பல நூறு நூற்றாண்டுகள் நிலைப்பவர் - கலைஞர் சி.அன்னக்கொடி

/idhalgal/eniya-utayam/persisting-hundreds-centuries-artist-cannakodi

லைஞர் என்ற சொல் ஒரு மந்திரச் சொல்.அது ஒரு மாயச் சொல். நினைக்க நினைக்க சிலிர்க்க வைக்கும் வைக்கும் சொல். நினைத்துப் பார்க்கிறேன்... அவர் வாழ்க்கைப் பாதையை. என்னை மலைக்க வைக்கிறது. அரசியல் கடந்தும் ஆராதிக்கத்தக்க மாமனிதர் அவர். அவர் ஒரு மனித ஆச்சரியம்.

’அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.’

-என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்பதன் அருள் நிறைந்த நெஞ்சத்தால், இல்லாதபோதும் ஒளிவெள்ளத்தில் மிதக்கிற தலைவர் அவர். அவரது பெயரும், புகழும் நினைவுகளும் எப்போதும் இருள்படியாதவையாகவே இருக்கும்.

உலகத் தலைவர்களை எல்லாம் கலைஞரோடு எடைபோட்டுப் பார்க்கிறேன். அவருக்கு ஈடான ஒருவரை கால தூரங்களைக் கவனித்தாலும் ஒருவரையும் காணமுடியவில்லை.

dd

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நினைத்த எண்ணங்களை மட்டும் அல்ல. கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஃபிடல் காஸ்ட்ரோ போன்றவர்களின் கொள்கைகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர்.

ஒரு பேட்டியில், தந்தை பெரியாரைச் சந்தித்திருக்காவிட்டால் நான் பொதுவுடமை இயக்கத்தில் சேர்ந்திருப்பேன் என பகிரங்கமாகச் சொன்னவர் கலைஞர். அது மட்டும் அல்ல. உலகில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் எனக் கேட்டதற்கு, அவர் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்ன பதில்... ஃபிடல் காஸ்ட்ரோ. அது மட்டுமல்ல. அவரைப் போலவே மறுமலர்ச்சிக் கொள்கைகளை தமிழ்நாட்டில் நிறைவேற்றவும் செய்தார்.

இன்றைக்கு அரசுப் பேருந்துகள் வரக் காரணம் கலைஞர். லாபத்தை மட்டுமே கணக்கில்கொண்டு இயங்கிவந்த தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கி, அதனை லாப நட்டக் கணக்கு பார்க்காமல் சாதாரண குக்கிராமத்திற்கும் இயக்கச் செய்தவர் அவர். கம்யூனிஸ்ட் ஆண்ட மாநிலங்களிலேயே கை ரிக்சாவை ஒழிக்காத நேரத்தில், மனிதனை மனிதன் கொளுத்தும் வெயிலில் ரத்தத் துளிகளை வேர்வையாகச் சிந்தி இழுப்பதா? என அதை சைக்கிள் ரிக்சாவாக மாற்றிக் கொடுத்தவர் கலைஞர். இதை மேற்கு வங்கத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் ஆண்ட ஜோதிபாசு ஆட்சி காலத்தில்கூட கொண்டுவரவில்லை. அதன்பின் வந்த புத்ததேவ் ஆச்சார்யா காலத்தில்தான் கைரிக்சா ஒழிக்கப்பட்டது.

பெரும் பண்ணைகளிடமிருந்து கொத்தடிமைகளாக இருந்த விவசாயத் தொழிலாளர்களை மீட்கப் போராடியவர் முத்தமிழறிஞர் கலைஞர். தனது ஆட்சிக் காலத்தில்தான் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து, அதிக நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தை எடுத்து, ஏழை எளிய விவசாயிகளுக்கு பிரித்தளித்தார். அதேபோல இந்திரா அம்மையார், மன்னர் மானிய ஒழிப்பும் வங்கிகள் தேசியமயமாக

லைஞர் என்ற சொல் ஒரு மந்திரச் சொல்.அது ஒரு மாயச் சொல். நினைக்க நினைக்க சிலிர்க்க வைக்கும் வைக்கும் சொல். நினைத்துப் பார்க்கிறேன்... அவர் வாழ்க்கைப் பாதையை. என்னை மலைக்க வைக்கிறது. அரசியல் கடந்தும் ஆராதிக்கத்தக்க மாமனிதர் அவர். அவர் ஒரு மனித ஆச்சரியம்.

’அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.’

-என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்பதன் அருள் நிறைந்த நெஞ்சத்தால், இல்லாதபோதும் ஒளிவெள்ளத்தில் மிதக்கிற தலைவர் அவர். அவரது பெயரும், புகழும் நினைவுகளும் எப்போதும் இருள்படியாதவையாகவே இருக்கும்.

உலகத் தலைவர்களை எல்லாம் கலைஞரோடு எடைபோட்டுப் பார்க்கிறேன். அவருக்கு ஈடான ஒருவரை கால தூரங்களைக் கவனித்தாலும் ஒருவரையும் காணமுடியவில்லை.

dd

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நினைத்த எண்ணங்களை மட்டும் அல்ல. கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஃபிடல் காஸ்ட்ரோ போன்றவர்களின் கொள்கைகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர்.

ஒரு பேட்டியில், தந்தை பெரியாரைச் சந்தித்திருக்காவிட்டால் நான் பொதுவுடமை இயக்கத்தில் சேர்ந்திருப்பேன் என பகிரங்கமாகச் சொன்னவர் கலைஞர். அது மட்டும் அல்ல. உலகில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் எனக் கேட்டதற்கு, அவர் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்ன பதில்... ஃபிடல் காஸ்ட்ரோ. அது மட்டுமல்ல. அவரைப் போலவே மறுமலர்ச்சிக் கொள்கைகளை தமிழ்நாட்டில் நிறைவேற்றவும் செய்தார்.

இன்றைக்கு அரசுப் பேருந்துகள் வரக் காரணம் கலைஞர். லாபத்தை மட்டுமே கணக்கில்கொண்டு இயங்கிவந்த தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கி, அதனை லாப நட்டக் கணக்கு பார்க்காமல் சாதாரண குக்கிராமத்திற்கும் இயக்கச் செய்தவர் அவர். கம்யூனிஸ்ட் ஆண்ட மாநிலங்களிலேயே கை ரிக்சாவை ஒழிக்காத நேரத்தில், மனிதனை மனிதன் கொளுத்தும் வெயிலில் ரத்தத் துளிகளை வேர்வையாகச் சிந்தி இழுப்பதா? என அதை சைக்கிள் ரிக்சாவாக மாற்றிக் கொடுத்தவர் கலைஞர். இதை மேற்கு வங்கத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் ஆண்ட ஜோதிபாசு ஆட்சி காலத்தில்கூட கொண்டுவரவில்லை. அதன்பின் வந்த புத்ததேவ் ஆச்சார்யா காலத்தில்தான் கைரிக்சா ஒழிக்கப்பட்டது.

பெரும் பண்ணைகளிடமிருந்து கொத்தடிமைகளாக இருந்த விவசாயத் தொழிலாளர்களை மீட்கப் போராடியவர் முத்தமிழறிஞர் கலைஞர். தனது ஆட்சிக் காலத்தில்தான் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து, அதிக நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தை எடுத்து, ஏழை எளிய விவசாயிகளுக்கு பிரித்தளித்தார். அதேபோல இந்திரா அம்மையார், மன்னர் மானிய ஒழிப்பும் வங்கிகள் தேசியமயமாக்கலும் கொண்டு வந்தபோது முதன்முதலில் ஆதரித்தவர் கலைஞர்.

எந்த ஒரு திட்டத்தையும் யாராவது எந்த மாநிலமாவது கொண்டு வரட்டும். அதன் பின்னர் நாம் கொண்டுவரலாம் என கலைஞர் அவர்கள் நினைத்ததேயில்லை. ஒரு தலைவருக்கு சிந்திக்க தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அந்த சிந்தனை அரைகுறையானதாகவோ, அதிகாரவெறி மிக்கதாகவோ, சுயநலமிக்கதாகவோ இருக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அவனும் அழிவான். நாடும் அழியும். அதற்கு உதாரணவாதிகளாக முசோலினி, ஹிட்லரைக் குறிப்பிடலாம். ஆனால் கலைஞர் தனது கொள்கைக்காக ஆட்சியை ஒருமுறை அல்ல... இருமுறை இழந்தார். இது மட்டும் அல்ல. தந்தை பெரியார் மறைந்தபோது அரசு மரியாதை செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் சொன்ன போது, எந்த அரசுப் பதவியிலும் அவரிருந்ததில்லை. அதனால், அரசு மரியாதைக்கு சட்டத்தில் இடமில்லையே என அவர்கள் கையைப் பிசைந்தார்கள்.

அதைப் பார்த்த கலைஞர், என்ன? என்று புருவம் உயர்த்திக் கேட்டார். பின்னர் அடுத்த நொடியே, மகாத்மா காந்தி எந்த பதவியில் இருந்தார்? என்றார் கலைஞர். அதோடு விடவில்லை அதிகாரிகள். டெல்லியிலிருந்து கடும் நெருக்கடி ஏற்படும் என்றார்கள். கலைஞரோ, என் ஆட்சியே போனாலும் பரவாயில்லை. அய்யாவுக்கு அரசு மரியாதை செலுத்தியே ஆகவேண்டும் என்று சொன்னார். இந்த இடத்தில் இந்த கொள்கை உறுதியை அண்ணாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியை எதிர்த்து, பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக வரவேண்டும் என தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அண்ணா, தி.மு.கழக சட்டமன்றத் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வரானபோது அய்யா திருச்சியிலிருந்தார். அண்ணா திருச்சி விரைந்தார். அன்று கூட்டணியிலிருந்த ராஜாஜி உட்பட? எல்லா தலைவர்களும் இதனை எதிர்பார்க்கவில்லை. எதிர்த்தார்கள். ஆனால் அண்ணா இதனையெல்லாம் சட்டை செய்யவில்லை. அய்யாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அய்யா நெகிழ்ந்தார். அதோடு விடவில்லை அண்ணா. இந்த ஆட்சி, தந்தை பெரியாருடைய ஆட்சி என்றார். பெரியார் பற்றில் அண்ணனுக்கும் தம்பிக்கும் எவ்வளவு உறுதி, ஒற்றுமை என்று பாருங்கள்.

இன்றைக்கு கட்சி துவங்கிய காலத்திலிருந்து, கட்சிப் பெயரையும், கொடியையும், சின்னத்தையும் இந்தியத் துணைக் கண்டத்திலேயே மாற்றாமல் வைத்திருக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. அதற்குக் காரணகர்த்தா கலைஞர். அவருடைய உழைப்பு, தியாகம், உறுதி இவை மூன்றும்தான் இவற்றைக் காப்பாற்றியது. இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பாட்னாவில், மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார். இதே பீகாரின் முன்னாள் முதல்வரான பட்நாயக், தி.மு.க.வையும் அ.தி.மு.கவையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார். கலைஞரிடமும் எம்.ஜி.ஆரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலைஞர் போட்ட நிபந்தனை என்ன தெரியுமா? எந்த பதவியையும் நண்பர் எம்.ஜி.ஆர் எடுத்துக் கொள்ளட்டும். அண்ணா கண்ட தி.மு.க இருவண்ணக் கொடி, உதயசூரியன் சின்னம் இவற்றை ஏற்றுக்கொண்டு இயங்க எம்.ஜி.ஆர் சம்மதித்தால், இணையத் தயார் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ஒத்துக்கொள்ளாத தால் அந்த முயற்சி ஈடேறவில்லை. இந்த உறுதிதான் தி.மு.க.வின் பெரும்பலமாக அமைந்தது.

அதே போல 1993 ஆம் ஆண்டு ஒரு நெருக்கடியான சூழல் வந்த போது, கட்சியைக் காப்பாற்ற அவர்பட்ட பாடு, கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு பல பேர் திராவிட மாடல் என்ற சொல்லை விமர்சித்து ஏகடியம் செய்கிறார்கள். எல்லாவித வளர்ச்சியிலும்

எல்லா மாநிலங்களையும்விட இன்றைக்கு தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றால் அது கலைஞரின் மகத்தான திராவிட மாடல் சாதனைதான்.

எதையும் முன்யோசனையின்றி கலைஞர் செய்ததில்லை..

அவர் கொண்டுவந்த இலவசத் திட்டங்கள், யானைப் பசிக்கு சோளப் பொறி எனச் சொல்லுவார்களே அப்படிப்பட்டவை அல்ல .

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்னாரே வள்ளலார். அவருடைய கருணை இதயத்தைக் கொண்ட கலைஞர், ரெண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்கிற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதேபோல, இந்தியத் துணைக் கண்டத்திலேயே விவசாயப் பெரு மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியது கலைஞர்தான்.

அண்ணல் அம்பேத்கர், கனவு கண்டு நிறைவேற்ற முடியாமல் அமைச்சர் பதவியையே துறந்தார். அதுதான் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமபங்கு சொத்துரிமை என்கிற கனவு. அதற்கான சட்டத்தை நிறைவேற்றி மகிழ்ந்தவர் கலைஞர். இதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தான், ஒன்றிய அரசாங்கம் இந்த சட்டத்தை நிறைவேற்றியது. இதில் ஒன்றிய அரசாங்கத்திற்கு வழிகாட்டியாக கலைஞர் திகழ்ந்தார் என்றால் மிகையாகாது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய சாதனைகளை செய்துவந்தவர் கலைஞர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீதம் இடஒதுக்கீடு ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்து அவர்களை உயர் பதவிகளில் உட்கார வைத்து, ஏற்றத்தாழ்வற்ற சமநிலையை உருவாக்கியவர் கலைஞர். அதேபோல அருந்ததியர் மக்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க, அவர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு கொடுத்தவரும் கலைஞர்தான். அது போலவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் உரியதைச் செய்த மனிதப் புனிதர் அவர்.

ஊனமுற்றோரை நொண்டி, முடம், குருடு, செவிடு என்று சொல்லிவந்த நிலையை மாற்றி, அவர்களை மாற்றுத் திறனாளி என அழைக்க வைத்த மாண்புக்குரியவர் கலைஞர். அதேபோல் பல்வேறு கீழ்மைப் பெயர்களில் சுட்டப்பட்ட கொடுமையை ஒழித்து, மூன்றாம் பாலினருக்கு திருநங்கையர் என்ற திருப்பெயரைச் சூட்டியவரும் கலைஞர்தான்.

இப்படிப்பட்ட புரட்சிகளுக்கு சூத்திரதாரியான கலைஞர்தான், ஒன்றிய அரசிடம் வாதாடி, சுதந்திரத் திருநாளில் தலைமைச் செயலகத்தில் மாநில முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமையையும் பெற்றுத் தந்தார்.

dd

அண்ணா சொல்வார் பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு கொள்கை என்பது இடுப்பில் உடுத்தியிருக்கும் வேட்டி. அதைக் கடைப்பிடித்தவர் கலைஞர். இரண்டு முறை ஆட்சி முறை இழந்த போது அவர் ஒருபோதும் கவலை கொண்டதில்லை. அந்த சமயத்திலும் கலகலப்பு குறைந்த தில்லை. மேலே இருப்பவர்கள் ஆட்சியைக் கலைப்பார்கள் கலைஞரோ குடும்பத்தில் உள்ளவர்கள் இறுக்கத்தை கலைஞர் கலைப்பார்.

அதேபோல சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் இருந்தால் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், இடி, மின்னல், மழை என சுப்பு, துரைமுருகன், ரகுமான்கான் மூவரும் சட்டமன்றத்தை அதிர வைப்பார்கள். கலைஞர் உட்கார்ந்து ரசிப்பார். எம்.ஜி.ஆர். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறுவார். ஒருமுறை துரைமுருகன் பேசிக்கொண்டே இருக்கிறார். எம்.ஜி.ஆர் பல முறை பதில் சொல்கிறேன் உட்கார் உட்கார் என்கிறார். உட்கார மறுத்து பேசிக்கொண்டே இருந்தார் துரைமுருகன். வெறுத்துப்போன எம்.ஜி.ஆர், உன்னை இனி ஆண்டவன்தான் உட்கார வைக்கனும் எனச் சொல்லிவிட்டு அமர்ந்தார். உடனே கலைஞர் எழுந்தார்... துரை உட்கார் என கை? அசைத்தார். உடனே அவரும் உட்கார்ந்து விட்டார். அப்போது கலைஞர் சொன்னார், நான் ஆண்டவன். இந்தத் தமிழகத்தை ஆண்டவன். அதனால் நான் சொன்னவுடன் துரைமுருகன் உட்கார்ந்துவிட்டார் என்றார். எம்.ஜி.ஆர் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதை ரசித்துக் கைதட்டினார்கள். இப்படி கலைஞரின் சமயோஜித மின்னல் தெறிப்புகள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதே போல்தான் தலைவர் கலைஞரும்.சென்னையிலிருந்து புகைவண்டியில் நெல்லை வருகின்றார் என்றால் சாத்தூர் ரயில் நிலையத்தில் சாத்தூர் பாலகிருஷ்ணன் சாத்தூர் சேவோடு நிற்பார். அதனை அன்போடு வாங்கிச் செல்வார் கலைஞர். அது மட்டும் அல்ல அந்த சாத்தூர் பாலகிருஷ்ணன் மிசாக் கொடுமையில் மறைந்தபோது அந்தத் தொண்டனின் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கிளம்பியபோது தலைவர் கலைஞரின் ஓட்டுநர் தன்னைக் கைதுசெய்துவிடுவார்களோ அஞ்சி கார் ஓட்ட மறுத்து வீட்டுக்கு போய்விடுகிறார். தலைவர் கலைஞர் அந்த தொண்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த எப்படியாவது செல்ல வேண்டுமே என நினைத்த நேரத்தில் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கண்ணப்பன் வருகிறார். தலைவர் நிலையை அறிந்து நான் ஒட்டிவருகிறேன் என்கிறார். நேற்று வரை அமைச்சராக பவனி வந்தவர் இன்று ஓட்டுநர். கலைஞர் வியக்கிறார். கண்ணப்பன் கார் ஓட்ட கலைஞர் அமர்ந்து வருகிறார். சாத்தூர் வந்து பாலகிருஷ்ணன் உடலுக்கு மரியாதை செய்ததோடு இறுதி ஊர்வலத்திலும் மயானம் வரை நடந்தே சென்றார். இதனாலேயே? காரோட்டிக் கண்ணப்பன் என பெயர் ஏற்பட்டது. தொண்டர்கள் விசயத்தில் அண்ணன் தம்பி இருவரும் இரயில் தண்டவாளம்போலவே இணையாகச் சென்றார்கள்.

கோயிலை உருவாக்குகிறவர்களே கோயிலுக்குப் போகமுடியாத நிலை இருப்பதை, பெரியார் இதயத்தில் உறுத்திய முள் என்பார்கள். கல் சுமந்து, மண் சுமந்து கொத்து வேலை பார்த்து, சிற்ப வேலை பார்த்தவர்கள் வெளியே நின்று யாரோ போல் சாமி கும்பிடுகிறார்களே... ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடாத கூட்டம் கோவிலையே ஆக்கிரமித்துவிடுகிறதே.. என தந்தை பெரியார் வாழ்நாளெல்லாம் கவலைகொண்டார். அந்தக் கவலையை நீக்கும் வகையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தைக் கொண்டு வந்து, பெரியார் இதயத்தில் தைத்திருந்த முள்ளை நீக்கியவர் கலைஞர். இந்தத் திட்டம் செயலாக்கம் பெற்றுவிட்டது. முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு விட்டார்கள். இது இங்கு மட்டும் அல்ல. கேரளாவிலும் இப்போது நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது. கலைஞர் கொண்டுவந்த சட்டங்களிலேயே மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைச் சட்டம் இது எனலாம்.

கலைஞர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பது மிகப் பெரிய பெருமை. அதைவிட கலைஞர் நூற்றாண்டு விழாவை நாடெங்கும் கொண்டாடும் இந்த நேரத்தில் கலைஞர் இல்லையே என்கிற ஏக்கம் இதயத்தை கனக்க வைக்கிறது. எனினும் கலைஞர், அரசின் இயக்கமாக இருக்கிறார் என்கிற ஆறுதல் நெஞ்சில் ஏற்படுகிறது.

கலைஞரின் புகழ் என்பது, இந்த நூற்றாண்டுக்கானது மட்டும் அல்ல. இன்னும் பலநூறு நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கக்கூடியது.

uday010723
இதையும் படியுங்கள்
Subscribe