கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
என்கிறார் வள்ளுவர். இதன் பொருள், கல்வி ஒன்றுதான் அழிவற்ற செல்வம். அதற்கு இணையான செல்வம் உலகில் எதுவுமில்லை என்பதாகும். அழியாத செல்வம் என்று வள்ளுவப் பெருந்தகையால் குறிப்பிடப்பட்ட கல்வி, இன்று படிக்கச் செல்லும் மாணவ- மாணவிகளை அழிக்கும் கொலைக் கருவி யாக மாறிக்கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.
*
சர்வதேச அளவில் தரமான கல்வியைப் போதிக்கும் நிறுவனம் என பலரும் நம்பிக்கொண்டிருக்கும் ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) நிறுவனங் களில்தான், தற்கொலை என்ற பெயரில் மாணவர்களின் உயிர்ப்பலிகள் அதிரவைக்கும்வகையில் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி. தற்கொலைகளின் எண்ணிக்கை 52 என நம்மைப் பதறவைக்கிறது ஒரு புள்ளிவிவரம். அந்தத் தற்கொலை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது சென்னை ஐ.ஐ.டி.தானாம்.
அண்மைக் காலத்தில் ஷகர், ரஞ்சனா, கோபால் பாபு என ஐந்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கே தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்தத் துயரப் பட்டியலில், கடந்த 9-ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப்பின் பெயரும் சேர்ந்திருப்பது, நம் இதயத்தைப் பிசைகிறது.
இந்தத் தற்கொலைகளுக்குக் காரணம், அங்கே ஆதிக்கும் செலுத்தும் இனவெறி, மதவெறிப் பாம்புகள்தான் என பலரும் குற்றம் சாட்டிவந்த நிலையில், அதை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்திருக்கிறது மாணவி பாத்திமாவின் மரணக் குறிப்பு.
நான்கு மாதங்களுக்குமுன்பு, ஏராளமான கனவுகளோடு நுழைவுத் தேர்வை எழுதி, அதில் முதல் ரேங்க் எடுத்து, சென்னை ஐ.ஐ.டி.க்குள் காலெடுத்து வைத்த அந்த மாணவி, போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு ஒரு பொட்டலமாகத்தான் ஆம்புலன்ஸில் தன் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.
அவர் செய்த குற

அவர் செய்த குற்றம், பிராமண வகுப்பிலே பிறக்காத அவர், முதல் ரேங்க் பெற்று, ஐ.ஐ.டி.க்குள் நுழைந்ததுதானாம். அதிலும் இஸ்லாமிய சமுகத்தில் பிறந்து, முதல்தர மாணவியாக விளங்கியது பெரும்குற்றமாம். அதனாலேயே பாத்திமா தொடர் டார்ச்சருக்கு ஆளானதாகத் தன் தோழிகளிடமும் குடும்பத்தாரிடமும் அழுது புலம்பியிருக்கிறார்.
பேராசிரியர்கள் என்ற பெயரில் அங்கேயிருக்கும் இனவெறி, மதவெறிப் பாம்புகள், பிராமணரல்லாத மாணவர்களையும் பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்களையும் படிப்பில் கரையேற விடாமல் துரத்தித் துரத்திக் கொத்தி, தூக்குக் கயிற்றின்முன் நிறுத்துவது வழக்கமான ஒன்றாம்.
அப்படித்தான் மாணவி பாத்திமா வும் தூக்குக்கயிறை நோக்கித் துரத்தப் பட்டிருக்கிறார். தன்னை மரணத்திற்குத் துரத்திய விஷ ஜந்துக்கள் யார் யார் என்று தற்கொலைக்குமுன்பு வாக்கு மூலம்போல் மரணக்குறிப்பு எழுதியிருக் கிறார் பாத்திமா.
அவர் தன் செல்போனில் எழுதி வைத்த குறிப்பில் என் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று, அந்த ஐ.ஐ.டி. யில் பேராசிரியர்களாக இருக்கும் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா, மிலிண்ட் பிராமே என்ற மூவரின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
அந்த மாணவி, தன் வாழ்வையே வெறுத்துத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு, அங்கே என்னென்ன அவமானங் கள், நெருக்கடிகள் அவருக்குத் தரப்பட்டன? அவை யாரால் தரப்பட்டன? என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையோ, தனிப்பட்ட காரணத்தால்தான் தற்கொலை என்று அவசர அவசரமாக ஃபைலை மூடுவதிலேயே மும்முரம் காட்டியது. பாத்திமாவின் மரணக் குறிப்பை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
மகளைப் பறிகொடுத்த பாத்திமா வின் குடும்பம், முதல்வர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடியைச் சந்தித்து முறையிட்டும், கேரள முதல்வர் பினராய் விஜயன், இதுகுறித்து விசாரித்து நீதி வழங்கும்படி கோரிக்கை வைத்தும், பல்வேறு அமைப்புகள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியும், ஐ.ஐ.டி. மாணவர்கள் நீதிகேட்டுப் போராடியும், தமிழக அரசும், தமிழக காவல்துறையும் கள்ள மௌனம் சாதிக்கின்றன.
தமிழகத்தில் இப்படியொரு கொடுமை தொடர்வது பற்றி எடப்பாடிக் கூட்டம் கவலைப்படவே இல்லை. எது எதற்கோ, வரிந்துகட்டி வாய் ஜம்பம் அடிக்கும் மந்திரிகளும், ஐ.ஐ.டி.யில் அரங் கேறும் அநீதிகளுக்கு எதிராக வாய் திறக்கவில்லை.
குற்றவாளிகளைத் தொடமுடியாத தமிழகக் காவல்துறை, நீதிகேட்டுப் போராடுகிறவர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது.
யாரைக் காப்பாற்றுவதற்காக எடப்பாடி அரசும், காவல்துறையும் போராடுகின்றன?
*
அதே ஐ..ஐ.டி.யில் ஏறத்தாழ 28 ஆண்டுகள் துணைப் பேராசிரியராக இருந்து, அங்கிருந்த வைதீக விஷப் பாம்புகளோடு போராடி, முழுமையான நீதியைப் பெறமுடியாமலே அங்கிருந்து ஓய்வுபெற்று வெளியே வந்துவிட்ட நம் காலத்து ’கணிதமேதை’ முனைவர் வசந்தா கந்தசாமி சொல்கிறார்... ""ஐ.ஐ.டிக்கு வெளியேயும் உள்ளேயும் சாதீய கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் உயர் சமூகக் கும்பல், (ஐயர், ஐயங்கார்) தங்கள் சமூகத்தைச் சாராத எந்த மாணவரையும், வெற்றிகரமான மாணவராக வெளியே அனுப்பிவைக்காது.
அவர்களே பாடம் போதித்து, அவர்களே தேர்வுவைத்து, அவர்களே திருத்தி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை மட்டுமே பாஸ் பண்ணவைத்து வெளியே அனுப்புவார்கள். அங்கே மறுகூட்டல் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் மற்ற மாணவர்களை அனைத்து வகையிலும் அவமானப்படுத்தி, சிறுமை செய்து, விரக்தியை நோக்கித் தள்ளுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்'' என்று அழுத்த மாகச் சொல்வதோடு, ’பாத்திமாவின் தற்கொலை என்பது நிறுவனப் படுகொலை என்கிறார்.
இவர் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவருடைய எல்லா நூல்களும் வெளிநாடுகளில்தான் வெளியிடப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்களால்தான் அவர் கொண்டாடப்படுகிறார்.
28 ஆண்டுகள் அவர் ஐ.ஐ.டி.யில் பணியாற்றியும், அவர் பிராமணரல்லாத வர் என்பதால் பல்வேறு வகைகளிலும் அவர் தொடர்ந்து ஒடுக்கப் பட்டிருக்கிறார். அதைச் செய்தது, அங்கே இருக்கும் இனவெறி, மதவெறிப் பாம்புகள்தான்.
அவர்மட்டுமல்ல; ஷாலினி போன்ற உளவியல் நிபுணர்கள், தங்களிடம் மன அழுத்தம் காரணமாக ஏராளமான ஐ.ஐ.டி. மாணவ- மாணவியர் வருவதாகவும், அவர்கள் அங்கு நடக்கும் சாதிவெறி, மதவெறிக் கொடுமைகளைச் சொல்லிக் கதறுவதாகவும் சொல்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது, சென்னை ஐ.ஐ.டி. என்பது ஒரு விசாலப் பார்வையுள்ள கல்வி நிறுவனமாக இல்லாமல், வைதீகப் பேய்களின் வாழ்விடமாக இருக்கிறது என்று வெளிப்படையாகவே தெரிகிறது. தங்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்ற மமதையோடு, அங்கிருக்கும் வைதீகப் பாம்புகள், அவாள் அல்லாத அப்பாவி மாணவர்களைக் கொத்திக் கொத்தி, வாழ்வின் எல்லையில் கொண்டுபோய் நிறுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறதாம். வைதீக விஷமிகளால் பாதிக்கப்பட்ட உயர் சமூகத்தைச் சாராத மாணவர்கள், "நாங்கள் அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கிறோம். என்னதான் நாங்கள் நன்றா கப் படித்துத் தேர்வெழுதினாலும் எங்கள் மதிப்பெண்களை வேண்டுமென்றே குறைப் பார்கள். அதை யாராலும் தட்டிக் கேட்க முடியாது. காரணம், சகல மட்டத்திலும் சகல இடத்திலும் அவர்களின் பிரதிநிதிகள் இருந்துகொண்டு, அங்கு நடக்கும் கொடூரங்கள் வெளியே தெரியாதபடி திரை கட்டுகிறார்கள். உள்ளே அரங்கேற்றப்படும் தற்கொலைகள், வெவ்வேறு திரைக்கதை வசனம் எழுதி, முடித்துவைக்கப்பட்டு விடுகின்றன' என்கிறார்கள் கலக்கமாய். இந்தக் கொடுமைகளை நாம் எத்தனை நாள் வேடிக்கை பார்ப்பது?
உலகமே விஞ்ஞானமயமாய்... கணிணிமயமாய் ஆன பின்னரும், ஐ.ஐ.டி. மட்டும் வேதகாலத்தில் இருந்தபடி, மனுதர்ம நீதியை அனுசரித்துக் கொண்டிருக்கிறது. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவனின் உயர் நெறியைப் போதிக்கவேண்டிய அந்த நிறுவனம், பிறப் பால் எல்லோரும் சமமில்லை. நாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். நாங்கள் மட்டுமே கல்வி கேள்விகளில் உயரமுடியும் என்று திமிர்வாதம் செய்துகொண்டிருக்கிறது. இதை நாகரிக சமூகத்தால் எப்படி அங்கீகரிக்கமுடியும்?
இந்தியா முழுக்க ஒரே கல்வி என்று நீட்டி முழக்கும் மோடி அரசு, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும், தனிக்கல்வி, தனி சட்ட திட்டங்கள், வைதீகத்தின் அடிப்படை யில் அங்கே தனி ராஜாங்கம் என்று இருப்பதை கவலை யில்லாமல் அங்கீகரித்துக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவர்களின் இந்துத்துவா நிறுவனம் போலவே அது இருப்பதால், அட்சதைகளை வாரி வாரி இறைத்து வருகிறது டெல்லி.
மாணவி பாத்திமாவின் தற்கொலை வழக்கை விசாரித்துவரும் காவல்துறையின் சி.சி.பி. பிரிவு, விரைவில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் மாணவர்களின் கூட்டமைப்பினர், இதில் நம்பிக்கையில்லாமல், பாத்திமா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள். நீதித்துறை மூலமாவது ஐ.ஐ.டி. நிறுவன உயிர்ப்பலிகளுக்கு முற்றுப்புள்ளி விழவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ சமுதாயம் ஆவலோடு காத்திருக்கிறது.
பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கிடைப்பதோடு, சாதிவெறி, மதவெறிப் பாம்புகளின் ஆக்கிரமிப்பில் இருந்து ஐ.ஐ.டி. மீட்கப்படவேண்டும்.
பெரியார் பிறந்த தமிழக மண்ணில், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயே வைதீகம் கோலோச்சுவதை அறிவார்ந்த இளைய சமூகம் இனியும் அனுமதிக்காது.
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு,
நக்கீரன்கோபால்