேரத்தை திட்டமிட்டுச் செலவிடவேண்டிய அவசியம் வந்தது. அதிக வேலைப்பளு எனக்கு மன அழுத்தத்தை உருவாக்கியது. எனவே இதற்கான தீர்வு என்னவென்று இணையத்தில் ஆழ்ந்து தேடினேன். அப்போதுதான் ஆங்கில மொழியில் அமைந்த ப்ளானர் ஜர்னல் என் பார்வைக்கு பட்டது. அதைப் பயன்படுத்தியபோது மிகச்சிறப்பாக உணர்ந்ததால், அதையே ஏன் தமிழில் செய்து நம்முடைய தமிழ் மக்களுக்கு பயனளிக்கும்விதமாகக் கொண்டு செல்லக்கூடாது? என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து எனது கணவரோடு கலந்தாலோசனை செய்ததில், ஏன் நீயே ஒரு கேம் சேஞ்சராக இருக்கக்கூடாது?” என்ற கேள்வியை என்மீது தெளித்தார். அதையடுத்து பல்வேறு திட்டமிடல்களுடன் 2022-ஆம் ஆண்டில் உதித்ததுதான் இந்த எல்லை இல்லா கனவுகளின் பயணம் என்ற ப்ளானர் ஜர்னல். இதற்கான கிராஃபிக்ஸ் டிசைனையும், அழகான படங்களையும் நன்முறையில் செய்துகொடுத்தது எனது கணவர் பழனி சுப்ரமணியம். இந்தியாவுக்கு வந்தபோதெல்லாம் அவரது போட்டோகிராபி ஆர்வம் காரணமாக நிறைய விசயங்களை அவரது கேமராவில் படம்பிடித்திருந்தார். எனவே அந்த ஒளிப்படங்களில் சிலவற்றை நான் பயன்படுத்திக்கொண்டேன். என்னுடைய ப்ளானர் ஜர்னல் உருவாக்கத்தில் பல்வேறு யோசனைகளை எனது கணவர்தான் வழங்கினார். அவரது நேரத்தில் பெருமளவு எனக் கென செலவிட்டார். அவர் துணையின்றி இந்த ஜர்னல் உருவாவது அசாத்தியமே.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலமாக இந்த ஜர்னலை உலகிற்கு அறிமுகம் செய்தேன். 'தமிழில் இப்படி ஒரு படைப்பா!' எனப் பலரும் பாராட்டினர். பல முக்கிய பிரமுகர்கள் இந்த ஜர்னலை வாங்கி எனக்கு பெரிதும் தோள்கொடுத்தனர். ஜர்னலை வாங்கிய அனைவருக்கும், முறையே திட்டமிடுவதன் அவசியத்தையும், பயன்பாட்டையும் கூறி, எவ்வாறு பயன்படுத்துவது எனத் தனித்தனியே வழிகாட்டினேன். நமது சமுதாயத்தில் நேர மேலாண்மையை சிறப்பாகச் செயல்படுத்தி, அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதே எனது லட்சியமாகும். வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு இந்த ப்ளானர் ஜர்னல் நிச்சயம் பெரும் வழிகாட்டியாக அமையுமென்று நம்புகிறேன்.
எங்கள் குடும்பத்திற்கும் எங்கள் மாமா நக்கீரன் கோபால் அவர்கள் குடும்பத்திற்கும் இடையே கால் நூற்றாண்டுக்கும் மேலாக பழக்கம். நட்பைக் கடந்த சொந்தமாக எங்கள் இரு குடும்ப நட்பு இன்றும் திகழ்கிறது.
எங்கள் இரு வீட்டு விசேஷங்கüலும் இரு குடும்பமும் கலந்து கொள்வதையும் அதிலும் மலேசியாவில் எங்கள் குடும்ப நிகழ்ச்சிகüல் நக்கீரன் கோபால் மாமா அவர்கüன் தம்பி குருசாமி மாமா அவர்கüன் குடும்பத்தினர் தவறாமல் கலந்து கொள்வார்கள். அதனால் உண்டாகும் மனநிறைவை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் சமூக பிரச்சனைகளைக் கையிலெடுத்துக்கொண்டு தங்கள் பத்திரிகையின்மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். சமூகத்துக்குப் பயனளிக்கும்விதமாக ப்ளானர் ஜர்னலை உருவாக்குவதற்கு இதுவும் ஒரு காரணம். சென்னை வரும்போது நக்கீரன்கோபால் மாமா அவர்கüடம் இந்த ஜர்னலை கொடுத்து ஆசீர்வாதத்தையும், அவரது கருத்தையும் பெறுவேன். மலேசியா வந்திருந்த நக்கீரன் பத்திரிகை யின் மேலாண்மை நிர்வாகி குருசாமி அவர்களிடம் எனது ப்ளானர் ஜர்னலை அளித்தபோது, இதன் வடிவமைப்பையும், உள்ளடக்கத் தையும் பார்த்து வியந்து பாராட்டினார். "இந்த மாதாந்திர திட்ட கையேட்டின் சிறப்பம்சமே நடைமுறை ஆங்கில வாக்கிய பயன்பாட்டுடன், அழகிய தமிழ்ச் சொற்களாலும் கையேட்டு திட்ட முறைகளுக்கு தலைப்பிட்டிருப்பதுதான். அது எனக்கு மனநிறைவைத் தந்தது. விரைவில் இந்த ஜர்னலை இந்தியாவில் விரிவாக வினியோகிப்பதே எனது அடுத்த குறிக்கோளாகும்'' என்றார். மக்களுக்குப் பயனுள்ள ஒன்றை செய்துகொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு இருக்கும் விஜய மேனகா கிருஷ்ணனுக்கு பாராட்டுகள்!
-தெ.சு.கவுதமன்