"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.'

என்கிறார் வள்ளுவர்.

ஒருவன் எதை அடக்கி வைக்காவிட்டாலும் தன் நாவையாவது அடக்கி வைக்க வேண்டும். இல்லையேல் அந்த நாக்கே பெரும் அவமானம் மிகுந்த துன்பத்தை உருவாக்கி விடும் என்று இதன் மூலம் அவர் எச்சரிக்கிறார்.

இந்தக் குறள் இப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு மிகவும் பொருத்தமான குறளாக இன்று மாறியிருக்கிறது.

சீமானின் எல்லை மீறிய விமர்சனங்களை -அதிலும் தமிழகம் போற்றும் மாபெரும் புரட்சியாளரான தந்தை பெரியார் அவர் களைப் பற்றி தடித்த வார்த்தைகளில், ஒருமைச் சொற்களில் அவர் வைக்கிற விமர்சனங்களை -நாம் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழர்களுக்கு இன உணர்வும் மொழி உணர்வும் வந்திருக்காது.

அவர் சுயமரியாதைக்காக போராடாவிட்டால், இன்று இருக்கிற சமத்துவத்தை நம்மால் அனுபவித்திருக்க முடியாது. 50, 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த சாதிய ஒடுக்குமுறைகளை நம்மால் இவ்வளவு எளிதில் கடந்திருக்க முடியாது. பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்க அரசாங் கமோ, அவற்றின் சாதனைகளோகூட இங்கே சாத்தியமாகி இருக்காது.

தந்தை பெரியார்தான் முதன் முதலில் 40-களி லேயே திருக்குறள் மாநாடுகளை நடத்தி, தமிழின் புகழை உலகின் கண்களுக்குக் கொண்டு சென்றவர். அவர்தான் எதிர்கால அறிவியல் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்து, தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை உருவாக்கியவர். அவர்தான் ஆண் களுக்குச் சமமாகப் பெண்களும் உரிமைபெற்று வாழ வேண்டும் என்று முழக்கமிட்டு, பெண்களைக் கொண்டே மாநாடுகளை நடத்தியவர். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று முதன் முதலில் குரலெழுப்பிய புரட்சியாளர் பெரியார்.

Advertisment

ss

இன்று நாம் அறுவடை செய்கிற வாழ்வின் அத்தனை ஆச்சரியங்களுக்குப் பின்னாலும் தந்தை பெரியார் இருக்கிறார்.

அப்படிப்பட்ட பெரியாரைப் பற்றி சீமான், இடையில் ஏற்பட்ட இந்துத்துவா உறவுகளால் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார். வரம்பு மீறிப் பேசுகிறார். பண்பாட்டுக் கேடான குற்றச் சாட்டுகளை வைக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தந்தை பெரியாரைப் பற்றி, இப்பொது முச்சந்தியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறார். அவர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டத் தவிக்கிறார். தடுமாறுகிறார். பொய்யாகப் பேசுகிறார்.

Advertisment

அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட மரியாதைக்குரிய மாபெரும் திராவிட இயக்கத் தலைவர்களை எல்லாம் உருவாக்கிய தந்தை பெரியார், சாமானியரல்ல. ஒரு சரித்திரம்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தொடங்கி, தமிழ்த்தென்றல் திரு.வி.க, மொழிஞாயிறு பாவாணர், தனித்தமிழின் தந்தை மறைமலையடிகள், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ, பேராசிரியர் இலக்குவனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழறிஞர்களின் மதிப்பைப் பெற்ற தந்தை பெரியார். அவரைப் பொறுக்கித்தனமாக சீமான் என்கிற சில்லறை ஆசாமி பேசலாமா? கிறுக்குத்தனமாக கிண்டலடிக்கலாமா? அரைவேக்காட்டுத்தனமாக அவதூறு செய்யலாமா?

சீமான் ஒரு பொதுக் கூட்ட மேடையில் நின்று கொண்டு, "இது பெரியார் மண்ணல்ல. எங்களுக்குப் பெரியாரே ஒரு மண்ணுதான்.' என்று சினிமாத்தனமான டயலாக் அடிக்கிறார்.

Advertisment

சீமானின் தலையில் இருப்பது வெறும் மண் என்பதால்தான், இப்படியெல்லாம் முட்டாள்தனமாக அவரால் உளறமுடிகிறது.

"பெரியார் இல்லைன்னா ஒன்னும் இல்லை; உங்களுக்கு! பெரியாரே ஒன்னுமில்லை; எங்களுக்கு'- இதுவும் அவர் அடித்த டயலாக்தான். தனக்கு சூடு சுரணை என்று எதுவும் இல்லை என்பதால்தான் சீமான் இப்படியெல்லாம் பேசுகிறார். இது எங்களுக்கும் தெரியும்.

சீமான் எங்காவது நின்றுகொண்டு, ஆமைக்கறி, முதலைக்கறி கதைகளை எல்லாம் சொல்லட்டும். அதை நம்புகிறவர்கள் நம்பிவிட்டுப் போகட்டும். ஈழத்தில் துப்பாக்கி ஏந்திப் போராடியதாகவும், பீரங்கிகளை வைத்து வானத்தைப் பிளந்ததாகவும் அவர் பீத்திக் கொண்டு திரியட்டும். அதைப்பற்றி எல்லாம் நமக்குக் கவலையில்லை.

ஆனால் தந்தை பெரியாரைப் பற்றி இனியும் அவர் வாயைத் திறந்தால், உணர்ச்சி மிகுந்த தமிழகம் உரிய பதிலடியை கொடுத்தே தீரும். அப்படிக் கொடுக்க ஆரம்பித்தால் அதைத் தாங்குகிற அளவிற்கு சீமானிடம் எதுவும் இல்லை.

தந்தை பெரியார், பற்றி என்னென்ன பேசுகிறார்?

காம இச்சை வந்தால் எதையும் செய்யலாம் என்று பெரியார் சொன்னாராம். எவரிடமும் அதைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று அவர் உபதேசித்தாராம். அதுபற்றி சீமான் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லக்கூட நமக்குக் கூசுகிறது. மனிதனாக இருப்பவன் எவனும் அப்படிச் சொல்ல மாட்டான்.

பெரியார் அப்படிச்சொன்னாரா? அதை நான் நிரூபிக்கிறேன் என்று வாய்ச்சவடால் அடித்தார் சீமான். பெரியாரியவாதிகள் அவர் வீட்டின் முன் கூடி, எங்களிடம் உன் ஆதாரத்தைக் காட்டு என்றார்கள். ஆனால் சீமான் எந்த ஆதாரத்தையும் காட்ட முன்வரவில்லை.

பின்னர் திடீரென்று பல்டியடித்த சீமான், பெரியாரின் நூல்களை எல்லாம் முதலில் நாட்டுடைமை ஆக்கட்டும். அப்போதுதான் அந்த ஆதாரங்களை என்னால் திரட்டிக் காட்டமுடியும் என்று டபாய்க்கிறார்.

இப்படி பித்தலாட்டமாகப் பேசும் சீமானை எதிர்த்து தமிழகம் முழுதிலும் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றமே, சீமானின் பேச்சால் தமிழகத்தின் அமைதி கெடுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, அதுகுறித்து எங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து நிருபர்கள் கேட்டால்... அதான் நீதிமன்றத்துக்கு வழக்குப் போயிருக்கிறதே.

நீதிமன்றம் கேட்கட்டும். அங்கே நான் பதில் சொல்லிக்கொள்கிறேன் என்று அதற்கும் வாய் நீளம் காட்டுகிறார். சீமானின் மர மண்டைக்கு சட்டமும் தெரியவில்லை. நீதியும் தெரியவில்லை. நீதிமன்ற வழக்குகள் பற்றியும் கவலையில்லை.

அதுமட்டுமா? பெரியார் தமிழைக் கேவலப்படுத்திவிட்டார் என்றும் அவர் தமிழைச் சனியன் என்று பேசிவிட்டார் என்றும், மூளை குழம்பிப்போனவரைப் போல மாறி மாறி பிதற்றி வருகிறார் சீமான்.

இதே சீமான், முதலில் தந்தை பெரியாரைப் பற்றிப் புகழுரைகளை மேடைகளில் ஒப்பித்துதான் பேச்சுப் பயிற்சி எடுத்துக்கொண்டார். பெரியாரைப் பற்றிப் பேசிதான் தன்னை அறிவார்ந்த சிந்தனையாள னைப் போல் காட்டிக்கொண்டார். அதனால்தான் சீமானை இளைஞர்கள் ஆரம்பத்தில் நம்ப ஆரம்பித்தார்கள். பிறகுதான் அவர் நாக்கிலும் மூளையிலும் பிசகு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கூட சீமான் பேசிய காணொலிக் காட்சியில் கூட, அவர் பெரியாரைப் பற்றிக் கொடுத்த வாக்கு மூலங்கள் இருக்கின்றன.

தேசிய அரசியலைக் கையில் எடுத்த சீமான் ஏன் பெரியாரைக் கொண்டாடுகிறார் என்கிற கேள்வியை சில தற்குறிகள் எழுப்பிய தற்கு பதில் சொல்வதுபோல்.... அதில் பேசி இருக்கும் சீமான்...

"நாம் தமிழர் கட்சி பெரியாரை எதிர்த்துத் தொடங்கப்பட்டது அல்ல. நாம் தமிழர் கட்சி பெரியாரை எதிரியாகப் பார்க்கவில்லை. அதே நேரம். தமிழ் தேசிய இனத்தின் தலைவராக அவரை ஏற்க வில்லை. இவ்வளவுதான் வித்தியாசம்' என்கிறவர், தமிழ் இனத்தின் தலைவராக பிரபாகரனை ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

மேலும் தந்தை பெரியாரைப் பற்றி அவர் சொல்லும் போது... "அவர் நமக்கு சிறந்த வழி காட்டி' என்கிறார். அதோடு நிறுத்தாமல், அவர் யாரைப் போன்ற வழிகாட்டி என்று ஒரு பட்டியலையே போட்டுக்காட்டு கிறார் சீமான்.

"புரட்சியாளர் அம்பேத்கரைப் போல, மாவீரர் சுபாஸ் சந்திர போஸைப் போல, மாசேதுங்கைப் போல, லெனினைப் போல, ஸ்டாலினைப் போல, எங்கெல்ஸைப் போல, இங்கர்சலைப் போல, மாமேதை மார்க்ஸைப் போல, பிடல் காஸ்ட்ரோவைப் போல. சேகுவேராவைப் போல, ஹோசிமினைப் போல, பெரியாரும் நமக்கு ஒரு வழிகாட்டி' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

இப்படி உலகப் புரட்சியாளர்களோடு பெரியாரை ஒப்பிட்டு, அவரை வழிகாட்டி என்ற இதே சீமான்தான், இப்போது கீழ்த் தரமாக விமர்சித்திருக்கிறார்.

பெரியார் மோசமானவர் என்றால், பெரியாரைப் போன்றவர்கள் என்று அவர் பட்டியலிட்ட அத்தனை புரட்சியாளர்களும் மோசமானவர்களா?

கடந்த 2022 டிசம்பர் 24 பெரியார் நினைவுநாளில், மலர் வணக்க நிகழ்வைத் தன் கட்சி அலுவலகத்தில் நடத்திய சீமான், அங்கே பெரியார் திருவுருவப் படத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு கீழ்க்கண்ட முத்துக்களை உதித்தார்.

அதில் தெறித்தவை இவை:

= மூடப் பழக்கங்களில் மூழ்கி, சாதி-மத சாக்கடைக்குள் சிக்கி, மீள எழ முடியாத இழிநிலையிலிருந்த எம் மக்களை, அந்த அறியாமை இருள் நீக்கி, அறிவு ஒளி பாய்ச்சி, இந்த சமூக மேம்பாட் டிற்கு அரும்பாடாற்றிய பெருந்தகை நமது ஐயா பெரியார் அவர்கள்.

= "பெண்ணடிமைத்தனம்' என்னும் பெருங்கொடுமை பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் இன்று வரையிலும் கூடப் புரையோடிப் போன புற்றாக இருக்கிறது. பெண்களுக்கான உரிமைக்கு சிந்தனை வித்திட்டு, அதற்குப் போராடிய பெருந்தகை ஐயா பெரியார் அவர்கள்.

= புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அதற்குச் சட்ட வடிவம் கொடுத்து, செயல் வடிவம் பெறச் செய்தார்கள். மனிதப் பிறப்பில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்காத ஒரு சமநிலைச் சமூகம் படைக்கத்தான் எண்ணற்ற நமது முன்னோர்கள் போராடினார்கள். அந்த வரிசையில் முதன்மைப் பங்கு கொண்ட புரட்சியாளர் ஐயா பெரியார் அவர்கள்.

-என்றெல்லாம் தந்தை பெரியாரைப் பற்றி மணக்க மணக்கப் பாராட்டுரைகளை உதிர்த்த அதே சீமான்தான்... இப்ப பொய் பொய்யா நான் மேதகு பிரபாகரன் அவர்களை 2008 ஆண்டு பார்த்த பிறகு ஆமைக்கறி சாப்பிட்ட பிறகு, தெரிந்துகொண்டேன். பெரியார், ஒன்றும் ஆட்டவில்லை என்பதை உணர்ந்தேன் என்றார். அதாவது 2008-க்குபின். ஆனால் அதை வசதியாக போதையில் மறந்து 2022-ல் பெரியாரை புரட்சியாளர் ஐயா பெரியார் அவர்கள் என்று மரியாதையாக பேசியிருப்பார். அப்படியானால் வடிவேலு பாஷையில் சொல்வதானால் 2022-ல் பேசியது நல்ல வாய் இப்ப தற்குறியாய் பேசுவது நாறவாய்.

அதே நாற வாயால்... இன்று பெரியாரை மிகவும் கீழ்த்தரமாக வசை பாடுகிறார்.

அவருக்கு யாரைப் பற்றி பேசுகிறோம் என்கிற நிதானமும் இல்லை. யாரிடம் பேசுகிறோம் என்கிற தெளிவும் இல்லை. அதனால், அவர் எல்லாப் பக்கமும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டின் அவமானம் அவர்! இவர் தமிழ்த் தேசியவாதிகள் வெட்கித் தலைகுனிகின்றனர்.

பிரபாகரன் தொடர்பு பற்றி, சீமான் விட்டுவரும் புருடா குறித்து, பிரபாகரனின் அண்ணன் மகனே, காறித்துப்புவது போல் மறுத்திருக்கிறார். இதைவிட கேவலம் என்ன இருக்கிறது.

இது குறித்து, ஒரு பெண் பத்திரிகையாளர் சீமானிடம் கோவையில் வைத்துக் கேட்டபோது, கேட்பது ஒரு பெண் நிருபர் என்கிற எண்ணம்கூட இல்லாமல்... ஆபாசமான ஒரு வார்த்தையை உச்சரித்துவிட்டு ஆத்திரமாக நகர்ந்திருக்கிறார் சீமான். ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது சீமான் விசயத்தில் நிரூபணமாகி விட்டது.

சீமானின் இந்த பண்பாடற்ற நடத்தையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. ஜனநாயக மாதர் சங்கத் தலைவரான உ.வாசுகி, பெண் நிருபரிடம் மோசமாகப் பேசிய சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இப்படி தந்தை பெரியாரைத் தொட்டபின், தொடர்ச்சியாக எல்லா வகையிலும் அவமானத் தையும் இழுக்கையும் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் சீமான்.

இனியாவது சீமான், தன் திமிர் பிடித்த வக்கிரம் கொண்ட நாவை அடக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவரை, தமிழ்ச் சமூகமே உரிய வகையில் அடக்கும்.

-எச்சரிக்கையோடு,

நக்கீரன்கோபால்